உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 21, 2011

இலவச மின்னூல்கள் பதிவிறக்கம் - கணினி நூல்கள்


 1 . A Comprehensive Guide To Windows Security – 24 pages, 1.46 MB (PDF) 

2 . The Ultimate Computer Repair Guide – 93 pages, 5.84mbs (PDF)

3 . TrendSiters – Digital Content and Web Technologies 408 pages , (1.8mb Zipped ) PDF

4 . The Minimum You Need to Know about Java and xBaseJ – PDF, 1.8mb Zipped, 186 pages (This site requires registration). 


5 . How to Use Free Software to Prevent Antivirus and Virus Removal Headaches – 50 pages, 2.4MB (PDF)

6 . How to Create Screencast Videos? – 29 pages, 2.1MB (PDF)

7 . The Shortcut Guide to Protecting Business Internet Usage – 75 pages, 801KB (PDF)

8.  The Minimum You Need to Know About Java and xBaseJ – 186 pages, 4MB (PDF)

9 .  Create Your First Wesite – 125 pages, 3.8MB (PDF)

10 . C# Yellow Book – PDF 

 

Read more »

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் சிறப்பு பேட்டி

 புவனகிரி :

          அமைச்சர்கள் என்றாலே கார், பங்களா, பந்தா தான் நினைவுக்கு வரும். ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்கான அமைச்சர்கள் உள்ளனர். அந்த வரிசையில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயமும் ஒருவர். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை தோற்கடித்தார்.

             இந்த தேர்தலிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அறிவுச் செல்வனை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். ஏற்கனவே 10 ஆண்டுகள் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தாலும் மிகவும் எளிமையாக வலம் வருபவர். கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் குடும்ப உறுப்பினர் போல் தவறாமல் பங்கேற்று விடுவார். இதனால் கட்சி நிர்வாகிகள் செல்வி ராமஜெயம் மீது தனி பாசம் வைத்துள்ளார்.

           எந்த சூழ்நிலையிலும் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர். இன்றும் பரங்கிப் பேட்டை அகரத்தில் உள்ள ஓட்டு வீட்டில் தாயாருடன் வசித்து வருகிறார். மிக சாதாரணமாக இருக்கும் அந்த வீட்டை பார்த்தால் இதுவா அமைச்சரின் வீடு என்று ஆச்சரியமாக இருக்கும். இந்த வீட்டில் கடந்த 16 ஆண்டுகளாக செல்வி ராமஜெயம் வாழ்கிறார். செல்வி ராமஜெயத்தின் குடும்பம் மிகப்பெரியது. உடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள் ஒரு சகோதரர். மூத்தவர் செல்விராமஜெயம். தந்தையின் வியாபாரத் தில்தான் குடும்பமே வாழ்ந்தது. முதல் பெண்ணான செல்வி ராமஜெயத்துக்கு திருமணம் முடிந்து 2 பெண், ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

             இந்த நிலையில் 1995-ம் ஆண்டு பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ராமஜெயம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற 60 நாட்களில் தேர்தல் விரோத்திலும், முன்பகை காரணமாகவும் ராம ஜெயத்தை வெட்டி கொலை செய்து விட்டனர். அதன் பிறகு கணவர் விட்டு சென்ற அரசியல் பணியை செல்வி ராமஜெயம் தொடர்ந்தார். கணவருக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது. அங்கு வசிக்க செல்வி ராமஜெயத்துக்கு மனமில்லை. எளிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட செல்வி ராமஜெயம் பூர்வீக ஓட்டு வீட்டில் பெற்றோருடன் வாழ தொடங்கினார்.

             கடந்த 16 ஆண்டுகளாக இந்த வீட்டிலேயே வாழ்கிறார். ராமஜெயம் இறந்த அதிர்ச்சியில் செல்வி ராமஜெயத்தின் தந்தையும் இறந்தார். இதனால் சகோதரிகளை கரை சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பும் செல்வி ராமஜெயம் மீது விழுந்தது. பல்வேறு கஷ்டங்களை தாங்கி 5 சகோதரிகளை திருமணம் செய்த கொடுத்து விட்டார். இன்னும் ஒரு சகோதரி சரண்யா திருமணம் ஆகாமல் உள்ளார். சகோதரருக்கும் திருமணம் ஆகவில்லை. 
பல சோக சுமைகளை சுமந்து விட்ட செல்வி ராமஜெயம் கூறியது:-

                ஒரு பெண்ணாக இருந்து என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ அத்தனையும் அனுபவித்து விட்டேன். நான் அனுபவிக்காத கஷ்டமில்லை. எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்த்து கொண்டேன். அரசியலிலும் சரி, குடும்பத்திலும் சரி எந்த பக்கபலமும் இல்லாமல் வளர்ந்து வந்துள்ளேன். இது எப்படி என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு காரணம் கடவுளின் அருளும் கடவுள் வடிவில் அம்மா காட்டிய கருணையும் தான். இதுவரை என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வந்தேன். இனி அம்மா வழங்கிய அமைச்சர் என்ற அங்கீகாரத்தோடு தமிழக மக்களுக்கு தொண்டு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார். செல்வி ராமஜெயத்தின் 2 மகள்களில் ஒரு மகளுக்கு திருமணமாகி இவருக்கு பேரக் குழந்தையும் உள்ளது. ஒரு மகளுக்கும் மகனுக்கும் திருமணமாகவில்லை.

Read more »

பாரதிதாசன் பல்கலை.யில் 6 ஆண்டு எம்.டெக். படிப்புக்கு மே 28-ல் நுழைவுத் தேர்வு

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 6 ஆண்டு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28-ம் தேதி நடைபெறவுள்ளது. 

 இதுகுறித்து பல் கலைக்கழகப் பதிவாளர் த. ராமசாமி தெரிவித்திருப்பது: 

             "ஆறாண்டு ஒருங்கிணைந்த எம்.டெக். (உயிரித் தொழில்நுட்பவியல், உயிரித் தகவலியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், புவிநுட்பவியல், புவித் தகவலியல்) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மே 28 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. கேள்விகள் 12 ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆங்கிலம், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும், 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் கொண்டு வர வேண்டும். எனவே, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்' என்றார் ராமசாமி.

Read more »

கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.பகலவன் நியமனம்

மிழகத்தில் எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலர் ஷீலா ராணிசுங்கத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவின் படி கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

 இதற்கு முன்   கடலூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளராக இருந்த அஷ்வின் கோட்னீஸ் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்ததில் சிறப்பாக பணியாற்றியவர் அஷ்வின் கோட்னீஸ் மேலும் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட் கைது செய்ததில் தீவிரமாக பணியாற்றி தமிழகத்தையே கடலூர் மீது திரும்பி பார்க்க வைத்தவர். 

 

Read more »

குப்பைமேடாகி வரும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம்

கடலூர்:

         கடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததன் காரணமாக தொன்மை வாய்ந்த கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் தொடர்ந்து அசுத்தமாகி வருகிறது. 

           கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், புல்வெளிகள் நிறைந்த கோல்ஃப் மைதானமாக இருந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதில் கோல்ஃப் விளையாடியதாகவும் சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று அதில் புல்வெளிகளும் இல்லை. கோல்ஃப் விளையாட்டும் இல்லை என்றாலும், நகரின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரம் முழுமைக்கும் கடல் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக, இந்த மைதானம் அமைந்து உள்ளது. 

            மாலை நேரங்களில் பலர் காற்று வாங்க இந்த மைதானத்தில் வந்து அமர்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தின் ஓரங்களில் அழகிய தென்னை மரங்களும் அவற்றின் அருகே சிமென்ட் இருக்கைகளும் இருந்தன. ஆனால் அவைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நகராட்சி நிர்வாகத்துக்கும், அதில் அங்கம் வகிக்கும் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் உருவாகாமல் போனது கடலூர் மக்களின் துரதிருஷ்டம் என்றுதான் கூறமுடியும். இந்த அழகான மைதானத்தை அழகுபடுத்தாவிட்டாலும், அழுக்குப்படுத்தாமல் சுத்தமாகவாவது வைத்திருக்க, நகராட்சி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் கடலூர் மக்களின் ஆசை.

             இந்த மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக மைதானத்தின் ஒரு பகுதியில் சுமார் 80 கழிவறைகளை நகராட்சி நிதியில் இருந்து கட்டி, அசுத்தத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது கடலூர் நகராட்சி. இன்று அக் கழிவறைகள் எல்லாம் பொதுக் கழிவறைகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அவற்றை யாரும் பயன்படுத்தாமல், வெறும் நினைவுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன. அப் பகுதி முழுவதும் நகரின் குப்பகளைச் சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தம் இடமாக மாற்றப்பட்டு துர்நாற்றத்தின் உறைவிடமாக மாறியிருக்கிறது. 

             மன்னன் வழியில் குடிமக்கள் என்பதுபோல், நகராட்சியே மைதானத்தை அசுத்தம் செய்யும்போது, நாமும் நமது பங்குக்கு அசுத்தப்படுத்துவோமே என்ற உயர்ந்த எண்ணத்தில், நகர மக்கள் பலரும், மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளைக் கொட்டி வருகிறார்கள். இதையும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. அதுமட்டுன்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த மைதானத்தில், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நிறுத்துவோர், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். 

             அதைப் பற்றியோ ஏனைய அசுத்தங்களைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத நகராட்சி நிர்வாகம், லாரிகளை நிறுத்தும் இடத்தில் ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு வசதியாக, அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில் அழகான சிமென்ட சிலாப்கள் பதித்து, நடைபாதையை ஏற்படுத்தி இருப்பதுதான் எதற்காக என்று தெரியவில்லை. தொன்மை வாய்ந்த மஞ்சக்குப்பம் மைதானத்தை, அழகுடனும் தூய்மை கெடாமலும், முறையாகப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?



Read more »

எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

          சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங், சவுண்ட் என்ஜினீயரிங், பிலிம் எடிட்டிங், திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

        இதில் பிளஸ்-2 முடித்தவர்கள் சேரலாம். ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங் ஆகிய படிப்புகளில் சேர மட்டும் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். பிலிம் எடிட்டிங் படிப்பில் பிளஸ்-2 எந்த பிரிவு மாணவர்களும் சேரலாம். திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு படிப்புக்கு பட்டப் படிப்பு அவசியம்.

        மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 18-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் மாதம் 6-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

             கூடுதல் விவரங்கள் அறிய 044-22542212 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முகவரி 

M G R Film and Television Institute of Tamil Nadu
Tharamani, 

Chennai - 600 113 




       Application forms with Prospectus can be obtained in person from the Principal, MGR Govt Film and Television Institute, Tharamani, Chennai-600 113 by sending a Demand Draft from Rs 100/- drawn from Nationalized Banks payable at Chennai Demand Draft for Rs. 30/- For SC/ST Candidates on production of Xerox copy of community Certificate in favour of Principal, M.G.R. Govt. Film and Television Institute, Chennai-600113

   Application forms and Prospectus can also be Downloaded from www.tn.gov.in  website and to receive by post by submitting the above mentioned Demand Draft along with self addressed envelope cover (30 cm x 25 cm) affixed with postage stamp for Rs. 25/- Demand Draft obtained before 18 May, 2011 will not be accepted Date of Commencement of sale of Application 18 May, 2011

        Last date for the Sale of Application and submission of filled up Applications are 06.06.2011 before 5 p.m. Visit at www.tn.gov.in



Read more »

திருவந்திபுரம் கோயிலில் ரஜினி குணமடைய ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை

        நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டி திருவந்திபுரம் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்திய ரசிகர்கள் கோவில் பிரசாதத்தை ரஜினிகாந்திற்கு அனுப்பி வைத்தனர்.

        நடுநாட்டு திருப்பதிகளில் முக்கிய திருத்தலமான கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் அருள்மிகு தேவநாதசுவாமி கோவில் ரஜினி குடும்பத்தினர் விருப்பமுடன் வழிபடும் கோவிலாகும். இதன் காரணமாகவே ரஜினி ரசிகர்களின் வழிபாட்டு தலமாகவும் இக்கோவில் மாறியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

          அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட மாநகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் நேற்று திருவந்திபுரம் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அருள்மிகு தேவநாதசுவாமி, அருள்மிகு செங்கமலவல்லிதாயார் சன்னிதிகளில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து அவர் விரைவில் நலம் பெற வேண்டி வழிபட்டனர். 

           மாவட்டச் செயலாளர் ரஜனிபிரபாகர், மாவட்டப் பொருளாளர் ரஜினிமூர்த்தி, இணைச்செயலாளர்கள் ராஜ்குமார், ரஜனிசுந்தர், நெல்லிக்குப்பம் அமீது, கடலூர் துறைமுகம் ரஜினிராஜா, பிரேம், தேவா, ரமேஷ், சௌந்தர், அருள்பிரகாஷ், ராஜேந்திரன், திருநாவுக்கரசு, ஜீவா, சத்யா, குறிஞ்சிப்பாடி மரியபிள்ளை, சீனு, ஜெயவேல், காமராஜ், செல்வம் , கார்த்திக், வேலவன், கலைக்குமரன், ராகவன், வெங்கடேசன், சென்னி, குணசேகரன், தேவா, பாலமுருகன் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். கோவில் பிரசாதத்தை நேரில் கொண்டுச் சென்று லதா ரஜனிகாந்திடம் அளிக்க விருப்பதாக மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ரஜினிபிரபாகர் ஆகியோர் தெரிவித்தனர்.


 

Read more »

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அரசின் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு

            சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் புரசைவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் அரசின் கூர்நோக்கு இல்லம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கூர்நோக்கு இல்லத்தில் 38 குழந்தைகள் உள்ளனர். குற்ற வழக்கில் ஈடுபட்ட சிறுவர்கள் இங்கு தங்கி உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கு மிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
 
            இந்த ஆய்வின்போது சமூக நலபாதுகாப்பு இயக்குனர் மதிவாணன், சமூக நலத்துறை இயக்குனர் வாசுகி, துணை இயக்குனர் ராஜீ சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.   
 
 
 

Read more »

Distance education candidates too should be offered government jobs Says, C.R.K.Murthy Professor of IGNOU






Making a plea:Vice-Chancellor of Annamalai University, M. Ramanathan, speaking at a workshop held on the University premises at Chidambaram on Friday. 

CUDDALORE: 

            Policy-makers ought to remove the mental block in providing government jobs to those candidates who obtain degrees through distance education mode. It is not in the interest of higher education to reject outright those candidates as unfit for government jobs, said C.R.K.Murthy, Professor of Distance Education, Indira Gandhi National Open University (IGNOU).

           He was delivering a speech at the inaugural session of the two-day workshop on “Development and revision of self-learning study materials” organised by the Directorate of Distance Education, Annamalai University, in association with the IGNOU, at Chidambaram on Friday. It had been the practice of the private sector to evaluate the new recruits not on the basis of the mode of education but on the basis of personality profile and communication skills. There were at least 450 universities and 30,000 colleges in the country offering formal education but all of them could not claim that they were stickler to standards, as the quality of the outcome vastly varied.

          Therefore, discriminating the candidates of distance education mode in government jobs was tantamount to denying them social acceptance. It could be set right only through political will and the Distance Education Council had been taking up the issue in various forums. Mr. Murthy further said that the Council was also impressing upon the institutions offering distance education programmes to raise the bar and prove that their products too were eminently employable.

        He also noted that at the international level, there were 100 open universities, of which 60 were located in Asia and India alone accounted for 15 such universities. He hailed Annamalai University as one of the forerunners in starting the distance mode of education and becoming popular in enrolling candidates across the country. When hardly 10 per cent of the eligible age group was pursuing higher education in the country, democratisation of higher education could be possible only through distance education mode, Mr. Murthy said.
Vice-Chancellor, M. Ramanathan, said that from the days of sending correspondence courses through posts distance education had progressed a great deal by using all modes of communication such as tele-conferencing and satellite linkage.

         He said that the self-learning materials should be diligently designed and periodically upgraded by infusing them with quality, user-friendliness and flexibility for which every teacher ought to work studiously and with a sense of dedication. Mr. Ramanathan insisted on necessary changes in the curriculum framework. Ashok K.Gaba,resource person from the IGNOU, S.B.Nagewara Rao, Director, DDE, Annamalai University and S.Ravi, coordinator, participated.




Read more »

Do not get upset by poll results, M.R.K.Panneerselvam tells cadres

NEYVELI: 

         The Dravida Munnetra Kazhagam-led Democratic Progressive Alliance met at Neyveli on Thursday to take stock of the situation arising out of the severe drubbing the front suffered in all the nine Assembly constituencies in Cuddalore district.

      Former Health Minister M.R.K.Panneerselvam, who lost the Kurinjipadi seat, chaired the meeting. He called upon the cadres of the DMK and the allied parties not to get upset by the defeat but continue to do party works on the direction of their respective leaders.

In the meeting the unsuccessful alliance candidates such as 

E.Pughazhendi (DMK—Cuddalore), 
T.Velmurugan (PMK—Neyveli), 
Saba Rajendran (DMK—Panruti),
T.Arivuselvan (PMK—Bhuvanagiri), 
T.Neethirajan (Congress—Vriddhachalam), 
VCK leader Thirumarban, 
District Congress Committee president A.Nedunchezhiyan and others participated.

However, the notable absentees who also lost the elections were 

D.Ravikumar (VCK—Kattumannarkoil), 
M.Sinthanaiselvan (VCK—Thittakudi) and
Sridhar Vandayar (Moovendar Munnetra Kazhagam—Chidambaram 
who contested on DMK symbol).

         Mr Panneerselvam said that having realized the plight of the people of Cuddalore district during monsoon seasons, as they were frequently subjected to flood ravages, former Chief Minister M.Karunanidhi had allotted Rs 600 crore for taking up permanent flood control measures. The latter also had launched many a welfare schemes from which almost all the families benefited. But soon after becoming Chief Minister, Jayalalithaa had arbitrarily set her sight on moving the Assembly and the Secretariat from the new building built at a cost of Rs 1,000 crore on the Omandurar Estate back to St.George Fort campus. It was for environmental reasons that Mr Karunanidhi had shifted the Assembly and the Secretariat to the new premises. Therefore, Ms Jayalalithaa's obduracy in reversing the decision was condemnable, he said.

          The proposal to remove certain portions, particularly relating to Mr Karunanidhi's contributions to Tamil language, from the syllabus under the equitable education system was not in the interest of the student community, he said. He alleged that on the one hand Ms Jayalalithaa claimed to take steps to maintain law and order, but on the other her cadres were letting loose violence in many parts of the State by targeting the houses of the leaders of the opposition parties and damaging their banners. He called upon the police not to remain mute spectators to such violence but take prompt action against the perpetrators. Endorsing the views the meeting passed resolutions on similar vein.


Read more »

NLC celebrates 54th raising day

NEYVELI: 

      The Neyveli Lignite Corporation today celebrated its 54th raising day at a function held at the corporate office here in which Chairman-cum-Managing Director A.R. Ansari hoisted the newly launched public sector flag.

          The flag was introduced by President Pratibha Patil last month in recognition of the significant role played by the public sector undertakings in the country's economy. With 15 lakh employees, these organisations were contributing 12 per cent of the Gross Domestic Products (GDP). Speaking on the occasion, Mr. Ansari recounted the travails underwent by the NLC ever since former Prime Minister Jawaharlal Nehru inaugurated the lignite mining operation here on May 20, 1957.

          The Chairman said that on the occasion Nehru observed that “there should be a push towards industrial development. This lignite project promises to give that push.” He hoped that with NLC could rise to the Maha Navratna status by increasing its power generation capacity to 15,000 MW and turnover to Rs 20,000 crores. He categorically said that the NLC was aggressively pursuing its goal of tapping renewable sources of energy such as wind and solar power. However, it would not venture into hydro-power and nuclear power projects because of long their gestation period and capital-intensive nature.

         Mr. Ansari underscored the point that in the highly competitive environment the NLC would have to focus on achieving cost effectiveness or in other words cutting the cost of production and hoped that the officials and employees would cooperate with the management in this endeavour. NLC Directors B.Surender Mohan, R.Kandasamy, K.Sekar, J.Mahilselvan and S.K.Acharya and others participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior