உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

சில நூறுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் ஓய்வூதியர்கள்

கடலூர்:

               உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் ஆகியும், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் 500 பேர், ஊதியப் பலன்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள்.

             தமிழ்நாட்டில் 1970-க்கு முன்னர் அரசு உயர்நிலைப் பள்ளிகள் என்றும், மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளிகள் என்றும் இருபிரிவுகளாக இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்தபோது, அவற்றில் பணிபுரிவோரை 1-4-74 தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அவ்வாறு பணிமூப்புப் பட்டியல் தயாரித்து, முன் தேதியிட்டு பதவி உயர்வுகள் அளித்து ஊதியப் பயன்கள் வழங்கப்பட்டன.

             ஆனால் அமைச்சுப் பணியாளர்களுக்கு மேற்கண்ட தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றதில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் 1-4-70 தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிமூப்புப் பட்டியல் தயாரித்து, ஊதிய வித்தியாசத் தொகைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

               ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியாகி 12 ஆண்டுகள் ஆகியும் இந்தப் பணிமூப்புப் பட்டிலைத் தயாரித்து, முன்தேதியிட்டு பதவி உயர்வுகள் வழங்கி, ஊதியப் பயன்களை அளிக்க, தமிழகக் கல்வித்துறை தயக்கம் காட்டி வருவதாகவும், பல்வேறு சாக்குப் போக்குகளை தெரிவித்து வருவதாகவும், தமிழ்நாடு கல்வித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.  இந்த ஊதியப் பயன்களைப் பெறத் தகுதியானவர்கள் தமிழகத்தில் 500 பேர் மட்டுமே உள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினால் அவர்களது ஓய்வூதியத்தில் சில | 100-க்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், அவர்களில் பெரும்பாலானேர் 70 வயதைக் கடந்தவர்கள் என்றும் சங்கத் தலைவர் பி.விஸ்வநாதன் தெரிவிக்கிறார்.

Read more »

பெண்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


        கிராமப்புற பெண்களுக்கான புதிய மருத்துவப் பரிசோதனைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்குச் சிறப்புக் கதிர்வீச்சு சிகிச்சையைத் துவக்கி வைத்து அமைச்சர் மேலும் பேசியது:
 
              இந்தத் திட்டத்தின்படி, பெண்களின் கருப்பை மற்றும் மார்பகப் புற்று நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணமாக்கப்படும். இந்தத் திட்டம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தின்படி, 50 பெண்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர் வீதம் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
 
                       தரமில்லாத மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை:கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமானச் சிகிச்சை அளிக்காத 79 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவன மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரகாஷ்.

Read more »

ரேஷன் மளிகை பொருள்களின் விலை ரூ. 25


            தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் மளிகைப் பொருள்களின் அளவும், விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 10 மளிகைப் பொருள்கள் உள்ள இந்த பாக்கெட்டின் விலை இப்போது ரூ. 25-க்கு விற்கப்படுகிறது.
 
             தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் ரூ. 50-க்கு மிளகாய் தூள், கடுகு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்கு, மானிய விலையில்  வழங்கப்படும் 10 மளிகைப் பொருள்கள் உள்ள பாக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாக்கெட்டின் மீது "சொன்னதைச் செய்வோம் சொல்வதைச் செய்வோம்' என்ற வாசகங்களுடன் முதல்வர் கருணாநிதியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 
 
            ஒரு பெண் அஞ்சலைப் பெட்டியில் இருந்து மளிகைப் பொருள்களை எடுத்து வாணலியில் சமைப்பது போன்ற வண்ணப் படத்துடன் பத்துப் பொருள்கள் ரூ. 25 என்றும் அந்தப் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.÷கடந்த மாதம் வரை ரூ. 50-க்கு விற்கப்பட்ட, மளிகைப் பொருள் பாக்கெட்டின் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளதே என மகிழ்ச்சியுடன் வாங்கினர். ஆனால், இந்தப் பாக்கெட்டில் உள்ள 10 மளிகைப் பொருள்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதை அறிந்து பெண்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு குடும்ப அட்டைதாரருக்கு தலா ஒரு மளிகைப் பொருள் பாக்கெட் மட்டுமே ரேஷனில் வழங்கப்படுகிறது
 
             .இதில் உள்ள மளிகைப் பொருள்களின் எடையளவு கிராமில் (அடைப்புக் குறிக்குள் இவற்றின் பழைய எடையளவு) விவரம்: மஞ்சள் தூள் 50 (50), மிளகாய் தூள் 100 (250), மல்லித்தூள் 50 (250), கடலைப் பருப்பு 50 (75), உளுத்தம்பருப்பு 25 (50). வெந்தயம் 25 (25), கடுகு 25 (25), மிளகு 25 (25), சீரகம் 50 (50), கரம் மசாலா தூள் 10 (10) முன்பு இந்த மளிகைப் பொருள் பாக்கெட்டுகள் கீழ்ப்பாக்கம் தம்புசாமி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வந்தது.  ஆனால், இப்போது மளிகைப் பாக்கெட்டுகள் வியாசர்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகம் விநியோகிப்பதாகத் தெரியவந்துள்ளது.
 
                       இதில் கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட பொருள்கள் உள்ள பாக்கெட்டுகளில் அரசு முத்திரை மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை தனியார் மசாலா நிறுவனத் தயாரிப்பாக இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன.

Read more »

டிராக்டர்களுக்கு வங்கிக் கடன் நிறுத்தம்: கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு


கடலூர்:
 
           டிராக்டர்களுக்கு கடன் வழங்குவதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி விட்டன. 
 
            இந்தியாவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரமாக வேளாண்மையை நம்பி இருக்கிறார்கள்.வேளாண் தொழிலுக்கு போதிய கூலி கொடுக்க முடியாத நிலை, கிராமப்புற வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ்நாட்டில் வேளாண் தொழிலுக்கு தற்போது ஆள்கள் கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
 
               இதனால் வேணாண் தொழில் இயந்திரமயமாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும், டிராக்டர்களைப் பயன்படுத்துவதிலும் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக டிராக்டர்களுக்கு கடன் கொடுப்பதைக்கூட வங்கிகள், குறிப்பாகத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்திவிட்டன என்பது, அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
 
                இதற்கு வங்கியாளர்கள் கூறும் சமாதானம், டிராக்டர்களுக்குக் கொடுத்த கடன் வசூலாக வில்லை என்பதுதான்.ஏற்கெனவே பருவமழை பொய்த்தல் போன்ற இயற்கைச் சதிகளால் முடங்கிப் போயிருந்த விவசாயிக்கு, 75 சதவீத கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் 25 சதவீதத்தை தள்ளுபடி செய்த அரசு, 75 சதவீதத்தையும் தள்ளுபடி செய்துவிடாதா என்ற நப்பாசையும் சேர்ந்ததால், பலர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிராக்டர் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். 
 
              இந்தியன் வங்கி 600 டிராக்டர்களுக்கும், பாரத ஸ்டேட் வங்கி 800 டிராக்டர்களுக்கும் வழங்கப்பட்ட கடன்கள் திருப்பி வரவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  எனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக வங்கிகள், டிராக்டர்களுக்குக் கடன் வழங்குவதையே நிறுத்திவிட்டதாக, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜப்தி நடவடிக்கை காரணமாக கடன் வசூல் தற்போது 25 சதவீதம் முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
 
இதுகுறித்து கடலூர் டாஃபே டிராக்டர் விற்பனையாளர் கு.ராமலிங்கம் கூறுகையில்,
 
                   2008 மார்ச் மாதம் முதல் டிராக்டர்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டன. 2008ல் தமிழகத்தில் எங்கள் நிறுவன டிராக்டர் விற்பனை 12 ஆயிரமாக இருந்தது. வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால், இந்த ஆண்டு விற்பனை 9,500 ஆகக் குறைந்து உள்ளது. ஆனால், டிராக்டர் தேவை குறைந்துவிடவில்லை. கடன் வழங்குவதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் இடத்தை, தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிடித்துக் கொண்டன.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி குறைவு. 
 
            விவசாயிகள் பங்குத் தொகையும் குறைவு. நிதி நிறுவனங்களில் வட்டி அதிகம். விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக 30 சதவீதம் வரை செலுத்த வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து வருகின்றன. கடன் கட்டாவிட்டால் டிராக்டரை எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்றார்.
 
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
              "|5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்கினால் |1 லட்சம் மதிப்புள்ள ரோட்டாவேட்டர், டிப்பர் இலவசம் என்று நிறுவனங்கள் அறிவிக்கின்றன. விவசாயிகளின் பங்களிப்பை (|1.25 லட்சம் வரை) நாங்களே செலுத்திவிடுகிறோம் என்கிறார்கள். ஆனால் கடன் தொகையில் இலவசங்களின் விலையைச் சேர்த்து விடுகிறார்கள். இதனால் வரிகள் நீங்கலாக |3 லட்சம் விலையுள்ள டிராக்டர், |8 லட்சத்துக்கு விவசாயிகளின் தலையில் கட்டப்படுகிறது. கடன் சுமை விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .நலிந்து கொண்டு இருக்கும் விவசாயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகள், உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி என்று வரிக்கு மேல் வரிகளை நலிந்த விவசாயிகளின் தலையில் கட்டிவிட்டு, கடன் வசூலாவது இல்லை என்பது, விவசாய விரோத நடவடிக்கையாகத்தான் அமையும் என்றார்.

Read more »

நிலக்கரியை இறக்குமதி செய்ய என்எல்சி திட்டம்: அன்சாரி


நெய்வேலி:
 
           என்எல்சியின் புதிய அனல்மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி  நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குறிப்பிட்டார்.
 
            என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு நிர்வாகத் துறை இயக்குநர் பி.பாபுராவ் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி நெய்வேலி விருந்தினர் மாளிகை எதிரே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் பாரதி விளையாட்டரங்கில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவர் பேசியது: 
 
              நாட்டின் நிலக்கரித் தேவை, உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மின்சக்தியின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் வேளையில், மின்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே என்எல்சியின் விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறும் வகையில் நீண்டகால ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
 
                 தடங்கல் இன்றி எரிபொருள் வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும். இதற்காக தகுதியான நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் வெளிநாடுகளில் சுரங்கம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும்.
 
             இந் நோக்கத்துடன் என்எல்சி ஏற்கெனவே சில பூர்வாங்க பணிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுக்கு இந்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார் அன்சாரி.தொடர்ந்து நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய தொழிலாளியை கௌரவித்தல், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குதல், விளையாட்டுகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெய்வேலி பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 
                  இக்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு |3.5 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என அன்சாரி அறிவித்தார்.நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜே.மகிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கடலூர் : 

           சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 293 பேருக்கு 38 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
 
               சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடங்கிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திரதின விழாவையொட்டி காலை 8.25 மணிக்கு எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் அரங்கத்திற்கு வந்து போலீஸ் அணி வகுப்பை தயார் படுத்தினார். 8.27 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் வருகை தந்தார். அவரை எஸ்.பி., வரவேற்று கொடி மேடைக்கு அழைத்து வந்தார். 

                    காலை 8.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதிர் வேட்டுகள் மூலம் பாராசூட்டில் இணைக்கப்பட்டிருந்த மூவர்ணக்கொடி வானத்தில் பறந்தன. மாவட்டத்தில் உள்ள 65 சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.மேலும், சிறப்பாக பணிபுரிந்த 7 சப் இன்ஸ்பெக்டர்கள், 16 ஏட்டுகள், 2 அமைச்சுப்பணியாளர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கினார்.  தொடர்ந்து 39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

               சமூக நலத்துறை சார்பில் 87 பேருக்கு 17.4 லட்சம் ரூபாய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பேருக்கு 4.89 லட்ச ரூபாய், வருவாய்த்துறை சார்பில் 41 பேருக்கு 7.3 லட்சம் ரூபாய் என மொத்தம் 293 பேருக்கு 38 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பின்னர் போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, ஊர்க்காவல் படை உதவி தளபதி ராஜேந்திரன், துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

Read more »

காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த ​தனிப்பிரிவு உதவி ​ஆய்வாளருக்கு சான்றிதழ்

கடலூர்:

           கடலூர் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த,​​ மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரத்தினவேல் உள்ளிட்ட 25 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த சுதந்திர தின விழாவில்,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

               உதவி ஆய்வாளர் ரத்தினவேலுக்கு ஜனாதிபதி விருது சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இந்த விருது சென்னையில் காவல்துறை சார்பில் நடைபெற இருக்கும் விழாவில் தமிழக ஆளுநரால் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அவருக்கு சுதந்திர தின விழாவில்,​​ மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.​ அவருடன் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான சான்றிதழ்,​​ உதவி ஆய்வாளர்கள் அமீர்ஜான்,​​ அம்பேத்கர்,​​ ஆனந்தபாபு,​​ குருமூர்த்தி,​​ சுந்தரராஜன்,​​ கருணாநிதி மற்றும் 11 தலைமைக் காவலர்கள்,​​ 4 முதல்நிலைக் காவலர்கள்,​​ ஒரு 2-ம் நிலைக்காவலர் மற்றும் 2 அலுவலகக் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் சிறப்பாகப் பணி புரிந்ததற்கான சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.

               ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரத்தினவேல் மாவட்டத் தனிப் பிரிவில் பணிபுரிந்தாலும் அவர் பண்ருட்டி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாரக பணி நியமனம் செய்யப்பட்டவர்.

                     ரத்தினவேல் 1-7-1977-ல் முதல்நிலைக் காவலராக தமிழகக் காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.​ 1999-ல் தலைமைக் காவலராகவும்,​​ 2005-ல் உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.​ 1975 முதல் 3 ஆண்டுகள் சிபிசிஐடி-யில் பணிபுரிந்து உள்ளார்.​ பணியில் பெரும்பகுதி தனிப்பிரிவில் பணியாற்றி இருக்கிறார்.​ ​சிறப்பாகப் பணியாற்றியமைக்காக அவருக்கு,​​ 2 முறை தமிழக முதல்வரின் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.​ ரத்தினவேல் இதுவரை தனது பணிக்காலத்தில் 1,167 நற்சான்றுகளை பெற்று இருக்கிறார்.

Read more »

கடலூர் அருகே கோயில் விழாவில் கலவரம்

கடலூர்:
 
              கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தில் கோயில் விழா தொடர்பாக சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் மூதாட்டி கொல்லப்பட்டார். 14 பேர் காயம் அடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. 
 
                  மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை செடல் உற்சவம் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க  சுவாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் விழா நிகழ்ச்சிகளில் பேண்டு வாத்திய இசைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, அக் கிராமத்தைச் சேர்ந்த ராசு, நடராஜன், சிவகாண்டீபன் உள்ளிட்ட சிலர் கோயிலை நிர்வகிக்கும் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
 
              அதற்கு பெரியவர்கள் பேண்டு வாத்தியம் போன்ற இசை நிகழ்ச்சிகளை கோயில் விழாக்களில் நடத்தக் கூடாது என்று தெரிவித்து விட்டனராம். இதனால் அக்கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. சனிக்கிழமை காலை ஒரு கோஷ்டியின் தூண்டுதலால், டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் கத்தி, தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாவடிப்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தனர்.
 
              அவர்கள் கிராமத்தில் கண்ணில் பட்ட நபர்களை எல்லாம், சரமாரியாகத் தாக்கினர். இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். சில வீடுகள் சூறையாடப்பட்டன.÷இந்த கலவரத்தில் சமரசம் பேச முயன்ற மாவடிப்பாளையம் ஜெயலட்சுமி (70), ஞானசேகரன் (27), சுந்தரக் கண்ணன் (20), ஜெகந்நாதன் (50), சின்னத்தம்பி (47), கணபதி (40), வேணு (42), கதிர்வேலு (38), குணசுந்தரி (38), பழநிச்சாமி (32), உள்ளிட்ட 15 பேர் பலத்தக் காயம் அடைந்தனர்.
 
              காயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூதாட்டி ஜெயலட்சுமி இறந்தார். தகவல் அறிந்ததும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று, மாவடிப்பாளையம் கிராமத்தில் மேற்கொண்டு கலவரம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.  இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை தனிப்படை போலீஸôர் தேடிவருகிறார்கள்.  திருப்பாப்புலியூர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி

சிதம்பரம்:

            தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

             சிதம்பரம் நகர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசை  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மக்கள் சந்திப்பு தர்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ பேசியது: 

             சிதம்பரம் நகர மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கேரளம், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 40 சதவீதமும், மேற்குவங்கத்தில் 50 சதவீதமும் உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உளளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வெறும் 8.5 சதவீதமேயாகும். எனவே உள்ளாட்சிகளுக்கு தமிழக அரசு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.

              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்றும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறது. சிதம்பரம் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. நலத்திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நகராட்சி நிர்வாகத்திலிருந்து வழங்கப்படும் நிதி மக்களிடையே முறையாக சென்றடைகிறதா என்றும் கவனிப்பதில்லை.

            எனவே சிதம்பரம் நகராட்சியில் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.பாலபாரதி தெரிவித்தார். நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.நடராஜன் முன்னிலை வகித்தார். திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம்,  மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கடலூர் பாதாள சாக்கடை கழிவுநீர்

கடலூர்;

            கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க இருப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை தெரிவித்தார்.

            கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, கடலில் கலக்குவது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு கடலோர கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கைவிடப்பட்டது. அடுத்து உப்பனாற்றில் கலக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. தற்போது கழிவுநீரை கெடிலம் ஆற்றில் கலக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குக் கடலூர் நகர மக்களும், பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

             இதற்கிடையே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்ட சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை,  நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக, நகராட்சிக்குக் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் கடலூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய நகராட்சித் தலைவர், 

             பாதாள சாக்கடை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை, நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நகராட்சித் தலைவர் தெரிவித்த ஆலோசனையை பரிசீலிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியது: 

            கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும் சில சிக்கல்கள் இருப்பதாகவும் எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இத்திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகளை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையக் கட்டுமானப் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இப்பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிதம்பரம் பாதாள சாக்கடைத் திட்டம் சிதம்பரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் | 44 கோடியில் நிறைவேற்றப்படும். இதற்கான டெண்டர் 18-ம் தேதி பிரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

              கடலூர் நகராட்சிக் குடிநீர் தொடர்ந்து சுவைகுன்றி வருவதாக தெரிவிக்கிறார்கள். எனவே பெருமாள் ஏரியில் இருந்து கடலூருக்குக் குடிநீர் கொண்டுவர ஆய்வு செய்யலாம் என்றார் அவர். அதைத் தொடர்ந்து அவர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறும் சில இடங்களைப் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய வேலூர் கோட்டத் தலைமைப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

Read more »

Rs. 7.69 lakh sanctioned for setting up special school at Kattumannarkoil

CUDDALORE: 

           The State government has sanctioned a sum of Rs. 7.69 lakh for setting up a special school for the differently abled children (with mental retardation) at Kattumannarkoil in Cuddalore district, according to M. R. K. Panneerselvam, Health Minister.

           He made this observation at an official function held at Rasapettai near here recently to hand over the permanent houses. The Minister said that in the special school students in the age group of five to 15 years would be admitted. The school, to be run by the Oasis, a non-governmental organisation, on the recommendations of District Collector P. Seetharaman, would start functioning from September 1.

            On the occasion, the Minister handed over the sanction order to Thavaraj of the Oasis. The Minister further said that following the efforts made by the district administration 36 differently-abled persons were selected through a special employment camp held here to a private garment company at Avinashi. The Minister also noted that 15 differently abled persons, who underwent training in cellphone services, were given monetary assistance of Rs. 3, 500 each through the District Rural Development Authority and State Bank of India.

             During 2009-10, national identity cards were given to 29,347 differently abled persons and welfare board cards to 10,502 differently abled persons, the Minister added. Mr. Seetharaman said that since the number of the mentally retarded children happened to be the highest in Kattumannarkoil, there was a need to start a special school there.

Read more »

Dogs' squad steals the show at Independence Day celebrations


MAN'S BEST FRIEND:One of the members of the dogs' squad in action at the display put up at Anna Stadium at Cuddalore on Sunday 
 
CUDDALORE: 

             A dogs' squad kept the audience spellbound while showcasing its exploits at the 64th Independence Day celebrations held at Anna Stadium in Cuddalore on Sunday. The squad comprising three pedigree dogs, along with their trainers on their trails, have acquired skills that ably support the security personnel to trace and nab criminals and detect explosives.

               Each of the animals in the squad has been trained in acquiring a unique skill. For instance, Arjun (a Dobermann) has been tutored to track criminals. His handler, G. Shiva Senthil, a head constable attached to Marudhur police station, told The Hindu that Arjun could sniff residues at the crime scene and zero in on the offender. On Sunday, the Dobermann exhibited its talent, undaunted by the massive gathering at the venue. Arjun has so far helped in cracking 50 grave crimes for which he won the third prize at the State-level.

              Sandy (a Labrador retriever) has acquired mastery over spotting hidden explosive substances. To prove its mettle, “Sandy” passed by five fully covered boxes, of which four were empty and one was filled with explosive substances, and effortlessly identified the virtual ‘tinder box.' Sandy has been extremely helpful in unearthing contraband.

            Bruno (another Dobermann), a puppy of hardly two years, is already adept in handling incendiary materials. Bruno could easily jump over hurdles while firmly clutching flaming torches in its jaws. Mr. Shiva Senthil said that the government had sanctioned Rs. 54 a day for the upkeep of each dog. Every member of the squad is put on a regulated diet. In the mornings, they are served with half-a-litre of milk and one egg each.In the afternoon, they are given a plateful of rice mixed with half-a-kilogram of cooked beef; and, in the evenings, they are fed half-a-litre of milk and three slices of bread each.

Read more »

நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா

நெல்லிக்குப்பம்: 

             நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. உதவி பொது மேலாளர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைமை பொறியாளர் சேகர் ஆயிரத்து 500 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் உதவி பொறியாளர் சாமுவேல், ஆலை பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்புரத்தினம், குமரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே இலவச "டிவி" வழங்கும் விழா ஊராட்சி தலைவர் புறக்கணிப்பு

திட்டக்குடி : 

                  திட்டக்குடி அருகே இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவை ஊராட்சி தலைவர் புறக்கணித்தார். திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. 

                கூடுதல் துணை தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பா.ம.க., ஒன்றிய செயலாளர் திருமாறன், சப் இன்ஸ்பெக்டர் கள் பெருமாள், பழனி முன்னிலை வகித்தனர். தி.மு.க., கிளை செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். கிளை செயலாளர் தனவேல், வார்டு கவுன்சிலர்கள் சங்கர், பிச்சை, அருந்தவம், தங்கராசு, சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.தேர்தல் தனி தாசில்தார் ஜெயராமன் 1,314 பயனாளிகளுக்கு இலவச "டிவி' வழங்கி பேசினார். முன்னதாக ஊராட்சி தலைவர் விழாவில் பங்கேற்க வேண்டுமென துணை தாசில்தார்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் விழா முடிவு வரை ஊராட்சி தலைவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

Read more »

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

சிதம்பரம்: 

                அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப் பட்டது.

                சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட்டம் தலைவர் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் குஞ்சு பாண்டியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய இரண்டு கைப் பம்புகள், சிமென்ட் குப்பைத் தொட்டிகள் அமைத்தல். 450 வடிகால் சிலாப்புகள் அமைப்பது. வெள்ளக் குளம், கொத்தங்குடி பகுதியில் சிமென்ட் சாலை, ,வெள்ளைக்குளம் பகுதியில் ஆழ்துளை கிணறு, நீர்மூழ்கி மின் மோட்டார் மற்றும் பம்பு அறை. கே.ஆர்., நகரில் தார் சாலை, ஆதி திராவிடர் காலனியில் கழிப்பிடம் சீரமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

அண்ணாமலைபல்கலையில்சுதந்திர தினம்

சிதம்பரம்: 

            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துணைவேந்தர் ராமநாதன் தேசியக்கொடியேற்றினார்.

            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் சுந்திரதின கொடியை துணைவேந்தர் ராமநாதன் ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதுடன், "உடல் பருமனும் யோக பயிற்சி முறையும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். 

                நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, துணைவேந்தர் நேர்முக உதவியாளர் ராஜசேகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சிசுந்தரம், தொலைதூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், விஸ்வநாதன், பி.ஆர்.ஓ., செல்வம், ஆளவை மன்ற உறுப்பினர் தில்லை சீனு, இணைதேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தவமணி, வளர்ச்சிஅலுவலர் குமரப்பன், பதிவா ளர் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தின கவிதைத் திருவிழா

கடலூர்: 

              பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிதைத் திருவிழா நடத்தப்பட்டது.

               கடலூர் புதுப்பாளையம் துர்கா பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந் தில் முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். 63ம் ஆண்டு சுதந்திர தினம் சாதனைகள் நிறைந்ததா? சோதனைகள் நிறைந்ததா என்ற தலைப்பில் நடந்த கவிதைப் பேட்டியில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 75 கவிஞர்கள் பங்கேற்றனர். 

                   அவர்களில் புதுச்சேரி ஞானகுமரன், ஆறுமுகம், ராஜராஜேஸ்வரி, பு.முட் லூர் தமிழ்செல்வன் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி நாகரத்தினம் தபாலில் அனுப்பிய கவிதை ஆறுதல் பரிசு பெற்றது. கூட்டுறவுத் துறைத் தனி அலுவலர் ஞானபாரதி பரிசு பெற்றார். உபேந்திரன், பாரதிவாணர் சிவா வாழ்த்துரை வழங்கினர். சாந்தி பிரியா நன்றி கூறினார்.

Read more »

பண்ருட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பண்ருட்டி,: 

              பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

               பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பண்ருட்டியில் கெடிலம் ஆற்றங்கரை அடுத்துள்ள சந்தைதோப்பில் ஆய்வு நடந்தது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 38 பஸ்,வேன் வாகனங்களை தாசில்தார் பன்னீர்செல்வம், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

                ஆய்விற்கு பின் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பன்னீர் செல்வம் பள்ளி வாகன டிரைவர்கள், உரிமையா ளர்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண் டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் விபத்துகளை தவிர்ப்பது குறித்து பேசினர்.

Read more »

கடலூரில் சுதந்திர தினவிழா: பல பள்ளிகள் "ஆப்சென்ட்'

கடலூர்: 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பங்கேற் பது குறைந்து வருகிறது.

             மாணவ பருவத்திலேயே நாட்டுப்பற்றை விதைக்கும் வண்ணம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்படுவது வழக்கம். இவர்கள் மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் பள்ளிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பித்து கலெக்டரிடம் பாராட்டு சான்றிதழ்கள் பெறுவர். 

                     இதன் மூலம் சக மாணவர்களுக்கும் நாட்டுப் பற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.ஆனால் தற்போது அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் உள்ளூர் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் சுதந்திர தினவிழாவின் தொடக்க நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் "டல்லடித்ததால்' ஏற்பாடு செய்த அதிகாரிகள் கவலையடைந்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை கூறியது, 

                "மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடலூர் விழாவிற்கு வருகை தர வாகன வசதி செய்து தருவதில்லை. செலவுகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பெரும்பாலான பள்ளிகள் பங்கேற்க முன்வருதில்லை' என்றார். இனி வரும் காலங்களிலாவது மாணவ மாணவியர்கள் மனதில் நாட்டுப் பற்றை ஏற்படுத்துவும், அவர்களை குதூகளிக்கச் செய்யவும் அதிகாரிகள் வழிகாட்டவேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதில் தாமதம்

கடலூர்: 

                அரசு பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான சிறப்பு நிதியை அரசு இதுவரை வழங்காததால் மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
              ஆண்டு தோறும் பள்ளி துவங்கும்போது மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் நிதி வசூலிக்கப்பட்டு அந்தத் தொகையில் இருந்து விளையாட்டு, அறிவியல், நூலகம், ஒளி - ஒலி கல்வி, செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் சங்கம், இலக்கியம், எழுது பொருள் ஆகிவற்றிற்கு செலவு செய்யப் படும். அதில் பிளஸ் 1 மற் றும் பிளஸ் 2 மாணவர்கள் 30 ரூபாயும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 20 ரூபாயும், 6, 7, 8ம் வகுப்பு மாணவர் கள் 10 ரூபாயும் கட்டணமாக செலுத்தினர்.

                   எஸ்.சி., மாணவர்களுக்கு மட்டும் அரசே செலுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் விளையாட்டு கட்டணத்தை அரசே செலுத்துவதாக அறிவித்தது. அந்த நிதி மூலம் தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறு மையம், கல்வி மாவட் டம், கடலூர் மண்டலம், மாநில அளவில் உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குடியரசு தின விளையாட்டு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் தின விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், தொழில் கல்வியில் முன் னுரிமை வழங்கப்படும்.

               இந்நிலையில் கடலூர் கல்வி மாவட்ட விளையாட்டுக் கழகத்தின் சார்பில் குறு வட்ட மகளிர் விளையாட்டு போட்டிகள் அடுத்த வாரம் கடலூரில் துவங்க உள்ளது. 30ம் தேதி ஆண்களுக்கான குறுவட்ட போட்டிகள் துவங்குகிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறு வட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

            அதேப்போல் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் குறு வட்ட போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், பின்னர் மண் டலம் மற்றும் மாநில அள விலான போட்டிகளில் பங்கேற்பர். பள்ளி துவங்கியதுமே சிறப்பு நிதி தேவை பற்றிய தேவைப் பட்டியல் அரசுப் பள்ளிகளில் கோரப்படும். ஆனால், பள்ளிகள் துவங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இதுவரை எந்த அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு உப கரணங்களை வாங்கப்படவில்லை. 

                      இதனால் மாணவ, மாணவிகள் போதிய பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. தற்போதுதான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் எண் ணிக்கை, எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு நிதி தேவை என்ற பட்டியலை அரசு கேட்டுள்ளது. இப்பட்டியல்கள் அனைத்தும் வழங்கப்பட்ட பின் தான் பள்ளிக்கான சிறப்பு நிதியை அரசு வழங்கும். குறு வட்ட போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் சில பள்ளி மாணவர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். பள்ளி சிறப்பு நிதியை அரசு உடனே வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior