உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 17, 2012

அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:

         அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்ப மனுக்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

           தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,894 பேர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 50. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து, அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

          விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்துக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கும் வருகிற 30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்தை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.










Read more »

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட கிராம பஞ்சாயத்து

http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/1367b628-dc7c-4023-8646-eafb4c106ba8_S_secvpf.gif
 

          கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாட்டார்மங்கலம் ஊராட்சி தேர்தலில் ஆசிரியராக பணிபுரிந்த சுதா மணிரத்தினம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
         இதைப்போன்று இந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டு களிலும் பெண்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   100 சதவீதமும் பெண்களே போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் இந்த ஊராட்சியில் மட்டும் தான். இதை அறிந்த டெல்லி தமிழ்ச்சங்கம் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வரவேற்பு அளிக்க அழைப்பு விடுத்து உள்ளது.
        இந்த தமிழ்சங்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி சுதா மணிரத்தினம் தலைமையில் அந்த பகுதியில் உள்ள 100 உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 240 கிராமத்தை சேர்ந்த 500 பேர் டெல்லி செல்கின்றனர். இவர்கள்  (16-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு 18-ந் தேதி சென்றடைகின்றனர். பின்னர் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அங்கு ஏற்பாடு செய்துள்ள நாட்டு நல பணிததிட்டத்தில் பங்கேற்கின்றனர். 
      தமிழ்சங்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்திக்க உள்ளனர். பின்னர் ராகுல் காந்தி எம்.பி., மத்திய மந்திரிகள் சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயராம்ரமேஷ், ஜெயந்தி நடராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோரையும் சந்திக்கின்றனர். 

Read more »

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் 10 தொழிற்சங்கங்கள் போட்டி

நெய்வேலி:

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் நெய்வேலியில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களிடம் இருந்து விருப்பமனுவை மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் எ.ஜெகன்நாதராவ் பெற்றார். இதையடுத்து விருப்பமனு வழங்கிய தொழிற்சங்கங்களை பரிசீலித்தப் பின்னர் தேர்தலில் போட்டியிடக் கூடிய 10 தொழிற்சங்கங்களையும், அதற்குண்டான தேர்தல் எண்ணையும் வெளியிட்டார்.

அதன்படி 

ஏ.ஐ.டி.யூ.சி., 
அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், 
சி.ஐ.டி.யூ., 
தொழிற்சங்கக் கூட்டமைப்பு, 
.டி.யூ.சி., 
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், 
மூவேந்தர் முன்னேற்றத் தொழிற்சங்கம், 
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம், 
பாட்டாளித் தொழிற்சங்கம், 
தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 

உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

          இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், எச்எம்எஸ் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரே அமைப்பாக போட்டியிடுகின்றன. இந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க வளாகத்தில் நடைபெறுகிறது.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior