உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

படிப்படியாக மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம்:
 
               இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று மழலையர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியது:
 

              1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப் பள்ளியில், 2545 மாணவர்கள் பயிலுகின்றனர். 118 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருவதால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில்தான் ஆண்டுக்கு 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுகின்றனர். 
 
           சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தவதற்காக நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திட்டங்களை நிறைவேற்ற  2.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவசமாக பயில முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் பயிலும் மோகம் குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
                 மூத்தத் திமுக தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயரில்  25ஆயிரத்துக்கு அறக்கட்டளையை, அண்ணாமலைப் பல்கலை. இணைப்பேராசிரியர் வெங்கடேசன் நிறுவியுள்ளதாகவும், இந்த அறக்கட்டளை மூலம் பள்ளியில் ஆண்டுதோறும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார். 
 
                   விழாவில் கீரப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் வாழ்த்துரையாற்றினார். முதல்வர் ஜி.சக்தி நன்றி கூறினார். துணைச் செயலர் எஸ். கஸ்தூரி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.குமார், அண்ணாமலைப் பல்கலை. மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன், காமராஜ் சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி, துணைமுதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தமிழகத்தில் வனப்பகுதியின் பரப்பளவு குறைந்து வருகிறது: அறிவியல் தொழில்நுட்ப மன்றச் செயலர்

சிதம்பரம்:
 
             தமிழகத்தில் வனப்பகுதியின் பரப்பளவு குறைந்து வருவதால் மாணவர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற மாநில உறுப்பினர் எஸ்.வின்சன்ட் தெரிவித்துள்ளார்.
 
              சிதம்பரத்தை அடுத்த சுனாமி பாதிக்கப்பட்ட கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஈரநிலம் அறக்கட்டளை, கெட் பசுமை அமைப்பு மற்றும் கிள்ளை பேரூராட்சி ஆகியன இணைந்து "புவியைக் காப்போம்' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த 100 மீட்டர் நீள துணியில் மரம் நடுவது, பிளாஸ்டிக் பொருளினால் ஏற்படும் தீமை உள்ளிட்டவை குறித்த ஒவியம் வரைதல் மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
              
             கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஈரநிலம் அறக்கட்டளை தலைவர் ஓவியர் ந.தமிழரசன் வரவேற்றார். துணைத்தலைவர் கே.பரமதயாளன் முன்னிலை வகித்தார். 
 
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றச் செயலர் எஸ்.வின்சன்ட், ஓவியம் வரைதல் மற்றும் மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:
 
                   தமிழகத்தில் முன் 33 சதவீத பரப்பளவு வனப்பகுதி இருந்தது. தற்போது அவை அழிந்து 22 சதவீதமாக குறைந்துள்ளது. பள்ளியில் உள்ள ஒரு மாணவன், 5 மரக்கன்றுகள் வீதம் நட்டால் 10 ஆண்டுகளில் மீண்டும் 33 சதவீத பரப்பளவு வனப்பகுதியாக மாறும்.
 
               இதை ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தி வருகிறார். மரங்கள் நடுவதால் நமக்கு ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ûஸடு கிடைக்கிறது. மழை மற்றும் இயற்கை சூழல் பாதுகாக்கப்படுகிறது. மகரந்தச் சேர்க்கை உருவாகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. எனவே அனைவரும் மரக்கன்றுகளை அவசியம் நட வேண்டும் என எஸ்.வின்சன்ட் தெரிவித்தார்.÷கெட் பசுமை அமைப்பு நிறுவனத் தலைவர் உதவிப் பேராசிரியர் இரா.சரவணன் கருத்துரையாற்றினார்.

Read more »

Drive under way to decongest major roads

.

Improving road travel: Collector P Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis on a campaign at Vriddhachalam

CUDDALORE: 

             The Cuddalore district administration has embarked upon a campaign to decongest major roads and tourist spots. It is enlisting the support of traders, commercial establishments, petty shop owners and pavement vendors.

              A retinue of officials and security personnel led by Collector P. Seetharaman, Superintendent of Police Ashwin Kotnis and District Revenue Officer S. Natarajan went through the main thoroughfares and commercial areas at Bhuvanagiri, Sethiathope, Vadalur and Vriddhachalam to spread the message that congestion was the major cause of accidents. If free vehicular movement was ensured, it would avert accidents and save many lives.

               As Cuddalore formed part of important tourist destinations and temple circuit, there used to be heavy flow of traffic. However, the roads were narrow, both at entry and exit points, and it was further narrowed down by unauthorised shops. Long-distance travellers would lose travel time owing to bottlenecks. This might lead to over-speeding and accidents, claiming lives. Mr. Seetharaman said shops set up on public property would affect pedestrian movement. The district administration had proposed to create awareness of the hazards of such unwanted structures among people. The Collector called upon the local bodies to prepare proposals for widening roads and giving facelift to important junctions. The official entourage visited places such as Bhuvanagiri, Sethiathope, Vadalur and Vriddhachalam.

Read more »

கிராம மாணவர்கள் டாக்டர்களாக வாய்ப்பு வழங்கியவர் கருணாநிதி : அமைச்சர் பன்னீர்செல்வம்

சிதம்பரம் : 

           கிராமப்புற மாணவர்களும் டாக்டர்களாகும் வாய்ப்பை முதல்வர் கருணாநிதி உருவாக்கி கொடுத்திருக்கிறார் என சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளி விழா ஆண்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் லட்சுமிகாந் தன் தலைமை தாங்கினார்.

பள்ளியில் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழலையர் பிரிவு வகுப்பறை கட்டடங் களை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது: 

              பள்ளிகளை நிர்வகிப்பது சாதாரண விஷயமல்ல. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப் பது முதல் அவர்கள் பத்திரமாக வீடு போய் சேரும் வரை நிம்மதி இருக்காது. சிதம்பரத்தில் குப்பம்மாள் ராமசாமி கல்வி பண்பாட்டு அறக் கட்டளை சார்பில் 1985ம் ஆண்டு பள்ளி துவங்கப்பட்டு வெள்ளி விழா கொண்டாடுகிறது. பள்ளி தாளாளரின் முழு உழைப்பே இதற்கு காரணம்.அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். இங்கு படித்த மாணவர்கள் பலர் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

                   தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக கருணாநிதி பொறுப் பேற்ற பிறகு கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் டாக்டர் களாகும் வாய்ப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் தமிழகத் தில் தான் அதிக மருத்துவ கல் லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 5000 டாக்டர்கள் வெளிவருகின்றனர். அதனால் மக்களுக்கு தரமான சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதே போன்று அரசு கல்லூரிகளிலும் "ஷிப்ட்' முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் எண் ணிக்கை இரு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. நான் சிறப்பாக செயல்படுவதாக கூறினர். நாங்கள் செயல்படவில்லை, எங்களை முதல்வர் கருணாநிதி ஊக்குவிக்கிறார். அதனால் செயல்பட வேண்டிய சூழ் நிலை. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

                     தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதிமோகன், அருண்பிரசாத் நினைவு உள்விளையாட்டரங்கை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஒன்றிய சேர்மன்கள் செந்தில்குமார், மாமல்லன், முத் துப்பெருமாள், பள்ளி துணை செயலாளர் கஸ்தூரி, வீனஸ் பள்ளி தாளாளர் குமார், பி.ஆர்.ஓ., செல்வம், பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, துணை முதல்வர் ஷீலா, நிர்வாக அலுவலர் சந்திரசேகர், கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?

கடலூர் : 

              சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வரும் வீராணம் ஏரி தூர்ந்து நாளுக்கு நாள் நீரின் கொள்ளளவு குறைந்து வருகிறது. எனவே ஏரியை முழுமையாக தூர் வாரி,கரையை பலப்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மட்டுமே, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி நீர் வழங்கவும், சென் னைக்கு தடையின்றி குடிநீர் கொண்டு செல்லவும் முடியும்.

                 தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று வீராணம். வீர நாராயணன் என்ற அரசர், போர் வீரர்களை கொண்டு தொலை நோக்கு பார்வையுடன் ஏரியை வெட்டினார். அவரது பெயராலேயே இன்று வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. வீராணம் ஏரியின் பிரதான கரையின் நீளம் மட்டுமே 16 கி.மீ., அத்துடன் ஏரியின் முழுமட்ட அளவில் நீர்பிடிப்பு பரப்பு 35 சதுர கி.மீ., ஏரியின் அகலம் 5.6 கி.மீ., சுற்றுளவு 40 கி.மீ., பிரதான கரையின் அகலம் 24 அடி, எதிர்கரையின் நீளம் 8 கி.மீ., காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,446 மில்லியன் கன அடி.

                ஆனால் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய், நீர்வரத்து ஓடைகள் வழியாக மண் வந்து சேர்ந்ததால் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக குறைந்தது. 1966ல் கணக்குப்படி 1,102 மி., கன அடியாக இருந்தது. 1978ல் 981 மி., கன அடியாக குறைந் தது. 1982ல் அது மேலும் தூர்ந்து 931 மி., கன அடியானது. தற்போது மேலும் குறைந்திருக்க வேண்டும். காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர், அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. இவையல்லாமல் மழை காலங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, வண்ணான் குழி ஓடை, கருவாட்டு ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் வழியாக ஏரிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி வரை கூடுதல் நீர் வருகிறது.

                 இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னர் கோவில் பகுதியில் 49,440 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போதைய நிலையில் ஏரி முழுமையாக மண்மேடிட்டும், மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடி, கொடிகள் வளர்ந்தும் நீரின் கொள்ளளவு வெகுவாக குறைந்து விட்டதால், பாசனத் திற்கு முழுமையாக தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் செயல்படுத் தப்பட்டதில் இருந்து, மேட்டூரில் இருந்து தண்ணீர் வீராணத் திற்கு கொண்டு வரப்பட்டு நிரப் பப்படுவதால் தொடர்ந்து சென் னைக்கு குடிநீர் கிடைக்கிறது.

                கடந்த 5 ஆண்டுகளாக கோடையிலும் தொடர்ந்து தண்ணீர் இருந்து வருகிறது. ஆனால் வீராணத்தில் கொள்ள ளவு குறைந்து விட்டதால் விவசாய பாசனத்திற்கு அனைத்து காலத்திலும் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்த முயற்சிக் காமல் அரசு அலட்சியம் செய்து வருகிறது. இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷமான இந்த ஏரியை சரியாக பயன்படுத்த தவறி வருகிறோம்.

                   சில கோடி ரூபாய் செலவு செய்து ஏரியை புதுப்பித்து கொண்டால் பல கோடி செலவு செய்து கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு செல்லும் அவசியம் இருந்திருக்காது. எனவே தற்போது முழுமையான கொள்ளளவிற்கு நீரை தேக்கி பயன்படுத்த முடியாமல் தூர்ந்துள்ள வீராணம் ஏரியை தூர் அகற்றி கொள்ளளவின் முழுமையான இலக்கான 1,465 மி., கன அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏரியின் முழு நீர் மட்டத்தை 2 அடி உயர்த்தி கரையை பலப்படுத்த வேண்டும். காட்டுமன்னார் கோவில் அருகே முட்டத்தில் கடலூர் - நாகையை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் கட்டும் போதே பாலத்துடன் ஷட்டருடன் கூடிய தடுப்பணை அமைத்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைக்க முடியும்.

                     வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறையும் போது ஏரிக்கு கொண்டு செல்லலாம் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கொள்ளிடக் கரை 108 கோடி ரூபாயில் உயர்த்தி பலப்படுத்தும் திட்டத்தில் வீராணம் ஏரியில் இருந்து 23.25 லட்சம் கன மீட்டர் மண் எடுக்கப்பட உள்ளது. இதனால் 0.3 டி.எம்.சி., தண்ணீர் உயருமென பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இப் பணி எப்போது தொடங்கப்படுமென தெரியவில்லை.

கிடப்பில் கிடக்கும் திட்டம்: 

                    கல்லணையில் இருந்து கீழணை வரை ஐந்து இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் தடுப் பணைகள் கட்டப்பட்டு நீரை தேக்கும் திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு கிடப்பில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தினால் வீராணம் ஏரியில் நீர் குறையும் போது நீரை கொண்டு கொள்ளளவு குறையாமல் தண்ணீர் ஏற்ற முடியும்.

நிவாரணம் தவிர்க்கலாம் : 

                   காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுகாவில், கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெள்ளம், வறட்சி என மாறி, மாறி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின் றனர். அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியிலும் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நிவாரணமும், கடன் தள்ளுபடியும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தொகையை கொண்டு வீராணம் ஏரியை முழுமையாக தூர்வாரி கொள்ளளவை உயர்த்தி, பாசன வாய்க்கால்களை தூர்வாரி கரையை பலப்படுத்தினால், எந்த காலத்திலும் இப்பகுதியில் வெள்ளச்சேதம் ஏற்படாது, விவசாயமும் பாதிக்காது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் திறந்த வெளியில் சாலையோரம் ஆடுகள் அறுக்கும் அவலம்

விருத்தாசலம் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் பெரும்பாலான இடங்களில் திறந்த வெளியில் ஆடுகளை அறுக்கும் அவலம் நடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடம் பயனற்ற நிலையில் உள்ளது.

                     சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தரமான, சுத்தமான ஆட்டிறைச்சிகள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆடு அறுக்கும் கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இக் கூடங்களில் நோய் வாய்பட்ட ஆட்டிறைச்சி விற்பனையை தடுக்கும் வகையில் கால்நடை டாக்டரைக் கொண்டு ஆடுகளை பரிசோதிக்கும் நடைமுறையும் உள்ளது. டாக்டர் அனுமதித்த பின்னர் தான் அந்த ஆட்டினை அறுத்து அதன் இறைச் சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண் டும்.

                     ஆனால் இந்த நடைமுறைகள் எந்த ஊரிலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக சாலையோரங்களிலும், தெருக்களிலும் ஆடுகள் அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. விருத்தாசலம் நகரில் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள நவீன ஆடு அறுக்கும் கூடம் நகராட்சி பகுதி திட்டம் 2008- 09ம் ஆண்டு நிதியின் கீழ் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இங்கு ஆடுகள் அறுப்பதற்கு தனி கட்டடம், ஆடுகளை பரிசோதிக்கும் டாக்டருக்கு தனி கட்டடம், கழிவறை, தண்ணீர் வசதி, காம்பவுண்டு சுவர் என அனைத்து வசதிகளும் உள்ளது.

                   இந்தக் கூடம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக பயன்பாட் டிற்கு வந்துள்ளது. விருத்தாசலத்தில் 22க்கும் மேற் பட்ட வியாபாரிகள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100க்கும் அதிகமான ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகிறது. இருந்தும் நாள் ஒன்றுக்கு ஐந்திற்கும் குறைவான ஆடுகளே இந்த கூடத்தில் அறுக்கப்படுகிறது. மற்ற வியாபாரிகள் அனைவரும் தாங்கள் கடை வைத்துள்ள இடங்களிலேயே அறுத்து விற்பனை செய்கின்றனர்.

                       இதனால் நகரத்தில் சுகாதார சீர்கேடு அதிகரிப்பதோடு, நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அதேப்போன்று நெல் லிக்குப்பம் மார்க் கெட்டில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கடலூரில் ஆடு அறுக்கும் கூடம் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலானோர் கடலூர் - நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, திருவந் திபுரம் சாலை மற்றும் செம் மண்டலம் ஆகிய இடங் களில் சாலையோரத் திலேயே கடைகள் அமைத்து அங்கேயே அறுத்து விற்பனை செய் கின்றனர்.

                     சிதம்பரத்திலும் சொற்ப அளவிலான வியா பாரிகளே கூடத்தை பயன் படுத்துகின்றனர். ஸ்ரீமுஷ் ணத்தில் பழைய கட்டடம் இருந்தும் கடந்த சில ஆண் டுகளுக்கு முன் 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கடைக் கும் ஆடு அறுக்கும் கூடத்திற் கும் ஒன்னரை கி.மீ., தூரம் இருப்பதால் வியாபாரிகள் அங்கு சென்று அறுப்பதில்லை.

பயன்படுத்தாததன் காரணம் குறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், 

                      "கூடத்தில் நல்ல வசதிகள் உள்ளன. இருந்தும் ஆடுகளை தொங்க விட்டு அறுக்க போதுமான கம்பிகள் இல்லை. அதேப் போல் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலே வழுக்கி விழும் அபாயம் உள்ளது. குறைகளை அதிகாரிகள் சரி செய்து கொடுத்தால் பயன் படுத்துவோம்' என்கின்றனர்.

                நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளின் சிறிய குறைகளை போக்கி, கட்டாயமாக கூடத்தில் தான் ஆடுகளை அறுக்க வேண் டும் என உத்தரவிட வேண் டும். மேலும் டாக்டர்களைக் கொண்டு ஆடு களை அறுப்பதற்கு முன் கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதார சீர் கேட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, மாவட்டத் தில் ஒவ்வொரு ஊரிலும் 20 லட்சம், 27 லட்சம் என பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களும் முழு பயன்பாட்டிற்கு வரும்.

Read more »

காங்., மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும்: செல்வப்பெருந்தகை

திட்டக்குடி : 

           மத்தியில் ஆளும் காங்., அரசால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும் என எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேசினார்.

            திட்டக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இறையூர் சமுதாய நலக் கூடம், தி.அகரம் கிராமத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. மேலும் இறையூர், தொளாளர் ஊராட்சிகளில் 2,242 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது.

புதிய கட்டடங்களை திறந்து வைத்து "டிவி' வழங்கிய எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை  கூறுகையில், 

                "வெலிங்டன் நீர்த்தேக்கத் திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து வருவது மன நிறைவு ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால்களில் தொளாளர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் கால்வாய்கள் மற்றும் வெள்ளாறு - வெலிங்டன் கால்வாய்களை சீரமைக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன். மத்தியில் ஆளும் காங்., அரசால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தர முடியும்' என கூறினார்.

                       விழாவில் தாசில்தார் கண்ணன், துணைதாசில்தார்கள் அண்ணா துரை, திருநாவுக்கரசு, பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, தி.மு.க., நகர செயலாளர் குமரவேல், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக 90 மி.மீ., பதிவு

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கீழ்ச் செருவாயில் 90 மி.மீ., மழை பெய்தது.

               கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென மழை கொட்டியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கடலூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. கடந்த 2 நாட் களாக கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ.,ல் வருமாறு: 

                              கீழ்செருவாயில் 90, பெலாந்துறை 71, தொழுதூர் 70, விருத்தாசலம் 68, காட்டுமன்னார்கோவில் 52, மேமாத்தூர் 51, லக்கூர் 48, கடலூர் 48, ஸ்ரீமுஷ் ணம் 45, வேப்பூர் 45, குப்பநத்தம் 43.40, காட்டுமைலூர் 37, லால்பேட்டை 37, வானமாதேவி 16, சேத்தியாத்தோப்பு 13, புவனகிரி 12, பரங்கிப்பேட்டை 8, அண்ணாமலை நகர் 7, கொத்தவாச்சேரி 5, பண் ருட்டி 5, சிதம்பரம் 4 மி.மீ., மழை பெய்துள்ளது. இவற் றில் திட்டக்குடி அருகில் உள்ள கீழ்ச்செருவாயில் அதிகபட்சமாக 90 மி.மீ., மழை பெய்துள்ளது. 

                   கடும் மழையால் கடலூரில் நேற்று வகுப்புகள் வைத்த தனியார் மெட்ரிக் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

Read more »

மரவள்ளிக்கு மானிய விலையில் உரங்கள்: அரசுக்கு கோரிக்கை

சிறுபாக்கம் : 

             மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் மானிய விலையில் உரங்கள் வழங்க மரவள்ளி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

                மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் உள்ள பெரியநெசலூர், விளம்பாவூர், கழுதூர், பாசார், சிறுபாக்கம், மங்களூர், ஒரங்கூர், பனையந்தூர், அரசங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு 2 முதல் 3 ஏக்கர் வரை மரவள்ளி பயிர் ரகங்களான குங்குமரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளி பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

                 கடந்த ஜனவரி மாதத தில் பயிர் வைக் கப்பட்ட மரவள்ளி முழு அளவில் வளர்ச்சி பெறும் தருணத்தில் உள்ளது. தற்போது மரவள்ளி செடிகளில் அடி உரம் வைக்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தேவையான பொட்டாஷ், யூரியா, சூப்பர் மற்றும் டி.ஏ.பி., ஆகிய உரங்கள் விவசாயிகளுக்கு தேவைபடுகிறது. இவை தனியார் உரக்கடைகள் மற்றும் அரசு வேளாண் கிடங்குகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் நிலை உள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒன்றிய வேளாண் அலுவலங்கள் மூலம் மானிய விலையில் உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கழுதூர்- சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட கோரிக்கை

சிறுபாக்கம் : 

            சிறுபாக்கம்- கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட முன்னாள் எம்.பி., கோரிக்கை விடுத் துள்ளார்.

இது குறித்து தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கிய மனு: 

                 மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழுதூர் மற்றும் சிறுபாக்கம் ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 80 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனர். குக்கிராம மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர், விருத்தாசலம் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. 

                      இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏழை மக்களுக்கு ஏற்படுவதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். எனவே பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ள கழுதூர் மற்றும் சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத் தப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.56 லட்சம் மானியத் தொகை

சிதம்பரம் : 

            அண்ணாமலை நகர் பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் 2009 - 10ல் நகர்ப்புற சுய வேலை வாய்ப்புத் திட்டம், நகர்ப்புற பெண் கள் சுய உதவித் திட்டம், சிக்கனம் மற்றும் நாணய சங்கம் திட்டங்களின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத் தொகையாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது.

Read more »

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் டயர் எரிப்பதால் சீர்கேடு

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஓமக்குளம் அருகே பழைய டயர்களை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

              சிதம்பரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓமக்குளம் பகுதியில் கொட்டி மக்க வைக்கப்படுகிறது. இதில் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் உள்ளது. சிலர் டயரை கொளுத்தி அதில் கிடைக்கும் கம்பிகளை விற்பனை செய்ய பழைய டயர்களை கொளுத் தவதால் புகை மூட்டத்துடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல் லும் நிலையில் உள்ளனர். துர்நாற்றத்துடன் கூடிய புகை மண்டலத்தால் மூச் சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்

கடலூர் : 

            கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங் களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக்காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள் வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

               தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச் ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப்பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

Read more »

புவனகிரியில் மழையின் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

புவனகிரி : 

             புவனகிரி பகுதியில் இரண்டாம் நாளாக நேற்று மழை பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

             புவனகிரியிலிருந்து கடலூர் மற்றும் விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் துவங்கியது. மழை விட்டு விட்டு பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்திலிருந்த மணல், கம்பிகள் மற்றும் கற்குவியல்களை முழுமையாக அகற்றவில்லை. இந்நிலையில் இரண்டாம் நாளாக நேற்றும் மழை நீடித்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் இருந்த கற்குவியல்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப் பட்டது.

                    புவனகிரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் சாலையின் பின்புறம் கழிவு நீர் கால்வாய் வசதி இருந்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மிக நீளமான கழிவு நீர் கால்வாய் கட்டியதால், சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சிக்கிய கட்டடங்கள் தற்போது எவ்வித சேதமில்லாமல் தப்பின.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior