உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

உணவு பாதுகாப்பு தொடர்பாக 3 நாள் பயிற்சி கடலூரில் துவங்கியது

கடலூர் : 

        கடலூர் மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவிலான 3 நாள் உணவு பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி கடலூரில் துவங்கியது.
 
       கடலூர் மாவட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட அளவில் விவசாயிகள், விவசாயம் தொடர்பாக பணிபுரியும் நுகர்வோருக்கு,  உரிமைகள், கடமைகள் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான 3 நாள் பயிற்சி நேற்று கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று துவங்கியது.  கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார். உதவி இயக்குனர் இளவரசன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் தேவராஜன், பிரமேலதா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசுகையில் "விவசாயத்தை பொறுத்தவரை பசுமை புரட்சி மிகவும் முக்கியமானது.  தற்போது ஏற்பட் டுள்ள விஞ் ஞான வளர்ச்சிக்கு ஏற்ப பூச்சி மருந்துகளை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண் டும். மின் சாரம், தண் ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என பேசினார். தொடர்ந்து இப்பயிற்சி 18ம் தேதி  சிதம்பரம் கோட்டத்திலும், 25ம் தேதி விருத்தாசலம் கோட்டத்திலும் நடத்தப்படுகிறது. சம்பிரதாயத்திற்காக நடந்த பயிற்சி:  பயிற்சியின் தொடக்க விழா அழைப்பிதழ் விரல் விட்டு எண் ணக்கூடிய குறைந்த அளவிற்கு அச்சடித்ததால் பத்திரிகையாளர்களுக்கு கூட வழங்கவில்லை.  நேற்று நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கூட அழைப்பு இல்லாததால் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை.

Read more »

பஸ் நிலைய கடைக்காரர்களை தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியரைக் கண்டித்து கடையடைப்பு

பண்ருட்டி : 

          பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியரைக் கண்டித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு செய்தனர். பண்ருட்டி பஸ் நிலைய நகராட்சி கட்டடத்தில் வாடகைக்கு கடை நடத்தி வருபவர்கள் குணசேகரன், ராஜா. இவர்களது  கடைகளில் துப்புரவு பணியாளர் கள் இருவர்  கடை முன் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசியதுடன்  கொலைமிரட்டல் விடுத்தனர். இதனை கண்டித்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு பஸ்நிலைய பகுதி கடை உரிமையாளர்கள் 100 பேர் தீடீரென  கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
 
                    இதுகுறித்து மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம்,  அதிகாரிகளுடன்  பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 4.30 மணிவரை நகராட்சி கமிஷனர் வராததால் வியாபாரிகள் பஸ்நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த  இன்ஸ் பெக் டர் செல்வம்,  நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி வியாபாரிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.  அதில் வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியர் ள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் விரைவில் சீரமைப்பதாக கமிஷனர் உமாமகேஸ்வரி உறுதி கூறினார்.  இதனையடுத்து கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் கை விட்டு 5.30க்கு கடையை திறந்தனர்.

Read more »

ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு திரளாக பங்கேற்க முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பதென செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சேத்தியாத்தோப்பு எஸ்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், அவைத் தலைவர் காசி முன்னிலை வகித்தனர்.
 
         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க. செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் துணை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் கிளி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் 13ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும்  ஜெ., தலைமையிலான போராட்டத்தில் புவனகிரி ஒன்றியத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வது, வரும் 24ம் தேதி ஜெ., பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர் : 

       கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை எஸ்.பி., திறந்து வைத்தார். கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வரும் புறக்காவல் நிலையம் கடைகள் இருக்கும் பகுதியில் இருப்பதாலும் அதற்கு முன்பாக பஸ்கள் நின்று மறைத்துக் கொள்வதால் அங்கு புறக்காவல் நிலையமே இல்லாதது போல் காணப்பட்டது.  பஸ் நிலையத்தை ஆய்வு செய்த எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படியும், எச்சரிக்கை அறிவிப்பு அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனையடுத்து பஸ் நிலையத் தில் நடுவில் உள்ள மணி கூண்டின் கீழ் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக ரூ.25 ஆயிரம் செலவில் புறக் காவல் நிலையமும், அருகில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இடத் தையும் பெயின்ட் அடித்து சீர் செய்தனர். அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் எஸ்.பி., கூறுகையில் "தாலுகா தலைநகரங்கள், நகரங்களில் உள்ள பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இக்காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை என்ற புகார் வந்ததன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் ஆய்வு செய்யப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 24 மணிநேரமும் செயல்படும் இம் மையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டி.எஸ்.பி., 9445490300, இன்ஸ்பெக்டர் 94454 90297, சப் இன்ஸ்பெக்டர் 9445490298 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

Read more »

கல்லூரியில் வங்கி பிரிவு அமைக்க கலெக்டருக்கு விஜயகாந்த் கோரிக்கை

விருத்தாசலம் : 

               கொளஞ்சியப்பர் கல்லூரி வளாகத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் விரிவாக்க பிரிவை அமைக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து எம்.எல். ஏ., விஜயகாந்த் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது:

             விருத்தாசலம் கொளஞ் சியப்பர் கல்லூரியில் ஒன் பது இளங்கலை படிப்புகளும், மூன்று முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி நிலைகளுக்கான பட்ட மேற் படிப்புகளும் உள்ளன. இக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி மாணவர் கள் தங்கள் கல்லூரி கட்டணத்தை செலுத்த வங்கிகளுக்கு சென்று காத்திருப்பதால் ஒரு நாள் முழுவதும் வகுப்புக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் வங்கிகளுக்கு சென்று கட்டணம் கட்டுவதால் மாணவ- மாணவிகள் அவதிப்படுகின்றனர்.  எனவே கல்லூரி வளாகத்திலேயே அரசுடமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் விரிவாக்க பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், கல்லூரியில் மேற்படிப்புகள் துவங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Read more »

ஆக்கிரமிப்பு அகற்றம் பாதித்தவர்களுக்கு மாற்று இடம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றியதால் பாதித்த நான்கு குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பண்ருட்டி அடுத்த ஏரிப் பாளையம், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில்  நான்கு பேர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர்.
 
                இந்த வீடுகளை பண்ருட்டி உரிமையியல் நீதிமன்ற உத்திரவுபடி கடந்த ஐனவரி 20ம் தேதி நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். இங்கு வசித்த நான்கு குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட் டம் இன்று(12ம்தேதி) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாபு முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் ஏழுமலை, புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் தெய்வீகதாஸ், வட்ட தலைவர் உத்திராபதி, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றியதால் பாதித்த நான்கு குடும்பத்தினருக்கு வையாபுரிபட்டினம் கிராமத்தில் உள்ள தோப்பு புறம்போக்கில் வசிக்க இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த சாலைமறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

Read more »

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால பயிற்சி

கடலூர்  : 

          வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடலூர் ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 
                 
                இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அடிப்படை, குறுகியகால பயிற்சி திட்டத்தின் கீழ் எம்.இ.எஸ்., திறமையும் அனுபவமும் கொண்ட பயிற்றுனர்களைக் கொண்டு கடலூர் ஐ.டி.ஐ., யில் பின்வரும் தொழிற் பிரிவுகளில் இலவசமாக பயிற்சி அளிக்கப் படவுள் ளது. இப்பயிற்சி ஆண்டு முழுவதும் அரசிடமிருந்து மாற்று ஆணை பெறப்படும் வரை தொடர்ந்து நடத் தப்படும். அடிப்படை ஆட்டோ மோட்டிங் இரண்டு மற் றும் 3 சக்கர வாகனங்கள் பராமரித்தல், அடிப்படை பற்றவைப்பு, வீட்டு உபகரணங்கள் பழுது, வீட்டு ஒயரிங், அடிப்படை பொருத்துனர், கடைசலர்,  பிளாஸ்டிக் மோல்ட் அசிஸ் டெண்ட், கணினி இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பிரிவுகளில் பயிற்சி நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரசு வழங் கும் இலவச பயிற் சியை பெற்று அதற்குண்டான சான்று பெறும் வாய்ப் பினை பயன்படுத்திக் கொள்ள கடலூர்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Read more »

கராத்தே பள்ளி மாணவர்கள் செந்துரையில் தங்கம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் ஆலன்ராஜ் ஷிட்டோரியா கராத்தே பள்ளி மாணவர்கள் செந்துரையில் நடந்த போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றனர். தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி செந்துரையில் கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த போட்டியில், சிதம்பரம் ஆலன்ராஜ் ஷிட்டோரியா கராத்தே பள்ளி மாணவர்கள் குணசேகரன், பரத், வெங்கட்ராமன் மற் றும் வேல்முருகன் சென் சாய்கள் பீட்டர்நெல்சன், நடராஜன் தலைமையில் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களை வரவேற்று சென்சாய் பாலமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்

Read more »

மாநில யோகாசன போட்டி சி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர் : 

                மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி "தமிழ்நாடு யோகாசன சங்கம்' சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் யோகாசனப் போட்டி நடத்தியது.  ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில் கடலூர் சி.கே. பள்ளியை சேர்ந்த மாணவி மதுமிதா ஐந்து வயது பிரிவிலும், 9 வயது பிரிவில் விக்னேஷ், திவ்யதர்ஷினி முதல் பரிசும், 10 வயது பிரிவில் நவீன் ராஜ், 11 வயது பிரிவில் அஜய், 12 வயது பிரிவில் சத்தீஷ் குமாரும் 2ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பயிற்சியளித்த யோகா ஆசிரியர் காளத்தீஸ்வரன் சிறந்த பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு "யோக சக்ரவர்த்தி என்ற பட்டமும் பெற்று, லிம்கா சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகர், முதல்வர் தார்சியஸ், கல் யாணி பிரகாஷ் பாராட்டினர்.

Read more »

ஆர்ப்பாட்டத்தில் ஜெ., பங்கேற்பு மாவட்ட செயலாளர் அழைப்பு

பரங்கிப்பேட்டை : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தை சீர்குலைக்க முதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசினார்.
            பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் பு.முட்லூரில் நடந்தது. ஒன்றிய செயலா ளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசுகையில்,ஜெயலலிதாவின் டில்லி பயணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் திரும்பி பார்க்கின்றனர். கரும்பு விலையை உயர்த்தக்கோரி வரும் 13ம் தேதி ஜெயலலிதா விழுப் புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அந்த ஆர்ப் பாட்டத்திற்கு பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்க வேண்டும்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். அதனால் நம் தொண்டர்களை காலையிலேயே விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். விவசாயிகள், பொதுமக்களையும் பங்கேற்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, விஜயன், மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம்,  ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், வேலு, அருள்மணி, மோகன்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டியன், ஜெ., பேரவை நகர செயலாளர் வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Read more »

திட்டக்குடி அருகே பிச்சையெடுத்த சிறுவன் உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்க்கை

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே பிச்சையெடுத்த சிறுவனை மீட்டு உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர்.
 
                திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த ராயப்பன் மகன் விஜயராஜ் (13). பூ வியாபாரியான இவரது பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், உறவினர் ஆதரவில் வளர்ந்து வந்தான்.  இந்நிலையில் நேற்று மதியம்  அகரம் சீகூர் (திட்டக்குடி பார்டர்) பகுதிகளிலுள்ள கடைகளில் பிச்சையெடுத்து கொண்டிருந்தான்.அங்கு டெய்லர் கடை நடத்தி வரும் ராஜேந்திரன், சிறுவன் விஜயராஜிடம் விபரத்தினை கேட்டு, அவனது உறவினரை சந்தித்து பேசினார். பின்னர் திட்டக்குடியிலுள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரிய பயிற்றுனர்கள் வடிவேலு, ரமேஷ் ஆகியோரிடம் அழைத்து சென்றார். அவர்களது ஆலோசனையின்பேரில் இடைச் செருவாய் வட்டார வளமையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மங்களூர் ஒன்றிய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டான். அடரி கிராமத்தில் இயங்கி வரும் இலவச உண்டு, உறைவிடப்பள்ளியில் விஜயராஜை சேர்த்தனர். சிறுவனை மீட்டு ஒப்படைத்த டெய்லர் ராஜேந்திரனை எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் பாராட்டினர்.

Read more »

வெலிங்டன் ஏரியில் மண் கடத்த முயற்சி

ராமநத்தம் : 

         வெலிங்டன் ஏரியில் மண் கடத்த  முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதில் ஐவனூர் பகுதியில் ஏரியிலிருந்து மண் கடத்துவதாக தாசில்தாருக்க தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏரியில் மண்ணை  கடத்த முயன்ற டிராக்டரை ஐவனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன் பறிமுதல் செய்ய முயன்றார். உடன் டிராக்டர் டிரைவர் மண்ணை கொட்டிவிட்டு டிராக்டருடன் தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

உண்டு உறைவிடப் பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., ஆய்வு

ராமநத்தம் : 

                    தொழுதூர் கஸ்தூரி பாய் காந்தி பாலிகா உண்டு உறைவிடப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ., கதிர்வேலு ஆய்வு செய்தார். ஆய்வில் மாணவிகளுக்கு தையல், இசை, யோகா, ஆங்கிலம், தமிழ், புவியியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடங்கள் குறித்து மாணவிகளிடம் கேள்விகள் கேட்டும், இசை, யோகா உள்ளிட்டவைகளை செய்ய கோரியும் ஆய்வு செய்தார். பின்னர் விடுதியில் வழங்கப்படும் உணவு, உடை குறித்து மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது ஏ.டி. பி.சி., செல்வம், வட்டார மேற்பார்வையாளர்கள் மங்களூர் முருகேசன், விருத்தாசலம் அந்தோணிசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மணிகண்டன், சரஸ்வதி, உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

மஞ்சள் நிற குடிநீர் : நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதில்லை என புகார்

கடலூர் :

               கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் நிறமாக வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை நேற்று ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதுக்கும் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நீரேற்று உந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.இத்தொட்டியை பராமரிக்க கான் டராக்ட் விடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்கின்றனர். அதுவும் ஒவ்வொரு முறையும் குடிநீர் மஞ்சள் கலரில் வருகிறது என புகார் அளித்த பிறகுதான் சுத்தம் செய் கின் றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
              கடந்த ஒரு மாதமாக மஞ்சக்குப் பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் கலரில் வந்துள்ளது. நகராட்சியில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று குடிநீர் தொட் டியை சுத்தம் செய்தனர். அப்போது தொட்டியில் பாசி படிந்து இரும்பு துகள்களுடன் மஞ்சள் கலரில் தண் ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
 
                இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் சுணக்கம் காட்டினால் காலரா உள்ளிட்ட கொடிய நோய் தாக்க கூடும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிந்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது வேதனையான விஷயம்.

Read more »

லாரி மோதி ஒருவர் பலி

சேத்தியாத்தோப்பு : 

                   சேத்தியாத்தோப்பு அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுமன்னார் கோவிலை அடுத்த உடையார்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  செல்வமணி (28). ஓமாம்புலியூர் ராமலிங்கம் மகன் ஞானசேகர் (36) இருவரும் ஒவனகிரிக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஒரத்தூரை அடுத்த கிளியனூரில் வந்து கொண் டிருந்தபோது, சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு செல்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஞானசேகரன் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

காட்டு தேனீக்கள் அழிப்பு


ராமநத்தம் :

           ராமநத்தம் அருகே வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத காட்டு தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர். ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தில் ஏரிக்கரையோரம் திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் ராட்சத காட்டு தேனீக்கள் கூடு கட்டி வழியில் செல்வோரையும், கால்நடைகளையும் கடித்து அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராடி தேனீக்கூட்டினை அழித்தனர்.

Read more »

ஊருக்குள் நுழைந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரம் : 

                 சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே பிள்ளை முத்தாப்பிள்ளை சாவடி கிராமத்தில் நேற்று அதிகாலை முதலை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள வாய்க்காலில் முதலை இறங்கியதை சிலர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம பொது மக்கள், இளைஞர்கள் பலர் ஒன்று கூடி முதலையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். முதலையை மடக்கி பிடித்து ஊர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் இருந்து முதலையை மீட்டு சிதம்பரம் அடுத்த வக்காரமாரி நீர் தேக்கக் குளத்தில் விட்டனர். பிடிபட்ட முதலை 12 அடி நீளமும் 500 கிலோ எடையும் இருந்தது.

Read more »

எனதிரிமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் இரும்பு வேலியில் சட்டையை மாட்டிய போது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் எம்.ஜி. ஆர்., நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(42). இவரது நிலம் எனதிரிமங்கலம் - கரும்பூர் மெயின் ரோட்டில் உள்ளது. இவரது நிலத்தையொட்டி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியின் பண்ணை தோட்டம்  உள்ளது. நேற்று காலை பத்மநாபன் தனது நிலத்தில் நெல் நாற்று விடுவதற்கு தனது மகள் ரஞ்சிதா (10) வுடன் சென்றார். நிலத்தையொட்டி உள்ள பண்ணைதோட் டத்தின் இரும்பு முள்வேலியில் தனது சட்டையை கழற்றி மாட்டினார். அப்போது முள்வேலியில் இருந்து   பத்மநாபன் மீது மின்சாரம் தாக்கியது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா சத்தம் போட்டார்.  அருகில் நிலத்தில் வேலை செய்தவர்கள் பத்மநாபனை  மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக் குக் கொண்டு வந்தனர். பத்மநாபனை பரிசோதித்த டாக்டர்  அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
                  இதுகுறித்து  புதுப்பேட்டை போலீசார், இரும்பு வேலியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  இந்நிலையில் பத்மநாபன் இறப்பிற்கு ஆதிபராசக்தி பண்ணை தோட்டம் முழுவதும் மின் வேலி அமைத்துள்ளதால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்  என பத்மநாபனின் அண் ணன் கலியமூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior