உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

மக்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் டி.ஐ.ஜி., மாசானமுத்து 'அட்வைஸ்'

கடலூர் :                   போலீசார் தங்கள் குடும்பத்தை நேசித்தால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். ஆயுதப்படை போலீசாருக்கு நினைவூட்டும் கவாத்து பயிற்சி கடலூர் எஸ்.பி., அலுவலக மைதானத்தில் கடந்த 10ம் தேதி துவங்கியது. பயிற்சியில் கலந்து கொண்ட 450 போலீசாருக்கு ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் பயிற்சி அளித்தார். நிறைவு...

Read more »

.நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் செயலாக்க குழு கூட்டம்

நெல்லிக்குப்பம் :                       நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாத பஸ் டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டுமென செயலாக்க குழு கோரியுள்ளது.  நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலைய செயலாக்க குழு கூட்டம் சேர்மன் கெய்க்வாட்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாமகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்...

Read more »

மாசி மகத்தன்று கடலில் குளிக்க தடை: போலீஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கடலூர் :                              கடலூர் தேவனாம்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ள மாசி மக திருவிழாவிற்கு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக திருவிழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. அதனை முன்னிட்டு போலீசார் மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி,...

Read more »

அண்ணாமலை பல்கலையில் நுழைவு தேர்வு: விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருத்துவம், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் 2010-11ம் ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி., (விவசாயம்), பி.எஸ்.சி., (தோட் டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. பி.பி.டி., பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்மசி., போன்ற பட்ட படிப்பு நுழைவுத் தேர்வுக்...

Read more »

பண்ருட்டி சேர்மன் கடை முன் ஆக்கிரமிப்பு: நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றம்

பண்ருட்டி :               பண்ருட்டியில் நேற்று இரண்டாம் நாளாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், நகராட்சி சேர்மன் கடை முன் இருந்த ஆக்கிரமிப்பும் அதிரடியாக அகற்றப்பட்டது. பண்ருட்டி நகரின் பிரதான சாலைகளில் பெருகிய ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதித்து. அதனையொட்டி நேற்று முன்தினம் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்....

Read more »

கணக்காளர்களுக்குள் பிரச்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடலூர் :             கிளை கருவூலகம் மற்றும் ஸ்டேட் பாங்க் கணக்காளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.  பண்ருட்டி கிளை கருவூல கணக்காளர் பாபு. இவர் நேற்று முன்தினம் பென்ஷன் சம்பந்தமான "பிளாப்பி'யை ஸ்டேட் பாங்க் கணக்காளர் ஜெயபாலிடம் கொடுத்தார். "பிளாப்பி' இயங்கவில்லை என ஜெயபால் கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பாபு பண்ருட்டி...

Read more »

ரேஷன் கடையில் திருட முயற்சி

சிதம்பரம் :                    சிதம்பரத்தில் ரேஷன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற துணிகர சம்பவம் நடந்தது. சிதம்பரம் மன்னார்குடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் ஜெயச்சந்திர ராஜா நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப் போது...

Read more »

தூக்கில் அடையாளம் தெரியாத ஆண் உடல்

நெய்வேலி :            தூக்கில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமம் ரயில்வே பாதை அருகே உள்ள வேப்ப மரத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தூக்கில் இறந்து கிடந்தார். காவி நிற வேட்டியும், வெள்ளை அரை கை சட்டை அணிந்திருந்த இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து...

Read more »

டாஸ்மாக் பிராந்தி கடத்திய இருவர் கைது

புவனகிரி :                  கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த கீழ்நத்தம் ஆடூரை சேர்ந்தவர்கள் குமார் (26), முத்து (25). இருவரும் புவனகிரி டாஸ்மாக் கடையில் 40 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை வாங்கிக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்க மோட்டார் சைக்கிளில் சொந்த...

Read more »

மனைவியை கொன்ற கணவர் கைது

கடலூர் :                      மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்தவர் ஏழுமலை(45). இவர் குடும்ப பிரச்னையில் நேற்று முன்தினம் தனது மனைவி மல்லிகாகை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து முதுநகர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும்...

Read more »

லாரி மோதி விவசாயி பலி

கடலூர் :               குள்ளஞ்சாவடி அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற விவசாயி அதே இடத்தில் இறந்தார். குள்ளஞ்சாவடியை அடுத்த வன்னியர் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்கரை என்கின்ற விஜயக்குமார்(45) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியிலிருந்து வன்னியர்பாளையம் நோக்கி மோட்டார் பைக்கிள் வந்துகொண்டிருந்தார். அப்போது கடலூரிலிருந்து ஆசிட் ஏற்றிச்...

Read more »

நள்ளிரவில் தீ விபத்து: ஓட்டல் சேதம்

சிதம்பரம் :                           சிதம்பரத்தில் நள்ளிரவில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சிதம்பரம் திருவள்ளூவர் தெருவில் கார்த்திகேயன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலை மூடி விட்டு சென்றார். நள்ளிரவில் திடீரென ஓட்டல் தீப்பிடித்து...

Read more »

பெண்ணை கற்பழிக்க முயற்சி: 2 பேருக்கு வலை

கடலூர் :                     நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் துறைமுகத்தை அடுத்த ராசாப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி குப்பு(27). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வேலு இறந்துவிட்டதால் குப்பு குழந்தைகளுடன்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior