உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

இன்று பொது வேலைநிறுத்தம்: பொதுமக்கள் ஆதரவு தருமாறு எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

         அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

                  விலைவாசி உயர்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அ.தி.மு.க. உள்பட 13 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது.மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் ஏப்ரல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதென அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

                  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். வணிகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தர வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

                  இப்போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் புதிய பென்சன் திட்டத்தை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில், சாலை போக்குவரத்து தடையின்றி இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. க

                  டைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று வணிகர் சங்கங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. மதுரை, திருவண்ணாமலைக்கு விலக்குசித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மே 2-ல் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு

 சென்னை:

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு சென்னையில் உள்ள தேர்வு மையங்கள் உள்பட 33 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் மற்றும் ஏன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய வலையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டு மற்றும் நிராகரிப்பு குறிப்பாணைகள் அஞ்சலில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து புதன்கிழமைக்குள் (ஏப்ரல் 28) எந்த தகவலும் பெறாதவர்கள் ஏப்ரல் 29 முதல் மே 1-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் செயல்படும் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் 044-3245 2050, 044-3245 2051 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அதிகாரிகளை மேற்கண்ட நாள்களில் அணுகி தற்காலிக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தற்காலிக நுழைவுச்சீட்டு அல்லது மாற்று நுழைவுச்சீட்டு பெற விரும்புபவர்கள் இது தொடர்பாக ஒரு கடிதத்துடன், மற்றொரு வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி அதில் குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் அடங்கிய அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வாணையத்தையோ அல்லது அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலகங்களையோ தேர்வுக்கு முன்பு நேரில் அணுகலாம்.அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு குறிப்பிட்ட இறுதி நாளுக்கு முன்னதாக தங்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதற்குரிய சரியான ஆதாரங்களை கொண்டுவர வேண்டும்.விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட ஆணையை மறுபரிசீலனை செய்யவோ, தேர்வு மைய மாற்றம் குறித்த எவ்விதக் கோரிக்கையும் ஏற்க இயலாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுட்டெரிக்கும் கோடையை சுவையாக்கும் பயிற்சிகள்


கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றுவரும் கோடைகால நீச்சல் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள்.
 
கடலூர்:
 
               ஏப்ரல் 19-ம் தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வீடுகளில் குழந்தைகளின் கூட்டம் கலகலப்புடன் குதூகலிக்கத் தொடங்கி இருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பள்ளிக்கூட வளாகங்களில், கட்டாயமாகக் கட்டிப் போடப்பட்டு இருந்த மாணவர்களுக்கு, கோடைக்கால சுதந்திரம் வந்துவிட்டது. பெற்றோருக்கு ஆண்டின் பெரும்பாலான நாள்களில் காலை 5 மணிக்கே எழுந்து குழந்தைகளுக்கு உணவு தயாரித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்ப தயார்படுத்தும் சிரமங்களில் இருந்து இந்த கோடைக் காலத்தில் கொஞ்சம் ஓய்வும், இடைவேளையும் கிடைத்து உள்ளது.
 
                  ஆனாலும் சிறுவர்கள், இளைஞர்கள் முன்னேற்றத்தில் பெற்றோர்களிடம் புதிய சிந்தனைகளும், புதிய கலாசாரமும் உருவாகி உள்ளது. கோடைக்காலம் எத்தனை அளவுக்குத் தகித்தாலும், அந்த சிறிய கால அவகாசத்தில் ஏதேனும் புதிய விஷயங்கள், அறிவைப் பெருக்கிக் கொள்ளும் புதிய பயிற்சிகள், உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள புதிய வழிமுறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இந்த சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதன் வெளிப்பாடுதான், கோடைக் காலத்தில் புதிய கணினிப் பயிற்சிகள், யோகா, ஆங்கில பேச்சாற்றல், நினைவாற்றல் பயிற்சி, வரைகலைப் பயிற்சிகள், விளையாட்டுப் பயிற்சிகள் என்று இளைஞர்களையும், சிறுவர்களையும் ஈர்த்துக் கொண்டு இருக்கும் பயிற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கென திடீரென முளைத்த நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்களையும் வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல கணினிப் பயிற்சி நிறுவனங்கள் மாதிரி கேள்வித் தாள்களை வழங்குகின்றன. 
 
                  கோடைக்கால சிறப்புப் பயிற்சிக்காக மாணவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் அந்த பயிற்சியில் சேர்ந்து விடுகிறார்கள். இதற்காகக் கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.விளையாட்டுப் பயிற்சிகளைப் பொறுத்தவரை, கடலூர் அண்ணா விளையட்டு அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களால் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகள், மாணவர்களையும் இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து இருக்கிறது. இங்குள்ள நீச்சல் குளம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டு, பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நீச்சல் பயிற்சியாளர்கள் தகுந்த பயிற்சி அளிக்கிறார்கள். நாளொன்றுக்கு 50 பேருக்குக் குறையால் வந்து பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். நடைப் பயிற்சிக்கு என இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சிறப்பு நடைபாதையில் நடைப் பயிற்சிக்காக வருவோர் எண்ணிக்கை, கோடைக்காலத்தில்  இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக நடைப் பயிற்சியாளர் சங்கத் தலைவர் பரமசிவம் தெரிவித்தார். 
 
                டென்னிஸ் விளையாட்டில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  விளையாட்டில் உலகத் திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தில், கல்வி மாவட்ட அளவில் ஏற்கனவே விளையாட்டுகளில் திறன் படைத்தவர்களுக்கு பயிற்சி முகாம்கள், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிலும், விருத்தாசலம் விளையாட்டு அரங்கிலும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தெரிவித்தார். 30-ம் தேதி வரை இந்த பயிற்சி முகாம்கள் அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். காலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை நடத்தப்படும் இந்த பயிற்சிக்கு வருவோருக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது. தட களம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை கோடைக் காலத்திலும் தொடர்ந்து பாடப் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கச் செய்யும், சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. 3 மாதத்திலேயே தேர்வுக்கு ஏற்ற வகையில், ஓராண்டு பாடத் திட்டத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்து சில ஆசிரியர் குழுக்களும் பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். அரசுப் பள்ளிகள் கூட இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை இப்போதே பள்ளிகளுக்கு வரவழைத்து சிறப்புப் பயிற்சிகளைத் தொடங்கி இருக்கின்றன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது:​ பாமக

 நெய்வேலி:

               ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவதால் போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிறது என்றார் நெய்வேலி பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள். தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சில முரண்பாடான நிலை தொடர்வதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.​ இதனால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாமக தொழிற்சங்கத் தலைவர் கூறியது:​ 

                  நிர்வாகம் தொடர்ந்து காலம் தாழ்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ மேலும் அலவன்ஸ் விஷயத்திலும் பிடிவாதமாக இருந்து வருகிறது.​ இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறியும்,​​ அதனை ஏற்க மறுக்கிறது.​ எனவே தொழிற்சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகளுடனும்,​​ தொமுசவுடன் கலந்தாலோசித்து போராட்ட நடவடிக்கையில் இறங்க தீர்மானித்துள்ளோம் என்றார் பெருமாள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Nations facing identity crisis, says expert

 
 
Annamalai University Vice-Chancellor M.Ramanathan addressing an international conference on the university premises at Chidambaram.


CUDDALORE: 

              Post-globalisation, the nation-state concept is under attack because sovereignty has been made shaky by the all-pervasive economic clout, said V.T. Patil, general president of the International Congress of Social Philosophy (ICSP).

             Mr. Patil was delivering the keynote address at the inauguration of the ninth international conference on ‘Post-globalisation and the emerging world order' organised by Annamalai University at Chidambaram on Sunday. State sovereignty had become a mirage as it existed only in theory. Nations were facing an identity crisis, euphemistically and practically. Supra-national organisations, non-governmental organisations and civil agencies had made inroads into the administration. Multi-national companies had started dictating the policies of host countries. In neo-globalisation, individual freedom and concerns of equity and social justice were subordinated to overwhelming obsession with mass production.

               Obviously, inclusive growth with a human face had taken a backseat, he said. Mr. Patil, who was formerly Vice-Chancellor of Pondicherry University, deplored that the reckless exploitation of resources had resulted in climate change, adding to the misery of humanity, particularly in developing countries. He noted for the rise of every one degree in temperature 10 million people were affected. While the 20th Century wars were fought for acquiring territory and subjugating millions in Asia, Africa and Latin America, the post-globalisation wars would be waged for capturing water sources, including the sea lanes. It would also witness imposed lifestyle, probably of the influential countries and disintegration of the long-cherished ethnic culture and value systems.

              The focus on mass production and consumption would result in formation of giant cartels, giving rise to disgruntled elements and terrorism. Vice-Chancellor of Annamalai University M. Ramanathan said though, post-globalisation, prosperity and health indicators had improved a lot in terms of value system, humankind had paid a heavy price. Dr. Ramanathan said it was noteworthy that eight decades ago the founders of Annamalai University had acted with farsightedness to establish the institution to impart value-based education in a socially and economically backward region. Ramjee Singh, former Vice-Chancellor of Jain Viswa Bharati University; B.P.Siddhashrama, Professor of Philosophy, Karnatak University; Sirajul Islam, ICSP general secretary; S.Rajendran, Dean of Arts and Science Faculty, Annamalai University, spoke.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் பலத்த ​பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடலூர்:

              எதிர்க்கட்சிகள் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ அறிவித்து இருக்கும் முழு அடைப்பை முன்னிட்டு,​​ பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக,​​ கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். 

திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியது:

               கடலூர் மாவட்டத்தில் 1,800 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் மற்ற பணிகளை அனைத்தையும் நிறுத்தி விட்டு,​​ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.​ அரசு அலுவலகங்கள்,​​ பள்ளிகள்,​​ கல்லூரிகள்,​​ வணிகப் பகுதிகள்,​​ பஸ் நிலையங்கள்,​​ ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.​ ​வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு யாராவது கட்டாயப்படுத்தினால்,​​ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகப்படுவோர் ​ திங்கள்கிழமை இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.​ செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ கடுமையான சட்டங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.​ அவர்களைக் கைது செய்து வைப்பதற்காக,​​ திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன. 

                    போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.​ 156 போலீஸ் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸôருடன் ரோந்துப் பணியில் ஈடுபடும்.​ சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.​ மக்கள் பயமின்றி தங்கள் பணிகளைச் செய்யலாம்.​ அனைத்து உள்ளூர் பஸ்கள் இயக்கமும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்படும்.​ செவ்வாய்க்கிழமை காலை முதல் பஸ்கள் அனைத்தும்,​​ போலீஸ் பாதுகாப்புடன் கான்வாயில் அனுப்பப்படும்.​ ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் என்றார் எஸ்.பி.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அரசு அலுவலகங்கள் இயங்கும்,​​ பஸ்கள் ஓடும்

 கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ வழக்கம்போல் பஸ்கள் ஓடும்.​ அரசு அலுவலகங்கள் இயங்கும்.​ மின்சாரம்,​​ பால் விநியோகம்,​​ மருத்துவமனைகள்,​​ குடிநீர் விநியோகம்,​​ உணவகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.​ 

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ 

                  கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில்,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.​ மாவட்டத்தில் 1,800 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.​ பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான குடிநீர்,​​ மின்சாரம்,​​ பால்,​​ மருத்துவமனைகள்,​​ உணவகங்கள் ஆகியவை இயல்பாகச் செயல்பட காவல் துறை மூலம் பாதுகாப்பு அளிக்க,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு உள்ளன.​ பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

என்எல்சியில் பலத்த பாதுகாப்பு

நெய்வேலி:
         
                எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஒட்டி நெய்வேலி என்எல்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.​ தமிழகத்தில் அதிமுக தலைமையில் கம்யூனிஸ்ட்,​​ மதிமுக,​​ பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள சில தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு ​ தெரிவித்துள்ளன.​ எனவே எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் 15 எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 250 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே என்எல்சிக்கு வீடு நிலம் வழங்கிய கிராம மக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை என்எல்சி பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது.​ இச் சமயத்தில் இழப்பீட்டுத் தொகை பெற வரும் கிராம மக்கள் எவ்வித சிரமமின்றி,​​ வந்து செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகளை என்எல்சி நிர்வாகம் செய்துள்ளது.

Read more »

காவனூர் கிராமத்தில் நாளை மனுநீதி முகாம்

 பண்ருட்டி:

                     பண்ருட்டி வட்டம் காவனூர் கிராமத்தில் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.​ இம்முகாமில் பொது மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து பயனடையலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குளிர்சாதனக் கருவிகள் வழங்கிய கெம்ப்ளாஸ்ட் நிறுவனம்

 கடலூர்:

               கடலூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனக் கருவிகளை,​​ கடலூர் கெம்ப்ளாஸ்ட் பி.வி.சி.​ நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது. சமுதாயப் பணியின் ஓர் அங்கமாக,​​ தலா 2 டன் திறன்கொண்ட 3 குளிர்சாதனப் பெட்டிகளை,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது.​ அவற்றை கெம்ப்ளாஸ்ட் நிறுவன கடலூர் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி ​(இயக்கம்)​ என்.எஸ்.மோகன் வழங்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.​ ​ கடலூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்த குளிர்சாதனக் கருவிகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன்,​​ மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார்,​​ மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தாரஜன்,​​ கண்காணிப்பாளர் டாக்டர் பரஞ்சோதி,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவன பொது மேலாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகுமார்,​​ சங்கர்,​​ மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பஸ் கழுவும் தானியங்கி கருவி

 விருத்தாசலம்:

            விருத்தாசலம் போக்குவரத்து பணிமனையில் தானியங்கி பஸ் கழுவும் கருவி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனையில் தானியங்கி இயந்திரம் மூலம் பஸ்ûஸ தூய்மையாக்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.​ இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ தானியங்கி கருவியை கடலூர் மண்டல பொதுமேலாளர் உதயசூரியன் தொடங்கி வைத்தார்.​ அப்போது அவர் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் போன்று கடலூர் மற்றும் சிதம்பரம் பணிமனைகளில் இதுபோன்று தானியங்கி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.​ மேலும் பண்ருட்டி,​​ திட்டக்குடி ஆகிய பகுதிகளிலும் பஸ் கழுவும் தானியங்கி கருவிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். விழாவில் மண்டல தொழில் நுட்பப் பிரிவு துணை மேலாளர் ராஜபாண்டியன் தலைமை ஏற்றார்.​ கிளை மேலாளர்கள் சிவக்குமார்,​​ ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மே 1-ல் ஓபன் செஸ் போட்டி

 பண்ருட்டி:

                     பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் ஆர்.ஆர்.எஸ்.​ செஸ் கிளப்பின் 14-வது ஓபன் செஸ் போட்டி மே 1 முதல் 3-ம் தேதி வரை காடாம்புலியூர் ஆர்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. 10 பொது பரிசுகள்,​​ 8 சிறப்பு பரிசுகள் என மொத்தம் ரூ.16,500 பரிசு தொகைக் கொண்ட இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த போட்டியாளர்கள் நுழைவுக் கட்டணம் ரூ.150 ​(மகளிர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.100) செலுத்தி போட்டியில் கலந்துகொள்ளலாம்.​ போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்.​ மேலும் விபரங்களுக்கு 9965202244 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குடியேற்றத் துறையின் கிடுக்கிப்பிடியால் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை குறைகிறது

                 வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீது, குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருப்பதால், 2008-09 ஐ விட, 2009-10ல் வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

               கடந்த ஆண்டில், சென்னையிலுள்ள குடியேற்றத் துறை அதிகாரி சேகர், அவரது ஐந்து உதவியாளர்களுடன் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, வெளிநாடுகளுக்கு வேலைக்காக தொழிலாளர்களை போலி ஆவணங்களைத் தயாரித்து அனுப்பி வைக்கும் தரகர்கள் மற்றும் ஏஜன்டுகள் மீதான குடியேற்றத் துறையின் பிடி இறுகியிருக்கிறது. தற்போது, அத்துறையின் தலைவராக இருக்கும் ஜெய்சங்கர் கூறுகையில், 'தொழிலாளர்களில் பெரும்பாலோர் தாங்கள் போகும் நாடு எது என்பதைக் கூட அறிந்திருப்பதில்லை. அவர்களுக்கு இது குறித்து முழு விவரங்களையும் இப்போது அளித்து வருகிறோம். 'இதற்காக தனியாக ஒரு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்துகிறோம். தொழிலாளர்களை அழைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் மற்றும் இலவச விமான டிக்கெட் இவை கொடுத்தாக வேண்டும் என்பது அடிப்படை விதி. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் நாங்கள் அனுமதி அளிப்பதில்லை' என்று தெரிவித்தார்.

                         தற்போது சென்னையில் 200 பதிவு செய்யப்பட்ட ஏஜன்டுகள் இயங்கி வருகின்றனர். சமீபகாலம் வரை, அவர்கள் முறையான சோதனை செய்யாமல், தினசரி 400 பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதி வாங்கி வந்தனர். ஆனால், தற்போது புதிய விதிமுறைகள் மூலம் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், 2008-09ல் குவைத்துக்கு 21 ஆயிரத்து 203 பேர் அனுப்பப்பட்டனர். ஆனால், முறையான சோதனைகளுக்குப் பின் 2009-10ல் 9,550 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களில் முதலிடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர். இதையடுத்து, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் சென்னை இடம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோர் அந்நாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, புதிய குடியேற்ற சட்டத்தின் படி அவர்கள் அரசில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்குச் செல்பவர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.

Read more »

'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்


                 எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத் தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

                   எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலைக் கழகங்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்களும், தனியார் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 'டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு, 'டான்செட்' நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள், கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது. கடைசி நாளான நேற்றும், நூற்றுக்கணக்கான மாணவர்கள், 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நேற்று மாலை 5:30 மணியுடன் முடிவடைந்தது.

                   இந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வெழுத, ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ., படிப்பிற்கு 45 ஆயிரம் பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 20 ஆயிரம் பேர், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க் - எம்.பிளான் படிப்புகளுக்கு 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு 35 ஆயிரம் பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 25 ஆயிரம் பேர், எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 11 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2009ம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு 54 ஆயிரத்து 100 பேர், எம்.சி.ஏ., படிப்பிற்கு 19 ஆயிரத்து 900 பேர், எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 30 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்தனர்.

                  கடந்த ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போதும், இந்த ஆண்டு அப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு 2008ம் ஆண்டு 11 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதும், அதிக மாணவர்கள் பொறியியல் இளநிலை படிப்பில் சேர்ந்தபோதும், அதில் பலருக்கு வேலை கிடைக்காததால், முதுநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது . வரும் மே மாதம் 29ம் தேதி, காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.பி.ஏ., படிப்பிற்கும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை எம்.சி.ஏ., படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க் - எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு மே மாதம் 30ம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. 'டான்செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், ஜூன் 20ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

'நாசா' மையத்தில் பயிற்சி: மாணவர்கள் உற்சாகம்

               அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப் பார்த்து பயிற்சி பெறச் செல்லும், பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க துணைத் தூதர் வாழ்த்து தெரிவித்தார்.

                'உலகம் சுற்றும் குழு'வின் மேலாண் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் ஏற்பாட்டின் பேரில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 100 பேர், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஓரலாண்டோ சர்வதேச ஸ்டுடியோவிற்கு 10 நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவ, மாணவியர் ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களாகவும், சுற்றுலாவிற்கு ஆகும் செலவு முழுவதையும் செலுத்தக் கூடியவர்களாகவும், விமான பயணத்திற்கு ஏற்ற உடல் நலத்துடன் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற தகுதி மட்டும் இதற்கு வைக்கப்பட்டுள்ளது. நாசா சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருடன் செல்ல அவர்களது பெற்றோருக்கு அனுமதியில்லை. ஆனால், அவர்களின் பாதுகாப்பிற்கு குறிப்பிட்ட அளவில் ஆசிரியர்கள் உடன் செல்கின்றனர். சுற்றுலா இன்று(27ம் தேதி) துவங்கி வரும் 6ம் தேதியுடன் முடிகிறது.

                  இந்த சுற்றுலா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் கல்வி இயக்க, விண்வெளி குழந்தைகள் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதன் முறையாக, தென்னிந்தியாவைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு சுற்றுலாவில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாசா செல்லும் மாணவ, மாணவியருக்கு 'ரொபாடிக் சயின்ஸ், ஸ்பேஸ் ஷட்டில் டிசைனிங், தி ஹால் ஆப் பேம்' ஆகியவை குறித்து கற்பிக்கப்படும். அத்துடன் விஞ்ஞானிகளுடன் அளவளாவுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். நாசா சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளை சென்னையில் நேற்று நடந்த விழாவில், அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், முதன்மை வர்த்தக அலுவலர் எய்லீன்நன்டி ஆகியோர் வாழ்த்தினர். அப்போது பேசிய ஆண்ட்ரூ டி சிம்கின், 'தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியரை ஒரு முறை கண்டு விட்டால், இனி ஆண்டு தோறும் சுற்றுலாவிற்கு அழைத்து வர நாசாவில் விருப்பம் தெரிவிப்பர். அந்தளவிற்கு நமது மாணவர்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள்' என்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலைப்பணி திடீர் நிறுத்தம்


சிதம்பரம் : 

                  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, சிதம்பரம் மற்றும் சீர்காழி இடையிலான 25 கி.மீ., புறவழிச் சாலை பணி ஒப்பந்த காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

                         கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம் புறவழிச் சாலை 17 கி. மீ., தூரம் அமைக்க, 61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நாகை மாவட்டத்திற்குட் பட்ட எறுக்கூரில் இருந்து செங்கமேடு வரை, எட்டு கி.மீ., தூரம் புறவழிச் சாலைக்கு 49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த புறவழிச்சாலை பணிகள் கடந்த 2004ம் ஆண்டு துவங் கியது. ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டு பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. பி.முட்லூர் - கீழமூங்கிலடி வழியாக, சீர்காழி சாலையில் கடவாச்சேரி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பு.முட்லூர் - வண்டிகேட், வண்டிகேட் - கடவாச்சேரி என இரு பிரிவாக வேலை நடந்து வருகிறது. ஓரியண்டல் நிறுவனம் மற்றும் ஆப்கோ என்ற நிறுவனத்திடம் சப் கான்ட்ராக்ட் கொடுத்துள்ளது. புறவழிச்சாலையில் இடைப்பட்ட, 17 கிராமங்களில் தனியார் நிலங்கள் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டது, ஆக்கிரமிப்புகள் அகற்றியது போன்ற காரணங்க ளால், பணி துவங்குவதற்கே இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.

                           ஒரு வழியாக புறவழிச் சாலை பணி துவங்கிய நிலையில், பு.முட்லூர் - சி. முட்லூர் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே, 10 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி சவாலாக இருந்தது. இருந்தும் பணி விரைந்து முடிந்து தற் போது போக்குவரத்துக்கு தயாராகியுள்ளது. நான்கு பெரிய பாலங்கள், 53 சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளாற்று பாலத்தையொட்டி, இணைப்பு சாலை அமைக்கும் பணி முடியாததால் புறவழிச் சாலை திறக்கப்படாமல் உள்ளது. இதே போல், சிதம்பரம் அருகே நாகை மாவட்டத்திற்குட்பட்ட அரசூர் - செங்கமேடு வரையிலான, எட்டு கி.மீ., புறவழிச் சாலை பணி கடந்த 2006ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். பனமங்கலம் உப்பனாற்றில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி பில்லர் போட்ட நிலையிலேயே உள்ளது.

                         இப்பணியை கான்ட்ராக்ட் எடுத்துள்ள ஓரியண்டல் நிறுவனத்திற்கும் சாலை மேம்பாட்டு கழகம் சார்பில், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ள 'லாசா கன்சல் டன்ட்' நிறுவனத்திற்கும் ஈகோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக, கடந்த ஒருவாரமாக பணிகள் முற்றிலுமாக நிறுத்தப் பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்ட போது,' சில விஷயங்களை வெளிப் படையாக கூற முடியாது' என கான்ட்ராக்டர்கள் கூறிவிட்டனர். பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் புறவழிச்சாலை திறப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும்: 

                    சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலை முடிக்கப்பட் டால், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மக்களும் அதிக அளவில் பயன்பெறுவர். விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால் கடலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் இம்மாவட்டங்களுக்குச் செல்ல சிதம்பரம் - சீர்காழி புறவழிச்சாலை பணி விரைவாக முடிக்கப்பட்டால், பயண நேரம் 60 நிமிடங்கள் குறையும். இதன் மூலம் கடைகோடியில் உள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொழில் வளம் பெருகி, மக்களின் வாழ்க்கை தரம் உயரும். சிதம்பரம் புறவழிச்சாலை பணி நிறுத்தப்பட்டுள்ள விஷயத்தில், முதல்வர் கருணாநிதி தலையிட்டு, புறவழிச்சாலை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்


கடலூர் : 

           பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் கூறினார்.

இதுகுறித்து அவர்  கூறியதாவது: 

                  விலைவாசி உயர்வை கண்டித்து நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்பையொட்டி கடலூர் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நமது மாவட்டத்தில் ரோந்து சுற்றி வருவதற்காக ஏற்கனவே 136 வாகனங்கள் உள்ளன. மேலும் 20 வாகனங்கள் போலீசார் ரோந்து வர பயன்படுத்தப்படும். முழு அடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வியாபாரம், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். வியாபாரிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மார்க்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பஸ்கள் வழக்கம்போல் ஓடும். தேவைப்பட்டால் பஸ்கள் 'கான்வேயில்' இயக்கப்படும். பஸ்கள் மீது கல்வீசி தாக்குவது மற்றும் பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் அவர்கள் மீது பொது சொத்து சேதப்படுத்தியதாக (பி.பி.டி., ஆக்ட்) வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது. அவ்வாறு அடாவடி செய் யும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.


Read more »

நடராஜர் கோவிலில் சசிகலா பூஜை

 சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரிகார பூஜை செய்து வழிபட்டார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த சில நாட்களாக நாகை, தஞ்சை மாவட்ட கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். கோவிலில் சித்சபையில் ஏறி நடராஜரை வழிபட்டார். நடராஜர் கோவில் வளாகத்திலேயே உள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னிதி, சரபேஸ்வரர், ஆதிமூலநாதர், சிவகாமியம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். அங்கு சசிகலா பெயரில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. 21 பேருக்கு எலுமிச்சை, புளியோதரை சாதங் களும், தேங்காய், வாழைப் பழம் அடங்கிய பிரசாதங்களும் வழங்கினார். கோவிலில் பூஜைகள் செய்த தீட்சிதர்களுக்கு 1,000, 500 ரூபாய் என நோட்டுகளை வாரி வழங்கினார். 2 மணி நேரம் நடராஜர் கோவிலில் இருந்த சசிகலா, பகல் 12 மணிக்கு தில்லை காளி கோவிலுக்கு வந்தார். அங்கு சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சசிகலா பெயரில் சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனையும் நடந்தது. தில்லையம்மனுக்கும் அபிஷேக ஆராதனையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்ட்டு சென்னை சென்றார். பிரதோஷ தினமான நேற்று நடராஜரை வணங்கினால் சிறப்பு என்பதால் கோவிலுக்கு வந்தார் என்றும், ரேவதி நட்சத்திரமான சசிகலாவிற்கும், மகம் நட்சத்திரமான ஜெயலலிதாவிற்கும் தற்போது ஆகாது என்பதால் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு: இமாச்சல பிரதேச ஊரக வளர்ச்சி குழு ஆய்வு


பண்ருட்டி : 

                   பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் முழு சுகாதார திட்டம், மகளிர் குழுக்கள் செயல்பாடு குறித்து இமாச்சல பிரதேச ஊரக வளர்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

                   இமாச்சல பிரதேசம் சிர்பூம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உதவி இயக்குனர் சவுகான் தலைமையில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர்கள், கல்வித் துறை ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேர் தமிழகம், கேரளா பகுதியில் முழுசுகாதார திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சிக்கு வந்தனர். இக்குழுவினருக்கு ஊராட்சி தலைவர் அமுதா தலைமையில் அண்ணாகிராம ஒன்றிய பி.டி.ஓ.க்கள் தமிழரசி, சுப்ரமணியன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பா ளர் வேலுமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் குமார், மகளிர் கூட்டமைப்பு செயலாளர் சரஸ்வதி, சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி ஆகியோர் வரவேற்றனர்.

                  கிராமத்தில் தனி நபர் கழிவறை, அங்கன்வாடி கழிவறை, பள்ளி கழிவறை, சுற்றுசுழல் மற்றும் மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பேக்கரி கேக் வகைகள், பிளீச்சிங் பவுடர், சோப் வகைகள், மண் புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றை பார்வையிட்டனர். 

முழுசுகாதார திட்டபணிகளை பார்வையிட்ட இமாச்சலபிரதேச ஊரகவளர்ச்சி குழு தலைவர் சவுகான்  கூறுகையில், '

               தமிழகம்,கேரளாவில் முழு சுகாதார திட்டம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளோம். சிர்பூம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்கள், 228 ஊராட்சிகள், 38 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை எங்கள் மாவட்டத்தில் செயல்படுத்த கள ஆய்வு செய்கிறோம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.3.5 லட்சத்திற்கு ஏலம்


கடலூர் : 

               மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் 3 லட் சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 60 வாகனங்கள் நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அதில் 56 இரு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் என 57 வாகனங்கள் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின்போது கூடுதல் எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன், கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தமிழகத்தின் மின் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படும்: என்.எல்.சி., சேர்மன்


நெய்வேலி : 

               தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் என என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தெரிவித்தார்.

              என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு இரண்டு நாள் லோக் அதாலத் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கம்மாபுரம், உய்யகொண்டராவி, வளையாதேவி கீழ்பாதி, கோட்டகம் மற்றும் பெரியாகுறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து 290 ஏக்கர் நிலங்களுக்கு 486 வழக்குகள் முடிக்கவும், இதன் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நேற்று மாலை இழப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சியில் என்.எல்.சி., சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர் மோகன், நீதிபதி ரவீந்திரன், முன்னாள் நீதிபதி ஆறுமுகம், நில எடுப்புத் துறை முதன்மை பொது மேலாளர் ராமலிங்கம், சமூக சேவகி வேம்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முதன்மை விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கி பேசியதாவது: 

                  இந்தியாவின் எந்த சுரங்க நிறுவனமும் வழங்குவதைவிட என்.எல்.சி., மட்டுமே அதிக இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. நானும் ஒரு விவசாயி என்ற முறையில் எனது சொந்த நிலத்தை பிறருக்கு வழங்கும் போது அவர்களுக்கு ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இந்த நல்ல செயலால் என்.எல்.சி., மேலும் அதிகமாக மின் உற்பத்தி செய்து கோடிக் கணக்கான வீடுகளில் ஒளியேற்றும்.மேலும் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் வகையில் இதுவரை 3 சென்ட் என்ற அளவில் இருந்த மனை பிரிவு இனி 5 சென்ட் பரப்பளவாக உயர்த்தப்படும். நெய்வேலிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பள்ளி கட்டடங்கள் விளையாட்டு மைதானங்கள். குடிநீர், சாலை போன்ற எந்த வசதிகளை கேட்டாலும் என்.எல்.சி., செய்து தர தயாராக உள்ளது. அதுமட்டுமின்றி என்.எல்.சி., மூலம் தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும் இவ்வாறு அன்சாரி பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நூலக விழிப்புணர்வு பிரசாரம்


கடலூர் :

                 உலக புத்தக நாள் விழாவையொட்டி மாவட்ட மைய நூலகம் - வாசகர் வட்டம் சார்பில் நூலக விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடந்தது. புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் பச்சையப்பன், அரிமா பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் சுதர்சனம் வரவேற்றார். பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பேசினார். சட்ட பல்கலைக் கழக செனட் உறுப்பினர் வக்கீல் அருளப்பன் சேதுராமன், முத்தையன், சாமிகண்ணு, அரசு வக்கீல் சிவராஜ், வக்கீல் திருமார்பன், செல்ல கந்தசாமி, சந்தான சுகிர்தராசு, கவிஞர்கள் வேலுமணி, சிங்காரம், கவிமனோ, பேரொளி உள்ளிட்ட பலர் பேசினர். நூலகர் வைரமணி நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இலவச கண் சிகிச்சை முகாம்


சேத்தியாத்தோப்பு : 

              காண்டசமுத்திரம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் கொண்டசமுத்திரம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) கற்பகம் முன்னிலை வகித்தார். ரிசோர்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவன தலைவர் வேளாங் கன்னி வரவேற்றார். ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ரேகா, கிருஷ்ணா, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜான்சன் ஆரோக்கியசாமி, கபாலி, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜாக்குலின் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நிலுவைத் தொகையை அரசின் சிறப்பு நிதியில் வழங்க வலியுறுத்தல்

 கடலூர் : 

                   ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு சிறப்பு நிதி மூலம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என ஊராட்சிமன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

கடலூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், 

                     'கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளின் அனைத்து மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து சம்பள நிலுவைத் தொகை இன்று வரை உள்ளன. அரசு ஆணைப்படி ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் வரை நிலுவைத் தொகை வழங்கவேண்டியுள்ளன. ஊராட்சி நிதியிலிருந்து 'டேங்க்' ஆபரேட்டர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வாய்ப்பு இல்லை.  ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் போன்ற பராமரிப்புகளுக்கே போதுமானதாக உள்ளன. அரசு மூலம் சிறப்புத் தொகை 'டேங்க்' ஆபரேட்டர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும். மேலும் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தில் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு வீடு கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது: மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதி

 திட்டக்குடி : 

                   மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அவர்  கூறுகையில் '

                  கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு தாலுகாவாக 'காஸ்' பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. டி.ஆர்.ஓ., தலைமையில் பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாவில் முடிந்துள்ளது. போலி ரேஷன் கார்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான மேல் முறையீட்டு மனுக்கள் இரண்டு கட்டமாக முடிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பந்தமான புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நெய்வேலியில் கந்து வட்டிக்காரர்கள் அட்டூழியம்: தற்கொலை முடிவை தேடும் தொழிலாளர்கள்


நெய்வேலி : 

                  நெய்வேலியில் கந்துவட்டிக்கு கொடுத்த பணத்தை மனிதநேயமின்றி வசூல் செய்யும் கும்பலால், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் தற்கொலை முடிவை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

                பணப்புழக்கம் அதிகமுள்ள நெய்வேலி நகரில், கந்து வட்டி கொடுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வட்டிக்கு கடனை வாங்கி விட்டு, வட்டி கட்ட முடியாமல் வட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டும், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இப்படி அடாவடியாக பணத்தை தொழிலாளர்களிடையே வசூல் செய்வது தனி நபர் கந்து வட்டிக் காரர்கள் மட்டுமின்றி, சில தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த கும்பலும் ஈடுபடுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கந்து வட்டிக்காரர்கள் கடன் கொடுக்கும் போது, என்.எல்.சி., பணியாளரின் ரேஷன் கார்டு, ஏ.டி.எம்., கார்டு, வங்கி புத்தகம் மட்டுமின்றி வெற்று பத்திரங்களில் கையெழுத்து என பல ஆதாரங்களையும் பெறுகின்றனர். பணத்தை வாங்கிய அப்பாவிகள், வட்டி கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். அந்த வட்டியை அசலுடன் சேர்த்து அடாவடியாக வசூல் செய்வதால், அப்பாவிகள் தற்கொலை முடிவுக்கும் சென் றுள்ளனர். இதற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்தாலும், அந்த கும்பலின் அட்டூழியம் குறையவில்லை.

                      ஒரு சில தனியார் நிதி நிறுவனங்களில், கடன் வாங்கிய என்.எல்.சி., பணியாளருக்கு ஜாமீன் போட்டவர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கியவர்கள் பணம் கட்டவில்லையென்றால், ஜாமீன் போட்ட என்.எல்.சி., பணியாளர் களின் சம்பளத்தில் சட்ட ரீதியாக கடன் தொகையை தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்து கொள் கின்றனர்.கடன் வாங்கியவர்கள், ஜாமீன் போட்டவர்கள் என இரு தரப்பிலும் சம்பளம் வாங்க முடியாமல் அவதிப்படும், பரிதாப நிலையும் அதிகரித்து வருகிறது. மேலும் நிதி நிறுவனத்தினர் என்.எல்.சி., மூலம் பணத்தை வசூல் செய்து கொள்கின்றனர். இனியும் என்.எல்.சி., நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களுக்கு பணம் வசூலித்து தரும் வேலையை செய்யாமல் இருக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பாவி தொழிலாளர்கள் புலம்புகின்றனர். கந்து வட்டியில் ஈடுபடும் கும் பல் மட்டுமின்றி அராஜக வட்டி வசூலிக்கும் ஒரு சில தனியார் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு அப்பாவி தொழிலாளர் களை காப்பாற்ற வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதுச்சேரியில் கொலை: சிதம்பரத்தில் ஒருவர் சரண்

 சிதம்பரம் : 

                   புதுச்சேரி பால் பண்ணை உரிமையாளர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்த பால் பண்ணை உரிமையாளர் சுப்பையா. இவர் கடந்த 3ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதற்கிடையே முதலியார்பேட்டை வரதப்பிள்ளை தோட்டம், அம்பேத்கர் சாலையைச் சேர்ந்த மணி மகன் நாகராஜ் (35) சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அ.தி.மு.க., பிரமுகர் கொலை: போலீசார் தீவிர விசாரணை

 நெல்லிக்குப்பம் : 

                  நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பெண்ணையாற்று தெருவை சேர்ந்த ரத்னம் மகன் தயாளன் (35). கூலித் தொழிலாளியான இவர் அ.தி.மு.க., முன்னாள் கிளைக் கழக செயலர். இவரது அண்ணன் ரவி (38). இவர்கள் இருவரும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து தாக்கிக் கொள்வது வழக்கம். சமாதானம் செய்பவர்களிடமும் இவர் ள் தகராறு செய்வர். அதனால் யாரும் சமாதானம் செய்வதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தயாளன், ரவி இருவரும் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து இரவு தயாளன் வீடு திரும்பவில்லை. வழக்கம் போல் அங்குள்ள மண்டபத்தில் தூங்குவார் என குடும்பத்தினர் நினைத்தனர். காலையில் தலையில் தாக்கப் பட்டு தயாளன் இறந்து கிடந்ததை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். குடிபோதையில் ரவி தாக்கியதில் தயாளன் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின் றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

முந்திரித்தோப்பில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

 ஸ்ரீமுஷ்ணம் : 

                  முந்திரி தோப்பில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீஆதிவராகநல்லூரில் இருந்து கண்டியங்குப்பம் செல்லும் வழியில் சின்னப்பன் என்பவரது முந்திரி தோப்பு உள்ளது. இங்கு நேற்று 35 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார். அருகில் விஷ மருந்து மற்றும் குவாட்டர் மது பாட்டிலும் கிடந்தது. மேலும், இறந்தவர் பச்சை கலர் கைலியும், கோடு போட்ட சட்டை ஆரஞ்சு கலர் பனியன் போட்டிருந்தார். அவரது வலது கையில் ரகுபதி சுந்தரி என பச்சையும், கழுத்து மற்றும் கன்னத்தில் கறுப்பு தழும்புகள் உள்ளன. மேலும், அவரது சட்டை காலரில் ஆர்.ஆர் டைலர், ஏ.என்.பேட்டை என்ற சிலிப் உள்ளது. இதுகுறித்து ஸ்ரீஆதிவராகநல்லூர் வி.ஏ.ஓ., குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ் ணம் போலீசார் இறந்த நபர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மாஜி ராணுவ வீரர் கொலை: இருவர் கைது


திட்டக்குடி : 

                 திட்டக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் வக்கீல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் காலனியைச் சேர்ந்தவர் முத்து அரங்கசாமி மகன் கண்தமிழ் இளவழகன் (42). முன்னாள் ராணுவ வீரர். பெரம்பலூர் ஹாலோபிளாக் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் அம்பேத்கர் (36), அவரது நண்பர் முத்துக்குமரன் (26) இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் கூட்டுரோடு அருகில் நின் றிருந்த வக்கீல் அம்பேத் கர், முத்துக்குமரன் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு வீச்சரிவாள்களை பறிமுதல் செய்து, திட்டக்குடி மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட் புறக்கணிப்பு

                கொலை வழக்கில் வக்கீல் அம்பேத்கர் கைது செய் யப்பட்டதை கண்டித்து திட்டக்குடியில் மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் தங்க கொளஞ்சிநாதன் தலைமையில் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior