உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பிளஸ்-2 தேர்வு முடிவு: தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம்


 
                       பிளஸ்-2 தேர்வை 7,43,822 மாணவ- மாணவிகள் எழுதி இருந்தனர். இன்று காலை தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் முதல் 3 இடங்களை 9 மாணவ - மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 
                தூத்துக்குடி எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.பாண்டியன் மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 1200 மதிப்பெண்களுக்கு 1187 மார்க் எடுத்துள்ளார்.

மாணவர் ஆர்.பாண்டியன் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ்- 194

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 200

வேதியல் - 200

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1187



மாணவர் பாண்டியன் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



மாநிலத்தில் 2-வது இடத்தை 2 மாணவிகளும், ஒரு மாணவரும் பெற்றுள்ள னர். அவர்கள் மூவரும் 1200 மதிப்பெண்களுக்கு 1186 மதிப்பெண்கள் வாங்கி உள்ளனர்.

அவர்கள் விபரம் வருமாறு:-



நாமக்கல் மாவட்டம் பாண்ட மங்கலத்தில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சந்தியா 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 196

ஆங்கிலம் - 191

இயற்பியல் - 200

வேதியல் - 199

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்தீர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.காருண்யாவும் 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 195

ஆங்கிலம் - 195

இயற்பியல் - 198

வேதியல் - 198

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



ஊத்தங்கரை எஸ்.வி. மந்தீர் பள்ளி மாணவர் எம். தினேஷ் 1186 மதிப்பெண்கள் எடுத்து 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 200

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் பாண்டியன் போலவே மாணவர் தினேசும் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர் தினேசுக்கு ஓரிரு மதிப்பெண்கள் குறைந்ததால் அவர் நூலிழையில் முதல் இடம் பிடிப்பதை தவறவிட்டு விட்டார்.

           மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்த 3 பேரில் 2 பேர் ஊத்தங்கரை எஸ்.வி. மந்தீர் பள்ளி மாணவர்- மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

              3-வது இடத்தை 5 மாணவ- மாணவிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த 5 பேரும் தலா 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அவர்கள் பற்றிய விபரம் வருமாறு:-


1. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சி.வி.பி.ஏ.சி.ஆர்.ஆர். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. பிரதக்சனா 1185 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 194

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 199

வேதியல் - 200

உயிரியல் - 199

கணிதம் - 200

மொத்தம் - 1185



ஈரோடு திண்டல் பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.அபிநயா 1185 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 192

இயற்பியல் - 200

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200
மொத்தம் - 1185



                 மாணவர்கள் பாண்டியன்தினேஷ் போல மாணவி அபிநயாவும் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முதன்மை சிறப்பு பெற்ற மாணவிகளில் அபிநயா மட்டுமே 4 பாடங் களில் 200க்கு 200 மதிப்பெண்களை எட்டிப்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவி எஸ்.மனோசித்ராவும் 1185 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அவரது மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 195

ஆங்கிலம் - 192

இயற்பியல் - 199

வேதியல் - 199

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



அரியலூர் அரசு நகர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர் அண்டோ நசரேனும் 1185 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரது மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 199

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீவித்யா சம்பத் 1185 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பெற்றவர்களில் ஒருவராக உள்ளார்.

தமிழை முதல் பாடமாக கொண்டு படித்த சென்னை மற்றும் புறநகர் பகுதி மாணவ- மாணவிகளில் மாணவி ஸ்ரீவித்யா சம்பத் மட்டுமே மாநில அளவில் முதன்மை சிறப்பை பெற்றுள்ளார்.



அவர் பாட வாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ்- 196

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 198

வேதியல் - 198

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



                         மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங் களை மொத்தம் 9 மாணவ- மாணவிகள் பிடித்துள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே மாணவர்கள் 6 பேர் மாணவிகள் ஆவார்கள். மாநில அளவில் வழக்கம் போல மாணவிகள்தான் அதிகபட்சமாக 88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். என்றாலும் இந்த தடவை முதல் இடத்தை மாணவர் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

பி.இ. சேர குறைந்தபட்ச மதிப்பெண் விரைவில் அறிவிப்பு: அமைச்சர் க. பொன்முடி


 
              பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைப்பது குறித்து ஒரு வாரத்தில் அரசு அறிவிப்பு வெளியிடும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார். 

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி பேசியது:

                 இரண்டு நாள்களுக்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் 548 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு 30,501 இடங்கள் காலியாக இருந்தன. எனவே, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பொறியியல் கல்லூரிகளில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது பொது பிரிவினருக்கு 55, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 என்று குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 35 மதிப்பெண்கள் என்ற நிலை உள்ளது. இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது மாற்றம் இருக்கும். இது குறித்து முதல்வருடன் கலந்துபேசி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்):

           எல்லோரும் பொறியியல் படிக்க சென்று விட்டால் மற்ற கலை, அறிவியல் பாடங்களை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பொறுத்தவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். 

அமைச்சர் பொன்முடி: 

               தமிழகத்தில் உள்ள 67 கலை, அறிவியல் கல்லூரிகளில் இரண்டு ஷிப்டு முறையில் வகுப்புகள் நடக்கின்றன.  இந்தக் கல்லூரிகளில் இடம் இல்லை என்ற நிலைதான் உள்ளது.

Read more »

பிளஸ் 2: ஜூன் 29-ல் உடனடித் தேர்வு:

                      பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம். உடனடித் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி, ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும்.

இதுகுறித்து அதன் இயக்குநர் வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

              மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை 7,43,822 பேர் எழுதினர். இத்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (மே 14) காலை 9 மணிக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட உள்ளார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிவுடன் அவர்கள் பயின்ற பள்ளியில் மே 14-ம் தேதி காலை 10 மணிக்குள் ஒட்டப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மே 17-ம் தேதி முதல்  மே 20-ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். 

விடைத்தாள் நகல்: 

             தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றிற்கும் ரூ.550-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.275-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 

மறுகூட்டல்: 

             தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைக்கப் பெற்ற பிறகு, விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 

மறுகூட்டலுக்கான கட்டணம்: 

                   மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.305-ம், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் வசூலிக்கப்படும்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையினை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில்  Dire​ctor of Government Ex​amin​ations,Chennai -6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாக நேரில் ஒப்படைத்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கூறிய அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும். 

மறுமதிப்பீடு: 

                 விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விரும்பினால் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற பின் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணபிக்க விரும்புவோர், விடைத்தாள் நகல் பெற்ற 5 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மறுமதிப்பீடு கட்டணம் முதன்மை மொழி மற்றும் ஆங்கில மொழி பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.1010, இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 ஆகும்.மறுகூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் நகலுடன் இணைத்து அனுப்பப்படும்

உடனடித் தேர்வு: 

              மார்ச் 2010ல் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன்-ஜூலை 2010-ல் நடைபெற உள்ள மேல்நிலைச் சிறப்புத் துணைத் தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பங்கள் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வழங்கப்படும்.பள்ளி மாணவராகத் தேர்வெழுதியவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் எஸ்எச் வகை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளிகளிலேயே மே 21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தினைப் பணமாகப் பள்ளியில் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:  

                ஒரு பாடத்திற்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணமாகப் பெறப்படும். மார்ச் 2010-ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்களும், மார்ச் 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் ஜூன்-ஜூலை 2010 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மே 24-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் மே 28-ம் தேதிக்குள் சேரும் வகையில் பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன், மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். 

இணை​ய​த​ளத்​தி​லும் பிளஸ் 2 முடிவு​ 

              தேர்வு முடி​வு​களை இணை​ய​த​ளம் மூலமும் அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.​ 

இணை​ய​தள முக​வரி விவ​ரம்:​​
  1. www.din​am​ani.com
  2. www.pallik​alvi.in
  3. tnresults.nic.in
  4. dge1.tn.nic.in
  5. dge2.tn.nic.in
  6. dge3.tn.nic.in
மே 26-ல் மதிப்பெண் சான்றிதழ் 

                 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 26-ம் தேதி, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

Read more »

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அஞ்சலகத்தில் பெறலாம்

          பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அஞ்சலகங்களில் பெறலாம் , மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல் கணினிமயமாக்கப்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் எடுத்துத் தரப்படும். இதற்காக ஒவ்வொரு மதிப்பெண் பட்டியலுக்கும் ரூ. 10 கட்டணமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக விருப்பம்: +2 முதல் மாணவன்

             பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விருப்பம் தெரிவித்துள்ளார். பாண்டியனின் தந்தை ராஜீவ் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை பொறியாளராகவும், தாயார் சாந்தி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றனர். மாணவர் பாண்டியன் மிகவும் அமைதியானவர் என்றும், அவரைப் படிக்கும்படி தாங்கள் எப்போதும் கட்டாயப்படுத்தியதில்லை என்றும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் படித்துவிட்டு பின்னர் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என மாணவர் பாண்டியன் தெரிவித்தார்.

Read more »

பிளஸ் 2: தூத்துக்குடி மாணவர் முதலிடம்

Top world news stories and headlines detail


                      மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று காலை வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி எஸ்.வி., இந்து மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். 1186 மார்க்குகள் பெற்று 3 மாணவர்கள் 2 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தியா ( விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல் ) கிருஷ்ணகிரியை சேர்ந்த காருண்யா (எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி), தினேஷ் ( எஸ்.வி., மந்திர் மேல்நிலைப்பள்ளி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி)  ஆகிய 3 பேர் 2 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

3 வது இடத்தை பிடித்தவர்கள் யார் ? யார் ? :

     5 மாணவ, மாணவிகள் 3 வது இடத்தை பிடித்துள்ளனர் . 

1. பிரவக்சனா (  சி.வி.பி.,ஏ.சி.ஆர்.ஆர்.,மெட்., பள்ளி ) ,  
2. மனோசித்ரா ( குறிஞ்சி மெட்.,மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) 
3. அபிநயா( பி.வி.பி.,மெட்ரிக்பள்ளி திண்டல் ஈரோடு ) ,  
4. செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ( பிரின்ஸ் மெட்., மேல் நிலைப்பள்ளி மடிப்பாக்கம் செங்கல்பட்டு ) , 
5. அரியலூர் அண்டோ நசீரின் ( அரசு நகர் மேல்நிலைப்பள்ளி மெட்., மேல்நிலைப்பள்ளி, அரியலூர் )  

              ஆகியோர் 1185 மார்க்குகள் பெற்று 5 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடந்தது. 6 ,லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 85 .2 சத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகள் வெளியானதும் மாணவ, மாணவிகள் தத்தம் பள்ளிகளில் குவிந்திருந்தனர். இதில் மாணவர்கள் , மாணவிகள் . பள்ளிகள் மூலமும், இணையதளம் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சதம் அதிகமாகும்.

தமிழ்ப் பாடத்தில் நாமக்கல் மாணவி முதல் இடம்

                 பிளஸ் 2 தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, தமிழில் 197 மதி்பபெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். திருப்பத்தூர் மேட்டுக்குளம் வேலூர் சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.வெங்கடேஷ் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.பாண்டியன், இயற்பியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்று முதல் இடம் பெற்றுள்ளார்.

கணித பாடத்தில் 1862 பேர் 200க்கு 200

               கணித பாடத்தில் 1862 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 4060 ‌பேர் 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

                 மேலும், www.pallikalvi.in,  tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in, www.collegesintamilnadu.com  போன்ற இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் மூலமாகவும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


.

Read more »

நடராஜர் கோயிலில் ஓராண்டில் ரூ.21 லட்சம் உண்டியல் வசூல்


சிதம்பரம்:
 
                சிதம்பரம் நடராஜர் உண்டியல் வைக்கப்பட்டு ஒரு வருடம் 2 மாதத்தில் இதுவரை 7 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 486 கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் தெரிவித்தார் .நடராஜர் கோயிலை உயர் நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கையகப்படுத்தி நிர்வாக அலுவலரை நியமித்தது. 2009-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆர்.ஜகந்நாதன், செயல்அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் 7-வது முறையாக உண்டியல் எண்ணப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணுசாமி, வசந்தகுமாரி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நடராஜர் கோயிலின் 9 உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 251 கிடைத்தது என்று செயல்அலுவலர் க.சிவக்குமார் தெரிவித்தார்.

Read more »

நெய்வேலியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்


நெய்வேலி:
 
            என்எல்சி நிர்வாகம் வழங்கும் பல்வேறு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, ஊழியர்களின் பிள்ளைகளிடமே அதிக கட்டணங்களை நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிப்பதாக என்எல்சி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். 
 
                 இப்பிரச்னையில் நிர்வாகம் தலையிட வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து.இதையடுத்து தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகளை மாநில அரசு இயற்றியது. 
 
                இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இம்மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள அதிகபட்ச புதிய கட்டண விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் எல்கேஜி வகுப்புக்கு மாதம் ரூ.480-ம் யூகேஜி வகுப்புக்கு ரூ.495-ம் கடந்த ஆண்டிலிருந்தே வசூலித்து வருகின்றன. இவை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகும். மேலும் பள்ளி செலவினங்களைக் காரணம் காட்டி வரும் கல்வியாண்டு முதல் கட்டணம் உயர்த்தப்படும் என பெற்றோர்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
                   ஆனால், தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இலவச மின்சாரம், தண்ணீர், ஏக்கருக்கு மாத வாடகையாக ரூ.1, பள்ளியைச் சுற்றிலும் சுகாதாரப் பராமரிப்பு என பல்வேறு சலுகைகளை என்எல்சி நிர்வாகம் அளித்து வருகிறது.என்எல்சி ஊழியர்களின் பிள்ளைகள் இப்பள்ளிகளில் அதிக அளவில் பயில்வதால் நிர்வாகம் இத்தகைய சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள புதிய கட்டண விகிதங்களை அறிந்த என்எல்சி ஊழியர்கள், நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்து கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக வசூலிக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பியுள்ளனர். பல்வேறு சலுகைகளை பெற்றுவரும் தனியார் பள்ளிகள் என்எல்சி ஊழியர்களிடமே அதிக கட்டணம் வசூலிப்பது ஏற்கக் கூடியது அல்ல. எனவே இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட இருப்பதாக எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் சி.சுகுமார் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 82 சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு கல்​விக் கட்​டண விவரம் வெளியீடு

கட​லூர்:

                 நீதி​பதி கோவிந்​த​ராஜ் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு​வின் பரிந்​துரைப்​படி,​​ சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்​விக் கட்​டண அறிக்​கை​களை,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 82 பள்​ளி​கள் பெற்​றுச் சென்றுள்ளன.​ த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​கள்,​​ மெட்​ரிக் பள்​ளி​கள் மாண​வர்​க​ளி​டம் அப​ரி​மி​த​மான கட்​ட​ணம் வசூ​லிப்​ப​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.​ ​

               த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​க​ளில் கட்​ட​ணம் வசூ​லிப்​பதை முறைப்​ப​டுத்த தமி​ழக அரசு சட்​டம் இயற்றி இருக்​கி​றது.​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் தீர்ப்பு அளித்​துள்​ளது.​இந்த நிலை​யில் நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைப்​படி,​​ ஒவ்​வொரு பள்​ளி​க​ளும் எவ்​வ​ளவு கட்​ட​ணம் வசூ​லிக்​க​லாம் என்று நிர்​ண​யம் செய்​யப்​பட்ட அறிக்​கை​கள் பள்​ளி​க​ளுக்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கங்​கள் மூலம் விநி​யோ​கிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ ​ ​

              க​ட​லூர் மாவட்​டத்​தில் 112 சுய​நி​திப் பள்​ளி​கள் உள்​ளன.​ இவற்​றில் 90 பள்​ளி​க​ளுக்கு கட்​ட​ணப் பரிந்​து​ரைப் பட்​டி​யல் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கத்​துக்கு வந​துள்​ளது.​ இவற்​றில் 82 பள்ளி நிர்​வா​கங்​கள் வியா​ழக்​கி​ழமை வரை,​​ கட்​ட​ணப் பட்​டி​ய​லைப் பெற்​றுச் சென்​றுள்​ள​தாக அதி​கா​ரி​கள் வட்​டா​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ ​கட்​ட​ணப் பட்​டி​யலை இது​வரை வாங்​கா​மல் இருக்​கும் பள்​ளி​கள்,​​ நகர்ப் புறங்​க​ளில் உள்ள மிகப் பிர​ப​ல​மான பள்​ளி​கள்​தான் என்று கூறப்​ப​டு​கி​றது.​ பி​ர​ப​ல​மான பள்​ளி​கள் பல,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​தும்,​​ ஆசி​ரி​யர்​க​ளுக்கு வழங்​கப்​ப​டும் ஊதி​யத்தை உயர்த்​தி​யும் தக​வல்​களை அளித்து உள்​ளன.​     இந்​தக் கட்​ட​ணத்​தில் பள்ளி சிறப்​பாக நடப்​ப​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை தொடர்ந்து வசூ​லிக்​க​லாம் என்று நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​ ​

                இவ்​வாறு 25 சத​வீத பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ தாங்​கள் வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தை குறைத்​துக் காண்​பித்​த​தால்,​​ அதேக் கட்​ட​ணத்தை வசூ​லிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் மாட்​டிக் கொண்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ ​கி​ரா​மப்​புற நர்​சரி பள்​ளி​கள் பல​வற்​றுக்கு அவர்​கள் தற்​போது வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தை​விட,​​ கூடு​தல் கட்​ட​ணம் வசூ​லிக்க நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து இருப்​ப​தா​க​வும் கூறப்​படு​கி​றது. 20 சத​வீத பள்​ளி​க​ளுக்கு அவர்​கள் தற்​போது வசூ​லிக்​கும் கட்​ட​ணத்தையே நீதி​பதி குழு பரிந்​து​ரைத்து உள்​ளது.​ மொத்​தத்​தில் 50 சதத்​துக்​கும் மேற்பட்ட பள்ளி நிர்​வா​கங்​கள்,​​ நீதி​பதி கோவிந்​த​ராஜ் குழு​வின் பரிந்​து​ரைக் கட்டண விகி​தத்தை,​​ முழு​ம​ன​து​டன் ஏற்​றுக் கொண்டு இருப்​ப​தாக ​கல்​வித் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

Read more »

பழுப்பு நிலக்​கரி லாரி​கள் வேலை​நி​றுத்​தம்


நெய்வேலி:
 
            நெய்வேலியில் இருந்து பழுப்பு நிலக்கரி ஏற்றிச்செல்லும் தனியார் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலியில் இருந்து தமிழகம், ஆந்திர மாநிலத்திலுள்ள சிமென்ட் மற்றும் செங்கல் உற்பத்திக் கூடங்களுக்கு பழுப்பு நிலக்கரி எடுத்தும் செல்லும் பணியில் 80-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டுள்ளன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, லாரியின் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க வரி அதிகரிப்பு, டிரைவர் மற்றும் கிளீனர் படி போன்றவை அதிகரித்துவிட்ட நிலையில், லாரிகளுக்கான வாடகையை சம்பந்தப்பட்ட சிமென்ட் மற்றும் செங்கல் உற்பத்திக் கூட நிறுவனங்கள் உயர்த்தித் தரவேண்டும் என லாரி உரிமையாளர்கள் பலமுறை வலியுறுத்தினர்.ஆனால், தனியார் நிறுவனங்கள் வாடகையை உயர்த்தவில்லை. இதையடுத்து தனியார் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
போராட்டம் குறித்து நெய்வேலி பாடி லாரி உரிமையாளர் சங்கப் பொருளாளர் இப்ராகிம் கூறுகையில்,
 
                "தமிழகம் முழுவதும் 20 சதவீத வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிமென்ட் நிறுவனங்கள் இதுவரை எங்களுக்கான வாடகையை உயர்த்தாததால் நாங்கள் மிகுந்த நஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் லாரி வாடகையை உயர்த்தாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

Read more »

தாக்குதல்: ஊராட்​சித் தலை​வ​ரின் மகன்​கள் கைது

கட ​லூர்:

              தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில் போலி​யாக கூடு​தல் ஆள்களைச் சேர்க்க மறுத்த மக்​கள் நலப்​ப​ணி​யா​ளர் தாக்​கப்​பட்​டார்.​ இது தொடர்​பாக ஊராட்சி மன்​றத் தலை​வ​ரின் மகன்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்ட​னர்.​ ​

                நெல்​லிக்​குப்​பம் அருகே எழு​மேடு கிரா​மத்​தில் தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில்,​​ வாய்க்​கால் தூர்​வா​ரும் பணி நடை​பெற்று வரு​கி​றது.​ மக்​கள் நலப்​ப​ணி​யா​ளர் கட​வுள் குமார்,​​ புதன்​கி​ழமை அப் பணி​யில் கணக்​கெ​டுத்​துக் கொண்டு இருந்​தார்.​ ​அப்​போது அங்கு எழு​மேடு ஊராட்சி மன்​றத் தலை​வர் அபூர்​வத்​தின் மகன்​க​ளான சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோர் வந்​த​ன​ராம்.​ ​ஊ​ராட்சி மன்​றத் தேர்த​லில் அவர்​கள் அதி​கம் செலவு செய்து விட்​ட​தா​க​வும்,​​ அதை சரி​கட்ட வாய்க்​கால் தூர்​வா​ரும் பணி​யில் வேலை செய்த ஆள்​க​ளை​விட,​​ கூடு​த​லாக 50 பேரை போலி​யா​கச் சேர்த்து,​​ அதற்​கான பணத்தை தங்களிடம் வழங்க வேண்​டும் என்று கோரி​ன​ராம்.​ ​ இ​தற்கு கட​வுள் குமார் சம்​ம​திக்கவில்​லை​யாம்.​ எனவே அவரை சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோர் தாக்கியதா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இதைத் தொடர்ந்அங்கு வேலை செய்த ஆள்​கள்,​நெல்லிக்​குப்​பம் காவல் நிலை​யம் வந்து புகார் செய்​த​னர்.​ போ​லீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து,​​ சக்​தி​வேல்,​​ புரு​சோத்​த​மன் ஆகி​யோ​ரை கைது செய்​த​னர்.​

Read more »

கடலூ​ரில் அட்​சய திரி​தியை விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம்

கட​லூர்:

               அட்​சய திரி​தியை அன்று மக்​கள் எச்​ச​ரிக்​கை​யு​டன் தங்க நகை​களை வாங்க வேண்​டும் என்று வலி​யு​றுத்தி,​​ தமிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்பு சார்பில் விழிப்​பு​ணர்​வுப் பிர​சா​ரம் வியா​ழக்​கி​ழமை மேற்​கொள்​ளப்​பட்​டது.​   கடலூர் பஸ்​நி​லை​யம்,​​ நகைக் கடை​கள் நிறைந்த லாரன்ஸ் சாலை,​​ மஞ்சக்குப்பம் கடை​வீதி ஆகிய இடங்​க​ளில் இந்​தப் பிர​சா​ரம் நடந்​தது.​ ​ ​ அட்​சய திரி​தியை தினத்​தில் தங்​கம் வாங்​கி​னால் ஐஸ்​வர்​யம் பெரு​கும்,​​ எல்லா நலன்​க​ளும் கிடைக்​கும் என்ற நம்​பிக்கை மக்​கள் மத்​தி​யில் நிலவி வரு​கி​றது.​ ​   இந்​தச் சந்​தர்ப்​பத்​தைப் பயன்​ப​டுத்தி,​​ நேர்​மை​யற்ற வணிக நடை​மு​றை​க​ளைக் கையா​ளும் வணி​கர்​கள் சிலர்,​​ தரம் குறைந்த தங்​கத்தை ஏமாந்​த​வர்​க​ளி​டம் விற்​பனை செய்​து​வி​டும் நிலையை,​​ மக்​க​ளுக்கு எடுத்​துக்​கூற விழிப்​பு​ணர்​வுப் பிர​சா​ரம் கடலூ​ரில் நடை​பெற்​றது.​ ​​   

                  தமிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்​த​வர்​கள்,​​ இந்த விழிப்புணர்​வுப் பிர​சா​ரத்தை மேற்​கொண்​ட​னர்.​    விளம்​ப​ரங்​களை நம்பி ஏமாறா​தீர்​கள்,​​ கூட்ட நெரிச​லில் குறை​யுள்ள நகை​களை வாங்கி விடா​தீர்​கள்.​   த​ரத்​தைப் பாருங்​கள்,​​ ஹால்​மார்க் தர நிர்​ண​யத்​தி​லும் தரம் குறைவு உண்டு,​​ கண்​டிப்​பாக அச்​சிட்ட ரசீது வாங்​குங்​கள்,​​ கஷ்​டப்​பட்டு சம்​பா​தித்த பணத்தை நல்ல நகை​க​ளில் முத​லீடு செய்​யுங்​கள் என்ற கோஷங்​க​ளு​டன்,​​ துண்​டுப் பிர​சு​ரங்​களை மக்​க​ளி​டையே விநி​யோ​கித்​த​னர்.​ ​  த​மிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் தலைமை தாங்​கி​னார்.     இதில் நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​​ நுகர்​வோர் ஆர்​வ​லர்​கள் அருள்​செல்​வம்,​​ வட​லூர் வேம்பு,​​ நெல்​லிக்​குப்​பம் பால​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ ராம​நா​தன்,​​ சிவ​சங்​கர்,​​ பர​சு​ரா​மன்,​​ அமிர்த​லிங்​கம்,​​ புக​ழேந்தி,​​ பாபு,​​ பாலா,​​ நட​ரா​ஜன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாண​வர்​க​ளுக்கு இன்று பிளஸ்-​2 தேர்வு முடிவு

கட​லூர்:
 
                பிளஸ்-​2 தேர்வு முடி​வு​கள் வெள்​ளிக்​கி​ழமை ​(இன்று)​ காலை வெளி​யிடப்​ப​டு​கி​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாணவ,​​ மாண​வி​கள் தேர்வு முடிவு​களை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை​பெற்ற பிளஸ்-​2 தேர்வை,​​ தமி​ழ​கம் மற்​றும் புது​வை​யில் 6,89,687 மாணவ,​​ மாண​வி​யர் எழு​தி​னர்.​ ​க​ட​லூர் மாவட்​டத்​தில் மாண​வர்​கள் 14,679 பேரும் மாண​வி​கள் 14,849 பேரும் பிளஸ்-​2 தேர்வு எழுதி இருக்​கி​றார்​கள்.​      
 
            பிளஸ்-​2 தேர்வு முடி​வு​கள் காலை 9 மணிக்கு முத​லில் சென்​னை​யில் வெளி​யி​டப்​ப​டு​கி​றது.​அதே நேரத்​தில் கட​லூர் மாவட்ட மாண​வர்​க​ளுக்​கான தேர்வு முடி​வு​கள் கட​லூர் புனித அன்​னாள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வெளியிடப் படு​கி​றது.​  தேர்வு முடி​வு​களை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமு​த​வல்லி வெளி​யி​டு​கி​றார்.​ ​​   இதற்​காக விரி​வான ஏற்​பா​டு​களை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​கம் செய்து உள்​ளது.​    தேர்வு முடி​வு​க​ளைப் பெற்​றுச் செல்​வ​தற்​காக அனைத்து மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர்​க​ளும் கட​லூ​ருக்கு வர​வ​ழைக்​கப்​பட்டு உள்​ள​னர்.

Read more »

நட​ரா​ஜர் கோயில் உண்​டியலில் ரூ.4.17 லட்​சம் காணிக்கை

சிதம்​ப​ரம்:

                       சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் 7-வது முறை​யாக உண்​டி​யல் வியாழக்​கி​ழமை திறந்து எண்​ணப்​பட்​ட​தில் ரூ.4 லட்​சத்து 17 ஆயி​ரத்து 486 காணிக்​கை​யாக கிடைத்​துள்​ளது.​ ​ந​ட​ரா​ஜர் கோயிலை உயர் நீதி​மன்ற ஆணைப்​படி இந்து அற​நி​லை​யத்​துறை கடந்த ஆண்டு பிப்​ர​வரி 2-ம் தேதி கைய​கப்​ப​டுத்தி நிர்​வாக அலு​வ​லரை நிய​மித்​தது.​ ​2009-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சித்​சபை எதிரே முதன்​மு​த​லாக கோயி​லில் உண்​டி​யல் வைக்​கப்​பட்​டது.​ அதன்​பின்​னர் படிப்​ப​டி​யாக மொத்​தம் 9 உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்​டன.​ ​இந்து அற​நி​லை​யத்​துறை இணை ஆணை​யர் ஆர்.ஜகந்​நா​தன்,​​ செயல்​அ​லு​வ​லர் க.சிவக்​கு​மார் ஆகி​யோர் முன்​னி​லை​யில் 7-வது முறை​யாக உண்​டி​யல் எண்​ணப்​பட்​டது.​÷இந்​ தி​யன் ஓவர்​சீஸ் வங்கி ஊழி​யர்​கள் மற்​றும் அற​நி​லை​யத்​துறை ஊழி​யர்​கள் இப் பணி​யில் ஈடு​பட்​ட​னர்.​ சப்-​இன்ஸ்​பெக்​டர்​கள் கண்​ணு​சாமி,​​ வசந்​த​கு​மாரி ஆகி​யோர் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டி​ருந்​தது.​ ​÷ந​ட​ரா​ஜர் கோயி​லின் 9 உண்​டி​யல்​கள் எண்​ணப்​பட்​ட​தில் ரூ.4 லட்​சத்து 17 ஆயி​ரத்து 251 கிடைத்​தது.​ உண்​டி​யல் வைக்​கப்​பட்டு 1 வரு​டம் 2 மாதத்​தில் இது​வரை 7 முறை உண்​டி​யல் எண்​ணி​ய​தில் மொத்​தம் ரூ.21 லட்​சத்து 20 ஆயி​ரத்து 486 கிடைத்​துள்​ளது என செயல்​அ​லு​வ​லர் க.சிவக்​கு​மார் தெரி​வித்​தார்

Read more »

வாகன உரிமையாளர்களிடம் ரூ.19 லட்​சம் சாலை​வரி வசூல்

கட​லூர்:

                 புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து விட்டு கட​லூர் மாவட்​டத்​தில் சாலை​வரி செலுத்​தா​மல் இயக்​கிய போது பிடி​பட்ட வாக​னங்​க​ளின் உரிமையாளர்​க​ளி​டம் இருந்து,​​ கடந்த 5 நாள்​க​ளில் ரூ.​ 19 லட்​சம் சாலை வரி வசூலிக்கப்பட்டு இருப்​ப​தாக வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அதி​காரி ​ ஜெயக்​கு​மார் தெரி​வித்தார்.​ ​பு​துவை மாநி​லத்​தில் விற்​பனை வரி மிகக்​கு​றை​வாக இருப்​பதால்,​​ புதுவை மாநி​லத்​தை​யொட்டி உள்ள கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ தஞ்சை,​​ திரு​வா​ரூர் மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் இரு சக்​கர வாக​னங்​கள் மற்​றும் 4 சக்​கர வாக​னங்​களை புதுவை மாநி​லத்​தில் வாங்​கு​கின்​ற​னர்.​

                   சாலை​வ​ரி​யும் அங்கு மிகக்​கு​றைவு என்​ப​தால்,​போலி முக​வரி அளித்து அங்​கேயே வாக​னப் பதி​வும் செய்து கொள்​கின்​ற​னர்.​ அவ்​வாறு பதிவு செய்​யப்​ப​டும் வாக​னங்​கள் தமி​ழ​கத்​துக்​குள் இயக்​கப்​ப​டும் போது,​​ சாலை வரி வித்​தி​யா​சத் தொகையை தமி​ழக அர​சுக்​குத் செலுத்த வேண்​டும்.​ இத் தொகை​யைச் செலுத்​தா​மல் பலர்,​​ வரி​ஏய்ப்பு செய்​வ​தால் தமி​ழக அர​சுக்கு ஆன்​டு​தோ​றும் பல கோடி வரு​வாய் இழப்பு ஏற்​ப​டு​கி​றது.​ இதில் 4 சக்​கர வாக​னங்​க​ளின் வரி ஏய்ப்பு அதி​க​மாக உள்​ளது.​ ​இது குறித்து புகார்​கள் எழுந்​த​தன் விளை​வாக புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் சாலை வரி செலுத்​தாத இரு​சக்​கர வாக​னங்​களை,​​ கடந்த சில நாள்​க​ளாக போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் ஆய்வு செய்து வித்​தி​யாச வரியை செலுத்​து​மாறு அறி​வு​றுத்தி வரு​கி​றார்​கள்.​ ​தொ​டர்ந்து வரி​செ​லுத்​தாத வாக​னங்​கள் கைப்​பற்​றப்​பட்டு வரு​கி​றது.​ கடந்த 5 நாள்​க​ளில் மட்​டும் சாலை​வரி வித்​தி​யா​சத் தொகை​யாக,​​ 634 வாக​னங்​க​ளுக்கு,​​ ரூ.​ 19.3 லட்​சம் வசூ​லித்து இருப்​ப​தாக வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அதி​காரி ஜெயக்​கு​மார் தெரி​வித்​தார்.​ ​

அ​வர் மேலும் கூறி​யது:​ 

                புதுச்​சேரி மாநி​லத்​துக்கு வரி​செ​லுத்​தி​விட்டு,​​ தமி​ழ​கச் சாலை​க​ளைப் பயன்​ப​டுத்​து​வது தவ​றான செயல்.​ சாலை​வரி வித்​தி​யா​சத் தொகையை பலரும் தாமாக முன்​வந்து,​​ செலுத்​தத் தொடங்கி இருக்​கி​றார்​கள்.​ போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கங்​க​ளில் இத​னால் கூட்ட நெரி​சல் அதி​க​ரித்து இருப்​ப​தால்,​​ சிறப்​புக் கவுன்ட்​டர்​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன என்​றும் தெரி​வித்​தார்.​ ​​ அடுத்​தக் கட்​ட​மாக சாலை​வரி வித்​தி​யா​சத் தொகையை செலுத்​தாத 4 சக்​கர வாகனங்களைப் பிடிக்க அதி​கா​ரி​கள் திட்​ட​மிட்டு உள்​ள​னர்.​ 4 சக்​கர வாகனங்களைப் பிடிப்​பது அதி​கா​ரி​க​ளுக்கு சவா​லாக இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஏ​னெ​னில் உயர் அதி​கா​ரி​கள்,​​ வணி​கர்​கள் என ​ சமு​தா​யத்​தில் உயர்ந்த அந்​தஸ்​தில் இருக்​கும் பலர் இவ்​வாறு தமி​ழ​கத்​தில் சாலை​வரி செலுத்​தா​மல் வரி ஏய்ப்பு செய்து வரு​கி​றார்​கள்.​ க​ட​லூர் திரு​வந்​தி​பு​ரம் சாலை​யில் இவ்​வாறு தமி​ழ​கத்​தில் சாலை வரி செலுத்​தாத இரு ஆம்னி வேன்​களை வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார் வியா​ழக்​கி​ழமை கைப்பற்றினார்.​ அ​வற்​றில் ஆவ​ணங்​கள் முறை​யாக இல்லை.​ எனவே காவல் நிலை​யத்​தில் அவை​கள் ஒப்​ப​டைக்​கப்பட்டு உள்​ளன.​ மது​பா​னங்​கள் கடத்​த​லுக்கு பெரும்​பா​லும் புதுவை மாநி​லப் பதிவு வாக​னங்​களே பயன்​ப​டுத்​தப் படு​வ​தாக போலீ​ஸôர் தெரி​வித்​த​னர்.

Read more »

Award for panchayat

CUDDALORE:

             Orathur panchayat in the Keerapalayam block near here has bagged the Uthamar Gandhi Award for 2008-2009. In a statement released here, Collector P. Seetharaman said that the award included a certificate, a shield and a special financial allocation of Rs. 5 lakh. The panchayat president would get a certificate and a medal. The award instituted by the State government in 2006-07 was being given away annually to local bodies in appreciation of the initiatives taken in providing basic amenities and augmenting revenue.

Read more »

Private lorry operators at Neyveli go on indefinite strike

CUDDALORE: 

              The private lorry operators owing allegiance to the Neyveli Body Lorry Owners' Association launched an indefinite strike from Thursday, demanding increased tariffs. The strike affected the movement of about 150 lorries that used to transport on an average 1,500—2,000 tonnes of lignite a day from Neyveli to others parts of the State. The lorry owners were demanding a tariff rise of about Rs.40- 60 a tonne.

Read more »

ஆயிரம் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் தகவல்

கடலூர்:

               தமிழகத்தில் 1,000 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறினார். 

கடலூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறியதாவது:

               தமிழகத்தில் அரசு ஒன்றிய, நகராட்சி, அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகள் 37 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிகள் 7,000 உள்ளன. ஆனால் ஆரம்ப, நடுநிலை, மெட்ரிக் பள்ளிகள் 53 ஆயிரம் உள்ளன. இதற்கு அனுமதியும் வழங்கி அரசே கட்டணக் கல்வியை அனுமதித்துள்ளது.சட்ட ரீதியாக இலவச கல்வி வழங்குவது மாநில அரசின் கடமை.

                இலவச ஆரம்ப கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். ஒரு ஆசிரியருக்கு 24 மாணவர்கள் என்றிருந்தது தற்போது 30 முதல் 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி இந்தாண்டு 5,000 ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுபடி, வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் 1,000 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை.

                   9,011 பள்ளிகளில் 5, 10, 15 என மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும். சமச்சீர் கல்விக்கான முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடப் புத்த கங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இக்கோரிக்கைகள் அனைத்தும் ஜூன் 15ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அப்துல் மஜீத் கூறினார்.

Read more »

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரூ.5.50 லட்சம் டாப்-அப் கார்டுகள் மாயம்

கடலூர் : 

                  கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                   கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய் மதிப் புள்ள 70 ஆயிரம் டாப்-அப் கார்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அப்போது  பொறுப்பில் இருந்த அதிகாரி ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டு வாங்கியுள்ளார். இதன் பின் அவர் வெளியூருக்கு மாறுதலாகி சென்று, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அலுவலக தணிக்கையின் போது  10 ஆயிரம் டாப்-அப் கார்டு களை கொண்ட ஒரு பாக்ஸ் விற்பனை செய்ததற்கான கணக்கில் வரவில்லை. இது குறித்து அலுவலகத்தில் விசாரணை செய்த தில் மாயமான டாப்-அப் கார்டுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாயமான கார்டுகளின் மதிப்பு 5.50 லட்சம் ரூபாயாகும். மாயமான 3,000 கார்டுகள் விருதுநகர் மாவட்டத்தில்  பயன்பாட்டில் உள்ளன.  மீதமுள்ள 7,000 கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. 

                  கார்டுகள் எப்படி காணாமல் போனது... யார் எடுத்துச் சென்றது என்ற விபரங்களை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் கார்டுகள் மாயமானது குறித்து கடலூர் பி.எஸ். என்.எல்., முதன்மை கணக்கு அதிகாரி ராஜா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் சம்பவம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்குள் நடந்துள்ளது. மேலும் ஏழு பெட்டிகள் பெற்றுக் கொண்டதில் மாயமானது மூன் றாம் எண் பெட்டியாகும். விற்பனை செய்தவர்கள் இரண்டு பெட்டிகளை விற்பனை செய்த பின் மூன்று பெட்டி மாயமானது தெரியாமல் எப்படி நான்காவது பெட்டியை விற்பனை செய்துள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை செய்து குற்றவாளி அல்லது சந்தேக நபர்கள் குறிப்பிட்டு  புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Read more »

மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புருஷோத்தமன் விஜயகுமார் கூறினார்.

              கடலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார சீர்கேடு, சிகிச் சைக்கு லஞ்சம், நோயாளிகளிடம் பரிவு காட்டாதது போன்ற பல புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந் துள்ளன. அமைச்சர் பன்னீர்செல்வம்  உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் புருஷோத்தமன் விஜயகுமார் தலைமையில் கண்காணிப்பாளர் ரங்கராஜன், ஈஸ்வரன், புள்ளிவிவர உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிரடி படையினர் மருத்துவமனையில் நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நோயாளிகள் போல் மாறுவேடத்தில் ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புருஷோத்தமன் விஜயகுமார்  கூறியதாவது:  

               தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இன்று (நேற்று) எங்கள் குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது தெரிய வந்துள்ளது. ஊழியர்கள் நோயாளிகளிடம் மனிதநேயம் இல்லாமல் நடத்து கொண்டுள்ளனர். வயிற்று வலியால் துடித்த நோயாளி ஒருவருக்கு 2 மணி நேரமாக ஸ்கேன் எடுக்காமல் காக்க வைத்ததும் கண்கூடாக காண நேர்ந்தது.  சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற் றது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள ஸ்டோர், ஆபீஸ், மகப் பேறு, சமையல் கூடத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டு மாற்றியமைக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. எக்ஸ்ரே பிலிம் போதுமான அள விற்கு தட்டுபாடின்றி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் ஏழை மக்களுக்கு மருத் துவம் சென்றடையவேண்டும் என்பதேயாகும். ஆய்வின் போது தவறு செய்தவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். சிலர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நடவடிக்கை குறித்து ஆய்வு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். இது போன்ற அதிரடி ஆய்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படும். இவ் வாறு கூடுதல் இயக்குனர் கூறினார்.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா

சிதம்பரம் :  

                  அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழாவில் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத் தார். வேளாண்துறைத் தலைவர் டாக்டர் நாராயணசாமி, மேலாண் மைத் துறை தலைவர் பஞ்சநாதன், ராஜமோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளராக ராஜமோகன், ஆனந்த் மற்றும் செழியன் செயல் படுகின்றனர்.

Read more »

தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் மாணவர்களை படிக்க தூண்ட வேண்டும்: சங்கரி

குறிஞ்சிப்பாடி :

                 ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்  உதவியால் மாணவர் களை படிக்க தூண்ட வேண்டும் என இன்டல் நிறுவன துணை மேலாளர் பேசினார். வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவில் கருத்தரங்கம் நடந்தது.

                வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியில் கல்வியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.  குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் நெல்லையப்பன் கல்வியில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி பேசினர்.பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சிங்காரவேலு தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். 

இன்டல் நிறுவனத்தின் துணை மேலாளர் சங்கரி பேசியதாவது :

                   இன்று தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து விட்டது. செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை. இண்டர்நெட் மூலம் ஒரு நிமிடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிகிறது. ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன நடத்த வேண்டும் என்பதை முன்னரே தயாரித்து இருக்க வேண்டும். இதை சில ஆசிரியர்கள் மட்டுமே கடைபிடிக்கின்றனர். சில ஆசிரியர்கள் பாடம் நடத்திய பின்னர் கூட பாடத் திட்டத்தினை தயாரிக்கின்றனர்.

                     ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்  உதவியால் மாணவர்களை படிக்க தூண்ட வேண்டும். கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களை ஆர்வமுடன் கற்க தூண்ட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களையும் தங்கள் பிள்ளைகளையும் எப்படி உருவாக்க போகிறீர்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் தகவல்களை பொறுத்து அது அமையும்.திறமைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் விவாதம் செய்யுங்கள் என பேசினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் வந்திருந்த விரிவுரையாளர்கள், மாணவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஓ.பி.ஆர். கல்வியியல் கல்லூரி முதல்வர் பொன்மொழி சுரேஷ் நன்றி கூறினார்.

Read more »

மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் வென்ற கோ கோ அணிக்கு பாராட்டு

சிதம்பரம் : 

                 மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அண்ணாமலை பல்கலை கோ கோ, பெண்கள் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வேலூர் குடியாத்தத்தில் மாநில அளவிலான கோ கோ போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் வென்ற அணி மற்றும் பயிற்சி அளித்த விரிவுரையாளர் சந்திரமோகன் ஆகியோரை  துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி, கல்வி புல முதல்வர் மங்கையற்கரசி ஆகியோர் பாராட்டினர்.

Read more »

காந்தி ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டிற்காக உத்தமர் காந்தி  ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; 

                   தமிழக அரசு கிராமங் கள் வளர்ச்சி பெற ஒவ் வொரு ஆண்டும் 15 சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. இவ்விருது  கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறந்த பூர்வாங்க பணிகள், ஊராட்சி வருவாயை பெருக்குதல் மற்றும் புதிய முயற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்காக விருது வழங்கப்படுகிறது. விருதிற்கு தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு நற்சான்றிதழும், கேடயம், ஐந்து லட்சம் மதிப்பிலான வெகுமதியும் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 2009-2010ம் ஆண்டிற்கு விருது பெற ஆர்வமுள்ள ஊராட்சி தலைவர்கள் 2004-05 முதல் 2008-09ம் ஆண்டு வரை உள்ள 5ஆண்டுகளில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிசீலனை செய்து தகுதியான ஊராட்சிகள் அரசுக்கு பரிந்துரை செய் யப்படும்.

Read more »

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

கடலூர் : 

                   மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. வெற்றி பெற்றும் அணிக்கு முதல் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக மாவட்ட கிரிக்கெட் அகாடமி கோப்பை மற்றும் 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய், நான்காம் பரிசாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

                     ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு 250 ரூபாய் பரிசு, தொடர் நாயகனுக்கு 1,000 ரூபாய், தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.  போட்டிகள் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் அணியினர் 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு 

              கூத்தரசன், செயலர், கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப் பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 9442521780, 9500872434 மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

Read more »

கைதியை காரில் கட்டிப் போட்டு கடலை ரசித்த கர்நாடக போலீசார்

கடலூர் : 

                 கைதியை காரில் கட் டிப்போட்டுவிட்டு கர்நாடக போலீசார், கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலையை ரசிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை 8 மணிக்கு கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நின்றிருந்தது. காருக்குள்  ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்டிருந்தார்.

                   ஸ்கார்பியோவில் இருந்து இறங்கிய ஆறு பேர், சில்வர் பீச்சில் கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது காரில் சங்கிலியால் கட்டப்பட்டிருந் தவரை பார்த்த ஒருவர், தேவனாம்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையே அந்த ஆறு பேர், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். தேவனாம்பட்டினம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், நெடுஞ் சாலை ரோந்து போலீசார் கடலூர் பாரதி ரோட்டில் ஸ்கார்பியோவை மடக்கி பிடித்து, புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்  காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். காரில் இருந்தவர்கள்  கர்நாடக மாநிலம் பெங்களூரு  போலீசார் என்பது விசாரணையில் தெரியவந்தது. காரில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தவர் இம்பால் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய் யப்பட்ட, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராஜேஷ்(21) என்பது தெரியவந்தது. ராஜேஷ் திருடிய பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் ஒருவரிடம் விற் றுள்ளார்.

                     அப்பொருட்களை மீட்பதற்காக கர்நாடக போலீசார் நேற்று ராஜேஷை கடலூர் அழைத்து வந்துள்ளனர். அப் போது கடலூர் சில்வர் பீச்சை பார்ப்பதற்காக தேவனாம்பட்டினத்திற்கு சென்றுள்ளனர். கைதி தப்பிச் செல்லாமல் இருக்க, சங்கிலியால் காரில் கட்டிப் போட்டுவிட்டு, கடல் அலையை ரசித்துவிட்டு திரும்பிய விவரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூரில் பிடிபட்டன

கடலூர் : 

                   சாலைவரி கட்டாமல் கடலூரில் ஓடிய புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட கார்கள் பிடிபட்டன. புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு சாலை வரி செலுத்தாத இரு சக்கர வாகனங்களை போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து சாலை வரி வசூலித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் வரை 650 இரு சக்கர வாகனங்களை பிடித்து 19 லட்சம் ரூபாய் வசூல் செய்தனர். புதுச்சேரி மாநில பதிவு கார்களை மட்டும் இதுவரை பிடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் மற்றும் போலீசார் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 2 கார்களை  பிடித்தனர்.

Read more »

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் பகுதியில் விதிமுறைகளை மீறி பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் செராமிக் தொழில் செய்பவர்கள் விதிமுறைகளை மீறி மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் தலைமையில் பறக்கும்படை தாசில்தார் கண்ணன், டி.எஸ்.ஓ., செழியன், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது செராமிக் தொழில் செய்பவர்கள் பலர் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Read more »

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தமீனவர் மயங்கி விழுந்து சாவு


பரங்கிப்பேட்டை : 

               பரங்கிப்பேட்டை அருகே கடலில் மீன்பிடித் துக்கொண்டிருந்த மீனவர் திடீர் மயக்கமடைந்து கடலில் விழுந்து  இறந்தார். பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(65), இவருடன் அதேப்பகுதியைச் சேர்ந்த குமார்(45). மயில் வாசகன்(42). இருவரும் படகில்  நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணராஜூ திடீர் மயக்கமடைந்து  படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார்.தண்ணீரில் மூழ்கி இறந்த கிருஷ்ணராஜ் உடலை கண்டு பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். பரங்கிப்பேட்டை போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Read more »

தீ விபத்தில் 20 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

               வேப்பூர் அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் ஐந்து வைக்கோல் போர் இருந்தது.  நேற்று முன்தினம் மதியம் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழமலை (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். சேதமதிப்பு 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior