உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 22, 2011

கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணி: ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி


 


சுரங்கப் பாதை திட்டத்துக்காக கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தும், ஆபத்தை உணராமல் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள்

கடலூர்:

             கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிக்காக நிரந்தமாக மூடப்பட்ட ரயில்வே கேட்டை, பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

               கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே கேட் நிரந்தமாக மூடப்பட்டு விட்டது. பில்லர்கள் அமைப்பதற்காக குழிகளும் தோண்டப்பட்டு உள்ளன.  ஆனால் அப்பகுதியில் உள்ள சிறிய சந்து வழியாக, 10 அடி ஆழப் பள்ளம் அருகே நூற்றுக் கணக்கான பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பலர் இவ்வழியைப் பயன்படுத்துகிறார்கள்.  எதிர்பாராமல் பள்ளத்தில் விழுவதற்கும், ஓடும் ரயிலில் அடிபடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை பொதுமக்கள் ஏனோ உணரவில்லை.  ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதால், அப்பகுதியை முழுவதுமாக மூட வேண்டும். 

                  ஆனால் அவ்வாறு செய்யாததால் பொதுமக்கள் தொடர்ந்து அந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.  சில வியாபாரிகளின் நெருக்குதல் காரணமாக, காய்கறி மூட்டைகளை எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக, ஒற்றையடிப் பாதை ஒன்றை ரயில் தண்டவாளங்கள் வழியாக அமைக்கும் முயற்சிக்கு, திருப்பாப்புலியூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை அனுமதி அளித்தனர்.  அவ்வாறு பாதை அமைப்பதால், அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை உணர்ந்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அப்பாதை செவ்வாய்க்கிழமை மூப்பட்டது.  ரயில் பயணிகள் இடையூறின்றி ரயில் நிலையத்துக்கு வந்துபோக வசதியாக, மேற்குப் பாதையை திறந்து விடுவதே சரியான தீர்வாக அமையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டியில் சந்தனக்கூடு உரூஸ் விழா




சந்தனக் கூடு விழாவில் பங்கேற்றோர்.
பண்ருட்டி:
 
        ண்ருட்டி வட்டம் கானஞ்சாவடி ஜிந்தாஷா வலியுல்லா தர்காவில் சந்தனக் கூடு உரூஸ் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.  மொஹரம் மாதம் 23, 24-ம் பிறையை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு பரம்பரை முத்தவல்லிகள் எஸ்.கே.பி.மீர்ஹமீது, எஸ்.கே.பி.அமீர்பாஷா தலைமை தாங்கினர்.  முக்கியஸ்தர்கள் காதர்மொய்தீன், சையத் ஆசிப், ரபிக், சையத் கரீம், உசேன் அப்துல் காதர் மற்றும் கானஞ்சாவடி, புறங்கனி, வரிசாங்குப்பம், கானாங்குப்பம், அழகப்பசமுத்திரம், காடாம்புலியூர், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பானுவஜமாக்கள், ரிபாய் தப்ஸ், ராதீபு நடைபெற்றது.  

Read more »

விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பிப்ரவரியில் தொடக்கம்

நெய்வேலி:

            விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என தங்க நாற்கரச் சாலைத் திட்ட அலுவலர் அதிபதி தெரிவித்தார். 

             விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. இச்சாலை அண்மையில் பெய்த மழையால் மிகுந்த சேதமுற்று, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.  குறிப்பாக சேத்தியாத்தோப்பில் இருந்து விக்கிரவாண்டி வரை செல்லும் சாலை படுமோசமாக உள்ளது. தஞ்சை, கும்பகோணம், நாகை, சிதம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி வரை தட்டுத்தடுமாறி வந்தாலும் பண்ருட்டிக்குப் பிறகு அரசூர் வழியாக விழுப்புரம் சென்று சென்னை செல்கின்றனர். பஸ்களும் அதே வழியில் தான் செல்கின்றன.  அந்த அளவிற்கு பண்ருட்டி-விக்கிரவாண்டி சாலை குண்டும் குழியமாக மாறி உள்ளது. பண்ருட்டி-விக்கிரவாண்டி இடையேயான 27 கி.மீ தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் 2 மணி நேரமாகிறது.  

இந்நிலையில் சாலைப் பணிகள் செப்பணிடுதல் குறித்து தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் தஞ்சைக் கோட்ட திட்ட இயக்குநர் அதிபதி கூறுகையில், 

                      அண்மையில் பெய்த மழையால் சேதமுற்ற சாலைகளை செப்பனிட ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் இப்போது துரித கதியில் நடைபெறுகிறது. ஒப்பந்தம் கோரும் பணி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான்குவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.  விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை மார்க்கத்தின் இடையே உள்ள பண்ருட்டி மற்றும் வடலூர் நகர்ப் பகுதிகளில் பைபாஸ் சாலை அமைக்கப்பட இருப்பதாவும் தெரிவித்தார். இதனால் வடலூர், பண்ருட்டி பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
















Read more »

திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 247 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/e9437099-e45b-4cd0-a824-526b0263cd09_S_secvpf.gif 

 
 
 
 
 
 
திட்டக்குடி:

         தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு படிக்கும் 247 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன. விழாவிற்குபள்ளி தலைமை ஆசிரியர் விசுவநாதன் தலைமைதாங்கினார்.

                பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.எஸ். ஆர்.தங்கராசு, பொருளாளர் ஞானசேகரன் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மருதைமணிஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் நீதிமன்னன் சைக்கிள்களை வழங்கி பேசியதாவது.

              கடந்ததடவை ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தபோது வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தியாவிலேயே முதல்தடவையாக மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். கிராமபுற மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை இருந்த போதுதான் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

               தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த நிலையை அடையவேண்டும் ஒழுக்க நிலை பேணி காக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். முதல் அமைச்சரின் இந்த நல்ல எணணத்தை நிறைவேற்றவேண்டியது மாணவர்களின் கடமை. இவ்வாறு நீதிமன்னன் பேசினார்.  விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் குமார், செந்தமிழ்செல்வன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மதியழகன், நகர அதிமுக துனைசெயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் முத்துகிருஷ்ணன், முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு வெண்கலப் பானைகள் மற்றும் கைத்தறி கண்காட்சி



http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/c3a20551-c4e7-43cc-b4a6-ed9bf2357d17_S_secvpf.gif

             கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு கைதிறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் 'தலைப் பொங்கல் , இந்திய சேலைகள் திருவிழா' என்ற பெயரில் வெண்கலப் பானைகள் மற்றும் கைத்தறி சேலைகள் கண்காட்சியை சென்னையில் நடத்துகிறது.

          சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சி அரங்கை தமிழக ஊரக, தொழில்துறை மற்றும் சத்துணவு அமைச்சரான எம்.சி.சம்பத் இன்று துவக்கி வைத்தார். வரும் பொங்கல் திருநாளில் புதுமணத் தம்பதிகள் புதுச் சேலையணிந்து புதிய வெண்கலப்பானையில் தலைப் பொங்கல் கொண்டாடுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

           இதன் சிறப்பம்சமாக பலவித அளவுகளில் வெண்கலப் பொங்கல் பானைகள் மற்றும் வெண்கலக் கரண்டிகள் போன்றவையும், மத்திய பிரதேசத்தின் சந்தேரி புடவைகள், மேற்கு வங்கத்தின் காந்தா புடவைகள்ர ஆந்திராவின் மங்களகிரி, கலம்காரி புடவகள், தமிழகத்தின் தாரமங்கல்ம், சேலம் பருத்திப் புடவைகள், மதுரை சுங்குடி புடவைகள் என அனைத்தும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கிய இக்கண்காட்சி வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறும்.   



Read more »

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை : விருத்தாசலத்தில் தேமுதிக பேச்சாளர் சேகர் தற்கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/812155ee-6d27-404b-9df5-015e2dde744c_S_secvpf.gif



விருத்தாசலம் :

            தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பஸ் நிலையப் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு வயது 30. தேமுதிக தலைமைக் கழக பேச்சாளரான இவர், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்துக்கொடுக்குமாறு நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.

        அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு, போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது, சேகர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

         உடநே அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷப்பாட்டிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எழுதிய உருக்கமான கடிதமும் கிடைத்தது.

             அதில் ஒரு கடிதத்தில், மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதிக்கொண்டது. முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொளகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாலசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தேமுதிகவுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால் தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior