உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 19, 2011

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 4 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம்

சிதம்பரம் : 

            சிதம்பரம் எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நான்கு டாஸ்மாக் கடைகள் இடமாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடந்து வருகிறது. 

               சிதம்பரம் லால்கான் தெரு, மேலவீதி பஸ் நிறுத்தம், காய்கறி மார்கெட், சிவபுரி என நான்கு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அக்கடைகளை இடமாற்றம் வேண்டும் எனவும் சிதம்பரம் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை வைத்தார். எம்.எல்.ஏ., வின் கோரிக்கையை ஏற்ற டாஸ்மாக் மேலாளர் காசி, அந்த நான்கு கடைகளையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் விரைவில் மாற்றப்படும் எனவும் பதில் அனுப்பியுள்ளார்.
















Read more »

கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் மணல் குவாரி பணி நிறுத்தம்








திட்டக்குடி:
 
           திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாய் வெள்ளாற்றில் பொதுப்பணித்துறை மூலம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மணல் குவாரி நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி பள்ளமாகியது. மேலும் இப்பகுதியில் 60 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் உள்ள அனைத்து பைப்புகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

             கீழ்ச்செருவாய் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மின் மோட்டாரும் பாழாகி குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இப்பணிகளை சீரமைத்தது. மேலும் அதிக அளவில் டிராக்டர்கள் வருவதால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

           மயான பாதையை குவாரிக்கு செல்லும் டிராக்டர்கள் பயன்படுத்தியதால் மயானபாதை முழுமையாக சேதமடைந்தது. இந்த சூழ்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி நிர்வாகம் மணல் குவாரியை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. இருப்பினும் பொதுப்பணித்துறையினர். 3-வது தடவையாக தொடர்ந்து குவாரியை நடத்துகிறோம் என அறிவித்து குவாரிபணிகள் தொடங்கின. ஆத்தூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மணல் எடுக்க செல்லும் மயான பாதையிலும் நெடுஞ்சாலையிலும் நீண்ட தூரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

            இதை பார்த்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் திரண்டுவந்து டிராக்டர்களை மணல் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என கோஷமிட்டு வழிமறித்து தடுத்து நிறுத்தினர். தகவலின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை அலுவலர் கலியமூர்த்தி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழுமிருந்த கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

            எந்த சூழ்நிலையிலும் மணல் குவாரியை அனுமதிக்கமாட்டோம். என்று பொதுமக்கள் விவாதித்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபொது உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் குவாரியை நிறுத்தி விடலாம் என தெரிவித்தனர்.  அதன்படி மணல் குவாரி பணி நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து குழுமிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior