உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 01, 2010

மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வுகள்துவக்கம்

               தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. 

                அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல் தேர்வை துவக்கலாமா அல்லது மார்ச் 2ம் தேதி துவக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் நேற்று இரவு தெரிவித்தன.தொடர்ந்து, மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. 

                 தற்காலிக தேர்வு அட்டவணைகள், ஓரிரு நாளில் மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டு, அதன்படி அட்டவணை இறுதி செய்யப்படும்.தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த விவரங்கள் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் பதிவு செய்யும் பணிகள் முடிந்துள்ளன. இந்தாண்டு, ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவார்கள் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

சிதம்பரம்: 

                  கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பது, அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை

                    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை வழியாகவும், மணவாய்க்கால் மூலமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக சென்று கடலை சென்றடைகிறது. இவையல்லாமல் மேட்டூரிலிருந்து காவிரியில் கூடுதலாக திறக்கப்படும் பல லட்சம் கனஅடி உபரிநீர் கீழணை வந்து அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது. 

                   மேலும் பொன்னேரியிலிருந்து வரும் உபரிநீர் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கோமுகி, மணிமுத்தாறு பகுதியிலிருந்து வரும் உபரிநீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலுக்கு செல்கிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்துவிட்டு கடலுக்கு செல்கிறது.

                     சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களின் தெற்கே கொள்ளிடம் ஆறும், வடக்கே வெள்ளாறும் செல்கின்றன. இதற்கு இடையில் உள்ள இந்த தாலுகாக்களில் உள்ள மக்களும், விவசாயிகளும் வெள்ளச் சேதத்தினால் ஆண்டுதோறும் அவதியுற்று வருகிறார்கள். அரசும் ஆண்டுதோறும் நிவாரணம் வழங்குவது, இழப்பீடு வழங்குவது போன்ற வழக்கமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

                       ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள் விலையேற்றம், போதுமான விலை கிடைக்காதது மற்றும் மழை, வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருவதால் பலர் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் நலிவுறும் நிலை உருவாகியுள்ளது.

தடுப்பணைகள் தேவை

                 ஆண்டுதோறும் 2 டிஎம்சி தண்ணீர் சிதம்பரம் அருகே கொள்ளிடம், வெள்ளாற்றின் வழியாக கலந்து வீணாகிறது. எனவே இரு ஆறுகளிலும் பல இடங்களில் தடுப்பணைகளை அமைத்து கடலில் வீணாக கலக்கின்ற நீரை சேமிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீராணம் ஏரியில் அதிகளவு நீரைத் தேக்கி வைக்கக்கூடாது. சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கும் நோக்கில் கூடுதலாக நீரைத் தேக்கி வைக்கின்றனர். அப்போது கூடுதலாக ஏரிக்கு உபரிநீர் வரும் போது திடீரென அதிகளவு நீர் திறந்துவிடப்படுவதால் வெள்ளியங்கால் ஓடை மற்றும் பழைய கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிப்படைகின்றன.

                எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன்.

Read more »

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.யில் தொழிலாளர் நல படிப்பு தொடக்கம்

                   தொழிலாளர் நலம் குறித்த 3 மாத கால சான்றிதழ் படிப்பு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) தொடங்கப்பட்டது.

 படிப்பைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு தலைமை தொழிற்சாலைகள் கண்காணிப்பாளர் அய்யனு பேசியது:- 

                    சட்டப்படி பணி அமர்த்தப்பட வேண்டிய, பயிற்சி பெற்ற தொழிலாளர் நல டாக்டர்கள் கிடைக்காததால், தொழிலதிபர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். நாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் நல டாக்டர்கள் தேவை உள்ளது. ஆனால் இப்போது 1,314 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 

                   தொழிலாளர் நலனை உணர்ந்துள்ள தொழிலதிபர்கள் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நல டாக்டர்களை அமர்த்த விரும்புகிறார்கள் என்றார். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் பணி செய்த டாக்டர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். மத்திய தொழிலாளர் நல நிறுவனம் படிப்புக்கான சான்றிதழை வழங்கும். மத்திய தொழிலாளர் நல நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஜி.எம்.இ.கே.ராஜ், இயக்குநர் டாக்டர் ஆர்.பி.ராய்தாஸ், சென்னை வட்டார தொழிலாளர் நல நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.இளங்கோவன், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ். ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர்:

                  கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கோரிக்கை விடுத்தார்.

                  அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் சிலர், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனைச் சந்தித்தனர். கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

                   பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பிற்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன், அய்யப்பன் எம்.எல்.ஏ. நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் த.குமார் ஆகியோரும் சென்று இருந்தனர்.கடலூர் முதுநகர், பள்ளத்தெரு, பீமாராவ் நகர், பெரியார் நகர், சுத்துக்குளம்,  திருப்பாப்புலியூர் தானம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சென்று பார்வையிட்டார். 

                நகரில் தாழ்வான பகுதிகளில் இன்னமும் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. சாக்கடை நீருடன் கலந்து உள்ள இந்த நீரால் நகரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்தவும், தேங்கி நிற்கும் மழை நீரை, மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றவும், நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

                 பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னமும் போடப் படாததால், அப்பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலைகள் மேலும் பழுதுபட்டும் இருப்பதால், மக்கள் நகருக்குள் சென்று வருவது பெரிதும் சிரமமாக உள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்டத்தில் 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

                  மாவட்டத்தில் 17,420 கிலோ அரிசி வழங்கி, மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Read more »

கொள்ளிடக்கரை கிராமங்களில் வடியாத வெள்ளம் : நான்கு நாட்களாக படகை நம்பியே கிராம மக்கள்



சிதம்பரம் : 

              கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட, வெள்ளப் பெருக்கால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக படகுகளில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.

               காவிரி ஆற்றின் கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் பருவமழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக, அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் போதும், வீராணம் நிரம்பும் போதும் முறையான வடிகால் வசதியில்லாமல் முழுமையாக பாதிக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் முகத்து வார பகுதிகள் தூர்ந்து மண்மேடிட்டு தண்ணீர் வடியாததால் கொள்ளிடம், வெள்ளாறு கரையோர கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிற நிலை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்கிறது.

                 தற்போது பருவமழை துவங்கி, ஒரு வார காலம் கடுமையாக பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி, கொள்ளிடம் ஆற்றில் 40 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதாலும், வீராணத்தில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக, பத்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கொள்ளிடக்கரை கிராமங்களான குமராட்சி, எடையார், திருநாரையூர் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

                   திருநாரையூர், பூலாமேடு, நந்திமங்கலம், வல்லம்படுகை திட்டு ஆகிய கிராமங்களுக்கு படகுகள் விடப்பட்டுள்ளது. அதன் மூலம் நகர் பகுதிக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தண்ணீர் சூழ்ந்து நான்கு நாட்களாகியும் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அல்பவருவ தேர்வுக்கு விண்ணப்பம்

மதுரை : 

                  மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி இயக்க மாணவர்களுக்கு திறந்தவெளி தொடக்கநிலை, அடிப்படை நிலை சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டய படிப்புகளுக்கு தேர்வுகள் 2011, பிப்.6, 7ல் நடக்க உள்ளது. இந்த அல்பவருவ தேர்வுக்குரிய விண்ணப்பங்களை நவ. 26 முதல் பெறலாம். டிச. 20 க்குள் அபராதமின்றியும், டிச. 27 வரை 100 ரூபாய் அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம். 

                  தொலை நிலை கல்வி இயக்ககத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரிலோ, இணையதளம் (www.mkudde.org) மூலமோ பெறலாம். தபால் மூலம் பெற விரும்புவோர் 15 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமுகவரியிட்ட உறையை இணைத்து அனுப்ப வேண்டும்,என கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர் : 

               உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                கடலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி, மங்களூர் மற்றும் திட்டக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மடக்கு வசதி சக்கர நாற்காலிகள், நடை உபகரணங்கள் (ஊன்று கோல்), பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தால் ஆன ஊன்றுகோல், விபத்து அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால், மடக்கு ஊன்றுகோல், ஆண், பெண் இருபாலருக்கும் பிரெய்லி கை கடிகாரம், பேசும் மின்னணு கடிகாரம், காதுகேளாதோருக்கு காதொலிக்கருவிகள் மற்றும் எல்க்ட்ரிக் ரீசார்ச் பேட்டரிகள் வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் 

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்,
எண். 37, ராமதாஸ் தெரு,
புதுப்பாளையம்,
கடலூர்

                  என்ற முகவரியில் வழங்கப்படுகிறது.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் மாற்றுத் திறனாளியின் தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலை 1ம் தேதிக்குள் இணைத்து ஒப்படைக்க வேண்டும். மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி போன்ற உபகரணங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எனவே, மாற்றுத் திறனாளிகள் இடைத் தரகரிடம் அணுகாமல் உரிய அலுவலகத்தை அணுக வேண்டும். அடையாள அட்டை இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு நவீன முறையில் கருத்தடை சிகிச்சை முகாம்

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான தழும்பில்லாமல் கருத்தடை செய்யும் முகாம் நடந்தது. 

                கடலூர் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன முறை கருத்தடை கிகிச்சை முகாம் மாவட்டம் முழுவதும் 8 வட்டாரங்களில் நடந்தது.  இதனைத் தொடர்ந்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் முகாம் அமைத்து ஆண்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

                      இதன் ஒரு பகுதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சையின்றி ஆண்கள் கருத்தடை செய்து கொள்ளும் முறை, உடன் வீட்டுக்குச் செல்லும் வகையில் நவீன முறையில் செய்வது குறித்து விளக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 28 பேர் இந்த முறையில் அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது என குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Read more »

சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாறு பாலத்தில் விளக்கு வசதி: முதல்வருக்கு மனு

கிள்ளை : 

            சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாற்றுப் பாலத்தில் மின்  விளக்கு அமைக்கக் கோரி முதல்வருக்கு  பொது நல அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து பொது நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:  

                  சிதம்பரம் அருகே சி.முட்லூர் - பி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் விளக்கு வசதி அமைக்கவில்லை. இதனால் பாலத்தில் சிலர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். சைக்கிள், பைக் மற்றும் கார் டயரில் குத்தி பஞ்சராவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அதிகளவில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் விபத்தை தடுக்க புதிய பாலத்தில் மின் விளக்கு வசதி அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Rs. 5 crore sanctioned for widening the road at Vadalur

CUDDALORE: 

              The State has sanctioned a sum of Rs.5 crore for widening the road for a distance of six km at Vadalur, according to Collector P.Seetharaman.

Read more »

Collector Inspected rain-affected areas in Cuddalore town

CUDDALORE: 

            Collector P. Seetharaman, accompanied by MLA G.Aiyappan, and Municipal Commissioner T. Thangarasu and officials, visited rain-affected areas in Cuddalore town on Tuesday. They walked through water-logged Pallatheru, Chavadi Street, Dhanam Nagar and Bheemarao Nagar to assess the damage and listen to the grievances of residents.

Read more »

“Declare Cuddalore disaster-prone”

CUDDALORE: 

              District secretary of Communist Party of India (Marxist) T. Arumugham has called upon the State government to declare Cuddalore a disaster-prone district because of recurring floods. In a statement here, Mr. Arumugham said standing crops on about 70,000 acres were submerged and 40 interior villages and 20 coastal villages had been affected in the recent rain.

           The CPI (M) appealed to the government to provide a cash relief of Rs. 5,000 to each affected families and appropriate compensation to those who died in rain-related incidents. For more than a week fishermen, handloom weavers and daily wage earners could not earn their livelihood. Therefore, it was only appropriate for the government to extended monetary support to them. He also said that all 197 lakes should be de-silted and irrigation canals deepened and strengthened.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior