உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை




கடலூர் அருகே மருதாடு கிராமத்தில் கரும்புப் பயிருக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்யப்பட்டு இருப்பதை பார்வையிடுகிறார் வேளாண் துணை இயக்குநர் சந்திரமோகன்
 
கடலூர்:
 
             கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. 
 
              பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் 100 டன் வரை கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.தண்ணீர் தேவையும் உரத் தேவையும் குறைகிறது. உரம் தண்ணீரில் கரைத்து அளிக்கப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கரும்புப் பயிரில் சொட்டு நீர்ப்பாசனம் பிரபலம் ஆகி வருகிறது. கரும்புக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ள அரசு 65 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. 
 
             டான்ஹோடா என்ற அமைப்பின் மூலமாகவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாகவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது. மானியத் தொகையில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு கரைசல் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள தொகை சொட்டுநீர்ப் பாசனத்துக்கான கருவிகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த மானியம் தனிநபர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் 20 அல்லது 25 பேரை ஒருங்கிணைத்து குழு ஒன்று பதிவு செய்யப்படுகிறது. இக்குழு மூலம் அதில் உறுப்பினர்களாக உள்ள கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 
 
            கடலூர் வட்டாரத்தில் கரும்பு துல்லியப் பண்ணை திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மறுதாடு கிராமத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ள கரும்பு வயல்களை வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வீ.சந்திரமோகன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திருப்தி தெரிவித்ததாக கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரன் தெரிவித்தார். துல்லியப் பண்ணை விவசாய திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது.  நீரில் கரையும் உரங்களை இடுவதால் நிறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்ததாக இளவரசன் குறிப்பிட்டார்.
 
 
 

Read more »

வாழையில் பின்செய் நேர்த்தி முறைகள்

குலை தள்ளிய வாழைமரம்.
                வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தைப் பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். வாழை நட்டப் பிறகு சில பராமரிப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மகசூல் அதிகம் பெற முடியும்.எல்லா பயிர்களையும் போலவே வாழையிலும் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் இருக்கிறது. 
அதைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் எடுப்பது எப்படி என்பதை விளக்குகிறார் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார்: அவர் கூறியது: 
              வாழையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மண்வெட்டியால் கொத்தி மண் அணைக்க வேண்டும்.பக்கக் கன்றுகளை மாதம் ஒரு முறை நீக்க வேண்டும். இலைக்காகச் சாகுபடி செய்யப்படும் பூவன், கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் ரகங்களில் முதல் மூன்று அல்லது நான்கு பக்கக் கன்றுகளை வளர விடலாம்.பக்கக் கன்றுகளைக் கத்தி கொண்டு வெட்டி அழிக்கலாம். மீண்டும் மீண்டும் துளிர்த்தால் பக்கக் கன்றுகளின் நடுக்குருத்தில் ஒரு கன்றுக்கு இரு சொட்டுகள் மண்ணெண்ணையைக் கவனமாக இங்க் ஃபில்லர் கொண்டு விட்டும் அழிக்கலாம். அதிக சொட்டுகள் மண்ணெண்ணைய் விட்டால் தாய்க்கன்றுகள் இறந்து விடும். கடைசி பூ அல்லது சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை ஒடித்து விடவேண்டும். 

               பிறகு, 10 கிராம் யூரியா தொட்டுக் கொண்டிருக்கும்படி ஒடித்த இடத்தில் உள்ள காம்பு பகுதியில் ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி விட வேண்டும். இதனால் சத்துக்கள் அனைத்தும் காய்களுக்கு செல்வதால் வாழைக்காய்கள் சீக்கிரம் முதிர்ச்சியடைகிறது.வாழைக்காய்களின் பருமனை அதிகரிக்க ஒரு கிராம் 2, 4 டி மருந்தை 20 மிலி எரிசாராயத்தில் கரைத்து பின் அத்துடன் 40 லிட்டர் தண்ணீர் கலந்து 200 தார்களில் பூவின் கடைசி மடல் விரிந்ததும் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். வாழையில் விதைப் பிடிப்பின்மை, நீண்ட சதைப் பற்றுள்ள காய் மற்றும் அதிக காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க, பயிர் வளர்ச்சி ஊக்கி சைட்டோசைம் 180 மி.லியை 180 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் ஏக்கர் வாழை மரங்களில் நடவு செய்த 90 மற்றும் 120 வது நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் தெளிக்க வேண்டும்.

               வடிகால் வசதியில்லாத நீர்ப் பிடிப்பு தன்மை அதிகமாக உள்ள வாழை வயலில் ஒரு வாழை மரத்துக்கு யூரியா அல்லது அமோனியம் சல்பேட் 25 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் மூலம் மரங்கள் மீது நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.வறட்சியான சமயங்களில், ஒரு வாழை மரத்திற்கு டை பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விசைத்தெளிப்பான் கொண்டு இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். வாழைத் தார் நன்கு பெருக்க, பொட்டாசியம் சல்பேட் 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தார் மீது நன்கு படும்படி தெளித்தல் அவசியம். 

               வாழைத்தார் நன்கு பெருக்க, ஒரு மரத்துக்கு யூரியா 350 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 250 கிராம் வேர்ப்பகுதியில் மண்ணில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.காய்களின் முதிர்ச்சிக்கு மிக முக்கியமான கண்ணாடி மற்றும் முதல் மூன்று இலைகளைக் கொண்டு தாரை மூடுவதை தவிர்ப்பது எடை அதிகமான தார்களை உண்டாக்கும். இதற்குப் பதிலாக, வாழைக்காய்கள் வெப்பத்தினால் வெடிக்காமல் இருக்க வாழைத்தாரை காய்ந்த இலைகள் கொண்டோ அல்லது பாலித்தீன் பைகள் கொண்டோ மூட வேண்டும். 

             வாழை குலை தள்ளும் சமயம், மறுதாம்பு பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கிவிடவேண்டும். காற்றடிக்கும் நேரங்களில், மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க திடமான கம்பு கொண்டு எதிர்புறமாக முட்டுக் கொடுக்க வேண்டும்.காய்ந்த இலை மற்றும் நோய் தாக்கிய இலைகளை அவ்வப்போது அகற்றி எரிப்பதால் வயலை நோய், பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். காய்களின் நுனியில் ஒட்டியிருக்கும் பூவின் எஞ்சிய பாகத்தை நீக்குவதால் நோய் பரவுதலை தடுக்க முடியும். குலை வெட்டிய பின்பு, இலையில் வெட்டுப்பாகத்தில் வாசலின் அல்லது களிமண் கொண்டு பூச வேண்டும். 

             குலை வெட்டிய தாய் வாழைகளை கிழங்குகளுடன் அகற்றி இயற்கை உரமாக தயாரிக்கலாம்.குலை வெட்டிய தாய் வாழை மரங்களின் பட்டைகளிலிருந்து வாழை நார் எடுத்து வணிகச் சந்தைக்கு அனுப்பலாம்.நன்செய் நில வாழையில் ஒவ்வொரு வரிசை விட்டு கால்வாய்கள் எடுக்க வேண்டும். மேலும், ஐந்து வரிசைகளுக்கிடையில் குறுக்கு கால்வாய்கள் எடுக்க வேண்டும். நல்ல மகசூல் பெறுவதற்கு, ஒரு வாழை மரத்தில் 10 முதல் 12 பச்சை இலைகள் இருக்க வேண்டும். கூடுதல் வருமானம் கிடைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் வாழையில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, தட்டைப்பயிர், மொச்சை, சோயா மொச்சை, மிளகாய், கிழங்கு வகைகள், பூ வகைகள், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.கொடிவகை காய்கறிகளான பூசணி, தர்பூசணி, பரங்கி, வெள்ளரி, பாகல், சுரை மற்றும் புடலை போன்றவற்றை வாழையில் ஊடுபயிர்களாகப் பயிரிடக்கூடாது.

                ஏனெனில், இக்கொடி வகைக் காய்கறிகளில் ஏற்படும் ஒரு வகை வைரஸ் நச்சுயிரி நோய், வாழைக்கு பரவும் அபாயம் உள்ளது.வாழையைத் தாக்கும் ஆப்பிரிக்க நத்தை பூச்சி பப்பாளி, தக்காளி, பலா, சம்பங்கி, சாமந்தி, ரப்பர், பாக்கு, காப்பி, தேயிலை, நெல், காய்கறி மற்றும் கோகோ பயிர்களைத் தாக்குவதால் இந்தப் பயிர்களை எக்காரணம் கொண்டும் வாழையில் ஊடுபயிராகப் பயிரிடக்கூடாது.



Read more »

கடலூர் மாவட்டத்தில் கடுமையாகும் மின் வெட்டு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மின் வெட்டு கடந்த ஒரு வாரமாக கடுமையாகி வருகிறது. 
 
               கத்திரி வெயில் கடுமையாக உள்ள நிலையில் மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் 3 மணி நேர மின் வெட்டு, 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது கூடுதலாக ஒருமணி நேரம் மின் துண்டிப்பு, அறிவித்தும் அறிவிக்காமலும் இருந்துவந்தது. நகர்ப் புறங்களைவிட கிராமப் புறங்களில் கூடுதல் நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மின் வெட்டு மிகக் கடுமையாக இருக்கிறது. நிரந்தர மின் வெட்டு 3 மணி நேரம் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் பகலில் 3 அல்லது 4 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

               ஒவ்வொரு முறையும், 20 நிமிடம் என்று இருந்த மின் துண்டிப்பு, கடந்த 3 நாள்களாக ஒரு மணி நேரமாக அதிகரித்து விட்டது. கத்திரி வெயிலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான மின்வெட்டு பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரம், இரவு 8 மணி நேரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் பகலிலும், இரவிலும் தலா 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும், அந்த நேரத்திலும் பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்ட விவசாயம் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகளையே நம்பி இருக்கிறது. தற்போது புதிதாக நடப்பட்ட கரும்புப் பயிர் 10 ஆயிரம் ஏக்கரிலும், நெற்பயிர் 15 ஆயிரம் ஏக்கரிலும் உள்ளன.  மின் பற்றாக் குறையால் இப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது பெரிதும் சிரமமாக இருப்பதாகவும், கத்திரி வெயிலும் சேர்ந்து கொள்வதால், பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். மின் பற்றாக்குறை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

மின்வெட்டு குறித்து வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

              விவசாயத்துக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் 6 மணி நேரம்கூடக் கிடைக்கவில்லை. கோடை வெயிலில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டும் வெகு ஆழத்தில் சென்றுவிட்ட நிலையில், மின்வெட்டு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன. மின்சாரம் எப்போது வரும் எப்போது துண்டிக்கப்படும் என்று தெரிவதில்லை என்றார். 

மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

             விருத்தாசலம்,. திட்டக்குடி தாலுகாக்களில், காலை 6 முதல் 9 மணி வரை விவசாயத்துக்கு மும்முனை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் காலை 7 மணிக்குள் 4 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. பல மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. விவசாயிகள் உதவியுடன் அண்மையில் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதுபார்க்கப்பட்டு, திறன் அதிகரிக்கப்பட்டது என்றார்.

மின் வெட்டு குறித்து கடலூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

            மின் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. காற்றாலை மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் மின் துண்டிப்பு மிக மோசமாக இருக்கிறது. தினமும் 3 மணி நேரம் நிரந்த மின்வெட்டு அமலில் இருக்கிறது. மேற்கொண்டு குறைந்தது 3 முறை, தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை மின் வாரிய உயர் அதிகாரிகள் யாரும் தெரிவிப்பது இல்லை. கடலூர் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகளும் சரியில்லை. 150 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றை மாற்றுவதற்கு, புதிய டிரான்ஸ்ஃபார்மர்களை வாரியம் வழங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றார். 


Read more »

அமோக விற்பனையில் பண்ருட்டி பலாப்பழங்கள்


காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள பண்ருட்டி பலாப்பழங்கள்.
 
               காஞ்சிபுரத்தில் பண்ருட்டி பலாப்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ராஜாஜி மார்கெட் பகுதியில் மட்டும் மாதத்துக்கு ரூ.4 லட்சம் அளவில் பலாப்பழங்கள் விற்பனை நடைபெறுகிறது.
 
                காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதையடுத்து தற்போது விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்துள்ளது. பெரும்பாலான பழங்கள் பண்ருட்டி அருகே உள்ள கீழகுப்பம் பகுதியில் இருந்தே விற்பனைக்கு வந்துள்ளன. இங்கு ஒரு பலாப்பழம் ரூ.60 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. கீழகுப்பம் மற்றும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பலாப்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் மாதத்துக்கு 40 டன்கள் வரை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
              ராஜாஜி மார்க்கெட்டில் இருந்து காஞ்சிபுரம் நகரப் பகுதி மட்டுமின்றி பெருநகர், சிறுகாவேரிப்பாக்கம், வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பலாப்பழங்கள் கால் கிலோ ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மொத்தமாக பலாப்பழம் விற்கும் வியாபாரிகள் மட்டுமின்றி சிறு வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கிறது.
 
இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை குறித்து ராஜாஜி மார்க்கெட் பகுதியில் பலாப் பழம் விற்பனையில் ஈடுபட்டுள்ள கீழ்குப்பம் வெற்றிவேல் மற்றும் பூவராகவன் ஆகியோர் கூறுகையில், 
 
           "இப்பகுதிக்கு 40 டன் பலாப்பழம் வருகிறது. ஒரு டன் பலாப்பழத்தை ரூ.8000 அளவுக்குதான் விற்பனை செய்ய முடியும். கீழகுப்பம் பகுதியில் பலாப்பழங்களை நாங்கள் சிறிய பழம் ரூ.40-க்கும், பெரிய பழம் ரூ.70-க்கும் வாங்கி வருகிறோம். அப் பழங்களை இங்கு கொண்டு வந்து ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறோம். எங்கள் லாபத்தில் பெரும் பகுதி லாரி வாடகைக்கே சென்றுவிடும். ஆனாலும் தற்போது பலாப்பழம் வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கணிசமான விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 
 
 

Read more »

மீன்பிடி தடைக்காலம் மே 29-ல் முடிகிறது: மீனவர்கள் தயார்

கடலூர்:

            மீன் பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்கத் தயார் நிலையில் உள்ளனர். 

            மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ம் தேதி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இழுவை வலைகளைப் பயன்படுத்தும், பெரிய விசைப் படகுகள் மீன் பிடிப்பதால், கடலில் காணப்படும் சிறிய மீன்கள்கூட பிடிபட்டு விடும். இதனால், மீன் வளத்தைப் பெருக்க இத்தடை விதிக்கப்படுகிறது. தடைக் காலத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றன. மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும், இவ்வாண்டு உயர்த்தப்பட்டு இருப்பதால், மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

            மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பழுதுபார்த்தனர். இன்னும் 3 மாதங்களில் வடகிழக்குப் பருவமழை காலம் வர இருப்பதால், அதற்கு ஏற்ற வகையிலும் படகுகளை பழுது பார்த்துள்ளனர். மீன்பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைவதால், மீன்கள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்ட வலைகள் அனைத்தும், படகுகளுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன. பழுதுபார்க்க பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்ட படகுகளும் மீன் இறங்கு தளங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.



Read more »

பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

பண்ருட்டி:

             பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.

             இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது. புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்ட எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 

             பெளத்தர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டுவது, மனித இனத்தை சீரழைக்கும் போதை பொருள்கள் மற்றும் மதுவை ஒழித்து தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவில் உலக பெüத்த சங்க செயலர் எச்.எல்.விருத்தி (லண்டன்), முன்னாள் சிறுபான்மை குழு உறுப்பினர் பிக்கு அசுவகோஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, முன்னாள் பதிவுத் துறை அதிகாரி டி.கே.ராஜா, பிரசார செயலர் எம்.அரங்கநாதன், தலைவர் செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலர் எஸ்.வி.புத்தப்பிரியன் நன்றி கூறினார்.



Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு

           தமிழகத்தில் பத்து லட்சம் பேர் எழுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
       
               தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில் 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது. வி.ஏ.ஓ. தேர்வை தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 

              வழக்கமாக வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள், தேர்வு நடந்த நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையே உரிய காலத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவையும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு, இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

             இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாள்களின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. 

தேர்வு முடிவுகள் எப்போது? 

             இந்தச் சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15-க்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read more »

கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரைவில் ஆலோசனை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்:

               கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, அலுவலர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அமைச்சர் சம்பத் கூறியது: 

           டலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த, வாக்காளர்களுக்கு நன்றி.  மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, விரைவில் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை விரைவில் சென்றடையும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பிரதான திட்டங்களை விரைந்து முடிக்க, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் விரைவில் பேசுவேன் என்றார் அமைச்சர்.



Read more »

வடலூர் சத்திய தருமசாலை 145ம் ஆண்டு தொடக்க விழா

குறிஞ்சிப்பாடி : 

            வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை 145 ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

             வடலூரில் வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை தொடங்கி, பசி என வருவோருக்கு அன்னதானம் வழங்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் தொடங்கி வைத்த அடுப்பு அணையாமல் பல ஆண்டுகளாக அன்னதானம் வழங்ப்பட்டு வருகிறது. வள்ளலார் தொடங்கி சத்திய தருமசாலை 145ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. 

           விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் தருமசாலை மேடையில் மகாமந்திரம், அகண்ட பாராயணம் ஒதுதல், ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்தது. நேற்று முன்தினம் மழையூர் சதாசிவம் திருஅருட்பா இசை நிகழ்ச்சியும், இளைஞர் மன்றம் சார்பில் மனுநீதி நாடகம் நடந்தது. ஆண்டு விழாவான நேற்று காலை 5 மணிக்கு அகவற் பாராயணம் ஒதுதல், 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பாண்டுரங்கன், கருங்குழி கிஷோர்குமார் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், பார்வதிபுரம் கிராம வாசிகளின் சன்மார்க்க சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் செய்திருந்தனர்.



Read more »

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு

சிதம்பரம் : 

             சிதம்பரம் வீனஸ் பள்ளி சாரண மாணவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை சாரண மாநில தலைமையகத்தில் ஐந்து நாட்கள் நடந்த தேர்வுகளில் இயக்க வரலாறு, நிலப்படம், கயிற்றுக்கலை, கூடாரம் அமைத்தல், மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் முனீஷ்வரன், ராகுல், கேசவன், பார்த்திபன் ஆகிய நான்கு மாணவர்கள் வெற்றி பெற்று ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குமார், தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தரம் பாராட்டினர்.




Read more »

தமிழ்நாட்டில் மாதம் 20 கிலோ இலவச அரிசி : ஜூன் 1 முதல் எல்லா நாட்களிலும் பெறலாம்

           
 
             தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 

               வருகிற 1-ந்தேதி முதல் இந்த திட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வருகிறது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.   கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது:-

            முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற உடனே அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என ஆணையிட்டார். இலவச அரிசி அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூன் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும், எடை குறைவின்றி வழங்கிட அலுவலர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

               தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து நியாய விலைக்கடைகளும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுகின்றனவா? என அலுவலர்கள் காலையிலேயே நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையின் பெயர் பலகையில் இருப்பு விவரப்பட்டியலை நாள்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்கின்றனரா? என கண் காணிக்க வேண்டும்.

             நியாய விலைக்கடை பணியாளர்களும் தவறுகளுக்கு இடமளிக்காமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் அமுதவல்லி, அசோகன், பன்னீர்செல்வன், தமிழரசன், ராஜேந்திரன், சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இதே போல் உணவுத்துறை அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி  கூறியது:-


               நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருட்கள் முன் நகர்வுக்கு ஏற்ற வகையில், போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, அத்தியா வசியப் பொருட்களின் இருப்பு தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். இருப்பு இல்லா நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய உணவுக் கழகத் திடமிருந்து அரிசி மற்றும் கோதுமை நகர்பு செய்யும் போது அதன் தரத்தை உறுதி செய்த பின்பே நகர்வு செய்ய வேண்டும். தரம் அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

          இந்திய உணவுக் கழகத் திலிருந்து நகர்வு செய்யப்படும்போது அது முழுமையாக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு வந்து சேர்வது கண்காணிக்கப்பட வேண்டும். கிடங்குகளில் சமச்சீர் செய்யும்போது எடைக் குறைவு ஏற்படக்கூடாது. மறுநாள் தேவையை எதிர் நோக்கி போதுமான மூட்டைகள் சமச்சீர் செய்து இருப்பு வைத்த பின்பே கிடங்கை மூட வேண்டும்.   நியாய விலைக்கடைகளில் தரமற்ற பொருட்கள் வரப்பெற்றால் உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து அதனை மாற்ற வேண்டும். அங்காடிகளில் இருப்பு வைத்திருந்தபோது தரக்குறைவு ஏற்பட்டிருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடக் கூடாது.

                 நியாய விலைக்கடை களின் எடைக்குறைவு ஏது மின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் அனைத்து நாட்களி லும் அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும். இது பகுதி அலுவலர்களால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும். சரியான நேரத்தில் அங்காடி களைத் திறந்து பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

            காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதா ர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழங்குதல் கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து 1-ந் தேதி முதல் செயல்படுத்துதல் வேண்டும். அதற்குத் தேவையான அரிசியை கிடங்குகளிலிருந்து அங்காடிக்கு முன் நுகர்வு செய்து வைத்தல் வேண்டும். வெளி ஆட்கள் அங்காடிகளில் இருப்பதை தடுத்திட ஏதுவாக பெயர் வில்லைகளை அணிந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                 கூட்டத்தில் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெயக்கொடி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வீரசண்முகமணி, உணவுத் துறை உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், இணைப்பதிவாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 
 
 

Read more »

Logistics in place for supply of free rice in Cuddalore


CUDDALORE: 

            All the preliminary works have been undertaken to supply free rice through the fair price shops to all the eligible ration cardholders in Cuddalore district from June 1, according to P.Seetharaman, District Collector.

          He has directed the officials in charge of the public distribution system to chart out their delivery schedule in such a way that rice stocks would reach the fair price shops before May 31 so the cardholders could lift their entitlements from June 1. After holding a consultative meeting with the officials concerned, the Collector told presspersons that in Cuddalore district there were 6,38,525 ration cards and based on the number of members in the families the quantity of free rice to be supplied would range from 12 kg to 20 kg per family.

          However, for the beneficiaries of the Antyodaya scheme 35 kg of free rice would be supplied. The Collector further said that he had appointed zonal officers for overseeing the free rice supply in the respective region.

They are as follows: 

Cuddalore – P.Murugesan, Revenue Divisional Officer; 
hidambaram – M.Indumathi, RDO; 
Kattunammankoil – C.V.Kesavamurthy, 
Assistant Commissioner (Excise); 
Kurinjipadi – T.R.Kandasamy, 
Neyveli Special Sub Collector (Land acquisition); 
Panruti – T.Thiruvengadam, District Adi Dravidar Welfare Officer; 
Vriddhachalam – K.Murugesan, RDO; and 
Thittakudi – R.Ganapathi, District Backward Classes Welfare Officer.




Read more »

Employment Online registration begins in Cuddalore for Plus Two Students

Cuddalore:

         Chief Educational Officer C.Amudhavalli inaugurated the online registration procedure at St Anne's Matriculation Higher Secondary School and handed over the employment cards to a batch of students.

Read more »

Bio-Medical Engineering

            Biomedical engineering is the application of engineering principles and techniques to the medical field. It combines the design and problem solving expertise of engineering with the medical expertise of physicians to help improve patient health care and the quality of life of healthy individuals. 

As a relatively new discipline, much of the work in biomedical engineering consists of research and development, covering an array of fields: 

           bioinformatics, medical imaging, image processing, physiological signal processing, biomechanics, biomaterials and bioengineering, systems analysis, 3-D modeling, etc. Examples of concrete applications of biomedical engineering are the development and manufacture of biocompatible prostheses, medical devices, diagnostic devices and imaging equipment such as MRIs and EEGs, and pharmaceutical drugs. 

            Clinical engineering a branch of biomedical engineering for professionals responsible for the management of medical equipment in a hospital. The tasks of a clinical engineer are typically the acquisition and management of medical device inventory, supervising biomedical engineering technicians, ensuring that safety and regulatory issues are taken into consideration and serving as a technological consultant for any issues in a hospital where medical devices are concerned.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior