உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

நெய்வேலி ஊராட்​சி​யில் கிடப்​பில் கிடக்கும் பிர​தம மந்​திரி கிராம சாலை

ஜல்​லி​கள் குவித்து வைக்​கப்​பட்​டுள்ள மேல்​பாப்​ப​னப்​பட்டு சாலை.
நெய்வேலி:

                    நெய்வேலி ஊராட்​சி​யில் செயல்​ப​டுத்​தப்​பட்ட பிர​தம மந்​திரி கிராம சாலைத் திட்​டம் ஒப்​பந்த காலம் முடிந்த நிலை​யில் சாலைப் பணி​கள் முழுமைய​டை​யா​மல் கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளது.​ நெய்வேலி ஊராட்சி கம்மா​பு​ரம் ஒன்​றி​யத்​தில் உள்​ளது.​  நெய்வேலி ஊராட்​சி​யில் இருந்து மேல்பாப்ப​னப்​பட்டு கிரா​மம் வரை பிர​தம மந்​தி​ரி​யின் கிராம சாலைத் திட்​டத்​தின் கீழ் ரூ.51.71 லட்சம் செல​வில் 1.7 கி.மீ நீள​முள்ள கான்​கி​ரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்​டது.​ இ​தற்​கான ஒப்​பந்​தம் கோரப்​பட்​ட​தை​ய​டுத்து,​​ முத​னைக் கிரா​மத்​தைச் சேர்ந்த கன்ஸ்ட்​ரக்​ஸன்ஸ் நிறு​வ​னம் ஒன்று ஒப்​பந்​த​தா​ர​ராக நியமனம் செய்​யப்​பட்​டது.​ இச்​சாலை 27.05.09 முதல் 23.03.10 தேதிக்​குள் முடிக்​கப்​பட வேண்​டும் என​வும் காலக்​கெ​டு​வும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ஆனால் சாலை அமைக்​கும் பணி​கள் கடந்த நவம்​பர் மாதம் தொடங்​கப்​பட்டு தற்​போது கிடப்​பில் போடப்​பட்​டுள்​ள​தால் அச்​சா​லையை பொது​மக்​கள் பயன்​ப​டுத்த முடி​யாத நிலை உரு​வா​கி​யுள்​ளது.​ சாலை அமைப்​ப​தற்​கான கருங்​கல் ஜல்லி கொட்​டப்​பட்டு 5 மாதங்​க​ளா​கி​யும் இது​வரை ஜல்லி நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளது.​ மேலும் சாலை​யின் துவக்​கத்தி​லி​ருந்து 300 மீட்​டர் வரையே சாலைப் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ எஞ்​சிய சாலைப் பகு​தி​யில் ஒப்​பந்​தத்​தில் குறிப்​பிட்​டுள்ள படி கப்​பியோ,​​ ஜல்​லியோ இது​வரை போடப்​ப​ட​வில்லை.​ ஆனால் சாலை முடி​வ​டை​யும் பகு​தி​யில் 200 மீ நீளத்​துக்கு கப்​பி​கள் கொட்டப்பட்டுள்ளன.​ மே​லும் சாலை அமைப்​ப​தற்​கான ஒப்​பந்த காலம் முடி​வ​டைந்த பின்​ன​ரும் இது​வரை சாலைப் பணி​கள் நிறை​வ​டை​ய​வில்லை.​

இது குறித்து ஒப்​பந்த நிறு​வன உரி​மை​யா​ளர் கிருஷ்​ண​கு​மார் கூறுகையில்,​​ 

                  "நாளையே பணி​கள் தொடங்​கி​வி​டும்" என்​றார்.​ ஆனால் இது​வரை அதற்​கான அறி​கு​றி​கள் தென்​ப​ட​வில்லை.​

இ​து​கு​றித்து அப்​ப​குதி மக்​கள் கூறு​கை​யில்,​​ 

                  "கான்​கி​ரீட் சாலை அமைக்​கி​றேன் என்று கூறி​விட்டு,​​ ஒழுங்​காக இருந்த சாலையில் வெறும் கப்​பி​யை​யும் செம்​மண்​ணை​யும் கொட்டி,​​ புழுதி பறக்​கச் செய்திருக்கிறார்​கள்.​ இ​த​னால் வீடு முழு​வ​தும் செம்​மண் புழு​தி​தான் படர்ந்​துள்​ளது.​ துணி​யைக் கூட உலர வைக்க முடி​ய​வில்லை' என்​ற​னர்.​ கிடப்பில் உள்ள பிர​தம மந்​திரி கிராம சாலைத் திட்​டத்தை நிறை​வு​பெ​றச் செய்ய மாவட்ட ஆட்​சி​யர் உதவ வேண்​டும் என அப்​ப​குதி மக்​கள் எதிர்​பார்க்​கின்​ற​னர்.​


Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகம்


                  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது. 
 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:
 
                  எம்.ஏ. தத்துவம், அப்ளைடு சைக்காலஜி, வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், அப்ளைடு எகனாமிக்ஸ், ஆங்கிலம், அமெரிக்கன் ஸ்டடீஸ், தமிழ், சம்ஸ்கிருதம், மொழியியல், டிரான்ஸ்லேஷன் ஸ்டடீஸ், சோஷியாலஜி, டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், பாப்புலேஷன் ஸ்டடீஸ், ஹிந்தி டிரான்ஸ்லேஷன், காந்தியன் ஸ்டடீஸ்.எம்.காம், கோ ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ், மாஸ்டர் ஆஃப் பைனான்சியல் சர்வீசஸ். 
 
இளநிலைப் படிப்பு:  
 
       இசை; முதுநிலை படிப்பு: லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயன்ஸ், இசை. 
  
முதுநிலை டிப்ளமா: 
 
                சுற்றுலா, மனித உரிமைகள் மற்றும் அமைதி, ஆர்கைவ்ஸ் கீப்பிங், எகனாமெட்ரிக்ஸ், காந்தியச் சிந்தனை, ராமலிங்கர் தத்துவம், கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பேங்கிங் லா அண்ட் பிராக்டிஸ், இன்சூரன்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், அப்ளைடு லிங்கியுஸ்டிக்ஸ், பாப்புலேஷன் எஜுகேஷன். 
 
சான்றிதழ் படிப்பு: 
 
                  அட்வான்ஸ்ட் டிப்ளமா -பிரெஞ்ச், மொழியியல், இதழியல், நாட்டுப்புறவியல், ரெப்ரோகிராபி அண்ட் நான்புக் மெட்டீரியல்ஸ், ஆங்கிலம் (கம்யூனிகேஷன்), இசை (வாய்ப்பாட்டு).டிப்ளமா: பிரெஞ்ச், மொழியியல், மொழிகள், இதழியல், நாட்டுப்புறவியல். 
 
எம்பிஏ, எம்எஸ்சி: 
 
                        கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்துடன்), இயற்பியல், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், மரைன் பயலாஜி அண்ட் ஓசனோகிராபி, கோஸ்டல் ஆக்வாகல்ச்சர், தாவரவியல், விலங்கியல், அப்ளைடு ஜியாலஜி. பிஎட், எம்.எட்., பிபிஎட், பிபிஇஎஸ், எம்பிஇஎஸ்.பி.இ.: சிவில், சிவில் அண்ட் ஸ்டரக்ச்சுரல், மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் மேனுபாக்ச்சரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ் அண்ட் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல்.எம்.இ.: வாட்டர் ரிசோர்ஸ், ஸ்ட்ரக்ச்சுரல், தெர்மல், பவர் சிஸ்டம், புரடக்ஷன், புராசஸ் கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல். எம்சிஏ, எம்எஸ்சி (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் டெக்னாலஜி), எம்.எஸ் (சாப்ட்வேர் என்ஜினியரிங்), எம்எஸ் (இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்.எஸ். (கம்ப்யூட்டர் டெக்னால ஜி), எம்.எஸ்சி. இன்டஸ்ட்ரியல் மேத்தமேட்டிக்ஸ். 
 
பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை. டிபார்ம், பிபார்ம், எம்.பார்ம்., எம்.பார்ம் (பார்மஸி பிராக்டிஸ்): 
 
                   M.sc. Agriculture: Agricultural Economics/Agricultural Entomology, Agricultural Extension/ Agricultural microbiology/ Agronomy/ Agricultural Botony (or) Genetics & Plant Breeding/ Horticulture/ Plant Pathology/ Soil Science & Agricultural Chemistry/ Microbial Bio Technology. 
 
எம்பிபிஎஸ், எம்பிடி, பிபிடி, பிஓடி, பிஎஸ்சி நர்சிங், பிடிஎஸ், எம்டிஎஸ்.
 
                         M.D. (General Medicine, Paediatrics, Anaesthesia, Obstetrics & Gynaecology, General Surgery, Anatomy, Physiology, Biochemistry, Pathology, Microbiology, Pharmacology, Community Medicine, Dermatology, Venereology and Leprosy) (M.S. Opthalmology, Otorhinolaryngology, Orthopaedics) 
 
முதுநிலை டிப்ளமா: 
 
              Child Health, Anaesthesiology, obstertrics and Gynaecology, OrthoPaedics, Opthalmology, Laryingology and Otology, Medical Radio Diagnosis. 
 
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்: 
 
                   எம்.ஏ. ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மெண்ட், ஹீயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஊரக வளர்ச்சி.எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்துடன்), இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ் சயன்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்,இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் என்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, என்விரான்மெண்டல் சயன்ஸ், ஹெர்பல் சயன்ஸ். 
 
தொடர்புக்கு: 
 
       பதிவாளர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
     அண்ணாமலை நகர்,
     கடலூர் மாவட்டம் மாவட்டம் - 630 003. 
     தொலைபேசி: 04144 - 238248/263/796 
     இணையதள முகவரி: http://annamalaiuniversity.ac.in

Read more »

Boy washed away in floods

CUDDALORE: 

             P. Leslie Demello (16) was washed away by the floods in the Vadavar, the feeding channel to the Veeranam tank, at Kattumannarkoil near here on Sunday.The police said Demello of Annai Teresa Nagar in Udayankudi, had gone with his father Paul Sundar to the Vadavar to learn swimming. There was a surge in the water level owing to heavy rain in catchment areas.and the boy was washed away. A group of people rescued Paul, but Demello could not be traced. The latter's body was recovered from the mouth of the Veeranam tank on Monday.

Read more »

Woman commits immolation

CUDDALORE: 

                Ambika (23) of Paradesi Nagar in Chidambaram committed immolation along with her one-year-old daughter Arunadevi on Sunday. Police sources said that Ambika tried to reform her husband Nagarajan (30) who was a manager in a hotel and was reportedly addicted to liquor. In fact she took him to a temple with the hope that he would mend his ways.

          But after seeing him lying unconscious in front of their house after consuming liquor on Sunday she took the extreme step and died. In a locked house she poured the kerosene on herself and her infant daughter and set themselves ablaze. On hearing her alarm the neighbours informed the police who broke open the door to see both perished in the flames.

Read more »

மயிலாடுதுறை - விழுப்புரம் இடையேரயில் போக்குவரத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு

                  மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

                  மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டு, கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து இப்பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. முறைப்படி இப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

                        மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் வாசன் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து, இப்பாதையில் சிறப்பு ரயிலை இயக்கி வைத்தார். மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், எம்.பி.,க்கள் மணிசங்கர் அய்யர், ஓ.எஸ்.மணியன், அழகிரி, ஆனந்தன், கலெக்டர் முனியநாதன், எம்.எல்.ஏ., ராஜகுமார், நகராட்சித் தலைவர் லிங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் வரவேற்றார்.

மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது:

                      ரயில்வே துறை வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஐ.மு., கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு, ரயில்வே வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட்டில், 41 ஆயிரத்து 426 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 1,148 கோடி ரூபாய் அதிகம். விரைவில் ஏழு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.சென்னை ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையை நவீனமயமாக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக ரயில்வே அகடமி துவங்கப்படும். புதிதாக 10 ரயில்வே மருத்துவமனைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                      காஷ்மீர் - கன்னியாகுமரி, டில்லி ஜும்மா மசூதி - நாகூர் தர்கா, மும்பை தேவாலயம் - வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவைகளை இணைக்கும் வகையில், ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன. இந்த இணைப்பு, தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்.மத்திய அரசு, கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த கட்டுமான வளர்ச்சிக்கு, ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் அகமது பேசியதாவது:

                   சமீப ஆண்டுகளாக, பல முக்கிய ரயில் பாதை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன் மூலம், தெற்கு ரயில்வே பிரிவில் பல இடங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளையும், பொருட்களையும் ஏற்றிச் செல்லும் திறன் அதிகரித்துள்ளது.ரயில்வே துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆனால், கையிருப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. திட்டக் கமிஷனில் ரயில்வே வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

                     தற்போது போத்தனூர் - கோவை, வேலூர் - விழுப்புரம் அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இவ்விரு பாதையிலும் விரைவில் ரயில் போக்குவரத்து துவங்கும். மதுரை - கொடைக்கானல் இடையே இரு வழி பாதை பணி துவங்கப்பட்டுள்ளது. நாகை - வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதையில், வரும் ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து துவங்கும்.இவ்வாறு மத்திய இணை அமைச்சர் அகமது பேசினார்.

Read more »

வாக​னங்​கள் வரி ஏய்ப்பு:​ அர​சுக்கு பல கோடி இழப்பு


புதுவை மாநி​லத்​தில் பதி​வு​செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் வாகன வரி செலுத்​தா​மல் இயக்​கப்​பட்​ட​தால் கடந்த 4 தினங்​க​ளில் கட​லூ​ரில் பிடி​பட்ட இரு
கட​லூர்:
 
                 கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ திரு​வா​ருர்,​​ தஞ்சை மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் புதுவை மாநி​லத்​தில் வாக​னங்​களை வாங்கி,​​ தமி​ழ​கத்​தில் இயக்குவ​தால் தமி​ழக அர​சுக்கு பல கோடி இழப்பு ஏற்​ப​டு​கி​றது.​ க​ட​லூர் மாவட்டத்தில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​க​ளில் 30 சதம் வாக​னங்​கள்,​​ புதுவை மாநி​லத்தில் பதிவு செய்​யப்​பட்​டவை என்று,​​ போக்​கு​வ​ரத்​துத் துறை அதிகாரிகள் தெரி​விக்​கி​றார்​கள்.​ எனி​னும் தற்​போது இந்த எண்​ணிக்கை 50 சத​மாக உயர்ந்து விட்​டது.​ இதே போல் விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ திரு​வா​ரூர்,​​ தஞ்சை மாவட்​டங்​க​ளில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​க​ளில் 30 சதத்​துக்கு மேல் புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்​யப்​பட்​டவை என்று போக்​கு​வ​ரத்​துத் துறை அதிகாரிகள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​மோட் டார் வாக​னங்​களை எந்த மாநி​லத்​தி​லும் வாங்குவ​தற்கு மக்​க​ளுக்கு உரிமை இருக்​கி​றது.​ ஆனால் அந்த வாக​னம் எந்த மாநி​லத்​தில் இயக்​கப்​ப​டு​கி​றதோ அந்த மாநி​லத்​துக்கு வாக​ன​வரி செலுத்த வேண்​டும் என்​பது விதி.​  
 
                      புதுவை மாநி​லத்​தில் மக்​கள் தொகை அடிப்​ப​டை​யில் பார்த்​தால்,​​ அந்த மாநி​லத்​தின் வாங்​கும் திற​னை​விட,​​ 5 மடங்கு அதி​கப்​ப​டி​யான வாக​னங்​கள் விற்​பனை ஆகின்​றன என்று போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ கட​லூர் உள்​ளிட்ட மேற்​கண்ட 5 மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​த​வர்​க​ளும்,​​ புதுவை மாநி​லத்​தில் வாக​னங்​களை வாங்​கு​வதே இதற்​குக் கார​ணம்.​ ​த​மி​ழ​கத்தில் வாக​னங்​க​ளுக்​கான விற்​பனை வரி கடந்த ஆண்டு 8 சத​மாக இருந்​தது.​ ஆனால் புது​வை​யில் 4 சதம்​தான்.​ இந்த ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில் வாகன விற்​பனை வரி மேலும் உயர்த்​தப்​பட்டு இருக்​கி​றது.​ ரூ.10 லட்​சத்​துக்​குக் கீழ் உள்ள வாக​னங்​க​ளுக்கு விற்​பனை வரி 10 சத​மா​க​வும் அதற்​கு​மேல் மதிப்​புள்ள வாக​னங்​க​ளுக்கு விற்​பனை வரி,​​ 15 சத​மா​க​வும் உயர்த்​தப்​பட்டு உள்​ளது.​ இத​னால் மேற்​கண்ட 5 மாவட்​டங்​கள் மட்​டு​மல்ல மேலும் பல மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் வாக​னங்​களை வாங்க புதுவை மாநி​லத்​துக்கு விரைந்​தோ​டும் வாய்ப்பு அதி​க​ரித்து இருக்​கி​றது.​சாலை வரி ​
 
                       மே​லும் சாலை​வரி தமி​ழ​கத்​தில் வாகன மதிப்​பில் 8 சதம்.​ ஆனால் புதுவை மாநி​லத்​தில் ஒட்​டு​மொத்​த​மாக இரு சக்​கர வாக​னங்​க​ளுக்கு ரூ.900 தான்.​ 4 சக்​கர வாக​னங்​க​ளுக்கு புதுவை மாநி​லத்தை விட,​​ தமி​ழ​கத்​தில் ஒரு வாக​னத்​துக்கு ரூ.25 ஆயி​ரத்​துக்கு மேல் கூடு​த​லாக வரி செலுத்த வேண்​டும்.​ இந்த மிகப்​பெ​ரிய வித்​தி​யா​சம் கார​ண​மா​கவே தமி​ழ​கத்​தைச் சேர்ந்த பலர் புதுவை மாநி​லத்​துக்​குச் செல்​கி​றார்​கள்.​ ​÷த​மி​ழ​கத்​தைச் சேர்ந்த பலர்,​​ புதுவை மாநி​லத்​தில் போலி​யான முக​வரி அளித்து வாக​னங்​களை வாங்​கு​கி​றார்​கள்.​ புதுவை மாநில வாகன டீலர்​கள் இதற்கு முழு ஒத்​து​ழைப்பு அளிக்​கி​றார்​கள்.​ அந்த வாக​னங்​கள் தமி​ழ​கத்​தில் இயக்​கப்​ப​டும்​போது,​​ போலீஸ் மற்​றும் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர்​க​ளி​டம் சிக்​கி​னால்,​​ நான் புது​வை​யைச் சேர்ந்​த​வன்,​​ முக்​கிய வேலை​யாக கட​லூர் வந்து போகி​றேன் என்று சொல்லி தப்​பித்து விடு​கி​றார்​கள்.​ ​பு​துவை பதிவு வாக​னங்​கள் விபத்​துக்​க​ளில் சிக்​கும்​போது,​​ முக​வ​ரியை விசா​ரித்​தால்,​​ பல நேரங்​க​ளில் போலி​யாக இருப்​ப​தாக கட​லூர் போலீ​ஸôர் தெரி​விக்​கி​றார்​கள்.​ இத​னால் பாதிக்​கப்​பட்ட நபர்​கள் இன்​சூ​ரன்ஸ் இழப்​பீடு பெறு​வ​தி​லும் சிக்​கல் ஏற்​ப​டு​கி​றது.​ ​÷இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநி​லங்​க​ளுக்​கும் ஒரே மாதி​ரி​யான வரி​வி​திப்பு முறை என்று,​​ வாட் வரி​வி​திப்பு முறையை மத்​திய அரசு கொண்டு வந்​தது.​ ஆனால் அதைப் புதுவை மாநி​லம் மதிக்​கவே இல்லை.​ பல பொருள்​க​ளுக்கு தனது இஷ்​டப்​படி மிகக் குறைந்த வரியை விதித்​துக் கொண்​டது.​ 
 
                           இத​னால் பயன் அடை​வோர் பிற மாநில நுகர்​வோ​ரும்,​​ புதுவை மாநில வணி​கர்​க​ளும் மட்​டுமே.​ புதுவை அர​சின் கஜா​னா​வுக்​கும் பயன் இல்லை.​ புதுவை மாநில அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு இதில் கிடைக்​கும் ஆதா​யமே இந்த வரி​கு​றைப்​புக்கு முக்​கி​யக் ​ கார​ணம் என்று கூறப்​ப​டு​கி​றது.​ ​விற்​பனை வரி மற்​றும் சாலை​வரி குறைவு கார​ண​மாக,​​ புதுவை மாநி​லத்​துக்​குச் செல்​லும் தமி​ழக நுகர்​வோர் எண்​ணிக்கை,​​ இந்த ஆண்டு மேலும் அதி​க​ரிக்க வாய்ப்பு இருப்​ப​தாக,​​ கட​லூர் வணிக வரித்​துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ இந்த வரி வித்​தி​யா​சம் கார​ண​மாக,​​ தமி​ழ​கத்​துக்கு ஆண்​டு​தோ​றும் ஏற்​ப​டும் இழப்பு ரூ.25 கோடிக்கு மேல் என்று,​​ 5 ஆண்​டு​க​ளுக்​கு​முன் கணக்​கி​டப்​பட்​டது.​ இந்த ஆண்டு இழப்பு மேலும் பன்​ம​டங்கு அதி​க​ரிக்​கும் என்று,​​ வணி​க​வரி மற்​றும் போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​÷அ​ னைத்து மாநி​லங்​க​ளி​லும் ஒரே மாதி​ரி​யான வரிக் கொள்கை இருந்​தால் மட்​டுமே இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண​மு​டி​யும்.​ இல்​லை​யேல் தமி​ழ​கம் தொடர்ந்து வரு​வாய் இழப்​பைச் சந்​திப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்லை என்​றும் அதி​கா​ரி​கள் கூறு​கின்​ற​னர்.​ ​ ​
 
                       பு​து​வை​ யில் பதிவு செய்​யப்​பட்டு,​​ கட​லூ​ரில் இயக்​கப்​ப​டும் இரு சக்​கர வாக​னங்​களை கடந்த சில நாள்​க​ளா​கச் சோத​னை​யிட்​ட​தன் மூலம்,​​ ரூ.7 லட்​சம் சாலை வரி வசூ​லிக்​கப்​பட்டு இருப்​ப​தாக,​​ கட​லூர் வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார் வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தார்.​ இத்​து​டன் விற்​பனை வரி​யை​யும் சேர்த்து,​​ அந்​தத் தொகையை ஆண்டு முழு​வ​தற்​கும் 5 மாவட்​டங்​க​ளுக்​கும் பெருக்​கிப் பார்க்​கும் போது,​​ தமி​ழ​கத்​துக்கு ஏற்​ப​டும் வரு​வாய் இழப்பு எத்​தனை கோடி என்​பதை தமி​ழக அரசு எண்​ணிப் பார்க்க வேண்​டும் என்​கி​றார்​கள் பொது​மக்​கள்.​

Read more »

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 கோடி நிதிஉதவி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 9 பள்ளிகளுக்கு, நிதி உதவியாக ரூ.3.1 கோடியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். 

இதற்கான விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. 9 பள்ளிகளுக்கு ரூ.3.1 கோடியை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

               திமுக ஆட்சியில் ஏராளமான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 2009-10-ம் ஆண்டுக்கு ஆபத்தாரணபுரம், புலியூர் காட்டுசாகை, தீர்த்தனகரி, புதுக்கூரைப் பேட்டை, எறுமனூர், ஓட்டேரி, மோவூர், எடையார். திருமுட்டம் ஆகிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக் தரம் உயர்த்தப்பட்டன. இந்த 9 பள்ளிகளுக்கும் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தலா ரூ.58.25 லட்சம் வீதம் ரூ.5.24 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.÷தற்போது 9 பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக, கட்டம் கட்ட தலா ரூ.30 லட்சம் மற்றும் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி வழங்க, முதல்வர் கருணாநிதி ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். கிராமங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில், இந்த அரசு பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. கல்வி வளர்ச்சிக்காக அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தும், கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது.÷எனவே வரும் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும், கல்வி அலுவலர்களும் இணைந்து மாணவ மாணவியருக்கு அடிப்படைக் கல்வியை சிறப்பாக வழங்கி, கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்கிக் காட்ட அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம். விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வித் திட்ட முன்மைக் கல்வி அலுவலர் மணவாள ராமானுஜம், ஒன்றியக் கல்விக் குழு உறுப்பினர் பொறியாளர் வி.சிவகுமார், மாவட்டக் கல்வி அலுவலர்கள்

Read more »

தந்தையுடன் நீச்சல் பயின்ற மகன் சாவு

சிதம்பரம்:

                           காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் தேடி கண்டெடுத்தனர். சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 2 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பவுல்சுந்தர் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி கீதாரீத்தா, லெஸ்லி டிமெல்லோ என்ற மகன் மற்றும் இரு மகள்களுடன் அருகே உள்ள வடவாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். மகன் லெஸ்லி டிமெல்லா கடலூர் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த லெஸ்லி டிமெல்லோவிற்கு தந்தை பவுல்சுந்தர் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது வடவாற்றில் அதிகமாக வந்த தண்ணீரில் இருவரும் அடித்துச் சென்றனர். அப்போது கரையில் இருந்தவர்கள் ஆசிரியர் பவுல்சுந்தரை காப்பாற்றினர். ஆனால் மகன் லெஸ்லி டிமெல்லோ தண்ணீரில் மூழ்கியதால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்புத் துறையினர் வந்து விடிய விடிய தேடி வடவாற்றிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை மாணவர் உடலை கண்டெடுத்தனர்.

Read more »

வீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'

General India news in detail  
சிதம்பரம் : 

                       சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. 2005ம் ஆண்டு முதல் சென்னை மக்களின் தாகத்தை தணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதால், கோடை காலத்திலும் வீராணத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

                 கடந்த ஜனவரி மாத இறுதியில் ஒரு வாரம், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 900 மில்லியன் கன அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருவதால், படிப்படியாக நீர்மட்டம் குறைந்தது. அதனால், கடந்த நான்கு நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக கோடையிலும் இரண்டாவது முறையாக வீராணத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், வெகுவாகக் குறைந்திருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 750 மில்லியன் கன அடியைத் தொட்டது.

Read more »

சுனாமி எச்சரிக்கை : பிச்சாவரம் நேற்றும் 'வெறிச்'

கிள்ளை : 

                       சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரத்தில் நேற்றும் சுனாமி பீதியால்  பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டனர். படகிற்கு பதிவு செய்து காத்திருவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் திருப்பி கொடுக்கப்பட்டது. சுற்றுலா மைய ஓட்ட லில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் வீணாகியது. இந்நிலையில் நேற்று 11ம் தேதி திங்கள் கிழமையும், சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடியது. இதனால் அரசுக்கு நேற்று ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

Read more »

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! : வாகனங்களுக்கு பயன்படுத்துவது அதிகரிப்பு


கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சி யம் காரணமாக ஆட்டோக்களில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தி வருவதால் காஸ் தட்டுப்பாடு  அபாயம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பெருகி வரும் வாகனங்களால் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள் நாட்டில் கிடைக்கக் கூடிய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாததால் எண்ணெய் வள நாடுகளிடமிருந்து எரிபொருள் கொள்முதல் செய்யப் படுகிறது. இதனால் எரிபொருள் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒரு லிட்டர் 52 ரூபாய் கொடுத்து போடும் பெட்ரோலில் அதிகபட்சமாக 20 கி.மீ., ஓட்டுவது பெரிய விஷயம். இதனால் குறைந்த செலவில் காஸ் மூலம் வாகனங்கள் இயக்கும் முறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கார்களில் மட்டும் இயக்கி வந்த காஸ் தற்போது எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு  சாலையில் வலம் வரத் துவங்கியுள்ளன. எல்.பி.ஜி., என முத்திரையிட்ட ஆட்டோக்கள் தினமும் ஏராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு காஸ் நிரப்புவதற்கான பங்க் கடலூர், புதுச்சேரியில் இல்லை. 

                கடலூர் மாவட்டத்திலேயே சிதம்பரத்தில் மட்டுமே காஸ் நிரப்பும் பங்கு உள்ளது.  கார் போன்ற வாகனங்கள் தொலை தூரம் செல் வதால் சென்னையிலோ அல்லது கிடைக்கின்ற இடத்திலோ காஸ் நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால் ஆட்டோக்கள் அப்படியல்ல.  கடலூரில் பதிவு செய் யப்படும் ஆட்டோ கடலூர் ஸ்டாண்டில் தான் ஓட வேண்டும்.பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காஸ் மூலம் இயக்கினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆட்டோ டிரைவர்கள் கருதுகின்றனர். கடலூரில் காஸ் நிரப் பும் பங்க் இல்லாததால் தவித்து வந்த ஆட்டோ டிரைவர்கள் மாற்று வழியில் காஸ் நிரப்பி இரட் டிப்பு லாபம் ஈட்டுகின்றனர்.அரசு மானிய விலையில் கொடுக்கும் வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து காஸ் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் கொடுத்து ஆட் டோ சிலிண்டரில் மாற்றிக் கொள்கின்றனர். இந்த சிலிண்டர் ஒன்றுக்கு 400 கி.மீ., வரை செல்ல முடியும். அதன்படி ஒரு கி.மீ., செல்ல 80 பைசா முதல் 90 பைசா வரைதான் எரிபொருள் செலவு அடக்கமாகிறது. இதற்காக பல இடங்களில் காஸ் ஆட்டோவை இயக்க வீட்டு உபயோக சிலிண்டரை 500 ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் தட் டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  இதை மாவட்ட, வட்ட வழங்கல் அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த தவறான முன் உதாரணத்தை கட் டுப்படுத்த அதிகாரிகள் முன் வரவேண்டும்.

காஸ் ஏஜன்சி கேட்டு பெற வேண்டும்: 

இது குறித்து காஸ் ஆட்டோ, கார் பதிவு செய்யும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில் 

                          'புதிய எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. ஆனால் கடலூரில் காஸ் நிரப்பும் பங்க் இல்லை. இருப்பினும் பெட்ரோலிலும் இயங்கும் என்பதால்  வாகனப் பதிவை நிறுத்த முடியாது. கோவை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட காஸ் நிரப்பும் பங்க் வருவதற்கு முன்பே காஸ் மூலம் இயங்கும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனால் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் பங்க்குகளை அமைக்குமாறு கடலூர் மக்கள் வலியுறுத்தி பெற வேண்டும்' என்றார்.

Read more »

கலெக்டரிடம் பெண் புகார்

கடலூர் :

                கலப்பு  திருமணம் செய்து கொண்டதால் கிராமத் தினர் இருப்பிடத்தை காலி செய்து விட்டதாக கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார். விருத்தாசலம் வட்டம் பாலக்கொல்லை, ஆர்.சி.சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விண்மலர். கணவர் அருண்குமார். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
 
விண்மலர் கலெக்டரிடம் கொடுத்த மனு:

              கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை. புகுந்த வீட்டிலும் இடம் இல்லை.  புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். தற்போது அரசு புறம்போக்கு இடம் என வீட்டை காலி செய்து விட்டனர். கணவரும் கிராம மக்களுக்கு பயந்து வெளியூர் சென்று விட்டார். நான் 7 குழந்தைகளை வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறேன். பள்ளியில் படித்த என் மகள்கள் 4 பேரும் கிராம மக்களின் தூண்டுதல் காரணமாக பள்ளியில் இருந்து விடுவித்து விட்டனர். கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை. கிராமமே என்னை ஒதுக்கி வைத்துள்ளனர்.  எனவே கிராமத்தில் வசிக்க ஆவண செய்யுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்: கலெக்டர் தகவல்

கடலூர் : 

              மக்கள் குறைகேட்பு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு  வழி அமைக்கப்பட்டு தனியாக மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், பிற்பட்டோர் நல அலுவலர் கணபதி, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தாட்கோ மூலம் கறவை மாடு வாங்கவும், மளிகைக் கடை வைக்கவும், 51 ஆயிரம் மானியத்துடன் 86 ஆயிரம் ரூபாய் கடனும், பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் 53  பேருக்கு தலா20 ஆயிரம் வீதம் 10.60 லட்சம் வழங்கப் பட்டது. மேலும் 3 பேருக்கு முதியோருக் கான உதவித் தொகை வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொண்ட 4 பேருக்கு தலா 20 ஆயிரம் என 80 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது.

கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில் 

                 'மனு வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த வாரம் முதல் குறைகேட்பு கூட்டத்தில் மனுக்கள் பெற கூடுதல் கவுண்டர் திறக்கப்படும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவி தொகையும், 20 பேருக்கு திருமண உதவி உள்பட 232 பேருக்கு 12.97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 369 பேருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,541 பேருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க தயார் நிலையில்  உள்ளது' என தெரிவித்தார்.

Read more »

'கான்கிரீட்' வீடுகளுக்கு கூடுதல் தொகை: மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் : 

           'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கும் தொகையை கூடுதலாக்க வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது. மா.கம்யூ., மாவட்ட செயற்குழு கூட்டம் முத்துவேல் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் தனசேகரன், மூசா உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
                 கடலூர் மாவட்டத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. கூட்டு மனைப்பட்டா உள்ளவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள், வறுமைக்கோடு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புறம்போக்கில் வசித்தும் பட்டா கிடைக் காதவர்கள் இந்த திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அரசின் விதிமுறைகளை தளர்த்தி, வறண்ட, நீர்நிலை, வாய்க்கால் புறம் போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கேட்டுக் கொள்கிறோம். வீடு கட்ட 60 ஆயிரம் ரூபாய் போதுமானதல்ல, தரமான 'கான்கிரீட்' கட்டடத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் வீட் டிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

Read more »

ஜாதி வாரி கணக்கெடுப்பு : கைவினைஞர்கள் கோரிக்கை

சிதம்பரம் : 

              மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது.கடலூர் மாவட்ட அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக்கழக கூட் டம் சிதம்பரத்தில் நடந்தது. நகர தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் சரவணன் வரவேற்றார். அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில நிர்வாகிகள் நடராஜன், குமார், பழனிவேல், முத்துக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுச் செயலாளர் சிவக்குமார் பேரவை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும், கரூரில் நடந்த தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. வரும் 2011ல் நடக்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

Read more »

ரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 16ம் தேதி கும்பாபிஷேகம்

பண்ருட்டி : 

                திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 13.5 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சீரமைக் கும் பணிகள் துவங்கியது. கூடுதலாக 6 லட்சம் ரூபாய் செலவில் மடப் பள்ளி அமைக்கும் பணிகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனையொட்டி கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு புண்யாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாகுதியும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை துவங்குகிறது. 15ம்தேதி காலை 8 மணிக்கு யாக சாலா புண்யாகவாசனம், மகாசாந்தி நித்யஹோமம், 2ம் கால பூர் ணாகுதி, மாலை 6 மணிக்கு திருமஞ்சனம், மூர்த்தி ஹோமம், 3ம் கால பூஜையும் நடக்கிறது. 16ம்தேதி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 4ம் கால பூஜைகள் துவங்கி காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Read more »

பூத்துக்குலுங்கும் புதிய ரக 'எள்' சிறுபாக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் : 

             சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் புதிய ரக எள் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிறுபாக்கம் மற்றும் வேப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேப்பாக்கம், நல்லூர், பெரியநெசலூர், காட்டுமயிலூர், கழுதூர், அடரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரும்பு, மரவள்ளி அறுவடை செய்தனர். பின்னர் குறைவான நீரைக்கொண்டு புதிய ரக 'எள்' பயிரான திண்டிவனம் 4, திண்டிவனம் 2, வெள்ளை எள் ஆகியவற்றை பயிரிட்டனர். கடந்த ஆண்டு 80 கிலோ எள் மூட்டை ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது விவசாயிகள் விதைத் துள்ள 'எள்' பயிர் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். பூக்கள் பூத்துக் குலுங் கிய எள் பயிரால்   நல்ல விலை கிடைக்குமென விவசாயிகள் மகிழ்ச் சியில் உள்ளனர்.

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

சிதம்பரம் : 

                    சிதம்பரம் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை (பிளஸ்1 நீங்கலாக) இலவச பாட புத்தகங்களை நேற்று (10ம் தேதி) முதல் வழங்க கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு பள்ளிக்கும் தபால் மூலம் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை தேர்வு முடிகள் வெளியிடப்பட்டதையடுத்து நேற்று பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கினர்.

Read more »

சூறாவளியிலிருந்து வாழையை காப்பாற்ற குச்சிகளுக்கு பதில் கயிறு கட்டும் பணி தீவிரம்

கடலூர் : 

           சூறாவளிக் காற்றில் இருந்து வாழையை காப் பாற்ற புதிய முறையில் கயிறு கட்டும் பணி நடந்து வருகிறது. கடலூர் ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், நெல்லிக்குப்பம், தொட்டி, பில்லாளி  உள்ளிட்ட பகுதிகளில் வாழை  பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் திடீரென வீசும் சூறாவளிக் காற்றால் குலை தள்ளும் பருவத்தில் உள்ள வாழைகள் முழுவதும் ஒடிந்து நாசமாகி விவசாயிகளை நஷ்டமாக்கிவிடும். இதற்காக ஒவ்வொரு வாழைக்கும் காற்றில் சாயாதபடி சவுக்கு மரத்தால் முட்டுக் கொடுப்பது வழக்கம். இதற்காக வாழை விவசாயிகள் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு செய் வதால் இயற்கை சீற்றத்தில் இருந்து ஓரளவு வாழையை காப்பாற்றலாம். குச்சிகள் மூலம் முட்டுக்கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. தற்போது புதிய யுத்தியின் மூலம் நைலான் கயிற்றினால் வாழை மரத்தை அசையாமல் கட்டிவிட்டால் சூறாவளி காற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். இது சவுக்கு மரத்தை விட குறைந்த செலவில் செய்து விடுவதால் வாழை விவசாயிகள் கயிறு கட்டுவது சிறந்தது என கருதுகின்றனர்.

பொது அறிவிற்கு:

ப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா ப்ரசிலியன்சிஸ்


Read more »

ரேஷன் கார்டு, இலவச 'டிவி' உண்டு நரிக்குறவர்களுக்கு நிரந்தர வீடு இல்லை

நடுவீரப்பட்டு : 

              நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக்குறவர்கள் வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக் குறவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகள் உள்ளது. தற்போது நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளகைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான  புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் இலவச 'டிவி' வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வீட்டிற்கு மின் வசதி இல்லாததால் அந்த 'டிவி'யை  பெட்டிக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துள் ளனர். இவர்கள் வசிக்க நிரந்தர வீடு, இலவச மனை பட்டா கேட்டு பல முறை அரசு  அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நிரந்தரமாக வசிக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின் றனர். 'டிவி' கொடுத்த தமிழக அரசு அதை வைத்து பார்க்க நிரந்தர வீடு, மின்சாரம் வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது அறிவிற்கு:

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - கி பி 1890



Read more »

ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு

சிதம்பரம் : 

                  வீராணம் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம்  தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது.  லால்பேட்டை அரியா மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு லால் பேட்டை, கொள்ளிமலை, எள்ளேரி, எள்ளேரி கிழக்கு, நெய்வாசல் துறக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. வீராணத்தில் இருந்து லால்பேட்டை வழியாக செல்லும் 4 கி.மீ., நீளமுள்ள பாசன வாய்க்கால் முறையான பராமரிப் பின்றி ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது.
 
                தற்போதைய நிலையில் மூன்றில் ஒரு பகுதியாக வாய்க்கால் குறுகிவிட்டதுடன், ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது. பாசன வாய்க் காலை ஆக்கிரமித்து வீடுகள், செப் டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதனால் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்து அதிக அளவில் பாசனம் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஆக்கிரமிப்பாளர்கள் 45 பேருக்கு முறைப் படி கடந்த ஜன. 13ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்கள் ஆகியும்  ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வராத நிலையில்  சிதம்பரம் கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் கலியமூர்த்தி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. உதவி பொறியாளர் சரவணன், டி.எஸ்.பி., ராமச்சந் திரன், தாசில்தார் வீரபாண் டியன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் மூலம் ஆக்கிரமிப்புகள் அளக்கப் பட்டது.  அதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மேலும் அவகாசம் வேண்டும். பொக்லைன் மூலம் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என கூறி தடுத்தனர்.   வாக்குவாதம் ஏற் பட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது.  நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பின் மேலும் ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது.  அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கண்டிப் புடன் கூறினர். இச்சம்பவத்தால் லால் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொது அறிவிற்கு:

கங்காரூ அதிகம் உள்ள நாடு - ஆஸ்திரேலியா




Read more »

வடலூரில் ரயில் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் : 

            வடலூரில் ரயில்வே பாதையில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்தார். குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (19). கடந்த ஒரு வாரமாக வடலூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை மணிகண்டன் இயற்கை உபாதைக்காக வடலூர் ரயில்வே பாதையில் நடந்து சென்றார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் மணிகண்டன் மீது மோதியது. விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

பொது அறிவிற்கு:

உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் - கிரண்ட்டப்


Read more »

கந்தல்கோலமான மேலச்சாவடி - சி.மானம்பாடி சாலை

சிதம்பரம்:

                 சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் இருந்து வடக்குச்சாவடி, நஞ்சை மகத்துவாழ்க்கை வழியாக சி.மானம்பாடி வரை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலை வழியாக பஸ் ஓடி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிதம்பரத்தில் இருந்து சிதம்பரநாதன் பேட்டை, நக்கரவந்தன் குடி, கொடிப்பள்ளம், மேலச்சாவடி, அண்ணாபாலம், வடக்குச் சாவடி, நஞ்சைமகத்து வாழ்க்கை, நெடுஞ்சி, காரைக் காட்டுச்சாவடி வழியாக சி.மானம்பாடி வரை தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக் கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.
               ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் - சி.மானம்பாடி வரையில் உள்ள சாலை குண்டும் குழியுமாக ஆனதால் சிதம்பரத்தில் இருந்து காரைக்காட்டுச்சாவடி வழியாக சி.மானம்பாடி வரை சென்ற தனியார் பஸ் அடிக்கடி பழுதானது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக் கள் கோரிக்கையை தொடர்ந்து  சிதம்பரத்தில் இருந்து சென்ற தனியார் பஸ் நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தோடு திரும் பியது. இதனால் நஞ்சைமகத்து வாழ்க்கையிலிருந்து சி.மானம் பாடி வரை உள்ள 3 கி.மீட்டர் தூரத்திற்கு பஸ் செல்ல முடியாத நிலையில் சாலை இருந்ததால் 10 ஆண்டுகளாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சிதம்பரம் செல்ல  5 கி.மீ., தொலைவுக்கு மேல் நடந்து சென்று நஞ்சைமகத்து வாழ்க்கை அல்லது பொன் னந்திட்டு பகுதிக்கு சென்று பஸ் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.
                   இது ஒருபுறமிருக்க மேலச்சாவடியில் இருந்து நஞ்சைமகத்து வாழ்க்கை வரை சாலை சரியில்லாததாலும், வடக்குச்சாவடி பாலம் அருகில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாததாலும் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் சாலை முழுவதும் இருபுறமும் முட்புதற்கள் மண்டி கிடப்பதால் பகலில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அப்பகுதி பொது மக்களின் நிலையை உணர்ந்து மேலச்சாவடியில் இருந்து காரைக்காட்டு சாவடி, (லாக்கு) வழியாக சி.மானம்பாடி வரை சாலையை சீர் செய்து மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது அறிவிற்கு:

அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் - Save Our Soul

Read more »

பராமரிப்பின்றி பாழாகும் 300 ஏக்கர் கேப்பர்மலை கொண்டங்கி ஏரி

 கடலூர்

                 போதிய பராமரிப்பு இல்லாததால் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொண்டங்கி ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கிரிக்கெட் மைதானமாக காட் சியளிக்கிறது. ஏரியை பராமரித்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், கடலூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

               கடலூர் அடுத்த கேப்பர் மலையில் 300 ஏக்கர் பரப்பளவில் 100 ஆண்டுகள் பழமையான கொண்டங்கி ஏரி அமைந்துள்ளது.  காலி இடம் வனத்துறை கட்டுப்பாட்டிலும், நீர் பிடிப்பு பகுதி மீன் வளத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.  மழைக் காலங்களில் ஏரி நிரம்பினால் அடுத்த 8 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும். கொண்டங்கி ஏரி மூலம் ஆரம்ப காலத்தில் 5,000 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. தற்போது போதிய பராமரிப்பின்றி நாளுக்கு நாள் ஏரியின் ஆழமும் குறைந்து வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஏரியில் 50 ஏக்கர் அள வில் காட்டாமணி செடிகள் படர்ந்துள்ளது. ஏரியின் முதல் மதகில் அமைந்துள்ள 'ஷட் டர்' பழுதடைந்து ஓட்டை விழுந்ததால் இதன் வழியாக  தண்ணீர் முற்றிலும் வடிந்து விடுகிறது. இதனால் மழைக் காலம் வந்து மூன்று மாதமே முடிந்த நிலையில் தற்போது ஏரி தண்ணீர் முழுவதும் வடிந்து விட்டது. இதனால் ஏரி வறண்ட 'கிரிக்கெட்' மைதானம் போல் காட்சியளிக்கிறது.  

அணை உடையும் அபாயம்:  

                ஏரியின் அணைப் பகுதியில் இருந்து 30 அடி தூரத்திற்கு மேல்தான் மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் 100 நாள் வேலை திட்ட பணியில் ஏரியின் அணையையொட்டி மராமத்து பணி  செய்யப்பட்டு, வெட்டி எடுக்கப்படும் மண் அணை மீது கொட்டப்படுகிறது. இதனால் ஏரியின் அணை வலுவிழந்து உடையும் அபாயம் உள்ளது. 

தூர் வாரியும் பயனில்லை: 

                ஏரியின் உள் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் மண் சுற்றியுள்ள உயரமான மலைப் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் மலை பகுதியில் இருந்து வரும் வெள்ளத்தினால் கொட்டப் பட்ட மண் மீண்டும் ஏரிக்கு அடித்து வரப்பட்டு தூர்ந்து விடு கிறது.  ஏனோ தானோ வென்று நடக்கும் தூர் வாரும் பணியால் ஏரிக்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் போகிறது. மேல் ஏரி 'ஷட்டர்' உடைப்பு: கொண்டங்கி ஏரியில் மேல் ஏரி, கீழ் ஏரி என இரு பிரிவுகளாக உள்ளது. அதில் மழைக் காலங்களில் மேல் ஏரி நிரம்பி, பின்னர் அங்கிருந்து கீழ் ஏரிக்கு தண்ணீர் வரும். ஆனால் மேல் ஏரிப் பகுதியில் ஒரு சிலர் 30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் மேல் ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் விவசாயம் செய்ய முடியாது என்பதால் அவர்கள் மேல் ஏரியில் உள்ள 'ஷட்டரை' பெயர்த்து எடுத்து விட்டதால்  தண்ணீரை தேங்கி நிற்க முடியாமல் கீழ் ஏரிக்கு வடிந்து விடுகிறது. கீழ் ஏரியில் உள்ள ஷட்டரும் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வடிந்து வீணாகிறது. இதனால் 8 மாதம் தேங்கி நிற்கும் தண்ணீர் மூன்றே மாதத்திற்குள் வற்றி விடுகிறது.
 

                 நீர் மட்டம் குறையும் அபாயம்: ஏரியில் போடப்பட்டுள்ள 14 போர்வெல் மூலமே கடலூர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் கேப்பர் மலை பகுதியில் 5க்கும் மேற்பட்ட 'மினரல் வாட்டர்' தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளதால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்கப் படுகிறது. இதனால்  இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மட்டம் குறைந்து கடலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்மட்டம் குறைவதால் உப்பு நீரும் குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது.  

பராமரித்தால் வருவாய்: 

           கோடை காலம் என்பதால் தற்போது ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்த ஏதுவான தருணமாக உள்ளது. கடலூர் பகுதியில் பெரிய அளவில் அமைந்துள்ள ஏரியை தூர் வாரி, ஆழப் படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஏரியில் பயன்படுத்தினால் வரும் காலங்களில் கடலூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் நல்ல குடிநீரும் கிடைக் கும். மேலும் ஏரியை பராமரித்தால் ஆண்டிற்கு 5 முதல் 10 லட்சம் வரை மீன் வளர்ப்பிற்கு ஏலம் போகும். ஏரியில் போதிய இடம் இருப்பதால் 100 ஏக்கர் பரப்பளவிற்கு மரம் வளர்த்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.            

                       ஏரியை பராமரித்து மதகுகளில் உள்ள ஷட்டர்களை சீரமைத்து அதனை பராமரிக்க ஆட்களை நியமித்தால் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாது. மேல் ஏரியின் அணையை பலப்படுத்த வேண்டும். மேலும் கொண்டங்கி ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். ஆனால் இதே நிலையில் விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் ஏரி முழுவதும் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது அறிவிற்கு:

உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் - ஸ்புட்னிக் 1

Read more »

தூண்டிலில் சிக்கியது சுங்கான் மீன்

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை கடலில் மீனவர் தூண்டிலில் 55 கிலோ எடையுள்ள சுங்கான் மீன் சிக்கியது. பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மூலம் மீன்பிடித்து வருகின்றனர். புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்கள் தூண்டிலில்  5 கிலோ எடையுள்ள சுங்கான் வகை மீன் சிக்கியது. இந்த மீன் ஏலத்தில் 4 ஆயிரத்து 125 ரூபாய்க்கு ஏலம் போனது.

பொது அறிவிற்கு:

 உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் - அக்டோபர் 1


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior