உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 14, 2012

நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா

பண்ருட்டி:

         உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

          பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் நேஷனல் கல்வியியல் கல்லூரி, நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் நெய்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து மகளிர் தினவிழாவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின. அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமையில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பைகளையும், தையல் இயந்திரத்தையும் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார்.  நெய்வேலி ரோட்டரி சங்கத் தலைவி மருத்துவர் அன்புக்கிளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மகளிர் குழுத் தலைவர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். ரோட்டரி செயலர் மு.புலேந்திரன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா

விருத்தாசலம் :

       கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி புகைப்பட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

       விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் "பசுவும் பசித்தவனும்' என்ற தலைப்பில் புகைப்பட கவிதைப் போட்டி நடந்தது. இதில் எம்.ஏ., (தமிழ்) முதலாண்டு மாணவி பிரேமலதா முதலிடமும், பி.ஏ., (தமிழ்) மூன்றாமாண்டு மாணவர் பிரபாகரன் இரண்டாமிடமும், எம்.எஸ்சி., (கணிதம்) இரண்டாமாண்டு மாணவர் ஏழுமலை மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஜெகதீசன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் முத்தழகன், பேராசிரியர்கள் தண்டபாணி, சிவக்குமார், கருணாநிதி, புவனேஸ்வரி, ராணி, ராஜசேகர், வேணி, ராதா, துரைராசு, சிவக்குமார், சாலமன், நேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம்

சிதம்பரம் :

     அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை சார்பில் நடந்து வந்த இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம் நிறைவடைந்தது.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வி.ஓ.ஜி.டி., நிறுவனம் சார்பில் "தொழில்நுட்ப மற்றும் பொருளாதார திறன் உள்ள மண் வலுவூட்டுதல் மற்றும் நுண் செலுத்தும் தொழில் நுட்பங்கள்' குறித்த இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது.
நிறைவு விழாவில் ஜெரின் டெக் நிறுவன மேலாண் இயக்குனர் அரேஸ் ஆலிவர் வரவேற்றார். வேளாண் புல முதல்வர் கதிரேசன் தலைமை தாங்கினார்.

       வி.ஓ.ஜி.டி., இயக்குனர் ஜொகனா வெப்பர் நிறைவுரையாற்றினார். இணை பேராசிரியர் ராமநாதன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துணை பேராசிரியர் சீனுவாசன் தொகுப்புரை வழங்கினார். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண் மாணவ, மாணவிகள் பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்கரை மெதுவாகவும், திறன் மேம்பட்ட வகையிலும் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. கருவி செயல்பாட்டுடன் செயல் விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. சுந்தரவரதராஜன் நன்றி கூறினார்.

















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior