உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 12, 2010

Some Basics on 3G

 
What is 3G technology and how is it different from 2G?

3G is the third generation of wireless mobile technology which represents an evolution over the existing 2G services provided by operators in India. While 2G networks allow data, text messaging and speech, the 3G technologies allow additional services such as multimedia messaging, customized infotainment, videos, and rich voice

How many countries in the world have 3G networks?

At the last count, nearly 132 countries had operational 3G networks

How many mobile subscribers are there in the world? What percentage has migrated to 3G?

There are nearly 4.7 bn mobile subscribers worldwide. Nearly 13% of these have migrated to 3G

What is the growth projection for 3G subscribers in Asia?

One study suggests 570 mn 3G subscribers in Asia Pacific by 2013. India is expected to have nearly 6% of this market

Who are the pioneers of 3G technology?

Japan and South Korea are seen as leaders in 3G technology. Additionally, UK, Germany, Italy and US also have widespread usage

Licences in India
How many 3G licences are available in India?

Three pan-India 3G licences will be auctioned in 22 circles. In 5 of the 22 circles, a fourth 3G licence will also be auctioned. So a total of 71 new 3G licences. BSNL and MTNL already provide 3G services.

Why have 3G auctions been delayed?

Till recently, the govt was unable to secure 3G spectrum from the Defence Ministry. The auctions have been delayed more than a year since they were first planned for
Jan 2009

Who can bid for a 3G licence?

Any entity that holds a unified or cellular mobile licence or has previous experience of running 3G services and gives an undertaking to obtain a unified licence after winning 3G spectrum

Will competition increase after 3G auctions?

No. Only existing operators have applied for 3G bidding. In fact, post 3G auctions, further consolidation of the sector is expected within 18 months

Are there any rollout obligations for 3G?

Street level coverage in at least 90% service area within 5 years. 50% coverage of district headquarters, of which 15% should be rural areas within 5 years

Auction Details
What are the payment terms for successful bidders?

Successful bidders will deposit the amount within 10 calendar days of the close of auction, failing which earnest money shall stand forfeited

When will 3G services be available in India?

BSNL and MTNL already offer 3G services. Other operators may be able to offer 3G services only by end of 2010, but in any case not earlier than Sep 2010

What is the duration of 3G licences?

The right to use 3G spectrum shall be valid for 20 years from the effective date, till the year 2030

What is the reserve price for 3G auctions?

The minimum reserve price for pan-India 3G auctions is
Rs. 3,500 cr

Will M&A guidelines apply to 3G licences?

Yes, guidelines as prescribed by DoT. Currently, if two or more operators with 3G spectrum merge, they will be allowed to retain only one 3G spectrum block per service area and have to surrender the remaining


downlaod this page as pdf

Read more »

Colour TV sets distributed


CUDDALORE: 

        Collector P. Seetharaman has said that playgrounds and libraries are being set up in villages to engage youth in healthy pursuits. He was speaking at a function held at Nagar in Vriddhachalam block recently to give away 908 free colour television sets to beneficiaries.

downlaod this page as pdf

Read more »

நெய்வேலிக்கு ஜெ., வருவதால் அ.தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம்

 நெய்வேலி : 

             நெய்வேலியில் ஜெயலலிதா வருகையையொட்டி, விழா ஏற்பாடுகளை அ.தி. மு.க.,வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
 
          நெய்வேலி டவுன்ஷிப், பிளாக் 4ல் உள்ள செயின்ட் பால் பள்ளி அருகே, கடந்த 1992ம் ஆண்டு நிறுவப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி. ஆர்., சிலையை, வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு ஜெ., திறந்து வைக்கிறார். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் 4.30 மணிக்கு, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலில், மின் பற்றாக்குறையை கண்டித்து நடக் கும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு. க.,வினர்  உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். பாதுகாப்புக்காக வரும் ஆயிரக் கணக்கான போலீசார் தங்க, நெய்வேலி நகர எல்லைக்குள் உள்ள ஐந்து பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நெய்வேலி நகரில் பல பகுதிகளிலும் தி.மு.க., சார்பில் விளம்பரம் எழுதப் பட்ட சுவர்களில், ஜெயலலிதா வருகைக் காக அ.தி.மு.க.,வினர் விளம்பரம் எழுத முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதட் டத்தைத் தொடர்ந்து, டவுன்ஷிப் இன்ஸ் பெக்டர் சேகர், இரு தரப்பு நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில், சுவர் விளம்பரம் எழுதிக் கொள்ள தி.மு.க.,வினர் ஒப்புதல் தெரிவித்தனர்.

downlaod this page as pdf

Read more »

4 மையங்களில் குரூப் 2 தேர்வு 14,371 பேர் எழுதினர்


கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தொகுதி 2 நிலை அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் மாவட்டம் முழுவதும் 4 மையங்களில் 14 ஆயிரத்து 371 பேர் பங்கேற்றனர்.
 
                  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று  தமிழகம் முழுவதும் தொகுதி 2 அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நான்கு மையங்களில் 38 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடந்தது. இதில்  14 ஆயிரத்து 371 பேர்  பங்கேற்றனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் எளிதில் மையங்களுக்கு செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல்  இருக்க கடலூர் டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் சப் கலெக்டர், டி.எஸ்.பி., நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

downlaod this page as pdf

Read more »

திருமானிக்குழியில் உயர்மட்ட பாலம் : சட்டசபையில் அமைச்சர் உறுதி

 நெல்லிக்குப்பம் :

                 திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் பாலம் கட்டப்படுமா? என எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில்  கேள்வி எழுப்பினார்.
                நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்று தரைப்பாலம் ஆண்டு தோறும்  மழையால் பாதிக் கப்படுகிறது. இதனால்  50 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கி. மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தற்காலிகமாக பாலத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.  இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீண் செலவாகிறது. அங்கு மேம்பாலம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என கடந்த வாரம் 'அமைச் சர் சொன் னது காற்றோடு போச்சு' என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில் பேசுகையில்

                'திருமானிக்குழி தரைப் பாலம் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இரண்டு ஆண்டில் தற்காலிகமாக சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.  2008ஆம் ஆண்டு நெடுஞ்சாலை த்துறை அமைச்சர் பார்வையிட்டு மேம்பாலம் கட்டித் தரப்படும் என கூறினார். 50  கிராம மக்கள் நலன் கருதி மேம்பாலம் கட்ட வேண்டும்' என பேசினார். இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசுகையில் 'நான் அப்பகுதியை நேரில் பார்வையிட்டேன். எம்.எல்.ஏ., கோரிக்கை நியாயமானது. நபார்டு வங்கியில் கடன் பெற்று மாநில அரசின் பங்களிப்பையும் செலுத்தி இதுபோன்ற பாலங்கள் உயர் மட்ட பாலங்களாக கட்டப் படுகிறது. திருமானிக்குழி பாலம் நபார்டு வங்கியில் கடன் பெறும் பட்டியலில் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

நெரிசல் மிகுந்த கடலூர் முதுநகர் சாலை விரிவுபடுத்த கலெக்டர் நேரில் ஆய்வு

 கடலூர் : 

             போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள கடலூர் முதுநகர் சாலையை விரிவுபடுத்துவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
 
                   கடலூர் முதுநகரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டியே (கடலூர் - சிதம்பரம் சாலையில்) காய் கறி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பால் குறுகலாகியுள்ள இந்த சாலையில மூன்று இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட், கார் மற்றும் வேன் ஸ்டாண்டுகள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தி மூட்டைகளை இறக்குவதாலும், கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்கிக் கொள்வது வாடிக்கை.
 
              போக்குவரத்து நெரிசலில் பல முறை சிக்கிய கலெக்டர், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.  அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை நெடுஞ் சாலை, நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன் முதல் மணிகூண்டு வரை சாலையை அளவீடு செய்யும் பணியை பார்வையிட்டார்.  பின்னர் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை ஒழுங்குபடுத்தி அதன் மீது கான்கிரீட் தளம் அமைத்து அந்த இடங்களில் வேன், கார் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு இடம் ஒதுக்கவும், ஒரு பகுதியை இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய ஆலோசனை வழங்கினார்.
 
            மேலும் சாலையின் இருபுறமும் தலா இரண்டு கனரக வாகனங்கள் செல்லும் வகையில் 19 மீட்டருக்கு அகலப்படுத்தவும், மார்க்கெட் எதிரில் உள்ள சாலை தடுப்பு கட்டையை அகற்றி சாலையின் மையத்தில் கட்டவும், மணிகூண்டு அருகே உள்ள பஸ் ஷெல்டரை மேற்கு பகுதியில் தள்ளி அமைக்கவும், இந்த ஷெல்டருக்கு பஸ்கள் வந்து செல்ல தனி வழி அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரித்து கொடுக்க நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
 
                  மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிதாக கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஆய்வின்போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன், தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை, நகராட்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

Read more »

கடலூர் ஜவான்பவன் - செம்மண்டலம் புறவழிச்சாலை யாருக்கு சொந்தம்! நிதி பெற்றுத்தர மக்கள் பிரதிநிதிகள் முன்வருவார்களா?

 கடலூர் : 

              கடலூர் ஜவான்பவன் அருகே அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை யாரும் சொந்தம் கொண் டாட முன் வராததால் மக் கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
             கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால்  பொது மக்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். நேதாஜி, பாரதி சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதாலும் மாற்று வழியில்லாமல் ஒரே சாலையில் அனைவரும் பயணிப்பதால் நெரிசல் அதிகமாகிறது. எனவே புறவழிச்சாலை அமைத்து நெரிசலை குறைக்க  திட்டமிடப்பட் டது. இதனை கருத்தில் கொண்டு இதற்கு முன்பு கலெக்டராக இருந்த ககன் தீப் சிங் பேடி காலத்தில் ஜவான் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச்சாலை அமைக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
           புறவழிச் சாலைக்கு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கெடிலம் நதிக்கரையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் சுப்புராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன்குளம் வெள்ள நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் அருகில் இருந்து செம்மண்டலம் வரையிலான 1.8 கி.மீ., நீளத்தில் அகலமான சாலை அமைக்கப் பட்டுள் ளது. இந்த சாலையில் கெடிலம் ஆற்றங்கரையாக இருப்பதால் வெள்ளத் தின்போது பழுதாகாமல் இருக்க பொதுப்பணித்துறை சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
              பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறையினர் தத்தம் பணிகளை முடித்துவிட்டு அப்படியே ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் தார் சாலை பணிகள்  நடைபெறாததால், பல கோடி ரூபாய் செலவு செய்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் கிடக்கிறது.  இந்த புறவழிச்சாலை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் நடனசபாபதியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நாங்கள் முடித்து விட்டோம். தார் சாலை போட எங்களிடம் நிதி இல்லை. அரசிடம் இப்பணிக்காக 90 லட்ச ரூபாய் கேட்டுள்ளோம். நிதி ஒதுக் கீடு கிடைத்தால் தார் சாலை போடுவோம். இல்லையென்றால் நகராட்சிதான் முயற்சி மேற் கொள்ள வேண்டும்' என முடித்துக் கொண்டார்.
                 பொதுப் பணித்துறை அதிகாரிகளும் 'எங்களுக்கு கொடுக்கப்பட்ட தடுப்பு சுவர் பணியை முடித்து விட் டோம். சாலை போடும் பணிக்கும் எங்களுக்கும் தொடர் பில்லை' என்கின்றனர். ஏற்கனவே, பாதாள சாக் கடைத் திட்டம், நகர சாலைகள் போடும் பணிக் காக 2 கோடி ரூபாய் தேவை என அரசிடம் நிதி கேட்டு காத்திருக்கிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நகராட்சி புறவழிச்சாலைக் காக மேலும் ஒரு கோடி ரூபாயை தற்போது செலவிடுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைத்து தார் சாலை போடாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர முன் வந்து கடலூர் மக்கள் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பார்களா?

downlaod this page as pdf

Read more »

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: கடலூரில் நாளை துவக்கம்

 கடலூர் : 

             ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு பணிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள ராணுவ வீரர்கள் நேற்று கடலூர் வந்தனர்.
 
                 கடலூர் அண்ணா விளையாட்டரங்கில்  நாளை 13ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் சிப்பாய் வர்த்தகம், பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், நர்சிங் ஆகிய பணிகளுக்கு ஆட் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கடலூர்,  விழுப்புரம், திருவண் ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பதினேழரை வயது முதல் 21 வயதிற்குட் பட்டவர்கள் கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகளுடன் நேரில் பங் கேற்கலாம்.
 
                      முதல் கட்டமாக உடற் கூறு மற்றும் உடற் தகுதி தேர்வும், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ சோதனையில் பங்கேற்க வேண்டும். இந்த இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்விற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் ராணுவ பிரிவைச் சேர்ந்த 17 வீரர்கள் துணை மேஜர் கூத்தனார் தலைமையில் நேற்று  மாலை கடலூர் வந்தனர்.இக்குழுவினர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ள அண்ணா விளையாட்டரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

கடலூரில் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் : அரசு பணியாளர் சங்கத் தலைவர் பேட்டி

 கடலூர் : 

              டாஸ்மாக் பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி வரும் 15ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்  பாலசுப்ரமணியம் கூறினார்.
 
அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்  பாலசுப்ரமணியம்  கூறியதாவது: 

           டாஸ்மாக் பணியாளர் கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் அரசு பணியாளர் கள் சங்கம் வரும் 15ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக 'டாஸ்மாக்' நிர்வாகம் 100 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. 50 பேருக்கு மேல் குற்ற குறிப் பாணை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாக அலுவலர்கள் பணியாளர்களை அடிமை போல் நடத்தி வருகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற நிலை இல்லை. வரும் 25ம் தேதி 'டாஸ் மாக்' சங்க சிறப்பு மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடையில் பணியாற்றும் ஊழியர்களைப் போல் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் சத்துணவு, அங்கன் வாடி, ஊராட்சி உதவியாளர்களுக்கும் நிரந்தரம் மற்றும் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் வரும் மே மாதம் 7ம் தேதி சென்னையில் பேரணி நடக்கிறது. இவ்வாறு பாலசுப்ரமணியம் கூறினார்.

downlaod this page as pdf

Read more »

கமிஷனர் பணியிடம் காலி வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு


நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் பதவி காலியாக உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
 
           நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய கமிஷனர் முத்துக்குமார் ஆறு மாதத்துக்கு முன் வேறு பணிக்கு சென்றார். அவருக்கு பதிலாக பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி கூடுதலாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். பண்ருட்டி நகராட்சி பணிகளை கவனிக்கவே நேரம் இல்லாத நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வந்து செல்லும் நிலை உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நகராட்சியிலும் நகரமன்ற கூட்டம் நடக்கிறது. பண்ருட்டி கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்கிறார். நெல்லிக்குப்பம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதுகுறித்து சேர்மன், உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும்  கமிஷனர் நியமிக்கப்படவில்லை. வளர்ச்சிப் பணிகள் பாதிப்பின்றி தொய்வில்லாமல் நடக்க உடனடியாக கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு : பி.டி.ஓ., தாசில்தார் ஆய்வு


பண்ருட்டி : 

          குடிசை வீடுகள் கணக் கெடுப்பு பணிகளை பி.டி.ஓ., மற்றும் தாசில் தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
                   பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூரை வீடுகள் கணக்கெடுப்பு பணி கடந்த 29ம் தேதி முதல் துவங்கியது. ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர், வி.ஏ.ஓ., கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இப்பணியை பி.டி.ஓ., தமிழரசி, உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், தனி தாசில்தார்கள் சரவணன், பத்மஜா, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் ஆகியோர்  ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது குடிசை வீடுகள்  கணக்கெடுப்பில் வழிகாட்டி நெறிமுறைகள் விடுபடாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

downlaod this page as pdf

Read more »

ரங்கநாதபுரத்தில் மீன் மார்க்கெட் : அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி

 கடலூர் :

            ரங்கநாதபுரம் ஊராட்சியில் மீன் மார்க்கெட் கட்டித்தரப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
 
              குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட நாகம்மாபேட்டை, கோதண்டராமபுரம், அனுக்கம்பட்டு, அகரம், ஆயிக்குப்பம், ரங்கநாதபுரம், கண்ணாடி, விருப்பாட்சி, ஆடூர் அகரம் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் பன்னீர்செல்வம் பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.  இக் கிராமங்களில் இருந்து 2,631 மனுக்களை பெற்றார்.
 
             குறிப்பாக ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரசவல்லிக்கு பட்டா வழங்கவும், அனுக்கம்பட்டு கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் வினோத்குமார், விஸ்வா, பாலமுருகனுக்கு உடனடியாக பள்ளியில் படிக்கவும், ரங்கநாதபுரம் இந்துமதிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் உத்தரவிட்டார்.
 
பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் 

            'தமிழக முதல்வர் மாற்று திறனாளிகளுக்கென துறையை உருவாக்கியவுடன் அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு நம்பிக்கையுடன் உள்ளனர். ரங்கநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த 21 பேர் தொகுப்பு வீடுகளை பழுது பார்த்து தரவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கி சரி செய்யப்படும். மேலும் மீன்மார்க்கெட் ஒன்றும் கட்டித்தரப்படும்' என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, பி.ஆர்.ஓ., முத்தையா பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

தி.மு.க., அரசின் மீது குறைகூற முடியாது : எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேச்சு


பண்ருட்டி : 

                   தி.மு.க., அரசின் மீது குறைகளை கூற முடியாமல் எதிர்க்கட்சிகள் எதை எதையோ பேசி வருகின்றன என எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசினார். 
                 காடாம்புலியூரில் தி.மு.க., அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஆடலரசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் நாராயணசாமி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழ் பேரின்பன், நகராட்சி சேர்மன் பச்சையப்பன், மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், ஒன்றிய துணை செயலாளர் தென்னரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஞானமணி, அன்பழகன், முன்னாள் பண்ருட்டி நகர செயலாளர் கதிரவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், லட்சுமிநாராயணன், எழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்திற்கு தலைமை தாங்கி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசியதாவது: 

                       தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.  குறிப்பாக  கல்விக்காக 10 ஆயிரம் கோடி, ஆதிதிராவிடர் நலத்திற்காக 3,250 கோடி, உணவு திட்டத்திற்காக 3,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தி.மு.க., அரசின் சாதனைகளை சில நிமிடங்களில் கூறிவிட முடியாது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகள் மாற்றும் திட்டம் என பல திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் அதிகம் பயன் பெறுகின்றனர். முதல்வரும், துணை முதல்வர் ஸ்டாலினும் மக்கள் கஷ்டங்களை நினைவில் வைத்து இத்திட்டங்களை போட்டுள்ளனர்.  அதனால்தான் தி.மு.க., அரசின் மீது குறைகளை கூற முடியாமல் எதிர்க்கட்சிகள் எதை எதையோ பேசி வருகின்றன.

downlaod this page as pdf

Read more »

நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி பட்டறை : துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்

 சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைபல்கலை தொலைதூர கல்வித் துறையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறையை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.
 
                 அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்க மேலாண்மைத் துறை, மத்திய அரசு நுகர் வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் மையம் இணைந்து நுகர்வோர் பயிற்சி பட்டறையை மூன்று நாள் நடத்துகிறது. தொலைதூர கல்வி மேலாண்மைத்துறை பேராசிரியர் சையத் ஜாபர் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொலைதூர கல்வி இயக் குநர் நாகேஸ்வரராஜ் முன்னிலை வகித்தார்.
 
                     சிறப்பு விருந்தினராக டில்லி ஐ.ஐ.பி.ஏ., பேராசிரியர் சுரேஷ் மிஸ்ரா பங்கேற்று, நுகர்வோர் புகாரின் விகிதாச்சாரத்தை விளக்கி நுகர்வோரின் விழிப்புணர்வை எந்தந்த துறைகளில் அமைய வேண்டும் என விளக்கினார். தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவர் தேவராஜன் நுகர் வோர் விழிப்புணர்வின் பல்வேறு கடமைகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் சிவசுப்ரமணியன் பட்டறையின் தேவை மற்றும் இயல்புகளை விளக்கினார்.

downlaod this page as pdf

Read more »

தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க கூட்டம்

 கடலூர் : 

              காலாவதியான மருத்து பிரச்னைக்கு தீர்வுகான அனைத்து கடைகளிலும் பயிற்சி பெற்ற மருந்தாளுனர்கள் முழுநேரமும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
 
                   தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. மாநிலத் தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி, மாவட்ட செயலா ளர் இளங்கோ  முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி சத்தியராஜ் வரவேற்றார்.  பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். பொருளாளர் சுப்ரமணியன் ஆண்டறிக்கை படித்தார். கூட்டத்தில் காலாவதி மருத்து பிரச்னைக்கு தீர்வுகாண அனைத்து கடைகளிலும் பயிற்சி பெற்ற மருந்தாளுனர்கள் முழு நேரமும் பணி யில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.

downlaod this page as pdf

Read more »

ரேஷன் கடை திறப்பு விழா


கடலூர் : 

               கடலூரில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார்.
 
                 கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடையும், 4 லட்ச ரூபாய் மதிப்பில் சிறுவர்  விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா  நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன் முன் னிலை வகித்தார்.  எம்.எல்.ஏ., அய்யப்பன், ரேஷன் கடை மற் றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். சந்துரு நன்றி கூறினார். கவுன்சிலர் வனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

மெக்கானிக்கல் சயின்ஸ் கருத்தரங்கு தொழுதூரில் இன்று துவங்குகிறது


திட்டக்குடி : 

                 தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் 'நியூடிரென்ட்ஸ் இன் மெக்கானிக்கல் சயின்ஸ்'  இரண்டு நாள் தேசிய கருத் தரங்கு இன்று துவங்குகிறது.
 
                       துவக்க விழாவிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்குகிறார். நிர்வாக இயக்குநர்கள் ராஜபிரதாபன், ராஜன் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் பழனிச்சாமி வரவேற்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசுகிறார். 13ம் தேதி நிறைவு விழா இயக்குநர் மேஜர் குஞ்சிதபாதம் தலைமையில் நடக்கிறது.  விழாவில் பேராசிரியர்கள், கருத்தாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். துணை முதல்வர் பொன் செல்வராஜ் நன்றி கூறுகிறார்.

downlaod this page as pdf

Read more »

மடுவங்கரை ஊராட்சியில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு

 கிள்ளை : 

             சிதம்பரம் அருகே மடுவங்கரை ஊராட்சியில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
 
                     கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்கு குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி ஊராட்சிகளில் நடக்கிறது. நேற்று மடுவங்கரை ஊராட்சியில் நவாப்பேட்டை, சின்ன மடுவங்கரை, குண்டுமேடு, புஞ்சை மகத்துவாழ்க்கை மற்றும் மடுவங்கரை கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரி, துணைத் தலைவர் முத்துக்குமரசாமி முன்னிலையில், வி. ஏ.ஓ., சங்கரன், ஊராட்சி எழுத்தர் பரமானந்தம், மக்கள் நலப்பணியாளர் வேலு உள்ளிட்ட குழுவினர் கணக்கெடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

 சிதம்பரம் : 

              அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் பள்ளி செல்ல குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்தது.
 
           பரங்கிப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவசண்முகம் பணியை துவக்கி வைத்தார். சம்மந்தம் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, கவுன்சிலர் ரங்கன் பங்கேற்றனர். 

               கீரப்பாளையம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்பார்வையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 15ம் தேதி வரை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
 
விருத்தாசலம்: 

                       புலியூர் ஊராட்சிக் குட்பட்ட கிராமங்களில் பள்ளி செல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் சுரேஷ், தேவராஜன் ஆகியோர் 14 வயதிற் குட்பட்ட பள்ளி செல்லா மாணவர்களை கணக்கெடுத்தனர்.

downlaod this page as pdf

Read more »

துல்லிய பண்ணை திட்டம்: விவசாயிகளுக்கு இடுபொருள்

 நெல்லிக்குப்பம் : 

              அண்ணாகிராமம் வட்டாரத்தில் துல்லிய பண்ணை திட்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
 
                     அண்ணாகிராமம் அடுத்த பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருபது எக்டர் பரப்பில் கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் அமைக்கப்பட்டது. இருபது விவசாயிகள் சங்கம் அமைத்து பதிவு செய்து இத்திட்டம் மூலம் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்களுக்கு நீரில் கரையும் உரங்கள் ஒரு எக்டருக்கு 20 ஆயிரம் மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி இடு பொருட்கள் வழங்கி கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் சம்பத்குமார், சந்திரராசு, இ.ஐ.டி., பாரி முதுநிலை மேலாளர் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

Read more »

இளநீர் ரூ.2.50க்கு கொள்முதல்: விற்பனை விலையோ ரூ.10

 கடலூர் : 

                கடலூரில் இளநீர் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. பொதுவாக கோடை வெயில் ஏப்ரல் 15 தேதிக்கு பிறகுதான் 100 டிகிரியை தாண்டும். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்திலேயே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளது. இதனால் மக்கள் உஷ்ணத்தை தணிக்க குளிர்பானங்கள், தர்பூசணி, ஜூஸ் கடைகளை நாடி செல்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட மருத்துவ குணம் கொண்ட இளநீரை காலை, மாலை மக்கள் விரும்பி குடிப்பது வழக்கம்.
 
                ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் இளநீர்  5 ரூபாயாக விற்பனை செய் யப்பட்டு வந்தது. ஆனால் கோடை துவங்கியவுடன் இதன் விலை திடீரென 10 ரூபாயாக  உயர்ந் துள்ளது. மரத்தில்  3 மாதங்களில் பறிக்கப்படும் இளநீர் 2.50 முதல் 3 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால் அதே இளநீர் மேலும் 2 மாதங்கள் கழித்து பறிக்கப்படும் தேங்காயும் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இளநீர் வியாபாரிகள் மரம் ஏறும் ஆட்களுடன் சென்று  இளநீரை  2.50 முதல் 3 ரூபாய் வரை விலை பேசி பறித்து அதில் 3 அல்லது 4 மடங்கு லாபம் வைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தேங்காய் பறிப்பதற்கு மரம் ஏறும் ஆட்கள் விவசாயியை தேடி வருவதில்லை.  ஆனால் கோடையில் இளநீர் தேவையை கருத் தில் கொண்டு விவசாயிகளை அணுகி கேட்பதால், வேலை மிச்சம் எனக் கருதி விவசாயிகளும் குறைந்த விலைக்கே கொடுத்து விடுகின்றனர். விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் இளநீர் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால்,  இளநீரை சென்னைக்கு லாரிகளில் அனுப்புகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

சப் இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால் பண்ருட்டியில் வழக்குகள் தேக்கம்

 பண்ருட்டி : 

             பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் இல்லாமல் வழக்குகள் தேக்கம் அடைந்து  வருகிறது.
 
           பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் 44  போலீசார் உள்ளனர். மற்ற பணிகளுக்கு 30 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள 14 பேர் ஸ்டேஷன் பணியில் உள்ளனர்.  சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டராக சித்ரா, அஸ்கர் அலி உள்ளனர். இதில் சித்ரா  மகப்பேறு விடுமுறையாக 5 மாதங்களாக விடுப்பில் உள்ளார்.  தற்போது  அஸ்கர் அலியும் மாற்று இடம் கேட்டு ஒரு மாத விடுப்பில் சென்று விட்டார். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மட்டுமே உள்ளார்.  பண்ருட்டியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வழக்கின் போதும் அரசியல் கட்சிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பண்ருட்டியில்  சப் இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு பணிபுரிய எவரும் முன்வருவதில்லை. இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்குகளும் தேக்கம் அடைந்துள்ளது.  முக்கிய பிரச்னைக்காக புகார் கொடுக்க வரும் போது சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

சேத்தியாத்தோப்பில் தீ விபத்து : ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

 சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு அருகே ஏற்பட்ட தீ விபத் தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து சேதமானது.
 
                     சேத்தியாத்தோப்பு அடுத்த வடபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தராஜன்.  இவர் சென்னையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு குழந்தைகளுடன் சேத்தியாத்தோப்பிற்கு வந்தார். இதற்கிடையே அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பவுன் நகை, உளுந்து, பயறு, நெல்  தானியங்கள் உள்ளிட்ட  வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.  தகவலறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

சீரமைக்கப்பட்ட பாலத்தின் தடுப்புச் சுவர்கள் மீண்டும் உள்வாங்கும் அபாய நிலை


ராமநத்தம் : 

          சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தம் வெள்ளாற்று பாலம், வெலிங்டன் வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கும் அபாய நிலை உள்ளது.
 
              சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர்- பெரம்பலூர் மாவட்டத்தை பிரிக்கும் வகையில் வெள்ளாறு, வெலிங்டன் வரத்து வாய்க்கால் அமைந்துள்ளது. இதில் இருவழி சாலையாக இருந்த போது போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண் டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பிறகு புதிதாக வெள்ளாறு மற்றும் வெலிங்டன் வாய்க்காலில் பாலம் அமைக் கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
 
            தற்போது புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திற்கும், பழைய பாலத்திற்கும் இடையே உள்ள பகுதி வாகனங்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தாதவாறு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்புச் சுவர்கள் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால் அமைத்த சில மாதங்களிலேயே உள்வாங்கியது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து உடனடியாக தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால், புதியதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களும் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கும் நிலையில் காணப்படுகிறது. இதனை எழுத்தூர் - பாடாலூர் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் அதிகாரிகள் முறையாக மறு சீரமைப்பு பணி மேற் கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மாயம்

 கடலூர் : 

                  கடலில் மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மாயமானார்.
 
                   கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ஏசுதரன் மகன் விஜி ((29). இவரும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்களான சகாயம் ஆன்ட்ரோஸ் (29), சூசை அடிமை (32) ஆகியோர் தங்கள் மாவட்டத்தில் மீன் சீசன் இல்லாத நேரங்களில் கடலூரில் தங்கி மீன் பிடித் தொழில் செய்வது வழக்கம். அதேபோன்று மூவரும் கடந்த ஒரு மாதமாக கடலூர் முதுநகர் சலங்கைகாரத் தெருவில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வந்தனர். நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு மூவரும் தங்களது படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டு மதியம் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விஜி படகை ஓட்டி வந்தார். மற்ற இருவரும் தூங்கி விட்டனர். பகல் 12 மணிக்கு எழுந்து பார்த்தபோது விஜியை காணவில்லை. படகில் வெகுதூரம் சென்று தேடியும் விஜியை காணவில்லை.  இது குறித்த புகாரின் பேரில்  கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விஜியை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

புதுச்சேரியிலிருந்து பிராந்தி கடத்தல் இருவர் கைது: ஆட்டோ பறிமுதல்


கடலூர் : 

                   புதுச்சேரியிலிருந்து ஷேர் ஆட்டோவில கடலூருக்கு பிராந்தி பாட்டில் கடத்திய சம்பவம் தொடர் பாக இருவர் கைது செய் யப்பட்டனர். ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
 
                       கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ஆல் பேட்டை செக்போஸ்ட்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப் போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ (டி.என்.31. ஏபி-6689)வை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டைகளில் 96 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களும், 20 லிட்டர் சாராயம் கடத்தி வருவதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7,000  ரூபாய். பிராந்தி மற்றும் சாராயம் கடத்தி வந்த கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் திருநாவுக் கரசு (29), ஷேர் ஆட்டோ டிரைவரான கடலூர் புதுவண்டிப்பாளையம் முருகா நகரை சேர்ந்த பாவாடைராயன் (23) ஆகியோரை கைது செய்தனர்.  கடத்தலுக்கு பயன்படுத்திய ஷேர் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

என்.எல்.சி சுரங்கத்தில் திருட்டு தொழிலாளி கைது


நெய்வேலி : 

              என்.எல்.சி., சுரங்கத் தில் திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
 
                   என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்து வந்தவர் தெய்வசிகாமணி (24). இவர் நேற்று பி.எச்.டி.,  யார்டு வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத் திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் துரைராஜ், அருள்ராஜா, சூசைராஜ் ஆகிய மூன்று பேரும் தெய்வசிகாமணியை பிடித்து சோதனை செய்து அவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் பிளேட்டுகள் கைப்பற்றினர்.

downlaod this page as pdf

Read more »

திட்டக்குடியில் ரேஷன் அரிசி பதுக்கல் : வருவாய்த் துறையினர் விசாரணை


திட்டக்குடி : 

                         ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து ஆர்.டி.ஓ., தலைமையிலான வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர்.
                           திட்டக்குடி தாலுகா பகுதிகளில் ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் தாசில் தார்கள் ஜெயராமன், கண்ணன், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., பிச்சைப் பிள்ளை, உதவியாளர் தயாளன் ஆகியோர் நேற்று  முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் புதுக்குடியான் சந்தில் வசிக்கும் லோடுமேன் அருணாச்சலம் என் பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பதுக்கல் ரேஷன் அரிசி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அரிசி பதுக்கியதற்கான தடயங்கள் இருந்ததால் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவிநியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கிறது. கடந்த மாதம் கொரக்கவாடி பஸ் நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த அரிசி மூட்டைகள் கைப்பற்றப் பட்டது. மாவட்டம் முழுவதும் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதும் அதிகாரிகள் கைப்பற்றுவதும் ஆனால் ஒருவரும் கைது செய்யப்படாததுதான் கேள்விக்குறியாக உள்ளது.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior