உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு

               பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.  

              பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மற்றும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கும் காரணத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்குப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

                சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் கலை அறிவியல் படிப்புகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தக் கல்லூரிக்கு இப்போது 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் அதே பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளது.  இந்த கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளைக் காட்டிலும், உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய பி.காம். பட்டப் படிப்புக்கே மாணவ, மாணவிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.  

                இதை பயன்படுத்திக் கொண்டு, சில கல்லூரிகள் அரசு உதவி பெறும் திட்டத்தின் கீழ் வரும் சில படிப்புகளையும், சுயநிதி படிப்புகளாக மாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, பிளஸ்-2-வில் தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு, சில கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடம் தர மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  அமைந்தகரையைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, பிளஸ்-2-வில் தொழில் பிரிவில் படித்துள்ளார். 1200-க்கு 930 மதிப்பெண் பெற்ற இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில், பி.காம். படிப்பில் சேர விரும்பி விண்ணப்பம் கோரியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகிகள் பிளஸ்-2 தொழில் பிரிவுக்கு பி.காம். பிரிவில் இடம் கிடைக்காது. எனவே, வேறு பிரிவை தேர்வு செய்யுமாறு கூறியுள்ளனர்.  

இதுகுறித்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி வணிகப் பிரிவு பேராசிரியர் ரவி கூறியது: 

              அரசு ஆணையின்படி, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு, பி.காம். படிப்பில் 20 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆணையை தமிழக அரசு பிறப்பித்து வருகிறது.  இம்முறை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆணையை பிறப்பிக்க தாமதமாகலாம். இருந்தபோதும், 2010-11 கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையையே கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்.  ஆனால், கல்லூரிகள் அரசு உத்தரவை மதிப்பதே இல்லை. லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.  சில அரசு கல்லூரிகளும், தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, தொழிற்பிரிவு மாணவர்களை பி.காம். படிப்பில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகின்றன. பல்கலைக்கழகமும் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை நடைமுறைகள் முடிவதற்குள், உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு

            சென்னைப் பல்கலைக்கழத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.  

              ஆங்கிலம் - தமிழ் அகராதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகராதிக்குச் சிறப்பான இடம் உண்டு. டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் தலைமையிலான ஆசிரியர் குழுவால் இந்த அகராதி 1963 - ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. முதலில் மூன்று தொகுதிகளாக வெளியாகி, பின்னர் 1965, 1977,1981,1992-ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டபோது ஒரே தொகுதியாக வெளியானது.  இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகத்தின் முயற்சியால் இப்போது மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

             கெட்டியான அட்டையுடன் தயாரிக்கப்பட்ட அகராதியின் விலை ரூ.400, சாதாரண அட்டையுடன் கூடிய அகராதியின் விலை ரூ.350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அறிமுகச் சலுகையாக 25 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அகராதியை வாங்க விரும்புவோர் சென்னைப் பல்கலைக்கழக பதிப்பு பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு... 

044-25399520

Read more »

நவரத்னா தகுதியால் என்.எல்.சி.க்கு தன்னாட்சி அதிகாரம் அதிகரிப்பு: ஏ.ஆர்.அன்சாரி




செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி (வலமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, ஆர்.கந்தசாமி
 
நெய்வேலி:
 
            என்.எல்.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு நவரத்னா அந்தஸ்து வழங்கியுள்ளதால், இந் நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.  
 
 நெய்வேலியில் என்.எல்.சி. லைவர் ஏ.ஆர்.அன்சாரி கூறியது:  
 
                என்.எல்.சி. நிறுவனம் மினி ரத்னா என்ற தகுதியிலிருந்து தற்போது நவரத்னா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இது எங்களது செயல்பாட்டுக்கு கிடைத்த கெüரவமாக கருதுகிறோம். மத்திய அரசு வழங்கியுள்ள இப் பதக்கம் எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்.  இத்தகைய தகுதியை பெற நிறுவனத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் எனது சக இயக்குநர்களும் காரணமாவர்.  2008-ம் ஆண்டு இந்நிறுவனத் தலைவராக நான் பொறுப்பேற்கும் போது, 3 இலக்குகளை மையமாக வைத்து செயல்படுவோம் என்று கூறினேன்.
 
              அதன்படி இந்நிறுவனத்தின் மின்னுற்பத்தித் திறனை 2,490 மெகவாட்டிலிருந்து 10 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்துவது, மினி ரத்னா தகுதியிலிருந்து நவரத்னா தகுதியை எட்டுவது, மாற்று மின்னுற்பத்தி திறன்களில் ஈடுபடுவது என கூறியிருந்தேன்.  அதன்படி அடுத்த ஆண்டு 10 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் பணி தொடங்கவுள்ளது.  தற்போது நவரத்னா என்ற தகுதியை எட்டியிருக்கிறோம். அடுத்ததாக மாற்று மின் சக்தி உற்பத்தியை தொடங்க இடம் தேர்வு செய்துள்ளோம். அது விரைவில் முடிவடையும் என்றார். 
 
                நெய்வேலியில் தற்போது கட்டுமானம் நடைபெறும் 2-ம் அனல் மின் நிலை விரிவாக்கத்தில் 250 மெகாவாட் மின்னுற்பத்தி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. எஞ்சிய 250 மெகா வாட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். நிறுவனத்தின் நிதிநிலையும் நல்ல நிலையில் உள்ளதால் புதிய திட்டங்கள் விரைவில் நிறைவேற வாய்ப்புண்டு.  மாநில அரசுக்கு தற்போது 1,000 மெகா வாட் மின்சாரம் தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
 
            இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. பத்திரிகைகளின் பலம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். எனவே ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஏ.ஆர்.அன்சாரி கேட்டுகொண்டார்.  பேட்டியின் போது என்.எல்.சி. இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜே.மகிழ்செல்வன் மற்றும் எஸ்.கே.ஆச்சார்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

கடலூரில் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்கள்

கடலூர்:

            கடலூரில் சாலையோர உணவகங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட்டு, உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

                விலைவாசி ஏற்றம் காரணமாக கடலூர் மாவட்ட ஹோட்டல்களில், உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 1.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரமான கடலூரில், ஹோட்டல் பண்டங்களின் விலை அதிகமாக உள்ளது. கடலூரில் தரமான சைவ ஹோட்டல்களில் சாப்பாடு விலை ரூ.45 முதல் ரூ.100 வரை உள்ளது. மெஸ்களில் சாப்பாடு விலை ரூ.35. ஹோட்டல்களில் 2 இட்லி விலை ரூ.12 முதல் ரூ.20 வரை. தோசை விலை ரூ.30.சாலையோரக் கடைகளில் ரேஷன் அரிசி இட்லி ஒன்றின் விலை ரூ.4. அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூடைகளில் சுமந்து விற்கும் இட்லி விலை ரூ.2. அசைவ உணவுகளைப் பொருத்தவரை, சாலையோரங்களில் கோழி பிரியாணி, குறைந்தபட்ச விலை ரூ.50. தரமான ஹோட்டல்களில் விலை ரூ.100-க்கு மேல்.2 மாதங்களுக்கு முன் காய்கறிகள், பருப்பு, எண்ணெய் விலைகள் பெருமளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, கடலூரில் உணவுப் பண்டங்களின் விலைகள் சென்னை ஹோட்டல்களுக்கு நிகராக உயர்த்துவிட்டன.

              இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் ஹோட்டல்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அவர்கள் கையேந்தி பவன்களையும், சாலையோர உணவகங்களையும், கூடைகளில் சுமந்து சாப்பாடு, இட்லி விற்போரையும் நாட வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.இதனால் இத்தகைய கடைகளின் எண்ணிக்கை கடலூரில் அண்மைக்காலமாக பெருமளவு அதிகரித்து இருக்கிறது.ஏழை மக்கள், உடல்நலமின்றி கடலூர் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, கோரிக்கை மனுக்களை அளிக்க வருவோர், அவர்களின் உறவினர் உள்ளிட்டோர், உணவுக்காக, கையேந்தி பவன்களையும், கூடையில் சுமந்து வந்து விற்போரையுமே நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

              கடலூர் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு புறநோயாளிகள் வருகை 4 ஆயிரத்தைத் தொட்டு விட்டது. திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்குக் குறைந்தபட்சம் 1,000 மனுக்கள் வருகின்றன. மனுக்களுடன் வருவோர், சுமார் 5 ஆயிரம் பேர். இவர்களின் பசியைப் போக்குவோர் கையேந்தி பவன்களை நடத்துவோரும், கூடைகளில் சுமந்து வருவோர்தான். ஆனால் இந்த உணவுப் பண்டங்களின் தரம் சொல்லும் தரமன்று. உணவுப் பண்டங்களை எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கிறார்கள் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக உள்ளது. 

               தள்ளுவண்டிகளில் கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ் என, டம்ளர்களில் விற்கும் உணவுப் பொருள்கள், அவற்றுக்கு வழங்கப்படும் மோர் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றின் சுகாதாரத் தரம் எதற்கும் அளவுகோல் இல்லை.கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதாக மார்த்தட்டிக் கொள்ளும் மருத்துவமனை அதிகாரிகள், நோயாளிகளுடன் வரும் 9 பேர், மருத்துவமனை வாயிலிலேயே சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிட்டு, பல்வேறு நோய்களையும் வாங்கிக் கொண்டு ஊர்திரும்புகிறான் என்பதை, தேசிய தரச்சான்றுக்காகக் காத்து இருக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனதேன்? சுகாதாரத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இதுபற்றிக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 

             "கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிநீர், சுடுநீர் கூட தனியார் தொண்டு நிறுவனம்தான் வழங்குகிறது.கடலூர் நகரிலேயே மிகவும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் கிடைக்கும் இடம் அரசு மருத்துவமனை வளாகம்தான்.இது குறித்து மருத்துவத் துறை, சுகாதாரத் துறை கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இவர்கள்தான் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றுப் பெற்றுத்தரப் போகிறார்களாம் பெரும்பாலான தனியார் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில், நிர்வாகம் சார்பில் சுகாதாரமான, நியாயமான விலையில் உணவுப் பண்டங்கள் கிடைக்கும், கேன்டீன்கள் நடத்தப்படுகின்றன.

                  ஆனால் இங்கு அதற்கான எந்த முயற்சியும் அரசு மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில், கேன்டீன்களை சுயஉதவிக் குழுக்கள் மூலம் நடத்தலாம்.காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்தபோது, ஹோட்டல்களில் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் காய்கறி உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்தும், பண்டங்கள் விலை குறைக்கப் படவில்லை என்றார்.

Read more »

பண்ருட்டியில் நகைக்கடை உரிமையாளர் மர்ம மரணம்; நகை பணம் கொள்ளை

பண்ருட்டி:

               பண்ருட்டி -  ராஜாஜி சாலையில் உள்ள ஸ்ரீ கணேஷ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர் சண்முகம் செட்டியார். வயது 76. இவர் அந்தப் பகுதியில் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுபவர். அடகுக்கடை உரிமையாளரான அவர், வீட்டின் மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை, அவர் மர்மமான முறையில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் முக்கிய அறையில் அடகு நகைகள், பணம் முதலியவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பாராம். அந்தப் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை போயுள்ளன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு பெருமளவில் இருக்கும் என்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சி.பி.எஸ்.சி.,10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

              சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளையும், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் 24ம் தேதி வெளியாகிறது. சி.பி.எஸ்.சி., சென்னை மண்டலத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார், டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடந்தது. இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளையும், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, வரும் 24ம் தேதியும் வெளியிட சி.பி.எஸ்.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Read more »

2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

கடலூர் : 

              கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மழையின் காரணமாக சேதமடைந்த 180 மீட்டர் மதில் சுவரை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

                 கடலூர் அண்ணா விளையாட்டு அருகில் வடக்கு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள மதில் சுவர்கள் இடித்து விழுந்து சேதமடைந்தது. இதே போன்று கடந்த மழையின் போது கலெக்டர் அலுவலகம் சாலை பகுதியில் உள்ள மதில் சுவர் அருகே இருந்த பிரமாண்ட மரம் முறிந்து விழுந்ததால் மதில் சுவர் சேதமடைந்தது. இதனால் அண்ணா விளையாட்டரங்கில் பாதுகாப்பு இல்லாமலும், கால்நடைகள் மைதானத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 180 மீட்டர் தூரத்திற்கு சேதடைந்துள்ள சுற்றுச்சுவரை புதிதாக கட்ட 2.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளது.

Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

கடலூர் : 

           கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. 

           தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முன்தினம் முதல் துவங்கியது. ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்றைய தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 

 விண்ணப்பக் கட்டணம் 

எம்.காம்., - எம்.எஸ்சி., பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் 43 ரூபாயும், 
பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., பாடப் பிரிவுக்கான விண்ணப்பம் 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more »

2011-2012-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பம்

           2011-2012-ம் கல்வி ஆண்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.

           விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (டயட்), அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ஜுன் மாதம் 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read more »

திருச்சியில் புதிய ஐஐஎம்: ஜூன் 15ல் திறப்பு

          திருச்சியில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) 60 மாணவர்களுடன் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

          புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

           முதல் பிரிவில் 60 மாணவ, மாணவியர்களுடன் ஜூன் 15 ம் தேதி ஐஐஎம் திறக்கப்பட உள்ளது. 20 பேராசிரியர்களுக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே மேலும் 4 அல்லது 5 பேரைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

Read more »

Free textbooks distribution likely in June

CUDDALORE:

         Free textbooks for school students are likely to be distributed by first week of June after getting the concurrence of the new School Education Minister, C.Ve. Shanmugham.

      From this academic year, equitable education syllabus will be introduced up to Standard X (already it is in effect in the Standard VI), according to C. Amudhavalli, Chief Educational Officer. She was addressing a meeting of headmasters of government-run and government aided schools convened here on Monday. She said that in the Plus- Two public examinations, the district's performance had moved up from 27th place to 24th place in the State.

          The department was trying to place Cuddalore within the 20th position next year. She said that the onus was on headmasters and teachers to identify the Standard X and XII students, who had lesser attention span and grasping power at the beginning of the academic year itself, and give them special coaching. Ms. Amudhavalli told the headmasters of the schools whose Plus-Two results had shown a declining trend of two to three per cent to work on the weaker areas to improve the results this year.

           She said that in the recent Plus-Two public examinations 1,072 students failed in mathematics and, therefore, this was one area where the headmasters and the teachers ought to concentrate more. Ms. Amudhavalli said that “online employment registration” for those who had completed Standard X and Plus-Two would begin in the respective schools on May 25, the day of marksheet distribution. This task ought to be completed within 15 days. For the purpose of registration, students should bring photo copies of ration cards for entering their numbers in the system. In the case of students who had already enrolled their names in the employment office registers, the registration numbers should be keyed in. In this regard, a training programme would be organised for teachers on May 19 and 20. This would avoid the rush to the employment office . 

Students could also visit 


for registration.

Read more »

NLC makes public its Navratna status

CUDDALORE: 

           The Neyveli Lignite Corporation today made public its Navratna status, 35 days after it was conferred by President Pratibha Patil in New Delhi on April 11, 2011.
 
         Revealing this fact at a press conference held at Neyveli on Tuesday, NLC Chairman-cum-Managing Director A.R. Ansari said that now the public sector enterprise had been elevated from the Mini-Navratna to Navratna status, based on its continuous excellence in performance in terms of electricity generation, lignite mining and turnover. Mr. Ansari said that the honour could not have been possible without the full cooperation of the officials, employees and the workforce. All these days, the NLC could not announce its exalted status because the Model Code of Conduct was in force on account of the Assembly elections. The Navratna status brings with it financial and administrative autonomy for the NLC, as hereafter it could decide on its own projects in the country. However, for taking up joint ventures and investing

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior