கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென கோடை மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனல் காற்று வீசுவதால் வீட்டிற்குள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை வரும் சூழல் ஏற்பட டது. காலை நேரத்தில் மேகமூட்டத்துடன் இடி மின்னல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கோடை மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து காலை 9.30 மணி வரை பெய்த மழையால் பூமியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடை மழையால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.