உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

கடலூரில் முதல்வர் கருணாநிதி 9-ம் தேதி பிரச்சாரம்

கடலூர்:
           
              தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9-ம் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுகிறார்.குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி உள்ளிட்ட கடலூர் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மஞ்சக்குப்பம் மைதானம், மேடை உள்ளிட்டவற்றை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை இரவு பார்வையிட்டார். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், 
                 முதல்வர் கருணாநிதி 9-ம் தேதி கடலூர் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கான நல திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பார்க்கிறேன்.தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ள திட்டங்களையும் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக வந்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் கொடிகள் மட்டும்தான் உள்ளன. தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.


Read more »

2011 தமிழகத் தேர்தல் : புவனகிரி சட்டமன்றத் தொகுதி மக்களின் ஒட்டு யாருக்கு?

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயத் தொழிலாளிகளிடம், இந்த தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்கு? எனக் கேட்ட போது அவர்கள் பட்டென்று அளித்த பதில்கள்: 

உஷாராணி (பூந்தோட்டம்)

              திமுக ஆட்சியில் இலவசங்கள் கொடுத்துள்ளார்கள். ஆனால் விலைவாசி குறையவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சி வர வேண்டும். சேவை செய்யும் கட்சிக்குதான் ஓட்டுப் போடுவோம்.
 
முருகேசன் (வாக்கூர்)

             திமுக ஆட்சியில் இலவச திட்டங்கள் கொடுத்தார்கள், கருணாநிதி 5 ஆண்டுகள் ஆண்டு விட்டார். இந்த ஒருமுறை அம்மா வரட்டும். அவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுப்போம்.


பிரியா (வெய்யலூர்)

                முதலில் மதுபானக் கடைகளை மூட வேண்டும். எங்களுக்கு இலவசம் வேண்டாம்ங்க. வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் ஜாதி சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்க வேண்டும்.5 ஆண்டுகள் திமுக ஆண்டுள்ளது. இந்த முறை மாற்றம் தேவை. அதனால "அம்மா'வுக்கு ஓட்டுப் போடுவோம்.

Read more »

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பங்கேற்ப்பு


விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
 
விருத்தாசலம்:
 
              மின்சாரமே பற்றாக்குறையாகவும், தேவையான போது கிடைக்காமலும் உள்ள நிலையில் இலவசமாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ள மிக்சியை எங்கே வைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.
 
விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியது:
 
                 எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. ஆனால் நாங்கள் யுத்த களத்தில் உள்ளோம். இது காங்கிரஸýக்கும் மானமுள்ள பிள்ளைகளுக்கும் நடக்கும் யுத்தம்.காங்கிரûஸ தோற்கடிப்பது மட்டும் நமது நோக்கமல்ல. காங்கிரஸ் தாய் தமிழ் நிலத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கருணாநிதிக்கு மட்டும்தான் தேவை.
 
               சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்தும், நடந்து செல்ல சாலை இல்லை. பாதையை சரிசெய்யாத அரசு, எப்படி மக்களை நல்ல பாதையில் வழிநடத்திச் செல்லும்?.மனித வாழ்க்கைக்கு மின்சாரம் முக்கியமாகும். சின்னஞ்சிறு நாடுகள் கூட தடையில்லா மின்சாரத்தை வழங்குகிறது.ஆனால் இங்கு மின் உற்பத்திக்கு வழியில்லை. இந்த நிலையில் கிரைண்டர், மிக்ஸியை வாங்கி எங்கே வைப்பது?. 
 
             அனைவருக்கு ஒரே கல்வி நிலை உருவாக்கப்பட்டிருக்கிறதா?, ஏழைக்கு ஒரு நிலை, பணக்காரருக்கு ஒரு நிலை. எதற்கெடுத்தாலும் இலவசம்.வளர்ச்சி திட்டம் ஏதேனும் உண்டா?, நான்கு திட்டங்கள்தான் செயல்படுத்தப்படுகின்றன. இலவசம், மானியம், போனஸ், சலுகை இவை மட்டும் தான் செயல்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் தேர்தலை பற்றி சிந்திப்பவர்கள். தலைவர் அப்படியல்ல. எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள். அப்படி ஒரு தலைவரும் இங்கு இல்லை.
 
            காங்கிரஸ் தமிழ் உணர்வுக்கு எதிரான கட்சி. காவிரி நீர்ப் பிரச்சனையில் காங்கிரஸின் நிலை என்ன?. முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸின் நிலை பற்றி இந்த தொகுதி வேட்பாளரிடம் கேளுங்கள்.ஊழலில் தலைசிறந்த நாடாக இந்தியா இருக்கிறது. 2-ஜி அலைக்கற்றை ஊழல். போபர்ஸ் பீரங்கி ஊழல். ஆதர்ஸ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் ஊழல் என இருக்கிறது.கருணாநிதி ஊழலுக்கு நெருப்பு என்கிறார். ஆனால் அவர்தான் ஊழலுக்கு பொறுப்பு என்றார் சீமான்.

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து பிருந்தா காரத் பிரச்சாரம்


சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் (இடதுகோடி).
 
சிதம்பரம்:
 பிரச்சாரம் 
             திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.
 
சிதம்பரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணனை ஆதரித்து சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசியது:
 
              அதிமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல. கடந்த 5 ஆண்டுகளாக கருணாநிதி தலைமையிலான திமுக செய்து வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜெயலலிதா தலைமையில் 9 அரசியல் கட்சியினர் இணைந்து உருவாக்கியது இக் கூட்டணி. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியில் பல்வேறு விதமான சமூக நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை பாரம்பரியமாக நான் மதித்ததுண்டு. ஆனால் இப்போது அவையெல்லாம் எங்கே போனது. தமிழகம் ரொம்ப வித்தியாசமாக மாறிவிட்டது.
 
                 திமுகவின் அரசியல் சர்க்கஸ் வரும் 13-ம் தேதிக்கு பிறகு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் உள்ளது. அது நடக்கும். மக்கள் மீது காங்கிரஸ், திமுக கட்சிகள் இரட்டைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சட்டப் பேரவைத் தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ளது. இதில் திமுக அரசை அகற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே, ஏன்? உலகுக்கே நல்ல பாடத்தை தமிழகம் கற்பிக்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் குரல் எழுப்பினார்களா? விலைவாசி உயர்வு பற்றியும், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை பற்றியும் குரல் எழுப்பினார்களா? இல்லை. 
 
              அப்போது இடதுசாரிகளும், அதிமுகவும் தான் குரல் கொடுத்தது.மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பணக்காரர்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வரிச் சலுகையை விட்டு கொடுத்துவிட்டு விவசாயிகள் மீதான வரிச் சுமையை அதிகரித்துள்ளது. இதற்காக நாங்களும், அதிமுகவும்தான் குரல் கொடுத்தோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆயிரம் கோடியை கடலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் வெள்ளத்தால் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணலாம். விவசாயிகள் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யலாம்.
 
 
              இதனால், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மலர அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் பிருந்தா காரத்.கூட்டத்துக்கு அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். தேமுதிக நகரச் செயலாளர் கே.விஜயகுமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
 
 

Read more »

மதுரை லேடிடோக் கல்லூரியில் எம்.எஸ்சி., நானோ அறிவியல் படிப்பு வரும் கல்வியாண்டு முதல் துவங்குகிறது

          மதுரை லேடிடோக் கல்லூரியில் எம்.எஸ்சி., நானோ அறிவியல் படிப்பு, வரும் கல்வியாண்டு முதல் துவங்குகிறது.
  
கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா கூறியது: 

            பல்கலை மானியக் குழு, 51 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இந்நிதி மூலம் ஐந்தாண்டுகளும், அதன்பின் கல்லூரியின் சார்பிலும் பாடத்திட்டம் நடத்தப்படும். நானோ துகள்களை கண்டறியும் "அட்டாமிக் போர்ஸ் மைக்ரோஸ்கோப்' கருவி 31 லட்ச ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. தற்போது அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் என்பதால், அறிவியலில் ஆர்வமுடைய மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பயோ டெக் மாணவிகள் நானோ அறிவியல் படிப்புக்கு தகுதியுடையவர்கள். பொது நுழைவுத் தேர்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை நடைபெறும். ஏப்., 4 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.

அதிக விபரங்களுக்கு  


Read more »

கடலூர் மாவட்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியை பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டம்

கடலூர் : 

             இந்தியா உலக கோப்பை வென்றதும் மாவட்டம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, மாதிரி உலக கோப்பையுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


              பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகள் நடத்தின. பிப்ரவரி 19ம் தேதி முதல் துவங்கிய போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 14 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் இலங்கை, நியூசிலாந்தையும், இந்தியா, பாகிஸ்தானையும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. பொரும்பாலான பகுதிகளில் ரசிகர்கள் "டிவி'யில் கிரிக்கெட் பார்க்க வீட்டிற்குள் முடங்கியதால் வீதிகள் வெறிச்சோடின.



            கடை வீதியில் உள்ள ஒரு சில கடைகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டிருந்தன. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது. இந்திய அணி விளையாடியத் துவங்கியதும் ஷேவாக் இரண்டாவது பந்திலும், டெண்டுல்கர் 18 ரன்னிலும் அடுத்தடுத்து "அவுட்'டானதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. நட்சத்திர வீரர்கள் அவுட்டானதால் ரசிகர்கள் பெறும்பாலானோர் இரவு 7 மணிக்கு "டிவி'யை ஆப் செய்து விட்டு ஆங்காங்கே தெருக்களில் கூடி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

              இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய வீரர்களால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறி வெற்றிக் கனியை பறித்தது. அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும், தேசிய கொடியுடன், தாரை தப்பட்டையுடன் வலம் வந்து ஆரவாரத்துடன் கொண்டாடினர். திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் ரசிகர்கள், மாதிரி உலக கோப்பையுடன் ஊர்வலமாக வந்து இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.

Read more »

உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் : மருத்துவ சங்கத் தலைவர் சடகோபன்

கடலூர் : 

            ""உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம்'' என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சடகோபன் கூறினார். 

கடலூரில் இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் சடகோபன் கூறியது: 

               இந்திய மருத்துவ சங்கம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 200 கிளைகள் உள்ளது. இதில் 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 23 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் இறக்கும் போது மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். நான் பதவியேற்ற மூன்று மாதத்தில் 16 இடங்களில் தனியார் மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. தாக்குபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. 

              இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. ஐந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று பணிபுரியாத நிலையில், மூன்றரை ஆண்டுகளில் பேச்லர் ரூரல் ஹெல்த் சர்வீஸ் (பீ.பி.எச்.எஸ்) முடித்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று எப்படி பணிபுரிய முடியும். மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆங்காங்கே மரங்கள் வெட்டப்படுகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. 

              இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூன்று மாதத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது, சிகரெட், பாஸ்ட் புட் ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது. சரியான உணவு கட்டுப்பாட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தலைவர் சடகோபன் கூறினார். டாக்டர்கள் ராஜேந்திரன், சந்திரன், சந்திரலாதன் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மருத்துவக் கல்லூரியை நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத்

கடலூர் : 

              ""கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை பொதுமக்களின் வசதிக்காக நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் கூறினார். 

இதுகுறித்து அ.தி. மு.க., வேட்பாளர் சம்பத் கூறியது: 

             அ.தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்றால் கடலூரில் தரமின்றி நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி தரமாக அமைக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கவும், நகர மேம்பாட்டை கருத்தில் கொண்டு கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொலைநோக்கு பார்வையோடு குடிநீர் திட்டங்களை கொண்டு நகராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், மீன்களை இருப்பு வைக்க குளிர்பதன குடோன் அமைக்கப்படும். 

              கடலூர் நகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தி முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் ஜெ., அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் விடுதி வசதியுடன் ஏற்படுத்துவேன். மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலன் கருதி நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். 

                கடலூர் நகரையொட்டியுள்ள பாதிரிக்குப்பம், கோண்டூர், சாவடி, உண்ணாமலை செட்டிச்சாவடி, குண்டுஉப்பலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவேன். இவ்வாறு சம்பத் கூறினார்.

Read more »

In this election season, a wall that unites

CUDDALORE: 

         The compound wall of a house at M. Pudur in Arisiperiyankuppam panchayat near here has raised many eyebrows as it carries an interesting mix of graffiti including the symbols of both the Dravida Munnetra Kazhagam and the All India Anna Dravida Munnetra Kazhagam.

         The house falls within the jurisdiction of the Kurinjipadi Assembly constituency. One section of the wall writing appeals to the people to vote for the DMK candidate M.R.K. Panneerselvam, Health Minister, in the April 13 elections. The party symbol “Rising Sun” has been prominently displayed and also written is the name of the Arisiperiyankuppam Panchayat President K.S. Arul Nathan. Interestingly, the “Two Leaves” symbol painted in fluorescent green is also juxtaposed with the DMK symbol and carries a caption “it is our symbol” without mentioning any name. When contacted, Mr Arul Nathan said that the inhabitants of the house were staunch supporters of the DMK. However, the son-in-law of the family happens to be the follower of the AIADMK leader and hence, provision had been made to accommodate both the symbols at the same place.

         A message covering both the symbols welcomes Deputy Chief Minister M.K. Stalin for laying foundation stone (recently) for a government medical college in the area. Mr Arul Nathan further said that there was full consensus on the graffiti among the family members. It signified that persons professing different political ideologies could live in unison under one roof and also declare the same to the public. The local people are also appreciative of the fact that a healthy democracy always has space for various shades of political opinions which will not be circumscribed by animosity and acrimony. Some opine that the political parties are opponents and not rivals and should bury their differences after the elections to work for the State.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior