உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 31, 2011

2011 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி ஆட்டத்தில் நுழைந்தது



மொஹாலி:

           மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

              முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பையில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது.இந்தியா வெற்றி பெற்றதும், மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் உற்சாகக் கோஷம் விண்ணை முட்டியது. போட்டியை நேரில் கண்டு ரசித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பரபரப்பான இறுதி கட்டத்தில் எழுந்து நின்றபடி ஆட்டத்தை ரசித்தனர். வெற்றி பெற்றதும் ரசிகர்களின் உற்சாகத்தில் அவர்களும் பங்கேற்று கைதட்டி இந்திய அணிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

              பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் ஆட்டத்தை இறுதி வரை கண்டுகளித்தனர். வெற்றிக்குப் பின் இருவருமே இந்திய அணியைப் பாராட்டும் வகையில் கைதட்டினர். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தபோதிலும், வீரர்கள் மிகுந்த நட்புறவுடனேயே ஆடினார்கள். இரு அணி வீரர்களும் ஒருபோதும் மோதல் போக்கில் ஈடுபடவில்லை.நாடு முழுவதும் கொண்டாட்டம்:

            இந்தியாவின் வெற்றி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். இந்தியா வெற்றி பெற்றதும் நாடு முழுவதுமே பட்டாசுகளை வெடிக்கும் சப்தம் எதிரொலித்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய திரைகளில் இந்தியாவின் வெற்றியைக் கண்டுகளித்த ரசிகர்கள் ஆடல், பாடலுடன் வெற்றியைக் கொண்டாடிவிட்டே வீடு திரும்பினர்.

வரலாறு தொடர்கிறது: 

               உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ந்து வென்று வருகிறது. இதற்கு முன் 4 உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் 5-வது முறையாக இந்தியாவின் வெற்றி வரலாறு தொடர்கிறது.

3-வது முறையாக இறுதி ஆட்டத்தில் இந்தியா

            உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. அப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

             அதன் பின்னர் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் இந்திய அணியால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடிந்தது. ஆனால் அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது.அதன் பின்னர் இப்போதுதான் இந்திய உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி இப்போது நல்ல பலத்துடன் உள்ளது. தவிர இந்திய அணியின் மற்ற கேப்டன்களைவிட தோனிக்கு அதிர்ஷ்டம் அதிகம். 

               எனவே இந்த முறை இந்தியா எப்படியும் உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆசிய அணிகள் : இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக இரு ஆசிய அணிகள், இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன. தவிர இரு நாடுகளும் போட்டியை நடத்தும் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.2007 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதற்கு முந்தைய (2003) உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

Read more »

தமிழகத் தேர்தல் : திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பார்வையில்

தினமலருக்கு அளித்த பேட்டி










  
தமிழர்களின் நிலையைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர்! 
தங்கர்பச்சான் திரைப்பட இயக்குனர்

 இயற்பெயர் : தங்கராஜ், 
வயது : 49, 
சொந்த ஊர் : பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக்கோட்டை, 
படிப்பு : ஒளிப்பதிவில் டிப்ளமா, 
தொழில் : விவசாயம், 
எழுத்து : நான்கு நாவல்கள், 
விருது : தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர், 
போராட்டம் : தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியவை, 
அரசியல் அனுபவம் : இல்லை


                     அரசியல் கட்சிகளின் இலவச திட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு எதிராக கொதித்தெழுந்து, அறிக்கை விட்டு சமீபத்திய பரபரப்புக்கு தூபம் போட்டிருக்கிறார், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட தங்கர்பச்சான். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள வீட்டிற்கு சென்றதும், தனது கிராமத்து தோட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு அடை, வாழைப்பழம் உபசரிப்புடன் துவங்கியது சந்திப்பு.

அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் தான் சமீபத்திய புது அவதாரமா?

                 கடந்த 22 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். எனது பேச்சும், எண்ணமும், படைப்புகளும் ஆரம்பம் முதலே மொழி, இனம் மக்கள் சார்ந்த அக்கறையுடன் இருக்கும். ஜாதி, மதம் என்ற பெயரில், ஒவ்வொரு தமிழனின் தலையும் அரசியல் கூட்டணியிடம் அடமானம் வைக்கப்படுகிறது. மக்களை வியாபாரப் பொருளாக மாற்றியுள்ளனர். தமிழன் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி, வெளியில் சென்றால் மதுக்கடை, திரையரங்கம் என அவனை சிந்திக்கவே விடுவதில்லை. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான், தேர்தல் அறிக்கைகளை விமர்சித்ததற்கான பிரதான காரணம்.

தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரு பிரதான கட்சிகளுமே பூரண மதுவிலக்கு பற்றி வாய் திறக்கவில்லை. இந்நிலையில், வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

               தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் மீதும், பல விஷயங்களில் நன்மதிப்பு வைத்திருக்கிறேன். இரண்டு கட்சியும், வெவ்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டு என்னால், "ஜால்ரா' போட முடியாது. துணிந்து சொல்கிறேன், திருவள்ளுவரை வைத்து ஏமாற்றுவதை இனி அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில், பொதுப் பிரச்னைகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராடினர் என்ற வரலாறே கிடையாது. மொழிப்போர் பிரச்னையைத் தான் இன்னும் சொல்லிக் கொண்டி ருக்கின்றனர். இலவசங்கள் கிடைக்கவில்லை; சம்பள உயர்வு வேண்டும் என்பது போன்ற சுய நலம் சார்ந்த போராட்டங்களில் மட்டுமே பலதரப்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளாக, நாட்டையும், மாநிலங்களையும் சில குடும்பங்கள் மட்டுமே 50 ஆண்டாக ஆள்கின்றன. அப்படி என்றால் எகிப்து, லிபியாவில் நடந்து கொண்டிருக்கும் புரட்சி, எங்கு வெடித்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

             பா.ஜ.,வும், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளித்துள்ளன... இந்த மூன்று கட்சிகளுமே ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தி.மு.க., வெற்றி பெற்றால், அந்தக் கட்சி மட்டும் தான் ஆளப்போகிறது. கூட்டணிக் கட்சிகள், ஒரு ஓரத்தில் வேண்டுமானால் நிற்கலாம். இவர்கள் தி.மு.க, விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்து எதுவுமே சொல்லவில்லை. சொல்லப்படாத அந்த அறிக்கையில் இருப்பது என்ன வென்பது அனைவருக்குமே விளங்கும்.

பூரண மதுவிலக்கை எதற்காக அமல்படுத்த வேண்டும் என்கிறீர்கள்?

                  இன்று எடுக்கப்படும் மசாலா திரைப்படங்களும், மதுக்கடைகளும் தமிழனை மயக்கத்தில் வைக்கிற ஒரே பணியை செய்கின்றன. தமிழனுக்கென வரலாறு, கலாசாரம், திறமை இருக்கிறது. 10 கோடி பேர் உள்ள தமிழன், மதுப் பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறான். இந்நிலையை மாற்றத் தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, என்னைப் போன்றவர்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இளைஞர் முதல் முதியவர் வரை, "டாஸ்மாக்' கடையை முற்றுகையிடும் நிலையில், இதெல்லாம் சாத்தியமா?

                தமிழகத்தில் எந்தப் பெண்ணும், மது விற்பனையை ஆதரிக்கவில்லை. குடிப்பவனும், ஏதாவது காரணத்தை முன் வைத்து தான் குடிக்கிறான். மதுவிலக்கை அமல்படுத்தினால், அவனால் குடிக்க முடியாது. வாக்காளர்களில், மது குடிப்பவர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது என்பதற்காக, மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது. "மதுவிலக்கை அமல்படுத்தினால், அந்த வெறியில் பலர் இறந்துவிடுவர்' என்கின்றனர். மது குடித்தாலும், அவன் சாகத்தான் போகிறான். அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்தத் திட்டத்தை அறிவிக்கும் அரசியல் கட்சியை அனைத்து தரப்பு மக்களும், தூக்கி வைத்துக் கொண்டாடத் தயாராக இருக்கின்றனர். "மது நாட்டிற்கு வீட்டிற்கு, உயிருக்கு கேடு' என்று எழுதிவைத்துவிட்டு, அதை அரசாங்கமே விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுவிலக்கை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி.

தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய மூன்று கட்சித் தேர்தல் அறிக்கைகளிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...

                இலவசங்கள் அறிவிப்பதே, தனி மனிதனின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல் தான். ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால், அவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும். இலவசங்களை வாங்கி, கண் முன்னே எரிக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் திருட்டுத்தனத்திற்கு மக்களை உடன் வைத்துக் கொள்ள, பணம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என நினைக்கின்றனர். வெளிநாடுகளைப் போல கல்வி, மருத்துவம் மட்டுமே இலவசமாக வழங்க வேண்டும். இந்த இரண்டை தனியாருக்கு கொடுத்துவிட்டு, மக்களை அழிக்கும் மதுவை அரசு விற்பது வேடிக்கை, வேதனை.

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான், அரசியல் கட்சிகளின் பிரசார பீரங்கிகளாக இருக்கின்றனர்...

               திரைத்துறையில் இருப்பவன், வயதாகும் வரை அதைப் பிழைப்பாக கருதுகிறான். சினிமாவில் இருக்கும் வரை, பொதுமக்களைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு, அரசியலுக்கு வந்தால், அதை தியாகம் என்கிறான். என்னைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதையும், பிழைப்பு என்றே கூறுவேன்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லையா?

              மதுக்கடைகளை விட மோசமான வேலையை, இந்த 100 நாள் வேலை திட்டம் செய்து கொண்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களை சோம்பேறிகளாக்கும், நிலங்களை மலடாக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே மின் தட்டுப்பாட்டால், விவசாய உற்பத்தி படுத்துவிட்டது. விவசாய துறைக்காக நியமிக்கப்படும் அமைச்சர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை. விவசாய உற்பத்தியை மேம்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

முடிவாக என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

            காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகளை, தொலைக்காட்சியில் பார்த்து நாம் சிரித்துக் கொண்டிருப்பது போல், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழனையும், தமிழகத்தின் நிலையையும் பார்த்து, அங்குள்ள மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். இளைஞர்கள் விழித்தெழுந்தால் தான் நாடு மீண்டும் தலை நிமிரும். எனவே, இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி, போராட முடிவு செய்திருக்கிறேன்.


நன்றி: தினமலர் 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் போட்டி

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியில் 35 சுயேச்சைகள் உட்பட 80 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது. 

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் விவரம்: 

திட்டக்குடி (தனி):

தங்கமணி (பி.எஸ்.பி) யானை, 
இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும் அம்பு, 
கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிந்தனைச்செல்வன் (வி.சி) மெழுகுவர்த்தி, 
தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

உலகநாதன் - கிரிக்கெட் மட்டை, 
சுமன்- தையல் இயந்திரம், 
தனசேகர் - காஸ் சிலிண்டர், 
பழனியம்மாள் - கூடை, 
முத்துகுமார் - கூரை மின் விசிறி. 


விருத்தாசலம்: 

அருட்செல்வம் (பி.எஸ்.பி) யானை, 
நீதிராஜன் (காங்) கை, 
பழமலை (பா.ஜ) தாமரை, 
கிருஷ்ணமூர்த்தி (ஐ.ஜெ.கே) மோதிரம், 
முத்துகுமார் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

அருண்குமார் - வயலின், 
சந்தானமூர்த்தி - தேங்காய், 
சுலோச்சனா- மெழுகுவர்த்திகள், 
ராஜேந்திரன்- கூடை. 

நெய்வேலி: 

கற்பகம் (பா.ஜ) தாமரை, 
சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம், 
இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
குமார் (ஐ.ஜே.கே) மோதிரம், 
லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சந்திரா-மின் கல விளக்கு, 
குமரகுரு- ரம்பம், 
பாண்டியன்-முரசு. 

குறிஞ்சிப்பாடி: 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பன்னீர்செல்வம் (தி.மு.க) உதயசூரியன், 
பிரேமலதா (பி.எஸ்.பி) யானை, 
வைரக்கண்ணு (பா.ஜ.க) தாமரை, 

சுயேச்சை 

பன்னீர்செல்வம்-இறகுபந்து. 

பண்ருட்டி: 

ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 

சுயேச்சைகள் 

குப்புசாமி - தபால் பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட் மட்டை, 
வேல்முருகன் -அலமாரி. 

கடலூர்: 

குணசேகரன் (பா.ஜ) தாமரை, 
சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன், 
சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சக்திதாசன் -பட்டம், 
ராஜன்-மோதிரம். 

புவனகிரி: 

அறிவுச்செல்வன் (பா.ம.க) மாம்பழம், 
சாமி (பி.எஸ்.பி) யானை, 
செல்விராமஜெயம் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
கமலக்கண்ணன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
திருவரசமூர்த்தி (ஐக்கிய ஜனதாதளம்) அம்பு, 
பழனிவேல் (புரட்சி பாரதம்) மெழுகுவர்த்திகள், 
முத்து (ஜார்கண்ட் முக்தி மோட்சா) வில் மற்றும் அம்பு, 

சுயேச்சைகள் 

கணேசன்-தபால் பெட்டி, 
சவுந்தர்ராஜன் - தொலைக்காட்சி பெட்டி, 
தனராசு -தையல் இயந்திரம்,
பன்னீர்செல்வம் - சீமாட்டி பணப்பை, 
மணி - கேக், 
முருகவேல்- முரசு. 

சிதம்பரம்:

ஸ்ரீதர் வாண்டையார் (தி.மு.க) உதயசூரியன், 
கண்ணன் (பா.ஜ) தாமரை,
செல்லையா (பி.எஸ்.பி) யானை, 
பாலகிருஷ்ணன் (மா.கம்யூ) சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், 
பன்னீர் (லோக் ஜன சக்தி) பங்களா,

சுயேச்சைகள் 

வினோபா- காஸ் சிலிண்டர், 
சத்தியமூர்த்தி- பட்டம், 
அருள்பிரகாசம்- அலமாரி, 
சங்கர்-தொலைக்காட்சிபெட்டி, 

காட்டுமன்னார்கோவில் (தனி): 

பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, 
முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, 
மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், 
ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி, 

சுயேச்சைகள் 

அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, 
நந்தகுமார் - பட்டம், முருகானந்தம் - வயலின்.

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்

வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


கடலூர்: 

குணசேகரன் (பா.ஜ) தாமரை, 
சம்பத் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
புகழேந்தி (தி.மு.க) உதயசூரியன், 
சித்ரகலா (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சக்திதாசன் -பட்டம், 
ராஜன்-மோதிரம்.

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் 

தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 

மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


காட்டுமன்னார்கோவில் (தனி): 

பாரதிதாசன் (பி.எஸ்.பி) யானை, 
முருகுமாறன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பாக்கியராஜ் (புரட்சிபாரதம்) கூடை, 
மோகனாம்பாள் (ஐ.ஜே.கே) மோதிரம், 
ரவிக்குமார் (வி.சி) மெழுகுவர்த்தி, 

சுயேச்சைகள் 

அழகிரி - தொலைக்காட்சி பெட்டி, 
நந்தகுமார் - பட்டம்,
முருகானந்தம் - வயலின்.

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் 

போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் 

சின்னங்கள்

சிதம்பரம்:

ஸ்ரீதர் வாண்டையார் (தி.மு.க) உதயசூரியன், 
கண்ணன் (பா.ஜ) தாமரை,
செல்லையா (பி.எஸ்.பி) யானை, 
பாலகிருஷ்ணன் (மா.கம்யூ) சுத்தியல் அரிவாள் நட்சத்திரம், 
பன்னீர் (லோக் ஜன சக்தி) பங்களா,

சுயேச்சைகள் 

வினோபா- காஸ் சிலிண்டர், 
சத்தியமூர்த்தி- பட்டம், 
அருள்பிரகாசம்- அலமாரி, 
சங்கர்-தொலைக்காட்சிபெட்டி

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

புவனகிரி: 

அறிவுச்செல்வன் (பா.ம.க) மாம்பழம், 
சாமி (பி.எஸ்.பி) யானை, 
செல்விராமஜெயம் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
கமலக்கண்ணன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
திருவரசமூர்த்தி (ஐக்கிய ஜனதாதளம்) அம்பு, 
பழனிவேல் (புரட்சி பாரதம்) மெழுகுவர்த்திகள், 
முத்து (ஜார்கண்ட் முக்தி மோட்சா) வில் மற்றும் அம்பு, 

சுயேச்சைகள் 

கணேசன்-தபால் பெட்டி, 
சவுந்தர்ராஜன் - தொலைக்காட்சி பெட்டி, 
தனராசு -தையல் இயந்திரம்,
பன்னீர்செல்வம் - சீமாட்டி பணப்பை, 
மணி - கேக், 
முருகவேல்- முரசு.

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

பண்ருட்டி: 

ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 

சுயேச்சைகள் 

குப்புசாமி - தபால் பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட் மட்டை, 
வேல்முருகன் -அலமாரி.

Read more »

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 

போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்

சின்னங்கள்

குறிஞ்சிப்பாடி: 

ராஜேந்திரன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
பன்னீர்செல்வம் (தி.மு.க) உதயசூரியன், 
பிரேமலதா (பி.எஸ்.பி) யானை, 
வைரக்கண்ணு (பா.ஜ.க) தாமரை, 

சுயேச்சை 

பன்னீர்செல்வம்-இறகுபந்து.

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில்

போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் 

சின்னங்கள்

நெய்வேலி: 

கற்பகம் (பா.ஜ) தாமரை, 
சிவசுப்ரமணியன் (அ.தி.மு.க) இரட்டை இலை, 
வேல்முருகன் (பா.ம.க) மாம்பழம், 
இளங்கோவன் (லோக் ஜன சக்தி) பங்களா, 
குமார் (ஐ.ஜே.கே) மோதிரம், 
லில்லி (மக்கள் சக்தி கட்சி) ஊதல், 

சுயேச்சைகள் 

சந்திரா-மின் கல விளக்கு, 
குமரகுரு- ரம்பம், 
பாண்டியன்-முரசு.

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்



விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் 
 
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்
 
சின்னங்கள்


விருத்தாசலம்: 

அருட்செல்வம் (பி.எஸ்.பி) யானை, 
நீதிராஜன் (காங்) கை, 
பழமலை (பா.ஜ) தாமரை, 
கிருஷ்ணமூர்த்தி (ஐ.ஜெ.கே) மோதிரம், 
முத்துகுமார் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

அருண்குமார் - வயலின், 
சந்தானமூர்த்தி - தேங்காய், 
சுலோச்சனா- மெழுகுவர்த்திகள், 
ராஜேந்திரன்- கூடை.

Read more »

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்


திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் 

திட்டக்குடி (தனி):

தங்கமணி (பி.எஸ்.பி) யானை, 
இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும் அம்பு, 
கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிந்தனைச்செல்வன் (வி.சி) மெழுகுவர்த்தி, 
தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு, 

சுயேச்சைகள் 

உலகநாதன் - கிரிக்கெட் மட்டை, 
சுமன்- தையல் இயந்திரம், 
தனசேகர் - காஸ் சிலிண்டர், 
பழனியம்மாள் - கூடை, 
முத்துகுமார் - கூரை மின் விசிறி.

Read more »

நெய்வேலி தொகுதியில் என்.எல்.சி. ஊழியரின் வேட்புமனு ஏற்பு

நெய்வேலி:

                நெய்வேலி தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த பாண்டியன் என்பவரது வேட்புமனுவை நெய்வேலித் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டார்.

                நெய்வேலி தொகுதியில் வேட்புமனு செய்திருந்த 9 வேட்பாளர்களில், 8 பேரின் வேட்புமனு திங்கள்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. என்எல்சி ஊழியர் பாண்டியன் சுயேச்சையாக தாக்கல் செய்த வேட்புமனுவை முதலில் நிராகரித்த தேர்தல் அதிகாரி, அவரது வேட்புமனுவை ஏற்பது குறித்து செவ்வாய்க்கிழமை தீர்வு காணப்படும் என்று அறிவித்தார்.

              இதையடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் பாண்டியன் நேரடி அரசு ஊழியர் கிடையாது. மேலும் இவருக்கு மத்திய அரசோ, மாநில அரசோ ஊதியம் வழங்கவில்லை. லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1911ஏ-ன் படி இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதால், பாண்டியனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக கந்தசாமி தெரிவித்தார். 

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் விவரம்: 

தி.வேல்முருகன் (பாமக),  
எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் (அதிமுக) , 
எம்.கற்பகம் (பாஜக), 
பி.சந்திரா (எஸ்யுசிஐ), 
பி.குமார் (ஐஜேகே), 
எஸ்.இளங்கோவன் (லோக்ஜனசக்தி) 

             உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுடன், 

 சுயேச்சை

 சுயேச்சை வேட்பாளர்களான 
எஸ்.பாண்டியன், 
வி.கே.குமரகுரு, 
பி.லில்லி ஆகியோரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி, வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதன்கிழமை சின்னம் அறிவிக்கப்பட்டது.  

            விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், தேமுதிக உள்பட 9 வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை திரும்பப் பெற புதன்கிழமை (மார்ச் 30-ம் தேதி)  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.   இதில் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை. 
  
தேசியக் கட்சி

             1. தேசியக் கட்சிகளான பிஎஸ்பி வேட்பாளர் அருட்செல்வனுக்கு யானை சின்னமும், 

             2. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நீதிராஜனுக்கு கை சின்னமும், 

              3.பாஜக வேட்பாளர் பழமலைக்கு தாமரை சின்னமும் 

         வழங்கப்பட்டுள்ளது.  

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளான 

            ஐ.ஜே.கே. கிருஷ்ணமூர்த்திக்கு மோதிரம் சின்னமும், 
           தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு முரசு சின்னம் 

ஒதுக்கப்பட்டுள்ளது.  
  
சுயேச்சை

சுயேச்சையாக போட்டியிடும் அருண்குமாருக்கு வயலின், 
சந்தானமூர்த்திக்கு தேங்காய், 
சுலோச்சனாவுக்கு மெழுகுவர்த்தி, 
ராஜேந்திரனுக்கு கூடை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர்கள் மீது தாக்கு






சிதம்பரம்: 

           சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடிதோப்பைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி சகுந்தலா (65). உடல்நிலை சரியில்லாமல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலாவின் உறவினர்கள் சிலர், அங்கு பணியில் இருந்த டாக்டர் இளஞ்செழியன், பிசியோதெரபி டாக்டர் நந்தகுமார் ஆகியோரைத் தாக்கினர். 

               டாக்டர்கள் தாக்கப்பட்டதால் சக டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திரண்டு, மருத்துவ கண்காணிப்பாளர் அறை முன் கூடி, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என, ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி., நடராஜ், மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்களை மருத்துவ கண்காணிப்பாளர் விஸ்வநாதன், டி.எஸ்.பி., மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

Read more »

கடலூரில் இன்று வேட்பாளர்கள் கூட்டம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம் கடலூரில் இன்று மாலை நடக்கிறது. 

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ளும், பணியாளர்களை இரண்டாம் கட்டமாக கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யும் பணி இன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக மாலை 3.30 மணிக்கு கடலூர் பீச் ரோட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. எனவே இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி விடுதிக்கு தரமான சாலை அமைக்க கோரிக்கை

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விடுதியில் இருந்து கல்லூரிக்கு அமைக்கப்படும் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

                 சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அரசு மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. விடுதியில் இருந்து கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மழைக் காலத்தில் மாணவர்கள் லுங்கியுடன் சென்று கல்லூரியில் உடை மாற்றும் நிலை தொடர்ந்ததால் பலமுறை மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் தற்போது கல்லூரி வளாகத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் இருந்து முதல் கட்டமாக 100 மீட்டர் தொலைவில் 10 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 

                இரவு நேரத்தில் பொக்லைன் மூலம் சாலை அமைக்க பள்ளம் தோண்டியதால் தற்போது பைப் லைன் துண்டிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சாலை அமைக்கும் இடத்தை சமப்படுத்தாமல் மேடு, பள்ளங்களாக கடமைக்கென சாலை பணி நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இது குறித்து மாணவர்கள் கேட்டதற்கு, வெகு நாட்களாக சாலை அமைக்கப்படவில்லை, தற்போது அமைக்கப்படும் சாலையை தடுத்தால் அதிகாரிகளிடம் சொல்லி சாலை போடுவதையே முழுமையாக நிறுத்தப்படும். 

                 அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லூரி மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவிப்போம்' என மிரட்டுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தலை காரணம் காட்டி ஒதுங்காமல் சம்மந்தப்பட்டவர்கள் நேரில் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior