மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்
நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க தமிழகத்திலிருந்து
1,978 விவசாயிகள் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆத்மா திட்டத்தின் கீழ், பிப்ரவரி 10 முதல் 4 நாள் விவசாயிகள் வசந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதற்காக தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலிருந்து 1,978 விவசாயிகள் 29 வேளாண் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர்.
மதுரையிலிருந்து வியாழக்கிழமை இரவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த பயணத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 129 விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர்.