உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 17, 2010

80 காலி இடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு

                துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 80 காலி இடங்களை நிரப்ப புதிதாக குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. 
 
               துணை கலெக்டர் (ஆர்.டி.ஓ.), போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.                      ஆர்.டி.ஓ., போலீஸ் துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைபதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் கடந்த ஆண்டுக்குரிய 61 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத்தேர்வு கடந்த மே மாதம் 2-ந்தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவு அண்மையில் வெளியானது. வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜனவரி மாதம் 22, 23 ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடத்தப்படுகிறது.                  இந்த நிலையில் இந்த ஆண்டுக்குரிய 80 காலி இடங்களை நிரப்புவதற்காக புதிய குரூப்-1 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்பட அனைத்து விதமான பதவிகளும் இந்த நியமனத்தில் இடம்பெற்றுள்ளன.                     குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். இதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 30 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆட்சியின்போது பிறப்பிக்கப்பட்ட பணிநியமன தடை சட்டத்தின் காரணமாக, தற்போதைய அரசு, எல்லா பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கியது. இச்சலுகை இந்த பணிநியமனத்தோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தீவிர நடவடிக்கை: கலெக்டர் சீத்தாராமன்


கடலூர்:
 
             வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 
 
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

              மழை வெள்ளத்தால் சேதமடைந்த நகராட்சி சாலைகளை சீரமைக்க, தமிழக அரசு கடலூர் நகராட்சியில் 14 கி.மீட்டர் சாலை சீரமைப்பதற்கு ரூ.70 லட்சமும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ. தூரத்திற்கு சாலை சீரமைப்பதற்கு ரூ. 40 லட்சமும், விருத்தசாலம் நகராட்சியில 5 கி.மீ. சாலை சீரமைப்பதற்கு ரூ. 25 லட்சமும் ஆக ரூ. 1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைபோல், கிராம ஊராட்சி சாலைகளை சீரமைப்பதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

                பொதுப்பணித்துறை (நீர் ஆதாரப் பிரிவு) மூலம் வடிகால்கள், உடைப்புகள். ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க ரூ.4.32 கோடியும் ஆக ரூ.17.67 கோடி முதல் கட்டமாக அரசிடமிருந்து பெறப்பட்டள்ளது. மேலும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைப்பதற்கு கூடுதலாக ரூ. 10 கோடி நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

              வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதற்கு ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துமைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட பரவனாறு சீரமைப்பு பணியை கடலூர் கலெக்டர் ஆய்வு

கடலூர்

          கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு சில கிராமங்களில் தண்ணீர் புகுந்தது இது பற்றி அறிந்த கலெக்டர் சீத்தாராமன் பொதுப் பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் அந்த ஆற்றின் உடைப்பை அடைக்கும் பணியை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பரவனாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

                அதனைத்தொடர்ந்து திருவெண்ணைநல்லூர், ஓனாங்குப்பம் ஆகிய இடங்களில் பரவனாற்றில் நடந்த சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூதம்பாடி கிராமத்தில் 2 இடங்களிலும், கல்குணம், ஆடூர் அகரத்தில் 3 இடங்களிலும் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கல்குணம், பூரங்குடி, ஆடூர், அகரம் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தார்.
 
 சீரமைப்பு பணி குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
 

                   மழை வெள்ளத்தால் பரவனாற்றில் 10 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் பணி நடைபெற்று வருகிறது. 3 தினங்களில் அனைத்து உடைப்புகளையும் அடைக்கும் பணி முடிவுற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
               ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் செல்வராஜ், பழனிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் கலியமூர்த்தி, பெரியசாமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, வேளாண்மை இணை இயக்குனர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

கடலூர் அருகே குறைந்த அளவு மண்ணெண்ணெய் சப்ளை: விற்பனையாளர் 2 பேர் திடீர் சஸ்பெண்டு

குறைந்த அளவு சப்ளை:
 
 மண்எண்ணை விற்பனையாளர்
 
 2 பேர்  திடீர் சஸ்பெண்டு; 
 
 அதிகாரி நடவடிக்கை


கடலூர்:

கடலூர் அருகே உள்ள பி.உடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் உளுத்தூர் மற்றும் வடதலைக்குளம் அங்காடிகளில் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோக அளவுக்கு குறைவாக விற்பனையாளர்கள் வழங்குவதாக புகார்கள் வந்தது.

                அதன்படி மேல் புவனகிரி கூட்டுறவு சார்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) விசாரணை நடத்தினார். அவர் அளித்த அறிக்கையின் படி மேற்கண்ட 2 அங்காடிகளின் விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். எந்தஒரு அங்காடியிலாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோக அளவுக்கு குறைவாக மண்ணெண்ணெய் வழங்குவதாக தெரியவந்தால் தொடர்புடைய அங்காடி விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணைபதிவாளர் எச்சரித்து உள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

பயிர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

 கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பதற்காக கிராம அளவில், கிராம நிர்வாக அலுவலரும், உதவி வேளாண்மை அலுவலரும் கொண்ட குழு கணக்கெடுக்கும்பணி மேற்கொண்டுள்ளனர். 
 
             பிர்க்கா அளவில், வருவாய் ஆய்வாளரும், வேளாண்மை அலுவலரும், வட்ட அளவில் வட்டாட்சியர்களும், வேளாண்மை உதவி இயக்குநர்களும் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, மாவட்டம் முழுவதும் 438 கிராம நிர்வாக அலுவலர்களும், 75 உதவி வேளாண்மை அலுவலர்களும், 26 வேளாண் அலுவலர்களும் 32 வருவாய் ஆய்வாளர்களும், 7 வட்டாட்சியர்களும், 13 வேளாண் உதவி இயக்குனர்களும் கணக் கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
                மாவட்டம் முழுவதும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகவும், சரியாகவும், விரைவாகவும் கணக்கு எடுக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

Rs. 17.67 crore for preliminary relief works in Cuddalore

CUDDALORE: 

           The State government has made an initial allocation of Rs. 17.67 crore to Cuddalore district for carrying out preliminary relief works in flood-affected areas, according to Collector P. Seetharaman.

           The amount has been earmarked for the following purposes: repairing the highways – Rs. 7 crore; rural roads – Rs. 5 crore; municipal roads – Rs. 1.35 crore; for improving water sources such as lakes, tanks and canals – Rs. 4.32 crore.

The fund allocation for the municipal roads would be made as follows: 

Cuddalore municipality (14 km stretch of road) – Rs. 70 lakh; 

Chidambaram (8 km) – Rs. 40 lakh; and

Vriddhachalam (5 km) – Rs. 25 lakh.

            In a statement released here, the Collector also said that the government was likely to sanction an additional fund of Rs. 10 crore for road works. The floods had claimed the lives of 18 persons and 315 cattle heads in the district.

          So far, a solatium of Rs. 2 lakh each had been given to the families of seven victims and Rs. 8.61 lakh to owners of 224 cattle heads, including 49 bullocks, 49 calves and 126 goats.

           As per the estimate, a total of 1,162 huts were fully damaged and 14,595 huts partly damaged. A compensation of Rs. 45.70 lakh had been given to 914 fully damaged huts (at the rate of Rs. 5,000 each) and Rs. 36.60 lakh to 1,264 partly damaged huts (at the rate of Rs. 2,500 each).

          The Collector has appealed to the elected representatives of local bodies, including chairpersons of panchayat unions, town panchayats and municipalities to extend full cooperation to the officials to expedite the relief works.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior