உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 20, 2011

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள்

             உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள் எவை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஆவணங்கள் அனைத்தும் 31.12. 2009க்கு முன்னர் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள 13 ஆவணங்கள் விவரம்:

 1. பாஸ்போர்ட்  2. ஓட்டுநர் உரிமம். 

 3. வருமான வரி அடையாள அட்டை. 

 4. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.  

5. பொது நிறுவன வங்கிகள் மற்றும் தபால் அலுவலக பாஸ் புத்தகங்கள். விவசாயிகளுக்கான கிஸôன் பாஸ் புத்தகங்கள்.  

6. ஓய்வூதிய ஆவணங்கள் (ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், முன்னாள் ராணுவ வீரர்  ஓய்வூதிய ஆவணங்கள், விதவை ஓய்வூதியம் பெறுவதற்காக வழங்கப்பட்ட ஆணைகள் இதற்குள் வரும்.)  

7. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அடையாள அட்டைகள். 

 8. வீட்டு மனை பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்.  

9. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தோர் என்பதற்கான சான்றிதழ்கள்.  

10. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள்.

 11. ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமங்கள். 

 12. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டைகள். 

 13. மத்திய தொழிலாளர் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள். 

                இந்த ஆவணங்கள் அனைத்தும் புகைப்படத்துடன் கூடியதாகவும், 31.12.2009-க்கு முன்னர் பெறப்பட்டதாகவும் இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

 குடும்பத் தலைவரின் ஆவணம்:

               இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை குடும்பத் தலைவர் காட்டினால், அவரின் மொத்த குடும்பத்தாரும் தனித்தனியாக அடையாள அட்டைகள் காட்டாமல் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.









Read more »

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிக்கு 2 வருட உத்தரவாதம்

நெய்வேலி:
 
          அரசின் சார்பில் வழங்கப்படும் மிக்ஸி, கிரைண்டர்,  மின்விசிறி உள்ளிட்டவைகளில் இயங்கவில்லை என்ற குறைபாடு இருக்கும் பட்சத்தில், பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று ஒருவார காலத்திற்குள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம். இந்த மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கு 2 வருட உத்தரவாதம் உண்டு, இடைப்பட்ட காலத்தில் அரசு வழங்கிய பொருள்களில் பழுது ஏற்பட்டார், அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்று பழுது நீக்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார். 











Read more »

அகில இந்திய அளவில் வடிவமைப்புத் திறன் போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

கடலூர்:

            அகில இந்திய அளவில் நடைபெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான, வடிவமைப்புத் திறன் போட்டியில், கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

            பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில், தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வடிவமைப்புத் திறன் போட்டி, கடந்த 13, 14 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து, பல்வேறு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை சமர்ப்பித்து செயல் விளக்கம் அளித்தனர். 

          இப்போட்டியில் கடலூர் சி.கே.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எம்.ஜெகதீஷ், ஏ.பிரவீன் குமார், சமாத் அப்பாஸ் அஞ்சும், ஆர்.சேதுராமன் ஆகியோர் வடிவமைத்த  சமக் புரோ 2.0 மெகானிகல் வாஷிங் மெஷின் முதல் பரிசைப் பெற்றது.  வெற்றி பெற்ற மாணவர்களை சி.கே.பொறியியல் கல்லூரி மேலாண் இயக்குநர் சி.கே. ரங்கநாதன், இயக்குநர் டி.சந்திரசேகரன், முதல்வர் டாக்டர் ஆனந்த், சிறப்பு அலுவலர்  ராஜா ஆகியோர் பாராட்டினர்.



Read more »

விவசாயிகள் கல்லூரி செல்லாமலேயே பட்டம் பெறும் புதிய திட்டம்

                    விவசாயிகள் கல்லூரி செல்லாமலேயே பட்டம் பெறும் புதிய திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது குறித்து கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜவஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது; 

                    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக வேளாண்மை தொழில் நுட்பங்களைத் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழியாக 2005ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இவ்வியக்கத்தின் வழியாக சான்றிதழ் படிப்புகள், இளநிலை படிப்புகள், முதுநிலைப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு இருப்போர் பயன்பெறும் வகையில் நேரடி செயல்முறை விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பயிற்சியாளர்களை ஈடுபடுத்தியும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நேர்முகப் பயிற்சி மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

                 விவசாயிகள் செய்யும் பண்ணைத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை பற்றி அறியவும், மேலும் அவற்றை செயல்முறைப்படுத்தி உற்பத்தியை பெருக்கவும், தமிழக விவசாயிகளுக்கு "இளநிலை பண்ணைத் தொழில்நுட்பம்' என்ற பட்டப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் பட்டதாரியாக விளங்கிடவும், அவர்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தப்படவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அதிக விளைச்சலும், வருமானமும் பெற்றிடும் வகையில் இத்தொழில்நுட்ப பட்டபடிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பட்டபடிப்பானது தமிழ்மொழியில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

               10ம் வகுப்பு படித்த 27 வயது நிரம்பிய அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். தொழில் நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப்பயிற்சி வழியாக மாதம் ஒரு முறை நடத்தப்படும். தினமும் கல்லூரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பானது மூன்று ஆண்டுகளுக்கு ஆறு செமஸ்டர் என்ற முறையில் நடைபெறும். கட்டணம் மற்றும் மேலும் தகவல் அறிய கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவரை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior