உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

காலாவதியான மருந்து விற்பனை எதிரொலி : சிதம்பரம் மருந்துகடை உரிமையாளர்கள் உஷார்

சிதம்பரம்:” 
 
                            காலாவதியான மருந்து விற்பனை பிரச்னை விஸ் வரூபம் எடுத்துள்ள நிலையில் சிதம்பரம் பகுதி மருந்து கடை உரிமையளர்கள் உஷார் அடைந் துள்ளனர். காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மருந்து கடைகள், குடோன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் காலாவதியான மருந்துகளை அழித்து வருகின்றனர். சிதம்பரம் பகுதியை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மருந்து கடை  உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கடையில் உள்ள காலாவதியான மருந்துகளை உடனடியாக அழித்து விட வேண்டும். மருந்துகள் கொள்முதல் செய்யும்போது மருந்து காலக்கெடு தேதி, பேட்ஜ் எண் மற்றும் லாட் எண் போன்றவைகளை பார்த்து வாங்க வேண்டும். மருந்து கடைகளில் பதிவேடு கட்டாயமாக பராமரிக்க வேண்டும். டாக்டர்கள் கொடுக்கும் மருந்து சீட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுமானவரை டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் விற்க கூடாது. குறிப்பாக தூக்க மாத்திரை, மயக்க மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இன்றி   தரக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படியே மருந்து கடைகளில் விற்பனையாகாமல் தேங்கியிருந்த காலாவதியான மருந்துகளை கண்டுபிடித்து எடுத்து அழித்து வருகின்றனர்.

Read more »

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு மனு

கடலூர்: 

                முன்னாள் கிராம நிர் வாக அலுவலர்கள் குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ.3500  வழங்க வேண்டும் என குறைகேட்பு கூட்டத் தல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் துணை இயக்குனர் கண்ணப்பன், டி.ஆர். ஓ., அலுவலர் நடராஜன், கலெக்டரின் உதவியாளர் (கணக்கு) செல்வராஜ்  பங்கேற்றனர். 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:  

                             ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு பங் கேற்கும் அதிகாரிகள் தேவையான பதில்களை கொண்டு வர வேண்டும். அதே போன்று ஓய்வூதியர்கள் மேல் நடவடிக்கை மற்றும் பரிந்துரை செய்வதற்கான ஆதாரங்களையும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது கிராம நிர்வாக அலுவலர் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 

               தற்போது 1216 அளவிற்கே ஓய்வூதியம் பெற்று வருகிறோம். எங்களுடன் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 3500 பெற்று வருகின்றனர். எனவே அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 3500 வழங்க வேண்டும்   என குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்


சிதம்பரம்:

                              சிதம்பரத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மற் றும் வேலைவாய்ப்பு கல்வி படித்து வரும் சிதம் பரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா எல்.சி.சி., நிறுவன வளாகத்தில் சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட் டது. கமிஷனர் ஜான்சன் தலைமை தாங்கினார். ஏ.சி.டி., நிறுவன நிர்வாக இயக்குநர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா  முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார்.  நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டல சமுதாய அதிகாரி  சண்முகபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   முகாமில், இலவச கல்வி பெறும் மாணவர்கள், பன்னாட்டு நிறுவன  வேலை வாய்ப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி கையேடு வழங்கப்  பட்டது.  சிதம்பரம் நகராட்சி சார்பில் கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் நேரிடையாக  நடத் தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை சிதம்பரம் ஏ.சி.டி., நிறுவன வளாகத்தில் தமிழக ஒருங் கிணைப்பாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.   இந்த மையத்தின் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்களும் சென்னை மற் றும் பெரிய நகரில் உள்ள நிறுவனங்களில் சிதம்பரத்தில் இருந்தே வேலைக் கான நுழைவு தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றனர். மணிகண்டன் நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா

கடலூர்:

                          மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா கடலூரில் நடந்தது. மாவட்ட பிராணி வதை தடுப்பு சங்க தலைவரான கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி பேசினார். சங்க உறுப்பினர்களை துளசிதாஸ் அறிமுகப்படுத்தினார். பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் பங்குகள் அதன் தேவைகள் குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் நடேசன் பேசினார். 
 
                            வக்கீல் அருணாசலம் சங்கத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் கலெக்டரிடம் வழங்கினார். பிராணிகள் வதைக்கப்படுவதை தடுக்கும் முறை மற்றும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து டாக்டர் ராமமூத்தி விளக்கினார். சங்க இயக்குனர்கள் ராசன், பாலசுப்ரமணியன், ஜனார்த்தனன், ரவி, மகாவீர்மல் மேத்தா உட்படலர் பேசினர். பிரையோன் நன்றி கூறினார்.

Read more »

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி

நெல்லிக்குப்பம்: 

                       நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நெல்லிக்குப்பம் நகராட்சியில் வசிப்பவர்கள் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதிக்குள் பாக்கி இல்லாமல் வரியை வசூல் செய்ய முயல்கின்றனர். கடந்த ஆண்டு 80 சதவீத் துக்கு  மேல் வரி வசூல் செய்தனர். நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட காலத் துக்குள் வரியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமென ஒரு மாதமாக விளம்பரம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீண்ட காலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை அதிரடியாக துண்டித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் வரிவசூல் வேகமாக நடந்து வருகிறது.
 
நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி கூறியதாவது : 

                        மக்கள் முறையாக வரி செலுத்தினால் தான் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும். குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென கூறியுள்ளார்.

Read more »

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி முடிந்தது


சேத்தியாத்தோப்பு: 

                           சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பணி முடிந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 687 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. ஆலையின் இந்த ஆண்டிற்கான அரவைப் பணி நவம்பர் மாதம் துவங்கியது. அப்போது கரும்பு விவகார எல்லைப் பிரச்னைகள் காரணமாக கரும்பு விவகார எல்லையில் குறைந்த அளவே கரும்பு பயிரிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒன்னரை லட்சம் டன் கரும்பு அரவை நடந்தாலே ஆச்சரியம் என்று கரும்பு உதவியாளர்கள் தெரிவித்தனர். தமிழக அரசால் அதிரடியாக புதிய ஆட்சியர் மரியம் ஆசியா நியமிக்கப்பட்டார். அவரது துரித செயல்பாட்டால் 2 லட்சத்து 687 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது விவசாயிகள்,  தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more »

ஆட்டு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் 4ம் நாளாக நீடிப்பு

பண்ருட்டி:
 
                         பண்ருட்டி நகராட்சியை கண்டித்து ஆட்டிறைச்சி வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் நான்காம் நாளாக நேற்று நீடித்தது. பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் உள்ள நகராட்சி நவீன  ஆடுவதை கூடத்தில் ஒரு ஆட்டை அறுத்து பரிசோதித்து முத்திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஆட்டு இறைச்சி வியாபாரிகள் கடந்த 24ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாபு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. நகராட்சி பொறியாளர் சுமதிசெல்வி, மண்டல துணை தாசில்தார் முத்துராமன், ஆட்டு இறைச்சி சங்க தலைவர் டில்லிபாபு, செயலாளர் சலீம், ஏஜடியுசி மாவட்ட துணை செயலாளர் துரை, கோழி இறைச்சி சங்க செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முத்திரை கட்டணத்தை குறைக்க நகராட்சி சேர்மன், கமிஷனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால்  நாளை 29ம் தேதி கூட்டத்தில் பேசி முடிவெடுப்பதாக நகராட்சி பொறியாளர் கூறினார்.  அதனைத் தொடர்ந்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என ஆட்டு இறைச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் சலீம் கூறினார்.

Read more »

தனியார் பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி: விருத்தாசலம் அருகே 64 பயணிகள் காயம்

விருத்தாசலம்:

                              விருத்தாசலம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். இந்த விபத்தில் பயணிகள் 64 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிறுபாக்கத்தில் இருந்து நேற்று காலை விருத்தாசலத்திற்கு தனியார் பஸ் (டி.என்.32-டபுள்யூ-6175) புறப்பட்டது. வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச்சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (36) பஸ்சை ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பஸ்சில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 8.55 மணிக்கு எறுமனூர் மாற்றுப்பாதை பாலத்தை கடந்து விருத்தாசலத்தை நோக்கி  வந்தபோது ரயில்வே ஜங்ஷன் அருகே டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து பஸ் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந் தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ் டிரைவர் சிவக்குமார் தலைமையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பயணிகள் 64 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருந்த பத்மாவதி(35), ராமமூர்த்தி(33), விஜயபாபு(22), ராஜேந்திரன் (27), சந்திரசேகரன்(28) உட்பட 31 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பெண் கள், ஒரு குழந்தை உட்பட 30 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன், டி.எஸ்.பி., ராஜசேகரன், மோட்டார் வாகன ஆய் வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

செங்கல்பட்டு கூர் நோக்கு இல்லத்தில் தப்பிய இருவர் கடலூரில் சிக்கினர்


கடலூர்: 

                        செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய இரண்டு பேர் கடலூரில் பிடிபட்டனர். கடலூர் திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள் ளிரவு ஒரு மணி அளவில் சிதம்பரம் சாலையில் நின்றிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
 
                                 அவர்கள் கடலூர் முதுநகர் சுனாமி நகரைச் சேர்ந்த பாரதி மகன் விக்னேஷ் (17), விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் ஏழுமலை மகன் ராஜா(18) என தெரியவந்தது. இருவரும் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் புதுப்பாளையம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர். அங்கிருந்து தப்பி கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய வழக்கில் கைதாகி செங்கல்பட்டு கூர்நோக்கு இல் லத்தில் அடைக்கப்பட்டதும், அங்கிருந்து மூன்று நாட்களுக்கு முன் தப்பி வந்ததும் தெரிய வந்தது.  இருவரையும் கைது செய்து,  செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior