உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

கடலூர் உட்பட தமிழகத்தில் 112 நகரங்களில் ஆன்-லைன் ரிமோட் மின் மீட்டர்

        தமிழகத்தில், மத்திய அரசு உத்தரவுப்படி, ஆன்-லைன் ரிமோட் மின் மீட்டர்கள் பொருத்த, 112 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

           மத்திய எரிசக்தித் துறை உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட 112 நகரங்களில், மின் இணைப்புகளுக்கு, ரிமோட் ஆன்-லைன் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. வரும் ஜூன் 30க்குள், 65 லட்சம் இணைப்புகளுக்கு, இந்த நவீன மீட்டர் பொருத்தப்படும். 

மத்திய அரசு அங்கீகரித்த நகரங்களின் பெயர் விவரம்:

கோயம்புத்தூர், 
குன்னூர், 
கூடலூர்,
பல்லடம், 
திருப்பூர், 
உடுமலைப்பேட்டை,
விக்கிரமசிங்கபுரம், 
அருப்புக்கோட்டை, 
கொல்லங்கோடு, 
முத்தையாபுரம், 
நாகர்கோவில், 
ராஜபாளையம், 
சாத்தூர், 
திருவில்லிபுத்தூர், 
தூத்துக்குடி, 
திருச்செந்தூர், 
விருதுநகர், 
ஆத்தூர், 
பவானி, 
கோபிசெட்டிப்பாளையம்,
அம்பாசமுத்திரம்,
கடையநல்லூர், கோவில்பட்டி,
புளியங்குடி,
சங்கரன்கோவில், 
தென்காசி, 
திருநெல்வேலி, 
ஆம்பூர், 
அரக்கோணம், 
ஆரணி, 
அறந்தாங்கி, 
ஆற்காடு, 
போடிநாயக்கனூர், 
சென்னை, 
செங்கல்பட்டு, 
சிதம்பரம், 
சின்னமனூர், 
கடலூர், 
தேவகோட்டை, 
தாராபுரம், 
தர்மபுரி, 
திண்டுக்கல், 
எடப்பாடி, 
ஈரோடு, 
குடியாத்தம், 
ஓசூர், 
ஜெயங்கொண்டம், 
கள்ளக்குறிச்சி, 
கம்பம், 
காஞ்சிபுரம், 
காரைக்குடி, 
கரூர், 
கீழக்கரை, 
கொடைக்கானல், 
கிருஷ்ணகிரி, 
கும்பகோணம்.
மதுரை, 
மல்லசமுத்திரம், 
மணப்பாறை, 
மன்னார்குடி, 
மறைமலை நகர், 
மயிலாடுதுறை, 
மேலூர், 
மேல்விஷாரம், 
மேட்டுப்பாளையம், 
மேட்டூர், 
நாகப்பட்டினம், 
நாமக்கல்,
நெல்லிக்குப்பம், 
 ழனி, 
பண்ருட்டி, 
பரமக்குடி, 
பட்டுக்கோட்டை, 
பெரம்பலூர், 
பெரியகுளம்,
பெரியசெமூர், 
பேர்ணாம்பேட், 
பொள்ளாச்சி, 
புதுக்கோட்டை, 
ராமநாதபுரம், 
ராமேஸ்வரம். 
ராசிபுரம், 
சேலம், 
சத்தியமங்கலம், 
சீர்காழி, 
சிவகங்கை, 
சிவகாசி, 
தஞ்சாவூர்,
தேனி அல்லிநகரம், 
திருமங்கலம், 
திருவள்ளூர்,
திருவாரூர், 
துறையாறு, 
திண்டிவனம், 
திருச்செங்கோடு, 
திருச்சி, 
திருப்பத்தூர், 
திருத்தணி, 
திருவண்ணாமலை,
திருவேதிபுரம், 
உதகமண்டலம், 
உசிலம்பட்டி. 
வால்பாறை, 
வாணியம்பாடி, 
வேதாரண்யம், 
வெள்ளக்கோவில், 
வேலூர், விழுப்புரம்,
விருத்தாசலம், 
தேவர்சோலை
மற்றும் நெய்வேலி 

ஆகிய ஊர்களில், ரிமோட் மீட்டர்கள் பொருத்தப்படும்.

MORE DETAILS






Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வியில் உளவியல் சிகிச்சை படிப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் உளவியல் சிகிச்சை தொடர்பான படிப்பிற்காக சென்னை மெடால் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் துணைவேந்தர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி வாயிலாக எம்.எஸ்சி., ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சை என்ற முதுநிலை பட்டப் படிப்பையும், திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசனை, தொழில் மற்றும் வழிகாட்டல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள், சுற்றுப்புற சூழல் உளவியல், விளையாட்டுத் துறை உளவியல் உட்பட ஆறு பட்டயப் படிப்பும் வழங்க உள்ளது. அதற்காக சென்னை மெடால் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
            துணைவேந்தர் ராமநாதன் முன்னிலையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சென்னை மெடால் ஹெல்த் நிறுவன துணைத் தலைவர் ராஜாராய் சவுத்ரி, ஆலோசகர் மீனா ஐயர் ஆகியோர் பங்கேற்றனர்.





Read more »

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடி கடலூர் மத்திய சிறைக்கு வந்தடைந்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/63f10be4-337a-4e6b-a98d-342ab77721b9_S_secvpf.gif

கடலூர்
             நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பொன்முடியை திண்டிவனத்தில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் புதுச்சேரி வழியாக கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடலூர்- ராமாபுரம் செல்லும் சாலையில் உள்ள மத்திய சிறையின் நுழைவு பகுதியில் ஏற்கனவே அங்கே பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் வேனை குறுக்கே நிறுத்தி பொன்முடியை வழி மறித்தனர்.

                 இதனால் பொன்முடியை அழைத்து வந்த போலீசாரும் வேனை நுழைவு பகுதியிலேயே நிறுத்தினர். நிர்வாக காரணங்களை கூறி, கடலூர் மத்திய சிறையில் உங்களை அடைக்க முடியாது என்று பொன்முடியிடம் போலீசார் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர் வேனை விட்டு கீழே இறங்கி வந்து நான் இங்குதான் இருப்பேன் என்று போலீசாரிடம் கூறிவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் பொன்முடி  பேட்டி அளித்தார். 
 அப்போது பொன்முடிகூறியது:-  

                 என்னை மதியம் 1.45 மணிக்கு கைது செய்து திண்டிவனம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள். அப்போது நீதிபதியிடம் நான் இருதய நோயாளியாக இருப்பதால் மருத்துவ காரணங்களை கூறி, என்னை கடலூர் சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் காண்பித்தேன்.  இதையெல்லாம் பார்த்துவிட்டு வாரண்டில் உள்ள சேலம் மத்திய சிறை என்பதை பேனாவால் அடித்து விட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இங்கே வந்த பின்னர் நிர்வாக காரணங்களை கூறி என்னை கடலூர் சிறையில் அடைக்க இயலாது என்று போலீசார் கூறுகின்றனர்.   எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு போலீசார் தான் காரணம்.

             இங்கு இருந்தபடியே என்னை டாக்டரிடம் அழைத்துச்செல்லுங்கள். நான் இங்கேயே இருந்து சாவேனே தவிர சேலம் மத்திய சிறைக்குபோக மாட்டேன். எனக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.   இதைத் தொடர்ந்து பொன்முடி நுழைவுபகுதியில் இருந்து தொண்டர்கள் புடை சூழ மத்திய சிறைநோக்கி நடந்து வந்தார். அப்போது பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள், வக்கீல்கள் ஆகியோரை மட்டும் சிறையின் முன்புள்ள மெயின் கேட்டுக்குள் அனுமதித்தனர்.

                சிறையின் மெயின் கதவு அருகில் உள்ள திண்ணையில் பொன்முடி மட்டும் அமர்ந்து இருந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் பொன்முடியை சிறையில் அடைப்பதற்கு அதிகாரிகள் அனுமதித்து அவரை உள்ளே அழைத்து சென்றனர்.   

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டைனையை ரத்து செய்யக்கோரி சாலை மறியல்

 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/perambalur/viruthsalam-2.jpg

             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் விருத்தாசலம் சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். 



Read more »

M.K.Stalin, met former Transport Minister K.N. Nehru in the Cuddalore Central Prison


DMK treasurer M.K.Stalin coming out of central prison after meeting K.N.Nehru, former Minister in Cuddalore on Monday. Photo:C.Venkatachalapathy
DMK treasurer M.K.Stalin coming out of central prison after meeting K.N.Nehru, former Minister in Cuddalore on Monday.


             Former Deputy Chief Minister M.K. Stalin has alleged that Chief Minister Jayalalithaa is enacting a drama by claiming that she does not have the powers to reverse the decision of the President who rejected the mercy petitions of Murugan, Santhan and Perarivalan. The three are facing death penalty in the Rajiv Gandhi assassination case.

           Mr. Stalin, who met former Transport Minister K.N. Nehru in the Cuddalore Central Prison on Monday, told reporters on the jail campus that Ms. Jayalalithaa had made a statement in the Assembly that she did not have the powers to offer clemency to the three convicts who were scheduled to be hanged on September 9.

           Mr. Stalin opined that even if the Chief Minister did not enjoy the powers to cancel the capital punishment on the basis of the clemency petitions she could have recommended it to the Centre through a motion in the Assembly. About the DMK's stand on the issue, Mr. Stalin said that party leader M. Karunanidhi had already sought the cancellation of the capital punishment.

        Asked whether the DMK would launch any agitation in this regard, Mr. Stalin said that the party would follow the directions of Mr Karunanidhi. Referring to the continuing arrests of former DMK ministers and functionaries, he said it was being done with an eye on the local body elections. 






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior