உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் விவரம்

விருத்தாசலம்:

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில்,  பதிவான வாக்குகள் விவரம்.

விருத்தாசலம் நகரம்: 
பதிவான வாக்குகள்-

ஆண்கள் 14,936,
பெண்கள் 17,030, 
மொத்த சதவீதம் 74.98.

விருத்தாசலம் ஒன்றியம்: 

பதிவான வாக்குகள்- 

ஆண்கள் 30,431, 
பெண்கள் 29,218, 
சதவீதம் 76.

மங்கலம்பேட்டை பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 4461,
சதவீதம் 80.47.

பெண்ணாடம் பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 9920. 
சதவீதம் 78.

நல்லூர் ஒன்றியம்: 

சதவீதம்- 70.

மங்களூர் ஒன்றியம்: 

சதவீதம்- 69.


Read more »

உள்ளாட்சி தேர்தல் : கடலூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குப் பதிவு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில், 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

                    திங்கள்கிழமை மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கங்கைகொண்டான் பேரூராட்சிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. இதில் 5 பேரூராட்சிகளிலும் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

பேரூராட்சிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

மொத்த வாக்குகள் 4,579. 
பதிவானவை 4,005.
87 சதவீதம் வாக்குப் பதிவு.

தொரப்பாடி: 

மொத்த வாக்குகள் 5,375. பதிவானவை 4,618. 85.9 சதவீதம் வாக்குப் பதிவு

மங்கலம்பேட்டை: 

மொத்த வாக்குகள் 5,520.
பதிவானவை 4,461. 
80.4 சதம் வாக்குப் பதிவு.

பெண்ணாடம்: 

மொத்த வாக்குகள் 12,772.
பதிவானவை 9,923.
78 சதவீதம் வாக்குப் பதிவு.

கங்கைகொண்டான்: 

மொத்த வாக்குகள் 9,211. 
பதிவானவை 7,188.
77 சதம் வாக்குப் பதிவு.






Read more »

விருத்தாசலம் அருகே உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணித்த கண்டப்பங்குறிச்சி கிராமம்

நெய்வேலி:

          விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.

             விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமம் கோ.கொத்தனூர் எனும் ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. தங்களது கிராம மக்கள்தொகை 1700 பேர் உள்ளனர் என்றும், மொத்த வாக்காளர்கள் 599 பேர் உள்ளதாகவும், இதில் 200 வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டும் கிராம மக்கள், கண்டப்பங்குறிச்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் தெரிவித்தார்.

            இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் மாலை 5 மணி வரை காத்திருந்து, காலி வாக்குப் பெட்டியை சீல் வைத்து எடுத்துச் சென்றனர்.








Read more »

உள்ளாட்சி தேர்தல் முடிந்து விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு பேருந்து வசதி இல்லை

http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/d591334c-474b-4b93-a0ee-409ed94900ed_S_secvpf.gif
 
 
விருத்தாசலம்:

                      தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊரான விருத்தாலத்துக்கு வந்திருந்தனர். நேற்று ஓட்டு போட்டு விட்டு சென்னை திரும்புவதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியான பிறகும் சென்னை செல்லும் அரசு பஸ் வந்து சேரவில்லை.  

                இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அருகே உள்ள அரசு பஸ் டெப்போ சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு சாலை மறியல் செய்தனர். இந்த போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்த முத்துக்குமார் எம்.எல்.ஏ. விரைந்து வந்து பயணிகளிடம் பேசி சமாதானப்படுத்தினார். பிறகு அரசு பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன

சிதம்பரம் : 

                     சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (17ம் தேதி) நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (19ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டுகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

                 அதன்படி சிதம்பரம் நகர மன்ற தேர்தலில் ஓட்டு போட 370 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் என 20 பேர் நீக்கப்பட்டு 350 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

பண்ருட்டி:

                ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 325 பேருக்கு வீட்டின் முகவரிக்கு ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணி நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. துணை பி.டி.ஓ., தனுசு தலைமையில் ஊழியர்கள் ஊராட்சி வாரியாக தபால் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து அனுப்பினர். ஓட்டு சீட்டு பெற்றவர்கள் ஓட்டுப்பதிவு செய்து ஓட்டு எண்ணும் நாளான 21ம் தேதி காலை 7 மணிக்குள் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் மற்றும் பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.















Read more »

விருத்தாசலத்தில் இரண்டு ஓட்டுப் பதிவு மையங்ககளில் மின்னணு இயந்திரத்தில் பழுது

விருத்தாசலம் : 

                 விருத்தாசலத்தில் இரண்டு ஓட்டுப் பதிவு மையங்ககளில் மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமானது. விருத்தாசலம் 16வது வார்டு பெரியார் நகர் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண்.17ல் (பொது பிரிவு) நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியபோது மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. 

              இதனையடுத்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மண்டல அலுவலர் மின்னணு இயந்திரத்தை சோதனை செய்து பார்த்தபோது இயங்கவில்லை. பின்னர் மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இதேப்போன்று 24வது வார்டு வடக்கு கோட்டை வீதி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஓட்டுச் சாவடி எண். 29ல் (பெண்கள் பிரிவு) ஓட்டுப் பதிவு துவங்கியபோது மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களே அதனை சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் ஓட்டுப் பதிவு தாமதமானது.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior