உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 15, 2011

சிதம்பரம் வட்டத்தில் வாழைக்கு இன்சூரன்ஸ் திட்டம்


சிதம்பரம் : 
 
            வாழைப் பயிருக்கு இன்ஸ்சூரன்ஸ் திட்டம் உள்ளதால் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு, பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
                 வாழைப் பயிர் அதிக வருமானம் தரும் தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றாகும்.விவசாயிகள் செலவு செய்து சிறந்த முறையில் பயிரிடப்படும் வாழைப் பயிரானது வருமானம் தரும் நேரத்தில் திடீரென ஏற்படும் இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம் ஆகியவற்றால் மிக எளிதில் பாதிக்கப்பட்டு பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.
 
               இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வாழைப் பயிரை இத்தருணத்தில் காப்பீடு செய்து புயல், வெள்ளத்தால் ஏற்படும் சேதத்துக்கு நஷ்டஈடு பெறலாம்.வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் ஆகிய இருசாராரும் வாழைப் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தாங்கள் பெறும் கடன் தொகையில் 7.40 சதவீதத்தை பிரீமயமாக செலுத்த வேண்டும். இதில் 50 சதவீதம் (3.70) அரசு மானியம் போக மீதி 50 சதவீதம் பிரீமியம் செலுத்தினால் போதும்.கடன் தொகைக்கும் கூடுதலான தொகைக்கு பிரீமியம் செலுத்த விரும்பினாலும் செலுத்தலாம்.
 
              சிதம்பரம் வட்டத்தில் உள்ள வாழை விவசாயிகள் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், பூவாலை, சாத்தப்பாடி, கீழமணக்குடி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும், பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி மற்றும் பு.முட்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளிலும் பிரீமியத் தொகையை செலுத்தலாம் என பா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

ரூ.16,775 நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கடலூர்:

                         விபத்தில் காயம் அடைந்த நபருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.16,775  நஷ்டஈடு வழங்காததால், புதன்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஜப்தி செய்யப் பட்டது. மேலும் 10 பஸ்களை ஜப்தி செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

                   கடந்த 14-9-2003 அன்று கடலூரை அடுத்த பொன்னந்திட்டு கிராமத்தில் இருந்து பெரியப்பட்டு நோக்கி வேன் ஒன்று சென்றுக் கொண்டு இருந்தது. அதில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்தனர். அந்த வேன் மீது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில், ஒருவர் இறந்தார். 4 பேருக்கு பலத்த காயமும், 11 பேருக்கு சாதாரண காயமும் ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 14 லட்சம் நஷ்டஈடு வழங்க, கடலூர் முதன்மை சார்பு நீதின்றம் 26-4-2006-ல் உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லையாம். எனவே அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. 

              எனவே நஷ்டஈட்டுத் தொகைக்காக, அரசு பஸ்களை ஜப்தி செய்ய 29-8-2011 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.காயம் அடைந்த பொன்னந்திட்டு கெüசல்யாவுக்கு ரூ. 16,775 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக புதன்கிழமை சென்னையில் இருந்து வேளாங்கண்ணி சென்ற, பச 01 ச 7834 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்ûஸ, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். 

               அந்த பஸ் கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.இந்த நஷ்டஈடு வழக்கில் மேலும் 10 பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு பஸ்ஸôக ஜப்தி செய்யப்படும் என்றும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.





Read more »

நெய்வேலி மாணவி ஐஸ்வர்யா உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ப்பு

நெய்வேலி:

           இத்தாலி ரிமினி நகரில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா நட்ராஜ் விளையாடியுள்ளார்.

                நெய்வேலியைச் சேர்ந்த நட்ராஜின் மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் . கூடைப்பந்துப் போட்டியில் பல்வேறு முறை தேசிய போட்டிகளில் முத்திரைப் பதித்துள்ள மாணவி ஐஸ்வர்யா நட்ராஜ், தற்போது இத்தாலி நாட்டிலுள்ள ரிமினி எனும் நகரில் செப்டம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ள இவர், பல்வேறு தேசியப் போட்டிகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும் தனி முத்திரையும் பதித்துள்ளார்.










Read more »

Tamil Nadu government to pay a compensation of Rs 5 lakh to prison death victim

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior