உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தமிழகத்தில் 82 லட்சம் வீடுகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள்: சிதம்பரத்தில் சோதனை முயற்சி

             மின் சேமிப்பு திட்டப்படி, தமிழகத்திலுள்ள 82 லட்சம் வீடுகளில், குண்டு பல்புகளை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

             முதற்கட்டமாக, ஐந்து நகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ளது. மின் சேமிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளிலும், குண்டு பல்புகளை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், குண்டு பல்புகளை மாற்றி, இலவசமாக 11 வாட் சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும். குண்டு பல்புகள் இல்லாத வீடுகளுக்கு குறைந்த விலையில், 15 ரூபாய்க்கு சி.எப்.எல்., பல்பு தரப்படும். 

                முதற்கட்டமாக இத்திட்டம், விழுப்புரம் மின் மண்டலத்தில், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் மற்றும் நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் அமலுக்கு வந்துள்ளது. 

                  சோதனை முயற்சியாக, சிதம்பரத்திற்குட்பட்ட முட்டம் ஊரில், 296 வீடுகளுக்கு இலவச சி.எப்.எல்., பல்புகள் தரப்பட்டு, தினமும் 29 வாட் மின் சேமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல்புகள் சப்ளை செய்ய, உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த "சில்வர் பேர் அட்வைசர்' என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய உயரதிகாரி கூறியது: 

              குண்டு பல்புகளின் 60 வாட்ஸ் ஒளிக்கு நிகராக, 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பும் ஒளி தரும்; இதனால், ஒரு பல்புக்கு 49 வாட்ஸ் சேமிக்கப்படும். இதே போல், 40 வாட்ஸ் டியூப் லைட்டுக்கு ஈடாக, 11 வாட்ஸ் சி.எப்.எல்., ஒளி தரும்; இதில், 29 வாட்ஸ் சேமிக்கப்படுகிறது. அதனால், குண்டு பல்புகள் மற்றும் டியூப் லைட்களை மாற்றி, சி.எப்.எல்., பல்புகளாக்கும், "பச்சத் லேம்ப் யோஜனா' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

                தமிழகத்தில், 1.4 கோடி வீடுகளில், முதற்கட்டமாக 84 லட்சம் வீடுகளுக்கு அமலாகும். இதன் மூலம், தினமும் 500 முதல் 600 மெகாவாட் மின் பயன்பாடு சேமிக்கப்படும். மத்திய மின்துறை அமைச்சகத்தின், எரிசக்தி திறனூக்க செயலக (பி.இ.இ.,) உதவியுடன் அமலாகிறது. கடைகளில், 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கும் தரமான சி.எப்.எல்., பல்புகளை, 15 ரூபாய்க்கு மின் வாரியம் வழங்க முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
       
               சி.எப்.எல்., பல்புகளை மாற்றிய வீடுகளில், குண்டு மற்றும் டியூப் லைட்களுக்கு தடை விதிக்கப்படும். புதிய இணைப்புகள் பெறுவோர், சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்த, நிபந்தனை விதிக்கவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
 
 
 
 

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியலில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பம்

               அண்ணாமலை பல்கலைக்கழகம், ஜோதிடவியலில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககம், ஜோதிடவியலில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளை வழங்குகிறது. நடப்பு கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை, பரங்கிமலை, ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கிவரும், அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்கக அலுவலகத்தில் பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு, 

 044 2234 0200, 94436 45685 

                ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வலுவலகத்தின் பொறுப்பாளர் வெங்கட்ராமன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.








Read more »

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 

              சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடியில் உள்ள ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன், தாளாளர் மணிமேகலை, ஆங்கிலத் துறைத் தலைவர் அப்துல்ரஹிம் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி மரக்கன்றுகள் நட்டார். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணன் செய்திருந்தனர்.






Read more »

முன்னாள் தி.மு.க.அமைச்சர் கே.என்.நேரு கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம்

              http://www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_36661493779.jpg


http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5Cecef6582-83e8-44fc-b6cd-8085d1111f0e-Trichy-Easts.jpg
           அன்பில் பெரியசாமி
          

                  கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு இன்று (25.08.2011) காலை கைது செய்யப்பட்டார். கே.என்.நேருவுடன் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமியும் கைது செய்யப்பட்டார். லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தரராஜூலு, மாமுண்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

               கே.என்.நேரு உட்பட கைதான 4 பேரும் மாஜிஸ்டிரேட் புஷ்பராணி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்ரேட் உத்தரவுப்படி கே.என்.நேரு உள்பட 4 பேரும் 15 நாள் காவலில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களை வேனில் இருந்து இறக்காமல் ஆலோசனை செய்த போலீசார், அவர்களை கடலூர் சிறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து கடலூர் சிறைக்கு அவர்களை கொண்டு சென்றனர். 





Read more »

கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை

திட்டக்குடி:

             கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டியது.    

            இதற்கிடையே திட்டக்குடி அருகே ஆதமங்கலத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் தனக்கு சொந்தமான மாடுகளை அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று மாலை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் செல்வராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். துகுறித்து திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா, தாசில்தார் சையத் ஜாபர் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

               இதேபோல் விருத்தாசலம் அருகே பொன்னேரி கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பவரது கூரை வீட்டில் இடி-மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் இடி தாக்கியதில் அருணாசலத்தின் மகன் விக்னேஷ் (20) காயம் அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior