உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிறைவு

 நெய்வேலி:

                      தமிழக அளவில் சிறப்பாக நடைபெறும் 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது. 

               14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நெய்வேலி வட்டம், 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்புத்தகக் கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் தொடங்கி வைத்தார்.  இக்கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகத்தைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் புத்தக விற்பனை செய்து வருகின்றனர்.  தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கின்றனர். இப்புத்தகக் கண்காட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதை புத்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களும் பாராட்டியுள்ளனர்.  

            இப்புத்தகக் கண்காட்சி குழுவின் புரவரலராக என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியும், தலைவராக சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன், செயலராக ஜார்ஜ்ஜேக்கப், ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது.  




Read more »

கடலூரில் 15 நாள்களாக மீன்பிடித் தொழில் முடக்கம்


மீன் பிடிக்கச் செல்லாததால் கடலூர் துறைமுகம் உப்பனாற்றில், முடங்கிக் கிடக்கும் விசைப் படகுகள்.
கடலூர்:

         டலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் முடங்கிக் கிடக்கிறது.  70 கி.மீ. நீளம் உள்ள கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சம் மக்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். 

              இவர்களில் பலர் மிகப்பெரிய விசைப் படகுகளில், கூலிக்கு மீன்பிடித் தொழில் செய்பவர்கள். பலர் மீன் பதப்படுத்தும் தொழில் செய்வோர். 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகளும், கட்டுமரங்களும் உள்ளன.  ÷டலூரில் நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் சர்வ சாதாரணமாகக் கிடைத்து வந்தது. ஆனால் கடலூர் கடற்கரையை, பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகும், சுனாமி கடற்சீற்றத்தைத் தொடர்ந்தும், கடலூர் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.  

              ரூ. 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட எஃப்.டி.பி. படகு ஒன்றில், (கடலூரில் இத்தகைய படகுகள் 100 உள்ளன), ஆழ்கடலில் 6 தொழிலாளர்களுடன் 7 நாள்கள் தங்கி மீன்பிடிக்க, டீசல், ஆள்கூலி உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது.  ÷இதில் குறைந்தபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மீன்கள் கிடைத்தால்தான் கட்டுபடியாகும்.  ஆனால் பல நேரங்களில் அவர்களுக்குச் செலவுத் தொகைக்கான மீன்கள்கூட கிடைப்பது இல்லை என்கிறார்கள் மீனர்கள்.  ÷கடலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் பெரும்பாலும் முடங்கிக் கிடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற பல பெரிய விசைப் படகுகள், வெறுங்கையாகத் திரும்பின.  

              தொடர்ந்து ரூ. 75 ஆயிரம் செலவு செய்து, கடலுக்குள் சென்று நஷ்டம் அடைவதைவிட, தொழிலுக்குச் செல்லாமல் இருந்து விடுவதே மேல் என்ற எண்ணத்தில், பல படகுகள் கடந்த 15 தினங்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் உப்பனாற்றில் முடங்கிக் கிடக்கின்றன என்கிறார்கள் மீனவர்கள்.  ÷ஏனைய சிறிய விசைப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களின் நிலையும் இதுதான் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  கடந்த 15 நாள்களாகவே வங்கக் கடலில் மாறிமாறி வரும் நீரோட்டம், மீன்பிடித் தொழிலுக்குச் சாதகமாக இல்லை என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.  

இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியது: 

               கடலூர் கடலில் கடந்த 15 நாள்களாக மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. பல படகுகள் பெரும் தொகையை செலவிட்டு கடலுக்குள் சென்று, மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் நிலை நீடித்து வருகிறது.  வியாழக்கிழமை 10 சதவீதம் படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் சென்றன. அவற்றிலும் சரியாக மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் மீன்பிடித் தொழிலில் கூலிகளாகப் பணிபுரிவோர் வறுமைக்குத் தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது. மாறி மாறிவரும் கடல் நீரோட்டத்தால் மீன்கள் கிடைக்க வில்லை.  

              பல ஆண்டுகளுக்கு முன், வங்கக் கடலில் எந்தெந்த இடங்களில், எவ்வளவு தூரத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும், நீரோட்டம் சாதகமாக உள்ளதா? கடல் அலைகள் எந்த அளவுக்கு உள்ளன? என்றெல்லாம், மீன் வளத்துறை முன் அறிவிப்பு அளித்து வந்தது.  ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாம் தற்போது கிடைப்பது இல்லை. தனியார் பொதுநல அமைப்பு ஒன்று, இத்தகைய தகவல்களை சில ஆண்டுகள் தெரிவித்து வந்தன. அதுவும் தற்போது இல்லை என்றாகிவிட்டது.  

            மீனவர்கள் அவர்களின் அனுபவம் மற்றும் அனுமானத்தின் பேரில் கடலுக்குள் செல்வதும், மீன்கள் கிடைத்தால் லாபம் இல்லையெனில் நஷ்டம் என்ற சூதாட்டம் போன்ற நிலையில்தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை உள்ளது.  பருவநிலை மாற்றங்களும், கடலில் கலக்கப்படும் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது என்றார் சுப்புராயன்.  மீன்பிடித் தொழில் பாதிப்பு காரணமாக, கடலூரில் மீன்களின் விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்திக்கு மீறியதாக மாறி விட்டது.  



 

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தெரிவித்தது: 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2011-12-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வாகுப்புகள் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற்றது.இந்நிலையில் இளங்கலை பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இக்கலந்தாய்வில் மாணவர்கள் காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அனைத்துப் பிரிவு முதலாமாண்டு இளங்கலை மாணவர்களுக்கும் வரும் 11-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.



Read more »

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு

பண்ருட்டி:

            பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு அளித்து பாராட்டினார். 

            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இறைவணக்க கூட்டத்தில் புதன்கிழமை கலந்துக்கொண்டார் தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர்.  2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1078 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணனுக்கு ரூ.5000, 1066 மதிப்பெண் எடுத்த பாலகிருஷ்ணனுக்கு ரூ.2500, 1061 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணகுமாருக்கு ரூ.1500 மற்றும் ஆயிரத்துக்கும் மேல் எடுத்த இருமாணவர்களுக்கு தலா ரூ.1000-ம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

           இத்தொகையை தான் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கிலும் வழங்கியதாக அவர் கூறினார். பிளஸ் டூ பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் எத்தனை பேர் எடுத்தாலும் ரொக்கப் பரிசு வழங்குவதாகக் கூறினார். 

              பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியை அமலி வரவேற்றார். முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், முன்னாள் கவுன்சிலர் வி.பாலகிருஷ்ணன், ஆசிரியர் (ஓய்வு) மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை சுசீலா, முத்த முதுகலை ஆசிரியர் தீனதயாளன், என்.சி.சி அலுவலர் ஜெ.பாலசந்தர், என்.எஸ்.எஸ். அலுவலர் எஸ்.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆசிரியர் சங்கச் செயலர் ஜி.பூவாராகவமூர்த்தி நன்றி கூறினார்.




Read more »

கடலூர் பெரியகாட்டுப்பாளையத்தில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரம் அனுகிரஹா சேட்டிலைட் டவுன்ஷிப்

கடலூர் :

           கடலூர் - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் நவசக்தி கட்டுமான குழுமம் நிறுவனம் சார்பில் 120 ஏக்கர் பரப்பளவில் "அனுகிரஹா சாட்டிலைட் டவுன்ஷிப்' என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1,000 வீடுகள் கொண்ட நகரம் அமைக்கப்பட்டுள்ளது. 

           இந்நகரத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல் மிகப்பெரிய ஷாப்பிங் மால், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, யோகா மையம், நூலகம், ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., வசதி, சர்வதேச சிங்கப்பூர் டி.பி.எஸ். வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. நவசக்தி கட்டுமான குழுமத்தின் மற்றும் ஒரு நகரம் பிரான்ஸ் நாட்டு வடிவில் புதுச்சேரி மாநிலம், பிள்ளை யார்குப்பம் பகுதியில் "லா பிரான்ஸ் வில்லா' என்ற பெயரில் 50 ஏக்கர் பரப்பளவில் உயர்ந்த ரக குடியிருப்பு வீடுகள் கொண்ட நகரம் உருவாகப்பட்டு வருகிறது.இந்த நகரத்தில் 6 மாடல் கொண்ட வீடுகள் கட்டுப்பட்டு வருகிறது.

          "அடிலா' மாடல் குடியிருப்பு 3,600 சதுரஅடி கொண்ட இடத்தில் 3,500 சதுரடியில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இதேப்போன்று "அட்ரியா' மாடல் குடியிருப்பில் 3,600 சதுரடி நிலத்தில் 3,000 சதுரடியில் வீடும், "அட்ரா' மாடல் குடியிருப்பில் 2,400 சதுரடி நிலத்தில் 2,500 சதுரடியில் வீடும், "க்லாரா' மாடல் குடியிருப்பில் 2,500 சதுரடியில் 2,400 சதுரடியில் வீடும், "எலியோரா' மாடல் குடியிருப்பில் 2,400 சதுரடியில் 2,000 சதுரடியில் வீடும், "ரெனாடா' மாடல் குடியிருப்பில் 1,500 சதுரடியில் 1,500 சதுரடி வீடுகள் கட்டப்பட உள்ளது.

                  இந்த நகரில் அகலமான பிரதான சாலையும், குறுக்கு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமாக வாழ்வதற்கு ஏற்ப கழிவுநீர் வடிகால் வசதி, நல்ல குடிநீர், நாள் முழுவதும் மின்சார வசதி, பாதுகாப்பிற்கு செக்யூரிட்டி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு அம்சமாக கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பார்க், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ஷாப்பிங் மால், கிருபானந்த வாரியார் கும்பாபிஷேகம் செய்த கோவில் போன்ற சகல வசதிகளுடன் கூடிய மாசு இல்லாத காற்றோட்டமான வீடுகள் அமைத்து வருகிறது. இங்கு வீடு வாங்க வங்கி கடன் பெற உதவுகிறது. இந்நிறுவனத் தின் மேலாண் இயக்குனரான டாக்டர் மணிரத்தினம் இன்ஜினியர், ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல சமூக சேவைகளை ஏழை மக்களுக்காக செய்து வருகிறார்.


 For more details










Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இது பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு 1.7.2011 முதல் 30.09.2011 வரை முடியும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனை பெற எஸ்.எஸ்.எல்.சி.,-எஸ். எஸ்.எல்.சி., தவறியவர் (பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள் மட்டும்) பி.யு.சி, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2011ல் ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியிருக்கு வயது 45, மற்றவர்களுக்கு 40க்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

             அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் அஞ்சல் வழிக்கல்வி அதாவது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழகத்தில் படித்தவராக இருக்க வேண்டும். அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
 
             இத்தகைய விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருப்பவர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior