உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூரில் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கவில்லை

கடலூர்:
          தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை இன்னமும் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவும் இல்லை. இதனால்,பயனாளிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  
            கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகள், முதியோர் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இவை வழங்கப்பட்டு விடும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இன்னமும் வழங்கப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 
          ஆனால் தேவையில் 50 சதவீத அளவுக்கு வேட்டி, சேலைகள் வந்து இருப்பதாகவே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  புயலில் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகையுடன் இலவச வேட்டி,சேலைக்கான டோக்கனும் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை புயல் சேதத்துக்கான நிவாரணமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் கூட இன்னமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரவில்லையாம்.  
              இந்நிலையில் முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு மட்டும் பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆனால் மற்றவர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி-சேலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 ஆயிரம் பேருக்கு இலவச போர்வை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/60624c2b-e96e-4801-86d1-b414b1c3bbc5_S_secvpf.gif

வடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதித்த 20 ஆயிரம் பேருக்கு தி.மு.க. சார்பில் இலவச போர்வைகளை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழங்கினார். தமிழகத்தில் தானே புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அந்த பகுதிகளுக்கு புயல் சேத நிவாரணமாக தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

            அதையடுத்து கடலூர் மாவட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் சென்னையில் அவர் வழங்கி னார். இந்த நிதியின் மூலம் 20 ஆயிரம் போர்வைகளை விலைக்கு வாங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச போர்வைகைள வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கிராமத்திலும், குறிஞ்சிப்பாடியிலும் நடந்தது. கடலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இலவச போர்வையை தி.மு.க. நிர்வாகிகளிடம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

               முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் நந்த கோபால கிருஷ்ணன், சபா. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் சிவகுமார், வி.கே. வெங்கட்ராமன், தலைமை செயற்குழு ஜெயராமன், நகர செயலாளர் புகழேந்தி, ராஜேந்திரன், மணிவண்ணன், மாவட்ட இலக்கிய அணிஅகரம் நாராயணசாமி,மாவட்ட நெசவாளரணி பழனிசாமி, கடலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஞானசேகரன். குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங் கம், வடலூர் பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் திருநீலம், குறிஞ்சிப்பாடி பொருளாளர் ராமர், விடுதலை சேகர், இளைஞரணி கே.ஆர். ராமச்சந்திரன், கே.பி.ஆர். பாலமுருகன், டி.எம். குமார். பண்ருட்டி ஒன்றிய இளைஞர் அணி ஞானமணி,பண்ருட்டி ஒன்றிய அவைத்தலைவர் புலவர் நாராயணசாமி, பொருளாளர் பொன்னம் பலம், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், எல்.என்.புரம் துரைராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவமுருகன், மருங்கூர் ஜனார்த்தனம், அண்ணா கிராமம் புருஷோத்தமன், வடலூர் சுப்பராயலு, ஷாகுல் அமீது உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 










Read more »

கடலூர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு மரங்கள் சேதம்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில், புயலால் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு  மரங்கள் முறிந்து விழுந்தன." தானே' புயல் தாக்குதலால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அரசு, தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரம் என இருந்த பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.

         மாவட்டத்தின் கடலோர கிராமங்களான தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இயற்கை சீற்றங்களின் போது, காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த, 10 ஆயிரம் சவுக்கை மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதேப் போன்று, அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித் துறையின் பாசன வாய்க்கால்கள் ஓரமாக நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த, 450 தேக்கு மரங்கள் முற்றிலும் விழுந்து சேதமடைந்தன.
            புயலால் விழுந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியிலும், அப்புறப்படுத்தப்பட்ட மரங்களின் சேத மதிப்புகளை கண்டறியும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும், அரசு அலுவலகங்களில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களை அளந்து, ஏலம் விடுவதற்கான தொகையை மதிப்பீடு செய்து தருமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் மரங்களை அளந்து கணக்கீடு செய்து வருகின்றனர். கணக்கீடு பணி முடிந்ததும், மரங்களை பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏலம் விட உள்ளனர்.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior