உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

பண்ருட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாட்டு தொழுவமாகிறது

பண்ருட்டி : 

           பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது.
 
                பண்ருட்டி  நகர வி.ஏ.ஓ. அலுவலகம்  களத்துமேடு பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., கோவிந்தசாமி கடந்த மார்ச் மாதம் எல்.என்.புரத்திற்கு மாற்றப்பட்டார். விழமங்கலம் வி.ஏ.ஓ., சையத் இப்ராகீம் பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., வாக கூடுதல்  பொறுப்பை கவனித்து வருகிறார். களத்துமேடு பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில்  அருகில் உள்ள திடீர்குப்பத்தில் சாராயம் குடித்துவிட்டு வருபவர்கள் அடிக்கடி  குடிபோதையில் நின்று தகராறு செய்வதும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் அலுவலக வாயில் முன் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். மழைக்காலங்களில் கட்டடத்தில் மழைக்கசிவு ஏற்பட்டதால்   கடந்த 4மாதங்களாக வி.ஏ.ஓ.சையத் இப்ராகீம் விழமங்கலத்தில் உள்ள அலுவலகத்திலேயே  பணியை தொடர்கிறார். இதனால் களத்துமேடு  அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அருகில் உள்ளவர்கள் அலுவலகம் முன் மாட்டுதொழுவமாக வைக்கோல் போர் வைத்து மாடு கட்ட துவங்கிவிட்டனர். ஆனால் பொதுமக்கள் பலர் வி.ஏ.ஓ.,அலுவலகம் பூட்டி கிடப்பதை பார்த்துவிட்டு நீண்ட அலைகழிப்புக்கு  பின் விழமங்கலம் சென்று சான்றிதழ் பெற வேண்டியுள்ளது.  நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.  இதனால் பொதுமக்கள் தான் பெரும் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  பண்ருட்டி நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்கவும், களத்துமேடு பகுதியில் வி.ஏ.ஓ.,அலுவலகம் தொடர்ந்து செயல்பட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பெண்ணாடத்தில் விபத்தை தவிர்க்க புறவழிச்சாலை வேண்டும்! விரைந்து நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

திட்டக்குடி : 

           பெண்ணாடத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் அதனால் அதிகளவில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
          திட்டக்குடி தாலுகாவின் குறுவட்டமாகவும், விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத் திலும் பெண்ணாடம் உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் அரசு மெட்ரிக் மேல்நிலைப்பள் ளிகள், வங்கிகள், புகழ் பெற்ற பழமையான கோவில்கள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பெண்ணாடத்தை மையமாக கொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் மெட்ராஸ் சிமென்ட்ஸ், தளவாய் இந் தியா சிமென்ட்ஸ், இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலைகளுக்கு மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட் களை ஏற்றி செல்லும் லோடு லாரிகள், கரும்பு டிராக்டர்கள்,  டயர் வண்டிகள், கண்டெய்னர் லாரிகள் என அதிகளவு கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இறையூர் "ரயில்வே கிராசிங்' வழியாக திட்டக்குடி, மங்களூர், தொழுதூர், ஆவினங்குடி பகுதிகளிலிருந்து விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.  அதுமட்டுமின்றி சர்க் கரை ஆலைக்கு வரும் டிராக்டர்கள், டயர் வண்டிகள் தண் டவாளத்தை கடக்க முடியாமல் திணறுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுவதும் இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
              தற்போது விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ் சாலை தொடர் மழையால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.  கரும்பு அறுவடை காலங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு வரும் டிராக்டர்கள் இறையூர் ரயில்வே கிராசிங் முதல் பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுவதுடன் அவ்வப் போது விபத்துக்கள் நடக் கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இறையூர் அடுத்த தொளார் கை காட்டி சாலைக்கு முன்னதாக புறவழிச்சாலை அமைத்து, பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் மறுமுனை இணைக்க வேண்டும். ஆலைகளுக்கு சென்று வரும் வாகனங்கள் சுலபமாக புறவழிச்சாலைக்குள் நுழைந்து நகருக்கு வெளியே செல்ல தனி சாலையும் அமைக்க வேண்டும். தற்போது விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையை சீரமைக்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கி புறவழிச் சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும்.  இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும்.

Read more »

அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: டி.எஸ்.பி.,

நெய்வேலி : 

                 அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என நெய்வேலி டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
 
               நெய்வேலி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நேற்று டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டி.எஸ்.பி, மணி பேசுகையில், இனி வரும் காலங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க விரும்புபவர்கள் போலீஸ் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன் மூன்று நாளும், நிகழ்ச்சிக்கு பின் 2 நாட்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.  நிகழ்ச்சி முடிந்த 2 நாளில் பேனர் அகற்றாமல், சேதமடைந்தால் போலீஸ் பொறுப்பேற்காது. பேனர்களை போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமலும், கடைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு வைக்க வேண் டும். தலைவர்களின் சிலைகளை மறைத்து வைக்கக் கூடாது. சினிமாக்கள் ரீலிசாகும் போது ரசிகர்கள் வைக்கும் பேனர்களுக்கும் இந்த ஐந்து நாள் விதிமுறை பொருந்தும் என்றார்.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம்


காட்டுமன்னார்கோவில் : 

              காட்டுமன்னார்கோவிலில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மூன்றாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
 
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன் கூறுகையில்:

                   காட்டுமன்னார்கோவில் பகுதியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இதுவரை 64 ஆயிரத்து 70 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் 32 ஆயிரத்து 700 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக 9 ஆயிரத்து 396 அடையாள அட்டை வந்துள்ளது. அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அடையாள அட்டை கிடைக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பெற்று கொள்ளலாம். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மூன்றாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி பழைய தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்னும் புகைப்படம் எடுக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

Read more »

தெற்கு பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் பணி துரிதம்

கிள்ளை :

               சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம்- கொடியம்பாளையம் இணைக் கும் வகையில் வெள்ளாற்றில் 10.5 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

                  நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் சீர்காழியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் கொடியம்பாளையம் மீனவ கிராமம் கடலுக்கும், ஆற்றுப்படுகைக் கும் இடையில் தீவாக உள்ளது. இந்த கிராமத்தில் 420க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 300க்கும் மேற்பட்ட கன்னாத் தோணி, லம்பாடி மற்றும் விசைப் படகுகள் மூலம் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி, ரேஷன் கடை, தபால் நிலையம் உள்ளிட்ட சில முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. கொடியம்பாளையத்திருந்து தெற்கு பிச்சாவரம், திருவாசலடி வழியாக சிதம்பரத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக்குவதுடன், வெள்ளாற்றில் பாலம்  கட்டித்தரவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கியதை தொடர்ந்து அப்பகுதியை பார்வையிட சென்ற அதிகாரிகளை அப்பகுதி மக்கள் சூழ்ந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் சுனாமி நிதி(2008-2009) 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்து பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆற்றின் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் 8.5 மீ., அகலத்தில் 160 மீ., நீளத்திற்கு 7 ஸ்பேன் (தூண்கள்)  கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து  கிழக்கே கடற்கரையோரம் 406 மீட்டர், பிச்சாவரம் சாலையில் 200 மீ., தொலைவில்  7.5 மீ., உயரத்தில் கான்கிரீட் பிளாக்கில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையை உயர்த்தி, தார் சாலை அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் ஏப்ரல் முதல் வாரத்தில் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

மணிலாவில் நல்ல மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் உரம்

சிதம்பரம் : 

           மணிலா பயிரில் நல்ல மகசூல் பெற 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம் உரம் விற்பனை செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு

             சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்களில் விவசாயிகள் நலனுக்காக ஜிப்சம் 50 சதவீத மானிய விலையில் கீரப்பாளையம் நந்தீஸ்வரம் வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணை வித்து பயிருக்கு எக்டேருக்கு 200 கிலோவும், பயறு வகைகளுக்கு 110 கிலோவும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மணிலாவுக்கு இடுவதால் மணிலாவில் விழுதுகள்  நன்கு உருவாகவும், காய்கள் திரட்சியாகவும் இருக்கும். எனவே மணிலாவில் ஜிப்சம் போட்டு அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஆதிபராசக்தி மன்ற ஆண்டு விழாவையொட்டி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மன்ற தலைவர் லஷ்மணன் முன்னிலை வகித்தார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு சைக் கிள், காதுகேளாதவர்க்கு கருவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அண் ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி வழங்கினார். விரிவுரையாளர்கள் பாலகுமார், ஞானகுமார், டாக்டர் அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

புவனகிரிக்கு கூடுதல் போலீஸ் நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

           புவனகிரி பகுதியில் தொடரும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
 
இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரியில் 1993ம்  ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட போலீசாரே பணி புரிந்து வருகின்றனர். தற்போதைய கணக்குப்படி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 20 பேர் மட்டுமே உள்ளனர். போலீசார் குறைவாக உள்ளதால் புவனகிரி பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்திட புவனகிரி போலீஸ் ஸடேஷனுக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நகர தூய்மையை வலியுறுத்தி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயணம்

பண்ருட்டி : 

             பண்ருட்டி ஜான்டூயி பள்ளி சார்பில் நகரை தூய்மையாக மாற்ற வலியுறுத்தி ஸ்கேட்டிங் பயணம் நேற்று நடந்தது.
 
                   பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிதம்பரம், கடலூர் ரோலர் ஸ்கேட்டிங்  கழகம் சார்பில்  நகரை துய்மையாக மாற்றுவதற்கு வலியுறுத்தி பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முன் ஸ்கேட் டிங் பயண துவக்க விழா நடந்தது. இதில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் டிஸ்வாஸ் தலைமையில் 11 மாணவர்கள்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நகராட்சி சேர்மன் பச்சையப் பன் துவக்கி வைத்தார்.   நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் முடித்து வைத்தார். இதில் வக்கீல் வடிவேலன்,   ஜான்டூயி பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி, சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

கடலூர் : 

             கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதுரவாணன் முன்னிலை வகித்தார். கால் நடை துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை துவக்கி வைத்தார். திருப்பாதிரிப்புலியூர் கால்நடை உதவி மருத்துவர் மோகன் குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 20 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், 2 மலடு நீக்க சிகிச்சை, 136 சினை பரிசோதனை, 360 ஆட்டுக் குட்டிகளுக்கு குடற்புழு நீக்கம், 466 கால்நடைகளுக்கு தடுப்பூசி என 1,164 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Read more »

பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி

பண்ருட்டி : 

            அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
 
                   பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். புனித அன்னாள் பொறியியல் கல்லூரி செயலர் வில்லிஜிஸ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத் தார். கல்லூரி துணை முதல்வர் சந்திரசேகர், துறை தலைவர்கள்,  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  திருச்சி தூய வளவனார் கலைக்கல்லூரி ஆங் கிலத்துறை தலைவர் பேராசிரியர் ரவீந்திரன், பேராசிரியர்கள் எட்வின்கிறிஸ்டி, ஜெயபால், ஜான்பால் ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கூட்டு முயற்சி, தலைமை  பண்பு, நேர்முகத்தேர்வு நுணுக்கங்கள், விண்ணப்பம் தயாரித்தல் மற்றும் கூட்டு கலந்துரையாடல் ஆகிய திறன் வளர்ப்பு நுணுக்கங்களை விளக்கி பயிற்சி அளித்தார்.

Read more »

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

கடலூர் : 

              கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் கடலூர் : கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
                நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கங்கா, கிராம சுகாதார மகளிர் குழுவினர், வார்டு உறுப்பினர்கள், சிவலிங்கம், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மலேரியா, சிக்குன் குனியா, வைரஸ், டெங்கு காய்ச்சல் உருவாவகுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுக்கும் வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கிராமத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் கொசு உற்பத்தியை தடுப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது

விருத்தாசலம் : 

                எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை கல்வியில் பணியாற்றும் ஆசிரியர் களை  நியமிக்க கூடாது என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.  மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் கந்தகிரிவாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வீரராகவன் கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் வரும் எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மேல்நிலை கல்வியில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் உட்பட எவரையும் தேர்வு பணிக்கு நியமனம் செய்யகூடாது என சி.இ.ஓ., வை கேட்டுகொள்வது, எஸ்.எஸ்.ஏ., பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுகுழு உறுப்பினர் அழகுசெல்வம், தேவநாதன், ராஜேந்திரன், உதயசூரியன், கனகராஜ், ராமலிங்கம், குமார், கார்த்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கோடை விடுமுறைக்குள் ரயில்வே சுரங்கப்பாதை பணி : அனைத்து குடியிருப்போர் சங்கம் கலெக்டருக்கு மனு

கடலூர் :

                கடலூர் சுரங்கப் பாதை பணியை கோடை விடுமுறைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என  அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 
இது குறித்து சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

              கடலூர் லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில்  பணியை துரிதப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடலூரில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து துறை, போலீஸ், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை  கூட்டி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளையும், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த பணிகளை விரைவு படுத்த வேண்டும். மேலும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக கூட்டமைப்பின் ஆலோசனையாக, கடலூர் ஜவான்பவன்-கம்மியம்பேட்டை சாலை பணிகள் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு உரிய நிதியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யாததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ரயில்வே மேம்பாலத்திலிருந்து சரவணா நகர் வழியாக நத்தவெளி இணைப்பு சாலை பணியை நகராட்சி நிர்வாகம் தாமதித்து வருகிறது. சரவணா நகர் அருகே 300 மீட்டர் நீளத்திற்கு இடத்தை ஆர்ஜிதம் செய்ய சென்னை நகராட்சி இயக்குனர் அனுமதி அளித்துள்ள நிலையில், உடன் நில ஆர்ஜிதம் செய்து சரவணா நகர் இணைப்பு சாலை பணியை துரிதப்படுத்த வேண் டும். கோடை விடுமுறைக்குள் ரயில்வே சுரங்கப்பாதை பணியை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தழைச்சத்து விதையினை குறைந்த விலையில் வழங்க வேண்டும்: கலெக்டருக்கு கோரிக்கை

திட்டக்குடி : 

             தழைச்சத்து உரப்பயிர் விதைகள் வேளாண்துறை மூலம் குறைந்த விலை யில் வழங்கிட கலெக் டரிடம் முறையிடப்பட்டது.
 
இது குறித்து வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் திட்டக்குடி வேணு கோபால், கலெக்டரிடம் நேரில் முறையிட்டுள்ளதாவது: 

                விவசாய பணிகளுக்கு ரசாயன உரங்களை பயன் படுத்துவதால் மண் மலட்டுத் தன்மை ஏற்படு கிறது. உரங்களை குறைக்க இயற்கை முறை யில் தழைச்சத்தினை ஏற்படுத்தும் தழை உரப்பயிரான "தக்கை சனப்பை பூண்டு' விதைகள் பயன்பட்டது. இதன் மூலம் மண்ணில் இயற்கையான தழைச் சத்தும், தேவையான ஊட்டமும், மண் வளமும் அதிகரிக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ 24 முதல் 26 ரூபாய் வரை விற்கப்பட்ட  இவ்விதைகள், தற்போது இரு மடங்கு விலையேற்றம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவு பாதிக்கின்றனர். எனவே வேளாண் துறை மூலம் குறைந்த விலையில் தழைச்சத்து உர விதைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.   இது குறித்து வேளாண் அதிகாரிகளுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Read more »

ஆக்கனூர் ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., முகாம்

ராமநத்தம் : 

             ராமநத்தம் அடுத்த ஆக்கனூர் ஊராட்சியில் தொழுதூர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் துவங்கியது.
 
            கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். என்.எஸ். எஸ்., செயல் அலுவலர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். டி.எஸ்.பி., இளங்கோ முகாமை துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., உறுப்பினர் தினேஷ் அறிக்கை வாசித்தார். கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் ராஜபிரதாபன், ராஜன், முதல்வர் ரெங்கநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வைத்திலிங்கம், உதவி தலைமை ஆசிரியர் நாகராஜன், வள்ளலார் அறக்கட்டளை நிறுவனர் பொன்மொழியார், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை வாழ்த்தி பேசினர். விழாவில் ஆசிரியர்கள் வெங்கடாசலம், வீரமணி, வேலாம்பாள், நூலகர் பிரகாசம் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஆக்கனூர் செல்லியம்மன் கோவிலில் உழவாரப்பணி, தெருக்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. புள்ளியியல் துறை விரிவுரையாளர் சுபாஷ்சந்திரபோஸ் நன்றி கூறினார்.

Read more »

ஆண்டு விழா

 கடலூர் : 

              கடலூர் புனித வளனார் பாலர் பள்ளியில்  ஆண்டு விழா மற்றும் பெற்றோர் தின விழா  நடந்தது.
 
                பள்ளி தாளாளர்  ஆக்னல்  தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர்  சூசைராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி  விழா குழு தலைவர் சாமிநாதன், கல்லூரி முதல் வர் ரட்சகர்  பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கினார்.

Read more »

சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி துவக்க விழா

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமண மண்டபத் தில் சைவ சித்தாந்த நேர் முகப் பயிற்சி எட்டாம் தொகுப்பு துவக்க விழா நடந்தது.
 
                 விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமணமண்டபத்தில் திருவாடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர் முகப் பயிற்சி மைய விருத்தாசலம் கிளை சார்பில் சைவசித்தாந்த நேர்முகப்பயிற்சி எட்டாம் தொகுப்பு துவக்க விழா நடந்தது. குமாரதேவர் திருமட கல்யாணசுந்தர சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.  திருப்பணிக்குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். வக்கீல் மெய்கண்டநாதன், சுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். முனைவர் தங்கதுரை சைவ சித்தாந்த பாட தொடக்க உரையாற்றினார். உபயதாரர்கள் சிவக் குமார், கோவிந்தம் மாள், அண்ணாமலை, ராமலிங்கம், ஏழுமலை உட் பட பலர் பங்கேற்றனர்.

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

நெய்வேலி : 

              இருப்பு கிராமத்தில் நடந்த நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.
                நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்தது. முகாமில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம், சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம், வரதட்சணை, குடி, புகை மற்றும் பழைய கலைகளின் அழிவுகள் பற்றிய குறும்படங்கள், நுகர் வோர் விழிப்புணர்வு முகாம், இயற்கை பேரழிவு குறித்த கருத்தரங்கம், பல்மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், வளர் இளம் பருவ கருத்தரங்கம் நடத்தப்பட்டன. நிறைவு விழாவிற்கு மணி தலைமை தாங்கினார். கிராம தலைவர் பத்மாமணி முன்னிலை வகித்தார்.  பேராசிரியர்கள் கிப்ட் கிறிஸ்டோபர், தன்ராஜ் வரவேற்றனர். கல்லூரி முதல்வர் மருதூர் அரங்கராசன் வாழ்த்துரை வழங் கினார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு என். எல்.சி., துணைப் பொது மேலாளர் குப்புராஜ் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Read more »

மாவட்ட ஆளுநர் வருகை

பண்ருட்டி : 

               பண்ருட்டி அரிமா சங்கத்தில் மாவட்ட ஆளுநர் வருகை நிகழ்ச்சி தங்கநகை வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்தது.
 
                சங்க தலைவர் ராசவேலு தலைமை தாங்கினார். ஆளுநர் ரத்தினசபாபதி, அவரது மனைவி ஆமோதனம் பேசினர். செயலாளர் சுகுமார்காந்தி அறிக்கை வாசித்தார். முன்னாள் செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார்.  இதில் மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி, மண்டல தலைவர் பதம் ராஜ், முன்னாள் தலைவர் வரதராஜன், வீரப்பன், சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி, பொன் வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

விதை கிராம பயிற்சி

காட்டுமன்னார்கோவில் : 

                 காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லியில் விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது.
 
                 காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு எண்ணை வித்துக்களுக்கான விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது. விதைகள் அதிக அளவு விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பாதிப்பு குறித்தும், விவசாயிகள் தாங்களாகவே விதை உற்பத்தியை செய்து கொள்வது குறித்தும், தரமான நிலையில் விதை உற்பத்தியை அதிகப்படுத்தி பயனடைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலகர் மதிவாணன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் ஆனந்தன், அருள், லட்சுமணன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Read more »

நந்தீஸ்வரமங்கலத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

சிதம்பரம் : 

                      சிதம்பரம் அடுத்த நந்தீஸ்வரமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் தமிழரசி வரவேற்றார். ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், துணைத் தலைவர் சசிக்குமார், மக்கள் நலப்பணியாளர் அஞ்சுலட்சுமி, ஊராட்சி எழுத்தர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைய பொறுப்பாளர் விஜயகுமாரி நன்றி கூறினார்.

Read more »

அ.தி.மு.க.,செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க., செயல் வீரர் கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
                  மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ், தொகுதி இணை செயலாளர்கள் பாஸ்கரன், தங்கராசன், பேரூராட்சி செயலாளர் அப்பாதுரை முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கலைசெல்வன் வரவேற்றார். கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைப்பு செயலாளருமான எம்.பி., செம்மலை கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில் ஜெ., பிறந்த நாளன்று பள்ளி மாணவ- மாணவிகளுக் கும், ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

Read more »

இலவச சர்வீஸ் முகாம்

கடலூர் : 

               கடலூர் ஏ.பி.டி மாருதி கார் மற்றும் மாருதி சுசிக் இன்டியா  லிமிடெட் சார்பில் இரண்டு நாள் இலவச சர்வீஸ் முகாம் நடந்தது.
 
                   நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர் கள் தங்கள் மாருதி கார்களுடன் பங்கேற்றனர். முகா மில் பங்கேற்ற வர் களுக்கு கிளை மேலாளர் ஜூலியன் ஜோசப் நினைவு பரிசு வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற கார்கள் வரும் மார்ச் 31ம் தேதிக் குள் மீண்டும் சர்வீசிற்கு வந்தால் சிறப்பு சலுவை வழங்கப் படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விற்பனை மேலாளர் ரமேஷ் செய்திருந்தார்.

Read more »

பத்திரக்கோட்டை-பாலூர் ரோடு ரூ.1.7 கோடி செலவில் விரிவாக்கம்


நடுவீரப்பட்டு : 

                    பத்திரக்கோட்டை-பாலூர் சாலை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப் பில்  அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
 
                     பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை-பாலூர் கெடிலம் பாலம் வரை உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மிகவும் படும் மோசமாக சாலை இருந்து வந்தது. இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தினர். அதனடிப்படையில் பத்திரக்கோட்டையிலிருந்து நடுவீரப்பட்டு நைனாப் பேட்டை வரை உள்ள தார்சாலையை சி.ஆர்.ஐ.டி.பி.,திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40  லட்சம் மதிப்பிலும், நடுவீரப்பட்டு நைனாப்பேட்டையிலிருந்து பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள தார் சாலை 12 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பில் சரி செய்யப்பட உள்ளது. இதில் நரியன்குப்பம் பகுதியில் 320 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் ரோடு போடுவதற்காக  சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த ரோடு போடும் பணி வரும் மே மாதம் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

இடியும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் : புதிய அலுவலகம் கட்டித்தர கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

                     பரங்கிப்பேட்டை அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                  பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் 25 ஆண்டிற்கு முன் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி, 22 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இங்கு வந்து செல்வார்கள். அதனால் வருவாய் ஆய்வாளர் குடும்பத்துடன் இங்கே தங்கி பணிசெய்து வந்தார். இதனால் கிராமத்தில் இருந்து வரும் சாதாரண பொதுமக்கள் கூட தெரிந்துகொள்ளும் வகையில் வருவாய் ஆய்வாளர் இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து அலுவலக பலகையில் எழுதப்பட்டு இருக்கும்.
 
                     கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் அலுவலக கட்டடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் மழைக் காலங்களில் கட்டடத்தின் உள்ளே தண்ணீர் ஒழுகியதால் அப்போது இருந்த வருவாய் ஆய்வாளர் குடியிருப்பை காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் தங்கினார். அலுவலகம் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டடத்தின் விரிசல் அதிகமாகி எப் போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலை ஏற்பட்டது. இதனால் வருவாய் ஆய்வாளரை பார்க்கவரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து சென்றனர்.
 
                    தற்போது கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வருவாய் ஆய்வாளரும் தங்கி பணி செய்து வருகிறார். இதனால் வருவாய் ஆய்வாளர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியவில்லை.  பொதுமக்கள் நலன் கருதி இடிந்துவிழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வேப்பூரில் மண்ணுளி பாம்பு வனத்துறையில் ஒப்படைப்பு

சிறுபாக்கம் : 

                  வேப்பூர் அருகே பிடி பட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
                      வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் எஸ்.எம்., காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு நெளிந்து சென்றதை கிராம மக்கள் கண்டனர். அதனை பிடித்த கிராம மக்கள், ஊராட்சி தலைவர் அண்ணாதுரை தலைமையில் வேப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை விருத்தாசலம் வனவர் ஏகாம்பரம் மீட்டு காப்பு காட்டில் விட்டார்.

Read more »

மணிபர்ஸ் திருடிய பெண் கைது


திட்டக்குடி : 

               பஸ்சில் பெண்ணிடம் "மணிபர்ஸ்' திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
 
                பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி மஞ்சுளா (35). இவர் நேற்று காலை 9 மணியளவில் விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்து இறங்கினார்.  அப்போது பின்னால் வந்த இளம்பெண் ஒருவர், மஞ்சுளா கொண்டு வந்த பையிலிருந்து மணி பர்சை எடுத் தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட மஞ்சுளா கூச்சலிடவே, சக பயணிகள் அந்த இளம் பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோடு ஆனந்த் மனைவி சவுந்தர்யா (21) என்பதும், தற் போது திருச்சி மணப்பாறை ராயமேலூர் கிராமத்தில் வசித்து வருவதும் தெரிந்தது. இது குறித்து பெண்ணாடம் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிந்து இளம் பெண் சவுந் தர்யாவை கைது செய்தார்.

Read more »

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

திட்டக்குடி : 

                  ஆவினங்குடி மற்றும் சிறுபாக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண் டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.
 
                     ஆவினங்குடி தெற்குவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது தென்னந் தோப்பில் உள்ள 40 அடி உயர புளியமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி, வயலுக்கு செல்வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி விஷ வண்டுகளை அழித்தனர். சிறுபாக்கம்: பாசார் கிராமத்தில் சுடுகாடு அருகில் உள்ள வேப்பமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி அவ்வழியே செல்வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. நேற்று முன்தினம் மாலை பச்சையம் மாள் (42), பிச்சன் (47), முருகன் (35), சடையன் (58), மாயவேல் (55) உட்பட பத்து பேர் விஷ வண்டு தாக்கி காயமடைந்தனர்.  இது குறித்து ஊராட்சி தலைவர் வரதராஜன் அளித்த தகவலின் பேரில் வேப்பூர் நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீப்பந்தம் கொண்டு விஷ வண்டுகளை அழித்தனர்.

Read more »

கேரளா சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் அருகே கொசு வத்தி ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந் தது.
 
                   புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் கொசு வத்தி ஏற்றிக் கொண்டு லாரி (டி.என்.27-ஆர்-6733) கேரளாவிற்கு புறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் சுந்தரம் லாரியை ஓட்டி வந்தார். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு வழியாக எறும்பூர் செல்லும் சாலையில் முன்னாள் சென்ற சைக்கிளை முந்தி செல்ல முயன்றபோது லாரி நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

Read more »

மொபட்-பைக் மோதல்: ஒருவர் பலி

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் ஒருவர் இறந்தார்.
 
                   பண்ருட்டி அடுத்த கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன்(35). இவர் இந்திரா நகரில் இருந்து பத்திரக்கோட்டைக்கு மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். வேகாக்கொல்லை அருகே சென்றபோது எதிரே பெலாந்தோப்பை சேர்ந்த பாலமுருகன்(28) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வெள்ளையன் இறந்தார். பாலமுருகன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

சாராயம் பதுக்கியவர் கைது

கிள்ளை : 

                     சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் சாராயம் விற்பதாக வந்த தகவலின் பேரில் கிள்ளை போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண் டனர். அப்போது பிச்சாவரம் சாலையில் ஆலமரத்தடியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (29) என்பவரை கைது செய்தனர். பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior