உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

ஆழ்கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு யோசனை

கடலூர்:
 
                    100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கும் முயற்சிகளில் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என்று, இந்திய மீன் வள ஆய்வு நிறுவன சென்னை மண்டல இயக்குநர் ஆன்ட்ரோஸ் யோசனை தெரிவித்தார்.
 
                        தமிழ்நாடு கடல் மீன் வளம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. 
 
கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆன்ட்ரோஸ் பேசியது:
 
                     இந்தியாவில் மீன் உற்பத்தி 1950-51-ல் 0.5 மில்லியன் டன்னாக இருந்தது. 2008-09-ல் இது 3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. மீன் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு 1950-51-ல் ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்தது.தற்போது அது ரூ. 8607.9 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில், 3.92 மில்லியன் டன் மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.இதில் 3.01 மில்லியன் டன் மீன்கள் மட்டுமே தற்போது பிடிக்கப்படுகின்றன. மீன் உற்பத்தியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.தற்போது 50 முதல் 100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகிறது. இதனால் இப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருகிறது.எனவே இது வரை மீன் பிடிக்காத ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட வேண்டும். வெகுதூரத்தில் கிடைக்கும் சுறா மீன்கள் போன்றவற்றைப் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. தமிழக கடற்பரப்பளவு 41,412 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வகையில் மாற்று மீன் பிடிப்பு முறைகளை மீனவர்கள் கையாள வேண்டும். இதற்கு படகுகளில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்.மாமல்லபுரம், கோவளம், புதுவை கடல் பகுதிகளில் 150 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. கடலூர், நாகை புதுவை கடல் பகுதிகளில் 240 முதல் 420 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் கணிசமாக இறால் மீன்கள் இருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஓடுகயிறு மீன்பிடிக்கும் முறை, சூறை மட்டு வைத்து மீன்பிடிக்கும் முறை, கணவாய் தூண்டில் முறை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ஆழ்கடல் மீன்களைப் பிடித்து கூடுதல் வருவாய் பெறலாம். எரிபொருள் செலவும் மிச்சப்படும் என்றார் ஆன்ட்ரோஸ். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கடலூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் இளம்பரிதி, தனி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கல்லூரி ஆசிரியர்களின் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நிறுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புக் குழு சார்பில் வாயில் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் வி.தங்கமணி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் எஸ்.சேகர், ஜி.வணங்காமுடி. வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாயில் முழக்கப் போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
               சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விடுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலைவசதி, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிக் கோரி வகுப்புகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர். வட்டாட்சியர் எம்.காமராஜ், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ராஜகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்ததை அடுத்து கலைந்துச் சென்றனர்.

Read more »

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மாணவிகள் அவதி! படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிற்கும் பரிதாபம்

பண்ருட்டி : 

                            பண்ருட்டியில் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி  இல்லாமல் ஏழை மாணவிகள் மேல்படிப்பை தொடர முடியாத நிலை நீடித்து வருகிறது. பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாமல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள  அங்குசெட்டிப்பாளையம், திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளி, பூங்குணம், கண்டரக் கோட்டை  ஆகிய நான்கு உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல் நிலை படிப்பு படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நான்கு பள்ளிகளில் படிக்கும் 300 மாணவிகள் அருகில் உள்ள  பண்ருட்டி நகரத்தில் உள்ள பள்ளியில் தான் படிக்க வேண் டும்.

                ஆனால் பண்ருட்டியில் அரசு நிதி உதவி பெறும் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் அங்கு பயிலுமும் மாணவிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது என கூறி பிற பள்ளி மாணவிகள் சேர்க்கையை தவிர்த்து வருகின்றனர்.இதனால் ஏழை எளிய பெற் றோர்கள் தங்கள் மகள்களை தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நன்கொடை மற்றும் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர்.இதுகுறித்து எம்.எல்.ஏ., வேல் முருகன் முயற்சியின்பேரில் பண் ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்பில் மாணவிகளை சேர்க்க சி.இ.ஒ., அனுமதி வழங்கினார். அதன்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலை பிரிவிற்கு மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் 95 மாணவ,  மாணவிகள் இருப்பதால் இடப் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. போதிய இடவசதி இன்றி மாணவர்கள் தரையில் உட்கார்ந்து படித்து வருகின்றனர்.
                     கூடுதல் எண்ணிக்கை மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் அதிகம் படிக் கும் பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர்களும் முன்வருவதில்லை.  இதனால் அங்குசெட்டிப்பாளையம், பூங்குணம், திருவதிகை, கண்டரக்கோட்டை ஆகிய நான்கு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பத்தாம் வகுப்பு முடித்ததும் மேல்நிலை கல்வியை தொடர முடியாமல்  முந்திரி தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை செய்து  வருகின்றனர். இதற்கு தீர்வாக பண்ருட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என படிப்படியாக தரம் உயர்த்தினால் இருஆண்டில் தீர்வு ஏற்படும்.


                       இல்லையெனில் அங்குசெட்டிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தலாம். பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கடந்தாண்டு ஒரு லட்சம் பணம் செலுத்தியும் கிடப்பில் உள்ளது.  இத்திட் டத்தை விரைவுப்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., அழகிரி பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க நடவடிக்கை எடுப் தாக உறுதியளித்தார். ஆனால் பெண்கள் பள்ளி துவக்குவதற்கான பூர்வாங்க பணிகள் கூட இதுவரை துவங்கவில்லை. இதனால் வரும் 2010-11ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும்  மாணவிகள் மேல்நிலை வகுப் பில் படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் இணைந்து பண்ருட்டியில் அரசு  பெண்கள் மேல் நிலை பள்ளி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டு முயற்சி தேவை : 

                பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டு வர மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்வந்து கல்வித் துறையின் விதிமுறைகள் படி பள்ளிக்கான  இடம், கட்டட வசதிகள், தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினால் மட்டுமே அரசு பெண்கள் பள்ளி அமைக்க முடியும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறையினர் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

Read more »

ரேஷன் கார்டுகள் அச்சடிப்பதில் தவறுகள் திருத்தம் செய்ய அலையும் கார்டுதாரர்கள்

கடலூர் : 

               ரேஷன் கார்டுகள் அச்சடிப்பின் போது பெயர் மற்றும் முகவரியை "எல்காட்'  நிறுவனம் தவறுதலாக அச்சடிப்பதால் அதனை திருத்தம் செய்ய தாலுகா அலுவலகங்களுக்கு அலைவது தொடர்கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக நிரந்தர முகவரியில் வசிக்கும் உண்மையான கார்டுகள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த கார்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகல்களில் மனுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கிடையே ஒருபுறம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள "எல்காட்' மூலம் புதிய கார்டுகள் அச்சடித்து வழங்கும் பணி நடந்து வருகிறது.

                 பெரும்பாலான கார்டுகளில் பெயர்கள், தெரு பெயர், வயது, பெயர் விடுபடுவது, இனிஷியல் தவறாக அச்சிடுவது, முழு விலாசமே மாறியிருப்பது என அச்சடிப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மனுதாரர்கள் மனுவில் தெளிவாக குறிப்பிட்டிருந்தும் தவறுகள் நிகழ்ந்துள்ளது. நீக்கப்பட்ட கார்டை புதுப்பிக்க அலையும் மக்கள் ஒருபுறமும், பிழை இருக்கும் கார்டுகளை திருத்தம் செய்ய வேண்டி ஒருபுறமும் என தாலுகா அலுவலகங்களை நோக்கி தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் அலைகின்றனர். இனிஷியலை திருத்த வேண்டும் என்றால் கூட மனு எழுதி அதற்கு கோர்ட் ஸ்டாம்பு ஒட்டி அலைந்து கால் கடுக்க நின்று வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். புதிய கார்டுகளில் விலாசம் தவறாக அச்சடிக்கப்பட்டு 2 முதல் 3 மாதம் வரை பொருள்கள் வாங்கி கார்டில் உள்ள விலாசத்தில் ஆட்கள் இல்லை என கூறி கேன்சல் ஆன கார்டுகளும் உண்டு.

இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில் :

                    "ஏற்கனவே நீக்கம் செய்த குளறுபடியால் தினமும் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறோம். இதில் திருத்தம் எழுதி பதிவேட்டில் பதிந்து கார்டில் எழுதி கையழுத்து, சீல் என அதற்கே நேரம் சரியாகி போகிறது' என நொந்து போகின்றனர்.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் 'சென்ட்ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை'

கடலூர் : 

                      கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தேசிய தர நிர்ணய குழு பரிந்துரையின் பேரில் 10 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் 24 மணிநேரமும் இயங்க கூடிய "சென்ட்ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை' அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் அரசு பொது மருத்துவமனையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தும் முக்கிய பிரிவுகளுக்கு டாக்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் "வீக்' காக இருந்து வருகிறது. மருத்துவமனையை தேசிய தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற் காக தேசிய தர நிர்ணய குழு அதிகாரிகளை நியமித்து மருத்துவமனையை ஆய்வு செய்து படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
 
                       இதன் ஒரு கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போன்று  "சென்ட் ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை'  அமைக்கும் பணி நேற்று துவங்கியது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில "சென்ட்ரலைஸ்டு ஆக்சிஜன் சப்ளை' மூலம் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, தீவிர குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பைப் மூலம் நேரடியாக அந்தந்த வார்டுகளுக்கு 24 மணிநேரமும் இயங்கும் நிலையில் "ஆக்சிஜன்' கொண்டு செல்லப்படும்.இதன் மூலம் நோயாளிகள் படுகையின் மேல் புறத்தில் உள்ள குழாய் இணைப்பிலிருந்து "ஆக்சிஜன்' செலுத்தப்படும். இப்பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.

Read more »

எஸ்.ஐ., மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி :நான்கு பேர் ஆயுதங்களுடன் கைது

கடலூர் : 

                வடலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொலை செய்யும் நோக்கத்தோடு வேகமாக சென்ற சுமோ காரை விரட்டிச் சென்று ஆயுதங்களுடன் 4 பேரை கைது செய்தனர்.
 
              வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டி.என்.31 பி.இசட் 5342 பதிவெண் கொண்ட சுமோ கார் வேகமாக வந் தது. அதனை நிறுத்த முயன்ற சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மீது மோதுவது போல் அருகே வந்த கார் நிற்காமல் சென்றது.அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் சுமோவை விரட்டிச் சென்று வடலூர் சத்யஞானசபை அருகே மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். காரில் வீச்சரிவாள், ஆணி பிடுங்கும் இரும்பு ராடு, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டனர். விசாரணையில் வடலூர் கோட்டக்கரை சதீஷ் (33), காட்டுக் கொல்லை தட்சணாமூர்த்தி (31), உய்யகொண்டராவி பாபு (31), சேப்ளாநத்தம் நாகராஜன் (35) எனவும் இவர்கள் மீது கட்டப்பஞ்சாயத்து மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.  மேலும் அவர்கள் பயன்படுத்திய சுமோ கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Read more »

பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம்


சிதம்பரம் : 

                    சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தில்லை மெட்ரிக் பள்ளி சார்பில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம் நடந்தது. அண்ணாமலை பல்கலை மேளாண்மைத் துறை தலைவர் பஞ்சந்தம் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி சங்க இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். மண்டல பயிற்சியாளர் தியாகராஜன் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.  பேராசிரியர் கதிரேசன், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் கோவிந்தராஜன், பேராசிரியர் அம்பலவாணன், பாரி,கேசவன், ஜாபர்அலி, ரவிச்சந்திரன், கமல்சந்த் ஜெயின், மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்

கடலூர் : 

                     வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மருதூர் வள்ளலார் மண்டபத்தில் நடந்தது. பொருளாளர் அப்பானு  தலைமை தாங்கினார். பாதிரிமேடு ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கந்தவேல், வேல்முருகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாக குழு  தலைவராக ராஜசேகரன், துணைத் தலைவராக கந்தவேல், செயலாளராக ராமானுஜம், இணை செயலாளராக சண்முகம், பொருளாளராக தவமணி,  ஆலோசகராக அப்பானு, சிறப்பு பிரதிநிதியாக சாரங்கபாணி மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் வாலாஜா ஏரியை ஆழப்படுத்த வேண்டும். கூட்டுக் கூட்டம் நடத்த வேண்டும். விவசாயத்திற்கு நீர் விடுவது, மேலபுதுப்பேட்டை, ஆயிகுளம் பகுதிகளில் இணைப்பு சாலை. ராமலிங்க அடிகள் பிறந்த இடத்தை சுற்றுலா மையமாக ஏற்படுத்த வேண்டும் உள் ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

இந்திய குடியரசுக் கட்சி கூட்டம்

விருத்தாசலம்:
 
           வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் திங்கள்கிழமை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கழிவுநீர் வடிகால் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் மங்காப்பிள்ளை முன்னிலை வகித்தார்.

Read more »

காலை நேர மின்வெட்டைக் கண்டித்து போராட்டம்

கடலூர்:

                 கடலூரில் காலை 6 மணி முதல் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதைக் கண்டித்து, போராட்ட நடத்தப் போவதாக, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

 கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மின்வாரி கண்காணிப்புப் பொறியாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: 

                    கடந்த காலங்களில் மின்வாரியம் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்தது. மாணவர்கள் தேர்வுக்குப் படிக்கும் நேரங்களில் மின் வெட்டில் இருந்து விலக்கும் அளித்து வந்தது. இதை மின்துறை அமைச்சரும் உறுதிப் படுத்தி இருக்கிறார். ஆனால் தற்போது கடலூரில் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் வெட்டு, அரசின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது. மின் வாரியத்தின் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை சிதைந்து விடும். மார்ச் மாதம் அரசுத் தேர்வுகள் நெருங்கும் நேரம், இந்தக் காலை நேர மின்வெட்டு, மாணவர்களின் படிப்பை பெரிதும் பாதிக்கும். காலை நேரத்தில் தண்ணீர் ஏற்பாடுகள், உணவு தயாரித்தல், பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புதல் போன்ற பன்முக வேலைகள் இதனால் பாதிக்கப்படுகிறது. காலை நேரத்தில் வீட்டு உபயோகம் (25 சதவீதம் மட்டுமே) குறைவாக உள்ள நேரத்தில் மின்வெட்டு தேவையற்றது. வணிக நோக்கில் பார்த்தால் இதனால் மின் சேமிப்பு ஏற்படாது. நகராட்சி குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக நகராட்சித் தலைவர் தெரிவித்தும் சரி செய்யாதது அனைத்துப் பகுதி மக்களையும் பாதிப்பதாக உள்ளது. எனவே காலை நேர மின்வெட்டை விலக்கிக் கொள்ளாவிட்டால், 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மாணவர்கள் கோரிக்கை அஞ்சல் அட்டைகளை முதல்வருக்கும் மின்துறை அமைச்சருக்கும் அனுப்புவர். 1-3-2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்களுடன் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் மருதவாணன் கூறியுள்ளார். காலை நேரத்தில் மின்வெட்டுக்கு எந்தக் கல்வி நிறுவனமும் கோரவில்லை. மற்ற நேரங்களில் மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்பதற்காகவே, அவர்களுக்குச் சாதகமாக மின்வாரியம் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் மருதவாணன் தெரிவித்தார்.

Read more »

1200 மன வளர்ச்சி குன்றியோருக்கு ரூ. 60 லட்சம்

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கு மாதம் ரூ. 500 வீதம் 1200 பேருக்கு 10 மாதத்துக்கான உதவித் தொகை ரூ. 60 லட்சத்தை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

          மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகம் சார்பில் மன வளர்ச்சி குன்றியோருக்கு மாதம் ரூ. 500 வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 1200 பேருக்கு 10 மாதத்துக்கான தொகை ரூ. 60 லட்சத்தை மனுதாரர்களுக்கு மணியாடர் மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை உத்தரவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து, இன்று வரை நிலுவையில் இருந்த அனைத்து மனுக்களுக்கும் மணியார்டர் மூலம் உதவித்தொகை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் ஊனமுற்றோர் 15 பேருக்கு 3 மாத இலவச செல்ஃபோன் பயிற்சிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.  இதற்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 300 வீதம் ஒவ்வொருவருக்கும் 3 மாதங்களுக்கு ரூ. 900 வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி மங்களூர் ஆணையர் தகவல்

சிறுபாக்கம் : 

               மங்களூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து மங்களூர் ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் கூறியதாவது: 

                   மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின் றன. நடப்பு ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்திற் காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒரு மடங்கு மக்கள் தொகை பங்களிப்புடன் பள்ளி சுற்றுச்சுவர், சிமென்ட் சாலை, ரேஷன் கடை கட்டடம், அங்கன் வாடி மையம் ஆகியவை கட்டப்படும். நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மூலம் குளங்கள் ஆழப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட  உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணியை முடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது கூடுதல் ஆணையர் புஷ்பராஜ், பொறியாளர் மணிவேல் உடனிருந்தனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் வரும் 19ம் தேதி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

ஸ்ரீமுஷ்ணம் : 

                   ஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபா கல்லூரி நிறுவனங்கள் சார்பில் வரும் 19ந் தேதி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து கல்வி நிறுவனங்களின் செயலாளர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது
 
                        ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் புவி வெப்பமயமாதல் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துவது பற்றி கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 19ம் தேதி நடக்கிறது.இதில் ஜெயந்தி பத்மநாபா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் 600 பேர் இயற் கையில் விளைந்த தானியங்களை வைத்து ஆயிரத்து ஐநூறு சதுர மீட்டர் தூரத்திற்கு ஓவியம் வரைந்து உலக சாதனை நிகழ்த்த உள்ளனர்.இ துகுறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனத்தினர் இந்த சாதனையை நிகழ்த்துகின்றனர். மேலும் உலகிலேயே விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த முதல் சாதனை நிகழ்ச்சியாகவும் அமையும். கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கு பிறகு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது.  இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

Read more »

கடலூரில் மயானக் கொள்ளை

கடலூர் : 

                 கடலூர் வசந்தராயன்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
 
                   விழாவையொட்டி கடந்த 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்று பொது உற்சவம் நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி 6ம் நாள் விழாவில் இரவு 7 மணிக்கு ஆனந்த விநாயகர் கோவிலிலிருந்து பூக்கூடை புறப்பாடும் பூச்சொரி உற்சவம் நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு மயானக் கொள்ளை நடந்தது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு திருக் கல்யாண உற்சவமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் ஊஞ்சல் மற்றும் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

Read more »

கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 குடியிருப்புகள்


பரங்கிப்பேட்டை : 

                 ராஜிவ்காந்தி கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் மாவட்டத்தில் 3267 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். 

          பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு சசி தொண்டு நிறுவனம் சார்பில் 50 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 80 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 40 லட்சம் செலவில் நிரந்தர குடியிருப்புகள் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. சசி தொண்டு நிறுவன இயக்குநர் ரமேஷ்நாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன், பேரூராட்சி சேர் மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். குடியிருப்புகளை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், சுனாமியால் பாதித்த 50 பயனாளிகளுக்கு சசி தொண்டு நிறுவனம் குடியிருப்புகள் கட்டிகொடுத்துள்ளது. அதுபோல் சுனாமியால் பாதித்தவர்களுக்கு 31 கிராமங்களில் முதல் சுற்றில் 2 ஆயிரத்து 203 வீடுகளும், இரண்டாவது சுற்றில் 37 கிராமங்களில் 2 ஆயிரத்து 792 வீடுகளும் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.ராஜிவ்காந்தி கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 வீடுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டு அதில் 1578 கிராமங்களிலும், 1678 நகரப்புறங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றார். விழாவில் தாசில்தார் காமராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், கே.என்.எச்., ஜெர் மன் தலைவர் கிடோபால் கன்பர்க், இந்திய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் சாமுவேல், ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன், செயல் அலுவலர் ஜிஜாபாய் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் ரூ.60 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர் : 

              கடலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 1,200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஊனமுற்ற மற்றும் மறுவாழ்வு அலுவலகம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய 1,200 பேருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் 10 மாதத்திற்கான தொகை 60 லட்சம்               ரூபாய்க்கான பணவிடைகளை (மணியார்டர்) கலெக்டர் சீத்தாராமன் மனுதாரர்களுக்கு வழங்கினார்.  மேலும் 15 ஊனமுற்றவர்களுக்கு 3 மாத மொபைல் போன் பயிற்சிக்கான ஆணையை  வழங்கினார்.உதவித் தொகையாக மாதம் 300 ரூபாய் வீதம் 3 மாதத்திற்கு 900 ரூபாய் வழங்கப்படும் என்றும் மேலும் பயிற்சிக்கான கட்டணத் தொகை நபர் ஒன் றுக்கு 3,000 ரூபாய் வீதம் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மூலம் செலுத்த கலெக்டர் உத்தரவிட்டார். மாணவி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், தாட்கோ  மூலம் தனி நபர் கடன் வழங்கும் திட்டத் தின் கீழ் 2 பேருக்கு சோடா மூடி செய்யும் கம்பெனிக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் திட்ட தொகையாக 1 லட்சமும், டயர் வண்டிக்காக 20 ஆயிரம் ரூபாய மானியத்திற்குரிய  ஆணையை கலெக்டர் வழங்கினார்.

Read more »

பெண்களை படிக்க தூண்டியவர் முதல்வர்

கடலூர் : 

               ஏழை பெண்கள் பத்தாம் வகுப்புவரை படிக்க வழி செய்தவர் முதல்வர் கருணாநிதி என எம். எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.  கடலூர் சேவை இல்லத்தில் சமுக நலத்துறை சார்பில் 93 பேருக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமணம் உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தார். மாவட்ட சமுக நல அதிகாரி புவனேஸ்வரி, கண்காணிப்பாளர் விஸ்வநாதன், கவுன்சிலர்கள் நவநீதம், இளங்கோவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய 93 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கிய எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:

                    வறுமையின் காரணமாக பெண்கள் படிக்க முடியாத நிலையை போக்கிடும் பொருட்டு முதல்வர் கருணாநிதி, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஐந்தாயிரம் ரூபாய் அறிவித்தார். பின்னர் அதனை 10ம் வகுப்புவரை உயர்த்தி 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். தற்போது 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகிறார். இதன் மூலம் ஏழை பெண்கள் பலர் பள்ளி படிப்பை முடித் துள்ளனர் என்றார்.

Read more »

வேப்பூர் பள்ளி மாணவர்களுக்கு மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

சிறுபாக்கம் : 

              சென்னையில் நடந்த அறிவியல் தேர்வில் வெற்றி பெற்ற வேப்பூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் பாராட்டினார். சென்னை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆறாம் ஆண்டு அறிவியல் தேர்வு நேற்று சென் னையில் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அய்யனார் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி சூரியலட்சுமி, பிளஸ் 2 மாணவன் பிரவீன்குமார், ஏழாம் வகுப்பு மாணவன் சங்கர், மூன்றாம் வகுப்பு மாணவர் பாலாஜி ஆகிய நால்வரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளை பள்ளியின் தாளாளர் வேல்மோகன், இருதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், அய்யனார் பள்ளி கோபால் உடனிருந்தனர்.

Read more »

மீன் வள உற்பத்தியில் தமிழகம் 4ம் இடம் மண்டல இயக்குனர் தகவல்

கடலூர் : 

               ஆழ்கடல், தூர கடலில் உள்ள சுறா மற்றும் சூரை மீன்களை பிடிக்க மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மீன் வள அளவைத் தளம் சென்னை மண்டல இயக்குனர் ஆன்ரோஸ் பேசினார். கடல் மீன் வளம் குறித்த ஒரு நாள் கருத்தாய்வு கடலூர் முதுநகர் மீன்வளத்துறை அலுவலகத் தில் நடந்தது. உதவி இயக்குனர் இளம்பரிதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி முன் னிலை வகித்தார். முதுநிலை மீன் வள விஞ்ஞானி பரசுராமன் வரவேற்றார். 

மீன்வள அளவைத் தளம் சென்னை மண்டல இயக்குனர் ஆன்ரோஸ் பேசியதாவது:

                     இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதிகளில் மீன் வளம் 3.92 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 3.01 மில்லியன் டன் மீன்கள் பிடிக் கப்படுகின்றன.கடலில், 50 முதல் 100 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளிலேயே தற் போது அதிகளவில் மீன்கள் பிடிக் கப்படுகின்றன.

                    மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்திய கடல் பகுதியில் மீன் வளத்தை பாதுகாப்பது இதுவே சரியான நேரம். தூர கடலில் உள்ள சூரை மீன்கள், ஆழ்கடலில் உள்ள சுறா மீன்களை பிடிப்பதில் மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தமிழகத்தில் 1,076 கி.மீ., நீளமுள்ள கடற்கரை பகுதியில் 41,412 சதுர கி.மீ., கடற்பரப்பு உள்ளது. மீன் வள உற்பத்தில் தமிழகம் நான்காவது இடத்தில் உள் ளது.பாறை மீன் வளங்கள் கண்டறிய நடத்திய ஆய்வில் மகாபலிபுரம், கோவளம், புதுச்சேரி கடற்பகுதிகளில் 30 முதல் 150 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. நாகை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 240 முதல் 420 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகளில் இறால்கள் அதிகமாக கிடைக்கின்றன. ஓடு கயிறு, மீன்பிடிக்கும் முறை, தூண்டில் முறைகள் மூலம் கனவாய், சூரை, சுறா மீன்களை பிடித்து கூடுதல் வருமானம் பெறலாம்.கடலூர் கடல் பகுதிகளில் பாறை மீன்கள், கனவா மீன்கள் பிடிக்க பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் உகந்தவையாகும். இவ்வாறு மண்டல இயக்குனர் பேசினார்.சூரை மீன்கள் பிடித்தல், சுற்றுச் சூழலுக்குட்பட்ட மீன் பிடித்தல், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மீன் வளத்துறை விஞ்ஞானிகள் ஜெயச்சந்திரன், பாபு உள்ளிட்டோர் விளக்கினர்.இளநிலை விஞ்ஞானி நாகராஜன் நன்றி கூறினார்.

Read more »

200 டன் மத்தி மீன் கடலூரில் பிடிபட்டது

கடலூர் : 

                     கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று 200 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன. கடலூர் மாவட்டத்தில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. சூரை, கானாங்கத்த, கெளுத்தி மீன்கள் அதிகம் கிடைக் கின்றன. சூரை, கானாங் கத்த உள்ளிட்ட மீன்கள் உள்ளூர் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் தினமும் 100 முதல் 200 டன் மத்தி மீன் கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய் கின்றனர். கருவாடு தயாரிக்க வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி கோழி தீவனத்திற்காக நாமக்கல், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஒரு கிலோ மத்தி கருவாடு, 18 முதல் 19 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் கடலூர் துறைமுகத்தில் 200 டன் மத்தி மீன்கள் பிடிபட்டன. பாக்ஸ் (70 கிலோ) 400 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெயிலில் உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் வரை மத்தி மீன் சீசன் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Read more »

கடலூர், விழுப்புரத்தில் விரைவில் '3 ஜி' சேவை என்.எப்.டி.இ., சம்மேளன பொருளாளர் தகவல்

திட்டக்குடி : 

                 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விரைவில் "3 ஜி' சேவை செயல் படுத்தப்படும் என என். எப்.டி.இ., சம்மேளன மாநில பொருளாளர் ஜெயராமன் தெரிவித்தார். பெண்ணாடத்தில் 

அவர் கூறியதாவது:

         தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல்., சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டவர்கள் செயல்பாடின்றி உள்ளதால் குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்குள் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை. பி.எஸ்.என்.எல்., சேவையை வாடிக்கையா ளர்கள் அதிகமாக பயன்படுத்துவதால் மொபைல்களில் "சிக்னல் டிராபிக்' ஏற்படுகிறது.கேபிள் பழுதினால் பிராட்பேண்ட் சர்வீசிலும் சிக்கல் ஏற்படுகிறது. பிராட்பேண்ட் இணைப் புக்கு விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் உடனடியாக இணைப்பு வழங்கவும், பழுதுகளை நீக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மற்றும் கடலூரில் வரும் 24ம் தேதி நடக்க உள்ளது.

              தஞ்சையில் வரும் மார்ச் 7, 8, 9ம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களை தக்க வைப்பது, அதிகரிக்க செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். புதுடில்லி, மும்பை, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் "3 ஜி' சேவை கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு மாதத்திற்குள் கொண்டு வரப்படும். பயன்பாட்டிலுள்ள "2 ஜி' சேவையே பழுதுகள் காரணமாக தடை ஏற்பட்டு வரும் நிலையில், அதிக வசதிகள் கொண்ட "3 ஜி' சேவையை வாடிக்கையாளர்கள் நிறைவாக செயல்படுத்திட நிர்வாகத்திற்கு எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வியாபார நோக்கோடு மட்டுமே பயன்படுத்தும் நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியை அதிகப்படுத்திட முயற்சிக்க வேண்டும் என்றார்.

Read more »

மானியத்தில் ஜிப்சம் வாங்கிக்கங்க! விவசாயிகளுக்கு அதிகாரி அழைப்பு


அணைக்கட்டு:

                 விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிப்சம் வழங்கப்படும் என்று அணைக்கட்டு வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவக்குமார்சிங் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: 

              அணைக்கட்டு வட்டாரத்தில் இரவை மணிலா பயிர் செய்யப்பட்டு வருகிறது. மணிலாவில் களையெடுக்கும்போது ஜிப்சம் போட்டால் பயிர் நன்றாக இருக்கும்.

              இதற்காக விவசாய துறை சார்பில் அணைக்கட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐசோபாம் எண்ணெய் வித்து மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் ஒரு எக்டேருக்கு 400 கிலோ வீதம் வழங்கப் படுகிறது. எனவே விவசாயிகள் வாங்கிச் சென்று அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு சிவக்குமார்சிங் தெரிவித்தார்.

Read more »

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தாய் புகார்

குடியாத்தம்:

                   மர்மமான முறையில் இறந்து கிடந்த மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் போலீசில் புகார் செய்துள்ளார். குடியாத்தம் புத்தர்நகர், கூடநகரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(24). இவருக்கும் பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ஹரிபிரியா(19) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

              நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், பக்கத்தில் படுத்திருந்த ஹரிபிரியா இறந்து கிடந்ததாகவும் கவுரி சங்கர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஹரிபிரியாவின் தாய் மீரா தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹரிபிரியாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.,விசாரணை நடைபெற உள்ளது.

Read more »

வாய்க்காலில் கவிழ்ந்தது டேங்கர் லாரி பண்ருட்டி அருகே கிளீனர் பலி; டிரைவர் காயம்

பண்ருட்டி : 

                     பண்ருட்டி அருகே கிளீனர் ஓட்டி வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந் ததில் அவர் இறந்தார்.

                       புதுச்சேரியிலிருந்து நேற்று முன்தினம் இரவு, டேங்கர் லாரி ஒன்று, சோப் ஆயில் ஏற்றிக் கொண்டு கோவைக்கு புறப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டிரைவர் சந்திரன் (42) லாரியை ஓட்டி வந்தார். அவருடன் இளையான்குடி அடுத்த கருஞ் சித்தி ரஷீத்கான் (44) கிளீனராக இருந்தார். லாரி கடலூர் வந்ததும், கிளீனர் ரஷீத்கான் லாரியை ஓட்டி வந்தார். டிரைவர் சந்திரன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டு வந்தார்.இரவு 11.30 மணி அளவில் பண்ருட்டி திருவதிகை வளைவில் டேங்கர் லாரி வந்தபோது, எதிரில் கரும்பு டிராக்டர் வந்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த கிளீனர் ரஷீத்கான், லாரியை இடது பக்கமாக திருப்ப முயன்ற போது சாலையோரத்தில் உள்ள வாலாஜா வாய்க்காலில் லாரி தலைக்குப்புற கவிழ்ந் தது. பண்ருட்டி போலீசார், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரியை ஓட்டி வந்த கிளீனர் ரஷீத் கான் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். டிரைவர் சந்திரன் படுகாயமடைந் தார். அவரை போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு மருத் துவமனையில் சேர்த் தனர். கவிழ்ந்த டேங்கர் லாரி நேற்று காலை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனால், காலை 7 மணி முதல் 8 மணி வரை கடலூர்-பண் ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் பாலூர் வழியில் திருப்பி விடப்பட்டது.
பொறுப்பற்ற போலீஸ்

                     பண்ருட்டி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், போலீசாரிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக மீட்பு பணி தாமதமானது. நள்ளிரவில் நடந்த விபத்து பற்றி தகவலறிந்த பண்ருட்டி சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியில் எழுதியிருந்த மொபைல் போன் எண் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டார். சற்று நேரத்தில் அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்து பகுதியை பார்வையிட்டனர். பணியில் இருந்த சப் -இன்ஸ்பெக்டர் தமக்கு இரவு பணி முடிந்துவிட்டதாக கூறி, ரோந்து போலீசாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கழன்று கொண்டார். "சாலை விபத்திற்கு தான் நாங்கள் பொறுப்பு. பள்ளத்தில் லாரி கவிழ்ந்துள்ளதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?' என புலம்பினர். போலீசாரின் போட்டியால் மீட்பு பணி தாமதமானது.

Read more »

தீப்பெட்டி தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் சாம்பல்

குடியாத்தம்;

                 குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூலப் பொருட்கள் எரிந்து சாம்பலானது.கு டியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இயந்திர தீப் பெட்டி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

              கிடங்கில் வைக்கப்பட்டிரு ந்த மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்ததும் கோட்ட அலுவலர் கஜேந்திரன், உதவி கோட்ட அலுவலர்கள் சுப்பிரமணி, எல்.சுப் பிரமணி, தாசில்தார் வசந்தா, டிஎஸ்பி.,காசிவிஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மற்றொரு விபத்து: 

                     குடியாத்தம் சந்தப்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுப்பொருட்கள் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந் ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior