உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 27, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு தூக்கு தண்டனை

                  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ல் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

                 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.    இவ்வழக்கில் 26 பேருக்கு தூக்குத் தண்டனையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.    முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.    இந்நிலையில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.    

                இதேபோல் குடியரசுத் தலைவருக்கு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 11 ஆண்டுகளுக்கு முன் கருணை மனு அனுப்பினர். மனு இம்மாதம் 12-ஆம் தேதி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மூலம் சிறை அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட கடிதம் வெள்ளிக்கிழமை கிடைத்தது.    உடனடியாக சிறை அதிகாரிகள் கைதிகள் மூவருக்கும் இத்தகவலை தெரிவித்தனர். அத்துடன் செப்டம்பர் 9-ம் தேதி மூவரையும் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளனர்.    


Read more »

தமிழக பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை

                 பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.  

சட்டப்பேரவையில் தாமாக முன்வந்து விதி 110-ன் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

                "அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்படும். 

               தரம் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்  உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

                 இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 99.29 கோடி செலவு ஏற்படும்.  முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.  இதனை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வி ஆண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும்.  

                 மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.  நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும்.  1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

                    மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி - அதாவது ஜியாமெட்ரி பெட்டி - கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 119.48 கோடி செலவிடப்படும். 

                   அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும்.  புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். 

                  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளது.  எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.  

                 இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத் திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும்.  கணினி மூலம் கற்பது பள்ளிகளில் இப்போது இன்றியமையாததாக உள்ளது. எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும், "பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை (தமிழ்நாடு)' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். 

               இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைக்கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்' என்றார் முதல்வர்.   









Read more »

Former Transport Minister K.N. Nehru has been reached Cuddalor Prision

M.K. Alagiri, Union Minister of Chemicals and Fertilizers, along with D. Napoleon, Union Minister of State for Social Justice and Empowerment emerging from the Tiruchi Central prison on August 25, 2011 after meeting partymen lodged in the prison. Photo: M. Moorthy



          “I have not done anything wrong and we will face the case legally,” said former Transport Minister K.N. Nehru after his arrest here.

         Speaking to reporters before being taken to Cuddalore, Mr. Nehru implied that the case was politically motivated. “The important reason is that we had worked hard for DMK’s victory (in the elections),” he said. He also added that DMK cadres in Tiruchi district were the worst affected by the State government’s vindictive measures.

        Mr. Nehru claimed that K. Srinivasan, the complainant, was present during the opening of the Kalaignar Arivalayam and had even presented a shawl to the then Chief Minister M. Karunanidhi. Subsequently, a family wedding of the doctor was held at the Kalaignar Arivalayam. The land itself was bought during the previous AIADMK regime, he said.

Alagiri’s visit:

              Meanwhile, Union Minister for Chemicals and Fertilizers M.K. Alagiri, who visited the Tiruchi Central Prison to meet his party associate ‘Attack’ Pandi soon after Mr. Nehru’s arrest, observed that the arrest was also an achievement of the 100-day rule of the AIADMK and termed it as vindictive action. He cautioned that the DMK, once back to power, would take action against the officers responsible for foisting cases against DMK men. Union Minister of State for Social Justice and Empowerment D. Napoleon also accompanied Mr. Alagiri.

Read more »

வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழா

வடலூர்:
              வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழாவின் நிறைவு விழாவும், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். 41-ம் ஆண்டு நினைவு தினமும், ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழாவும் வடலூர் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில், அகவல் பாராயணத்துடன் தொடங்கி நடைபெற்றது.

               நிகழ்ச்சிக்கு சுத்தசன்மார்க்க நிலைய துணைத்தலைவர் ஊரன் அடிகள் தலைமை தாங்கினார். மாணவிகள் இறைவணக்கம் பாடினார்கள். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். உருவப்படத்தை பூமலை அய்யா திறந்துவைத்தார்.

விழாவில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அவ்வை சண்முகம் பேசியது:-


             உயர்ந்த மனிதராகவும், ஒப்பற்ற தலைவராகவும் விளங்கிய ஓ.பி.ஆர்.தான் முதன்முதலில் சுதந்திர தினகொடியினை ஏற்றிய பெருமைக்குரியவர். திருவண்ணாமலைக்கு செல்ல இருந்தவர் வள்ளலாரின் உயரிய கொள்கையின்பால் வடலூர் வந்தார். வள்ளலார் பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கினார். ஓ.பி.ஆர். அறிவு பசிக்கு உணவு வழங்கினார். அவர் தொடங்கிய கல்வி நிறுவனம் வளர்ந்தோங்கி நிற்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் கல்வி அவசியம். சென்னை அளவே உள்ள கொரியா நாட்டில் படிக்காத பெண்களே இல்லை. அவர்கள் கல்வியுடன் தொழில்களையும் கற்றுக் கொண்டவர்கள். அதேபோல் இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள், தொழில் நுட்ப வல்லுனர்களாக உருவாகி வெளியே செல்ல வேண்டும். அதுதான் இந்த நிறுவனத்துக்கு பெருமை ஆகும். ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது மட்டும் போதாது. அதனை சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணி செயல்படவேண்டும்.

              அந்த அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படுவது பாராட்டுக்குறியது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இளங்குமரன், ராமலிங்கர் பணிமன்ற நிர்வாகி சோமசுந்தரம் உள்பட பலர் பேசினர். முன்னதாக காலையில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிப்பும், அஞ்சலி ஊர்வலமும் நடைபெற்றது.

                இதுபள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. ஊர்வலத்தில் வடலூர் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், காட்டுக் கொல்லை உள்ளிட்ட கிராம மக்கள் ஓ.பி.ஆர்கல்வி நிறுவன மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. மாவட்ட பேரவை நிர்வாகி ஜெயபிரகாஷ், நகர நிர்வாகி உதயராஜ், மணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior