உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 14, 2011

கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

கடலூர்:

           உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

               பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கவும், தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கும் வாக்காளர்களுக்கான கடமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

            கடலூர் நகராட்சி அலுவலகம் அருகே புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, நகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடர்பாளர் திருமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் வாக்கு சேகரிப்பு

 
http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/fd90a8f4-fb06-45a4-961c-4e5f49eb18cc_S_secvpf.gif
 
திட்டக்குடி
 
           மங்களூர் ஒன்றியம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு எழிலரசனுக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கே.பி.கந்தசாமி, அன்னக்கிளி, அருள், கந்தசாமி உட்பட்ட வேட்பாளர்களுக்கும், திட்டக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நீதிமன்னனும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆவினங்குடி, பட்டூர், திட்டக்குடி, பெருமுளை, நிதிநத்தம், குமாரை, கீரனூர் ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய இடங்களில் பேசினார்.

அப்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறியது:-

               கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அ.தி.மு.க.உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றால்தான் அனைத்து நல்வாழ்வு திட்டங்களும் மக்களை எளிதாக சென்றடையும். இது அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும். தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி அனைத்து திட்டங்களையும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றியே தீருவேன் என ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார். மக்களே பார்த்து தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா தான். கேட்டால் கொடுக்குமிடத்தில் வாரி கொடுக்கும் மனநிலையில் ஜெயலலிதா அமர்ந்துள்ளார்.  இவ்வாறு அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.

பிரசாரத்தில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் பேசுகையில் 
 
                     அரசினால் கிடைக்கும் முழு பலனும் கிராமங்களில் சென்றடைய அ.தி.மு.க.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டார். கூட்டத்தில் ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.கந்தசாமி, துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பேரவை துணை செயலாளர் மணிமாறன், அரசு வழக்கறிஞர் கலைச்செல்வன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தொகுதி செயலாளர் மதியழகன், துணை செயலாளர் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
 
 
 

Read more »

விருத்தாசலத்தில் சுயேச்சை வேட்பாளர் கார் உடைப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/86b64312-6334-4a28-95e0-d3ffaeb67fd1_S_secvpf.gif
 
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தில் நள்ளிரவில் சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்து நொறுக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.    விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகமது ஆசாத் (வயது 47). இவர் விருத்தாசலம் நகரசபை 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.    

            நேற்று இரவு இவர் வழக்கம் போல் வீட்டின் அருகே தனது காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அந்த காரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.  அந்த சத்தம் கேட்டு முகமது ஆசாத்தின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்விழித்து வீட்டு கதவை திறந்து வெளியே ஓடிவந்தனர். உடனே மர்ம கும்பல் தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றுவிட்டது.  

         இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கு ஓட்டு சீட்டுகள் அனுப்பும் பணி தொடக்கம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/d61ea8bd-b6a6-4d87-8bc2-43f8e729292c_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
            
          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ள 5 ஆயிரத்து 784 பதவிகளை பிடிக்க 20 ஆயிரத்து 533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 476 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 3 ஆயிரத்து 377 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

                  மேலும், மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் கிராமப்புற வாக்காளர்கள் (11 லட்சம்பேர்), மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்குரியவர்களை தேர்ந்து எடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் 4 ஓட்டுகளை போட வேண்டியுள்ளதால் 4 வண்ணங்களில் சுமார் 50 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

              இந்த ஓட்டுச்சீட்டுகள் அனைத்தும் விருத்தாச்சலம் அரசு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், சுலோச்சனா ஆகியோர் மேற்பார்வையில் ஓட்டுசீட்டுக்கள் அனுப்பு பணிகள் தொடங்கியது.

              விருத்தாசலத்திலிருந்து கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டு மன்னார் கோவில், கம்மாபுரம், விருத்தாசலம், நல்லூர், மங்களூர் ஆகிய 13 ஒன்றியங்களுக்கு அனுப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒன்றியங்களுக்கு தேவையான ஓட்டு சீட்டுகள் மற்றும் தடவாள பொருட்கள் ஒப்படைக்கபடுகிறது.

           மினி லாரி மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு ஓட்டு சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. விருத்தாசலம் அரசு கிட்டங்கியில் ஓட்டுசீட்டுகள் இருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.    
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior