உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 06, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் தலைமை வகித்துப் பேசினார். 

விழாவில்  துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் பேசுகையில் 

              ஆசிரியர்கள் காலத்தின் மாற்றத்தினை உணர்ந்து தமது கல்வியறிவை வளர்த்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.  கலைப்புல முதல்வர் டி.செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பல்கலைக்கழக்கழக துணைவேந்தர் முனைவர் கே. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2010-11 கல்வியாண்டில் சிறந்த பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார். 

பதிவாளர் எம்.ரத்தினசபாபதி நன்றி கூறினார். 

நல்லாசிரியர் விருதுபெற்றவர்கள்:

டி.நமச்சிவாயம் (பொருளாதாரம்), 
கே.வி.புகழேந்தி (உயிர்வேதியியல்), 
ஓலிவா பெர்னாண்டோ (கடல்வாழ் உயிரியல்),  
எஸ்.ராஜா (இந்திய மொழியியல்துறை), 
டாக்டர் பி.கே.மன்னா (மருந்தியல்துறை), 
ஏ.யோபு (உடற்கல்வித்துறை),
பி.கே.குமார் (இசைத்துறை), 
என்.ராமநாதன் (வேளாண் நுண்தாவரவியல்), 
டாக்டர் பி.வி.எஸ்.பிரசாத் (தோல்வியாதி பிரிவு), 
டாக்டர் ஏ.தங்கவேல் (பலமருத்துவப் பிரிவு). 

சிறந்த ஆராய்ச்சியாளர் விருது பெற்றவர்கள்: 

ஜி.ரவி (பொருளாதாரம்), 
ஆர்.பன்னீர்செல்வம் (தாவரவியல்),
டி.ராமநாதன் (கடல்வாழ் உயிரியல்), 
வி.கீதா (மொழியியல்),
எஸ்.ராமநாதன் (உற்பத்தி பொறியியல்), 
ஆர்.முத்துமாணிக்கம் (கல்வியியல்), 
ஆர்.சந்திரா (இசைத்துறை), 
வி.குருசேவ் (வேளாண் தாவரவியல்), 

ஆர்.உமாராணி (மருந்தியல் துறை). 

கல்வியியல் பேராசிரியர் பி.பத்மநாபனுக்கு டாக்டர் எம். ஆரம் அறக்கட்டளை விருதும், 

கடல்வாழ் உயிரியியல் துறை இணைப் பேராசிரியர் பி.சம்பத்குமாருக்கு எம்.ரத்தினசபாபதி அறக்கட்டளை விருதும், 

கடல்வாழ் உயிரியியல் துறை இணைப் பேராசிரியர் எஸ்.ஜெயலட்சுமிக்கு டாக்டர் டி.ஜே.பாண்டியன் விருதும் வழங்கப்பட்டது. 

                    விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சுந்தரம், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







Read more »

சென்னையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்க மூன்று புதிய சேவை மையங்கள்

           பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அளிக்க மூன்று புதிய சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளது. 

இம்மையங்கள் சென்னையில் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

புதிய மையங்கள் செயல்படவுள்ள இடங்கள்: 

நவீன்ஸ் பிரசீடியம் - நெல்சன் மாணிக்கம் சாலை, 
பானுமதி ராமகிருஷ்ணா சாலை - சாலிகிராமம், 
துரைசாமி ரெட்டி தெரு - தாம்பரம்.

            இதனால், ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவுசெய்து சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் அளிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

             ஆன்லைன் மூலமாக ஏற்கெனவே விண்ணப்பங்களை அளிப்பதற்கான தேதியை பெற்றுள்ளோர் வரும் அக்டோபர் மாதம் வரை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல அலுவலகத்திலேயே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இம்மாதம் 16-ம் தேதியிலிருந்து புதிய மையங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.






Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 430 வளர் இளம் பெண்களுக்குபயிற்சி

கடலூர்: 

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 430 வளர் இளம் பெண்கள் பயிற்சி பெற உள்ளனர் என கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ராஜிவ் காந்தியின் வளர் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டிற்கான தொழிற் பயிற்சியினை கலெக்டர் அமுதவல்லி தொடங்கி வைத்து பேசியது: 

              ராஜிவ் காந்தியின் வளர் இளம் பெண்களது தன்னுரிமை மேம்பாட்டிற்கான திட்டம் தமிழகத்தில் கடலூர், சேலம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 11 முதல் 18 வயது முடிய 1 லட்சத்து 9 ஆயிரத்து 358 வளர் இளம் பெண்கள் உள்ளனர். 

              இத்திட்டம் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. 16 முதல் 18 வயது முடிய உள்ள பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு தொழிற் பயிற்சி அளித்தல் திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் பயிற்சி, அடிப்படை வீட்டு உபயோக மின் பயிற்சி மற்றும் எம்ராய்டரி ஆகியவை அரசு தொழிற் பயிற்சி மூலமாக பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 30 வளர் இளம் பெண்கள் வீதம் 430 வளர் இளம் பெண்கள் பயிற்சி பெற உள்ளனர். வளரும் இளம் பெண்கள் படிப்பை தொடர முடியவில்லை என்றாலும் வாழ்வில் உயர்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.






Read more »

Teachers sport black badges in Cuddalore Distrcit

CUDDALORE: 

           Teachers in here sported black badges on Teachers’ Day to protest against a new system, brought in by the district collector a month ago, under which an SMS has to be send to the Collector’s Office before 9.30 am every day by the heads of schools to mark the attendence of the teachers.
 
         After the rule was brought in by collector V Amuthavalli, teachers staged a demonstration on Aug 21 demanding revocation of system. On Monday, 50 per cent of the teachers in the dis trict wore black badges and went to school urging the collector to withdraw the rule.The teachers complained that to follow exact timing, two teachers travelling by a two wheeler to school met with an accident few days back.This month onwards. the same rule has been extended to officials of the health department in the district.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior