உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

Annamalai University to reopen on Thursday

CUDDALORE: 

                Annamalai University will reopen on Thursday, Vice-Chancellor M. Ramanathan, said on Monday. The faculties of arts, science, fine arts, education, Indian languages, agriculture and pharmacy would start functioning from Thursday.

Read more »

Awareness rally on Tamil conference


Periyar Government Arts College students taking out a rally in Cuddalore on Monday.

CUDDALORE: 

                Students of the Periyar Government Arts College here took out a rally to create awareness of the World Classical Tamil Conference scheduled to be held at Coimbatore in June. The rally started at the Thirupadiripuliyur Sub-Registrar's Office and went to the Collectorate. Cuddalore MLA G. Aiyappan, college principal K. Ranganathan, municipal chairman T. Thangarasu, vice-chairman Thamarai Selvan and faculty members participated in it.Speakers dwelt at length on ancient heritage and culture of Tamil Nadu.

                 Quoting from literary works, they highlighted the richness of Tamil language. The “classical language status” conferred on the language had restored its past glory, they said. The world conference would see a congregation of scholars from around the globe analysing and scrutinising the evolution of Tamil and how best it could serve the contemporary developments in the scientific and technical fields, the speakers said.

Read more »

அண்ணாமலை பல்கலையில் 11ம் தேதி வகுப்புகள் துவக்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வரும் 11ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என, துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
 
துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., - எம்.எஸ்சி., அனைத்து வகுப்புகள், பி.எட்., - எம்.எட்., - பி.மியூசிக்., - எம்.மியூசிக்., - பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை, டி.பார்ம்., - பி.பார்ம்., - எம்.எஸ்சி., - ஐ.டி., - சாப்ட் வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன்ஸ், பி.இ., - எம்.இ., அனைத்துப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் (11ம் தேதி) முதல் வகுப்புகள் துவங்கப்படும். பி.இ., முதலாம் ஆண்டு அனைத்து பிரிவிற்கும் வரும் 17ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும். அத்துடன் பி.இ., அனைத்து பிரிவு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி நடக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு: தலைமை காவலர்கள் ஏக்கம்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி நியமன அரசாணை பிறப்பித்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாததால் அதிருப்தியில் உள்ளனர்.

               தமிழகத்தில் காவல் துறையில் சில ஆண்டுகளுக்கு முன் சப் இன்ஸ் பெக்டர் பதவிகள் நேரடி தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டன. இது பணியில் உள்ள போலீசாரிடையே அதிருப்தியும், பல ஆண்டுகளாக பணியில் இருந்தும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. இதனையடுத்து பணி மூப்பு அடிப்படையில் துறை வாரியான தேர்வு வைத்து அதன் மூலம் சிறப்பு சப் இன்ஸ் பெக்டர்கள் தேர்வு செய் யப்பட்டனர். தேர்வு முறையில் உயரதிகாரிகளின் குறுக்கீடுகள், சிபாரிசுகள் என பல்வேறு குளறுபடியால் மீண்டும் போலீசாரிடையே அதிருப்தி நிலவியது. இதனைத் தொடர்ந்து 2ம் நிலை காவலர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்தால் முதல் நிலை காவலர்களாகவும், அடுத்த 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்று அந்த பதவியில் "பனிஷ்மென்ட்' ஏதுமின்றி 10 ஆண்டு நிறைவு செய்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.
 
               கடலூர் மாவட்டத்தில் 1975ம்  ஆண்டு டிச.31ம் தேதி வரை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் பதவி உயர்வு அளிக் கப்பட்டுள்ளது. ஆனால் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 1979ம் ஆண்டு வரை தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த ஜன. 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 130க்கும் மேற்பட்ட போலீசார் ஏமாற்றமடைந்துள்ளனர். இதில் ஒரு சிலர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங் களே உள்ளன. காலத்தோடு பதவி உயர்வு வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

Read more »

கடலூர் கலெக்டர் அதிரடி

கடலூர் :

               தினமலர் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் பஸ் நிலையம், மீன்கள் அருங்காட்சியகத்தை கடலூர் கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.
 
                     கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2008ம் ஆண்டு நவ. 22ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். கடலூர் நகராட்சி பூங்காவில் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரிய வகை மீன்கள் அருங்காட்சியகத்தையும், நெல்லிக் குப்பத்தில் ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தையும் அவர் திறந்த வைத்தார். துணை முதல்வர் திறந்து வைத்த இவை மூன்றும் ஓரிரு மாதங்களில் முடங் கின. இதுகுறித்து நேற் றைய தினமலர் "டீ கடை பெஞ்ச்' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
 
                இந்நிலையில் கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ., ஜெயக்குமார், சேர்மன் கெய்க்வாட்பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர். 

பின்னர் கலெக்டர் கூறுகையில்," 

                    சில நாட்களில் போலீஸ் நிழற்குடை, சிக்னல், ஹைமாஸ் லைட் வைக்கப்படும். அனைத்து பஸ்களும் உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்திற்குள் வராத டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய் யப்படும். பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண் டும்' என்றார். இரவு 7.15 மணிக்கு கடலூர் நகராட்சி பூங்கா வளாகத்தில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார். அரிய வகை மீன்கள் இல்லாததைக் கண்ட கலெக்டர், அருங் காட்சியகத்தை பராமரித்து வரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கடல் உயிரின உயராய்வு  மைய போராசியர்கள் ராமமூர்த்தி, சங்கர் மற்றும் கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் ஆகியோரிடம் மீன் அருங்காட்சியகம் உரிய முறையில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். பள்ளி மாணவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கையேடு தயாரித்து வழங்க உத்தரவிட்டார்.  மீன் அருங்காட்சியகம் பெயர் பலகையை பெரிய அளவில் வைக்கவும், பூங்கா சுவற்றில் கடல் அமைப்பை வரைந்து, கடல் வாழ் உயிரினங்களை பற்றிய குறிப்புகளை எழுதிட உத்தரவிட்டார்.

Read more »

மின் தடையால் கரும்பு, வாழை, மணிலா பயிர்கள் கருகும் அபாயம்! மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவிக்க கோரிக்கை


கடலூர் : 

                மின் பற்றாக்குறையால் கடலூர் அடுத்த கேப்பர் மலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுள்ள மணிலா, கரும்பு, வாழை, உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விவசாயிகளுக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
            கடலூர் அடுத்த வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், ராமாபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், காட்டுப்பாளையம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தற்போது வாழை, கரும்பு, மணிலா, தர்பூசணி, உளுந்து மற்றும் ரோஜா, கனகாம்பரம், காக்கட்டான் உள்ளிட்ட பூ வகைகளும் பயிரிடப்பட்டுள்ளது. இதில் மணிலா, உளுந்து பயிர்கள் அறுவடையாகும் தருணத்திலும், வாழை பூப்பூத்து குலை வரும் பருவத்திலும் உள்ளன. ரோஜா, காக்கட்டான், கனகாம்பரம் சீசன் நேரமாகும். அனைத்து பயிர்களுமே போர்வெல் மூலமே பாசன வசதி பெற்று வருகின்றன. சில இடங்களில் கிணற்று பாசனம் பெறுகின்றன. அப்பகுதிகளில் போர் வெல் பாசனத்திற்காக இரண்டு ஆண்டிற்கு முன்பு மும்முனை மின்சாரம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்டது. அப்போதே விவசாயத் திற்கு மின் பற்றாக் குறை ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். இந்நிலையில் 6 மணி நேரமாக இருந்த மும்முனை மின்சாரத்தில் 2 மணி நேரத்தை குறைத்து பகலில் 4 மணி நேரம், இரவில் 4 மணி நேரம் மட் டுமே மின்சாரம் கடந் தாண்டு வழங்கப்பட்டது. தற்போதும் இதே நிலையே நீடித்து வருகிறது. ஆனால் மும்முனை மின்சாரம் எந்த நேரத்தில் வழங்கப்படுகிறது என தெரியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்துறையினர் அவர்களுக்கு விருப்பப்பட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் வழங்கி வருகின்றனர். மேலும் மின்சாரம் வழங்கும் நேரமும் அறிவித்த நேரத்தை விட கூடுதலாக குறைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் வயலில் ஈரப்பதம் முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. மின் பற்றாக்குறையால் போர் வெல்கள் சரிவர இயங்குவதில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு, வாழை, மணிலா, பூச்செடிகள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கருகும் அபாயத்தில் உள்ளன. எந்த நேரத்தில் மும் முனை மின்சாரம் வழங் கப்படுகிறது என தெரியாமல், விவசாயிகள் இரவு, பகல் என பாராமல் வயல் களில் காத்துக்கிடக்கின்றனர். மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிராமங்களில் உள்ள குடிநீர் போர் வெல்களும் இயக்கமுடியாமல் பொது மக்களும் குடி நீருக்கு அவதியடைந்து வருகின்றனர்.

டிரான்ஸ்பார்மர்கள் பழுதை உடனே சரி செய்வதில்லை : 

                     கடலூர் அடுத்த சான்றோர்பாளையத்தில்  ஆறுமாதங்களுக்கு முன்பு புதிதாக அமைப்பதாக இருந்த டிரான்ஸ்பார்மர் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை அமைக்கப்படவில்லை. இது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைநதால் சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தாலும் அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதில்லை.  ஒரு மாதம், இரண்டு மாதங்கள் கழித்தே சரி செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா 13ல் துவக்கம்


சிதம்பரம் : 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
 
                         கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 1981ம் ஆண்டு, முதல் முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஆண்டு 29வது நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்கி, 17ம் தேதி தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கின்றன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தினசரி மாலை 5.30 மணிக்கு துவங்கி, இரவு 11.15 மணி வரை நடக்கிறது. துவக்க நாள் நிகழ்ச்சியன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், அன்று விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி. இறை உணர் வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால் மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெறுகிறது. பாரதத்தின் பாரம்பரியம் மிக்க பரதம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை நடன கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர். மேலும்,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின் றனர். ஆண்டுதோறும் மகா சிவராத் திரி அன்று துவங்கி, ஐந்து நாட்கள் விமரிசையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்திய அரசு, தமிழக அரசின் சுற்றுலாத் துறை, டில்லி சங்கீத நாடக அகடமி ஆகியவை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஊக்குவித்து வருகின்றன.

Read more »

பள்ளி மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

கடலூர் : 

               கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி சாரணர் மாணவ, மாணவிகள் ஒன்பது பேருக்கு கவர் னர் சுர்ஜித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கினார்.
 
                கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளியின் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள் பாரதி வாலண் டினா, ரமா பிரியதர்ஷினி, அபிநயா, சாந்தினி, லலிதகுமாரி, நிர்மலா, சிவரஞ்சனி, மாணவர்கள் வரதராஜன், முகமது முனவர் ஆகியோர் ராஜ்ய புரஸ் கார் விருதிற்கு தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் சுர்சித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருதுகள் வழங்கினார். விருது பெற்ற மாணவ, மாணவிகள், சாரண ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் கலாவதி, சுகுணாவை, தலைமை ஆசிரியர் ராஜயோககுமார், தாளாளர் தாமோதரன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

விழிப்புணர்வு பிரசாரம்

திட்டக்குடி :

              திட்டக்குடி பஸ் நிலையத்தில் நடந்த தில்லு துர எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தை சேர்மன் துவக்கி வைத்தார்.
 
               திட்டக்குடி தாலுகாவில் "தில்லுதுர' வாகனம் விழிப்புணர்வு பிசாரம் மேற்கொண்டது. பஸ் நிலையத்தில் துவங்கிய பிரசாரத்திற்கு, அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தார். மருத்துவமனை எய்ட்ஸ் பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத்து பேசினார். இதில் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள், அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள், இலவச ஆலோசனைகள் குறித்து கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி மூலம் பிரசாரம் செய்தனர். ஆற்றுப்படுத்துனர் வெங்கடாசலபதி, ஆய்வக நுட்புனர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

'அனாமதேய' கடிதத்தால் பறக்கும் படை, 'அவசரம்!'

கடலூர் : 

              தேர்வின் போது முறைகேடுகள் நடப்பதாக வந்த "அனாமதேய' கடிதத்தால், பறக்கும் படையினர் 30 பேர், ஒரே பள்ளியில் குவிந்து அதிரடி சோதனை நடத்தினர்.
 
              கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளி, பொதுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப் பள்ளியில் தேர்வு நேரங்களில் முறைகேடு நடப்பதாக கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு, "அனாமதேய' கடிதம் வந்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலக உத்தரவின்படி, இணை இயக்குனர் தலைமையில், நான்கு பறக்கும் படை உறுப்பினர்கள், மண்டல துணை இயக்குனர், சி.இ.ஓ., விருத்தாசலம் டி.இ.ஓ., ஆகியோர் தலைமையில் தலா நான்கு உறுப்பினர்கள்,  நிலையான பறக்கும் படை  உறுப்பினர்கள் நான்கு பேர், ரெகுலர் பறக்கும் படையினர் மட்டுமின்றி அண்ணா பல்கலைக் கழக பார்வையாளர் குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் என 30 பேர், நேற்று இயற்பியல் பாடத் தேர்வின் போது அடுத்தடுத்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், ரெகுலர் மாணவ, மாணவியர் ஒருவரும் பிடிபடவில்லை. தனித் தேர்வர்கள் மட்டுமே 10 பேர் பிடிபட்டனர். இதனால் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். இதையறிந்த பெற்றோர், தேர்வின் போது ஒவ்வொரு குழுவாக சென்று சோதனை செய்ததால், அமைதியான முறையில்  தேர்வு எழுத முடியாமல் தங்கள் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக தேர்வுத் துறை அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர்.  "அனாமதேய' கடிதத்தால் சோதனை என்ற பெயரில் மாணவ, மாணவியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய தேர்வுத் துறைக்கு கண்டனம் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.

Read more »

பயிற்சி ஆசிரியர்களுக்கு ஊதியம் கலெக்டர் வழங்கினார்

கடலூர் : 

          காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கினார்.
 
            காது கேளாத குழந்தைகளுக்கு கண்டறியும் பயிற்சி மையம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக  2 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு ஆண் டாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களுக்கான ஊதியத் தொகை 2.68 லட்சம் ரூபாயை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கினார்.  மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனிவாசன் உடனிருந்தார்.

Read more »

மகளிர் சுயஉதவிக் குழுவினர் அப்பளம் தயாரிப்பு துவக்கம்

திட்டக்குடி : 

                  திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் ரோஜா மகளிர் சுயஉதவிக்குழுவினர் அப்பளம் தயாரிப்பின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
 
                சுய உதவிக்குழு ஊக்குநர் பச்சையம்மாள் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் செல்வம், முத்துவேல், கருப்பையா, செல்வராஜ் முன் னிலை வகித்தனர். பாலமுருகன் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் மன்னன் அப்பளம் தயாரிப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் ராணி, ஜெயக்கொடி, பாக்கியம், உமா, ஜெயகன்னி, கொளஞ்சி, பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பதிப்பாளர் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

            புத்தகப் பதிப்பாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
 
               அரசு தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்துள்ளது. இதில் உறுப்பினராக புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தகத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், டி.டி.பி., ஆப்ரேட்டர்கள், லேமினேஷன் செய்பவர்கள், நோட்டு, புத்தகம் கட்டுபவர்கள் உறுப்பினர்களாக சேரலாம். பிற நல வாரியங்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டுமே இதில் உறுப்பினர்களாக சேரலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட நூலக அலுவலகத்தையும், 04142-220014 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Read more »

நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம்

நடுவீரப்பட்டு : 

            சி.என்.பாளையத்தில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
 
               பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்துறை சார்பில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந் தது. மணிலா பொருள்குழு தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆறுமுகம், விஜயசண்முகம்  கலந்து கொண்டு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.  இதில் வேணுகோபால், கனகசபை, ராமு, சுப்பரமணியன், குப்புசாமி உட்பட 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Read more »

உலக மகளிர் தின நாள் மாணவிகள் உறுதியேற்பு

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
 
               தமிழ்த்துறை பேராசிரியர்கள் புவனேஸ்வரி, ராணி, வேணி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி, மகளிர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்தும், பெண்கள் விவசாயம் உட்பட அனைத்து துறையிலும் கடினமாக உழைத்து உயர வேண்டும் என பேசினார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பெண்கல்வி, பெண் விடுதலை, பெண் உரிமை, பெண் சிசு கொலை தடுப்பு, வரதட்சணை தடுப்புகளில் உறுதியுடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Read more »

வாழைக்கொல்லை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம் : 

               சிதம்பரம் அருகே வாழைக்கொல்லை வானவில் இளைஞர் நற்பணி மன்றத்தில் நேருயுவகேந்திரா, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

                 மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர் விஸ்வநாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் அருட்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர் தம்புசாமி, சரவணன், மன்ற நிர்வாகிகள் வீரக்குமார், மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் நடந்த மரக்கன்று நடும் விழா, தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை டி.எஸ் .பி., ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், சேவைத் தலைவர் சந்திரமோகன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப் இன்ஸ் பெக்டர் குமார் பங்கேற்றனர்.

Read more »

வரி வசூலை ரத்து செய்ய வேண்டும் மினிடோர் வேன் நலச்சங்கம் கோரிக்கை

திட்டக்குடி : 

               பெண்ணாடடத்தில் மினிடோர் வேன்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
 
               பெண்ணாடம் மினிடோர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பேரவை கூட்டம், நகர துணை செயலாளர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, வட்ட ஒருங் கிணைப்பாளர் பன் னீர் செல்வம், சி.ஐ.டி.யூ., பழமலை, திட்டக்குடி பணிமனை செயலாளர் சுப்ரமணியன் விளக்கி பேசினர். கூட்டத்தில் பெண்ணாடம் நகரில் மினிடோர் வேன்கள் நிறுத்திட பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும். மினிடோர் வேன்களுக்கு வரிவசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். பெண்ணாடத்தில் சங்க பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வில் கவுரவ தலைவராக நீலமேகம், தலைவராக சுரேஷ், செயலாளர் சுப்ரமணியன், பொரு ளாளர் மணிகண்டசெல் வம், துணைத்தலைவர்கள் முருகன், பாண்டு, வெங்கடேசன், துணை செயலாளர்கள் முத்துக்குமார், ஷாஜகான், அன்பரசு உட்பட செயற்குழு உறுப்பினர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ராஜூ நன்றி கூறினார்.

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

கடலூர் : 

               கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது. தோட்டப்பட்டு ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமணி வரவேற்றார். திட்ட அலுவலர் ரேணுகா திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி சண்முகம்  வாழ்த்தி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Read more »

ஆறுமுக நாவலர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

சிதம்பரம் : 

                  ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் 62ம் ஆண்டு இலக்கிய மன்ற விழா நடந்தது.
 
              பள்ளி செயலாளர் டாக்டர் அருள்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு லட்சம் ரூபாயில் நவீன கழிவறை கட்டடத்தை  சி.இ.ஓ.,  அமுதவல்லி திறந்து வைத்தார். மாணவர்களுக்கு சுகாதார வளாகத்தை கட்டிக் கொடுத்த சிதம்பரம் ரோட்டரி அறக்கட்டளை மற்றும் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் கணபதி புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.  தமிழாசிரியை தமிழ்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உமா மகேஸ்வரி நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினார்.  செல்வம் நன்றி கூறினார்.

Read more »

மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம்

சிறுபாக்கம் : 

           வேப்பூர் அருகே கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது.
 
            வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா, வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது. தாளாளர் கணேசன் தலைமை தாங் கினர். திட்டக்குடி தாசில் தார் கண்ணன், துணை தாசில்தார் பாலு, கிருஷ் ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பசுபதி வரவேற் றார். இதில் திட்டக்குடி டி.எஸ்.பி., இளங்கோ சிறப்புரையாற்றினார். கலந்துரையாடல் முகாம் வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தேசப்பற்று, மதிப்புக்கல்வி, சமூகப்பணி, மனிதநேயம், சாரணியம், ஆசிரியர் பண்புகள், தீ தடுப்பு முறைகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற உள்ளது. இதில் வெக்காளியம்மன் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், விரிவுரையாளர் அமுதா, ஸ்டேட் வங்கி அதிகாரி தேவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரபாகர் நன்றி கூறினார்.

Read more »

ஒரு மாதமாக மினி பஸ் இயங்காததால் டி.புதுப்பாளையம் மாணவர்கள் அவதி

கடலூர் :

                   டி.புதுப்பாளையத்திற்கு செல்லும் மினி பஸ்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளதால் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பஸ்சிற்காக மூன்று கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.
 
                         கடலூர்-டி.புதுப்பாளையத்திற்கு நான்கு மினி பஸ்கள் இயங்கி வந்தன. இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக் கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னை காரணமாக இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரண்டு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்த பஸ்களும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், பொதுமக்கள் கடலூருக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் தினமும் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி மாணவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து, டி.புதுப்பாளையத்திற்கு பஸ் இயக்க வேண்டும். ஏற்கனவே கடலூரிலிருந்து டி.புதுப்பாளையம் வழியாக கீரப்பாளையம் வரை சென்று வந்த அரசு பஸ்சை மீண் டும் இயக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.

Read more »

சமையலர் இல்லாததால் அங்கன்வாடி முடங்கியது

நெல்லிக்குப்பம் : 

               பல்வராயநத்தம் ஊராட்சியில் பால்வாடி சமையலர் இல்லாததால் அங்கன் வாடி மையம் செயல்படாமல் உள்ளது.
 
              அண்ணாகிராமம் ஒன்றியம் பல்வராயநத்தம் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு, தொட்டி இரண்டு இடங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டது. இருளர் குடியிருப்பில் சமையலர் ஓய்வு பெற்ற பிறகு புதியதாக யாரும் நியமிக்கப்படவில்லை. அங்கு கட்டடம் வசதி இல்லாததால் மரத்தடியில் செயல்பட்டது. அங்கன்வாடி ஆசிரியரும் தொட்டி அங்கன்வாடிக்கு சென்று விடுகிறார். இதனால் இருளர் குடியிருப்பு அங்கன்வாடிக்கு குழந்தைகள் வருவதில்லை. தொட்டி மையத் திலேயே சமையல் செய்து எடுத்து வந்து இருளர் குடியிருப்பு பகுதி குழந்தைகளுக்கு தருகின்றனர். உணவு வரும் சமயத்தில் மட்டுமே குழந்தைகள் வருகிறார்கள். கட்டிட வசதி செய்து சமையலர் நியமித்தால் மட்டுமே இருளர் குடியிருப்பு அங் கன்வாடி செயல்பட வாய்ப்புள்ளது.

Read more »

நூறு நாள் திட்டத்தில் பணியாற்றிய விவசாயி மாரடைப்பால் பரிதாப சாவு

சிறுபாக்கம் :

          நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி திடீரென மாரடைப்பால் இறந்தார்.
 
              வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட் சியில் கலையபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(50). இவர் நேற்று அதே கிராமத்தில் நடந்த தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 10 மணி அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு செல்லமுத்து மயங்கி விழுந்து இறந்தார். தகவலறிந்த நல்லூர் ஒன்றிய ஆணையர் ரவிசங்கர்நாத், வேளாண்மைக்குழு தலைவர் பாவாடைகோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவிநாயகம் உள்ளிட்டோர் விரைந்து சென்று, செல்லமுத்து உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Read more »

பொதுமக்களை அச்சுறுத்திய ஜமக்காள விரியன் சிக்கியது

சிதம்பரம் : 

                மக்களை விரட்டிய ஜமக்காள விரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். சிதம்பரம் அடுத்த மானியம் ஆடூர் கிராமத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஐந்தரை அடி நீளமுள்ள ஜமக்காள விரியன் பாம்பு விரட்டியது. பீதியமடைந்த தொழிலாளர்கள் ஓடினர். இதுகுறித்து கிராம தலைவர் சிவானந்தம் கொடுத்த தகவலின் பேரில், சிதம்பரம் வனத் துறை ரேஞ்சர் விஜயன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று பொது மக்களை அச்சுறுத்திய பாம்பை உயிருடன் பிடித்து, கார் மாங்குடியில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் விட்டனர். 

Read more »

வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

கடலூர் : 

               வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                கடலூர் வெளிச்செம்மண்டலம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாபு(33). புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த 6ம் தேதி பாபு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூருக்குச் சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பாத்திரங்கள் திருடு போயிருந்தது. தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

லாரி மீது மொபட் மோதி விபத்து சிறுவன் பலி: மூவர் படுகாயம்


விருத்தாசலம் : 

                விருத்தாசலத்தில் லாரி மீது மொபட் மோதியதில் சிறுவன் தலை நசுங்கி இறந்தார்.  மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
 
                விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர்கள் செம்புலிங்கம் மகன் வீரமுத்து (35), செல்வராசு மகன் அய்யப்பன் (19), ராமசந்திரன் மகன் தமிழரசன்(12), வேல்முருகன் மகன் விஜய்(12). இதில் தமிழரசன், விஜய் இருவரும் அதே கிராமத்தில் எட்டம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று மாலை உறவினரின் குழந்தையை பார்க்க மொபட்டில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருந்தனர். விருத்தாசலம் பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மொபட் மோதியது. அதில், மொபட்டின் முன்னாள் உட்கார்ந்து வந்த மாணவன் விஜய் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மூவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் போராட்டம்

நெய்வேலி : 

                  நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் 6வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தாதைக் கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
                 நெய்வேலி டவுன்ஷிப் செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்கக்கோரி  கடந்த மாதம் 4ம் தேதி ஆசிரியர்கள் பணி புறக்கணித்தனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதனால் பள்ளி நிர்வாகம் இரண்டு நாள் விடுமுறை அறிவித்தது.  பிப். 10ம் தேதி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சவார்த்தை நடத்தப்பட்டது.  தமிழக அரசு  அறிவிக்கும் அகவிலைப்படியை அதே கால கட்டத்தில் வழங்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை நிர்வாகத்தின் மேல்மட்டத்தில் பரிசீலித்து 10 நாளில் அறிவிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் 15 நாள் கடந்த பின்னரும் அறிவிக்காததால், ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி முதல்வரை அணுகியபோது மார்ச் 1ம் தேதி மாலை அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பினை வெளியிட குழு வருவதாக கூறினார். அதன் பிறகும் குழுவும் வரவில்லை. பள்ளி முதல்வரும் விடுப்பில் சென்றுவிட்டார். பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி தொ.மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன், பா.தொ.ச., செயலாளர் திலகர், சி.ஐ.டி.யூ., தலைவர் குப்புசாமி, பொது செயலாளர் வேல்முருகன், எஸ்.சி., எஸ்.டி., சங்க பொருளாளர் பாலாஜி, கிறிஸ்தவ சமூக நீதி பேரவை வல்லபதாஸ் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஆசிரியர் சங்கத்தினர் நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more »

ரூ.3.6 லட்சம் செலவிலான சாலை இரண்டு நாளில் பஞ்சரானது

பண்ருட்டி : 

               பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரில் 3.6 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை இரண்டு நாளில் பஞ்சரானது. தரமில்லாத தார் சாலைகளால் அரசு பணம் வீணாகி வருகிறது.
 
                   பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் 540 மீட்டர் அளவில் தார் சாலை அமைக்கப்படாமல் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் 12வது மானிய குழு  திட்டத்தின்கீழ் 3.60 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. சாலையில்  குண்டு குழியுமாக உள்ள பள்ளங் கள் சீரமைக்கவில்லை. முக்கால் ஜல்லிகள் போடாமல், பெயரளவிற்கு சிப்ஸ் தார் கலவை கொண்டு போட்டதால் சாலை பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளது. சாலை பணி முடிந்த 2வது நாளில் வாகனங்கள் சென்றதில் பழைய ஜல்லி தெரியுமளவிற்கு சாலைகள் சேதமானது. தரமற்ற  தார்சாலையால் ஒருமாதத்தில் தார் சாலை கந்தல் சாலையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.   சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளர்கள்  ஆய்வு செய்யாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Read more »

மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி போலீஸ் தாமதத்தால் 'டிராபிக் ஜாம்'


கடலூர் : 

              கடலூர் மஞ்சக்குப்பத்தில் மொபட்டில் வந்தவர்  லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
 
              விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கடந்த இரு ஆண்டாக  மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை ஆல்பேட்டையில் இருந்து மொபட்டில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.  அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் மகாலிங்கம் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் தாமதம்: இச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணிக்கு நடந்தது. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். மாலை வேளை போக்குவரத்து பிசியாக  இருந்ததால் "டிராபிக் ஜாம்' ஏற்பட் டது. வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி புதுச்சேரியில் இருந்து வந்த பஸ்களை உப்பலவாடித்தெரு, சுதர்சன நாயுடு தெரு வழியாக திருப்பிவிட்டனர். தவலறிந்த 108 வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஸ்தலத்திலேயே இறந்து விட்டதால் திரும்பியது. அரைமணி நேரத்திற்குப் பிறகு (4.55) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். கடலூரில் 50 மீட்டருக்கு ஒரு "டிராபிக் பாயின்ட்' போட்டு 2 போலீசார் பணி செய்து வருகின்றனர். போலீஸ் பாயின்டு, புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் என கூப்பிடும் தூரத்தில் இருந்தும் போலீசார் அரை மணிநேரம் தாமதமாக வந்தது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Read more »

தேர்வில் 'பிட்': 31 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் "பிட்' அடித்த 31 பேர் பிடிபட்டனர்.
 
                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று இயற்பியல், பொருளியல், உளவியல் தேர்வுகள் நடந்தது.  கடலூர் மாவட்டத்தில் பறக் கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் காட்டுமன் னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் 3 மாணவர்கள், 7 மாணவிகள், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 4 பேரும் பிடிபட்டனர். கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும், 4 மாணவிகளும், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும் "பிட்' அடித்தபோது பிடிபட்டனர். மாவட்டத்தில் இதுவரை "பிட்' அடித்ததாக  20 மாணவிகளும், 8 மாணவர்களும் பிடிபட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விழுப்புரம்:. 

                சி.இ.ஓ., குப்புசாமி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில், திருக்கோவிலூர் ஞானானந்தா மெட்ரிக் பள்ளியில் தனித் தேர்வர்கள் (பொருளியல்) இருவர், விரியூர் அடைக்கல அன்னை மேல் நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் (இயற்பியல்), திண்டிவனம் வால்டர்ஸ் கேடர் பள்ளியில் 8 தனித் தேர்வர்கள் (இயற்பியல்- 2, பொருளியியல்-6) என மொத்தம் 11 பேர் "பிட்' அடித்தபோது சிக்கினர். "பிட்' அடித்து சிக்கிய 31 பேரும் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களின் விடைத் தாள்கள் மேல் நடவடிக்கைக்கு சென்னை அரசு தேர்வுகள் இயக்கத் திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.   

Read more »

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கடலூர் : 

               கடலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் "விசிட்' செய்தார்.
 
                  வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்திற்கு வரும் மனுக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப் பாக பட்டா மாற்றம், இலவச மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ் போன்ற மனுக்கள் வருவது வாரம்தோறும் கூடுதலாகி வருகின்றன. அதையொட்டி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை சோதனை செய்ய கலெக்டர் சீத்தாராமன் நேற்று திடீரென கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அவருடன் டி.ஆர். ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர். முதலில்  தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டார். குப்பை காடாக இருப்பதாக தாசில்தாரிடம் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலகம், சர்வே பிரிவு ஆகியவற்றை சோதனை செய்தனர்.

Read more »

கண்டக்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை

பரங்கிப்பேட்டை :

                        புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கண்டக் டரை தாக்கிய ஒன்னரை சவரன் செயின், 7 ஆயிரம் ரூபாயை பிடுங்கி சென்ற நான்கு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
                          கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தனியார் பஸ் பயணிகளுடன் சென்றது. பஸ்சில் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த தனசேகரன், பாக்கியராஜ், பாண்டியன், சிலம்பு ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் வந்தனர். அவர்களிடம், கண்டக்டர் பூபாலன் டிக்கெட் எடுக்க கூறினார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கீழ்பூவாணிக்கும் வந்ததும் பஸ்சில் இருந்து  இறங்கிக் கொண்டனர். மீண்டும் பஸ் சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும்போது கீழ்பூவாணிக்குப்பம் அருகே தனசேகரன் உள்ளின் நான்கு பேர் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் பூபாலனை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை சவரன் செயின் மற்றும் 7 ஆயிரம் பணத்தை பிடுங்கி சென்றனர். இதுகுறித்து கண்டக்டர் பூபாலன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, தனசேகரன் உள்ளிட்ட நான்கு பேரை தேடிவருகிறார்.

Read more »

நள்ளிரவில் தீ விபத்து புத்தக கடை சாம்பல்

கடலூர் : 

                    கடலூரில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஏற் பட்ட திடீர் தீ விபத்தில் புத்தக கடை உள்ளிட்ட 2 கடைகள் எரிந்து சாம்பலாயின. கடலூர் அண்ணா (பழைய) பாலத்தில் கடைகள் உள்ளன.  நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு அப்துல் காதர் என்பவரின் பழயை புத்தக கடை திடீரென தீ பிடித்து எரிந்து அருகில் உள்ள வின்சென்ட் என்பவரின் கடிகார கடைக்கு பரவியது. இந்த தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior