உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

குழந்தை எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்: நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
 
நெய்வேலி:

         இந்தியாவில் குழந்தை எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.  

             குழந்தைகள் நல்ல இலக்கியத்தைப் படிக்காததால் வாசிக்கும் பழக்கத்தை இழந்துள்ளனர். குழந்தையை குழந்தையாகப் பார்க்கும் பக்குவமும், அவர்களுக்கான படைப்புகளும் இல்லாதத் துர்பாக்கியம் இந்தியாவில் தான் உள்ளது. மேலை நாடுகளில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தினமணி நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை விருந்தினராகக் கலந்துக்கொண்டு மேலும் பேசியது: 

              நெய்வேலியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல எழுத்தாளர்களுக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஒரு மெக்காவாகவும், ஜெருசலமாகவும் திகழ்கிறது. நெய்வேலியில் இரண்டு சுரங்கங்கள் உள்ளன. ஒன்று நிலக்கரி சுரங்கம் மற்றொன்று அறிவு சுரங்கத்தைத் தோண்டி எடுக்கின்ற புத்தகக் கண்காட்சி ஆகும்.  அரசு நிறுவனங்கள் மக்கள் வரிப் பணத்தை விரயம் செய்வதாகப் பலர் கருதுகின்றனர். 

              இந்நிறுவனங்கள் வேலை வாய்ப்பு, சம்பளம் வழங்குவதுடன் லாபத்தை எடுத்துக்கொண்டு செல்வதுடன் முடிந்து விடாமல், குடியிருப்புகளை ஏற்படுத்தி அதில் பல மாநிலத்தவர்களை குடியமர்த்தி இந்தியாவில் சகோதரத்தையும், ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. நானும் இதுபோன்று ஒரு காலனி குடியிருப்பில் வசித்துவந்தவன் தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சமுதாய நல்லிணக்கத்துடன் புத்தகக் கண்காட்சியை நடத்தி நாளைய குழந்தைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இங்கு விருது பெற்ற குழந்தை எழுத்தாளர் வேலு சரவணன் சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என நான் கூறியது என் அடிமனதில் இருந்து வந்தது. 

              குழந்தைகள் நல்ல இலக்கியத்தைப் படிக்காததால் வாசிக்கும் பழக்கத்தை இழந்துள்ளனர். இந்தியாவில் பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் தான் உள்ளனர் என்பதற்கு பத்திரிகைகளும் ஒரு காரணம் என்பதை கனத்த மனதுடன் கூறுகிறேன். குழந்தை எழுத்தாளர்களுக்கு மரியாதை, உரிய சன்மானம் வழங்கப்படாததுதான் இந்நிலைக்கு காரணம். இது மாற்றப்பட வேண்டும். செய்தி வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டதாக டிஜிபி பாலசுப்பிரமணியன் கூறினார். 

              குழந்தைகளைப் படிக்க, வாசிக்கப் பெற்றோர்கள் வழிகாட்டாத நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் புத்தகம் வாசிப்பு இருக்காது. எனவே குழந்தை இதழ்கள், படைப்புகள் வரவேண்டும். மாவட்டம் மற்றும் சிற்றூர்களில் இருந்து குழந்தை படைப்பாளர்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தினமணியின் சிறுவர் மணியில் குழந்தை எழுத்தாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை ஆசிரியர் என்ற முறையில் கூறிக்கொள்கிறேன். சிறுவர் மணிக்கு உங்கள் குழந்தைகளை எழுதி அனுப்பக் கூறுங்கள் அதை நாங்கள் செவ்வனே வெளியிடுவோம். 

             நான் முன்பு கூறியது போல நான் தினமணி ஆசிரியராக இருக்கும் வரையில், புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்குமானால், அதில் நான் தவறாமல் கலந்துகொள்வேன். இப்புத்தகக் கண்காட்சி தொடர்ந்து பல தலைமுறைகளை கடந்து, எழுத்துலகுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும் என தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் கூறினார்.



Read more »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 வயதுக்குமேல் பேச்சு வந்த சிறுவனின் தேவார இன்னிசை கச்சேரி


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரங்கேற்ற நிகழ்ச்சியில் தேவார இன்னிசை கச்சேரியை நிகழ்த்துகிறார் சென்னை மயிலாப்மயிலாப்பூரைச் சேர்ந்த மகேஷ்
சிதம்பரம்:

             ஸ்ரீநடராஜப்பெருமாள் அருளால் 5 வயதுக்குமேல் பேச்சு வந்த 11 வயது சிறுவனின் தேவார இன்னிசை கச்சேரி சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

          சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ், தேவிஸ்ரீ தம்பதியினருக்கு 2வது குழந்தையாகப் பிறந்தவர் மகேஷ். இவருக்கு பிறந்ததிலிருந்து 5 வயது வரை பேச்சு வராமல் இருந்தது. பேச்சு வருவதற்காக அவரது பெற்றோர் மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும், சிதம்பரம் நடராஜரையும் வேண்டியுள்ளனர்.  இந்நிலையில் அவருக்கு 5 வயதுக்கு மேல் பேச்சு வந்து முழுமையாகப் பேசத் தொடங்கினார். 

           இதனால் அவரது பெற்றோர் அச்சிறுவனுக்கு 8 வயதிலிருந்து தேவார இன்னிசையை கற்றுக் கொடுத்தனர். தற்போது முதல் அரங்கேற்ற நிகழ்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தேவார இன்னிசை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து 2 மணி நேரம் தேவார இன்னிசை பாடி சிறுவன் மகேஷ் அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு உறுதுணையாகச் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணனும், சதீஷ்குமாரும் மிருதங்கம் வாசித்தனர். 




Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை: சிவனடியார்கள் பங்கேற்பு


மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள கோயிலில் ஸ்ரீஆத்மநாதருக்கு அபிஷேகம் ராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
சிதம்பரம்:

            மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்புமிக்க இடமான சிதம்பரம் வேங்கான் தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.  

             திரளான சிவனடியார்கள் குருபூஜையில் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர். முன்னதாக சிவபூஜை வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந்ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 

            விழாவில் திரளானப் பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் வடக்குவீதி நடராஜ க்ருபா மண்டபத்தில் மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை டிரஸ்டி வை.பசவராஜ், சு.சங்கரநடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.  




 

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம்

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011-12 கல்வியாண்டு முதல் ஆன்லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 361 டிகிரி மைன்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்த இரண்டாண்டு எம்.பி.ஏ. படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்துகிறது. 

 இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன் சென்னையில்  கூறியது:

             வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, உயர் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை 12 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இதைக் கருத்தில் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் கூடுதலாக 18 தொலைதூரக் கல்வி மையங்களை விரைவில் தொடங்க உள்ளதோடு, 9 மையங்களை வெளிநாடுகளில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். 

                இதன் தொடர்ச்சியாக இப்போது 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. படிப்பை ஆன்லைனில் வழங்க உள்ளோம். இந்தத் திட்டத்தின்கீழ் பாடங்கள் அனைத்தும் ஆன்லைனில் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். தேர்வை அருகில் உள்ள மையத்துக்குச் சென்று எழுத வேண்டும். 

இந்தப் படிப்புக்கான முதலாண்டு கட்டணம் ரூ.17,000, 
இரண்டாம் ஆண்டுக் கட்டணம் ரூ.15,000 

ன்றார் ராமநாதன்.




Read more »

நெய்வேலியில் கேந்திர வித்யாலய பள்ளி விரைவில் தொடக்கம்

நெய்வேலி:

             நெய்வேலியில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயலபடக் கூடிய கேந்திர வித்யாலய பள்ளி இந்த கல்வியாண்டு முதல் செயல்படவுள்ளது.

              நெய்வேலியில் பல்வேறு மெட்ரிக் பள்ளிகளும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளும், மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் 40 ஆயிரம், மாணவ,மாணவியர் பயிலுகின்றனர். இந்நிலையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1200 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் பணியிட மாற்றம் செய்யப்படுவதால், இவர்களின் பிள்ளைகளின் படிப்பும் இடத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. 

          நெய்வேலியில் ஜவகர் கல்விக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கு என ஒதுக்கீடு எதுவும் கிடையாது. எனவே அவர்களது பிள்ளைகளை சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கவைக்க அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நெய்வேலியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரிகள், நெய்வேலியில் கேந்திர வித்யாலய பள்ளியை அமைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

                என்.எல்.சி. நிர்வாகமும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கோரிக்கைக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நெய்வேலி கேந்திர வித்யாலய பள்ளியை அமைக்க ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, என்எல்சி நிர்வாகம் முழுவீச்சில் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. 

                இதற்காக என்.எல்.சி. தலைவர் மேற்பார்வையில் இயங்கக் கூடிய ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் இரு என்.எல்.சி. அதிகாரிகள், இரு கல்வியாளர்கள், இரு பெற்றோர்கள் அடங்குவர். இக்குழு பள்ளி நடைமுறைகளை கண்காணித்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கும். இப்பள்ளிகள் நெய்வேலி வட்டம் 2 மற்றும் 3-ல் இயங்கி வந்த என்.எல்.சி. தொடக்கப் பள்ளி கட்டடங்களிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. வகுப்பறைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெறுகிறது. 

              கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக நெய்வேலியில்  அமையவுள்ள கேந்திர வித்யாலய பள்ளியை அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இப்பள்ளிகள் இம்மாத 3-வது வாரத்தில் இருந்து செயல்படும் எனத் தெரியவருகிறது.



Read more »

சிதம்பரம் நகரில் நூறாண்டை கடந்த நாவல் மரம்

சிதம்பரம்:

           தம்பரம் நகர காவல் நிலையம் முகப்பில் இருந்த நூறாண்டு கால நாவல் மரம் ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்த பலத்த காற்று, மழையில் சாய்ந்தது.

             ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மேலரதவீதியில் நகர காவல் நிலைய முகப்பில் வலது புறம் இருந்த நூறு ஆண்டுகளை கடந்த மிகப்பெரிய நாவல் மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் மேலரதவீதியில் சிறது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் சாய்ந்ததில் காவல்நிலையத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சிக்கி சேதமடைந்தது.

              காவல் நிலையத்தில் நாவல் மரத்துக்கு முன்புதான் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவது வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் மரம் சாய்ந்து விழுந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் புகார் ஒன்றுக்கு சென்று விட்டு சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் வேன் மீது மரம் விழாமல் தப்பியது. நகர காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக 1904-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே வேளையில் நூறு ஆண்டுகளை கடந்த மரம் காற்றில் தானாகவே விழுந்தது குறித்து அனைவரும் ஆச்சரியத்துடன் பேசி சென்றனர்.






Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு

           நடப்பு கல்வியாண்டிற்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் பட்டியலை, அண்ணாமலை பல்கலை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

பிரிவு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,

ஓ.சி., 35,    23

பி.சி., 30,   23

பி.சி.எம்., 4 ,   0

எம்.பி.சி., 22,   15

எஸ்.சி., - எஸ்.டி., 21,  14

             மொத்த விண்ணப்பதாரர்களில், அனைத்து பிரிவுகளையும் சேர்த்து, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 112 பேரும், 

பி.டி.எஸ்., படிப்புக்கு 75 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

பல்கலையின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லூரியில் கூடுதல் இடங்கள்

காட்டுமன்னார்கோவில் : 

               காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதலாக 60 இடங்கள் சேர்க்க ஏ.ஐ. சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. 

             கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தில் சந்திரவதனம் அறக்கட்டளை சார்பில் எம்.ஆர்.கே., இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சிவில், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. த

            ற்போது இக்கல்லூரியில் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு வேண்டும் என கல்லூரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று ஏ.ஐ.சி.டி.இ., கூடுதலாக 60 இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அந்த இடங்களுக்கான சேர்க்கை தற்போது நடக்கிறது. இத்தகவலை கல்லூரி சேர்மன் கதிரவன் தெரிவித்துள்ளார்.





Read more »

கடலூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தனிப்பிரிவு

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் நிலம் அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

           நிலம், வீடுகளை ஆக்கிரமித்தல், அபகரித்தல், நிலத்தை விற்பனை செய்வதில் மிரட்டுதல் அல்லது மோசடி செய்தல் ஆகியவை குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்டத்தில்த னிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. நிலமோசடி தொடர்பாக யாராவது ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.பி., பகலவனை 94443 84633 என்ற மொபைல் எண்ணிலும், 

தனிப் பிரிவு டி.எஸ்.பி., முத்துராஜை 94454 90307 என்ற எண்ணிலும், 

             அதுமட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக டி.ஐ.ஜி., வினித்தேவ் வான்கடேவிடம் 04146-223620 மற்றும் 94435 34000 மொபைல் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.









Read more »

விருத்தாசலத்தில் கரும்பு சாறிலிருந்து பானம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

         விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

                கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணை சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





Read more »

என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது ரூ.10 ஆயிரம் கோடி முறைகேடு புகார்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

நெய்வேலி:


            நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி. இவர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன.  

              இந்த நிலையில் 2009-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கன்வேயர் பெல்ட் அமைக்க சாதனங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.40 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.  இதுதொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. என்.எல்.சி. நிறுவனம் உள்பட 9 இடங்களில் 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனாலும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


              இந்த நிலையில் நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் என்.எல்.சி. சேர்மன் முறைகேடு செய்துள்ளார்.  ரூ.10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரும்படி கூறினார்கள்.  

               இதையடுத்து செல்வராஜ் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி யூசுப் அலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறினார்.






Read more »

பொறியியல் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,   

           ‘’ பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 61,200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் அவர்களது பதிவுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.
  

            வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம்.

              பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior