உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம்

கடலூர் :

                 இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மீட்கப்பட்டு, பூமாலை வணிக வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளது.ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந் தது.  கலெக்டர் சீத்தராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்டடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். திட்ட அலுவலர் ராஜஸ்ரீ உடனிருந்தார்.

                          ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 51 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆவணங் கள், கோப்புகள் வைக்கப் பட்டிருந்தன. ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கம் மற்றும் ஒன்றிய சேர்மன் அலுவலகமும் அங்கு இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கடலூர் சாமி, சிப்காட் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் இருந்த 10 கம்ப்யூட்டர்கள், 20 பீரோக்கள், 30 மேஜைகள், 50 சேர்கள் மற்றும் ஆவணங்களை மீட்டு அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் வைத்தனர்.ஊராட்சி ஒன்றிய கட்டத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டடம் கட்ட 1.40 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் விரைவில் கட்டுமான பணி துவங்கும் என பி.டி.ஓ., சீனிவாசன் தெரிவித்தார்.

Read more »

மணல் லாரிகளில் அடாவடியாக வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை

பண்ருட்டி : 

                  மணல் ஏற்றி வரும் லாரிகளிடம் அடாவடி வசூல் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் அரசு குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளில் கொரத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, திருத்துறையூர், உளுத்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் 20 ரூபாய் அடாவடி வசூல் செய்யப்பட்டு வருகிறது. 


                             இதனையடுத்து கலெக்டர் சீத்தாராமன் உத்திரவின்பேரில், பண் ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந் தது. தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் தேவநாதன், சுஜாதா, வசந்தி, தட்சணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரபீகுதீன், வி.ஏ.ஓ.,க்கள் பிரபாகரன், சரவணன், கவுரி, புருஷோத்தம்மன், ஜோதிமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


                       கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் சார்பில், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலை மற்றும் குடிநீர் குழாய்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மின்கம்பங்கள் சேதமாகிறது. இதனை ஊராட்சி செலவில் தான் சீரமைக்க வேண்டியுள்ளது. மணல் குவாரியால் ஐந்து கிராமங்கள் பாதிக்கிறது. அதனால் ஊராட்சி அதிகாரப்படி மணல் லாரிகளில் நுழைவு வரி 20 ரூபாய் வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
 


                        அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., பேசுகையில் அடாவடி வசூலில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.வேறு யாரேனும் அடாவடி வசூலில் ஈடுபட்டால் வருவாய் துறைக்கும்,போலீசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். சாலைகள் சேதமாவது மற்றும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிப்பது குறித்து கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Read more »

அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.30.98 லட்சம் ஒதுக்கீடு: கலெக்டர்

கடலூர் :

                     மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30.98 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

                           மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் புதிய குடிநீர் குழாய்கள், வீடுகளுக்கு மின் விளக்குகளை பழுது நீக்குதல், புதிய மின் கம் பம் அமைத்தல் மற்றும் புதிய கழிவறை அமைப் பது உள்ளிட்ட மேம் பாட்டு பணிகளுக்கு அரசு 30.98 லட் சம் ஒதுக்கீடு செய் துள்ளது.இதில் காட்டுமன்னார்கோவில் முகாமிற்கு 8.33 லட்சம், குறிஞ்சிப்பாடி 6.80, விருத்தாசலம் 9.20, அம் லவாணன்பேட்டை 6.65 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


                          மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 532 பேருக்கு அடை யாள அட்டையும், மூன்று முகாம்களில் 465 பேருக்கு இலவச கலர் டிவியும், கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு இலவச பஸ் பாஸ், 45 பேருக்கு ஓட்டுநர் உரிமம் ஊனமுற்றோர் 38 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. அவர்களில் 23 பேருக்கு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முகாம்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Read more »

தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் மருத்துவ முகாம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சிறுபாக்கம் :

                       தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மங்களூர் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. துணை சேர்மன் சின்னசாமி தலைமை தாங்கினார்.ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன், பொறியாளர் மணிவேல் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆறு தங்களாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் எதுவும் நடக்கவில்லை.அடிப் படை வசதிகள் நிறைவேற்றாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் பொன் முடி, ராஜன் தெரிவித்தனர். மேலும் பிற்பட்டோர் மானிய நல நிதியின் கீழ் திட்டப் பணிகளை டெண் டர் அறிவித்ததை  இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் தங் கள் பகுதியில் நடக்கும் வேலை விபரம் கவுன்சிலர்களுக்கு தெரியாத நிலை உள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த துணை சேர்மன், வரும் ஆண்டியில் புதிய நிதி வந்ததும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி உரிய நிதி ஒதுக்கப் படும்.
 
                              இனி டென்டர் வைக்கும்போது, அதற் கான தகவல் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.கவுன்சிலர் சேகர் பேசுகையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் கிராமங்களில் தொற்று நோய் பரவி மக்கள் பாதிக்கப்பட் டுள் ளதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மழையால் பாதித்த மானாவாரி பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண் டும் என கவுன்சிலர்கள் கூட்டாக  முறையிட்டனர்.


                        இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலருக்கு தெரியப்படுத்துவதாக ஒன்றிய ஆணையர் திருமுருகன் தெரிவித்தார்.

Read more »

வேப்பூர் அருகே விஷக் காய்ச்சல் இரு கிராமங்களில் 100 பேர் பாதிப்பு

சிறுபாக்கம் :

                வேப்பூர் அருகே இரு கிராமங்களில் பரவி வரும் விஷக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேப்பூர் அடுத்த கழுதூர், அரியநாச்சி கிராமங்களை சேர்ந்த தங்கராசு (48), நடேசன் (40), வேல்முருகன் (37), பரமசிவம் (22), சேகர் (31), தங்கவேல் (55), ராமதாஸ் (40), அர்ச்சுனன் (27) உட்பட சுமார் நூறு பேருக்கு நேற்று முன்தினம் திடீரென விஷக்காய்ச்சல் பரவியது. பாதிப்படைந்த அனைவரும் கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.விஷ காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மூக்கு மற்றும் காதுகள் கறுப்பு நிறமாக மாறியதால் கிராம மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

Read more »

டிசம்​பர் 22-ல் அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​: ஆளு​நர் பங்​கேற்பு

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 18:​ 
 
                        சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா இம்​மா​தம் 22-ம் தேதி செவ்​வாய்க்​கி​ழமை காலை 11 மணிக்கு பல்​க​லைக்​க​ழக பட்​ட​ம​ளிப்பு விழா ​(சாஸ்​தி​ரி​ஹால்)​ மண்​ட​பத்​தில் நடை​பெ​று​கி​றது என துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​துள்​ளார்.​
 
                        இ​து​ கு​றித்து அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டையே வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தது:​ 
 
                 இவ்​வி​ழா​வில் தமி​ழக ஆளு​ந​ரும்,​​ பல்​கலை.​ வேந்​த​ரு​மான சுர்​ஜித்​சிங் பர்​னாலா பங்​கேற்று 2008-09 ஆம் கல்​வி​யாண்​டில் பயின்ற மாணவ,​​ மாண​வி​யர்​க​ளுக்கு பட்​டங்​க​ளை​யும்,​​ அறக்​கட்​டளை பரி​சு​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ விழா​வில் நேர​டி​யாக 1333 மாண​வர்​க​ளுக்கு பட்​டங்​க​ளை​யும்,​​ பல்​வேறு துறை​க​ளில் அதிக மதிப்​பெண் பெற்ற மாணவ,​​ மாண​வி​யர்​கள் 22 பேருக்கு தங்​கப் பதக்​கங்​க​ளை​யும்,​​ 123 பேருக்கு அறக்​கட்​டளை ரொக்​கப் பரி​சு​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ மேலும் 264 மாண​வர்​க​ளுக்கு பிஹெச்.டி.,​​ எம்.ஃபில்.,​​ டி.எஸ்சி.​ ​(ங.டட்ண்ப்.,​​ டட்.ஈ.,​​ ஈ.ள்ஸ்ரீ)​ ஆராய்ச்சி பட்​டங்​க​ளை​யும் வழங்​கு​கி​றார்.​ நேர​டி​யாக பயி​லும் 4,781 மாணவ,​​ மாண​வி​யர்​க​ளுக்​கும்,​​ தொலை​தூ​ரக் கல்வி இயக்​க​கத்​தின் வாயி​லாக பயின்ற 97,413 மாண​வர்​கள் உள்​ளிட்ட மொத்​தம் 1,03,527 மாண​வர்​க​ளுக்கு தபால் மூலம் பட்​டம் அனுப்​பப்​ப​டு​கி​றது.​ புது​தில்லி பல்​க​லைக்​க​ழக மானி​யக்​குழு துணைத் தலை​வர் பேரா​சி​ரி​யர் வேத்​பி​ர​காஷ் பட்​ட​ம​ளிப்பு விழா சிறப்​பு​ரை​யாற்​று​கி​றார்.​ விழா​வில் இணை​வேந்​தர் எம்.ஏ.எம்.ராம​சாமி எம்பி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​ற​னர்.

Read more »

சிதம்​ப​ரத்​தில் புத்​த​கக் கண்​காட்சி தொடக்​கம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.18:​ 

                     சிதம்​ப​ரம் தெற்​கு​வீதி அறு​பத்து மூவர் மடத்​தில் ஜீவா புத்​த​கக் கண்​காட்சி தொடக்​க​ விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​இக்​கண்​காட்சி டிசம்பர் 27 வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை​பெ​று​கி​றது.​ பொது​அ​றிவு,​​ ஆன்​மி​கம்,​​ விவ​சா​யம்,​​ குழந்​தை​க​ளுக்​கான கதை​கள் உள்​ளிட்ட பல்​வேறு நூல்​கள் மற்​றும் குறுந்​த​க​டு​கள் இக்​கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்​ளன.​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக பதி​வா​ளர் எம்.ரத்​தின சபா​பதி புத்​த​கக் கண்​காட்​சியை தொடங்கி வைத்​தார்.​  

               காம ​ராஜ் பேர​வைச் செய​லா​ளர் ஜீவா விஸ்​வ​நா​தன் வர​வேற்​றார்.​ சி.முட்​லூர் பாரத ஸ்டேட் வங்கி மேலா​ளர் ஆர்.கல்​யா​ண​ரா​மன் முன்​னிலை வகித்​தார்.​ அரிமா பெரி.முரு​கப்​பன்,​​ காம​ரா​ஜர் பேர​வைத் தலை​வர் லட்​சு​ம​ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

Read more »

கட​லூ​ரில் தொடர்​மழை கார​ண​மாக ​ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து விழுந்​தது

​கட​லூர்,​​ டிச.​ 18:​ 

                   கட​லூ​ரில் தொடர்ந்து பெய்து வரும் கன​மழை கார​ண​மாக,​​ பழைமை வாய்ந்த கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் வியா​ழக்​கி​ழமை இரவு இடிந்து விழுந்​தது.​ ​

                        க​ட​லூர் நெல்​லிக்​குப்​பம் சாலை​யில் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் உள்​ளது.​ இது 200 ஆண்​டு​க​ளுக்கு முன் ஆங்​கி​லே​யர் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​டது.​ ​ கட​லூர் நக​ரில் பழை​மை​யும் பெரு​மை​யும் வாய்ந்த கட்​ட​டங்​க​ளில் இது​வும் ஒன்று.​ கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் இக்​கட்​ட​டத்​தில் கடந்த 40 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இயங்கி வந்​தது.​ தற்​போது இந்த அலு​வ​ல​கத்​தில் 60 ஊழி​யர்​கள் பணி​பு​ரி​கி​றார்​கள்.​ ​÷வி​யா​ழக்​கி​ழமை மாலை 6-30 மணி வரை ஊழி​யர்​கள் இங்கு பணி​பு​ரிந்​த​னர்.​ அதற்​கு​மேல் வீடு​க​ளுக்​குச் சென்​று​விட்​ட​னர்.​ இரவு 7 மணிக்கு அலு​வ​ல​கத்​தின் இர​வுக் காவ​லர் அமா​வாசை ​(55) மட்​டும் முதல் மாடி​யில் பணி​யில் இருந்​தார்.​ இரவு 7-30 மணி அள​வில் கட்​ட​டத்​தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்​தது.​ பயங்​கர சத்​தம் கேட்டு அக்​கம்​பக்​கத்​தில் உள்​ள​வர்​கள் ஓடி​வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்​த​னர்.​ ​

                     இ​ரவு நேரத்​தில் இச்​சம்​ப​வம் நடந்​த​தால் உயிர்ச்​சே​தம் இன்​றித் தப்​பி​யது.​ கட்​ட​டத்​தின் ஏனைய பகு​தி​க​ளும் இடிந்து விழும் நிலை​யில்​தான் உள்​ளன.​ எனவே ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கம் தாற்​கா​லி​க​மாக அரு​கில் உள்ள பூமாலை வணிக வளா​கத்​துக்கு வெள்​ளிக்​கி​ழமை மாற்​றப்​பட்​டது.​÷அ ​லு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து சேதம் அடைந்​தது குறித்து ஊராட்சி ஒன்​றி​யக் குழுத் தலை​வர் சாந்தி பஞ்​ச​மூர்த்தி மற்​றும் வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்​கள் மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து விவ​ரம் தெரி​வித்​த​னர்.​ ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கத்​துக்கு புதிய கட்​ட​டம் கட்​டித் தரு​மாறு கோரிக்கை விடுத்​த​னர்.

Read more »

பஸ் பைக் மோதல்: டிரை​வர் சாவு

பண்ருட்டி,​​ டிச.​ 18:​ 

               மோட்​டார் சைக்​கி​ளில் சென்ற அரசு பஸ் டிரை​வர் தேவ​தாஸ் ​(50) அரசு பஸ் மோதி​ய​தில் வெள்​ளிக்​கி​ழமை இறந்​தார்.​÷மாளி ​கை​மேடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் தேவ​தாஸ் ​(50),​ அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கத்​தில் பஸ் டிரை​வ​ராக பணி​யாற்றி வரு​கி​றார்.​ இவர் பைக்கில் கண்​ட​ரக்​கோட்டை அருகே வந்​து​கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது ​ பின்​னால் வந்த அரசு பஸ் மோதி​ய​தில் சம்​பவ இடத்​தி​லேயே இறந்​தார்.​ புதுப்​பேட்டை போலீ​ஸôர் விசா​ரிக்​கின்​ற​னர்.​

Read more »

சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி ஆர்ப்​பாட்​டம்


விருத்தா​ச​லம்,​​ டிச.​ 18:​ 

                  விருத்​தா​ச​லத்​தில் சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி சார்​பில் வெள்​ளிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது.​

                       வி​ருத்​தா​ச​ லத்தி​லி​ருந்து வட​லூர்,​​ சேத்​தி​யாத்​தோப்பு,​​ பெண்​ணா​டம்,​​ வேப்​பூர்,​​ பாலக்​கொல்லை ஆகிய ஊர்​க​ளுக்​குச் செல்​லும் சாலை​கள் மழை​யால் சேத​ம​டைந்​துள்​ளன.​ ஆகை​யால் இச்​சா​லை​களை உட​ன​டி​யா​கச் சரி​செய்ய வேண்​டு​மெ​னக்​கோரி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் நெடுஞ்​சா​லைத்​துறை அலு​வ​ல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ மாவட்​டச் செய​லா​ளர் திரு​மா​றன் ஆர்ப்​பாட்​டத்​துக்கு தலைமை ஏற்​றார்.​ மாவட்ட துணைச் செய​லா​ளர் ராசா​மு​க​மது,​​ மாவட்ட நிர்​வா​கி​கள் ராம​லிங்​கம்,​​ தமி​ழி​னி​யன்,​​ செல்​வ​மு​தல்​வன்,​​ ஒன்​றி​யச் செய​லா​ளர் பழ​னிச்​சாமி,​​ குரு,​​ வெங்​க​டே​சன் உட்​பட பலர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

பண்ருட்டியில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் பறி​மு​தல்

பண்​ருட்டி,​​ டிச.​ 18:​ 

                             விற்​ப​னைக்​காக கடை​க​ளில் வைக்​கப்​பட்​டி​ருந்த காலா​வ​தி​யான மற்​றும் உற்​பத்தி தேதி​யில்​லாத உண​வுப் பொருள்​களை,​​ பண்​ருட்டி நக​ராட்சி ஊழி​யர்​கள் பறி​மு​தல் செய்து வெள்​ளிக்​கி​ழமை அழித்​த​னர்.​

                            பண் ​ருட்டி நக​ராட்சி ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி தலை​மை​யில் சுகா​தார அலு​வ​லர் பால​சந்​தி​ரன் உள்​ளிட்ட ஊழி​யர்​கள் வியா​ழக்​கி​ழமை,​​ வெள்​ளிக்​கி​ழமை ஆகிய இரு நாள்​க​ளில் நக​ரப் பகு​தி​யில் உள்ள கடை​க​ளில் திடீர் சோத​னை​யில் ஈடு​பட்​ட​னர்.​ சோத​னை​யின் போது காலா​வ​தி​யான மற்​றும் உற்​பத்தி தேதி,​​ விலா​சம் இல்​லாத மளி​கைப் பொருள்​கள்,​​ நெய்,​​ எண்ணெய் வகை​களை பறி​மு​தல் செய்து அழித்​த​னர்.​

                          அ ​தன் பின்​னர் நிரு​பர்​க​ளி​டம் ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி கூறி​யது:​ ​ பொது சுகா​தா​ரத் துறை உத்​த​ர​வின் பேரில் பண்​ருட்டி நக​ரப் பகு​தி​யில் உள்ள கடை​க​ளில் சோதனை மேற்​கொண்​டோம்.​ இரு நாள்​க​ளாக செய்த சோத​னை​யில் விதி​களை மீறி விற்​கப்​பட்ட சமை​யல் பொருள்​கள் உள்​ளிட்​ட​வற்றை பறி​மு​தல் செய்​தோம்.​ இனி தொடர்ந்து ஆய்வு செய்​யப்​ப​டும்.​

                        இந்​ நி​லை​யில் வியா​ழக்​கி​ழமை சோத​னை​யின் போது விற்​ப​னைக்​காக கடை​யில் வைக்​கப்​பட்​டி​ருந்த பாலித்​தீன் கவர்​களை பறி​மு​தல் செய்​த​னர்.​ முன் அறி​விப்பு ஏது​மின்றி பாலித்​தீன் கவர்​களை பறி​மு​தல் செய்​த​தால் வியா​பா​ரி​கள் கண்​ட​னம் தெரி​வித்​த​னர்.​

                            இதை தொடர்ந்து வியா​பா​ரி​களை சம​ர​சம் செய்த நகர மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன்.​ இனி​வ​ரும் காலத்​தில் உரிய அறி​விப்பு செய்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​றும்,​​ நக​ரை​யும்,​​ சுற்​றுப்​பு​றத்​தை​யும் தூய்​மை​யாக வைத்​துக்​கொள்ள 20 மைக்​கி​ரான்​க​ளுக்கு கீழ் உள்ள பாலித்​தீன் கவர்​களை விற்​பனை செய்​யா​மல் இருக்க வியா​பா​ரி​கள் ஒத்​து​ழைக்க வேண்​டும் என கேட்​டுக்​கொண்​டார்.​

Read more »

என்.எல்.சி.​ அறி​வித்த ரூ.25 கோடி திட்​டத்தை நிறை​வேற்ற வேண்​டும்

கட​லூர்,​​ ​ டிச.​ 18:​ 

                    20 கிரா​மங்​களை வெள்​ளத்​தில் இருந்து காப்​பாற்ற,​​ ரூ.25 கோடி செல​வில் வாலாஜா ஏரியை அழப்​ப​டுத்த என்.எல்.சி.​ நிறு​வ​னம் 2 ஆண்​டு​க​ளுக்கு முன் அறி​வித்த திட்​டத்தை,​​ விரை​வில் நிறை​வேற்ற வேண்​டும் என்று விவ​சா​யி​கள் வற்​பு​றுத்​தி​னர்.​

                      க​ட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடந்​தது.​ கூட்​டத்​தில் விவ​சாய சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் பேசி​யது:​

                                       ப​ர​வ​னாறு பாச​னம் மற்​றும் வடி​கால் மேம்​பாட்​டுச் சங்க செய​லா​ளர் பொறி​யா​ளர் அ.ராஜேந்​தி​ரன்:​ கரை​க​ளற்ற பர​வ​னாற்​றின் கரை​யோ​ரம் வசிக்​கும் பொது​மக்​க​ளும் விவ​சா​யி​க​ளும் ஆண்​டு​தோ​றும் துய​ரத்​தில் ஆழ்த்​தப்​ப​டு​கி​றார்​கள்.​ 20 கிரா​மங்​கள் ஆண்​டு​தோ​றும் வெள்​ளத்​தில் சிக்​கித் தவிக்​கின்​றன.​ ​ கரை​யோ​ரம் உடைப்​பெ​டுத்து,​​ அவற்றை சீர​மைக்க ஆண்​டு​தோ​றும் ரூ.2 கோடி வரை செல​வி​டப்​ப​டு​கி​றது.​ ஆனால் நிரந்​த​ரத்​தீர்வு காணப்​ப​ட​வில்லை.​ அர​சுப் பணம் வீணாக செல​வி​டப்​ப​டு​கி​றது.​ ​ ​

                                த​லைப் பர​வ​னாறு பகு​திக்கு உள்​பட்ட வாலாஜா ஏரியை ஆழப்​ப​டுத்த வேண்​டும்.​ இந்த ஏரிக்கு வரும் நீர் தங்​கா​மல் வழிந்​தோடி விடு​கி​றது.​ வாலாஜா ஏரி​யைத் தூர்​வார என்.எல்.சி.​ நிறு​வ​னம் ரூ.25 கோடி ஒதுக்​கி​ய​தாக அறி​விப்பு வந்து 2 ஆண்​டு​க​ளுக்​கு​மேல் ஆயிற்று,​​ விரை​வில் இப்​ப​ணி​யைத் தொடங்க வேண்​டும்.​÷ப​ர​வ​னாற்றை ஆழப்​ப​டுத்தி கரை​கள் அமைத்து 20 கிரா​மங்​களை வெள்​ளப்​பாழ் நிலை​யில் இருந்து காப்​பாற்ற வேண்​டும்.​ இதன்​மூ​லம் 20 ஆயி​ரம் விவ​சா​யக் குடும்​பங்​க​ளும் 20 ஆயி​ரம் ஏக்​கர் நிலங்​க​ளும் காப்​பாற்​றப்​ப​டும்.​ ​

                                 பா​சி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்:​ வட​கி​ழக்​குப் பரு​வ​ம​ழைக் காலத்​தில் வீரா​ணம் ஏரி​யின் நீர்​மட்​டத்தை 44 அடிக்கு மேலும் உயர்த்​தி​யது தவறு.​ இத​னால் ஒரே நேரத்​தில் 18 ஆயி​ரம் கன அடி உப​ரி​நீரை வெளி​யேற்​றும் நிலை ஏற்​பட்டு பயிர்​கள் பாதிக்​கப்​பட்டு உள்​ளன.​ எதிர்​கரை பகு​தி​யில்,​​ 15 கிரா​மங்​களை ஏரி நீர் சூழ்ந்​துள்​ளது.​ பாசி​முத்​தான் ஓடை​யில் ரூ.​ 1 லட்​சம் செல​விட்டு 3-வது ரெகு​லேட்​டரை சீர​மைத்​த​தா​கத் தெரி​விக்​கி​றார்​கள்.​ ஆனால் அத்​த​கைய பணி எது​வும் நடக்​க​வில்லை.​ விசா​ர​ணைக்கு உத்​த​ர​விட வேண்​டும்.​

                         இந்த ஆண்டு உளுந்து விதைத் தட்​டுப்​பாடு ஏற்​ப​டும் நிலை உள்​ளது.​ போது​மான அள​வுக்கு விதை உளுந்து கையி​ருப்பை அதி​க​ரிக்க வேண​டும்.​ ​

                         வெ​லிங்​டன் ஏரி பாசன விவ​சா​யி​கள் சங்​கச் செய​லா​ளர் பெண்​ணா​டம் சோம​சுந்​த​ரம்:​ பெண்​ணா​டம் சர்க்​கரை ஆலை​யில் 26 ஆயி​ரம் டன் கரும்​புக்கு டன்​னுக்கு ரூ.66 வீதம் சட்ட விரோ​த​மா​கப் பிடித்​தம் செய்​யப்​பட்டு உள்​ளது.​ விவ​சா​யி​க​ளுக்கு இந்​தப் பணத்​தைப் பெற்​றுத் தர​வேண்​டும்.​ விருத்​தா​ச​லம் திட்​டக்​குடி தாலு​காக்​க​ளில் பட்டா மாறு​தல் மனுக்​கள் ஏரா​ள​மாக நிலு​வை​யில் உள்​ளன.​ அவற்​றுக்கு விரை​வில் தீர்வு காண வேண்​டும்.​

                                     வி​வ​சாய சங்​கக் கூட்​ட​மைப்​பின் மாவட்​டச் செய​லா​ளர் கார்​மாங்​குடி வெங்​க​டே​சன்:​ அனைத்து விவ​சா​யி​க​ளுக்​கும் மானிய விலை​யில் வேளாண் இயந்​தி​ரங்​கள் கிடைக்க வேண​டும்.​ ஒழுங்​கு​முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் நெல் உள்​ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருள்​க​ளுக்​கும்,​​ அரசு அறி​விக்​கும் குறைந்​த​பட்ச விலை கிடைக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ ​ ​÷வே​று​பல விவ​சா​யி​கள் பேசு​கை​யில்,​​ அத்​திப்​பட்டு கூட்​டு​றவு சங்​கத்​தில் பெரு​ம​ள​வில் முறை​கேடு நடந்​துள்​ளது.​ ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்​பட்டு உள்​ளது.​ நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும.​ பண்​ருட்டி சித்​தே​ரியை ஆழப்​ப​டுத்த வேண்​டும் அதில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும் என்​றும் கோரி​னர்.

Read more »

22-ல் விடுதலைச் சிறுத்தைகள் போராட்​டம் அறிவிப்பு

நெய்வேலி, ​​ டிச.18: ​ 
 
                    டிசம்​பர் 22-ம்தேதி என்​எல்சி 2-வது சுரங்​கம் முன் முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப்​போ​வ​தாக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் அறி​வித்​துள்​ள​னர்.​​ என்​எல்சி விரி​வாக்​கப் பணி​க​ளுக்கு வீடு,​​ நிலம் வழங்​கி​ய​வர்​க​ளுக்கு இழப்​பீட்​டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும்,​​ வீட்​டுக்கு ஒரு​வ​ருக்கு உட​ன​டி​யாக வேலை​வாய்ப்பு வழங்​க​வேண்​டும்,​​ நெய்​வே​லி​யைச் சுற்​றி​யுள்ள கிரா​மப்​பு​றங்​க​ளில் அடிப்​படை வச​தி​களை மேம்​ப​டுத்த வேண்​டும் ஆகிய கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி காட்​டு​மன்​னார் கோயில் எம்​எல்ஏ ரவிக்​கு​மார் தலை​மை​யில் என்​எல்சி 2-வது சுரங்க வாயில் முன் முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் அறி​வித்​துள்​ள​னர்.

Read more »

வேளாண் மையத்​தில் வாங்​கிய​ விதை​நெல்லில் முறை​யா​கக் கதிர் வர​வில்லை

கட​லூர்,​​ டிச.​ 18:​ 

               வேளாண் விரி​வாக்க மையத்​தில் வாங்கி விதைத்த நெல்​லில்,​​ முறை​யா​கக் கதிர் வர​வில்லை என்று  கட​லூ​ரில் நடந்த விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டத்​தில் புகார் தெரி​விக்​கப்​பட்​டது.​

                    மா​ வட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் நடந்​தது.​ 

கூட்​டத்​தில் அக​ரம் ஆலம்​பாடி உழ​வர் மன்​றத் தலை​வர் வேல்​மு​ரு​கன் பேசி​யது:​ ​

                              சேத்​தி​யாத்​ தோப்பு வேளாண் விரி​வாக்க மையத்​தில் பிபிடி விதை​நெல் வாங்கி விதைக்​கப்​பட்​டது.​ சுமார் 20 விவ​சா​யி​கள் 50 ஏக்​க​ரில் விதைத்த பிபிடி ரக நெல்,​​ தற்​போது வளர்ந்து கதிர்​வ​ரும் நிலை​யில் உள்​ளது.​ இவற்​றில் பயிர் வீரி​ய​மாக வளர்ந்​தும்,​​ கதிர்​வ​ரு​வது பல்​வேறு நிலை​க​ளில் இருப்​ப​தால் மக​சூல் பாதிக்​கும் நிலை ஏற்​பட்டு உள்​ளது.​ பாதிக்​கப்​பட்ட விவ​சா​யி​க​ளுக்கு நஷ்​ட​ஈடு வழங்க வேண்​டும்.​ தனி​யார் விற்​ப​னை​யா​ளர்​க​ளி​டம் வாங்கி விதைத்த இதே ரக நெல்​லில் இந்​தப் பிரச்னை எழ​வில்லை என்​றும் வேல்​மு​ரு​கன் கூறி​னார்.​ பாதிக்​கப்​பட்ட நெல்​ப​யி​ரை​யும் கொண்டு வந்து மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் விவ​சா​யி​கள் காண்​பித்​த​னர்.​

​ப​தில் அளித்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​யது:​ 

                     இரு வகை​யான பயிர்​க​ளைச் சேர்த்த ஓட்​டு​ரக நெல்​விதை இது.​ மர​பணு மாற்​றத்​தில் ஏற்​பட்ட குறை​பா​டாக இருக்​க​லாம்.​ இத்​த​கைய விதை​களை சோதனை வயல்​க​ளில் நடவு செய்து பார்த்து,​​ பின்​னர் விவ​சா​யி​க​ளுக்கு வழங்கி இருக்க வேண்​டும்.​ 

                     இது​கு​றித்து வேளாண் துறை நட​வ​டிக்கை எடுக்​கும்.​ விதை நெல் எங்​கி​ருந்து வாங்​கப்​பட்​டது என்று தெரிந்து நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்​றார் ஆட்​சி​யர்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior