உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் மருந்துகள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:
                  கடலூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை (மார்க்கெட்டிங் சொசைட்டி) சங்கங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                57-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது. 

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியது:

                    கடலூர் மாவட்டத்தில் 2007-08-ம் ஆண்டில் 400 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடியும், 2008-09ம் ஆண்டில் 8,300 குழுக்களுக்கு ரூ.72 கோடியும், 2009-10ம் ஆண்டில் 12,462 குழுக்களுக்கு ரூ.106.5 கோடியும் சுழல்நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.130 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 6 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

                கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டியில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து உருக்குலைந்து கிடந்தன. அவற்றுக்கு ரூ.42 கோடி மானியம் வழங்கப்பட்டது இந்த ஆட்சியில் என்றார் பன்னீர்செல்வம். 

                விழாவுக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்ஸிஸ் மேரி ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

                    கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் எஸ்.ஆர். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் ந.மிருணாளினி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் 

                          முன்னதாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்கர்கள், பூசாரிகள் 399 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கராஜ், துணை ஆணையர் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கழிப்பறைகள் திறப்பு

கடலூர்:

               கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இகோ-சான், ரூ.6 லட்சத்தில் கட்டிக் கொடுத்துள்ள கழிப்பறைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது.

               லண்டன் இகோ-சான் நிறுவனம் கடலூர் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு தலா 40-க்கும் மேற்பட்ட நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, மாணவர்களுக்கான கழப்பறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி திறந்து வைத்தார்.

                 மாணவிகளுக்கான கழிப்பறைகளை இகோ-சான் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி மெக்கிராத் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனத்தின் வெயரவர் நீட்ஸ் அமைப்பின் பிரதிநிதி டேவிட் கிராஸ்வலர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.சுப்பிரமணியன் வரவேற்றார். ஆசிரியர் எம்.ஸ்ரீதர், ஆசிரியை ஜே.எஸ். ஹெலன் ஆகியோர் நன்றி கூறினர்.

Read more »

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்


                     அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 
                 அதேநேரம், தங்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது என அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 163 உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்து 600 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசின் அனுமதி பெற்று இக்கல்லூரிகள் நிரப்பிக் கொள்ளலாம். 
 
                  கடந்த 1999 வரை இந்தக் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நேரடி அனுமதியின் பேரில், அந்தந்தக் கல்லூரிகளே நிரப்பி வந்தன. இதில் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகள் நேரடியாகவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் "கல்லூரி குழு' மூலம் பணியிடங்களை நிரப்பி வந்தன. 1999-ம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.
 
                இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 4-4-2000 தேதியன்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய ஒழுங்கு முறையைக் கொண்டுவந்தது. இதன்படி, அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் இரண்டும் தேர்வுக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பின்னர் கல்லூரி குழு மூலம் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
 
                   இந்த உத்தரவை ஏற்காத அரசு உதவி பெறும் கல்லூரிகள், 2000-ம் ஆண்டுக்குப் பின் காலியான பணியிடங்களில் தாங்களாகவே குறைந்த ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை தாற்காலிகமாக நியமனம் செய்து கொண்டன.2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பள்ளிகளில் புதிதாக பணியாளர்களை தேர்வு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2006-ம் ஆண்டு 600 பணியிடங்களையும், 2007-ம் ஆண்டு 2 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்பிக் கொள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 
 
                    அப்போது, சிறுபான்மை கல்லூரிகள் யுஜிசி-யின் உத்தரவை பின்பற்றாமல் தாங்களாகவே பணியிடங்களை நிரப்பிக் கொண்டன. ஆனால், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் வேறு வழியின்றி, யுஜிசி விதிமுறைப்படி தேர்வுக் குழுவை நியமித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொண்டன. இருந்தபோதும், 300-க்கும் மேற்பட்ட இடங்கள் எஞ்சின. மேலும், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக சிறுபான்மை அல்லாத கல்லூரிகளிலேயே ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. 
 
                       இவற்றில் ஒரு சில கல்லூரிகளில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகி இருப்பதோடு, பணிச் சுமை அதிகரித்திருப்பதாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சிறப்பு முயற்சி மேற்கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தி கூறினார். 
 
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (நிதி) டி.ஆர்.ஏ. தேவகுமார் கூறியது: 
 
                  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் அரசு அனுமதித்தும் நிரப்பப்படாத இடங்கள் எத்தனை உள்ளன? மேலும் 30-9-2010 அன்று வரை நிரப்பப்படாத இடங்கள் எத்தனை? என்பவை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
                        மேலும் இந்தக் கல்லூரிகளில் புதிதாக 1,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என்றார்.

Read more »

நெல்லிக்காய்க்கு சந்தையில் அதிக லாபம்




கடலூர் : 
 
                   காயகல்ப மூலிகை என்றும் மூப்பைத் தடுக்கும், ரத்த விருத்தி செய்யும் சக்தி கொண்டது என்றும், மருத்துவ உலகில் நெல்லிக்காய் சிறப்பாகப் பேசப்படுகிறது.
 
                  இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட நெல்லிக்காயில், வேறுஎந்த கனிகளிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதுபோல் 20 மடங்கு வைட்டமின் சி, ஒரு நெல்லிக்காயில் உள்ளது. ஒரு கிராம் நெல்லிக்காயில் 720 மி.கிராம் வைட்டமின் சி, 28 மி.கிராம் வைட்டமின்  பி 1, கால்சியம் 15 மி.கிராம், பாஸ்பரஸ் 21 மி.கிராம் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்களும் உள்ளன. நெல்லிக்காய் விதை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. சிறுநீரகக் கோளாறு, ரத்தசோகை, மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறு, கணயத்தில் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. 
 
                   எனவே நெல்லிக்காய் மருந்தாகவும், ஊறுகாய், ஜாம் உள்ளிட்ட உணவு வகைகளாகவும் சந்தையில் கிடைக்கின்றன.2,800 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நெல்லிக்காய் கொண்டு வரப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. நெல்லி மரங்கள் மலைப் பகுதிகளில் நன்றாகவும் மற்ற பகுதிகளில் பராமரிப்புக்கு ஏற்பவும் வளர்கின்றன. வீடுகளிலும் தோட்டங்களிலும் காணப்பட்ட நெல்லி மரங்கள் தற்போது பணப் பயிராக, நூற்றுக்கணக்கான ஏக்கரில் தமிழக விவசாயிகள் பயிரிடத் தொடங்கி உள்ளனர். 
 
                 மித வெப்ப மண்டலங்களில் பயிரிடப்பட்டு வந்த நெல்லி, தற்போது, வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 டன் நெல்லிக்காய் தேவை இருப்பதாகவும், தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ரகம்கோவை வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய பி.எஸ்.ஆர். 1 என்ற நெல்லி ரகம் தமிழகத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதில் மருத்துவ குணம் அதிகம் என்பதால் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. 
 
                   மற்றும் வட இந்திய ரகங்களான சாக்கியா, என்.ஏ. 7, காஞ்சன் உள்ளிட்ட நெல்லி ரகங்களும் பரவலாகப் பயிரிடப்படுகின்றன.எங்கு கிடைக்கும்?அதிகம் செலவில்லாமல் நல்ல வருவாய் கிடைக்கும் பயிராக நெல்லிக்காய் விவசாயம் போற்றப்படுகிறது. நெல்லிக் கன்றுகள் தஞ்சை, சேலம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நர்சரிகளில் கிடைக்கும். தண்ணீர் தேங்காத நிலங்களில் நெல்லி செழித்து வளரும். எல்லா காலங்களிலும் நெல்லி பயிரிடலாம்.
 
                   ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடப்படுகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை நெல்லிக்காய்கள் அறுவடை செய்யமுடியும்.முதலாம் ஆண்டு ஏக்கருக்கு | 20 ஆயிரம் வரை செலவாகும். நட்டு 3-ம் ஆண்டு முதல் காய்கள் கிடைக்கும். 5-ம் ஆண்டு முதல் அதிக மகசூல் கிடைக்கும். 3 ஆண்டுகள் வரை நெல்லித் தோப்பில் மண் வளம் தரும் ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும், அதன் மூலம் கணிசமாக வருவாய் ஈட்ட முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
                அதிக செலவில்லாமல் ஆண்டுக்கு ஏக்கருக்கு | 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். வியாபாரிகள் தோப்புக்கே வந்து நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறார்கள் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.விவசாயி பேட்டி
 
இதுகுறித்து திட்டக்குடியில் நெல்லி சாகுபடி செய்துள்ள விவசாயி  வேணுகோபால் கூறியது: 

                     நான் ஒரு ஹெக்டேரில் நெல்லி பயிரிட்டுள்ளேன். செலவில்லாமல் அதிக வருவாய் தரும் பயிர் நெல்லிக்காய். வறண்ட பிரதேசங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தால் போதும். நெல்லிக்காய் விவசாயத்தை சிறப்பாகச் செய்து நல்ல லாபம் பெறமுடியும். 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லிக்காய் விற்பனை செய்வதில் அதிகம் பிரச்னைகள் இருந்தன. தற்போது சந்தை சிறப்பாக உள்ளது. 
 
                     கோவை வேளாண் பல்கலைக்கழகம் நெல்லிக்காய் சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்களில் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சி பெற்று நெல்லி விவசாயம் செய்தால் சிறப்பாக அமையும்.கோவை வேளாண் பல்கைலக்கழகம் உருவாக்கிய பி.எஸ்.ஆர். 1 ரக நெல்லி, அதிக காய்ப்புத் திறன் கொண்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் இந்த ரக நெல்லிக்காய் முழுவதும், மருந்துக்காக கேரள வணிகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற வடஇந்திய ரகங்கள் பெருமளவுக்கு உணவுப் பொருள்களுக்காக கொள்முதல் செய்யப்படுகிறது என்றார் வேணுகோபால்.

Read more »

கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறை


                 கத்தரியில் தற்போது பரவிவரும் காய்ப்புழுவை தடுத்து மகசூலை பெருக்குவது எப்படி என்று தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம்.
 
                   கத்தரி இந்தியாவை தாயகமாகக் கொண்ட பயிராகும்.  இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று |15 வரை விற்பனை செய்து வந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதமாக நிலவிய குறைந்த சந்தை விலையின் காரணமாக கத்தரி தோட்டங்களை போதிய பராமரிப்பின்றி வைத்திருந்த காரணத்தால் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கூடுதல் விலை கிடைப்பதால் கத்தரியில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
கைவினை முறைகள்: 
 
            பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 
உழவியல் முறைகள்: 
 
                 தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு செய்வதால் கத்தரிக்காய் துளைப்பான் தாக்குதலை சமாளிக்கலாம். கத்திரி வயலைச் சுற்றிலும் இரு வரிசைகளில் மக்காச்சோளம் பயிரை பொறி பயிராக சாகுபடி செய்து காய்த்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். தோட்டத்தைச் சுற்றிலும் உள்ள காய்துளைப்பானுக்கு இலக்காகும் கத்தி குடும்ப களைகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
 
உயிரியல் முறைகள்: 
 
                       பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை ஏக்கருக்கு 1500 மி. லிட்டரை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். பெவேரியா பேசியானா உயிரியல் காரணியினை ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. வீதம் கலந்து தெளித்து இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 5000 எண்கள் கத்தரி நடவு செய்த மூன்றாம் மாதம் முதல் வயல்களில் விட்டு இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம். இனக் கவர்ச்சி பொறிகள் ஒரு ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் உபயோகப்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.
 
ரசாயன முறைகள்: 
 
                    எண்டோசல்பான் 35 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து இத்துடன் 3 மி.லி. வேப்ப எண்ணெய் கலந்து ஒரு டேங்குக்கான திரவத்துடன் 5 மி.லி. டீப்பால் ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம். மாலத்தியான் 50 இசி மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. வீதம் கலந்து தெளிப்பதன் மூலமும் இந்தப் பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை பரிந்துரை செய்துள்ளது.
 
                     கத்தரி காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தும் போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை (உழவியல், உயிரியல், கைவினை, ரசாயன முறைகள்) கையாண்டு கத்தரிக் காய்த்துளைப்பான் மேலாண்மை செய்யலாம். மேலும் கத்தரிக்கு ரசாயன பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தும்போது பரிந்துரை செய்த அளவுகளில் சரியான அளவில் நீர் கலந்து உரிய இடைவெளியில் தெளித்தால் நல்ல பலனை பெறலாம்.
 
    

Read more »

பண்ருட்டியில் நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் கைது



கடலூர் :

              பண்ருட்டியில் 470 சவரன் நகைகளுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
 
               கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ரெட்டிப்பாளையம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், பண்ருட்டியில் ஸ்ரீவீரப்பா ஜுவல்லரி நகை அடகு கடையில், உரிமையாளர் சிவக்குமாரிடம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மோதிரம், காசு உள்ளிட்ட தங்க நகைகளை அடகு வைத்தார். நகைகளை மீட்கச் சென்ற போது கடை பூட்டிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமாரை தேடினர்.
 
              இந்நிலையில் சிவக்குமாரிடம் நகை அடகு வைத்து ஏமாந்த 70 பேர் புகார் செய்தனர். எஸ்.பி., உத்தரவின் பேரில் இவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார், சிவக்குமாரை தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த சிவக்குமார் கடையில் இருக்கும் நகை சீட்டுகளை எடுப்பதற்காக நேற்று பண்ருட்டி நகராட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சிறப்பு படை போலீசார் அவரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், சிவக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இச்சம்பவம் குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் நேற்று கூறியது: 
 
                  பண்ருட்டி கடைக்கடை உரிமையாளரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னிடம் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை பண்ருட்டி முத்தூட் பின்கார்ப், பன்னாலால் ஜெயின் அடகு கடை, புதுச்சேரி மற்றும் பண்ருட்டியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில், 470 சவரன் நகைகளை சிவக்குமார் அடகு வைத்துள்ளது தெரியவந்தது. 
 
                     அடகு வைத்துள்ள ரசீதுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோர்ட் நடவடிக்கை மூலம் விரைவில் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். முன்னதாக நேற்று காலை சிவக்குமாரின் நகை அடகு கடையில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜிகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன், வி.ஏ.ஓ., லூர்துசாமி மற்றும் போலீசார் அடகு சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.

Read more »

காட்டுமன்னார்கோவிலில் சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி வீட்டிற்குள் புகுந்தவர் கைது



காட்டுமன்னார் கோவில் : 

               காட்டுமன்னார்கோவிலில் சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி வீட்டிற்குள் புகுந்த போதை ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டைச் சேர்ந்தவர் சலீம் பாஷா. இவரது மனைவி சம்ஷத் பேகம். அவர் வீட்டில் இருந்த போது சபாரி சூட் அணிந்த, "டிப் டாப்' ஆசாமி ஒருவர், வீட்டிற்குள் புகுந்தார். யார் என கேட்ட போது, தான் ஒரு சி.பி.ஐ., அதிகாரி என்றும், வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் கூறினார். பதறிப்போன சம்ஷத் பேகம், அருகில் உள்ளவர்களை அழைக்க, கூட்டம் கூடியது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி அங்கு வந்து, "டிப் டாப்' ஆசாமியை விசாரித்தார். 

                        போதையில் இருந்த அவர் முரணாக பதில் கூறியதால், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தார். தான் சி.பி.ஐ., அதிகாரி இல்லை என்றும், மக்கள் துரத்தியதால் வீட்டிற்குள் புகுந்து விட்டதாகவும் கூறினார். அவரது சட்டை பையில் மு.க.இளந்தமிழன், மாநிலத் தலைவர், மாநில தமிழ் பண்பாட்டு மன்றம், தஞ்சாவூர் என்ற விசிட்டிங் கார்டு இருந்தது. காட்டுமன்னார் கோவில் போலீசார், போதை ஆசாமி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Read more »

புதுச்சேரி சாராயக்கடைக்கு பெண்ணையாற்றில் சாலை : தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்

நெல்லிக்குப்பம் : 

               புதுச்சேரி மாநில சாராயக் கடை உரிமையாளர் பெண்ணையாற்றின் கரையை உடைத்து வியாபாரத்திற்காக விதிமுறைகளை மீறி சாலை அமைத் திருப்பதை தமிழக அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றின் தென் கரையில் தமிழக எல்லையையொட்டி புதுச்சேரி மாநிலத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை காரணமாகக் கொண்டு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் அங்கு சாராயக்கடை வைத்தார்.
 
                 சாராயம் குடிக்க தமிழகத்தைச் சேர்ந்த "குடி'பிரியர்கள் அதிகளவில் முள்ளிகிராம்பட்டு வழியே சென்றதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இரு மாநில போலீசாரும் சேர்ந்து சாராயக் கடையை அகற்றினர்.  உடன் ஆற்றின் வட கரையில் புதுச்சேரி மாநில எல்லையில் சாராயக் கடையை துவங்கினர். ஆற்றில் மணலில் சைக்கிளிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ செல்ல சிரமமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த "குடி' பிரியர்கள் அங்கு செல்லத் தயங்கினர். 

               புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவரின் சாராயக்கடைக்கு தமிழகத்தையொட்டிய "குடி' மகன்கள் வராததால் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் கிளை கடையை துவக்கினார். ஓரளவிற்கு சாராயக் கடைக்கு தமிழக வாடிக்கையாளர்கள் சென்றாலும் பெரும்பாலானோர் ஆற்று மணலில் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாமல் சிரமடைந்தனர். இதனைப்பார்த்த சாராயக் கடை உரிமையாளர் தமிழக "குடி'பிரியர்களை வரவழைக்க புது யுக்தியை கடை பிடித்தார். வியாபாரத்திற்காக தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரையை உடைத்து அங்கிருந்து சாராயக்கடை வரை ஆற்றில் கிராவல் கொட்டி சாலையை பலப்படுத்தினர்.

                   தற்போது அவர்கள் எதிர்பார்த்தது போல் தமிழக பகுதியான நெல்லிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த "குடி' மகன்கள் தமிழக "டாஸ்மாக்' கடைகளை மறந்து "சீப் அண்ட் பெஸ்ட்'ஆக புதுச்சேரி மாநில சாராயக் கடைக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். சாராய வியாபாரத்திற்காக விதிமுறைகளை மீறி ஆற்றில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. முள்ளிகிராம்பட்டு வழியாக சாராயம் குடித்து விட்டு வருபவர்களால்  அப்பகுதியில் பிரச்னைகள் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் தண்ணீர் ஓடும் காலங்களில் குடித்து விட்டு வருபவர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

Read more »

சத்துணவுத் திட்டத்தில் குறைகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம்

கடலூர் : 

               சத்துணவுத் திட்டத்தில் குறைகள் இருப்பின் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                  சத்துணவு மையங்கள் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள், மனுக்கள் மீது நடவடிக்கை மேற் கொள் ளும் பொருட்டு மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக் கள் அமைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

குறைகள் பற்றிய தகவல் பெற்று பதிவு செய்யும் அலுவலராக நியமிக்கப்பட்ட உதவி கணக்கு அலுவலர் (சத்துணவு) தொலைபேசி எண் 04142-295452.

                      மாவட்ட அளவிலான குறை களைவு குழுவாக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட திட்ட அலுவலர், உதவி கணக்கு அலுவலர் மற்றும் வட்டார அளவிலான குறை களைவு குழுவாக, வட் டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் திட்டம் தொடர்பான தங் கள் குறைகளை மேற் கண்ட குழுவினரிடம் தெரிவிக்கலாம்.

Read more »

Rs. 8.45 crore for renovation of temples in Cuddalore



Health Minister M.R.K. Panneerselvam giving away bicycles to archakas at the Devanatha Swamy temple at Thiruvahindrapuram.

CUDDALORE:

          Temple renovation works in Cuddalore district were taken up last year at a cost of Rs. 8.45 crore of which Devanatha Swamy temple at Thiruvahindrapuram alone accounted for Rs. 3.62 crore, Health Minister M.R.K. Panneerselvam has said.

             He was speaking at a function held on the temple premises on Monday to give away free bicycles to 399 archakas. The Minister said that a ‘mandapam' had been built and cement roads laid at the temple. Besides, a sum of Rs. 25 lakh was spent on setting up a park at the temple under the Ancient Temple Scheme.

            Mr. Panneerselvam said that for the benefit of archakas, Chief Minister M. Karunanidhi had formed a separate welfare board which was disbursing financial assistance of Rs. 1,500 towards the education of their wards and Rs. 15,000 for funeral expenses.The archakas were also given a monthly pension of Rs. 750.

Bicycles for students

             Later, the Minister gave away 1,716 free bicycles to students at a function held at Kurinjipadi Government Higher Secondary School. Students of nine schools located at Vadalur, Kurinjipadi, Karunguzhi, Anadarmullipallam and Kullanchavadi benefited from the scheme. The Minister noted that as many as 20,760 bicycles and 68,615 free bus passes were given last year to students in the district.

            A total of 29 high schools were upgraded as higher secondary schools, 81 middle schools as high schools and 27 primary schools as middle schools last year. With NABARD assistance, additional class rooms were being built in the Kurinjipadi government school at a cost of Rs. 98 lakh. Collector P. Seetharaman, District Revenue Officer S. Natarajan, Joint Commissioner (HR & CE-Villupuram) C. Thangaraj, Assistant Commissioner (HR & CE) R. Jagannathan, Cuddalore municipal chairman T. Thangarasu, Chief Educational Officer Amudhavalli and District Education Officer Parvathimani were present at the function.

Read more »

Rain renders road unmotorable


Pothole-ridden: The Thiruvahindrapuram road in Cuddalore is in shambles. 
 

CUDDALORE: 

                The stretch from the Poompuhar showroom junction to the Koothapakkam convent in Cuddalore town is in bad shape. A distance of about two km is full of potholes and trenches.

            At certain places, the uneven surface poses difficulty to road-users, particularly cyclists and two-wheeler riders. After the onset of the north-east monsoon, the condition has worsened. A resident of the area, U. Maheswari (29), said that the trenches dug for laying underground drainage was either not properly closed or filled with loose soil. Hence, the surface all along the trenches had ducked where water stagnation had become common.

              She also said that students who were cycling their way to schools fall into the trenches, suffering injuries. Even share autorickshaws and autorickshaws that were vying with each other to share their space on the road get struck in the loosened earth. Ms. Maheswari also said that there were occasions when autorickshaws tilted and fell on their sides, injuring the passengers.

             Another resident K. Ganesan (32) said that after the digging for the underground drainage had started, the condition of the road had become awful. It happened to be a main thoroughfare to pilgrims, school and college students, shoppers and patients bound for hospitals. However, they would have to travel warily on this stretch, failing which they would face the risk of injuring themselves. The incessant rain had also thrown up a host of problems, because motorists could not see potholes.

            Even summer months were no better because when a bus passed through this stretch, it would throw up a cloud of dust, thus affecting two-wheeler riders. The pollution caused by soil dump on the road was also a cause for concern. Mr. Ganesan also said that though the Highways Department officials were making occasional survey of the road, nothing tangible had been done to mitigate the travails of the residents. A police station could also be seen on this road. When contacted, Municipal Chairman T. Thangarasu admitted that the condition of the Thiruvahindrapuram road was nothing to boast of.

              The civic body had informed the Tamil Nadu Water and Drainage Board, the executing authority of the underground drainage, to take up with the Highways Department the work to relay the road on a priority basis. The Chairman hoped that the work would be taken up soon after the monsoon.

Read more »

Pawn shop-owner held

CUDDALORE: 

              A special police team constituted by Superintendent of Police (Cuddalore) Ashwin Kotnis nabbed the defaulting pawn shop-owner, V. Sivakumar, at Panruti near here on Wednesday.

             Addressing a press conference here, Mr. Kotnis said that Sivakumar was running a pawn shop at Panruti for the past six years. More than 70 persons had pledged their jewellery with him over a period of time. However, Sivakumar went missing sometime ago and his whereabouts could not be traced. Consequently, those who had pledged their valuables with him complained to the police. The valuables consisted of a total of 216 sovereigns of gold jewellery and 3,140 gm of silver articles.

Receipts seized

              The police personnel nabbed Sivakumar near the Panruti municipality on Wednesday morning and seized from him a bunch of receipts. Mr. Kotnis said that during interrogation, Sivakumar admitted to the crime and said that he had re-pledged the jewellery with other private financiers and pocketed the money. On learning from newspapers that security personnel were after him, he made a surreptitious visit to his shop to collect all those receipts before the police could seize them.

                 Mr. Kotnis said that since those receipts were intact, the police would initiate legal proceedings to get back the jewellery from the private financiers and hand them over to the owners. Cases had been booked against Sivakumar under Section 409 (criminal breach of trust) and Section 402 (cheating) of the Indian Penal Code. Soon after the news spread that Sivakumar was in police custody, people thronged the Superintendent of Police's office and thanked him for taking swift action.

Read more »

Over 15 injured in multiple collision

CUDDALORE: 

                Over 15 bus passengers were injured in a multiple collision at Melpattampakkam near here on Wednesday. Police sources said that a government-run town bus tried to overtake a vehicle at Melpattampakkam and collided head-on with a truck. A private bus heading towards Panruti also rammed the truck.

Read more »

Four check-posts to be modernised at Rs.100-cr. each: K.N. Nehru

CUDDALORE: 

           Of the 20 check-posts in the State four would be modernised at a cost of about Rs.100 crore each along the State boundary. The preparatory works for the ones at Pethikuppam and Hosur are underway, said K.N. Nehru, Transport Minister.

            Even the tender process for the Pethikuppam check-post has begun, Mr. Nehru said while speaking at the function organised for the inauguration of the Regional Transport Office building along with a testing track built at a cost of Rs.1.65 crore at Karaiyeravitta Kuppam, about six km from here on Tuesday. Mr. Nehru said the high-tech check-posts would have 10 lanes and facilities to check overloading, drunken driving and other transport related documents. Provisions would also be made for the personnel of the forest and sales tax departments.

               It was estimated that each of these check-posts would fetch annual revenue of Rs.250 crore, besides helping to safeguard the roads that would otherwise get damaged by overloaded vehicles and bringing down the accident rate. Initially, four places were identified for the location of these check-posts at Hosur, Pethikuppam, K.V. Chavadi and Kaliyakaval. The overall maintenance of these check-posts would rest with the Transport Department.

                It was proposed to merge the 100 ambulances stationed on the highways with the “108” ambulance services and also to increase the quantum of compensation to road accident victims. In the past four years 34 new RTO offices were built at a total cost of Rs.39 crore, thus, taking the total number of RTOs to 98.

              Soon 74 Motor Vehicle Inspectors would be appointed and the smart card system would be introduced in all the RTOs across the State, Mr. Nehru added. Health Minister M.R.K. Panneerselvam said despite the hike in prices of petroleum products the transport department had not increased the fare structure that remained the lowest in the country.

Read more »

Public hearing held on private power station

CUDDALORE: 

             A public hearing was held here on Tuesday to ascertain the views of the local people about the proposal to set up a 1,800-MW private thermal power station.

             Collector P. Seetharaman presided. It was stated that the SRM Energy Ltd. had proposed to set up the thermal station for which over 1,300 acres of land would have to be acquired from at least nine villages, including Poovalai, Velangipattu, Alamelumangapuram, Puduchathiram and Manikollai. Participants expressed the view that due compensation should be given to the land providers and also appropriate measures ought to be taken for protection of environment.

Read more »

Welfare schemes inspected

CUDDALORE:

            Monitoring officer V.K. Jayakodi inspected the implementation of various welfare schemes in Cuddalore district on Tuesday.

            Accompanied by Collector P. Seetharaman and other officials, Mr. Jayakodi went to Singirikudi to inspect the houses built under the Indira Awaz Yojana and a library under the Anaithu Grama Anna Marumalarchi Thittam. Later, Mr. Jayakodi checked the houses being built under the Kalaignar Housing Schme at Madanaipattu and Nanamedu. At Uchimedu, he ascertained the progress of road works taken up under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme. Later, reviewing the progress of works at the Collectorate, Mr. Jayakodi directed the officials to complete all the projects within the timeframe.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior