உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

தமிழ் நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 5. சீர்மரபினர் பட்டியல் 6. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியல்

1. ஆதி ஆந்திரர்

2. ஆதி திராவிடர்

3. ஆதி கர்நாடகர்

4. அஜிலா

5. அருந்ததியர்

6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

7. பைரா

8. பகூடா

9. பண்டி

10. பெல்லாரா

11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

12. சங்கிலியர், சக்கிலியன்

13. சாலாவாடி

14. சாமார், மூச்சி

15. சண்டாளா

16. செருமான்

17. தேவேந்திர குலத்தார்

18. டோம், தொம்பரா, பைதி, பானே

19. தோம்பன்

20. கொடகலி

21. கொடடா

22. கோசாங்கி

23. ஹொலையா

24. ஜக்கலி

25. ஜம்புவுலு

26. கடையன்

27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

28. கல்லாடி

29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)

30. கரிம்பாலன்

31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

32. கோலியன்

33. கூசா

34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

35. குடம்பன்

36. குறவன், சித்தனார்

37. மடாரி

38. மாதிகா

39. மைலா

40. மாலா

41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

42. மாவிலன்

43. மோகர்

44. முண்டலா

45. நலகேயா

46. நாயாதி

47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

48. பகடை

49. பள்ளன்

50. பள்ளுவன்

51. பம்பாடா

52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

53. பஞ்சமா

54. பன்னாடி

55. பன்னியாண்டி

56. பரையன், பறயன், சாம்பவார்

57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

59. புலையன்

60. புதிரை வண்ணான்

61. ராணேயர்

62. சாமாகாரா

63. சாம்பான்

64. சபரி

65. செம்மான்

66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

67. தோட்டி

68. திருவள்ளுவர்

69. வல்லோன்

70. வள்ளுவன்

71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

72. வாத்திரியன்

73. வேலன்

74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

75. வெட்டியான்

76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)



பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்

2. ஆரநாடான்

3. எரவள்ளன்

4. இருளர்

5. காடர்

6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

8. கணியர், காணியான், கணியன்

9. காட்டு நாயகர், காட்டு நாயகன்

10. கொக்கவேலன்

11. கொண்டகாப்புகள்

12. கொண்டாரெட்டிகள்

13. கொராகா

14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

15. குடியா, மேலக்குடி

16. குறிச்சன்

17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)

18. குறுமன்கள்

19. மகாமலசார்

20. மலை அரையன்

21. மலைப் பண்டாரம்

22. மலை வேடன்

23. மலைக்குறவன்

24. மலசார்

25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)

26. மலயக்கண்டி

27. மன்னன் (சாதி)

28. மூடுகர், மூடுவன்

29. முதுவர், முத்துவன்

30. பள்ளோயர், பள்ளேயன்

31. பள்ளியன்

32. பள்ளியர்

33. பாணியர்

34. சோலகா

35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)

36. உரளி



பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்

1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உடபட அகமுடையார்

2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்

3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)

5. அன்சார்

6. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

7. அர்ச்சகர வேளாளர்

8. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

9. ஆயிர வைசியர்

10. படகர்

11. பில்லவா

12. பொண்டில்

13. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)

14. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)

15. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

16. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

17. சௌத்திரி

18. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.

19. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

20. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)

21. தக்கானி முஸ்லீம்கள்

22. தேவாங்கர், சேடர்

23. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)

24. துதிகுலா

25. ஏனாதி

26. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

27. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

28. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

29. கங்கவார்

30. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)

31. கௌண்டர்

32. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)

33. ஹெக்டே

34. இடிகா

35. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர், எழுவர், இல்லத்தார்

36. ஜெட்டி

37. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)

38. கப்போரா

39. கைக்கோளர், செங்குந்தர்

40. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)

41. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

42. கலிங்கி

43. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)

44. கள்ளர் குலத் தொண்டைமான்

45. கால்வேலிக் கௌண்டர்

46. கம்பர்

47. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)

48. கணி, கணிசு, கனியர், பணிக்கர்

49. கனியால வேளாளர்

50. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)

51. கன்னடியநாயுடு

52. கற்பூர செட்டியார்

53. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)

54. காசுக்கார செட்டியார்

55. கடேசர், பட்டம்கட்டி

56. கவுத்தியர்

57. கேரளமுதலி

58. கார்வி

59. கத்ரி

60. கொங்கு வைணவர்

61. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர், படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)

62. கோப்பல வேலம்மா

63. கோட்டேயர்

64. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

65. குடிகார வேளாளர்

66. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

67. குக வேளாளர்

68. குஞ்சிடிகர்

69. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)

70. லம்பாடி

71. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

72. லிங்காயத் (ஜங்கமா)

73. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட

74. மலயர்

75. மாலி

76. மானியகார்

77. மாப்பிள்ளா

78. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)

79. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்

80. மூப்பன்

81. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்

82. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)

83. நகரம்

84. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

85. நன்குடி வேளாளர்

86. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

87. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

88. ஓதியா

89. ஊற்று வளநாட்டு வேளாளர்

90. ஓ.பி.எஸ்.வேளாளர்

91. உவச்சர்

92. பய்யூர் கோட்ட வேளாளர்

93. பாமுலு

94. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

95. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)

96. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்

97. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்

98. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)

99. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)

100. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

101. பொடிகார வேளாளர்

102. பூலுவ கவுண்டர்

103. பொராயா

104. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)

105. புள்ளுவர் அல்லது பூலூவர்

106. புசலா

107. ரெட்டி (கஞ்சம்)

108. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)

109. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

110. சாலிவாகனா

111. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்

112. சவலக்காரர்

113. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்

114. ஷேக்

115. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)

116. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)

117. ஸ்ரீசயர்

118. சுந்தரம் செட்டி

119. சையத்

120. தொகட்டா வீரசத்திரியர்

121. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

122. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்

123. தொரையர்

124. தோரியர்

125. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்

126. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா

127. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)

128. உரிக்கார நயக்கர்

129. வல்லம்பர்

130. வால்மீகி

131. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)

132. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

133. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

134. [வேளர்]]

135. வெள்ளாஞ்செட்டியார்

136. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

137. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர், ஒக்காலிய கவுடா உட்பட)

138. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)

139. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)

140. யவன

141. ஏருகுலா

142. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.

143. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.



மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்

1. அம்பலக்காரர்

2. ஆண்டிப்பணடாரம்

3. பெஸ்தா, சீவியர்

4. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)

5. போயர், ஒட்டர்

6. தாசரி

7. தொம்மரா

8. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

9. இசை வேளாளர்

10. ஜம்புவானோடை

11. ஜங்கம்

12. ஜோகி

13. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)

14. கொரச்சா

15. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)

16. குன்னுவர் மன்னாடி

17. குறும்பர்

18. குறு உறனி செட்டி

19. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி

20. மோண்ட் கொல்லா

21. மவுண்டாடன் செட்டி

22. மகேந்திரா, மேதரா

23. முட்டலகம்பட்டி

24. நரிக்குறவர்

25. நோக்கர்

26. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)

27. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)

28. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)

29. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)

30. புன்னன், வேட்டுவ கௌண்டர்

31. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)

32. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)

33. சோழிய செட்டி

34. தெலுங்குப் பட்டி செட்டி

35. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)

36. தொண்டைமான்

37. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)

38. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)

39. வேட்டைக்காரர்

40. வேட்டுவக் கௌண்டர்

41. யோகீஸ்வரர்



சீர்மரபினர் பட்டியல்

1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)

2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)

3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)

4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

7. பட்டுதுர்காஸ்

8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)

9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)

10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)

12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)

13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)

14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

15. தொங்கபோயர்

16. தொங்கஊர் கொறச்சார்கள்

17. தேவகுடி தலையாரிகள்

18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

21. கொரில்லா தோட்ட போயர்

22. குடு தாசரிகள்

23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)

24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)

26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

27. ஜம்பவனோடை

28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)

31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

34. கலவதிலா போயர்கள்

35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்

36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)

37. மொந்த குறவர்கள்

38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)

43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)

45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)

48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

53. சாரங்கபள்ளி குறவர்கள்

54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)

56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)

59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)

61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்

63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)

65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)

67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)



இதர வகையினர்

மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்பட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட கையேடு (நாள்: 30-10-2006)

Read more »

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: தமிழகத்தில் இன்று தொடக்கம்

               தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது. தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் 45 நாள்களுக்கு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.

              கணக்கெடுப்பு பணி முடிவடையும்போது ஒவ்வொருவருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும்.2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே மாதம் வரை, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகம் உள்பட எஞ்சியுள்ள மாநிலங்களில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி, ஜூலை 15-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. கணக்கெடுக்கும் பணியில் 25 லட்சம் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

என்னென்ன தகவல்கள்... 

               இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.ஒவ்வொரு வீட்டின் அமைப்பு (குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா), வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, மணமான தம்பதிகள் எத்தனை பேர் உள்ளனர்? வீட்டில் மின் இணைப்பு உள்ளதா? குடிநீர் இணைப்பு உள்ளதா? கழிவுநீர் வசதி உள்ளதா? எரிவாயு இணைப்பு உள்ளதா? உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளதா? செல்பேசி மற்றும் லேண்ட்லைன் போன் உள்ளதா? சைக்கிள், மோட்டார் வாகனம் அல்லது கார் உள்ளதா? வங்கிக் கணக்கு உள்ளதா? தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி என்ன? இந்தியரா அல்லது வெளிநாட்டவரா? உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும். இதற்கு ஒப்புகைச் சீட்டு ஒன்றும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

                ஒவ்வொரு குடும்பமும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வரும் பணியாளர்களிடம், தகவல்களை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தத் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும். சிறப்பு முகாம்: இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படமும், கைரேகை பதிவும் எடுக்கப்படும். இந்த முகாமுக்கு வரும்போது இப்போது அளிக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மக்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.இந்த முகாமுக்குப் பின் ஒவ்வொருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

1.50 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் குவிந்தன

               தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர 1.50 லட்சம்  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம்  கடைசி நாளான திங்கள்கிழமை (மே 31) மட்டும் 30 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்தனர்.

               இவர்களில் 12 ஆயிரம் பேர் நேரடியாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக சிறப்புக் கவுன்ட்டர்களில் விண்ணப்பத்தை கொடுத்தனர். மாணவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை (மே 31) இரவு 8 மணி வரை சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதமாக வந்தாலும், மே 31-ம் தேதி அஞ்சல் முத்திரை இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

1.72 லட்சம் பி.இ. இடங்களுக்கு...: 

                 அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ட்ட அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 445 பி.இ. இடங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

ஜூன் 18-ல் ரேங்க் பட்டியல்: 

                கடந்த மே 3-ம் தேதி முதல் பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் ஜூன் 15-ம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும். வரும் ஜூன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 28-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

Read more »

18,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் குவிந்தன

                 தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 
 
                    கடந்த ஆண்டு மொத்தம் 14 ஆயிரத்து 321 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்தனர். முதல்முறையாக இந்த ஆண்டு அதிகபட்சமாக 18 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தை அளிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி நாளான திங்கள்கிழமை (மே 31) மட்டும் 3,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்தது. 
 
                 சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கும் நேரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து அங்கு வைத்திருந்த பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை போட்டனர்.சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 348 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள்-சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 17-ம் தேதி முதல் தொடங்கியது.
 
                இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு 25,000 விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அச்சடித்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் மொத்தம் 20,100 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 30) மாலை வரை மொத்தம் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்தன.மே 31-ம் தேதியிட்ட அஞ்சல் முத்திரையுடன் தாமதமாக வரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
 
ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்: 
 
                       எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 9-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. வரும் 11-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 21-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

Read more »

எம்.பி.பி.எஸ்., பி.இ. விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா? இணையதளத்தில் உறுதி செய்துகொள்ளலாம்



                எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா என்பதை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்:

                           எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதை www.tnhealth.org  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இணையதளத்தில் பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்பம் கிடைத்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் கிடைத்ததற்கான ஏ.ஆர். பதிவு எண்ணையும் விண்ணப்பதாரர் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ள முடியும்.

பி.இ. விண்ணப்பம்

             பி.இ. படிப்பில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை www.annauniv.edu  இணையதளம்  மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

Read more »

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு புதிய நடைமுறை: விவசாயிகள் கோரிக்கை

கடலூர்:

            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு வேளாண்துறை புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: 

                கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் ஆண்டுதோறும், தென்மேற்குப் பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் அளவைக் கொண்டு, 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் முதல் 5 மாதங்கள் சம்பா நெல் சாகுபடியும், அதைத் தொடர்ந்து 3 மாதங்கள் ஊடுபயிராக உளுந்து சாகுபடியும் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்பாராத கனமழை, காலம் கடந்து மேட்டூர் அணை திறப்பு, போதிய தரமான விதை கிடைக்காத நிலை போன்ற காரணங்களால்  உளுந்து சாகுபடி திருப்திகரமாக இல்லை. உளுந்து சாகுபடி வருவாய் இல்லாததால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், மாநிலத்தில் குறைந்து வரும் பயிர் வகைகள் சாகுபடியை அதிகரிக்கவும், புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். சம்பா சாகுபடி முடிந்ததும், இயந்திரங்களைக் கொண்டு அறுவடை முடிந்தபின், ஊடுபயிராக உளுந்து சாகுபடி சாத்தியமற்றதாக உள்ளது. எனவே நேரடி உளுந்து சாகுபடி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இதுபற்றி விவசாயிகளின் கோரிக்கையை, மாவட்ட ஆட்சியர் வரவேற்று ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார். தேவைப்படும் தண்ணீரை வழங்க பொதுப்பணித்துறை தயாராக உள்ளது. எனவே டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கான புதிய நடைமுறையை உருவாக்க, ஆட்சியர் தலைமையில், கோவை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆடுதுறை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் புதிய நடைமுறையை உருவாக்க மாவட்ட ஆட்சியர் உதவிசெய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Read more »

எறையூரில் தேர்த் திருவிழாவை நடத்திய காவல்துறையினர்

உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் நடைபெற்ற புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்.
உளுந்தூர்பேட்டை:

           உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் உயர் நீதிமன்ற ஆணையின்படி மிகுந்த சர்ச்சைக்கிடையே தேர் திருவிழாவை காவல்துறையினர் நடத்தினர். உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் புனித ஜெபமாலை அன்னை தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தேரோட்டம் தலித் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிவரை சென்றுவர வேண்டும், அவர்களையும் திருவிழாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ்.சிவஞானம், டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது.அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேரோட்டம் நடைபெற்றது. அமைதிக்குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டாலும் அவர்களிடையே ஒற்றுமை நிலவுவதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நான்கு தேர்கள் செல்லவேண்டிய வீதியில் 2 சிறிய தேர்களே வீதியுலா சென்றன.ஒவ்வொரு ஆண்டும் தேர்களை ஊர் பொதுமக்களை தூக்கிச் செல்வர். ஆனால் இந்த ஆண்டு இரு பிரிவினரும் சேர்ந்து திருவிழா நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேர்களை தூக்கி செல்வதற்கு ஊர் மக்கள் இரு தரப்பினரில் யாரும் முன் வரவில்லை. அதனால் காவல்துறையினரே தேரை தூக்கிச் செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். தேர்கள் முறையான பாதையில் செல்லாததால் இரு தரப்பு மக்களிடையே இரவு முழுவதும் பரப்பரப்பான சூழ்நிலை நிலவியது. இரு பிரிவினருக்கிடையே பதற்றம் நிலவியதால் விடிய விடிய பவனி வரவேண்டிய தேரை காவல்துறையினர் விரைந்து முடித்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். இவ்விழாவுக்கு மாவட்ட எஸ்.பி. பகலவன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி. மார்ட்டீன், டி.எஸ்.பி.க்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

சூறைக்காற்று: 30 ஏக்கர் வாழை நாசம்

விஜயமாநகரம் கிராமத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்.
விருத்தாசலம்:

            விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழைபெய்தது. இதில் சுமார் 30 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. காற்றில் விழுந்த மரங்கள் வாழைத்தார் முற்றிய நிலையில் இருந்தன. மேலும் மரங்கள் குலையுடன் ஒடிந்து விழுந்ததால் சுமார் ரூ. 20 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

தாழ்த்தப்பட்டோர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்ததாக புகார்


மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
கடலூர்:

             தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அமைத்துக் கொடுத்த சாலையை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். 

அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு:

             சிதம்பரம் வட்டம் திட்டுக்காட்டூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்ல நீண்டகாலமாகப் பாதை இல்லாமல் இருந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று  மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அங்கு அவர்களுக்குச் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தனிநபர்கள் சிலர் இப்பாதையை சட்ட விரோமாக ஆக்கிரமித்து விட்டனர். இதனால் சாதிய மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்று, இப்பகுதி மக்களுக்கு வீடு கட்டித்தர இருக்கும் திட்டமும் இதனால் தடைபட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இல்லையேல் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Read more »

துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டிய செல்ஃபோன் நிறுவனத்தினர்

கடலூர்:

               செல்ஃபோன் நிறுவனத்தினர் துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் நுழைந்து மிரட்டிய சம்பவம், கடலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

               தனியார் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் வீடுகளில், அந்த வங்கியின் ஊழியர்களே புகுந்து மிரட்டும் சட்டவிரோதச் செயல், ஏற்கெனவே தமிழகத்தில் நடந்துள்ளது. அத்தகைய தனியார் வங்கி ஊழியர்கள் வரிசையில் தற்போது, தனியார் செல்ஃபோன் நிறுவனத்தினரும் சேர்ந்துள்ளனர்.கடலூர் செம்மண்டலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறை வாகனங்களைப்போல், புழுதியைக் கிளப்பியவாறு 3 வாகனங்கள் வேகமாகப் பாய்ந்து வந்தன. வாகனங்களில் இருந்து இறங்கிய சுமார் 20 பேர், செல்ஃபோன் மெகானிக் திருமாறன் வீடு எங்கே என்று அதிகாரத் தோரணையில், பரபரப்புடன் கேட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது. அந்தக் கும்பல் ஒரு வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனையில் ஈடுபட்டது.அந்த வீட்டில் இருந்தவர்கள் திருமாறன் யார் என்று தெரியாது நீங்கள் யார் என்று பதற்றத்துடன் கேட்டனர்.  திருட்டுப் பொருள்கள் இருக்கிறதா என்று சோதனையிட வந்து இருக்கிறோம் என்று அவர்கள் பதில் அளித்தனர். 

                 அங்கிருந்து வெளியேறிய அக்கும்பல், மற்றொரு வீட்டுக்குள் நுழைந்தது. திருமாறன் வீடு இதுதானா என்று வினவியபடியே, வீட்டைச் சோதனையிட முயன்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவர்கள் காவல்துறையினர் அல்ல என்று தெரிந்த பொதுமக்கள், கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸôர் விரைந்து வந்து, அந்தக் கும்பலை சுற்றி வளைத்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.அவர்களை விசாரித்ததில் அனைவரும் தனியார் செல்ஃபோன் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என்று தெரிய வந்தது. அந்த நிறுவனத்தில் செல்ஃபோன் சாதனங்கள் சில திருட்டுப் போய்விட்டதாகவும், நிறுவனத்தில் பணியாற்றிய திருமாறன்தான் அவற்றைத் திருடிச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நேரடியாக அவரது வீட்டைத் தேடியிருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. பொருள்கள் திருட்டு போனால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய அனுமதியின் பேரில்தான், எந்த வீட்டிலும் சோதனையிட முடியும். அதைவிடுத்து சட்டத்தைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டு, பொதுமக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய போலீஸôர், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.

Read more »

குடிநீர் தட்டுப்பாட்டால் சிதம்பரம் மேற்குப் பகுதி மக்கள் பாதிப்பு: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

சிதம்பரம்:

              குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் சிதம்பரம் மேற்கு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

                சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ ஆணையர் ​(பொறுப்பு)​ மாரியப்பன் முன்னிலை வகித்தார்.​ 

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

 அப்பு சந்திரசேகரன் ​(திமுக):​ 

                   நகரின் கிழக்கு பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இருவேளையும் குடிநீர் வழங்கப்படுகிறது.​ ஆனால் வக்காரமாரி குடிநீர் திட்டம் மூலம் நகர மேற்கு பகுதியில் ஒருவேளைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.​ அதுவும் சுமார் 20 நிமிடங்கள்தான் வருகிறது.​ அந்தக் குடிநீர் பச்சை நிறத்தில் மாசு படிந்து சுகாதாரமற்ற வகையில் வழங்கப்படுகிறது.​ அதற்கு காரணம் மேலவீதி நீர்தேக்கத் தொட்டியில் சரியாக நீரை தேக்கி வைத்து சுத்தப்படுத்தி வழங்குவதில்லை.​ அதிகாரிகளின் அலட்சிப்போக்கே இதற்கு காரணம்.

நகர்மன்றத் தலைவர்:​ 

           இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜேம்ஸ் விஜயராகன் ​(திமுக):​ 

               நகரில் மக்கள்தொகை ​ அதிகரித்துள்ளது.​ மேலும் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் நகரின் வெளிப்புறம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

நகர்மன்றத் தலைவர்:​ 

                அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.ரா.வெங்கடேசன் ​(திமுக):​ அமைச்சர் கோவிந்தசாமி தெருவில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டி பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.​ இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆணையர்:​ 

               அத் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.​ உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாலம் அமைக்கப்படும்.

முகமது ஜியாவுதீன் ​(காங்கிரஸ்):​ 

                 நகரில் அனைத்து கைப்பம்புகளும் பழுதடைந்துள்ளதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர்.​ நகரில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள்ளது.​ எனவே நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.​ 4 வீதிகளிலும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.​ உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.​ மின்நகர் பூங்கா பராமரிப்பின்றி ரெüடிகளின் கூடாரமாகத் திகழ்கிறது.​ எனவே அப் பூங்காவை சீரமைக்க வேண்டும்.

ஆ.ரமேஷ் ​(பாமக):​ 

               புதிய பாதாள சாக்கடை திட்டம்,​​ ​ குடிநீர் திட்டம் செயல்படுத்தப்போவதாக கூறி நகரில் எந்த சாலைகளும் போடவில்லை.​ இன்னும் ஒரு ஆண்டுதான் பாக்கி இருக்கிறது.​ உடனே சாலைகள் அமைத்து தர வேண்டும்.​ பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான நிதியிலிருந்து பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை.​ போட்ட சாலைக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​ 2000-ம் ஆண்டு போடப்பட்ட திரௌபதி அம்மன் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.

Read more »

பலாப்பழம் வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சி



தோட்​டத்​தில் கொட்​டப்​பட்​டுள்ள பழுத்து, அழு​கிய பலாப்​ப​ழங்​கள்.

பண்ருட்டி:

                 பலாப்பழம் அறுவடை மும்முரம் அடைந்து வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.​ இதனால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழம் ஒன்று ரூ.40 முதல் 100 வரை விற்பனையாவதால் விவசாயிகளும்,​​ வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி.​ 

                பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள ​ முந்திரி காடுகளுக்கு இடையேயும்,​​ வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் மிகுந்த சுவை கொண்டது.​ இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவர்,​​ பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள வியாபாரிகள் பலாப்பழத்தை விவசாயிகளிடம் இருந்து பெற்று தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள வியாபாரிகளுக்கு டன் கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.பருவநிலை மாற்றத்தினால் இம்முறை பலா மரங்கள் காலதாமதமாக காய்ப்பெடுத்தாலும்,​​ மகசூல் பாதிக்கப்படவில்லை.​ தற்போது அறுவடை சீசன் உச்சகட்டத்தில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.​ இதனால் விவசாயிகளும்,​​ கமிஷன் மண்டி வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி -​ கும்பகோணம் சாலையில் பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:

                விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று கமிஷன் அடிப்படையில் விற்று கொடுத்து வருகிறோம்.​ பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும்,​​ மும்பை,​​ பெங்களூர்,​​ ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கிறோம்.தற்போது அறுவடை சீசன் உச்ச நிலையில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது.​ ஒரு சில வாரத்துக்கு முன் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விலை போன ​ ஒரு டன் பலாப்பழம் தற்போது ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரைதான் விலை போகிறது.விற்பனைக்காக அனுப்பியது போக எஞ்சிய பழுத்த,​​ அழுகிய பலாப்பழங்களை குப்பையில் கொட்டி வருகிறோம்.​ இதனால் விவசாயிகளும்,​​ வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளோம் என்றார் அவர்.

Read more »

டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: விவசாயிகள் கடும் அதிருப்தி

கடலூர்:

                 கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில்,​​ ரூ.2.5 கோடியில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​ திருப்திகரமாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

                 காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​ இந்த ஆண்டு ரு.​ 12 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.​ இதில் கடலூர் மாவட்டத்தில்,​​ 56 பாசன வாய்க்கால்கள் மராமத்துப் பணிக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.​ அணைக்கரை உள்கோட்டத்தில் 26 பணிகளும்,​​ சிதம்பரம் உள்கோட்டத்தில் 30 பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.​ ​தூர்வாரும் பணியை இயந்திரம் மூலம் செய்தால் கன மீட்டருக்கு ரூ.32.60-ம்,​​ ஆட்களைக் கொண்டு செய்தால் கன மீட்டருக்கு ரூ.26.80-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இயந்திரங்களைக் கொண்டே பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.​ ​

                 பதிவேடுகளில் உள்ளபடி ​ சர்வேயர் மூலம் அளந்து,​​ கல் போட்டு,​​ ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று,​​ ஆண்டுதோறும் தெரிவிக்கப்படும் கோரிக்கை,​​ இந்த ஆண்டும் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் படுகை மட்டத்தை அளந்து,​​ அதற்கு ஏற்ப திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். படுகை மட்டத்தை கணக்கிடாமல் தூர்வாருவதால் வாய்க்கால்கள் அனைத்தும் பள்ளமாகி,​​ வயல்களுக்குள் தண்ணீர் பாய்வதில் சிரமம் ஏற்படுவதாந்வும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இப்பணிகளைக் கண்காணிக்க,​​ ஒவ்வொரு வாய்க்கால்களுக்கும் தனித்தனியே விவசாயிகள் கண்காணிப்புக் குழு ​(2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது போல்)​ அமைக்க வேண்டும் என்று விவசாயிகள்,​​ மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்திலும்,​​ பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர்.​ 

                 ​எனினும் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு,​​ திருப்தியற்ற நிலையில்,​​ பணிகள் நடைபெற்று வருவதாக,​​ விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.மேலும் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்து உள்ளன.​ மேட்டூர் அணையில் தண்ணீர் திருப்திகரமாக இருப்பதால்,​​ ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்பட்டால்,​​ வாய்க்கால்களில் தண்ணீர் ஓடி,​​ தூர்வாரும் பணி தடைபட்டு,​​ ஏனோ தானோவென்று மேற்கொள்ளப்பட்டு,​​ பணம் மட்டும் பட்டுவாடா செய்யப்படும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.இப்போதாவது...

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,​​ 

                 வாய்க்கால்களை அளந்து,​​ கல்போட்டு,​​ ஆக்கிரமிப்புகளை அகற்றி,​​ படுகை மட்டத்துக்கு ஏற்ப,​​ தூர்வாரவேண்டும் என்று கோரினோம்.​ ஒவ்வொரு வாய்க்காலுக்கும் விவசாயிகள் கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம்.​ ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.​  கண்காணிப்புக் குழுக்களுக்கு விவசாயிகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு,​​ பரிந்துரைக்கப்பட்டும் இருந்தது.​ ஆனால் உயர்மட்டத் தலையீடு காரணமாக,​​ அந்த கோப்பு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.​ 20 சதம் பணிகள்தான் முடிந்து உள்ளன.​ இப்போதாவது எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

பணம் மட்டும்...

கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில்,​​ 

                   பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில்,​​ விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.​ வாய்க்கால்கள் பல ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.​ வாய்க்காலுக்கு 3 விவசாயிகள் கொண்ட கண்காணிப்புக் குழு பரிந்துரைக்கப்பட்டும்,​​ நடைமுறைப்படுத்தவில்லை.​ சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் நீர் நிரப்பி உள்ளதால்,​​ அனைத்து வாய்க்கால்களிலும் நீர் கசிந்து,​​ தூர்வார முடியாத நிலை உள்ளது.​ ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளது.​ அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டால்,​​ தூர்வாரும் பணி முறையாக நடைபெறாமல்,​​ பணம் மட்டும் பட்டுவாடா ஆகும் நிலை உள்ளது என்றார். 

முன்னுதாரணம் இல்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்டதற்கு,​​ 

                தூர்வாரும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.​ விவசாயிகள் கோரிக்கைப்படி,​​ கண்காணிப்புக்குழு அமைக்க முன்னுதாரணம் இல்லை.​ எனவே அமைக்கவில்லை.​ 56 பணிகளில் 30 பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.​ அதில் 50 சதவீதம் வேலை முடிந்துவிட்டது.​ மேட்டூர் அணை ஜூலை இறுதியில்தான் திறக்க வாய்ப்பு உள்ளது.​ அதற்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிடும் என்றார்.

Read more »

Emergency ward in Cuddalore hospital gets a facelift

 
Refurbished:Collector P. Seetharaman inaugurating the renovated emergency ward in the Cuddalore Headquarters Government Hospital on Monday.


CUDDALORE: 

            Collector P. Seetharaman inaugurated the renovated emergency ward in the Cuddalore headquarters government hospital on Monday. The ward was redone with new flooring, windows, electrical fittings and life-saving oxygen and glucose connections at a cost of Rs.6 lakh. The Collector told the reporters that when he visited the hospital recently the emergency ward was in such a condition that would not instil confidence among the patients. Therefore, he directed the Executive Engineer of the Public Works Department (Buildings) K. Manoharan to take up the renovation works and based on the blueprint he had sanctioned a sum of Rs.6 lakh.

                The Collector further said that the emergency ward should be neat and clean so as to create a feeling among the patients that they were in a safe place. He noted that in the 25-bedded wing the emergency cases would be classified into three categories —critical, less critical and those who need regular attention —and accordingly treated. The X-Ray section, a dark room and a diagnostic section in the wing were also given a facelift so as to make it on par with the private hospitals. A specially designed toilet facility for the sake of the differently-abled persons too had been put up.

Air-conditioning:

                 The Chemplast Sanmar had donated three air-conditioning units to the emergency ward for which the Collector thanked the company. Those who participated on the occasion included District Revenue Officer S. Natarajan, Joint Director (Health) Jaya Veerakumar, Hospital Superintendent Paranjothi, Deputy Superintendent of Police S.S. Maheswaran, Resident Medical Officer Govindaraj and Chemplast Sanmar Chief Executive Officer Mohan.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior