உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

நெய்வேலியின் மடியில் இருட்டு கிராமங்கள்! வெட்கப்பட வைக்கும் நிஜம்





                    மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி.) அருகில் ‘பிளாக்’ என்ற பெயரில் பல குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 21 மற்றும் 30 ஆகிய பிளாக்குகளில் வசிக்கும் பத்தாயிரம் குடும்பங்களின் பல ஆண்டு கனவே மின்சாரம்தான். எங்கள் நிலைமையை ‘தமிழக அரசியல்’ மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுங்களேன். எங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்கட்டும்’’













           தொலைபேசியில் இப்படி நமக்கு வேண்டுகோள் வைத்தார் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் பழனிமுருகன்.

               திருநெல்வேலிக்கே அல்வா என்பதைப் போல மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலியின் மடியிலேயே இருட்டு கிராமங்களா? என்ற ஆச்சர்யத்துடன் 21, 30-ம் பிளாக்குகளுக்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவு வாயிலில் வீட்டு வாசலில் லாந்தர் விளக்குக்கு, எண்ணெய் ஊற்றி திரி போட்டுக் கொண்டிருந்த மீனாவிடம் பேசினோம். ‘‘ரெண்டு தலைமுறையாக இங்கதான் இருக்கோம். எங்க கிராம மக்கள் என்.எல்.சி.யிலதான் வேலை செய்யுறாங்க. கூடை பின்னி, கீரை வித்தும் பொழைப்பு ஓடுது. எட்டிப் பாக்குற தூரத்துல என்.எல்.சி. இருந்தும் நாங்க சுமார் 50 வருஷமா இருட்டுதலதான் இருக்கோம். 21, 30 பிளாக் கிராமங்கள்ல மின்சார வசதியே கிடையாது. புள்ளைங்க படிக்க முடியலை. மத்தவங்க மாதிரி வாழ முடியலை. கரன்ட் மட்டுமில்ல வசிக்க நல்ல குடிசை, குடிநீர் எதுவுமே இல்லை.

                மின் இணைப்பு கேட்டு பல முறை என்.எல்.சி.கிட்ட மனு கொடுத்துட்டோம். ஆனா, ஒரு சில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு அப்ளிகேஷன் கொடுத்தாங்க. அதுக்கும் தரை வாடகை வருசத்துக்கு 75 ஆயிரம் கட்டணுமாம். மின்சார இணைப்புக்கு 6 ஆயிரம் ரூபா கட்டணுமாம். ஏன்னு கேட்டால், ‘மத்திய அரசுக்கு சொந்தமான இடம்’னு சொல்லி அலைக்கழிக்கிறாங்க. இங்க உற்பத்தியாகும் மின்சாரம் பக்கத்து மாநிலத்துக்கெல்லாம் போகுதாம். ஆனா, இதோ இங்க இருக்குற எங்க கிராமத்துக்கு வராதா சார்?’’ என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் மீனா.

                நாம் விசாரிப்பதைப் பார்த்து நம்மைத் தேடி வந்த கடைக்காரர் தனபால், ‘‘என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறவர்கள் தங்கியுள்ள இடத்துக்கே மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள். இங்கே ஒரு கடை வைப்பதற்கு கூட லைசன்ஸ் வாங்க வேண்டிய நிலைமை. மாத வாடகை 600 ரூபாய் வாங்குகிறார்கள். காலை 6 மணிக்கு கடை திறந்தால் மாலை 6 மணி வரைதான் வியாபாரம் செய்ய முடிகிறது. இருட்டிய பிறகு வியாபாரம் செய்தாலும் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. இந்த சமயத்தில் கிழிந்த நோட்டையெல்லாம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வியாபாரம் செய்ய-முடியவில்லை, இப்படி இருந்தால் எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது?’’ என்ற ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.













               இந்த பிரச்னை குறித்து நமக்கு தகவல் தந்த இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் வெ.பழனிமுருகனிடம் பேசினோம்,

              ‘‘நெய்வேலி நகரத்துக்கு உட்பட்ட 21, 30 பிளாக்கில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பத்தாயிரம் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்கவேண்டுமென்று பல முறை ஆர்ப்பாட்டமும். போராட்டமும் செய்து பார்த்து விட்டோம், ஆனாலும் என்.எல்.சி. நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. மத்திய அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான் குடியிருந்து வருகிறார்கள், நிரந்தரமாக மின் வசதி செய்து கொடுத்தால் அனுபவித்து வரும் இடங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகி விடும் என்று கருதுகிறது என்.எல்.சி. நிறுவனம். அதனால்தான் மின்வசதி மட்டும் அல்லாமல் அவர்களுக்கு பிற அடிப்படை வசதிகளும் செய்து தர மறுக்கிறார்கள்.

 






 


               பல முறை மாவட்ட ஆட்சியர் அலு-வலகத்-துக்கு சென்று எங்கள் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முயன்றோம். நாங்கள் போராடும்போதெல்லாம் அவர், ‘இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு என்.எல்.சி. நிறுவனத்துக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்றுதான் கூறிவருகிறாரே தவிர, இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இல்லையேல்... அனைத்து மக்களையும் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்’’ என்றார் கோபமாக.

                இந்த விவகாரம் குறித்து என்.எல்.சி. தலைவர் அன்சாரியிடம் பேசினோம். ‘‘ இதுபற்றி நகர முதன்மை மேலாளாரிடம் கேளுங்கள்’’ என்றார்.

                
 
 
 
 
 
 
 
               இதையடுத்து பழுப்பு நிலக்கரி நகர முதன்மை மேலாளர் செந்தமிழ்ச்செல்வனை பலமுறைத் தொடர்பு கொண்டும், ‘நான் ரொம்ப பிசி. அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு அப்புறமா வாருங்கள்’ என சொல்லிவிட்டார். இந்த விவகாரம் பற்றி கடலூர் கலெக்டர் சீத்தாராமனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். செம்மொழி மாநாடு, திங்கள் குறை தீர்ப்பு கூட்டம் என பிசியாக இருப்பதாக சொன்னார்கள்.

                   இதே நேரம் என்.எல்.சி. அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘என்.எல்.சி. மத்திய அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. என்.எல்.சி.யில் பணிபுரியும் நிறையபேர் 21, 30 பிளாக்கில்தான் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க நாங்கள் முன் வந்தாலும் அதை முழுமையாக அவர்களுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை. மின்கம்பத்தில் லைன் போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துகிறார்கள். அதனால் பக்கத்து ட்ரான்ஸ்பாமர் அடிக்கடி வெடிக்கிறது. அதனால்தான் அந்தப் பகுதிக்கு சரிவர மின் வசதி செய்து தரமுடியவில்லை’’ என்கிறார்கள்.

                  ஒருசிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு-மொத்தமாக அனைவரையும் இருட்டில் தள்ளுவதை நியாயப்படுத்த முடியாது. சுற்றிலும் வெளிச்சம் தரும் விளக்கின் அடியில் இருள் கவ்வியிருப்பதைப் போல ஊருக்கே மின்சாரம் தரும் நெய்வேலியில் மின்சாரம் இல்லை என்றால்... இது வெளிச்சம் தரும் விவகாரம் மட்டுமல்ல, என்.எல்.சி.க்கு வெட்கம் தரும் விவகாரமும் கூட!


Source: http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1462&rid=74

Read more »

ஸ்பெயின் "உலக சாம்பியன்'* பலித்தது "ஆக்டோபஸ்' கணிப்பு* மீண்டும் வீழ்ந்தது நெதர்லாந்து



 ஜோகனஸ்பர்க்: 


               உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்துள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.

                  தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர்லாந்தை(4வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.



ஸ்பெயின் ஆதிக்கம்: 

                 துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார். 



                    பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.


                   இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந்தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன்னான வாய்ப்பு வீணானது. 



டேவிட் ஏமாற்றம்: 

              இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.


எங்கே ஸ்னைடர்: 

              ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார். இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 


"ரெட் கார்டு' சோகம்:

                இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.


ஸ்பெயின் கோல்: 

               ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.



ரூ. 142 கோடி பரிசு


              உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.


முரட்டு ஆட்டம்


                         நேற்று இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடியதால் "எல்லோ கார்டு' மயமாக இருந்தது. இதில் இரு முறை "எல்லோ கார்டு' பெற்ற நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' சோகத்தை சந்தித்தார். நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் "எல்லோ கார்டு' பெற்றனர்.

Read more »

அ.தி.மு.க.,வுக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி


          


                 தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு போன்றவை பாராட்டும் போது, இங்குள்ள எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன' என்று சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:


        பொதுமக்களிடம் செல்வாக்கை இழந்துள்ள ஜெயலலிதா, மக்களின் கவனத்தை திசை திருப்ப, சின்ன, சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் நாளுக்கொரு போராட்ட அறிவிப்பு வெளியிட்டு, அவரது கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து அ.தி.மு.க.,வினரால் கடந்த 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


                சென்னை அரசு மருத்துவமனையில் இருந்த பழைய மருத்துவமனை கட்டடத்தை இடித்து, அந்த இடத்தில் ஹட்கோ உதவியுடன் புதிய அடுக்கு மாடி மருத்துவமனை தி.மு.க., ஆட்சியில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றத்தால் இதை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த உண்மை கூட தெரியாமல் அவரது தலைவி மருத்துவமனையை கட்டியதாக சேகர்பாபு பேசியுள்ளார்.


                பேஸ்மேக்கர் கருவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, இம்மருத்துவமனையில் எந்தவித தடங்களும் இன்றி பொருத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நோயாளியும் இறக்க வில்லை. இம்மருத்துமனையில் மருந்து வாங்குவதில், 100 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாகவும் உண்மைக்கு மாறாக அவர் பேசியுள்ளார்.


               தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள் பாராட்டும் குழ்நிலையில், இங்கே இருக்கிற எதிர்க்கட்சிகள் மட்டும் குற்றச்சாட்டு கூறுவது உள்நோக்கம் கொண்டது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more »

"மின்வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வேண்டும்'

கடலூர்:

              மின் வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மின்வாரிய கணக்கீட்டாளர் மற்றும் பணம் வசூலிப்போர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மத்திய பேரவைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

            மின்வாரியத்தில் பொதுமக்கள் கட்டணம் செலுத்த தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் தரமானதாக இல்லை. பல நேரங்களில் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பொது மக்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே மின் வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வழங்க வேண்டும். கணக்கீட்டாளர் பதவியில் இருந்து கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கும்போது, கணக்கியல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                        புதிய நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத் தலைவராக பா.சுகுமார், மாநிலப் பொதுச் செயலாளராக கடலூர் இராம.சனார்த்தனன், பொருளாளராக பூமிநாதன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப் பட்டனர். கூட்டத்துக்கு மூ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மு.அரங்கநாதன் வரவேற்றார். புதிய பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் சிறப்புரை நிகழ்த்தினார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடலூர் வட்டப் பொருளாளர் துரியானந்தன் நன்றி கூறினார்.

Read more »

5 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி- சி15


ஸ்ரீஹரிகோட்டா:
 
             இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.51 மணி நேர கவுண்ட் டவுன் முடிந்ததும் 44.4 மீட்டர் உயரமுடைய, 260 கோடி மதிப்பிலான பிஎஸ்எல்வி சி-15 சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.  
 
                திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டனர். பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 17-வது ராக்கெட்டாக, இந்த பிஎஸ்எல்வி - சி15 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. 694 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2பி என்ற அதிநவீன தொலையுணர்வு செயற்கைக்கோள் மற்றும் 4 சிறிய செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு துருவ வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 
 
               கார்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செயற்கைக்கோள் எடுக்கும் படங்களை கொண்டு கிராமங்களில் உள்ள வளங்களை மதிப்பிடவும்,  விரிவான நகர்ப்புற உள்கட்டமைப்பு பணிகளை திட்டமிடவும், போக்குவரத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.வனப் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கவும், மரங்களை கணக்கிடவும், ஊரகப் பகுதிகளில் சாலைகளை அமைக்கவும், கால்வாய் பணிகளுக்கும், கடலோரத்தில் உள்ள நிலங்களை பயன்படுத்தவும், சதுப்பு நிலக் காடுகளின் வரைபடம் தயாரிக்கவும், சுரங்கப் பணிகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் பயன்படும். கார்டோசாட்-2 பி செயற்கைக்கோள் தவிர அல்ஜீரிய நாட்டின் அல்சாட்-2ஏ, கனடாவின் டொரன்டா பல்கலைக்கழகத்தின் நானோ ரக செயற்கைக்கோள், 1 கிலோ எடை கொண்ட ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் டிசாட்-1 என்ற செயற்கைக்கோள், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டுட்சாட் என்ற ஒரு கிலோவுக்கு குறைவான எடையுள்ள செயற்கைகோள் ஆகியவையும் விண்ணில் ஏவப்பட்டன.

Read more »

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஆயுர்வேத மருத்துவ படிப்பு

             பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்வதற்காக 7.5 ஆண்டுகால ஆயுர்வேத மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுர்வேதத் துறையின் ஆலோசகர் எஸ்.கே.சர்மா கூறினார். கோவை- ராமநாதபுரம் ஆயுர்வேதிக் பார்மஸி நிறுவனத்தில் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சர்மா பேசியது:

                நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம் சிறந்த வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஆயுர்வேதம் குறித்த ஆராய்ச்சிகளும் மேம்பட வேண்டும். இந்தியாவில் சில நிறுவனங்கள்தான் ஆயுர்வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தயாராக உள்ளது. மற்ற மருத்துவ முறைகளுடன் ஒப்பிடுகையில், ஆயுர்வேத ஆராய்ச்சி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை அறிந்துகொண்ட வெளிநாட்டு மருத்துவர்கள், இந்த மருத்துவ முறை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆயுர்வேத ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

             முன்னைக் காட்டிலும் ஏராளமான மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவப் படிப்பைக் கற்க முன்வருகின்றனர். தற்போது பிளஸ் 2 முடித்த பிறகு, 5.5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்ந்து மாணவர்கள் பயில்கின்றனர். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை நேரடியாக ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு தாவரவியல், வேதியியல், மூலிகைத் தாவரங்கள், சமஸ்கிருதம் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும். அதன் பிறகு, அவர்கள் 5.5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விவரங்களையும், நோய் மற்றும் குணமடையும் வேகம் தொடர்பான தகவல்களையும் மருத்துவர்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும். இத்தகைய தகவல்கள் ஆயுர்வேத ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும், என்றார் சர்மா.

Read more »

எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்: நடிகர் நாசர்


தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நெய்வேலியில் சனிக்கிழமை நடந்த புத்தகக் கண்காட்சி
 
 
நெய்வேலி:
 
           "நான் ஒரு நடிகன்' என்ற அடையாளத்தின் காரணமாக நெய்வேலிக்கு வரவில்லை. புத்தகம் என்ற வார்த்தைக்காகத்தான் நெய்வேலி வந்தேன். ஏனென்றால் எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்தான் என்று நெய்வேலியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி விழாவில் நடிகர் நாசர் பேசினார்.
 
             நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் ஜூலை 9 முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.இப்புத்தகக் கண்காட்சியின் 2-ம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் நாசர், தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் முதல்பரிசு (ரூ.15 ஆயிரம்) பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.சுப்புராஜ், 2-ம் பரிசு(ரூ.10 ஆயிரம்) பெற்ற பொன்.சுதா, 3-ம் பரிசு(ரூ.5 ஆயிரம்) பெற்ற செங்கோடன்.மோகன் ஆகியோருக்கு பரிசுத் தொகையையும் சான்றிதழையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து சிறப்புப் பரிசு( ரூ.ஆயிரம்) பெற்ற சி.விஜயன் (கதைக் கருவுக்காக), பிரியன்(நடிப்பு-ஆண்), கீர்த்தி(நடிப்பு-பெண்), ஆர்.இளையராஜா (ஒளிப்பதிவு),பகவான்( இயக்கம்) உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த படத்தொகுப்புக்கான இயக்குநர் ஏ.பீம்சிங் வழங்கும் முதல்பரிசு (ரூ.1500) எல்.வி.கே.தாஸ், 2-ம் பரிசு (ரூ.1250) பி.காரல்மார்க்ஸ், 3-ம் பரிசு (ரூ.1000) ராம், 4-ம் பரிசு (ரூ.750) எஸ்.கண்ணன், 5-ம் பரிசு (ரூ.500) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
 
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், 
 
              உங்கள் பிள்ளைகளைப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள். புத்தகங்கள் மட்டுமே உண்மையைக் கூறக்கூடியவை. எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்தான்.மேலும் அவை சிந்தனையை தூண்டக் கூடியவை. இன்று ஆயிரமாயிரம் புத்தகங்கள் வந்தாலும் "சந்தோஷமாக இருப்பது எப்படி' என்ற புத்தகங்கள் வெளிவராதது வருத்தமளிக்கிறது.கோடி ரூபாய் கொடுத்தாலும் நெய்வேலி போன்ற இடங்கள் அமைவது அரிது என்றார் நடிகர் நாசர். 

                இதைத் தொடர்ந்து தினமும் எழுத்தாளர்களை  கௌரவிக்கப்படும் வரிசையில் முதல் நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலியைச் சேர்ந்த முனைவர் பா.வளனரசு கெüரவிக்கப்பட்டார்.அருணா பதிப்பகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கெüரவிக்கப்பட்டார். முன்னனி எழுத்தாளர் க.பூபதி எழுதிய "விண்ணைத் தேடும் நிலவு' எனும் நூலை நடிகர் நாசர் வெளியிட முதல் பிரதியை என்எல்சி இயக்குநர் ஆர்.கந்தசாமி பெற்றுக் கொண்டார்.

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அலைமோதும் கூட்டம்


 
நெய்வேலி:
 
             நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களைக் காண வாசகர்களின் கூட்டம் அலை மோதுகிறது. நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது.
 
               இப்புத்தகக் கண்காட்சியைக் காண ஏராளமான வாசகர்கள் வந்தவண்ணம் இருப்பதைக் காணும் போது, புத்தகப் பதிப்பாளர்களின் எதிர்காலம் வலுவான நிலையில் உள்ளது என்று கூறினால் மிகையாகாது.சனிக்கிழமை புத்தகக் கண்காட்சியைக் காண வந்திருந்தோரின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது. சிறிய நகரமான நெய்வேலியில் புத்தகக் கண்காட்சியைக் காண இவ்வளவு கூட்டம் வருவது என்பது சற்று ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்றாலும், புத்தகப் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.புத்தகக் கண்காட்சியை வெறும் காட்சியாக மட்டும் பார்க்காமல் அவற்றில் தங்களுக்குத் தேவையான புத்தகம் எது, என்பதை ஆராய்ந்து அதை வாங்கிச் செல்லும் வாசகர்கள் அதிகம். 
 
              மேலும் இப்புத்தகக் கண்காட்சிக்கு மேலும் மெருகூட்டக் கூடிய அம்சங்களாக, அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும், பதிப்பாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் செய்துதருகின்ற வசதிகளும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால் பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.இதுதவிர புத்தகக் கண்காட்சி அரங்கில் புழுதி ஏற்படாத வண்ணம் சிமென்ட் தரை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் களைப்படையாமல் இருக்க தேநீர் அங்காடிகள், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கக் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள், சுகாதாரத்தை பேணிக்காக்கின்ற வகையில் நடமாடும் கழிப்பறை, அங்காடிகளுக்கு நடுவே இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், அறிவுப் பசிக்குத் தேவையானவற்றை வாங்கிய பிறகு, வயிற்றுப் பசிக்குத் தேவையானவற்றை வாங்கி உண்பதற்கு ஏதுவாக உணவகப்பிரிவு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகக் கண்காட்சியாக இது விளங்குவதால் பார்வையாளர்களின் கூட்டம் அலை மோதாமல் இருக்குமா என்ன?

Read more »

கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?


 
கடலூர்:
 
              மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
              கடலூர் மாவட்டத்தில், விளை நிலங்களை அழித்துத்தான் பெரும்பாலான செங்கல் சூளைகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கத் துறையின் அனுமதி பெற்றுத்தான் செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், கடலூர் மாவட்டத்தில் 40 செங்கல் சூளைகள்தான் சுரங்கத் துறையின் அனுமதி பெற்றவை. 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்துக்குத்தான் மணல் அல்லது சரளைக்கல் போன்றவற்றை எடுக்கலாம் என்பது சுரங்கத்துறையின் விதி. ஆனால் கடலூரில் விதிகளுக்கு மாறாக 15 அடி ஆழம் வரை களிமண், செம்மண், சரளைக்கல் போன்றவற்றை தாராளமாக எடுத்துச் செல்கிறார்கள்.
 
                 இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.செங்கல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் 4 ஆயிரம் செங்கல், லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதன் விளைவாக, 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. தற்போது விலை ரூ.11 ஆயிரம் வரை உள்ளது.  கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், தமிழகத்திலேயே அதிக பட்சமாக 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இவை 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்கிறார்கள். 2.10 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 20 கோடி செங்கற்கள் தேவை என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
             இத்தனை செங்கற்களையும் நான்கே ஆண்டுகளில் தயாரித்து அளிக்க வேண்டுமானால் எத்தனை செங்கல் சூளைகள் அமைக்க வேண்டியது இருக்கும்; அதற்காக எத்தனை விளை நிலங்களை சூளைகளாக மாற்ற வேண்டியது இருக்கும். பயன்பாட்டில் உள்ள சூளை நிலங்களில், இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படாதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அனல் மின் நிலையங்களில் ஏராளமான டன் எரிசாம்பல், கழிவுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டன் எரிசாம்பல் சேமிப்பில் உள்ளது. எரிசாம்பல் காற்றில் கலந்து மனிதனின் உடலுக்குள் புகுந்து சுவாசக் கோளாறுகளுக்கும், காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகி விடுவதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே எரிசாம்பலை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த, செங்கல் தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் எரிசாம்பலைக் கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.
 
                எரிசாம்பல் கலந்த செங்கல்கள் உறுதியானவைதான் என்று தமிழகப் பொதுப்பணித் துறை சான்று அளித்து இருக்கிறது. அதனால் செங்கல் தயாரிப்பில் சிலர் 50 சதவீதம் கூட எரி சாம்பலை கலக்குகிறார்களாம். சிமென்ட் தயாரிப்பிலும் எரிசாம்பல் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளை அதிகரிப்பால் நீராதாரங்கள் பாதிக்கப்படும். சூளையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அனல் அருகில் உள்ள பயிர்களைப் பாதிக்கும். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை பயன்படுத்துவது இல்லை. செங்கல் தேவை திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையில், செங்கல்களுக்கான மண் தேவையை கணிசமாகக் குறைக்கும் வகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை கலக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும்.  என்.எல்.சி. நிறுவனம் எரிசாம்பலை இலவசமாக வழங்க வேண்டும். எளிதாக எடுத்துச் செல்ல பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். 
 
இது குறித்து கடலூர் மாவட்டக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜா கூறுகையில், 
 
                செங்கல் தயாரிப்பில் எரிசாம்பல் கலக்கலாம். ஆனால் சூளை போடுவோர் அதை சரியான விகிதத்தில், முறையாகக் கலக்காததால் நம்பகத் தன்மை இல்லை. எனவே வீடு கட்டுவோரும் ஏற்பது இல்லை. சாம்பலை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அரசு, சட்டமாக வெளியிட வேண்டும் என்றார்.

Read more »

சிதம்பரத்தில் பஸ் நிறுத்தத்திலேயே மதுபானக்கடை: பெண்கள் அதிர்ச்சி


சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையும், அதற்கு முன் பஸ்ஸில் ஏற அச்சத்துடன் நிற்கும் பெண்களும்.
 
சிதம்பரம்:
 
             சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினால் பொதுமக்கள், குறிப்பாக மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சிதம்பரம் மேலவீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் எம்பி ஏ.பொன்னுசாமி மெகா பஸ் நிறுத்தத்தை அமைத்தார். பல்வேறு கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்வது வழக்கம்.
 
              இந்த பஸ் நிறுத்தத்தின் உள்ளே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த மதுபானக்கடையில் குடிக்க வருபவர்கள் மதுபாட்டில்களை வாங்கி அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டிலை உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.  ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். எச்சில் துப்பி சீர்கேட்டை உருவாக்குகின்றனர்.  இதனால் இந்த பஸ் நிலையத்தில் நின்று பஸ் ஏற பெண்கள் பயப்படுகின்றனர்.எனவே பஸ் நிறுத்தத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அக்னிசிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி கட்டுரைப் போட்டி: திருவையாறு மாணவி முதலிடம்


கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றஎன்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சு.அகல்யா.
 
நெய்வேலி:
 
           தினமணி- நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டியில் கல்லூரிப் பிரிவில் தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மாணவி ஆர்.சபிதா முதலிடத்தையும், பள்ளிப் பிரிவில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சு.அகல்யா என்ற மாணவியும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
 
              கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.
 
பரிசு பெற்றோர் விவரம்:
 
கல்லூரிப் பிரிவு: 
 
               முதல் பரிசு (ரூ.2000) ஆர்.சபிதா, கிங்ஸ் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர், 2-ம் பரிசு (ரூ.1500) க.பிரபாகரன், செந்தூரான் தொழில்நுட்பக் கல்லூரி, புலிவலம், 3-ம் பரிசு (ரூ.1000) ஆர்.லட்சுமிபிரியா, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.ஆறுதல் பரிசு பெறுவோர் (தலா ரூ.500): மு.முகமது ஆதில், அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், மதுரை மாவட்டம். ஆர்.தனலட்சுமி, இதயா மகளிர் பொறியியல் கல்லூரி, சின்ன சேலம். பி.தாமஸ் வெனீஸ், சேக்ரட் ஹார்ட் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை. டி.பிரகாஷ், தனலட்சுமி கல்லூரி, காட்டூர், திருச்சி. எ.ராஜ்குமார், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகம், மதுரவாயல், சென்னை.
 
பள்ளிப் பிரிவு: 
 
              முதல் பரிசு (ரூ.2000) சு.அகல்யா, என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி. 2-ம் பரிசு (ரூ.1500) செ.ராதிகா, மத்திய மேல்நிலைப்பள்ளி, ஏ.நாகூர், பொள்ளாச்சி தாலுகா, கோவை மாவட்டம். 3-ம் பரிசு (ரூ.1000) எஸ்.ஃபயாஸ், ஜான்டூவி மெட்ரிக் பள்ளி விழுப்புரம்.ஆறுதல் பரிசு பெறுவோர் (தலா ரூ.500): வி.விக்னேஸ்வரன், அரசு மேல்நிலைப்பள்ளி திருவாடனை, ராமநாதபுரம் மாவட்டம். ச.மலர்விழி, சேரன் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம். ஜான் பெர்ணாண்டோ, ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை. ம.அபிநயா, ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி. ம.பேச்சியம்மாள், குமரகுருபர சுவாமிகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வைகுண்டம்.ஆறுதல் பரிசு (ரூ.500) பெறும் நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள்: கோ.சஹானா, பிஎஸ்சி 2-ம் ஆண்டு, கா.கனகலட்சுமி, பிஎஸ்சி 3-ம் ஆண்டு, திவ்யப்ரியன் பிஎஸ்சி 2-ம் ஆண்டு, வி.தீபலட்சுமி பிஎஸ்பி 3-ம் ஆண்டு, அ.நந்தினி உணவியல் துறை. ஆறுதல் பரிசு (ரூ.500) பெறும் நெய்வேலிப் பள்ளி மாணவர்கள்: ச.சுஷ்மிதா 6-ம் வகுப்பு, ஜவகர் மெட்ரிக் பள்ளி, வட்டம் 17, சி.சசிகலாமா.வுனாதி, 10-ம் வகுப்பு என்எல்சி உயர்நிலைப்பள்ளி வட்டம் 26, பா.ஆரோக்கியமேரி 7-ம் வகுப்பு, என்எல்சி நடுநிலைப்பள்ளி வட்டம் 9, ம.சிவபாரதி, 9-ம் வகுப்பு, என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டம் 11, சாந்திப்ரியா, 9-ம் வகுப்பு ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வட்டம் 17.
 
               மேற்கண்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் உள்ள வரவேற்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு புத்தகக் கண்காட்சிக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read more »

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கடலூர்:
 
            சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். 
 
கடலூரில் சனிக்கிழமை  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது: 
 
                சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் தெற்கு வாயிலை திறக்க வேண்டும். திறக்காவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி போராட்டம் நடத்துவோம். 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. இலவசத் திட்டங்கள் தேர்தலுக்கு மட்டுமே பயன்படும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் திட்டத்தை தி.மு.க.வும் ஆதரிப்பது கண்டிக்கத்தக்கது.
 
             1984 முதல் மத்திய அரசின் உள்கூறுகள் திட்டத்தில் வழங்கிய நிதிகள் மூலம் மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டியவற்றைச் செய்ய வில்லை. அப்படி இருக்க சாதிவாரியாகக் கணக்கெடுத்து என்ன பயன் விளையப் போகிறது. சாதிவாரி கணக்கெடுப்பால் சாதிப் பிரிவினைகள், பாகுபாடுகள் மேலும் அதிகரிக்கும். ஒற்றுமையைக் குலைக்கும். எனவே தி.மு.க. தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.  மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரி உழவர் சந்தை அருகில் இக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆ.ஆதவன் தலைமை தாங்கினார்.

Read more »

நெய்வேலி என்எல்சி பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

நெய்வேலி:

               மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி டாக்டர் முருகன் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட முகாமை பள்ளியின் உதவித் தலைமையாசிரியை எஸ்.அமிழ்தா தொடங்கி வைத்தார். பள்ளியின் என்எஸ்எஸ் அலுவலர் கபிலன் முன்னிலை வகித்தார். முகாமில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள், டாக்டர் முருகன் அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

Read more »

கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் கடையில் தீ: ரூ. 5 லட்சம் சேதம்

டலூர்:

          கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

                கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் டி.நமச்சிவாயம். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில், தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை நமச்சிவாயம், பழுதுபார்க்கும் வேலைகளை முடித்துக் கொண்டு, கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இரவு 1-30 மணி அளவில் பூட்டிய கடைக்குள் இருந்து புகை வெளிவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நமச்சிவாயத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த 30 தொலைக்காட்சிப் பெட்டிகள் 50 தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான பேனல் போர்டுகள், 60 வி.சி.ஆர். பிளேயர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன. ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்து விட்டதாக நமச்சிவாயம் தெரிவித்தார். மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்காலம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

Read more »

Additional Rs. 6.09 crore compensation disbursed

CUDDALORE: 

           In the Lok Adalat session held at Neyveli Lignite Corporation on Saturday, an additional compensation of Rs. 6.09 crore was disbursed to those who had provided land to the NLC.

            Presiding over the Lok Adalat, Judge K.N. Batcha said that the NLC had acquired the land for mining lignite for electricity generation and hence, they could be proud of the fact that they had contributed their share for the overall good of society. Rs. 6 lakh per acre NLC Chairman-cum-Managing Director A.R. Ansari said that in appreciation of their gesture, the NLC was providing basic amenities to people who had given away their land. The compensation formula was as follows: for irrigated land – Rs. 6 lakh per acre, rain-fed land – Rs. 5 lakh per acre and for house site – Rs. 50,000. In all, 279 land-owners who had given a total of 150 acres in Periyakurichi, Uyyakondaravi, Gangaikondan, Kottagam and Seplanatham were given additional compensation.

Read more »

இந்திய கம்யூ., நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி திட்டக்குடியில் மறியல்

திட்டக்குடி :

               திட்டக்குடி அருகே இந்திய கம்யூ., பெண் நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

                       கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம கிளை நூலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஊராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு செய்த இடத்திலிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாமல் இருந்தனர்.

                  இதில் டேவிட் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தானாகவே ஆக்கிரமிப்பினை அகற்றி கொண்டார். மற்றொரு ஆக்கிரமிப்பாளரான மலைக்கள்ளன் இடத்தினை விட்டு வெளியேறாமல் பிரச்னை செய்து வந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், அவரது மனைவி இந்திய சம்மேளன சங்க மாவட்ட துணைத் தலைவர் அம்பிகா ஆகிய இருவரும் கிராம மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர் தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று மாலை வயலுக்கு சென்ற அம்பிகாவை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

                  இதனையறிந்த கிராம மக்கள், அம்பிகாவை தாக்கிய மலைக்கள்ளன், பிலிப்குமார், பேரின்பம் ஆகியோரை உடனடியாக கைது செய்யக் கோரி இந்திய கம்யூ., வட்ட செயலாளர் மகாலிங்கம், சின்னதுரை உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் மாலை 5.55 மணிக்கு அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட் டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் 6.10 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பதினைந்து நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

கடலூரில் நடந்த பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா: எஸ்.பி., பங்கேற்பு

கடலூர் : 

             பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார். 

              பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைபேசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான இறகு பந்து மற்றும் நீச்சல் போட் டிகள் நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. இரண்டு நாள் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு  பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர்கள் கடலூர் ஜெயந்தி அபர்ணா, புதுச்சேரி முரளி கிருஷ்ணா, உதவி பொது மேலாளர் இளங்கோவன், குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழும செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.இறகுபந்து மற்றும் நீச்சல் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிசு வழங்கினார். குழும பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை குழும இணை செயலாளர்கள் செந்தில்குமரன், ரகு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Read more »

வி.ஏ.ஓ., பணியிடம் காலி சிறுபாக்கத்தில் மக்கள் அவதி

சிறுபாக்கம் :

              சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர்.

            திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., ராமலிங்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அதன் பின் வி.ஏ.ஓ., பணியிடம் காலியாகவே உள்ளது. பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் வி.ஏ.ஓ., நியமிக்கப்படாமல் உள்ளதால் ஒரங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பணியாக செய்து வருகிறார். இதனால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், முதியோர் மற்றும் பயனாளிகளுக்கு உதவித்தொகை, நில அளவு சம்பந்தமான அனைத்து வருவாய் பணிகளும் பாதிப்படைகின்றன. கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், நலத்திட்ட பயனாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சிறுபாக்கத்திற்கு உடனடியாக வி.ஏ.ஓ.,வை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

உற்பத்தி குறைவு: மல்லி, புளி விலை "கிடுகிடு'

பண்ருட்டி : 

               உற்பத்தி குறைவால் மல்லி, புளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.புளி உற்பத்தி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு, ஆந்திரா மாநிலம் புங்கனூர் பகுதியில் புளி தேவைக்கு ஏற்ப விளைச்சல் இல்லை. இதனால் கடந்த ஆண்டை விட ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் அளவில் புளி விலை உயர்ந்துள்ளது.

          இதனால் கிருஷ்ணகிரி ஏசி கொட்டை புளி குவிண்டால் 1,900 ரூபாய் முதல் 2,200 ரூபாய் வரையும், தேனி பகுதி புளி 2,300 முதல் 2,500ம், திண்டுக்கல் நத்தம் பகுதி புளி 1,800 முதல் 1,900ம், ஆந்திரா புங்கனூர் பகுதி ஏசி கொட்டை புளி 2,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொட்டையில்லாத மதுரை ஏசி ரக கரிப்புளி குவிண்டால் 6,000 முதல் 8,000 வரையிலும், பிளவர் ரக புளி 5,000 முதல் 5,500 வரையிலும், 2ம் ரகம் 4,500 ரூபாயும், கர்நாடக மாநிலம் டூம்கூர் வெள்ளி மடல் ஏசி ரக புளி 7,000 ரூபாயும், நயம் ரக ஏசி கரிப்புளி 6,500ம், மீடியம் ரகம் 5,500ம், மீடியம் ரகம் 4,000 ரூபாயும், சேலம் ஏசி ரக கரிப்புளி 6,000 ரூபாயும்,ஏசி பெஸ்ட் ரக கரிப் புளி 5,500ம், மீடியம் ரக புளி 5,000ம், பிளவர் மீடியம் ரகம் 4,200ம், ஏசி நெ.1 தோசை புளி 5,200ம், தோசை மீடியம் ரகம் 4,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

               அதேப்போன்று குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசங்களில் மழை பெய்து வருவதால் மல்லி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 40 கிலோ 1,200 ரூபாய்க்கு விற்ற மல்லி தற்போது மூட்டைக்கு 100 முதல் 150 ரூபாய் வரை உயர்ந் துள்ளது.விருதுநகர், சாத்தூர், விளாத்திகுளம் ஆவரேஜ் மல்லி 1,250 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரையிலும், உருட்டு மல்லி 1,450 முதல் 1,550 வரையிலும், மத்திய பிரதேசம் பாதம் கலர் மல்லி 1,350ம், ராஜஸ்தான் கோட்டா வட்டார கிரீன் மல்லி 1,330 ரூபாயும், குஜராத் பாதாம் நிற மல்லி 1,350க்கும் விற்பனையாகிறது. இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்றவை 40 ஆக உயர்ந்துள்ளது.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

சிதம்பரம் : 

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

                சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பொதுப்பணித் துறையின் கீழ் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் 56 பணிகள் 215 கி.மீ., நீளத்திற்கு 2 கோடியே 50 லட்சம் செலவில் நடந்து வருகிறது. சம்பா சாகுபடி மற்றும் மழைக்காலம் துவங்க இருப்பதால் பணிகள் துரிதபடுத்தப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்தனர். உதவி செயற் பொறியாளர்கள் பெரியசாமி, கலியபெருமாள், உதவி பொறியாளர்கள் சரவணன். விவசாய சங்கத் தலைவர்கள் ரவீந்திரன், கண்ணன், இளங்கீரன் உள்ளிட்ட விவசாயிகள் உடன் சென்றனர். சிதம்பரம் அருகே மாரியப்பா நகர், சந்திரமலை, சித்தலபாடி, பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பாசனம் பெறும் உப்பனார் பாசனம் மற்றும் வெள்ளக்கால்வாய் 7 கி.மீ., நீளத்திற்கு 19 லட்சம் ரூபாயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஐந்து கிராம மக்கள் பயன் பெரும் வகையில் தூர்வாரப்பட்டுள்ள 

               இப்பணி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், துணை முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் செய்யப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் "15 பணிகள் 49 கி.மீ., சிதம்பரம் வட்டத்தில் 31 பணிகள் 166 கி.மீ., நீளத்திற்கும் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் முடிவடைந்தால் நீர் பங்கீடு முறை சிறப்பாக நடைபெறும் எனவும், வெள்ள காலங்களில் மழைநீர் விரைந்து வடிவதால் 15 கிராமங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தவிர்க்கப்படும்' என செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் படிவம் பற்றாக்குறை மக்கள் அவதி

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த முதல் தேதி வெளியிடப்பட்ட சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் வாக்களர் சேர்க்கை, திருத்தம், மற் றும் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கிடைக் காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

             கடலூர் மாவட்டத்தில் 2010ம் ஆண்டிற்கான சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியலை கடந்த 1ம் தேதி கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்களை சேர்க்க படிவம் 6 மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, புதிய சேர்க்கைக் கான வாக்காளர்கள் பெயர்களுடன் சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

           இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் சேர்க்கைக் கான படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 54 ஆயிரத்து 378 தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளவை நீக்கம் செய்யப்பட்டது.பின்னர் மாவட்டத்தில் 7 லட்சத்து 68 ஆயிரத்து 174 ஆண்களும், 7 லட்சத்து 40 ஆயிரத்து 549 பெண் வாக் காளர்களுடன் மொத்தம் 15 லட்சத்து 8 ஆயிரத்து 723 பேர் தகுதியுடையவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள், தபால் அலுவலகம், குடியிருப்பு நலச் சங்கங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார் வைக்கு வைக்கப்பட்டது. மேலும் இதில் விடுபட்டவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற் காக நேற்று முன்தினம் 10 மற்றும் நேற்று 11ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இரண்டு நாள் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. இதில் விடுபட்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் புகைப்படத்துடன் தங்களது பெயர்களை சேர்க்க குவித்தனர்.

                  மாவட்டத்தில் பல இடங்களில் முகாம் பிரச்னையின்றி சேர்ப்பு, திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கடலூர் தொகுதியில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் பகுதியில் படிவம் 6 , திருத்தத்திற்கான படிவம் 8, மாற்றத்திற்கான படிவம் 8-ஏ உள்ளிட்டவைகள் போதிய அளவிற்கு இல்லாததால் பிரச்னை ஏற்பட்டது. மேலும், பலர் திரும்பிச் சென்றனர். நெல்லிக்குப்பம் பகுதியில் படிவம் பற்றாக்குறை உள்ள நிலையில் சில ஓட்டுச் சாவடிகளில் அலுவலர்களே இல்லாமல் இருந்தனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஒவ்வொரு மையத்திலும் 20க்கும் குறைவான படிவங்கள் வழங்கப்பட்டிருந்ததாலும், எதிர்பார்த்ததற்கும் மேலாக பொதுமக்கள் சேர்க்கை, திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான படிவங்களை கேட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது. அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் வைத்தும் போதுமான அளவிற்கு படிவங்கள் வழங்காததால் தகுதியுள்ள வாக்காளர் பலரின் பெயர்கள் சேர்க்க முடியாமல் போனது. இதுபோன்ற குறைகளை நீக்க மீண்டும் ஒரு சிறப்பு முகாம் ஏற்படுத்தி விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா

கிள்ளை : 

            கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 123 பள்ளிகளுக்கு மானிய நிதியாக 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், பள்ளி மானியம் 8 லட்சம் ரூபாய், சிறப்பு கிராம கல்விக்குழு கூட்டத்திற்கு 37 ஆயிரத்து 200 ரூபாய் என 16 லட்சத்து 70 ஆயிரத்து 200 ரூபாய் நிதி வழங்கும் விழா நடந்தது. கொத்தங்குடி நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு மேற்பார்வையா ளர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் பாஸ்கர், பாலமுருகன், ஜெயராமன், மாறன் முன்னிலை வகித்தனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துசுகுமார், பள்ளிகளுக்கான காசோலைகளை தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.

Read more »

வேளாண் பொறியியல் துறையின் "போக்கு' இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை

கடலூர் : 

                வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

             வேளாண்மை பொறியியல் துறை கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இவ்வலுவலகத்தின் மூலம் அரசே விவசாயிகளுக்கு தேவையான அறுவடை இயந்திரம், டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுகிறது. விவசாயிகளுக்கு இச்சலுகை சரியாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. 

                     பணம் செலுத்தியதன் வரிசைப்படிதான் இயந்திரங் களை அனுப்ப வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஏனோ தானோ என செயல்பட்டு வருகின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் இயங்கினால் போதும் என அலட்சியமாக இருந்து வருகின்றனர். அதனால் விவசாயிகளினால் அலுவலகத்தில் பணம் செலுத்த முடியவில்லை. அரசு லாப நோக் கத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை. விவசாயிகளுக்கு சேவை அடிப்படையில்தான் செய்து வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் விவசாயிகளை அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் செலுத்தும் கட்டணத்தொகை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யவும், ஒளிவு மறைவின்றி இயந்திரங்கள் இயங்கும் இடங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறைக் காலங்களிலும் கட்டணம் செலுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அரசின் சலுகைகள் விவசாயிகளுக்கு ஒழுங்காக போய் சேரும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மின் மோட்டாருக்கு ஏற்ற டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை

விருத்தாசலம் : 

           விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து நிலத்தடி நீர் பாசன விவசாயிகள் பேரவை மாவட்டத் தலைவர் சேதுராமன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

             கடலூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தாலும், மழை குறைவாலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தாலும் நிலத் தடி நீர் வற்றி வருகிறது. மேலும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பால் மழை நீர் சேமிப்பு குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் அதிக ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைத்து, அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் களை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் டிரான்ஸ்பார்மர்களின் சக்தி போதுமானதாக இல்லாததால் அடிக்கடி மோட்டார்களில் காயில் வீணாகி வருகிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பாமர்கள் அமைக்க வேண்டும். பழுதடையும் டிரான்ஸ்பார்மர்களை மூன்று தினங்களுக்குள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் பாலக்கரையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விருத்தாசலத்தில் மக்கள் கடும் அவதி

விருத்தாசலம் : 
 
               விருத்தாசலம் பாலக்கரையில் சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

               விருத்தாசலத்தில் பாலக்கரை நகரின் முக்கிய பகுதியாகும். இப்பகுதியில் சாலை குறுகிய அளவாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சாலை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடலூர் செல்லும் சாலையிலும், ஜங்ஷன் ரோடு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் ஜல்லிகள் கொண்டு நிரப்பி அதன் மேல் சிமென்ட் கலந்த ஜல்லி போட்டு சமன் செய்தனர். அதன் பிறகு அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றால் ஜல்லியில் சிக்கி வாகனம் சருக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலை விரிவு படுத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

Read more »

மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க சுகாதார செவிலியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கடலூர் : 

              கிராம சுகாதார செவிலியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

             தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்க 4வது மாநில மாநாடு கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் அலமேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வநாயகி அஞ்சலி தீர்மானம் படித்தார். செயலாளர் மலர்க் கொடி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சகுந்தலா வேலை அறிக்கை படித்தார். பொருளாளர் மலர்விழி சந்திரலேகா நிதிநிலை அறிக்கையினை படித்தார். மாநாட்டில் மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் பொற்கைபாண்டியன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிப் பேசினார். துணை இயக்குனர் மீரா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு 1.1.96 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 1.1.96 முதல் 30-12-05 வரையிலும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 1.1.2006ம் ஆண்டு முதல் 4 ஆயிரம் ரூபாய்க்கு இணையான புதிய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு உரிய கிரேடு வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற அடிப் படையில் 900 துணை சுகாதார நிலையம் அமைத்து, கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை ஊட்டச்சத்து திட்டத்தில் பதவி உயர்வு வழங்கி பணி நியமனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக்குழு சங்க பொதுக்குழு கூட்டம்


விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக் குழு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க சிறப்புத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வீராசாமி, செயலாளர் செல்வராசு, பொருளாளர் ரவி, துணை செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். துணை பொருளாளர் இளவரசன் வரவேற்றார். முன்னதாக பாலக்கரையில் தொடங்கி நையாண்டி இசைக் குழுவினரின் ஊர்வலம் நடந்தது. மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் முத்து கூட்டம் குறித்து பேசினார். இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், துணைத் தலைவர் ராஜேந்திரன், அமைப்பாளர் அப்பாதுரை, செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கும் பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திட்டக்குடி : 

              திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

                விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைச்செருவாய், ஆக்கனூர், பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மதிய உணவு மற்றும் பள்ளி இடைவேளைகளில் வெளியில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக வேகத்தடை இல்லை. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது. 

                 அப்போதைய ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், பள்ளி முன் நெடுஞ்சாலையில் இரும்பு போல்டு மூலம் பிணைக்கப்பட்ட ரப்பரால் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் அதிகரிப்பாலும், கனரக வாகனங்களால் ரப்பர் வேகத்தடை பெயர்ந்ததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

                   கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன் வந்து தங்கும் பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் தொல்லை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுரளி தனது தம்பியை கடலூர் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரும், அவரது தாய் வாசுகியும் தங்கியிருந்தனர்.தனியாக இருந்த வாசுகியிடம் கடலூர் வில்வநகர் பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குணாளன் (29), ஜெயராமன் மகன் சுரேஷ் (27) ஆகியோர் வாசுகியிடம் அறுவருக்கத்தக்க வகையில் பேசி தகாத உறவுக்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுகி கூச்சலிடவே அவரது மகன் பாலமுரளி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த குணாளன், சுரேஷ் இருவரும் பேனா கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட் டினர்.இது குறித்து பாலமுரளி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து குணாளன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior