உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

Trouble in Cuddalore District - Bus Traveling from Panruti to Cuddalore

         For a bus traveling from Panruti to Cuddalore, it takes some 45 minutes journey. if that bus is forced to go into this Nellikuppam bus stand, it adds up to 10 minutes to the journey time. - its probably not a traveller friendly one
The main road at this bus stand is very narrow. 

            If every bus to and fro into this bus stand is making a turn on this not so broader road, this will result in traffic jam on the cuddalore-panruti road. it surely is a dampner to the traffic. 
           
              Nellikuppam, being a small town enroute, people will be more comfortable to hop on and hop off the buses while the buses are stopping at the stops situated on the main road itself. if town buses are operated from nellikuppam bus stand to cuddalore or nellikuppam bus stand to panruti, definitely there would not be much crowd, which once again is not a profitable one in the view of the bus operator.
            
        Ofcourse there are more demerits for this nellikuppam bus stand than the benefits it could make out to add money to the coffers of the government.

           while a whopping Rs.1 Crore of public money is spent on this ill planned bus stand, why not the same money is used to widen the road and make it comfortable for the vehicle users.



Complaint Received From -  Mr. Srini (Thirupapuliur)

Read more »

கடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாற்றம்

கடலூர் : 

        கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிழிந்த மற்றும் கசங் கிய ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடந்தது.
 
                  புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் பாஸ் கரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன், மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கேசவன், வங்கி ஊழியர்கள் மருதவாணன், பாலகிருஷ் ணன், சுந்தரம், ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாமில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  மாற்றிதரப்பட்டது. முகாம் புதுச்சேரி மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 53 கிளைகளில் நடந்தது.

Read more »

வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் : அரசுக்கு நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி:

              புவனகிரி வெள்ளாற் றின் குறுக்கே புதியதாக பாலம் அமைத்து தர தமிழக முதல்வருக்கு புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
 
இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

              புவனகிரி வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் நிலை குறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் கடந்த  2008ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளருக்கு  கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்களிடமிருந்து பாலம் வலுவிழந்து விட்டதாகவும், புதிய பாலம் கட்ட ஆய்வு செய்ய 35.12 லட்சம் ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக பதில் கடிதம் வந்தது. அதனைத்தொடர்ந்து தள ஆய்வு மேற்கொள்ளவும், புதிய பாலம் விரைந்து கட்ட ஆவன செய்யும்படி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதலமைச்சர் தலையிட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை  அமைச்சகத்தின் மூலம் புதிய பாலம் விரைந்து கட்ட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புவனகிரியில் போலி பிராந்தி தொழிற்சாலை : புதுச்சேரி ஆசாமி சிக்கினார்: மூவருக்கு வலை

புவனகிரி : 

            புவனகிரியில் போலி பிராந்தி தயாரித்த புதுச்சேரி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். போலி பிராந்தி தயாரிக்க பயன்படுத்திய சாராயம், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள மூவரை தேடிவருகின்றனர்.
 
            கடலூர் மாவட்டம், புவனகிரி போலீசார் கடந்த 6ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த புவனகிரி சிவக்குமார்(57), குமார்(27), வயலாமூர் காண்டீபன்(30), குபேந்திரன் (37), சொக்கங்கொல்லை மதியழகன்(54) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.  விசாரணையின் போது அவர் கள் பிராந்தி பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பிராந்தி பாட்டில்களில் ஒட்டியிருந்த ஆயத்தீர்வை ஸ்டிக்கரில் வித்தியாசம் தெரிந்ததால் சந்தேகமடைந்த போலீசார், ஐந்து பேரையும் தீவிரமாக விசாரித்ததில் அவர்கள் வைத்திருந்தது போலி பிராந்தி பாட்டில்கள் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் ஐந்து பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்குமாறு டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் உத்தரவிட்டதன்பேரில், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மாநிலம் அரங்கனூரை சேர்ந்த வெங்கடேசன் (33) மற்றும் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயம், காலி பாட்டில்கள் மற்றும் போலி லேபிள்களை புவனகிரிக்கு கடத்தி வந்து போலி பிராந்தி தயாரித்து இரவில் அருகில் உள்ள கிராமங்களுக்கு எடுத்து சென்று விற்பது தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று காலை புவனகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரங்கனூர் வெங்கடேசனை   போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவலின்பேரில் போலி பிராந்தி தயாரிக்கும் தொழிற்சாலையாக பயன்படுத்தி வந்த புவனகிரி ஏ.எஸ்.ஆர்., நகரில் உள்ள வாடகை வீட்டை சோதனையிட்டனர். அங்கிருந்த சாராயம், போலி பிராந்தி பாட்டில்கள், காலி பாட்டில்கள், லேபிள், ஆயத்தீர்வு ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தொழிற்சாலையாக பயன்படுத்திய வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள புதுச்சேரி ஆனந்தவேலு, சொக்கங் கொல்லை டாஸ்மாக் கடை விற்பனையாளர் தியாகராஜன், கார் டிரைவர் வயலாமூர் ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார்  தேடி வருகின்றனர்.

Read more »

புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் இழுபறி

திட்டக்குடி : 

            தவறான அறுவை சிகிச்சையால் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
          திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது ஒன்னரை வயது மகன் சந்தோஷின் ஆணுறுப்பு வீங்கியதால் கடந்த 30ம் தேதி பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது இறந்தார். குழந்தையை முறைப்படி புதைத்த ராஜா, பின்னர் தவறான அறுவை சிகிச்சையால் தனது குழந்தை இறந்துவிட்டதாக பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். மேலும் சிறுநீரகவியல் துறை நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தந்தி அனுப்பினார். அதனையொட்டி புதைக்கப்பட்ட குழந்தை சந்தோஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்திட அனுமதி கோரி போலீசார் திட்டக்குடி தாசில்தாரிடம் கடிதம் கொடுத்தனர். அதனை தாசில்தார், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார். மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே சிறப்பு குழுவினர் பணிபுரிவார்கள் என்பதால் எங்களால் செய்ய இயலாது என திட்டக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. திருச்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ கடலூர் மாவட்டம் எங்களுக்கு வராது எனக் கூறியது. கடலூர் அரசு தலைமை மருத்துமனை நிர்வாகமோ எங்களிடம் சிறப்பு மருத்துவர்கள் இல்லை என்பதால் செங்கல்பட்டு மருத்துவக்கல் லூரியை அணுகுமாறு தெரிவித்தனர். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ் சிபுரம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியுமென செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
 
                    பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப் பியதற்கு, இங்கு சிறப்பு நிபுணர்கள் இல்லாததால், சென்னை மருத்துவ கல்வி இயக்குனரிடம் முறையிடுமாறு கடிதம் வந்துள்ளது. இறந்த 15 மாத குழந்தையின் உடலை புதைத்து 12 நாட்களாகியும், அதனை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடியாததால், குழந்தையின் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Read more »

ஊனமுற்றோர்களுக்கு வழிகாட்டியாக அரசு விளங்குகிறது: எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் : 

              தி.மு.க., ஆட்சியில் தான் அனைவரின் எண் ணங்களும் ஈடேறும் வகையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.
 
             மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் லியனார்ட் செஷியர் டிசபிலிட்டி சார்பில் ஊனமுற்றோர் மறுவாழ்வு வேலைவாய்ப்பு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. லியனார்ட் செஷியர் டிசபிலிட்டி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார். திட்ட மேலாளர் அசோக்குமார் விளக்கவுரையாற்றினார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தில்லைநாதன், எல்.சி.டி., திட்ட அலுவலர் சிவராம் தேஷ் பாண்டே, திட்ட ஒருங்கிணைப்பாளர் துஷாரா பாஸ்கர் மற்றும் 60க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசுகையில் "ஊனமுற்றோர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட் டங்களை வழங்கி வருவதோடு, அவர்களுக்கு வேலை வய்ப்பில் இடஒதுக்கீடு அளித்து வழிகாட்டி வருகிறது. ஊனமுற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பளிக்கும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அந்நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சுயமாக தொழில் துவங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது. உங்களுக்காக உதவி செய்ய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் தான் அனைவரின் எண் ணங்களும் ஈடேறும் வகையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஊனமுற்றோர்களுக்கு உதவுவதில் அரசுடன் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Read more »

செம்மை நெல் சாகுபடியில் விளைச்சல் அதிகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சு

குறிஞ்சிப்பாடி : 

           செம்மை நெல் சாகுபடியால் எக்டேருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ கூடுதலாக விளைச்சல் கிடைப்பதாக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.
 
         கடலூர் மாவட்டம், வடலூரில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து வேளாண் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது:  விவசாய துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதிலும், பல சலுகைகளை அறிவிப்பதிலும் முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார். செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்            படுத்தி கடலூர் மாவட்டத்தில் 64 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு எக்டேருக்கும் 2,500 கிலோ நெல் கூடுதலாக கிடைத்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு துள்ளிய பண்ணை திட்டத்தில் வழங்கி வந்த 50 சதவீத மானியத்தை தற்போது 65  சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. ஜெ., ஆட்சியில் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான 745 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.  2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் கரும்புக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் டன் கரும்பிற்கு ஆயிரத்து 14 வழங்க அறிவிப்பு மட்டும் தான் வந்தது. ஆனால் வழங்கவில்லை.  கருணாநிதி ஆட்சியில் தான் கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரத்து 520 ரூபாய் வழங்கப்படுகிறது. நெல் குவிண்டால் (சாதாரண ரகம்) ஆயிரத்து 50 ரூபாய், சன்ன ரகம் ஆயிரத்து 100 ரூபாய் வழங் கப்படுகிறது என்றார்.  விழாவில், பத்திரப்பதிவு தணிக்கை அதிகாரி ஜெயவேல், துணைப்பதிவாளர் சுந்தரேசன்,  தாசில்தார் பெரியநாயகம், வடலூர் வட்டார மருத்துவ அதிகாரி லட்சுமி சீனுவாசன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர்  செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வடலூரில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு : ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூரில் சார்பதிவாளர் புதிய கட்டட திறப்பு விழாவில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
 

               வடலூரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எம்.பி., அழகிரி, கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் வேலாயுதம் வரவேற்றார். புதிய அலுவலகத்தை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர், திருமண பதிவை துவக்கி வைத்து வேளாண் துறை சார்பில் அமைத்திருந்த  கண்காட் சியை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் 7 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், நான் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த போது, முதல்வரிடம் அனுமதி பெற்று இந்த அலுவலகம் கட் டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வருவாய் ஈட்டுவதில் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போது குறிஞ்சிப்பாடி தாலுகாவாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அரசில் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.  முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பசியிலிருந்து பிணி வரை களைவதற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். விழாவில் வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுணன், வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், கடலூர் சேர்மன் தங்கராசு, மாவட்ட விற்பனை குழு தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

காஸ் வினியோகத்தில் பிரச்னை : ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

பண்ருட்டி : 

              வீட்டு இணைப்புகளுக்கு காஸ் சப்ளை சீராக வழங்கவில்லை எனில் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தஞ்சாவூர் மண்டல மேலாளர் எச்சரித்துள்ளார்.
 
         பண்ருட்டியில் ஜெயா காஸ் ஏஜென்சி மூலம் 17ஆயிரம் இணைப்புகளுக்கு சிலிண்டர் வழங் கப்பட்டு வருகிறது. இந் நிலையில் சிலிண்டர் சரிவர வழங்காததால் கடந்த வாரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஏஜென்சி மீது பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர் முத்துசாமி ஆகியோர் நேற்று பண்ருட்டியில் உள்ள ஜெயா காஸ் குடோன் மற் றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் மண்டல மேலாளர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், நுகர் வோரின் பல்வேறு புகார்களையடுத்து சிலிண்டர்  சப்ளை குறித்து குடோன் மற்றும் அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளோம். முறைப்படி நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்கவில்லை. ஜெயா காஸ் உரிமையாளர் நுகர்வோருக்கு சீராக சிலிண்டர் சப்ளை செய்வதற்கு பதிவு முறைகள், வீடுகளுக்கு டோர் டெலிவரி வழங்க 2 அல்லது 3 வாரங்களுக்குள் தீர்வு காணவேண்டும். இல்லையெனில் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read more »

பண்ருட்டியில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் : ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷன் பேட்டி

பண்ருட்டி : 

                 விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் பயணிகள் ரயில் ஓடத் துவங்கிய பிறகு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளர் தீபக்கிரீசன் கூறினார். விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணியை புதிதாக பொறுப்பேற்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரீசன் நேற்று ஐந்து பெட்டிகள் இணைத்த சிறப்பு ரயிலில் வந்து ஆய்வு செய்தார்.
 
           காலை 11.35 மணிக்கு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பொது மேலாளரை மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண் முகம் தலைமையில், செயலாளர் வீரப்பன், மதன்சந்த், ரோட்டரி சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், வக் கீல் வடிவேலன், சிவிக் எக்ஸனோரா பசுபதி, மதன்சந்த், அசோக்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.  அதில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம்-விருத்தாசலம் வழியாக மதுரை செல்லும் 9 ரயில்களில் 3 ரயில்களை விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் திருப்பி விட வேண்டும். பண்ருட்டி ரயில்வே ஸ்டேனில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பொதுமேலாளர் தீபக்கிருஷன், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கினால் விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் ரயில் இயக்க முடியும். மார்ச் மாதத் திற்குள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கிய பிறகு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் முன் பதிவு மையம் துவங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் 11.45 மணிக்கு சிறப்பு ரயிலில் கடலூர் நோக்கி சென்றார்.

Read more »

சிதம்பரம் நகராட்சி பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகிறது! அக்கறை எடுத்துக் கொள்ளத்தான் ஆளில்லை

சிதம்பரம் : 

                சிதம்பரம் நகரை அழகு படுத்தி, சிறுவர் களை மகிழ்விக்கும் நோக் கில் நகரில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த பூங்காக்கள் அத்தனையும் பராமரிப்பின்றி பாழடைந்துவிட்டது.
 
             சுற்றுலா நகரமான சிதம்பரத்தை அழகு படுத்த சுற்றுலா துறையின் ஸ்ரீ ஆதிசங்கரா சுற்றுலா சர்க்யூட் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. அதில் மக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையோர நடைபாதைகள் அமைக்கப்பட்டன. நகர பிரதான நான்கு வீதிகள் மட்டுமல்லாது, 3 லட்சம் ரூபாய் செலவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடைபாதை, வேணுகோபால் பிள்ளை தெருவில் 27 லட்சத்தில் நடைபாதை, நடராஜர் கோவிலின் நான்கு சன்னதியிலும் 19 லட்சத்தில் சிமெண்ட் தளத்துடன் கூடிய நடைபாதை அமைக் கப்பட்டது. அத்துடன் சீரழிந்து கிடந்த காந்தி பூங்கா  5 லட்சம் ரூபாய் செலவிலும், கோவிந்தசாமி தெரு பூங்கா 3 லட்சம் செலவிலும், மன்மதசாமி நகர் பூங்கா  3 .5 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. பஸ் நிலையம் முகப்பு பகுதியில் 3 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டது. கீழ வீதி கழிப்பிடம் 12 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. பஸ் நிலையம் அருகே உள்ள மணிகூண்டு ஒரு லட்சம் செலவில் புதுப்பிக் கப்பட்டது. இந்த பணிகள் அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடியின் முயற்சியால் மேற்கொள் ளப்பட்டன.
 
         ஆர்.எஸ்.வி.ஓய்., கலெக்டரின் தன்னிறைவு திட்டம், சிறுசேமிப்பு ஊக்க நிதி மற்றும் நகராட்சி பொது நிதிகள் மூலம் 27லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மேலும் பல பூங்காக்கள், படகு குழாம், செயற்கை நீரூற்று ஆகியன அமைக்கப்பட்டுள் ளது.  இதில் பஸ் நிலைய நுழைவு வாயிலில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மதிப்பில் டால் பின் நீரூற்றுடன் கூடிய ரவுண்டானா, பஸ் நிலையத்தில் 1 லட்சம் மதிப்பில் பூங்கா, சிறுசேமிப்பு நிதி 9 லட்சத்தில் சபாநாயகர் தெரு ஆயிக்குளத்தில் படகு குழாம் மற்றும் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. மின் நகரில் ராஷ்டிரிய சம்விகாஸ் யோஜனா திட்டத் தில் 5 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா, ஆர்.எஸ். வி.ஒய் திட்டத்தில் சிதம்பரம் நுழைவாயிலில் 7 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை நீரூற்றுடன் கூடிய சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. இப்படி பல லட்சம் ரூபாய் செலவில் நகரை அழகுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்ட பூங்காக் கள் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அப்போதைய கல்வித் துறை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். சிதம்பரம் நகரில் சிறுவர்களுக் கும், பொதுமக்களுக்கும் பொழுது போக்கு இடம் இல்லாமல் இருந்த நிலையில் நகரில் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப் பட்ட பூங்காக்கள் பயனுள்ளதாக அமைந்தன. மாலை நேரங்களில் குழந் தைகளுடன் பொதுமக்கள் பூங்காக்களுக்கு வந்து பொழுதை களித்தனர். குழந்தைகள் அங்குள்ள ராட்டினம், சருக்கு மரம், ஊஞ்சல் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தன. சபாநாயகர் தெரு ஆயிகுளத்தில் பொதுமக்கள் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர்.
 
           இப்படியாக மின் விளக்கு வெளிச்சம், புல் தரை, நீரூற்று, இருக்கைகள் என இருந்த பூங்காக்கள் பராமரிப்பின்றி சீரழிந்துவிட்டது. பூங்காக்களை திறந்ததோடு சரி நகராட்சி நிர்வாகம் எட்டிக் கூட பார்க்க முன்வரவில்லை. படகு குழாமில் ஒரு படகுகூட ஓடவில்லை. அத்தனை பூங்காக்களிலும்  இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் சருக்கு மரம், ஊஞ்சல் என அனைத்தும் உடைந்துவிட்டது. 

                           மதிற்சுவர்கள் கேட்டுகள் உடைக்கப்பட்டுவிட்டன. சிதம்பரம் நகர நுழைவாயில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் புதர்கள் மண்டி முட்செடிகள் வளர்ந்து விஷ ஜந்துக் கள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் போதை ஆசாமிகள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நகர பூங்காக்களை சில லட்சம் செலவு செய்து சீரமைத்து முறையாக பராமரித்தால் நகர மக்களுக்கும் பயன்படும். நகரமும் பொலிவு பெறும். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

நெல்லிக்குப்பம் : 

          தமிழகத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
 
 இதுகுறித்து அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங் கன்பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: 

              தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலையும், கொசு தொல் லையையும் கட்டுப் படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காப் பீடு திட்டத்துக்கு புகைப் படம் எடுத்து இரண்டு மாதமாகியும் அடையாள அட்டை வழங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். தாட்கோ கடன் முறையாக வழங்க வேண்டும். பஞ்சமி தரிசு நிலங்களை மீட்க வேண் டும். ரேஷன் கார்டு கேட்டு மனு செய்தவர்களுக்கு உடனே கார்டு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Read more »

நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் கூடைப்பந்து ஆடுகளம் வீணாகிறது

நடுவீரப்பட்டு : 

                நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடை பந்து ஆடுகளம் சிமென்ட் தரை போடாததால்  வீணாகி வருகிறது.
'
             நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடலூர் ஒன்றியத்திலேயே இந்த பள்ளியில் மட்டுமே பெரிய விளையாட்டு மைதானம் உள் ளது.  இதன் காரணமாக பள்ளிகளுக்கு இடையேயான ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பைக்கா விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கூடைப் பந்து விளையாட இரண்டு ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் ஒன்று இரும்பு பைப்பினாலும், மற்றொன்று சிமென்ட்  போஸ்ட்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆடுகளத்திலும் மாணவ, மாணவிகள்  விளையாடக் கூடிய வகையில் சிமென்ட் தரைகள் அமைக்கவில்லை. மண் தரையாக உள்ளதால் குண்டும், குழியுமாகவும், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை போக்கி கூடைப்பந்து ஆடுகளத்தில் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சாலை விரிவாக்க பணி மந்தம் : விபத்துகளால் மக்கள் அவதி

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக் காததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
 
                 சிதம்பரம் அருகே மண்டபத்தில் இருந்து கிள்ளை வரை சாலையை 2.97 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி கடந்தாண்டு துவங்கியது. 9 மாதங்களில் முடிய வேண்டிய இந்த பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரத்தில் தோண்டிய பள்ளங்களில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விலைவாசி உயர்வு கண்டித்து சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரி சி.ஐ.டி.யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
           மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்சக் கூலி, 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். நிரந்தர பணிகளில் கான்ட்ராக்ட், அப்ரன்டீஸ் முறையை அனுமதிக்க கூடாது. நல வாரியத்தில் பதிவு செய்ய தற்போதுள்ள வி.ஏ.ஓ., சரிபார்த்தல் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைத் தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருப்பையன், மாநிலக் குழு ஸ்ரீதர் கோரிக்கைகள் குறித்து பேசினர். பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர்கள் முத்துக்குமரன், ராஜி, குமார், சிப்காட் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                  மாதம் தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
              கடலூரில் பி.எஸ். என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ் மாநில டெலிகாம் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் முன் னிலை வகித்தார். தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந் தரமூர்த்தி, தேசிய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினர். அமைப்பு செயலாளர் வீரமணி,  செயல் தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெண்டரில் குறிப்பிட்டபடி மாதம் தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேணடும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ரசீது மற்றும் நெம்பர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

               விலைவாசி உயர்வை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                  மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி முன் னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜெங்கால் துவக்கி வைத்தார். மாநில தொழிற் சங்க பொருளாளர் ரங்கன், மாநில செயலாளர் இப் ராம்பால், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களுக் கும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசை கண்டித்து பேசினர்

Read more »

மும்பை லாரியில் எரிசாராயம்? சோதனைக்கு பின் விடுவிப்பு

 கடலூர் : 

             மும்பை லாரியில் எரிசாராயம் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் கடலூரில் இரண்டு டேங்கர் லாரிகளை போலீசார் சோதனை செய்தனர்.
 
            மும்பை பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளில் எரிசாராயம் கடத்திக் கொண்டு கடலூர் வழியாக செல்வதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின் பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் புதுச்சேரி வழியாக கடலூர் நோக்கி வந்த மும்பை பதிவெண் கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளை அண்ணா பாலம் அருகே மடக்கி நிறுத்தினர். பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேரில் சென்று லாரியை சோதனை செய்ததில் ஏதும் கடத்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும் விசாரணையில் எம்.எச்04 பிஜி 5730 எண்ணுள்ள லாரியில் முப்பையில் காஸ் நிரப்பி சென்னை சி.பி.சி.எல்., கம்பெனியில் இறக்கி விட்டு நாகூர் செல்வதாகவும், மற்றொரு எம்.எச்.04 சிஏ 7080 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரி மும்பையிலிருந்து கெமிக்கல் ஏற்றி பெங்களூருவில் இறக்கி விட்டு காலி லாரியுடன் மீண்டும் கெமிக்கல் ஏற்ற சிப்காட் செல்வது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் போலீசார் விடுவித்தனர்.

Read more »

கோஷ்டி மோதல்: 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
                  சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் ஆதிலோகநாயகி. இவர் எண்ணாநகரத்தில் உள்ள அவரது தம்பி தண்டபாணி வீட்டில் தங்கியிருந்தார்.  அப்போது அதே ஊரை சேர்ந்த முருகவல்லி என்பவருக்கும் ஆதிலோகநாயகிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு கோஷ்டியாக மோதிக் கொண்டனர். அதில் முருகவல்லி, அவரது மகள் மகாலட்சுமி, எதிர்தரப்பில் ஆதிலோகநாயகி, அவரது தம்பி ராஜாராம் ஆகியோர் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார், 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

புளியமரத்தில் கார் மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை : 

            புதுச்சத்திரம் அருகே புளியாமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
 
                  சிதம்பரம் மாலைக்கட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை இண்டிகா காரில் சிதம்பரம் நோக்கி வந்தார். சீர்காழி அடுத்த மேலமாத்தூரை சேர்ந்த சிவக்குமார் காரை ஓட்டி வந்தார். பெரியப்பட்டு அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியாமரத்தில் கார் மோதியது.  இந்த விபத்தில் சுரேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சிவக்குமார் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

கடலூர் : 

                      கடலூரில் மோட்டார் பைக் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார்.
கடலூர் எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் முத்துசாமி (53). இவர் கடந்த 9ம் தேதி திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எஸ்.என்.சாவடி அய்யனார் கோவில் அருகே சென்ற போது சிதம்பரம் மெயின் ரோட்டிலிருந்து வந்த மோட்டார் பைக் முத்துசாமி மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கடை உடைத்த வழக்கில் ஒருவர் கைது

கடலூர் : 

                கடலூரில் ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கடலூர் எஸ்.என்.சாவடி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி(40). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளார். இவரிடம் கடந்த 8ம் தேதி கடலூர் மார்கெட் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(24), சரத்குமார்(21), கிரிராஜா(21), மணி (எ) மணிமாறன் ஆகியோர் பணம் கேட்டனர். புகழேந்தி மறுக்கவே கடையை அடித்து நொறுக்கினர்.
 
                     இதுகுறித்து புகழேந்தி கொடுத்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனின் சகோதரர்கள் வெங்கடேசன்(26), மணி உட்பட நான்கு பேர் கடந்த 8ம் தேதி இரவு கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் கடையில் வேலை செய்து வந்த சசிக்குமாரையும் தாக்கினர். இதில் கடையில் இருந்த 85 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

Read more »

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் கேபிள் சேதம் : தொலைபேசிகள் செயலிழந்தன

விருத்தாசலம் : 

               விருத்தாசலத்தில் நடந்துவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பல லட்சம் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., கேபிள் கள் சேதமடைந்தன. இதனால் நகரில் பெரும்பாலான தொலைபேசிகள் செயலிழந்தன.
 
          விருத்தாசலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வருகிறது. அதில் ஜங்ஷன் ரோடு மற்றும் கடலூர் சாலையில் உள்ள  கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் மற்றும் கடை படிக்கட்டுகளை பொக்லைன் கொண்டு இடித்து அகற்றப்படுகிறது. அவ்வாறு ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் நோண்டியபோது மண்ணின் அடியில் புதைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., கேபிள் கள் 40ம் மேற்பட்ட இடங்களில் துண்டாகி சேதம் அடைந்தது.  இதனால் ஜங்ஷன் ரோடு, கடைவீதி, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் 500 ம் மேற்பட்ட போன்கள் இயங்கவில்லை. நோண்டப்படும் மண் உடனடியாக அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடப்பதால் கேபிள்களை உடனடியாக இணைக்க முடியாத நிலை உள்ளது. கடந்த முறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போதும் இதுபோல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு போன்கள் இயங்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Read more »

தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அருகே கிராமத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட்டனர்.
 
          விருத்தாசலம் அடுத்த ஏ.கொட்டாரகுப்பம் கிராமத்தில் குரங்குகள் கூட்டமாக தங்கி பொதுமக்களை அச்சுறுத்தியும், நிலங்களில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குரங்குகளின் தொல்லை அதிகரிக்கவே குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விருத்தாசலம் வனசரக அலுவலர் அருளானந்தமூர்த்தி ஆலோசனையில் வனவர் ஞானசுந்தரம் தலைமையில் வனக்காப்பாளர்கள் சக்கரவர்த்தி, வன காவலர் கள் மண்ணாங்கட்டி, தேவராஜன், தேவராஜூலு ஆகியோர் கள்ளக்குறிச்சி நரிக் குறவர் சவுந்தர்ராஜன் குழுவினருடன் இணைந்து இரும்பு கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் கொடுத்து மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் விட்டனர்.

Read more »

ரூ.17.45 லட்சம் கையாடல் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது

கோவை: 

             கூட்டுறவு வங்கியில் 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, அதன் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
                 சூலூர் அருகே கரவழி மாதப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சார்பதிவாளர்(குற்றவியல்)செந்தில்குமார் கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில், 2001, ஏப்.,9 முதல் 2009, பிப்.,11 வரையிலான காலத்தில் வங்கிக் கணக்கில் இருந்து 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இம்மோசடி குறித்து, கோவை வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் தரப்பட்டது. டி.எஸ்.பி.,முத்துச்சாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ., நிர்மலாதேவி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பிக்சட் டிபாசிட் பத்திரங்களுக்கு பதிலாக போலி பத்திரங்கள் வழங்கி, பணம் வசூலித்தது, சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பணம் வழங்கியதாக செலவு கணக்கில் எழுதி வங்கி இருப்பை குறைத்து காட்டியது, வங்கி உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, கேட்ட தொகையை விட அதிகமான தொகையை எடுத்தது, உறுப்பினர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்தது என 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது.
 
                  தீவிர விசாரணைக்குப் பின் வங்கி செயலாளர் நாச்சிமுத்து(56)கைது செய்யப்பட்டார். ஜே.எம். எண்:4 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட வங்கிச் செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

கடலூர் : 

                   கடலூர் சில்வர் பீச்சில் குளித்த  மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். கடலூர் முதுநகர் குட்டைக்கார தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி பழனிவேல் மகன் வேலவன் (16). திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாதத் தேர்வு முடிந்த நிலையில் உடன் படிக்கும் நண்பர்களுடன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு குளிக்கச் சென்றார். மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் எழுந்த பெரிய அலை வேலவனை கடலுக்குள் இழுத் துச் சென்றது. உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்ததைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து வேலவனை கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் வேலவன் மூச்சு திணறி இறந்துவிட்டார். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

விபத்து இழப்பீடு வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி

பண்ருட்டி : 

             இழப்பீட்டு தொகை வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த 10.2.2006 அன்று மோட்டார் சைக்கிளில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே சென்றபோது அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பாக வேல்முருகனின் மனைவி குணசுந்தரி, தந்தை சிதம்பரம், தாய் புஷ்பவதி ஆகியோர் இழப்பீடு தொகை கோரி பண்ருட்டி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
              வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டு தொகையாக 2.91 லட்சம் ரூபாயை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 27.7.2007ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் நஷ்ட ஈடு வழங்காததை தொடர்ந்து குணசுந்தரி பண்ருட்டி சப் கோர்ட்டில் முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி கலியமூர்த்தி, விபத்து இழப்பீட்டு தொகை வழங்காத அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்த அரசு விரைவு பஸ்சை கோர்ட் அமீனா பன்னீர்செல்வம் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Read more »

தொழிலாளர் துறையினர் ஆய்வு : கடை, நிறுவனங்கள் மீது வழக்கு

கடலூர் : 

              கடலூரில் தொழிலாளர் துறை அலுவலர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
                கடலூரில் தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண்ணன் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர், இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் கடலூர் முதுநகர் மற்றும் நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் பகுதிகளில் 80 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
                 அதில் நிறுவன சட்டத்தை மீறியதாக 25, விடுமுறை சட்டத்தை மீறிய 13, குறைந்தபட்ச கூலி சட்டத்தில் 9, எடையளவு சட்டத்தில் 8, பொட்டல பொருட்கள் பிரிவில் 23 வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வாரச் சந்தையில் 50 காய்கறி கடைகளில முத்திரையிடப்படாமல் வியாபார உபயோகத்தில் காணப்பட்ட மேஜை தராசு 3, விட்ட தாராசு 4, இரும்பு எடை கற்கள் 27 பறிமுதல் செய்யப்பட்டது.

Read more »

நிதியில் முறைகேடு : ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்

கடலூர் : 

              நிதி முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு எம்.பி.அகரம் ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
                    கடலூர் ஒன்றியம் மலையபெருமாள் அகரம் ஊராட்சி தலைவராக பிரேமா உள்ளார். இவர் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக வந்த புகார் குறித்து விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் பிரேமா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகே மேல் நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Read more »

லாட்டரி விற்ற மூவர் கைது

புவனகிரி : 

                            லாட்டரி சீட்டுகள் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த மணிவண்ணன்(37), கணேசன்(45), முருகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும், 355 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Read more »

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு : காங்., கட்சியினர் 16 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் : 

              காட்டுமன்னார்கோவிலில் பால்தாக்கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
                    மும்பையை பாம்பே என ராகுல் காந்தி சொன்னதை கண்டித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்தார். இதனைக் கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டார காங்., தலைவர் இளங்கீரன் தலைமையில் கட்சியினர் நேற்று சார்பதிவாளர் அலுவலகம் முன் பால்தாக்கரேவின் உருவ பொம்மையை எரித்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்து உருவபொம்மையை கைப்பற்றினர். மேலும், இதுதொடர்பாக இளங்கீரன், ரங்கநாதன், குணசேகரன், நசீர் அகமது உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.

Read more »

சேத்தியாத்தோப்பில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

சேத்தியாத்தோப்பு : 

                               பஸ் ஏறியபோது தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலூரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மனைவி வசந்தா (45). இவர் நேற்று மாலை சேத்தியாத் தோப்பு பஸ் நிலையத் தில் இருந்து அரசு பஸ்சில் ஓடிச் சென்று முன் படிக்கட்டு வழியாக ஏறியபோது தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவர் கைது

சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
 
                 சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சேத்தியாத்தோப்பு பாலத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிரந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அள்ளூரைச் சேர்ந்த சிலம்பரசன் (27), குபேந்திரன் (27), ராஜசேகர் (23) என்பதும், மூவரும் அவ்வழியே செல்பவர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த உருட்டை கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior