உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

History of cuddalore book


History of Cuddalore Book (Tamil Version) Rs.25/-
Author: Mr. N. Annadurai.
(Guest Lecturer in History) 
Cell.9043193286

Read more »

Released convicts under scanner, says SP


CUDDALORE: 

               The movement of the convicts, who were released from the central prisons in Cuddalore, Vellore, Tiruchi and the Union Territory of Puducherry in the past three months, has been put under the scanner, said Ashwin Kotnis, Superintendent of Police.

               Addressing a press conference here recently, Mr. Kotnis said that a list of all those who were released after having served the jail terms had been prepared for the purpose. Similarly, the dossiers of those persons who had indulged in grave crimes in the past 10 years too had been prepared and the security personnel had been put on their trail.
The SP said that it had come to light that Abdul B.Rahim, a former manager of a private bank at Chidambaram, had defrauded two women customers to the tune of Rs. 2 lakh by fake registration in an insurance scheme.

                Mr. Kotnis said that Rahim sold the scheme to A.Sheria Begum of Adhi Varaga Nallur and obtained Rs. 1 lakh from her on January 29, 2007 as a deposit for a 10-year period. After 10 days, he issued her a fake receipt and also a booklet to make her believe that her policy was ready.

                  Later, on learning about the features of the scheme, her mother-in-law Mehboob Be, too handed over Rs. 1 lakh to Rahim on February 8, 2008 and for her also, he gave a fake receipt and booklet.

                When the customers approached the bank to know the status of their investments, the new branch manager Ayyappan, after verification, told them that their names were not in the records and the receipts were fake. Hence, they lodged a complaint with the Chidambaram police on December 29, 2008.

                  When the SP went for a review in the Chidambaram police station, he deputed security personnel to find out whether the women had really invested the money. After convinced of the authenticity of the transactions the SP wrote to the bank's head office in Mumbai. An official team from the bank flew down here and after inspection it found that the former branch manager had cheated the women. Therefore, the bank subsequently dismissed him and arranged for the refund of the money (Rs. 2 lakhs) to them. Mr. Kotnis handed over the cheques to the customers at his office on Sunday.

Read more »

NLC expands green cover


CUDDALORE: 

            The Neyveli Lignite Corporation has intensified its efforts to expand greenery on its campus. So far it has raised about two crore saplings in reclaimed mined areas, according to S. Kumarasamy, General Manager, Mine-II and Expansion. He was speaking at the World Forestry Day celebrations held recently on the NLC campus.

Read more »

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்


கடலூர்:
 
                      தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் தேர்வு செய்து, அவற்றுக்குத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு, பள்ளிகள் நேரடியாக அந்த மையங்களுக்கு வந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்லும் முறை, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. புத்தகங்களைப் பெற்றுச் செல்ல பள்ளிகளில் போதிய ஆள்கள் இல்லாமை, வாகன வசதிக்குறைவு போன்ற காரணங்களால் இந்த முறையில் பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.எனவே பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. 
 
                     அதன்படி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை கொண்டு சென்று, வழங்கும் பொறுப்பை அஞ்சல் நிலையங்கள் ஏற்றுக் கொண்டு உள்ளன.அதன்படி பள்ளிகளின் பாடப் புத்தகங்கள் தேவை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அஞ்சலக அதிகாரிகள் வந்து, பாடப் புத்தகங்களைப் பெற்றுச் சென்று, பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்து விடுவார்கள். தலைமை ஆசிரியர்கள் மே இறுதிக்குள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடப் புத்தகங்களை வழங்குவர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களிடமும் பாடப்புத்தகங்கள் இருக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                     இதன்படி கடலூர் மாவட்டத்துக்கு, 5 லட்சம் பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. இவைகள் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. புதன்கிழமை பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது. அஞ்சல் துறை அதிகாரிகள் வந்து பெற்றுச் சென்றனர்.பாடப் புத்தகங்கள் விநியோகத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தொடங்கி வைத்தார்.

Read more »

கடல் மிதந்த பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு

சிதம்பரம்:
 
                      சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் மீன்பிடிக்கும் போது பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு பொருளான ஆம்பர்கிரிஸ் என்ற மிதவைகளை மீனவர்கள் கைப்பற்றி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் செவ்வாய்க்கிழமை 30 கி.மீ. தூரத்தில் வேலு உள்ளிட்ட 7 பேர் படகில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு புதுமையாக மிதந்து வந்த மிதவையை கைப்பற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி அதை பார்வையிட்டு மீன்வளத் துறையினர் மற்றும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்துக்கும் தகவல் அளித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர் நாபிராஜன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி,பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் அஜ்மல்கான், அருளரசன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர்.ஆய்வில் திமிங்கலத்தின் அபூர்வமான கழிவுப்பொருள் அது என்றும், அதன் பெயர் ஆம்பர்கிரிஸ். இவை வைரம் மெருகூட்ட பயன்படுத்தப்படும் என்றும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும். இதன் விலை 1 கிராம் ரூ.5 லட்சம் மதிப்பாகும். இந்த கழிவு பல ஆண்டுகளில் கடலுக்கடியில் கிடந்து அபூர்வமாக மேலே வந்து மிதக்கும். இவை கடலில் கிடைப்பது மிக அபூர்வம் என தெரிவித்தனர்.அதன்படி கைப்பற்றப்பட்ட 750 கிராம் திமிங்கலத்தின் கழிவுபொருள் ஆய்வுக்காக சென்னை மீன்வள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Read more »

பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு: மாவட்ட வருவாய் அலுவலர் 2-ம் கட்ட பொது விசாரணை


சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 2-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. 
 
                    அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்து பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தின் போது போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையாநகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார். 
 
                          சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் கட்ட பொது விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ம் கட்ட பொது விசாரணையை நடத்தினார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் அருந்ததியினர் சங்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது தமிழக ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைவர் எம்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அடுத்த கட்ட பொது விசாரணை மார்ச் 31-ம் தேதி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

Read more »

அதிகளவு லாபம் தரும் கொடுவா மீன் வளர்ப்பு


சிதம்பரம்:
 
                நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கடல் உணவு வகை மீனான கொடுவா மீன் வளர்ப்பு மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அதிக லாபம் பெறலாம். புரதச்சத்து அதிகம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது கொடுவா மீன். நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோயை தடுக்கவல்லது என அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
                  இந்த அரிய வகை மீன்களை உப்புநீரில் மட்டும் வளர்க்கப்பட்டது. தற்போது நல்ல நீரில் வளர்க்கலாம் என ராஜீவ்காந்தி நீர் வாழ் உயிரின வளர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கொடுவா மீன் வளர்ப்பு குறித்து மீன் வளர்ப்போருக்கு பயிற்சியை அளித்து வருகிறது. 
 
மீன்வளர்ப்பு முறை: 
 
                      கொடுவா மீன் குஞ்சுகளை பண்ணைகளுக்கு எடுத்துச் சென்று முதலில் நாற்றங்கால் குளம் அல்லது வளர்ப்பு குளத்தில் கட்டப்பட்டுள்ள 1ல1ல1 மீட்டர் (அல்லது) 2ல2ல1.5 மீட்டர் அளவிலான ஹாப்பாவில் (நைலான்வலை) ஆயிரம் மீன் குஞ்சுகள் என்ற எண்ணிக்கையில் இருப்பு செய்து 30 முதல் 40 நாள்கள் வரை வளர்க்க வேண்டும்.
 
மீன் குஞ்சுகளுக்கு உணவிடும் முறை: 
 
                    மீன் குஞ்சுகளுக்கு பொருத்தமான வகையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவை ஒரு நாளைக்கு காலை, மாலையில் அளிக்க வேண்டும். தீவனத்தை உணவாக கொடுக்கும்போது முதல் வாரத்தில் மீன்குஞ்சுகளின் எடையில் 20-30 சதவீத அளவுக்கு உணவளிக்க வேண்டும். மேற்கண்ட அளவினை வாரத்துக்கு ஒருமுறை படிப்படியாக குறைத்து கடைசியில் மீன் குஞ்சுகளின் எடையில் 2 சதவீதம் என்ற அளவில் உணவின் அளவை மாற்றி கொடுக்க வேண்டும். 
 
நீர்மாற்றம்: 
 
                     தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொருத்தும் குளத்து நீரின் தரத்தை பொருத்தும் தேவைக்கேற்ப (20-30 சதவீதம்) நீர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
 
ஹாப்பா வலைகளை பரிசோதித்தல்: 
 
                     காற்றோட்ட வசதிக்காகவும், குளநீர் சுழற்சிக்காகவும் தினமும் ஹாப்பா வலைகளை சோதனை செய்ய வேண்டும். 
 
தரம்பிரித்தல் பிரித்தல்: 
 
                   கொடுவா மீன் குஞ்சு ஒன்றுக் கொன்று பகமைக்குணம் கொண்டவை. தன் இனத்தை தானே உண்ணும் பழக்கம் உடையது. சிறியளவு மீன்குஞ்சுகளை பெரிய அளவுள்ள மீன்குஞ்சுகள் பிடித்து உண்ணும். ஆதலால் தரம் வாரியாக பெரிய, சிறிய குஞ்சுகளை தனித்தனி வலைகளில் பிரித்து வைப்பதன் மூலம் இதை தடுக்கலாம். கொடுவா மீன் ஒருமாதத்துக்குள் 4 முதல் 5 செ.மீ வரை வளரும். ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் என்ற எண்ணிக்கையில் இருப்பு செய்ய வேண்டும். 
 
பராமரிக்கும் முறைகள்: 
 
                        மீன்குஞ்சுகளை மிருதுவான நூலால் செய்யப்பட்ட வலை, வடித் தட்டுகள் கொண்டு பிடித்து மாற்ற வேண்டும். குஞ்சுகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் அதாவது நீந்தும் முறை பிராணவாயு குறைபாட்டினால் முக்கியமாக அதிகாலை வேளையில் நீரின் மேல்புறம் வந்து சுவாசிக்கும் என்பதால் கண்காணிக்க வேண்டும். குளத்தில் மீன்குஞ்சுகளுக்கு ஊறுவிளைவிக்கும் மீன்களோ நண்டுகளோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய 10 முதல் 15 செ.மீ. அளவுள்ள மீன்குஞ்சுகளை கூண்டு வளர்ப்பு முறையில் வளர்த்து வந்தால் 80 முதல் 85 சதவீதம் வரை பிழைப்புத் திறன் பெற்று நல்ல பலன் கிடைக்கும். வெளிநாடுகள் இந்த மீன்களை வாங்க தயாராக உள்ளது என மத்திய அரசு கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குநர் முனைவர் எஸ்.கந்தன் தெரிவித்தார்.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி: 34 மாணவர்கள் பிடிபட்டனர்

கடலூர்:
 
              எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் காப்பி அடித்ததாகக் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 34 மாணவர்கள் பிடிபட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் புதன்கிழமை தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 9 மாணவிகள், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 3 மாணவர்கள், காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப் பள்ளி மையத்தில் 7 மாணவர்கள், உடையார்குடி ஆர்.சி. உயர்நிலப் பள்ளி மையத்தில் 12 மாணவர்கள், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 3 மாணவர்கள் காப்பி அடித்ததாகப் பிடிபட்டனர்.இவர்கள் அனைவரும் தனித் தேர்வர்கள். பறக்கும் படையினர் கண்காணிப்பின் போது இவர்கள் பிடிபட்டனர்.

Read more »

பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகம் : கலெக்டர்சீத்தாராமன்தகவல்

கடலூர்: 

               பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகமாக உள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். உலக காசநோய் தின விழா நேற்று கடலூரில் நடந்தது. மருத்துவப் பணிகள் காசநோய்) துணை இயக்குனர் மனோகரன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:

                  மாவட்டத்தில் 24.5 லட்சம் பேர் உள்ளனர். ஐந்து லட்சம் மக்களுக்கு ஒன்று வீதம் 5 இடங்களில் காசநோய் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் 25 இடங்களில் மைக்ரோ மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை செயல்படுத்த தேவையான அதிகாரிகள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 40 ஆயிரத்து 127 பேருக்கு காசநோய் சோதனை செய்யப் பட்டது.

                 தற்போது பொது மக்களிடம் காசநோய் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் பரிசோதனை செய்வதோடு தனியார் மருத்துவமனைகளும், தொண்டு நிறுவனங் களும் இதில் ஈடுபட்டுள் ளன. கடந்த 7 ஆண்டுகளாக காசநோய் தடுப்பில் தொடர்ந்து நமது மாவட் டம் பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்று வருகிறது. காச நோய் உறுதி செய்யப்பட்ட 14000 பேரில் 12380 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 4 ஆண்டுகளில் காசநோயை ஒழித்துவிடலாம். பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகமாக உள்ளது. நோய்க்கான காரணிகளை கண்டறிந்து தடுக்க வேண்டும். நகரம் தூய்மையாக இல்லாததால் புழுதி பறந்து நோயை உண்டாக்குகிறது. இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார் .நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், துணை இயக்குனர் பரஞ்ஜோதி உட்பட பலர் பேசினர். டாக்டர்கள் மகாலிங்கம், கோவிந்தராஜன், கலைமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்


கடலூர்:

                 கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

                   கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிக்காக கடலூர் நகரின் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையான நெல்லிக்குப்பம் ரோட்டில் சாவடி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.பைப்புகள் புதைத்த பின்னர் பள்ளத்தில் மணலை கொட்டி மூடாமல், தோண்டி எடுத்த மண்ணை கொட்டி மூடியதால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகி வயல் வெளிபோல் காட்சி அளித்தது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் பொது நல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் உறுதியாளித்தார்.

                      இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர்-நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு மற்றும் போடிசெட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்தரை கிலோ மீட்டார் தூர சாலையை சீரமைக்க 1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனையொட்டி தற்போது நெல்லிக்குப்பம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய் புதைத்த இடத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அகற்றிவிட்டு அதன் மீது ஜல்லி கொட்டி சாலை அமைக்கப்பட உள்ளது.இதேபோன்று வண்டிப்பாளையம் சாலை விரிவுப்படுத்தி சீரமைக்கும் பொருட்டு சாலையின் மேற்கு பகுதியில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

Read more »

26ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம்பொதுமக்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு


கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                கிராமங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 லட்சம் ஒதுக்கீட்டில் 2006-07ம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 2010-11ம் ஆண்டில் இம் மாவட்டத்தில் மேலும் 140 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

                       அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ் வொரு ஊராட்சியிலும் பணிகளை தேர்வு செய்யவும், பணிகள் மேற்கொள்ள வேண்டிய இடங் களை இறுதி செய்யவும், ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), ஒன்றிய பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழு கிராம மேம்பாட்டிற்கான தேவைகளை அறிந்து அதன் அடிப்படையில் தேர்வு செய்த பணிகள் 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபாவில் வைத்து ஒப்புதல் பெறப்படவுள்ளது. கிராம சபா கூட்டத் தினை சிறப்பாக நடத்த சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டு கிராமசபா கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

Read more »

சிறப்பு பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்

விருத்தாசலம்: 

                 மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் காது கேளாத மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10 வகுப்பு படித்த மாணவர்கள் செல்வமணி, சதீஷ், ஜான்பிரான்சிஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் நேற்று தேர்வு எழுதினர். தலைமை ஆசிரியர் மாயவேல், துறை அலுவலர் தெய்வமணி ஆகியோர் தேர்வு அறையை பார்வையிட்டனர்.

Read more »

பெரியார் கல்லூரியில்காளான் வளர்ப்பு பயிலரங்கம்


கடலூர்: 

                      கடலூர் பெரியார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார். விலங்கியல் துறை பேராசிரியர் ஜெயந்திதேவி வரவேற் றார். புதுச்சேரி குருமாம்பேட்டை காமராசர் கிரிஷி விக்யான் கேந்தரா பேராசிரியர் விஜயலட்சுமி காளான் வளர்ப்பு குறித்து விளக்கினார். அண்ணா பல்கலை கழக விலங்கியல் துறைத் தலைவர் ராமலிங்கம் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கினார். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னதுரை, வினோதா, அருள்தாஸ், ராஜ்குமார், ஞானாம்பிகை ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பழனிவேலு, கண்ணன் பங்கேற்றனர். ராஜாம் பாள் நன்றி கூறினார்.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்: குறிஞ்சிப்பாடியில் 57 பேர் தேர்வு

குறிஞ்சிப்பாடி: 
 
                        குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமை மாவட்ட துணை இயக்குநர் ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

                    இதில் 57 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டனர். முகாமை மாவட்ட துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணராஜ் திடீர் ஆய்வு செய்தார். 
 
மாவட்ட துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணராஜ் கூறுகையில், 
 
                          மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் உயர் சிகிச்சைக்கு தேர்வு செய் யப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழை சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் களை தொடர்பு கொண்டு பெற்றுத்தர வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தவர்களை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரத்திலிருந்து தலா ஒரு வாகனமும், இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2 வாகனமும் மொத்தம் 15 வாகனங்களில் நோயாளிகளை அழைத்து சென்று உரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

                    மாநிலத்தில் கொசு ஒழிப்பு திட்டத்திற்காக மாவட்டத்திற்கு ஒரு வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டாரம் தேர்வு செய்து கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. வரும் 4ம் தேதி காட்டுமன்னார்கோவில் வட்டாரத்தில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளையலணி விழா நடக்கிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி பெற வரும் 5ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்களை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கரன், மாவட்ட நலக் கல்வியாளர் ராமமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி, சுகாதார மேற் பார்வையாளர் சுப்ரமணியன், ஆய்வாளர் பாண்டியராஜன் உடனிருந்தனர்.

Read more »

அகில இந்திய மருத்துவ,பொறியியல் நுழைவுத்தேர்வு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயிற்சி துவக்கம்


கடலூர்: 

                    புதுச்சேரி பிம்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் துவங்கியது.

                     துவக்க விழாவிற்கு பிம்ஸ் நிறுவனத் தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். பேராசிரியர் நடனசபாபதி வரவேற்றார். பள்ளி முதல் வர் நடராஜன் கல்விக்கான சிறப்பு புத்தகங்களின் முதல் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.சிறுகிராமம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் சிறப்புரையாற்றினார். பயிற்சி வகுப்பு மே 10ம் தேதி வரை நடக்கிறது. அகில இந்திய பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் (ஐ.ஐ.டி.,ஏஐஇஇஇ,) முறையே ஏப்ரல் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், ஜிப்மர் நுழைவுத் தேர்வு ஜூன் 6ம் தேதியும் நடக்கிறது.நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேசன், சார்லஸ்,டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Read more »

புதர் மண்டியிருந்த தச்சூர்-லக்கூர் மண் பாதை வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சீரமைப்பு

ராமநத்தம்: 

                 பல ஆண்டாக புதர் மண்டியிருந்த தச்சூர்-லக்கூர் மண் சாலை தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. ராமநத்தம் அடுத்த தச்சூர்-லக்கூர் இடையேயான 3.5 கி.மீ., மண் சாலை 20 ஆண்டாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டியதால், பொதுமக்கள் அருகில் உள்ள விளை நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
 
                     இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குறுகலான பாதை சுமார் 22 அடி அகலத்திற்கு விவசாய பொருட்களை ஏற்றி வரும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் உள்ளூரை சேர்ந்த 150 பேர் ஈடுபட்டுள்ளனர். பணியை ஊராட்சி தலைவர் சந்திரா, துணை தலைவர் விஜயலட்சுமி, உறுப்பினர்கள் கொளஞ்சியம்மாள், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Read more »

சிதம்பரம்- கொடியம்பாளையத்திற்கு முதல் முறையாக மினி பஸ் இயக்கம்


கிள்ளை: 

                    சிதம்பரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கொடியம்பாளையத்திற்கு முதல் முறையாக மினி பஸ் இயக்கப்பட்டது.

                     சிதம்பரத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில் நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு 420 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பிடிக்கும் மீன், நண்டு, இறால் வகைகளை நகர பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய சாலை வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
 
                    கடந்த சுனாமியின் போது கிராமத்தை பார்வையிட வந்த அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு கொடியம்பாளையம் உப்பனாற்றில் பாலம் கட்டி, தெற்கு பிச்சாவரம், திருவாசலடி வழியாக சிதம்பரம் செல்லும் சாலையை சரி செய்து அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையேற்று ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் சுனாமி நிதி (2008-2009) 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலை துறை மூலம் உப்பனாற்றில் பாலம் கட்டப்பட்டது. அதனை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
                        தற்போது சிதம்பரத்தில் இருந்து மாரியப்பா நகர், சிவபுரி, குயவன் பேட்டை, அம்பிகாபுரம், கீழப்பெரம்பை, இளந்திரிமேடு 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முதல் முறையாக மினி பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனால் அப்பகுதி மீனர்வகள் தொழிலுக்கு செல்லாமல் கிராமத்தில் இருந்தனர். சிதம்பரத்தில் இருந்து சென்ற மினி பஸ்சை கிராம தலைவர்கள் கோவிந்தசாமி, குமணன், பொன்னுசாமி, கடல் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மகாலட்சுமி, ஊராட்சி துணை தலைவர் தனபால் முன்னிலையில், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் கொடியசைத்து பஸ்சை இயக்கி வைத்தார்.

                         சிதம்பரத்தில் இருந்து முதல் முறையாக இயக்கப்பட்ட இந்த பஸ்சை கொடியம்பாளையம் எல் லையில் இருந்து கிராம மக்கள் வாண வேடிக்கை, வாத்தியங்கள் முழங்க ஊருக்குள் அழைத்து சென்றனர்.மேலும் சிதம்பரம், சீர்காழியில் இருந்து கொடியம்பாளையத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

பூமி வெப்பமடைதல் குறித்துவிழிப்புணர்வு ஊர்வலம்

பண்ருட்டி: 

             பண்ருட்டி அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்கள் பூமி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

                     கல்லூரியிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு புனித அன்னாள் பொறியியல் கல்லூரி நிர்வாகி வில்லிஜீஸ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் பச்சையப்பன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புனித அன்னாள் பொறியியல் கல் லூரி முதல்வர் ஹெலன் சந்திரா, சிவிக் எக்ஸ் னோரா தலைவர் பசுபதி, புலவர் பொன் வேந்தன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பண் ருட்டி பயணியர் விடுதி அருகே நிறைவடைந்தது. என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

நாவலர் பொறியியல் கல்லூரியில்சீனியர் மாணவர்களுக்கு விருந்து

ராமநத்தம்: 

                     தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி யில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, அதே துறையை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்தி நினைவு பரிசு வழங்கினர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம், துணை முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி நினைவு பரிசுகள் வழங்கி பேசினார். மாணவி சவுமித்ரா நன்றி கூறினார்.

Read more »

தொலைபேசி ஊழியர்கள் 50 பேர் ரத்த தானம்


நெய்வேலி: 

                     நெய்வேலியில் தொலைபேசி ஊழியர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்திய தொலைபேசி துறையின் ஊழியர் சங்கம் துவங்கிய 10ம் ஆண்டை முன்னிட்டு நெய்வேலி தொலைபேசி அலுவலக வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமை என்.எல்.சி. பொது மருத்துவமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். சங்க உறுப்பினர்கள் 50 பேர் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தொலைபேசி துறையின் துணை பொது மேலாளர் சேகர், டாக்டர்கள் சுயம்பிரகாஷ், சண்முகக்கனி, பி.எஸ். என்.எல். அதிகாரிகள் ஜெயக்குமார், மன்மதன், ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் மதியழகன், சம்பந்தம், கோவிந்தராஜலு, சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

துல்லிய பண்ணை மருத்துவ பயிர்கள்வேளாண் பல்கலை., துணைவேந்தர் ஆய்வு


சிறுபாக்கம்: 

                சிறுபாக்கம் அருகே துல்லிய பண்ணை மருத்துவ பயிர்களை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம் அடுத்த அடரிகளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராசு தனது வயலில் செல்போன் மூலம் இயங்கக்கூடிய உயர் ரக தொழில் நுட்ப சொட்டு நீர் பாசனம் அமைத்து மூங்கில் பயிரிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் முருகேசபூபதி நேற்று பார்வையிட்டார்.அதுபோல் விவசாயி கருணாமூர்த்தி வயலில் பயிரிடப்பட்டுள்ள கோலியஸ் மருத்துவ பயிரினையும் பார்வையிட்டு விவசாயிக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
 
                      விவசாயிகளின் முயற்சிகளை பாராட்டிய துணைவேந்தர், தொடர்ந்து விவசாயிகளிடம் நீர் சிக்கனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படும் நீர் சிக்கன முறைகள் மற்றும் நீர் வழி உர நிர்வாகம் குறித்து விளக்கினார்.ஆய்வின் போது வேளாண் பல்கலை கழக விரிவாக்க கல்வி இயக்குனர் கலைசெல்வன், அறிவியல் நிலைய பேராசிரியர் சாத்தையா, உதவி பேராசிரியர் ராஜி, தோட்டக்கலை துணை இயக்குனர் முகமதுயாஜி, உதவி இயக்குனர்கள் முருகன், ரமணன், அலுவலர்கள் கோவிந்தராசு, தர்மலிங்கம் உடனிருந்தனர்.

Read more »

காட்டுமன்னார்கோவிலில் இன்று மின் நிறுத்தம்

சிதம்பரம்: 

                   காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று (25ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பழஞ்சநல்லூர், குருங்குடி, கண்டமங்கலம், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், மோவூர், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், டி.புத்தூர், டி.நெடுஞ்சேரி, விளாகம், விருதாங்கநல்லூர், கந்தகுமரன், மதுராந்தகநல்லூர், குமராட்சி, பருத்திக்குடி, அரசூர், வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

பொது இடங்களில் கோவில்: வருவாய் துறையினர் அளவீடு

நெல்லிக்குப்பம்: 

                 புறம்போக்கு இடங்களில் உள்ள கோவில்களை வருவாய் துறையினர் அளப்பதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு புறம்போக்கு இடங்களில் கட்டப் பட்டுள்ள கோவில்களை புகைப்படங்கள் எடுக்கவும். அந்த இடத்தை அளக்கவும் உத்தரவிட்டுள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியில் புறம் போக்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் களை வருவாய் துறையினர் அளந்து வருகின்றனர். கோவில்களை இடித்து விடுவார்களோ என பக்தர்களிடம் பீதி நிலவுகிறது. புறம்போக்கில் கட்டியுள்ள கோவில் இடங்களை அளந்து கோவில் பெயருக்கு பட்டா வழங்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

பரங்கிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல கோரிக்கை


பரங்கிப்பேட்டை: 

              பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

                     சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், தனியார் அலுவலகங்கள் என மக்கள் புழக்கம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் எதிரேவரும் வாகனம் தெரியாத அளவிற்கு வளைவுகள் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லும் வாகனங்கள் அகரம் தேரோடும் வடக்குவீதி வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வேப்பூரில் அரசு மருத்துவமனை இருபது கிராம மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்: 

                  வேப்பூரில் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் வேப்பூர் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

                      வேப்பூரை சுற்றி பூலாம்பாடி, நிராமணி, பெரியநெசலூர், மாளிகைமேடு,  நாரையூர், காட்டுமயிலூர், அரியநாச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட் டோர் தங்களது அன்றாட பணிகளுக்காக வேப்பூர் வந்து செல்ல வேண்டியுள்ளது.தினசரி இரவு, பகலாக தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் பல்வேறு காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால், அதில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில சமயங்களில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் நலனை கருதி தரம் வாய்ந்த மருத்துவமனையை அரசு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read more »

புவனகிரி பேரூராட்சி பஸ் நிலையம்'பார்க்கிங்' பகுதியாக மாறியது

புவனகிரி:

                    புவனகிரி பஸ் நிலையம் டாக்சி, கார் நிறுத்தமாக மாறியுள்ளதால் பயணிகள் சாலையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.புவனகிரியில் பேரூராட்சி சார்பில் பயணிகளின் வசதிக்காக 20 ஆண்டிற்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். பஸ் நிலையம் அருகே பொது நூலகம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்களும், பெண்களும், பள்ளி மாணவர்களும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் பொதுநூலகம் அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

               போதாக்குறைக்கு கார், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி பஸ் நிலையத்தை வாகன நிறுத்தமாக மாற்றிவிட்டனர்.இதனால் பஸ் பிடிக்க வரும் பயணிகள், நூலகத்திற்கு வரும் மாணவியர்கள் பஸ் நிலையத்தினுள் வந்து அமர்ந்து இளைப்பாரக்கூட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் பஸ் நிலையம், பயணிகளுக்கு பயன்தரும் வகையில் மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மக்கள் மையம் துவக்கம்


திட்டக்குடி: 

                    பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட உந்துனர் அறக்கட்டளையின் ஆதரவுடன் மக்கள் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் நலன் கருதி மத்திய,  மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை, தோட்டக் கலை, மூலிகை சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத்தொகை மற்றும் நுகர்வோர் உரிமை சட்டம், முழு சுகாதார திட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் மையமாக செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் மக்கள் பயன் பெறும் வகையில் புகார் பெட்டியும், பாம்பு கடிக்கு மருந்தும் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட் டுள்ளது.

Read more »

கூலியாட்கள் வராததால் வேர்க்கடலைஅறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை

கடலூர்:

                    வேர்க்கடலை அறுவடை செய்ய ஆட்கள் வராதததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எண்ணெய் வித்து பயிரான வேர்க்கடலை கடலூர் மாவட்டத்தில் மானாவாரியாகவும், இறைவையாகவும அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து ஜனவரியில் சாகுபடி செய்த வேர்க்டலை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.இதை அறுவடை செய்ய வரும் பெண்களுக்கு நாள் கூலியாக கொடுப்பதில்லை. வேர்க் கடலை செடியை பிரித்தெடுக்கும் அளவை பொறுத் துதான் கூலி வழங்கப்படுகிறது.

                 இந்த வேலை மிகவும் கஷ்டமில்லாமலும், வயதானவர்கள், சிறுவர்கள் கூட எளிமையாக செய்யலாம் என்பதால் ஏராளமானவர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது வழக்கம். தற் போது கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் வேர்க்கடலை அறுவடை துவங்கியுள்ளது. கிராமப்புறங்களில் நடந்து வரும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிக்கு சென்றுவிடுவதாலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதாலும் வேர்க்கடலை அறுவடை பணி பாதித்துள்ளது. ஒவ்வொரு நிலத்திலும் ஒரு சிலர் மட்டுமே அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். அரை ஏக்கரில் பயிர் செய்துள்ள வேர்க்கடலை ஓரிரு நாளில் முடிய வேண்டிய அறுவடை தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Read more »

வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கஅதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை


பரங்கிப்பேட்டை:

                 வாய்க்காலில் தரைப் பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                   பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை ஊராட்சியின் மேற்கு பகுதியில் 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளை நிலங்களுக்கு பாசன வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். பல ஆண்டாக வாய்க்கால் சிமென்ட் குழாய் மூலம் வழி ஏற்படுத்தி டிராக்டர்கள் செல்லவும், மாட்டு வண்டியில் உரங்களை ஏற்றி செல்லவும், விளைந்த நெல், உளுந்து மூட்டைகளை வெளியில் எடுத்தும் வந்தனர்.

                  நான்கு ஆண்டிற்கு முன் வாய்க்காலை தூர் வாரும்போது சிமென்ட் குழாய், மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் டிராக்டர், மாட்டு வண்டிகள் மற்றும் பொதுமக்கள் வாய்க்காலை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
                        இதனால் பாதிக்கப் பட்ட விவசாயிகள், வாய்க் காலில் தரைப்பாலம் அமைத்துதரக்கோரி கலெக்டர் குறைகேட்பு கூட்டத்திலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விவசாயிகள் பயன் பெரும் வகையில் பாலம் கட்டிதர பொதுப்பணிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

Read more »

பண்ருட்டி உழவர் சந்தை முடங்கியது : விவசாயிகள் வருகை இல்லை


பண்ருட்டி: 

                     விவசாயிகள் வருகை இல்லாததால் பண்ருட்டி உழவர் சந்தை, எவருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது.

                    பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உழவர்சந்தையை கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அப்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். உழவர் சந்தை திறந்து மூன்று மாதங்கள் வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 2001ம் ஆண்டு முதல் மூடப்பட்டது.

                      பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 3.6.2006ல் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் உழவர் சந்தை திறந்த சில நாட்களில் பொதுமக்கள் வருகை குறைவால் விவசாயிகள் உழவர் சந்தைக்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு வராமல் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றதால் உழவர் சந்தை முடங்கியது.

                   ஆனால் தோட்டக் கலை, வேளாண்மை துறை அதிகாரிகள் உழவர் சந்தையில் தினந்தோறும் விவசாய பொருட்கள் வருவதாக மேலதிகாரிகளுக்கு பொய் கணக்கு காண்பித்து வந்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு நடந்த தமிழக கலெக்டர்கள் மாநாட் டில் தமிழக முதல்வர் தமிழகத்தில் பண்ருட்டி உழவர்சந்தை தான் செயல்படாமல் உள்ளது என குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

                     இதனையடுத்து அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு உழவர் சந்தை செயல்பட நகராட்சி கமிஷனர், வேளாண், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர், டி.எஸ்.பி., உள்ளிட்டோர் கொண்ட குழு மூலம் உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார். இக்குழுவினர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க ஏற்பாடு செய்தனர். அதிகாரிகள், போலீசார் கட்டாய அழைப்பினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து எடை போட்டு, அதிகாரிகளிடம் கணக்கு காட்டிவிட்டு மீண்டும் பண்ருட்டி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

                      கடந்த எம்.பி.,தேர்தலுக்கு பின் உழவர்சந்தையில் ராமர்,லட்சுமணன் சகோதரர்கள் மட்டுமே காய்கறி கடை வைத்துள்ளனர். விவசாயிகள் யாரும் விளைபொருட்கள் கொண்டு வருவதில்லை. இதனால் செயல்படாத உழவர்சந்தையாக உள்ளது.பண்ருட்டி சென்னை சாலையில் போக்குவரத் துக்கு இடையூறாக காய்கறிகள் கமிஷன் மண்டி வியாபாரிகள், கும்பகோணம் சாலையில் பலாப்பழம் விற்பவர்கள், அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை கடலூர் சாலையில் நடைபெறும் கொய்யா மார்க்கெட் ஆகியவற்றையாவது உழவர் சந்தையில் செயல் படுத்த அதிகாரிகள் முன் வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டு வரும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க இயலும்.இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தொடரும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகளின் சுரண்டல் புகார்தனிக்குழு அமைத்து கண்காணிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

                   அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அரசு வழங் கும் தொகையினை சுரண் டும் அதிகாரிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் கற்றல் கற்பித்தல் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்வழிக்கற்றலை சிறப்புடன் செயல்படுத்திட பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

                   கடந்த 2008- 09ம் கல்வியாண்டில் செயல்வழிக்கற்றல் அட் டைகளில் கடினமான பாடப்பகுதிகள், குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையொட்டி 2009- 10ம் கல்வியாண்டில் செயல்வழிக் கற் றல் அட்டைகள் மாற்றம் பெற்று கடின பகுதிகளை நீக்கி, புதிய கற்றல் அட்டைகள் வடிவமைத்து வட்டார வள மையங்கள் மூலம் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள வட்டார வளமையத்தின் மூலம் அதன் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு புதுப்பித்த அட்டைகளை நேரடியாக வழங்கிட அனைவருக்கும் கல்வி திட்ட மையம் மூலம் வட்டார வள மையத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கியது.கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கற்றல் கற்பித்தல் அட்டைகளை, அந்தந்த பள்ளி ஆசிரியர்களே வட்டார வளமையத்திற்கு நேரில் சென்று எடுத்து வந்தனர். வாகனங்களில் நேரடியாக சென்று வழங்கப்படாததால், அரசு வழங்கிய தொகையினை அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு வழங்குவார்கள் என நினைத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

                      சில வாரங்களுக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு அரசு வழங்கிய 50 ரூபாய் பணத்தில் முறைகேடு நடந்ததாக ஆசிரியர்கள் புலம்பினர். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் செயல் வழி கற்றல் அட்டைகள் வழங்கிட தமிழக அரசு ஒதுக்கிய வாகன வாடகை தொகையிலும் முறைகேடு செய்திருப்பது ஆசிரியர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
 
                     தமிழக அரசு செயல்வழிக்கற்றல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சியினை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறது. இருப்பினும் சில அதிகாரிகளின் செயலால் மொத்த திட்டமும் வீணாகும் நிலை உள்ளது. இதனை உணர்ந்து அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நடைபெறும் தவறுகளை களைய தனிக்குழு அமைத்து கண்காணித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து இறைச்சி வியாபாரிகள் கடையடைப்பு

பண்ருட்டி: 

              பண்ருட்டியில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

                  பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் நவீன ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆட்டை பரிசோதித்து அறுத்து முத்திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இதனால் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் வதைகூடத்தில் ஆடுகளை அறுக்காமல் தாங்களாகவே அறுத்து வியாபாரம் செய்து வந்தனர். நகராட்சி ஊழியர்கள் கடந்த வாரம் ஆட்டு இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தி நகராட்சி முத்திரை இல்லாத ஆட்டு இறைச்சிகளை பெனாயில் ஊற்றி அழித்தனர். இதனையடுத்து ஆட்டு இறைச்சி வியாபார சங்க நிர்வாகிகள் ஆடு அறுத்து முத்திரையிட கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட நகராட்சிகளில் குறைந்த கட்டணம் மட்டுமே வசூல் செய்வதாகவும், பண்ருட்டி நகராட்சியில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நேற்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
 
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி தினமலர் நிருபரிடம் கூறியதாவது:

                        பண்ருட்டி நகராட்சியில் நவீன ஆட்டு இறைச்சி புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆடுகளை அறுப்பதற்கு முன் கால்நடை மருத்துவரால் சோதனை செய்த பின்பே நகராட்சி முத்திரையிடப்படுகிறது. நகர மன்ற தீர்மானத்தின் படி 100 ரூபாயாக இருந்த முத்திரை கட்டணம் தற் போது 40 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் கட்டணம் வசூலிக் கப்படுகிறது என்றார்.

Read more »

பில்லாலியில் கோஷ்டி மோதல்5 பேருக்கு வலை

நெல்லிக்குப்பம்: 

                   சைக்கிள் மோதிய தகராறு இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சைக்கிளில் சென்ற போது எதிரே நடந்து வந்த சந்திரகிரி மீது மோதினார். இருவருக்கும் வாய்த்தகராறு நடந்தது. இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இருதரப்பையும் சேர்ந்த நடராஜன், தனலட்சுமி, கீதா ஆகியோர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருதரப்பையும் சேர்ந்த ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Read more »

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                  கடலூரில் தமிழ் மாநில கட்டட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூரில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார்.

                           துணை செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். செயலாளர் அஞ்சாபுலி வரவேற்றார். மாநில தலைவர் நேரு சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் சுப்பு, மாவட்ட மகளிரணி செயலாளர் நாகம்மாள், துணை செயலாளர் தவமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் இலவச பதிவு மற்றும் புதுப்பித்தல் முறை மற்றும் தொழிலாளர் விரோத அரசாணைகளை உடன் ரத்து செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கென தனி அலுவலகம் அமைக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவான சமூக பாதுகாப்பு எண் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தபபட்டன. முன்னதாக கட்டுமான தொழிலாளர்கள் பீச்ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.

Read more »

லாரி மீது மினிலாரி, கார் மோதல் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

சிறுபாக்கம்:

               தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் ஒருவர் இறந்தார். சென்னை செங்கல்பட்டு ராகவன் நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). இவர் தனது சகோதரர் ரவியுடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு மினி லாரியில் சென்றுக் கொண்டிருந்தார். வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற இரும்பு கம்பி ஏற்றிய லாரி மீது மோதியது. அதில் மினிலாரியில் பயணம் செய்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே லாரி மீது மற்றொரு கார் மோதியது. அதில் சென்னையை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துகள் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படைவசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டை: 

                    பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளை, தில்லைவிடங்கன், அகரம், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலங்கள் வாங்கவும், விற்கவும், அடமானம் வைக்கவும், பிறப்பு, இறப்பு சான்றுகள் வாங்கவும், திருமணம் பதிவு செய்துகொள்ளவும் என தினமும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.

                            கடந்த 1887ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. அதுமுதல் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் வயதான முதியோர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பிடவசதிகள் இல்லாததால் வயதான முதியோர்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்துகிடக்க வேண்டியுள்ளது.தினசரி அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதி செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி: 

                  மேட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுக்குப்பம் கிராமத்தில் குளத்தை ஆழப்படுத்தி படித்துறை அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் இரண்டு வாட்டர் டேங்கில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். மேட்டுக்குப் பம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, பானுமதி, ஜோதி, செல்வராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவீந் திரன், மாவட்ட தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் ஏழுமலை, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வாசு, துணை தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Read more »

ஆர்ப்பாட்டம்


கடலூர்: 

                    பி.டி., கத்தரிக்காயை தடை செய்ய வலியுறுத்தியும், உர விலை ஏற்றத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு முகமது அலி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், காமராஜ், ராமசாமி, தட்சணாமூர்த்தி, சந்திரசேகரன், லோகநாதன், மணி உட்பட பலர் பங்கேற்றனர். கடலூர் ஒன்றிய தலைவர் குமார் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior