உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டி பலாவுக்கு அதிக "கிராக்கி'


பண்ருட்டி:
 
                பலாப் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜாக்கலின் எனும் நுண்பொருள் மனித குலத்தை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் திறனுள்ளதாக பிரான்சு நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார். 
 
                  பழ வகையில் அதிக எடையும் மகசூல் திறனும் கொண்டது பலா. பண்ருட்டி பலா பழத்தில் அதிக சுவை உள்ளதால் இதற்கு தனிப் பெருமை உண்டு. ஆரம்ப காலத்தில் வரப்பு ஓர பயிராகவும், வீட்டுத் தோட்டத்திலும், நிழல் தரும் மரமாகவும் அறை கலன்கள் மற்றும் இசைக் கருவிகள் செய்வதற்காகவும் வளர்க்கப்பட்டது. பலா மரத்தின் சிறப்புகளையும், அதிக வருவாய் ஈட்டும் திறன், குறைந்த பராமரிப்புச் செலவுகளை உணர்ந்த விவசாயிகள் தற்போது ஏக்கர் கணக்கில் பயிரிட்டு பண்ருட்டிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
 
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்கநர் பி.ஹரிதாஸ் கூறியது: 
 
                   வறட்சி மற்றும் கனமழை பகுதியில் வளரும் பலா மரங்கள் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக பலன் தரக்கூடியவை. மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிற சுளைகளைக் கொண்ட பல ரக மரங்கள் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த மரம் 600 காய்களுக்கு மேல் காய்க்கும். மேலும் பலா மரம் விலை மதிப்பு மிக்கது. கேரளம், கர்நாடகம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலாச்சுளை, பிஞ்சு, முற்றாத காய் ஆகியவற்றில் இருந்து பலா ஜூஸ், அல்வா, அப்பளம், வற்றல், மாவு ஆகியவை தயாரித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.÷தமிழகத்தில் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான பணிகளை விவசாயத் துறையின் மேற்கொண்டுள்ளனர். தமிழகச் சந்தையில் பலாவின் விலை ஏற்றத் தாழ்வுகளை கொண்டுள்ளது. சாகுபடியாளர்கள் பயன்பெற வேண்டுமானால் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும். விற்பனை வாய்ப்பை கண்டறிய கூட்டுறவு சங்கத்தின் மூலம் தொழிற்சாலைகளை உருவாக்க தொழில் முனைவோர் உருவாக வேண்டும்.÷மேலும் விபரங்களுக்கு பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம் என பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

Read more »

வரப்பு இல்லாத விவசாயம்: புதிய செயல்திட்டம்

சிதம்பரம்:

                   கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் விவசாயத்தில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாத காராணத்தால் குறைந்த அளவு மகசூல் வரும் சூழல் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் பெறும் வகையில் புதிய விவசாய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். 

வரப்பு இல்லா விவசாயம்:  

                    விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம், புதிய விவசாய தொழில்நுட்ப அறிமுகம், அதிகளவு சந்தை வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டுதான் வரப்பு இல்லா விவசாயம் என்ற புதிய விவசாய முறை இந்தியாவின் சில வேளாண் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.இந்த புதிய விவசாய செயல்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் கூடிப் பேசி, தங்களின் சிறிய நிலங்களை வரப்புகளை அகற்றி ஒன்றுபடுத்த வேண்டும். இவ்வாறு கிராம அளவில் ஒன்றாக 10 முதல் 15 விவசாயிகள் ஒன்றாக சேரும் போது ஒரளவு அதிக பரப்பளவு நிலத்தை ஒன்றாக சாகுபடியின் கீழ் கொண்டு வர முடியும். பின்னர் மண் மற்றும் நீர் பரிசோதனை வாயிலாக அறிவியல் பூர்வமாக நிலத்தின் தன்மைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

                   குறிப்பாக நிலத்தின் தன்மைக் கேற்ப ஒரு பகுதியில் காய்கள், தோட்டக்கலை பயிர்கள், சிறு தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைக்கேற்ப தேவைப்படும் வேளாண் விளை பொருள்களை நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டமிட்டு சாகுபடி செய்யலாம். வரப்பு இல்லா விவசாயத்துக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கேற்ப வேளாண் விளை பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்புதிய செயல் திட்டத்தில் உருவாக்கப்படும் பொதுவான விவசாய கட்டமைப்புகளை பொதுவான விவசாய நிலப்பரப்புகளில் குறிப்பாக வாய்க்கால் பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் அமைத்துக் கொள்வதன் வாயிலாக பல நிகழ் மற்றும் எதிர்கால தேவை மற்றும் பொது பயன்பாடு பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்வுகள் பெறலாம். இவ்வாறு வரப்பு இல்லாத விவசாயத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் ஒரு விவசாய சங்கமாக தங்களை பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து நிதி சேவைகளை பெறலாம். 

                     இச்செயல் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்கள் தனியாகவே பதிவு செய்யப்பட்டு பட்டா உள்ள நிலையில் தனி நபராகவும், விவசாய நலத்திட்டங்களில் பங்கு பெற முடியும்.பிற பயன்கள்: சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டமிட்டு விவசாயப் பணிகளை இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்தும் போதும் அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய முடியும். உதாரணமாக சிறு விவசாயி தனிப்படை முறையில் ஆழ்கிணறுகள் தனியாக அமைப்பதை விட கூட்டாக அமைக்கும் போது செலவுகள் குறையும், பல புதிய விவசாய தொழில்நுட்பங்களாக சொட்டு நீர் பாசனம் ​(Drip​ irrig​ation),  தெளிப்பு நீர் பாசனம் ​(sprinkler​ Irrig​ation)​  ஆகியவற்றில் அதிகளவு வேளாண் முதலீடுகள் செய்து தங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை வெகுவாக பெருக்க முடியும்.விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவுக்கு ஏற்பவும், தங்களின் மனித உழைப்புக்கு ஏற்பவும்  வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளலாம். வெளி ஊர்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் பல விவசாய நிலங்கள் உற்பத்தி இல்லாமல் தரிசாக கிடப்பது தவிர்க்கப்படும். அவர்களுக்கு விவசாயிகள் நிர்ணயம் செய்த குத்தகைப் பணத்தை பருவம் தோறும் வழங்கலாம். 

                       பெரிய வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முன்பே விலை நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்து விற்று அதிகளவு லாபம் பெறலாம.எனவே தமிழகத்தின் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும் இதுபோன்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்திகள் வாயிலாக அதிகளவு லாபம் பெறலாம்.வரப்பு இல்லா விவசாயத்தை கிராமங்களில் அறிமுகம் செய்து, விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

Read more »

வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம்

                  வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 கே.வி. சர்வேசுவரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                          வருங்கால வைப்பு நிதி ஆணையம் தனது சந்தாதாரர்களுக்கான பண விநியோகச் சேவையை கணினிமயமாக்கி உள்ளது. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மற்றும் இணைய வசதியுடன் http://www.epfochennai.tn.nic.in/obcb/oblogin.aspx கூடிய வங்கி சேவையின் பயன்களை சந்தாதாரர்களுக்கு வழங்கும் வகையில் தடையற்ற முறையில் அவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு உடனடியாக பண பரிமாற்றம் செய்து வரவு வைக்கும் திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தாதாரர்களுக்கு வங்கியில் அவர்களது பெயரில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். தங்களது கையொப்பமிட்ட ரத்து செய்யப்பட்ட காசோலை (காசோலை எண் சான்றுக்காக) அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் பிரத்யேக இணையதளம் மூலம் சந்தாதாரர்கள் தங்களது (வருங்கால வைப்பு நிதி) கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரங்களை அறியலாம். இதற்காக சந்தாதாரர் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக சங்கேத வார்த்தை (பாஸ்வேர்ட்) வழங்கப்பட்டு, அவரால் மட்டுமே அதை செயல்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை காக்கப்படும். ரகசிய சங்கேத வார்த்தை குறித்து மேலும் விவரங்களை அறிய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலரை நேரில் அணுகலாம்.

3 ஆண்டுகள் செயல்படாத கணக்குகளுக்கு...: 

                       தொடர்ந்து 3 ஆண்டுகள் செயல்படாத, கைவிடப்பட்ட கணக்குகளில், வருங்கால வைப்பு நிதி விவரங்களுக்கு (செட்டில்மெண்ட்) தீர்வு காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சந்தாதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் அதற்கான படிவங்களை வேலை கொடுப்பவர் (எம்ப்ளாயர்) மூலம் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் தங்களது அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் செயல்படாத நிலையில் இருந்த கணக்கில் இருப்பில் இருந்த தொகையை இப்போது நடப்பில் உள்ள கணக்குக்கு மாற்றவும், எடுக்கவும் முடியும். சந்தாதாரர் காலமானால், அவரது சார்பில் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர் என்றார் கே.வி. சர்வேசுவரன்.


Read more »

செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்

சென்னை:

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார்.   

                    திமுக அணியில் பாமக உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், கருணாநிதியும்,  ராமதாசும்  ஒரே மேடையில் பேசுகின்றனர். திமுக அணியில் பாமக இருப்பதாக முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவரும் அறிவித்தார். இதுகுறித்து தயக்கம் காட்டிய பாமக, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தனது முடிவை மாற்றிக் கொண்ட திமுக தானும் கட்சி நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பிறகே கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வோம் எனக் கூறியது. இதனிடையே, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழுக்காக போராடும் ஒரே கட்சி தங்களது கட்சி மட்டுமே எனப் பேசினார்.  திமுக-பாமக இடையே அரசியல் ரீதியாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.  கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்க விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார். 

                    இதில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டு வளாகத்தில் பொதுக் கண்காட்சியை ஜூன் 24-ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்கிறார். இணையதளக் கண்காட்சியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைக்கிறார். கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை மாநாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளன. மாலை வேளையில் நாடகங்களும் அரங்கேறுகின்றன.  சிறப்புக் கருத்தரங்கம்: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் ஜூன் 25-ம் தேதி சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர். அதில், பாமக நிறுவனர் பங்கேற்றுப் பேசுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோரும் கருத்தரங்கில் பேசுகின்றனர். ஜூன் 27-ம் தேதி மாநாட்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஆ.ராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்

Read more »

என்.எல்.சி.யில் பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் உண்ணாவிரதம்


நெய்வேலி:
 
                என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இந்த உண்ணாவிரதத்தில் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனும் ஈடுபட்டுள்ளார்.
 
                    என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்துக்கான சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 3-ம் நாளான புதன்கிழமை வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், 
 
                        "6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியபோது, 2 மாதங்களுக்குள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறிய நிர்வாகம் 6 மாதமாகியும் நிறைவேற்றவில்லை. 48 மணிநேரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் என்எல்சி தலைவரின் வீடு முற்றுகையிடப்படுவதோடு, இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்படும், மேலும் பாமக தொழிற்சங்கமும் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காது. எங்களை வன்முறைக்குத் தூண்ட வேண்டாம். ஜனநாயக முறையிலே வேண்டுகோள் வைக்கிறோம். கோரிக்கைக் குறித்து நிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை நானும் உண்ணாவிரத்தில் பங்கேற்கவுள்ளேன். என்எல்சி நிர்வாகத்தினர் மக்கள் பிரதிநிதிகளை மதித்து நடக்க வேண்டும்' என்றார் வேல்முருகன். 
 
'உச்ச நீதிமன்றம் திறந்த பிறகுதான் பிரச்னைக்கு தீர்வு' 
 
                         என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் படிப்படியாக இணைப்பது என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்கோ-சர்வ் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக இதே பிரிவில் உள்ள மற்றொரு தொழிற்சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்திருப்பதால், ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் திறந்த பிறகு, வழக்கு வாபஸ் பெறுவதற்கான பணிகள் தொடங்கும். அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக இன்கோ-சர்வ் பிரிவில் இணைக்கப்படுவார்கள். இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் புத்தகம், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கி வருகிறது. அவர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் நிர்வாகம் வழங்கி வருவதாகவும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் கடல் கொந்தளிப்பு: மீன் பிடிக்க முடியாமல் படகுகள் கரை திரும்பின


திடீர் கடல் கொந்தளிப்பு காரணமாக புதன்கிழமை காலை கடலூர் துறைமுகத்துக்கு அவசரமாகக் கரை திரும்பிய மீன் பிடிப் படகுகள்.
கடலூர்:

                வங்கக் கடலில் திடீரென ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான படகுகள் மீன் பிடிக்க முடியாமல் புதன்கிழமை காலை கரை திரும்பின.

                  கடலூரில் புதன்கிழமை காலை முதல், வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த  மழைக்கு ஏதுவான சூழ்நிலை உருவானது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசியது.  பகல் முழுவதும் சூரியனைக் காண முடியவில்லை. அவ்வப்போது லேசான மழைத்தூறல் காணப்பட்டது. கோடை வெப்பம் வெகுவாகத் தணிந்து இருந்தது. கடலூர் மற்றும் இந்த மாவட்டத்தின் கடலோர மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும், நூற்றுக்கணக்கான பெரிய இயந்திரப் படகுகளும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று இருந்தன. புதன்கிழமை இரவே மீன்பிடிக்கச் சென்று இருந்த இந்தப் படகுகள், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்க முடியாமல், புதன்கிழமை காலையில் வேகவேகமாகக் கரைக்கு திரும்பின.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 

                         வங்கக் கடலில் ஆழ்கடலில் திடீரென கொந்தளிப்பு ஏற்பட்டது. நீரோட்டம் மாறியது. இதனால் மீன்பிடிக்க முடியாமலும் பாதுகாப்பற்ற நிலையும் உருவானது. எனவே படகுகள் அனைத்தும் புதன்கிழமை அதிகாலை முதல் கரைக்குத் திரும்பின. மீன்கள் கிடைக்கவில்லை.  மாலையில் அலைகள் சீற்றம் சாதாரண நிலைக்குத் திரும்பியது. கடல் கொந்தளிப்பும் சற்று தணிந்து காணப்பட்டது. இரவில் படகுகள் மீன் பிடிக்கச் செல்லும் என்று எதிர்பர்க்கப்படுகிறது என்றார்.

Read more »

பழைய பேப்பருக்கு பதிலாக கோழிக் குஞ்சு: தெருவோர வியாபாரத்தில் புதிய யுக்தி


பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கோழிக் குஞ்சுகள்.
பண்ருட்டி:

                பண்ருட்டி பகுதியயில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு, பணத்துக்கு பதிலாக வண்ணம் பூசிய கோழிக் குஞ்சு தரப்படுகிறது.

                  பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகளை மின்விளக்கு வெப்பத்தின் மூலம் (அடைகாத்து) பொறித்து கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய குஞ்சுகள் சாதாரண கோழிக் குஞ்சுகள் போலின்றி மந்தமான தன்மை கொண்டவை. வண்ணம் பூசிய இக் கோழிக்குஞ்சுகளை பார்த்தவுடன் பெரியவர் முதல் சிரியவர் வரை வாங்க நினைப்பர். இக்கோழிக் குஞ்சுகளை வியாபாரிகள் சைக்கிள் மூலம் ஊர் ஊராக வியாபாரம் செய்வர்.  பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழிக் குஞ்சு தற்போது பண்டமாற்று முறையில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களுக்கும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோழிக் குஞ்சு வியாபாரிகள் பென்னாகரம் மாதையன், ராஜா ஆகியோர் கூறியது:

                       கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வருகிறோம். நாமக்கல்லில் இருந்து கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து தமிழகம் மட்டுமன்றி கேரளம், கார்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறோம். கோழிக் குஞ்சை ரூ. 2-க்கு வாங்கி அதை ரூ. 5-க்கு விற்கிறோம். ஒரு தடவை ஆயிரம் குஞ்சுகள் எடுத்து வந்தால் 100 குஞ்சுகள் இறந்து விடும். மற்ற குஞ்சுகளை ஒரு வாரத்தில் விற்றுவிடுவோம். தற்போது இக் குஞ்சுகளை யாரும் பணம் கொடுத்து  வாங்க முன்வருவதில்லை. இதனால் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களையும் பெற்றுக்கொண்டு பண்டமாற்று முறையில் கோழிக் குஞ்சுகளை தருகிறோம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதுடன் கோழிக்குஞ்சு விரைவாக விற்பனை ஆகிறது என்றனர்.

Read more »

4 ஆண்டுகளில் குடிசை வீடுகளே இருக்காது

கடலூர்:

                    மக்கள் நலத்திட்டங்களால் சாதனை படைப்பவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தெரிவித்தார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

நலத்திட்ட உதவிகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது: 

                     5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மக்களுக்கு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மனைப்பட்டா, இலவச நிலப்பட்டா, திருமண உதவித் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். தற்போது உருவாக்கி இருக்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலை 4 ஆண்டுகளில் உருவாகும். நிகழ்ச்சியில் 69 பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில், தலா ரூ.20 ஆயிரம் வழங்கினார். சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள, எழுதும் வசதி கொண்ட நாற்காலிகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், நகராட்சி உறுப்பினர் நவநீதம் சாமுவேல் உள்ளிடோர் பேசினர்.

Read more »

போபால் பேரழிவு தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                  போபால் விஷவாயுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                     போபால் விஷவாயுப் பேரழிவு தொடர்பான வழக்கின் தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதாரணத் தண்டனையாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் பேரின் உயிரைப் பலிவாங்கிய, பல்லாயிரம் பேரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய இந்த விபத்தில், வழங்கப்பட்டு இருக்கும் தீர்ப்பு ஏற்புடையது அல்ல.கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள், மேலும் பொறுப்பற்ற நிலையில் செயல்பட இந்த் தீர்ப்பு வழிவகுக்கும். எனவே போபால் பேரழிவு தீர்ப்பைக் கண்டித்து 11-ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

                      பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கு மாறாக, அதிக கட்டணம் வசூலிக்கும் கடலூர் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் 15- ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், சட்டப் பேரவை, மக்களை உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும்  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார். பொதுநல அமைபுகளின் பிரதிநிதிகள் வெண்புறா குமார், வழக்கறிஞர் திருமார்பன், சி.ஏ.தாஸ், செல்வ. ஏழுமலை, ஜெயராமன், மணிவண்ணன், பரிதிவாணன், நடராஜன், செந்தில்வேலன், ஜெகதீசன், கலியபெருமாள், பாலமுருகன், மோகனாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

அரசுப் போக்குவரத்து துறைக்கு ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய்

கடலூர்:

                 தினமணி செய்தியின் எதிரொலியாக தமிழரக அரசின் போக்குவரத்துத் துறைக்கு, ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.

                       புதுவை மாநிலத்தில் விற்பனை, சாலை வரி ஆகியவை குறைவாக இருப்பதால், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர், புதுவை மாநிலத்தில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை வாங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்தில் போலி முகவரி கொடுத்து வாகனங்களை வாங்குகிறார்கள். இதற்கு புதுவை மாநில வாகன டீலர்களே, சட்ட விரோதமாக ஏற்பாடு செய்கிறார்கள்.

                    இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்புப் கொள்கை வேண்டும் என்பதற்காக மதிப்புக் கூடுதல் வரி (வாட்) அமலுக்கு வந்தது. அதை மதிக்காமல் வணிகர்களுக்கு சாதகமாக, புதுவை அரசு இருசக்கர வாகனங்களுக்கு இன்னமும் 4 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் ரூ. 12.5 சதவீதம் விற்பனை வரி. இதேபோல் சாலைவரி தமிழகத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை. ஆனால் புதுவையில் மிக்குறைவு.

                     இதனால்தான் பலர் புதுவையில் போலி முகவரி கொடுத்து, அந்த மாநிலத்துக்கு வரிகளைச் செலுத்தி வாகனங்களை வாங்கிக் கொண்டு, தமிழகத்தின் சாலைகளைத் தேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சட்டப்படி இந்த வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படும்போது, வரி வித்தியாசத் தொகையை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் செலுத்துவது இல்லை. இவ்வாறு புதுவையில் வாகனங்களை வாங்கி தமிழகத்தில் இயக்குபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள். 

                     இவர்களைக் கண்காணித்து வரி வித்தியாசத் தொகையை வசூலிக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், வணிக வரித்துறை அலுவலர்களும் கண்டும் காணாமலும் இருந்து வருவதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தினமணியில் ஓராண்டுக்கு முன் ஒன்றும், அண்மையில் ஒன்றுமாக, இரு செய்திக் கட்டுரைகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சாலை வரி வித்தியாசத் தொகையாக ரூ. 2.5 கோடி வசூல் ஆகி இருப்பதாக, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார் தெரிவித்தார். 31-5-2010 அன்று மட்டும் ரூ. 55 லட்சம் வசூல் ஆனது. கடலூரில் மாதத்துக்கு 450 வாகனங்கள் பதிவாகும். தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, மே மாதத்தில் 673 இருசக்கர வாகனங்களும், 85 நான்கு சக்கர வாகனங்களும் கடலூரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வருவாய் அதிகரித்து உள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

                      இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து ஆண்டு முழுவதும் மேற்கொண்டால், கடலூர் மாவட்ட போக்குவரத்துத் துறைமூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். பல்வேறு இடங்களில் தணிக்கைச் சாவடிகள் இருந்தும், வணிகவரித் துறையும் விற்பனை வரி வித்தியாசத் தொகையை வசூலிக்காமல் கண்டும் காணாமலும் இருந்து கொண்டு இருக்கிறது. அவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மேலும் அதிக வருவாய் தமிழகத்துக்குக் கிடைக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதுவையில் பதிவாகும் வாகனங்கள் எண்ணிக்கை குறைவதால், பெருமளவுக்குக் குற்றங்கள் குறைந்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர். மேலும் புதுவை மாநிலத்தில் அதிகமாக வாகனங்களை வாங்கும், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழக அரசு இதுவரை இப் பிரச்னையில் ஏனோ கவனம் செலுத்தவில்லை. வரி வித்தியாசம் காரணமாக வாகனங்கள் வாங்குவோர் பெருமளவில் புதுவை மாநிலம் செல்வதால், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட மேற்கண்ட 5 மாவட்டங்களில் வாகனங்கள் விற்பனையும் சரியாக இல்லை. புதுவை மாநிலத்தில் வரிகுறைப்பால் பலன் அடைவோர், அந்த மாநில வாகன விற்பனையாளர்கள்தான். நஷ்டம் அடைவது புதுவை மாநில அரசு என்றும் கடலூர் வணிக் வரித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிட மாணவர்கள் இலவசக் கல்வி பயில வாய்ப்பு

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைத் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்த்து இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                     5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மாணவ மாணவியரில் சிறப்பாகக் கல்வி பயில்வோரைக் கண்டறிய சிறப்புத்தேர்வு நடத்தப்பட்டது. 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு மூவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களில், ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் முதல் இடம்பெறும் மாணவரைத் தேர்வு செய்ய புதன்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 13 மாணவ மாணவியர் அவர்கள் விரும்பும் தலைசிறந்த, உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு, அரசு செலவில் பயிற்றுவிக்கப்படுவர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அங்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர், அவர்கள் விரும்பும் தலைசிறந்த, உண்டு உறைவிப் பள்ளிகளில் சேர்ந்து பயிலவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அமுதவல்லி, மணவாள ராமானுஜம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை கண்டித்து ஜூலை 20-ல் ஆர்ப்பாட்டம் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

                  இதைக் கண்டித்து வரும் ஜூலை 20-ல் சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டச் செயலாளர் வீரவன்னியவேங்கன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ராஜா வரவேற்றார். அகில இந்திய பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டத் தலைவர் தியாகவள்ளி தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்கபாஸ்கர், தொழிற் சங்க அமைப்பாளர் கோதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 

                         ஜூன் 23-ம் தேதி கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் 100 வாகனங்களில் சென்று பங்கேற்பது; நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டுவது; பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்தலை ஜூலை 30-ல் நடத்துவது, சிதம்பரம் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு படிக்க வரும் மாணவர்களுக்காகவும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு அவதிப்படும் பொதுமக்கள்

பண்ருட்டி:

                பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்களும், பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். 

                   தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்சார பற்றாக்குறை காரணமாக பல பகுதியில் சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பண்ருட்டி நகரப் பகுதியில் 3 மணி நேரம் என இருந்து வந்த மின்வெட்டை சில தினங்களுக்கு முன் 2 மணி நேரமாக மாற்றியுள்ளதாக அறிவித்த மின்சார வாரியம், அவ்வப்போது ஏற்படும் உயர் மின் அழுத்த சுற்றின் நிலைமையைப் பொருத்து மின் நிறுத்த நேரம் மாறுபடும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நகரப் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. இதனால் மின் விசிறியோ, ஏசியோ இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு காரணமாக மின் விசிறி மற்றும் ஏசிகள் இயங்காகதால் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

                   கடந்த சில நாள்களாக கிராமப் பகுதியில் மும்முனை மின்சாரம் ஒரு மணி நேரம் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாததால் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராம ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

நீரேற்ற முடியவில்லை: 

                      இரவு பகல் என நேரப்படி மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது, தற்போது மும்முனை மின்சாரம் முழுமையாக ஒரு மணி நேரம் கூட கிடைக்கவில்லை. இதனால் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை என ஆபரேட்டர்கள் கூறினர்.

விவசாயிகள் வேதனை: 

                 வறட்சி, விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை, உரம், பூச்சி மருந்து விலை ஏற்றம் உள்ளிட்ட இன்னல்களுக்கு இடையே நெல், வாழை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளோம். இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இச்சமயத்தில் மின்சாரமும் கிடைக்காததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விளக்கம்: 

                        இது குறித்து மின்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரித்ததில். காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரம் கடந்த சில நாள்களாக கிடைக்கவில்லை. இதனால் மின் உற்பத்தி குறைந்து தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் விநியோகத்தை செய்து வருகின்றோம். நாளைய நிலை என்ன என்று கூறமுடியாது எனக் கூறினர்.

Read more »

Pattali Makkal Katchi MLA T.Velmurugan joins striking NLC contract workers

CUDDALORE: 

              Pattali Makkal Katchi MLA T.Velmurugan on Wednesday joined the fast-unto-death agitation launched by a section of the contract workers of the Neyveli Lignite Corporation at Neyveli on Wednesday.

             The workers owing allegiance to the PMK labour wing, Pattali Thozhir Sangam, had begun the indefinite hunger strike on Monday in support of their nine-point charter of demands. Their demands include absorption of 5,000 contract labourers in the Industrial Cooperative Service Society (INDCOSERVE) as a prelude to regularisation of their services, wage revision, weekly off day with wages and so on. The MLA said that even though the NLC management had signed the agreement six months ago it was yet to honour its commitment. Meanwhile, seven of the workers who reported giddiness and exhaustion from three day's hunger strike were admitted to the NLC general hospital for treatment.

Read more »

Pawn shop near Thittakudi looted

CUDDALORE: 

             A pawn shop located on Aratii Cross Road near Thittakudi was looted on Tuesday night.

             Shop-owner B. Purushothman (62) lodged a complaint with the police saying that unidentified persons gained entry into the shop (attached to his residence) by breaking open the rear door. They beat him up and two of his family members and took away gold jewellery worth Rs. 6 lakh from a chest. Superintendent of Police Ashwin Kotnis, forensic experts and a dog squad inspected the scene of the crime.

Read more »

The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting Computer training

CUDDALORE: 

                The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting computer training to coastal residents through its Village Knowledge Centres.

Read more »

Counselling for Adi Dravidar students

CUDDALORE: 

              Collector P. Seetharaman held a counselling session here on Wednesday for meritorious Adi Dravidar students on choosing reputable schools of their choice for further education.

           Mr. Seetharaman said that as a matter of policy, the State government had decided to make arrangements for meritorious Adi Dravidar students to continue their education in leading schools of their choice.

Special test conducted

             Accordingly, a special test was conducted for Class V students in all 13 panchayat unions in the district and three top-scorers from each union had been selected. Of the three candidates, one would be selected (whose parental income does not exceed Rs. 1 lakh a year) for admission to a residential school. The candidates thus selected would have free education from Class VI to Class X. Similarly, 10 Adi Dravidar students who scored top marks in the district in Secondary School Leaving Certificate examinations would also be given the option of choosing any of the well-known schools for admission and the government would bear their educational expense. Mr. Seetharaman called upon the candidates to utilise the opportunity and do well in studies.

Read more »

ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

நடுவீரப்பட்டு : 

                 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தில் வெறி நாய் கடித்ததில் 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் கடந்த சில நாட்களாக நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் துரத்திச் செல்வது வழக்கம். இதில் ஒரு சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20க்கும் மேற்பட்டவர் களை வெறி நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் கச்சிராயர்குப்பத்தைச் சேர்ந்த தனசேகர், நடுப்பேட்டை சங்கர், பெருமாள், மகாலட்சுமி, தண்டபாணி உள்ளிட்ட 20க் கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நாய் கடிக்கு ஆளான அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.

Read more »

பெயிலான மாணவர்களுக்கு பாஸ் போட பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் வலியுறுத்தல்

கடலூர் : 

                 முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை "பெயில்' ஆக்கக் கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவையடுத்து "பாஸ்' போடுமாறு பெயிலான மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

                    மத்திய அரசின் உத்தரவுப்படி 14 வயது வரை கட்டாய இலவச கல்வி நடைமுறையில் இருப்பதால் முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை "பெயில்' ஆக்க கூடாது எனவும், தேர்வு என்பது பாசாவதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்க கூடாது எனவும் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்பில் அதிக மார்க்குகள் பெற்று நூறு சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக் கத் திலேயே செயல்படுகின்றனர்.

                   அதற்கு இடையூறாக உள்ள பள்ளி மாணவர்களை பெயிலாக்குவதும், சரியாக படிக்காத மாணவர்களை டி.சி., கொடுத்து வேறு பள்ளிகளுக்கு அனுப்பியும் வருகின்றனர். பள்ளிக்கு நல்ல பெயர் எடுப்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களை 7ம் வகுப்பில் இருந்து தயார் செய்ய துவங்கி விடுகின்றனர். இதில் முதல் வகுப்பில் இருந்து படித்து வரும் சில மாணவர்கள் திடீரென சூழ் நிலை காரணமாக கல்வித்தரம் குறைவதால் எஸ்.எஸ். எல்.சி., யில் தேர்ச்சி பெறுவது கடினம் என கருதும் மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பெயிலாக்கி விடுகின்றனர். அதுபோன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 221 நடுநிலை, 82 உயர்நிலை, மெட்ரிக் பள்ளிகள் கடந்த தேர்வு முடிவில் ஏராளமான மாணவர்களை "பெயில்' ஆக்கியுள்ளனர். பெயிலான மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை அணுகி தங்கள் பிள்ளைக்கு பாஸ் போட்டு தருமாறு மன்றாடி பார்த்தனர்.

                       ஆனால் பள்ளி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. தற்போது ஐகோர்ட் உத்தரவு வந்ததையடுத்து மீண்டும் இப்பிரச்னை உயிரூட்டம் பெற்றுள்ளது. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் தவறிய மாணவர்களுக்கு பாஸ் போட்டு தருமாறு பெற்றோர் மீண்டும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Read more »

என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம் : வேல்முருகன் எம்.எல்.ஏ., ஆவேசம்

நெய்வேலி : 

                "என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்' என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.

               என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே "கியூ' பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரத்தில் மயக்கமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர்.

நேற்று மாலை பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பங்கேற்று பேசியதாவது: 

                 என்.எல்.சி.,ஒப்பந்த தொழிலாளர்களுக்காக அறவழியில் போராடும் எங்களை தீவிரவாதிகளாக மாற்றாதீர்கள். 48 மணி நேரத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இல்லையெனில் என்.எல்.சி., சேர்மன் மற் றும் இயக்குனர்கள் வீடு, கார் களை அடித்து நொறுக்கி அவர் களை கடத்துவோம். எங்கள் மீது எந்த வழக்கு போட்டாலும் கவலை இல்லை. இதை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டு தான் நானும் உண் ணாவிரத்தில் பங்கேற்றுள் ளேன்.நான் அமைதியாக இங்கு உண்ணாவிரதம் இருப்பேன். ஆனால் என்னுடைய ஆட்கள் வெளியில் வேலை பார்ப் பார் கள். குறிப்பாக முந்திரிக்காட்டில் வேலை பார்ப்பார்கள். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலை இல்லை. நான் வெளிப் படையாக பேசுபவன். இந்த பேராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்காக அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- வி.சி., என அனைவரையும் ஒன்று திரட்டி போராடுவோம்.

                      நான் அனுப்பும் பேச்சுவார்த்தை குழுவினருடன் என்.எல்.சி., நிர்வாகம் உடனடியாக பேச்சு வார்த்தை நடந்தி சுமூகமாக முடிக்காவிட்டால் "ஏசி' கார்களில் செல்லும் என்.எல்.சி., அதிகாரிகளின் உயிர்களுக்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது. என் மீது கொலை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கத் தயார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பா.ம.க.,வினரையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் என்.எல்.சி.,யை கலவர பூமியாக மாற்றுவேன். இதையும் கலெக்டரிடம் கூறியுள்ளேன். எங்களை உதாசீனப்படுத்துபவர்கள் உயிருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள். தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ம.க., நிறுவனரிடம் கலந்து பேசி அவரது ஆலோசனையின்படி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். எம்.எல்.ஏ., பதவி எனக்கு சாதாரணமானது. நான் எதற்கும் கவலைப்படுபவன் கிடையாது. எனவே 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நடக்கும் இப்போராட்டத்தில் நாளை (இன்று) அனைவரும் பங்கேற்க வேண்டும். எந்த ஒப்பந்த தொழிலாளியும் வேலைக்கு செல்லக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பா.தொ.ச., நிரந்தர தொழிலா ளர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பர். இவ்வாறு எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

Read more »

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம்'

சேத்தியாத்தோப்பு : 

                  எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் இணை மின் உற்பத்தி துவக்க திட்டம் துவங்கப் பட்டது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலையின் ஆட்சியர் ஆசியா மரியம் கூறியதாவது : 

               சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்போது நாள் ஒன்றுக்கு 2,500 டன் கரும்பு அரவை திறனுடன் 7.5 மெகாவாட் கொண்ட மின் உற்பத்தி திட்டத்துடன் செயல்படுகிறது. ஆசியா கண்டத்திலேயே முதன் முதலாக இந்த ஆலையில் கரும்பு சக்கையை எரிபொருளாக கொண்டு மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு 1992ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இயங்கி வருகிறது. 2009-2010ம் ஆண்டு அரவை பருவத்தில் 2 லட்சத்து 600 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. 3 லட்சசம் யூனிட் திறனை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 15 மெகாவாட் திறனுடன் கூடிய நவீனமயமாக்கல் மற்றும் இணை மின்உற்பத்தி திட்டம் 81.23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

                     இந்த திட்டத்தின் மூலம் அரவையில்லா பருவத்தில் நாள் ஒன்றுக்கு 2 லசட்சம் யூனிட்களும், அரவை பருவத்தில் 3 லட்சம் யூனிட்களும் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பம் கரும்பு அரவை பருவத்தில் கரும்பு சக்கை மூலமும், அரவையில்லாத பருவத்தில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி இணை மின் உற்பத்தி இயங்குவதற்கு ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஆசியா மரியம் கூறினார்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் துவக்கம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று துவங்குகிறது.

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (10ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தினமும் காலை பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, இரவு சுவாமி வீதியுலா நடக்கி றது. 11ம் தேதி வெள்ளி சந் திரபிரபை வாகனம், 12ம் தேதி தங்க சூரிய பிரபை, 13ம் தேதி வெள்ளி பூத வாக னம், 14ம் தேதி தெருவ டைச்சான், 15ம் தேதி வெள்ளி யானை வாகனம், 16ம் தேதி தங்க கைலாச வாகனம், 17ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி யுலா நடக்கிறது. தேர்த்திருவிழா 18ம் தேதி நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் அன்று இரவு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு லட்சார்ச்சனை, 19ம் தேதி அதிகாலை மகா அபிஷேக மும் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சியும், 12 மணிக்கு பஞ் சமூர்த்திகள் வீதியுலா முடிந்த பிறகு ஆனி திரு மஞ்சன தரிசனம் நடக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் கடலூரில் வரும் 15ம் தேதி ஏலம்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

           கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் இரண்டு சக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனம் மூன்று என மொத்தம் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இவ்வாகனங்கள் வரும் 12ம் தேதி முதல் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. கடலூர் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., கடலூர் கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுப்பவர்கள் வாகன உரிமையாளர்கள் என்றால் ஏலத் தொகையுடன் 12.5 சதவீதமும், இல்லாத பட்சத்தில் 4 சதவீத விற்பனை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புவோர் இரு சக்கர வாகனத் திற்கு 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன்பணமாக 15ம் தேதி காலை 8.30 மணிக்குள் மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

               ஏலம் எடுக்க வருபவர்கள் விலாசத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் கார்டு, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் புக், இவற்றில் ஏதேனும் ஒன்றை அசல் நகல், ஜெராக்ஸ் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரவேண்டும். 

மேலும் தகவல்களுக்கு 

கடலூர் ஏ.டி.எஸ்.பி., 04142-284353, 
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு 04142 297688, 
சிதம்பரம் 04144-230477,
பண்ருட்டி 94441-80458 

ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் - விருத்தாசலம் சாலையில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் : 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

கடலூர் : 

               கடலூர் - விருத்தாசலம் சாலையில் முன் அறிவிப்பின்றி போக்குவரத்தை மாற்றம் செய்ததால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர்.

                  கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பச்சையாங்குப்பத்தில் பாலத்தின் முடிவு பகுதியின் இரண்டு பக்கமும் சாலையின் நடுவில் மணல் கொட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றி விடப்பட்டுள்ளது. அதன்படி கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலை வழியாக சென்று ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி சாலையை அடைகிறது.

                      அதே போல் விருத்தாசலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியாக சிதம்பரம் சாலைக்கு திருப்பிவிடப்பட்டு கடலூர் வருகிறது. காரைக்காடு வழியாக சில பஸ்கள் இயங்குகின்றன. இதனால் குள்ளஞ்சாவடியில் இருந்து முதுநகர் வரையுள்ள தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், சேடப்பாளையம், அன்னவல்லி, கண்ணாரப் பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னறிவிப்பின்றி சாலை திடீரென அடைக்கப்பட்டதால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் வீடு திரும்பினர்.

Read more »

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

கடலூர் : 

                     பள்ளி திறந்து ஒரு வாரமாகியும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சமச்சீர் பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.

                    தமிழகத்தில் மாண வர்கள் "ஸ்டேட் போர்டு' மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் படித்து வருகின்றனர். இதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், பாடச் சுமைகளை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக இந்த கல்வி ஆண்டில் (2010-2011) முதல் மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி திட் டத்தை அமல்படுத்தியுள்ளது.

                 இதற்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டுள்ளது. அதில் முதல் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் ஆகிய நான்கு புத்தகங்கள் 200 ரூபாய், 6ம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப்புத்தகங்கள் 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு அந்தந்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகமே நேரடியாக அனுப்பி வைத்தது.

                அதேப்போன்று தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாட நூல் கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு ஏற்ப முதல் வகுப் பிற்கு ஒரு செட் 190 ரூபாய், 6ம் வகுப்பிற்கு 237.50 ரூபாய் என கணக் கிட்டு "டிடி' எடுத்து கொடுத்து குடோனில் புத்தகங்களை பெற்றுக் கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டது.

                 இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக முதல் வகுப்பிற்கு 20 ஆயிரம் செட் புத்தகங்களும், 6ம் வகுப்பிற்கு 7,700 செட் புத்தகங்கள் கடலூரில் உள்ள பாடநூல் கழக குடோனுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

                 ஆனால் மாவட்டத்தில் உள்ள 112 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 228 நர்சரி பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் முதல் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே தனியார் புத்தக நிறுவனங்கள் சில, தனியார் பள்ளி நிர்வாகிகளை அணுகி சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்திட அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும், ஆகையால் தங்களது கம்பெனி புத்தகங்களை வாங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

                           இதனால் எந்த புத்தகத்தை வாங்குவது என்ற குழப்பம் காரணமாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தமிழக அரசு பாட நூல் கழகத்தின் புத்தகங்களை வாங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனை அறிந்த கல்வித் துறை அதிகாரிகள் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றம் நர்சரி பள்ளிகளை தொடர்பு கொண்டு அரசு பாட நூல் கழகத்தில் தான் புத்தகங்கள் வாங்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பாட நூல் கழகத்திடம் புத்தகங்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.

Read more »

கடலூர் கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகு

கடலூர் : 

                கடலோர காவல் படைக்கு மத்திய அரசு வழங்கிய அதிவிரைவு படகு கடலூர் வந்தது.

                கடலில் பயங்கரவாதிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க அதிவிரைவு படகுகளை மத்திய அரசு மத்திய கடலோர காவல் படைக்கு வழங்கி வருகிறது. கடலூர் கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் முட்டுகாடுகுப்பத்தில் இருந்து கடலூர் மாவட்டம் கிள்ளை வரை 68 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை கண்காணிக்க அதிவிரைவு படகு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., லல்லம் சங்கா உத்தரவின் பேரில் ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் கடலூர் கடலோர பகுதியில் படகை நிறுத்துவதற்கான இடத்தை பார்வையிட்டு அதிவிரைவு படகு வழங்க அனுமதி வழங்கினார்.

                 அதன்படி கோல்கட்டாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரிப்பில் உருவான மணிக்கு 35 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய 14 பேர் வரை பயணம் செய்யும் அதி விரைவு ரோந்து படகு கடலூர் கடலோர காவல்படைக்கு வழங்கப்பட்டது. இந்த படகு நேற்று முன்தினம் கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தது. படகை கோல்கட்டா நிறுவனத்தினர் கடலில் சோதனை ஓட்டம் முடித்து பின் னர் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Read more »

காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில்குறிஞ்சி மழலையர் பள்ளி திறப்பு விழா

கடலூர் : 

               காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

                 காடாம்புலியூர் அடுத்த அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது. ரட்சகர் தலைமை தாங்கினார். புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்து பேசினார். ஆசிரியர் ஜான்போஸ்கோ வரவேற்றார். பெருமாள், அறக்கட் டளை தலைவர் ஜெயந்தி, செயலாளர் கலாராணி குத்துவிளக் கேற்றி வைத்தனர். உறுப் பினர்கள் சாந்தி, அமுதா, வித்யா, மஞ்சுளா, சுதா முன்னிலை வகித்தனர்.

                 விழாவில் என்.ஜி.ஓ., சங்க மாநில நிர்வாகி கார்மேகவண்ணன், மாவட்ட தலைவர் செல்வம், வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன், கவுன்சிலர்கள் ராஜா, சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ், கோதண்டராமன், ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், கிரீடு நடனசபாபதி, டாக்டர் கலைநேசன் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை குறிஞ்சி மழலையர் பள்ளி உறுப்பினர்கள் பூங்கொடி, ருக்மணி, ஆர்த்தி, ஜெயந்தி, லட்சுமி, முத்துலட்சுமி, மைதிலி, ஜெயந்தி, ராஜலட்சுமி, ரேணுகாம்பாள் ஆகியோர் செய்திருந் தனர்.

Read more »

கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா

சேத்தியாத்தோப்பு : 

                    கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. புவனகிரி ஒன்றியம், கத்தாழை கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக கட்டடம் கட் டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நூலகர் ராமச்சந்திரன் வரவேற்றார். புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா

விருத்தாசலம் :

                விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

                 விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த விருத்தாசலம் பெண்கள் பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு பாராட்டு விழா நடந்தது. வேலூர் கோட்ட வணிக மேலாளர் முத்துவேல் தலைமை தாங்கி மாணவி சிவரஞ்சனிக்கு பரிசு வழங்கி பேசினார். கிளை மேலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தொழுதூர் கிளை மேலாளர் துரைராஜ் வரவேற்றார். நிகழ்ச் சியில் எல்.ஐ.சி., முகவர்கள் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டியில் வணிக வரித்துறை வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி : 

               பண்ருட்டியில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

             நகர வணிகவரித்துறை உதவி ஆணையர் பிரபுலிங்கம் தலைமை தாங்கினார். வணிகவரி அலுவலர் ராஜேஸ்வரி முன் னிலை வகித்தார். கூட்டத்தில் வணிகவரித் துறை சார்பில் இணைப்பு படிவம் 1ல் பில் எண், தேதி சேர்த்தல் குறித்தும், வியாபாரிகள் அனைவரும் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான்) வரும் ஜூலை 18ம் தேதிக்குள் எடுக்க வேண்டும். வரி பாக்கி செலுத்துவதற்கு சமாதான திட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசினர். கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மதன்சந்த், சுரேஷ், உதவி வணிக அலுவலர்கள் சந்திரபோஸ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

பிச்சாவரம் படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

கிள்ளை : 

                 பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர் களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் 1984ம் ஆண்டு படகு சவாரி துவங்கியது. இங்கு 35 படகு ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை இயக்குநருக்கு கோரிக்கை வைத் துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள மனு: 

                  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது. மழை மற்றும் வெயில் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு படகுளை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றோம். இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. எனவே தற்போது சுற்றுலா மையத்தை தனியாரிடம் விடுவதாக அரசு எடுத்துள்ள முயற்சியை மறுபரிசீலனை செய்வதுடன், அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கமிஷன் அடிப்படையில் பணியாற்றி வரும் 35 படகு ஓட்டிகளான எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வீராணம் ஏரியில் மூழ்கிய அதிகாரி உடல் கிடைத்தது

சிதம்பரம் : 

                   வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணாமலை பல்கலைக் கழக தனி அதிகாரியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

                 காட்டுமன்னார்கோவில் அடுத்த பூர்த்தங்குடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பழனிவேல் (30). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரியாக இருந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீராணத்தில் குளித்தார். கந்தகுமரன் மதகு அருகே குளிக்கும்போது பழனிவேல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏரியில் படகு மூலம் தேடினர். இதற்கிடையே நேற்று பகல் ஒரு மணிக்கு பழனிவேல் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் தானிய சேமிப்பு கலன்

கடலூர் : 

                தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தானிய சேமிப்பு கலன் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

            தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் வட்டார விவசாயிகளுக்கு ஒரு டன் மற்றும் அரை டன் தானிய சேமிப்பு கலன்கள் 50 சதவீத மானியத்தில் வழங் கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம்பாக்கம் வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் : டேனிஷ் மிஷன் பள்ளி

நெல்லிக்குப்பம் : 

           நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

               நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆற்காடு லூத்தரன் திருச்சபை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இப்பள்ளியில் போதுமான கட்டடமும், ஆசிரியர்களும் உள்ளனர். இங்கு 2,000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்களே இப்பள்ளியில் படிக்கின்றனர். அனைத்து வசதிகள் இருந்தும் ஆசிரியர்களுக்குள் இருக்கும் கோஷ்டி பூசல் மற்றும் கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத் தப்படுவதில்லை.

                 மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தலைமையாசிரியர் ஆல்பிரட் முயற்சி மேற்கொண் டுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கற்கும்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் "மாணவர்களின் நலனில் பெற்றோர்களும் அக்கறை செலுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' எனவும் தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்.

Read more »

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் மாணவர் அவதி

பண்ருட்டி : 

                பிளஸ் 2 தேர்வு முடிவு குளறுபடி காரணமாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் பண்ருட்டி மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

                  பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த மே 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இன்டர்நெட்டில் வெளியான தேர்வு முடிவில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ்குமார் (எண் 596361) இயற்பியல் தியரி மதிப்பெண் போடப்படாமல் இருந்தது. இதுகுறித்து மாணவர் தரப்பில் பள்ளிக்கல்வி இயக்குனர், தேர்வுத்துறை, கடலூர் சி.இ.ஒ., ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது. அதற்கு அனைவரும் மதிப்பெண் பட்டியலில் வரும் என தெரிவித்தனர். ஆனால் மதிப்பெண் பட்டியல் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட நிலையில் மாணவர் சந்தோஷ்குமாருக்கு மட்டும் மதிப்பெண் பட்டியல் வரவில்லை.

                 இதுகுறித்து மீண்டும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் சென்று முறையிட்டும் முறையான பதில் இல்லாததால் மாணவர் சந்தோஷ்குமார் மேற்கொண்டு என்ன படிப்பது. அல்லது மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா? என்பது குறித்து பல குழப்பங்களுடன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்

Read more »

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் குடுமியான்குப்பம் ஊராட்சி

பண்ருட்டி:

                குடுமியான்குப்பம் ஊராட்சி காலனி பகுதியில் அடிப் படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

                 பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் ஊராட்சியில் ஏ.காலனி பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1980ம் ஆண்டு கட்டப் பட்ட 30 தொகுப்பு வீடுகள் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. தற்போது ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட சின்டெக் டேங்க் மூலம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 8 மணிவரை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் மாலை நேரங்களில் குடிநீர் வழங்குவதில்லை. 100 குடும்பத்தினருக்கும் சிறிய டேங்கில் இருந்து குடிநீர் வழங்குவதால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக் குறை தலைவிரித்தாடுகிறது. இப்பகுதிக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித்தர கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பிட்ட இப்பகுதிக்கு மட்டும் முக்கியத் தேவையான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், ஊராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுபற்றி ஏ.காலனியை சேர்ந்த ராமலிங் கம் கூறுகையில், 

                      "1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய சின்டெக் டேங்க் மூலம் தண்ணீர் சப்ளை செய்வதால் குடிநீர் பற்றாக் குறை உள்ளது. தெருவிளக்கு, சுடுகாட்டுப் பாதை இல்லை. இங்குள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கவில்லை. இதனால் தமிழக அரசின் "கான்கிரீட்' வீடு திட்டத்தில் இப்பகுதி மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தொகுப்பு வீடுகளும் சிமென்ட காரைகள் பெயர்ந்து வீணாகியுள்ளது' என்றார்.


Read more »

சிதம்பரம் ரயில் நிலைய பணிகளில் தொய்வு: சிதம்பரத்தில் பயணிகள் அவதி

சிதம்பரம் :

                  சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

                    விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் இடைவெளியில் ரயில்கள் ஓடுவதால் அரசு ஊழியர்கள், கல் லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு மாதங்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் ரயில் நிலைய பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பயணிகளுக் கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என எதுவும் செய் யவில்லை. சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை இல் லாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர். விளக்கு வசதி இல்லாததால் ரயிலை விட்டு இறங் கும் போதும், ஏறும் போதும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

                     ரயில்வே பிளாட்பாரம் கிராசிங் நடை பாலம் (புட்பாத்) அமைக்கும் பணியும் தொய்வான நிலையிலேயே உள்ளது. இதனால் மாற்று பிளாட் பாரத்தில் வரும் ரயில்களில் ஏற பயணிகள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவங்கிய ரயில் நிலைய முக்கிய கட்டட பணி இதுவரை முடியவில்லை. பல கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடித்த பின்னர் தற்போது ரயில்வே நிர்வாகமே கட்டி வருகிறது. ஆனால் இதுவரை முடிந்தபாடில்லை. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் டிக்கெட் கவுண்டர், அலுவலகம் இயங்கி வருகிறது. ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் இருப்பதால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் போர்க்கால நடவடிக்கையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


Read more »

சீர்கேடான மங்களூர் - மாங்குளம் சாலையை சீரமைப்பது எப்போது?

மங்களூர் :

                 மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த ஒன்றியத்தைச் சுற்றி மலையனூர், அடரி,பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், கீழ்ஒரத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் அமைந்துள்ளன. ஒன்றிய தலைமையிடமாக உள்ள மங்களூரில் இருந்து மாங்குளம் வரை ஐந்து கி.மீ., தார்சாலை உள்ளது.

               இந்த சாலையின் வழியாக மங்களூருக்கு அன்றாட அலுவல் காரணமாக உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், நோயாளிகள் சென்று வருகின்றனர். மேலும், ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள், லாரிகள் என 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

                 பல்வேறு கிராமங்களுக்கு செல் லும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண் டுகளாக குண்டும், குழியுமாகவும் "மெகா' சைஸ் பள்ளமாக மாறி சிதைந்து போய் போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகனங்களில் செல்பவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப பாக இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், 

                   "எங்களின் அன்றாட அலுவல்களுக்காக மங்களூர் செல்ல இச்சாலையை பயன்படுத்தி வந் தோம். பல ஆண்டுகளுக்கு மன் நெடுஞ்சாலை துறை மூலம் கிராம சாலை அபிவிருத்தி திட்டத் தில் சீரமைக்கப்பட்டிருந்த இந்த ஐந்து கி.மீ., சாலை தற்போது மாங்குளம் பகுதி தெடக்கத்தில் இருந்தே சீர்கெட்டுபோய் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிறுபாக்கம், மலையனூர், கிராமங்களை சுற்றிக்கொண்டு 14 கி.மீ., பயணம் செய்து மங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது தாமதமில்லாமல் சாலையை செப்பனிட வேண்டும்' என கூறினார்.

மாங்குடிகாடு விவசாயி ராஜேந்திரன் கூறுகையில்,

                     "இப்பகுதி மக்களுக்கு இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது முற்றிலும் சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும்' என கூறினார்.

Read more »

புவனகிரி பள்ளி முன் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

புவனகிரி : 

                 புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                     புவனகிரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் பெருமாத்தூர், வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வடக்கு திட்டை, தெற்கு திட்டை, தம்பிக்குநல்லான்பட்டினம், ஆதிவராகநல்லூர், கீழமணக் குடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 1,500க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களது சிமென்ட் சிலாப்புகள், பெரிய மரத்துண்டுகள் உள்ளிட்ட பொருட் களை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

                          பள்ளியின் முன் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் வசதியாக போர்வெல் பம்ப் போடப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அதனருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பும். அந்த பள்ளத்தின் அருகே ஆக்கிரமிப்பாளர்கள் மெகா சிமென்ட் உருளைகள் மற்றும் தளவாட பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு : சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்

சிதம்பரம் : 

            சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

                  சிதம்பரம் சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் மக்கள் புழக்கம் அதிகம். அத்துடன் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிதம்பரத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிதம்பரத்தை கடந்து செல்வதால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் காணப்படும். வர்த்தக ஸ்தாபனங்கள் அதிகம் உள்ள மேல வீதி, தெற்கு வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

                      விஸ்தாரமான சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல 2 கோடி ரூபாய் செலவில் நடை பாதை அமைக்கப்பட்டும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நடைபாதை அமைக்கப்பட்டதால் சாலை குறுகியதுடன், எஞ்சிய சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப் பட்டு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மேல வீதியில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் உள்ளது. எனவே மேல வீதியில் அதிகரித்துவிட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior