உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 05, 2011

நாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். மையங்கள்

              நாடு முழுவதும் உள்ள 200 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட 7 தலைமை அஞ்சலகங்களில் இந்த ஏடிஎம் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

            அஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் குக்கிராமங்களில்கூட சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் வங்கிச் சேவை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது அஞ்சலகங்களை நவீனமயமாக்குவதோடு, மக்களுக்கான பல்வேறு மதிப்பு கூட்டு சேவைகளை வழங்கும் திட்டங்களை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி வருகிறது.  நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 90 சதவீத அஞ்சலகங்கள் கிராமங்களில் இயங்கி வருகின்றன. 

            இந்த அஞ்சலகங்களில் 22 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகை 5.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  இந்த சேமிப்புக் கணக்குகளை 35 கோடியாக அதிகரிப்பதன் மூலம் வைப்புத் தொகை 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், நாட்டின் பொருளாதார சக்தியாக அஞ்சலகங்களை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் ஒவ்வொருவருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. 

              இதன்படி "பிராஜக்ட் ஆரோ' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அஞ்சலகங்களை நவீனமயமாக்க அரசு அனுமதி அளித்தது.  இதில் இதுவரை 727 அஞ்சலகங்கள் கணினி, இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.  இந்த அஞ்சலகங்களில் 22 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகை 5.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  இதை மேலும் அதிகரிக்க அஞ்சலகங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள், மொபைல் வங்கி முறை, கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிதிச் சேவைகளை நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை விரைவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.  

              நாட்டில் முதல் கட்டமாக 200 தலைமை அஞ்சலகங்களில் அஞ்சல் துறை சார்பில் பிரத்யேகமாக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். அட்டைகளை நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களின் ஏடிஎம் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.  தேசியமயமாக்கப்பட்ட இதர வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி, தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் முடியும். 

           இதுதவிர தங்களது சேமிப்புக் கணக்கில் பணத்தைச் செலுத்தவும் வசதி செய்யப்பட உள்ளது.  தமிழகத்தில் 10 அஞ்சலகங்களில்... தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதலாவதாக சென்னை மயிலாப்பூர் அஞ்சலகத்தில் இந்த ஏ.டி.எம். மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  

              தமிழகத்தில் வங்கிகள் மட்டுமன்றி அஞ்சலகங்களுடன் இணைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுவதோடு, அவற்றின் சேமிப்புத் தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.  கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகப் பெரிய ஊக்கம் அளிப்பதாக உள்ளதால் அஞ்சல் துறை தனது வங்கிச் சேவையை விரிவாக்கம் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.  இதையடுத்து பெண்கள், தொழில் முனைவோருக்கு சிறு வணிகக் கடனுதவி வழங்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. 

Read more »

சென்னை நகருக்குள் செல்வதில் கடலூர் மாவட்ட மக்கள் அலைக்கழிப்பு

கடலூர்:

             கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பேருந்துகளில் சென்னைக்குள் நுழையும் மக்கள், நகரப் பேருந்துகளை பிடிப்பதில் பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். 

              முன்பெல்லாம்  மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் தாம்பரம், கிண்டி, அண்ணா சாலை வழியாக  பிராட்வே பஸ் நிலையம் செல்லும். தாம்பரத்தில் இருந்து பிராட்வே வரை, வழிநெடுகிலும் பல்வேறு அலுவலகங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் ஒட்டிய நிறுத்தங்களில் மக்கள் இறங்கி, தங்கள் பணிகளை எளிதாகச் செய்துவிட்டுத் திரும்ப வசதியாக இருந்தது.  

            சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு பஸ்நிலையத்தை உருவாக்கி, அங்கிருந்து நகரப் பேருந்துகளைப் பிடித்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னை நகர வாசிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் கடலூர், விழுப்புரம், புதுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருவோர், பெரும் சிரமங்களையும் கால விரயத்தையும் சந்திக்க நேரிடுகிறது.  

               கடலூர், விழுப்புரம். புதுவை வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள், தாம்பரம் வழியாக, கோயம்பேடு பஸ்நிலையம் சென்றது, அண்மைக் காலமாக தாம்பரம் செல்லாமலேயே, பஸ்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயில் வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் மாவட்டங்களில் இருந்து வருவோர் ஒன்று கோயம்பேடு செல்ல வேண்டும் அல்லது பெருங்களத்தூரில் இறங்கிவிட வேண்டும். 

             சென்னைக்குள் அலுவலகப் பணிகள், வர்த்தகப் பணிகளுக்காகவும், உறவினர்களைச் சந்திக்க செல்ல வேண்டியவர்களும், பெருங்களத்தூரில் இருந்து வண்டலூருக்கு நகர பஸ்களைப் பிடித்து வண்டலூர் அல்லது தாம்பரம் சென்று, அங்கிருந்து மற்றொரு நகரப் பஸ்ûஸ பிடித்து, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் போகும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குடும்பத்துடன் பெண்கள், குழந்தைகளுடன் வருவோர், சுமைகளுடன் வருவோர், சென்னைக்குப் புதிதாக வருவோர் இதனால் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். 

               மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் பயணிகளில் 75 சதவீதம், பெருங்களத்தூர் அல்லது  திருவான்மியூரில் (இ.சி.ஆர். பஸ்கள்) இறங்கி விடுகிறார்கள்.  முன்பெல்லாம் கடலூரில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் செல்வோர், காலை நேரங்களில் 4 மணி நேரத்தில் செல்லமுடியும். தற்போது அரசு பஸ்களின் வேகம், எரிபொருள் சிக்கனம் என்ற பெயரில் கட்டுப்படுத்தப்படுகிறது. 

             தாம்பரத்துக்குள் பஸ்கள் செல்வதும் மாற்றப் பட்டதால், கடலூரில் இருந்து கோயம்பேடு செல்ல 5-30 மணி நேரம் ஆகிறது. அங்கிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் அண்ணா சாலையிலுள்ள  அலுவலகங்கள் செல்ல, மேலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. அதாவது கடலூரில் இருந்து சென்னை உயர்நீதி மன்றம் செல்ல தற்போது குறைந்தது 6-30 மணி நேரம் ஆகிறது. இதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல 2 மணி நேரம் வரை அதிகமாகிறது.  சென்னையில் இருந்து திரும்பி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வோரின் நிலை இன்னும் பரிதாபம். 

              சென்னையில் எங்கு இருந்தாலும், கோயம்பேடு சென்றால்தான் பஸ் பிடிக்க முடியும். இடையில் தாம்பரத்திலோ, திருவான்மியூரிலோ (இ.சி.ஆர். பஸ்கள்) ஏறினால்கூட பஸ்களில் நிற்கக்கூட இடம் கிடைப்பது இல்லை.  திருவான்மியூர், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்தோர் கோயம்பேடு சென்று பஸ் ஏறுவதால் சென்னை சென்று வருவோருக்கு 2 மணி நேரத்துக்குமேல் காலவிரயம், மனஅழுத்தம் ஏற்படுபடுகிறது.  

              கோயம்பேடுக்கு மதுரவாயில் வழியாக பஸ்கள் செல்வதால், மதுரவாயிலில் இருந்து கோயம்பேடு வரை, இடையில் பல ஊர்களுக்கும் இறங்கிச் செல்ல வாய்ப்பு இருந்தும், பைபாஸ் சாலையாக இருப்பதால் எங்கும் இறங்க முடியாத அவலம் உள்ளது. பெருங்களத்தூர் பகுதியில் பிரமாண்டமான பஸ்நிலையம் வரப் போவதாகச் சொல்கிறார்கள். எப்போது என்பதை யார் அறிவார்?  மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக, சென்னை வரும் அனைத்து பஸ்களும் தாம்பரம் வரை வந்து திரும்பி, மதுரவாயில் வழியாக கோயம்பேடு செல்லலாம். 

               கோயம்பேட்டில் இருந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுவைக்கும் இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீதத்தை, தாம்பரம் மற்றும் திருவான்மியூரில் இருந்து புறப்படச் செய்யலாம் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சென்னை மக்களைப் போன்று, சென்னை வரும் மாவட்ட மக்களின் சங்கடங்களையும் அரசு கவனத்தில் கொள்ளுமா?

Read more »

கடலூர் சில்வர் பீச் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர்:

             புதுப்பிக்கப்பட்ட கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையத்தை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அண்மையில் திறந்து வைத்தார். 

              கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையம், தரைத்தளத்திலும் முதல் தளத்தில் ஹோட்டலும் இருந்தது. சுனாமியின்போது புறக்காவல் நிலையம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு புதுப்பிக்கப்பட்டது. முதல் தளம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.  இந்த முதல் தளம் தற்போது நவீனப்படுத்தப்பட்டு, போலீஸ் அதிகாரிகள் தங்கும் விடுதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

                புறக்காவல் நிலையம் முன் அழகிய  புல்வெளி அமைக்கப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட சில்வர் பீச் புறக்காவல் நிலையத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூரில் சாலைகள் அமைக்க மேலும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு

டலூர்:

              கடலூரில் சாலைகள் அமைக்க தமிழக அரசு மேலும் ரூ. 10 கோடி வழங்கி இருப்பதாக, நகராட்சித் தலைவர் து.தங்கராசு திங்கள்கிழமை தெரிவித்தார்.  கடலூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் து.தங்கராசு தலைமையில்  திங்கள்கிழமை நடந்தது.

               கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதுப்பிக்க ஏற்கனவே, சிறப்பு சாலைத் திட்டத்தில் தமிழக அரசு ரூ.10.1 கோடி அனுமதித்தது. இப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் மேலும் ரூ.10 கோடியை அரசு வழங்கி உள்ளது.  இதுதொடர்பாக சாலைப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் தலைவர் தங்கராசு கூறியது:  

              முன்னதாக 25.2 கி.மீ. நீளச் சாலைகள் அமைக்க நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. 25 பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.  தற்போது மேலும் ரூ. 10 கோடி வழங்கப்பட்டு உள்ளதால்  72 சாலைகள் அமைக்கப்படும். அதில் 71 சாலைகள் சிமெண்ட சாலைகளாக இருக்கும். ஒன்று மட்டும் தார்ச்சாலை. இச்சாலைப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். 

                   மார்ச் மாதத்துக்குள் 65 கி.மீ. நீளச் சாலைகள் முடிவடையும். ஏற்கனவே 45 கி.மீ. நீளச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டன.   மழை, வெள்ளத்தால் 14 கி.மீ. நீளச் சாலைகள் சேதம் அடைந்தன. அவற்றை புதுப்பிக்க அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கி இருக்கிறது என்றார் தங்கராசு.  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை தயார்

சிதம்பரம் : 

            சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்கள் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தாசில்தார் காமராஜ் கூறுகையில், 

          "சிதம்பரம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர். அந்த மனுக்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் மூலமாகவும், நகராட்சியில் நகராட்சி அலுவலர்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. எனவே வாக்காளர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூரில் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க ரூ.45 லட்சம் கடனுதவி

கடலூர் : 

              கடலூரில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 16 பேருக்கு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்க கலெக்டர் கடனுதவி வழங்கினார். 

             கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்டோ, வேன், கார் ஆகியவை வாங்கி தொழில் செய்ய மானித்துடன் கூடிய வங்கிக் கடனாக 45 லட்சத்து 6 ஆயிரத்து 32 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். 

              தேசிய அறக்கட்டளை கடலூர் மாவட்ட குழு மூலம் மன வளர்ச்சி குன்றிய சிதம்பர வட்டத்தைச் சேர்ந்த 28 மாற்றுத் திறனாளிகளுக்கு 67 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிரமைய காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன் பங்கேற்றார்.

Read more »

நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை “கிடுகிடு” உயர்வு

நெல்லிக்குப்பம்:

            நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

          கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனையான 1 கிலோ 16-க்கு விற்ற பீட்ரூட் நேற்று ரூ.30-க்கு விற்கப்பட்டது. பெரிய பெல்லாரி 1 கிலோ ரூ.60-க்கும், நடுத்தர பெல்லாரி ரூ.30-க்கும், சாம்பார் வெங்காயம் 1 கிலோ ரூ.50-க்கும், தக்காளி 1 கிலோ ரூ.35-க்கும் விற்கப்பட்டது. சவ்சவ் 1 கிலோ ரூ.20-க்கும், உருளை கிழங்கு 1 கிலோ ரூ.18-க்கும், பீன்ஸ், காரட் 1 கிலோ தலா ரூ.40-க்கும், கோசு 1 கிலோ ரூ.20-க்கும், முள்ளங்கி 1 கிலோ ரூ.24-க்கும், பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.20-க்கும், கருணை கிழங்கு 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும் விற்பனை செய்யப்பட்டது. பூண்டு 1 கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

Read more »

கடலூர் பகுதியில் நேற்று திடீர் மழை

கடலூர் பகுதியில்

 

 இன்று திடீர் மழை

கடலூர்:
       
            வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த மாதம் கன மழை நீடித்தது.

            இதனால் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள சேத பகுதிகளை மத்தியகுழுவினர் கணக்கெடுத்து உள்ளனர். தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று காலை திடீர் என மழை பெய்தது. இதன் காரணமாக அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதே போல நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது.

Read more »

Road works to begin on January 10: Cuddalore Collector

CUDDALORE: 

          Municipal Commissioner S. Ilangovan has issued work orders for taking up repair works on roads that were damaged by the recent rain and floods, Collector P. Seetharaman told reporters here.

         Works on a total of 31 roads for a distance of 14 km would be taken up at a cost of Rs. 70 lakh. The repair works would begin on January 10. Mr. Seetharaman said that under the Special Roads Scheme, re-topping of roads for a distance of 23.72 km would be taken up at a cost of Rs. 10.41 crore in the first phase, and 25.2 km length of roads at a cost of Rs. 9.99 crore in the second phase.

            He underscored the point that work on all these roads would be completed before February 15. By utilising funds sanctioned under the 12th Finance Commission, and, the MP and MLA Local Area Development Funds, roads stretching over a distance of 45 km had already been repaired at a cost of Rs 5.41 crore, Mr. Seetharaman said.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior