உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் 
கனிந்த ஆங்கிலப் ( 2011) புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்..




Read more »

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள்

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள்

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்
2. சாமியார் நித்யானந்தா
3 . காமன் வெல்த்  ஊழல் 

4 . உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
 
5 . மங்களூர் விமான விபத்து
6. கோவையில் குழந்தைகள்  கொடூரமாக கொலை

7. ஹைதி பூகம்பத்தில் 2 லட்சம் பேர் பலி
8 . விக்கிலீக்ஸ் இணையத்தளம்
9. சச்சின் சாதனை - ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் 

10. தமிழக  வெள்ளம்   

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள்

1.  கார்த்தி

ஆர்யா 

3. சிம்பு 

4 விக்ரம்

5. மிஸ்கின்


Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள்

1 அங்காடித் தெரு

2. விண்ணைத்தாண்டி வருவாயா

3. பாஸ் (எ) பாஸ்கரன்

4 .பையா
 
5. மதராசபட்டினம்

6. எந்திரன்
 
7. ராவணன் 

சிறப்பு திரைப்படம் - நந்தலாலா

 

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள்

1. உன் பேரை சொல்லும்போதே - அங்காடித் தெரு

2. இதுவரை இல்லாத  உறவிது  - கோவா

3. அடடா  மழைடா   அட  மழடா பையா

4. உசுரே போகுதே உசுரே போகுதே - ராவணன்

5. ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே - விண்ணைத் தாண்டி வருவாயா   

6. நான்காவது இடம்: கிளிமஞ்சாரோ - எந்திரன் 

7. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெரு


Read more »

கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயன்பாட்டுக்கு வராத பாலம்!


கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னமும் பயன்பாட்டுக்கு வராத திருச்சோபுரம் பாலம்.
 
கடலூர்:
 
                     கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம், ஏனோ இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 
               - சிதம்பரம் சாலையில் இருந்து திருச்சோபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகலானது. இந்தச் சாலை வழியாக உப்பனாற்றைக் கடந்துதான், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தனியார் தொழிற்சாலைகள், மற்றொரு தனியார் தொழிற்சாலைக்கான சிறிய துறைமுகம், ஆலப்பாக்கம் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டும். மேலும் கம்பளிமேடு, தியாகவல்லி, பெரிக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, தம்பணாம்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் இச்சாலையில் உள்ள உப்பானாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
 
            உப்பனாற்றைக் கடந்து செல்லும் இவ்வழியில் சீனிவாசபுரத்தில் உள்ள இந்தத் தரப்பாலம் மிகப் பழையது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், தரைப்பாலத்தில் நீர் மட்டம் உயர்வதால், முந்தைய ஆண்டுகளில் 5 நாள்களுக்கு மேலும் போக்குவரத்து தடைபட்டது  உண்டு.இந்த ஆண்டு 3 நாள்கள் இப்பாலத்தில் போக்குவரத்து நடைபெற வில்லை. குறுகிய தரைப்பாலம் வழியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைப் போக்க, 15 ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பாலத்தின் இரு முனைகளும் அணுகு சாலைகளால் இணைக்கப்படாமல் பாலம் துண்டாக நிற்கிறது.
 
.இது குறித்து திருசோபுரத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சாமி கச்சிராயர் கூறுகையில், 
 
                "உப்பனாற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது தரைப் பாலத்தில் போக்குவரத்து தடைபட்டு விடும். பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்குச் செல்வோருக்கும் வசதியாக உயர்மட்டப் பாலம் தேவை என்று கோரியதால் நெடுஞ்சாலைத் துறை இப்பாலத்தைக் கட்டியது.நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னை காரணமாக, உயர்மட்டப் பாலத்துக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தடைபட்டது.தற்போது தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் தரைப்பாலம் வழியாகச் சென்று வருகிற நிலையில், உப்பனாற்றில் உயர் மட்டப் பாலத்தின் தேவை அதிகரித்து உள்ளது' என்றார்.
 
குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 
 
                 நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை எழுந்ததால் பாலம் கட்டும் பணி நிறைவு அடைய வில்லை. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் அப்போது தடைபட்டு நின்றுவிட்டது. அதனால் பாலம் பற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை' என்று தெரிவித்தார்.
 
                    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், அரசின் உதவியுடன் எளிதாக கையகப்படுத்தப்படுகிறது.ஆனால் ஒரு பாலத்துக்கான சிறிய அளவு நிலத்தை கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னையை, அரசால் ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள்


பெண்ணாடத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு நூலகம்
கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்கள் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் நூலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கின்றன.

             வளர்க்கும் இடங்களாக கருதப்படும் நூலகம் இன்று அவசியத் தேவையான ஒன்று. நூலகங்களை மாணவர்கள் மட்டுமின்றி, பெரியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்துகின்றனர். இன்று தொலைக்காட்சி ஆக்கிரமித்திருந்தாலும் நூலகத்துக்கான மவுசு இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது. நூலகத்துக்குச் செல்லும் அங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை படிக்காத ஒருவரையும் புத்தகங்களை புரட்டச் செய்யும். அத்தகைய பெருமை நூலகங்களுக்கு உண்டு.

               மாவட்டத்தில் அரசின் சார்பில் 18 நூலங்கள் இயங்குகின்றன. இவற்றில் மூன்றில் 2 பங்கு நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகின்றன.அவ்வாறு வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள் போதிய பராமரிப்பின்றியும், மழைகாலத்தில் ஒழுகிக் கொண்டும், வருகிற வாசகர்கள் அமர்ந்தபடி படிக்க முடியாத சூழலில் இயங்குகின்றன.சில நூலகங்களில் புத்தகங்கள் அடுக்கி வைக்கக் கூட போதிய அலமாரிகள் இல்லாமல் அவை சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

                ஒரு சில நூலகர்கள் ஆங்காங்கே நூலகப் புரவலர்களை உருவாக்கி, புரவலர்களின் உதவியுடன், நூலகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி வாசகர்கள் குறையாத வண்ணம் செயல்படுகின்றனர்.ஏழை எளியவரும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும்தான் இன்று அதிகஅளவில் நூலகங்களை பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் விஞ்ஞான வளர்ச்சி என்பது கைக்கு எட்டாத தூரத்துக்கு வளர்ந்து விட்டபோதிலும், அரசு நூலக வளர்ச்சியில் போதிய பங்காற்றவில்லை என்பது கண்கூட தெரிகிறது.

          நூற்றாண்டு பழமைவாய்ந்த கன்னிமாரா நூலகத்தை புதுப்பித்து, அவற்றின் பெருமையை எடுத்துக்கூறும் அரசு, மாநிலம் முழுவதும் அரசுத்துறையால் நடத்தப்படுகிற நூலகத்தில் போதிய கவனம் செலுத்தாது ஏன் என்பது தெரியவில்லை.காலத்தால் அழியாத பல வரலாற்று உண்மைகள் உள்ளடக்கி, அவற்றை காலங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுவது இந்த நூலங்களில்தான்.அத்தகைய நூலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அவசியம் என்பதை ஏன் அரசு இன்னும் உணரவில்லை. 

               அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமம்தோறும் | 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடங்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளன.இதன் மூலம் அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒப்பந்ததாரரும் மட்டும் பயன்பெற்றுள்ளனர். நூலகக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்கான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் இதுபோன்று வெறும் கட்டடங்களுக்கு செல்லாமல், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற நூலகங்களுக்கு பயன்படுத்தியாவது, நூலகங்களுக்கென சொந்தக் கட்டடத்தை ஏற்படுத்த, அரசு முயற்சிக்குமா?

Read more »

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்

சிதம்பரம் : 

            மின் கட்டணத்தை இனி இணைய தளம் மூலம் செலுத்தி பயனடையலாம் என சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              தமிழ்நாடு மின் துறை, நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு இணைய தளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே நுகர்வோர் இந்த வசதியை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி பயனடையலாம். மின்வாரிய அலுவலகங்கள் மூலமும் மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 26 ஆயிரம் பேர் தேர்வு

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் விழா குமராட்சியில் நடைபெற்றது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9444 பேருக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். 
 
அப்போது கலெக்டர் சீத்தாராமன் பேசியது:-

             கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முதன் முதலில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டியதும், முதல் பயனாளிக்கு வீட்டு சாவி ஒப்படைத்தது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த பணிகள் இந்த பகுதிகளில் பெய்த மழை பெருவெள்ளம் காரணமாக சுணக்கம் ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டத்தில் 1,27,888 பேருக்கு நிபந்தனையின்றியும், 39239 பேருக்கு நிபந்தனையுடன் கூடியும் ஆக மொத்தம் 1,64,327 பேருக்கு வரும் 6 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்னர். இதில் நடப்பாண்டில் 26119 வீடுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 195.89 லட்சத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக்கு 5759 பேருக்கு நிபந்தனையின்றி யும், 3685 பேருக்கு நிபந்தனை பேரிலும் ஆக மொத்தம் 9444 பேருக்கு தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் 1560 வீடுகளுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.17 கோடியே 70 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரம் கட்டுமான பொருட்களன் விலை மற்றும் கட்டுப்பாடு நீங்கி பணிகள் விரைந்து நடைபெறும்.

                   மேலும் வெள்ளம் பாதித்த காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு முழுவதும் பாதிக்கப்பட்ட 83 குடிசை வீட்டிற்கு ரூ.5000 வீதமும், பகுதியாக சேதம் அடைந்த 170 குடிசைக்கு ரூ.2500 வீதமும், 5151 வீடுகளுக்கு ரூ.1500 வீதமும், சிதம்பரம் பகுதியில் முழுவதும் பாதித்த 9 குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த 79 வீட்டிற்கு ரூ.2500ம், 6172 வீடுகளுக்கு ரூ.1500ம் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.இதேபோல் பயிர் கணக்கெடுப்பு முடிந்து பணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வரவு வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பயிர் காப்பீடு குறைபாடுகள் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

                காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், குமராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் வெங்கடாசலம், செயற்பொறியாளர் சந்திர நாராயணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், நடராஜன், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கியது

நெல்லிக்குப்பம்:

                  நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் முதன் முதலாக சரக்கு போக்குவரத்து துவங்கியது. விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கடலூர் முதுநகரில் மட்டும் சரக்குகள் ஏற்றி இறக்க தனிப்பாதை வசதி இருந்தது. நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் சர்க்கரையை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப லாரிகள் மூலம் கடலூர் முதுநகர் எடுத்து சென்று அங்கிருந்து ரயில்கள் மூலம் அனுப்பி வந்தனர். அதேப்போன்று சவுக்கு கட்டைகளும் அனுப்பப்பட்டன.

               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையாக மாற்ற பணி துவங்கிய போது நெல்லிக்குப்பத்தில் சரக்குகள் ஏற்ற தனிப்பாதை அமைக்க வேண்டுமென சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் சரக்குகள் ஏற்ற தனி பாதையும், வாகனங்கள் செல்ல ரயில் பாதையையொட்டி சாலை வசதியும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதன் முதலாக நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் இருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகளில் 1,500 டன் சவுக்கு மர கட்டைகள் ஒடிசா மாநிலம் சிங்கபுரம் ரோடு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

            நெல்லிக்குப்பம் சுற்று வட்டாரத்தில் வெட்டப்படும் சவுக்கு மரங்களை இனி இங்கிருந்தே ரயில்களில் அனுப்ப முடியும் என்பதால் வியாபாரிகளும், சர்க்கரை மூட்டைகளை குறைந்த செலவில் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் சர்க்கரை ஆலை நிர்வாகமும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிருந்து சரக்குகள் ஏற்றப் படுவதால் நெல்லிக்குப்பம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

Read more »

வியாழன், டிசம்பர் 30, 2010

கடலூரில் அரசியல் கட்சியினரின் 100 பேனர்கள் அகற்றம்

கடலூர்:

             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி அவைகளை அகற்றும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார்.

            இதைத்தொடர்ந்து கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாபுலியூர், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வைத்திருந்த பேனர்களை  போலீசார் அகற்றினார்கள். 100-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்படுகின்றன.

Read more »

TASMAC outlet salesman robbed near Panruti

CUDDALORE: 

          A four-member gang robbed Rs. 50,000 from Mani (32), a salesman of a TASMAC outlet at Manadikuppam near Panruti on Tuesday night. Police said Mani was returning home on a two-wheeler. The gang waylaid him and snatched away his cash bag at knife-point.

Read more »

புதன், டிசம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் ஏழை ஆதிதிராவிடர்கள் இறுதிச் சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு

கடலூர்:

            ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குக்காக ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்துக்கு 2010-11-ம் ஆண்டுக்கு ரூ. 8.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

             கடலூர் மாவட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்  மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் யாரேனும் இறந்தால், அன்னாரின் இறுதிச் சடங்குக்காக (அக்குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பின்) ரூ. 2,500 உதவித்தொகை பெற, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து





கடலூர்:

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.

               சமீபத்தில் பெய்த கன மழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் முடப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில், பண்ருட்டி அடுத்த தென்பெண்ணையாறு, கெடிலம், மலட்டாறு பகுதியில், டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு காரணமாக, வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை. 

            லாரிகளை பிடித்து விŒõரிப்பது, உயரதிகாரிகளுக்கு தெரிந்தால், வழக்கு பதிவு செய்வது, இல்லையெனில், "மாமூல்' பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், தொடர் மணல் தட்டுபாடு காரணமாக, மாட்டு வண்டிக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும் 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more »

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்



   
சிதம்பரம் : 

                சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை பேசினார்.

                 இந்திய வேதிப் பொறியாளர் 63வது ஆண்டு மூன்று நாட்கள் கருத்தரங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.

கருத்தரங்கில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரனில் இந்தியா' என்ற தலைப்பில் பேசியது: 

              சந்திரனைப் பற்றி 1960ம் ஆண்டில் தான், முதன் முதலாக ஆராயத் தொடங்கினர். 1980ம் ஆண்டில் தான் ஒவ்வொரு நாடாக ஆராய்ந்தது. எல்லா நாடுகளும் சந்திரனில் ஒரு பகுதியை தான் பார்த்துள்ளனர். ஆனால் சந்திராயன்-1 செயற்கை கோள் மூலம் சந்திரனின் அனைத்து பகுதியையும் பார்த்தது இந்தியா மட்டும் தான்.அங்கு என்னென்ன கனிம பொருட்கள் உள்ளது. என, தெளிவாக ஆய்வு மேற்கொண்டது. மூன்று மைக்ரான் அளவில் கண்ணால் பார்க்க முடியாத வேதிப் பொருட்களும், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது.

             நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைத்தது. நாங்கள் பட்ட கஷ்டங்கள் சவாலோடு கொண்ட பலன் சந்திராயன் -1 வெற்றி மூலம் கிடைத்தது.இந்த வெற்றி உலக நாடுகள் சந்திரனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள, ஒரு அடித்தளமாக அமைந்தது. இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்ய 250 விண்ணப்பங்கள் கூட வருவது கடினம். ஆனால் சந்திராயன் வெற்றிக்கு பிறகு ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆர்வம் காட்டுகின்றனர். சந்திராயன்-1 வெற்றி சந்திராயன் -2ன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Read more »

கடலூர் அண்ணா பாலத்தில் குவியும் மணலால் விபத்து அபாயம்

கடலூர் :

         கடலூர் அண்ணா பாலத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. 

            கடலூர் அண்ணா பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தில் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இந்த மணலை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் குவிந்து கிடக்கும் மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மணலை அகற்ற வேண்டும்.

Read more »

சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் பேனர்கள் கிழிப்பு


சிதம்பரம் அருகே பேனர்கள் கிழிப்பு;

 

 விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்;

 

 கடைகள் அடைப்பு

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

              நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின் 4 பேனர்களை கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியது. இன்று காலையில் அதனையறிந்த அந்த கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.   உடனே அவர்கள் சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன.

                இது குறித்து தகவல் அறிந்தவுடன் புதுசத்திரம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின் 4 பேனர்களை கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியது. இன்று காலையில் அதனையறிந்த அந்த கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.

Read more »

Thai Poosam must be State holiday

CUDDALORE: 

       Followers of Ramalinga Adigalar, populalarly known as ‘Vallalar,' have appealed to Deputy Chief Minister M.K. Stalin to declare the ‘Thai Poosam' day as a State holiday. In a representation addressed to Mr. Stalin, founder of the Thiruvarut Prakasa Vallalar Samarasa Suththa Sanmarkka Neri Parappu Sangam K. Manivannan said that thousands of followers from various parts of Tamil Nadu used to gather at Vadalur on the occasion. As of now, only the Cuddalore district administration was declaring local holiday on that day.

Read more »

செவ்வாய், டிசம்பர் 28, 2010

வள்ளலார் பிறந்த தைப்பூசம் : தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க கோரிக்கை

கடலூர்:

           வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவதரித்த தைப்பூச தினத்தில், தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கத்தின் நிறுவனர் கே.மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:  

             தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் அவதரித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார், திருவருட்பாவை இயற்றினார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியார், சாமிகள் இல்லை. உருவ வழிபாடு கூடாது.  நாம் அனைவரும் மனித இனம், சாதி மத பேதம் கூடாது என்று கூறினார்.  ஆனால் பெரியாருக்கு முன்னரே, ராமலிங்க சுவாமிகள் தெய்வம் எந்த உருவத்திலும் இல்லை. கோயிலிலும் இல்லை. சாதி மத பேதமில்லை. 

                 கடவுள் ஒருவரே. அவர் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி சத்தியஞான சபையை வடலூரில் நிறுவினார். தைப்பூச நட்சத்திர தினத்தில், ஜோதி தரிசனம் செய்யவும் வழிவகை செய்தார்.  தைப்பூச தினத்தன்று, கடலூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை விடப்படுகிறது. மனிதனும் இறைவனாக முடியும் என்ற தத்துவத்தை, அறிவியல் முறைப்படி உலகுக்கு எடுத்துக்காட்டிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு, பெருமை சேர்க்க தைப்பூச தினத்தன்று தமிழகம் முழுவதும், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். 

Read more »

பண்ருட்டி அருகே தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சிறுமி படுகாயம்



பண்ருட்டி : 

            கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தொகுப்பு வீட்டின் சிமென்ட் காரை விழுந்ததால், 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். 

             பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில், தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி செல்வி, மகன் உத்திரவேல், மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு வீட்டின் மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் சிறுமி ஆர்த்தீஸ்வரியின் (5) வயிற்றில் விழுந்து கிழித்து, குடல் வெளியே வந்தது. சிறுமி "108' ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், இப்பகுதியில் உள்ள 50 தொகுப்பு குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

சிதம்பரம் : 

               காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. தாசில்தார் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது.

Read more »

திட்டக்குடி தொகுதியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்: ராகுலுக்கு மனு

திட்டக்குடி : 

         திட்டக்குடி தொகுதியை இளைஞர் காங்., மகளிர் நிர்வாகிக்கு ஒதுக்க மனு அளிக்கப்பட்டது. 

திட்டக்குடி சட்டசபை தனி தொகுதி இளைஞர் காங்., பொதுச் செயலர் இறையூர் காவேரி பிரியங்கா, இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல்காந்தியிடம் நேரில் அளித்துள்ள மனு:

                  திட்டக்குடி தொகுதியினை இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு மகளிர் நலனில் அதிகளவு அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் திட்டக்குடி தொகுதி சார்பில் இளைஞர் காங்., மகளிர் நிர்வாகி போட்டியிட்டால் 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே இளைஞர் காங்., சார்பில் போட்டியிட மகளிருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Read more »

நெல்லிக்குப்பத்தில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நெல்லிக்குப்பம்:

              வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதித்த நெல்லிக்குப்பம் 6-வது வார்டு பகுதி பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கோரி நேற்று  காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
             நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போலீசாருடன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். வெள்ள நிவாரண கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக:கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Read more »

கடலூரில் மறியல் போராட்டம் நடத்திய 600 ஆசிரியர்கள் கைது


கடலூர்:

               மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஊர்வலமாக சென்றனர்.

            கடலூர்-புதுவை சாலையை அடைந்த போது ஊர்வலத்தில் வந்த ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் முருகேசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் அப்துல்மஜித் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர்.

Read more »

Aid distributed to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources

CUDDALORE: 

           District Collector P.Seetharaman on Monday disbursed financial assistance to the tune of Rs 10.17 lakh to 21 persons for promoting inland fish breeding sources. A statement from the Collectorate said the State government was implementing the Central scheme with a subsidy component for enriching the inland fish resources. The government was giving away a subsidy of Rs 60,000 a hectare (in the case of Scheduled Caste/Scheduled Tribes candidates Rs 75,000 a hectare) to those who breed fish in the ponds set up in their own lands. For 2009-2010, 21 such beneficiaries who were breeding fish on a total area of 13.87 ha. were identified for aid

Read more »

திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

 இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:  

             கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே கடலூர் பஸ் நிலையம், திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் உள்ளன. அந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட், ரயில் வரும் நேரத்தில் மூடப்படும்போது, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு, அந்தச் சாலையில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

            நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, அந்தப் பாலம் அமைக்கப்பட்டால், அதில், இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். மினி வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்தச் சாலை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும்.  இதனால், அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டு வியாபாரமும் குறைந்துவிடும். 

              எனவே, எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கடலூர் பஸ் நிலையத்தின் பின் புறம், சுரங்கப்பாலம் அமைக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் மாற்றுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து 15,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார்.  பாலம் அமைப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கொடுத்த திட்ட வரைவு குறித்து ஆட்சியர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

             லாரன்ஸ் சாலையில் பாலம் அமைந்தால் ஏற்படும் இடையூறுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிலையில், அந்தச் சாலையில் பாலம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தச் சாலையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

              அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள்.

சிதம்பரம்:

            பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

           சிதம்பரம் பகுதியில் வல்லம்படுகை, வேளக்குடி, இளநாங்கூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர்.  இந்த ஆண்டு கரும்பு நல்ல விளைச்சல் பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள கரும்பு மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கிராக்கி அதிகம். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிதம்பரம் பகுதியில் கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100-க்கு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  

            இவையல்லாமல் வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி, லாரி வாடகை தனியாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரத்தில் கரும்பு உற்பத்தி இல்லாததால் தமிழகத்திலிருந்து குறிப்பாக சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு வேலூர் மற்றும் சென்னை கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ÷பொங்கல் பண்டிகைக்கு ஒரு கரும்பு ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது.  

           ஒ   ரு ஏக்கருக்கு 900 கட்டுகள் வரை கரும்பு கிடைக்கும். ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் வரை விலை கரும்புக்கு விலை கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இவையல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் தாங்களே கரும்புகளை நேரடியாக எடுத்துச் சென்று பொங்கலுக்கு ஒரு கரும்பு ரூ. 20 என விற்பனை செய்து அதிகம் லாபம் சம்பாதிக்கின்றனர். 

Read more »

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:
            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.  1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.  இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  

              மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

            ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

               இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

          வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட திட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூகப் பணி, சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            வயது 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஊக்கத் தொகை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

நேரு யுவ கேந்திரா, 34, 
ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம்,
கடலூர் 

                  முகவரிக்கு வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-293822 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த சிறுவர்களின் கல்விக்கு ரூ.1.13 கோடி செலவிடப்பட்டுள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:
 
            சுனாமியில் பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

              மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், நகராட்சி கமிஷனர் இளங்கோவன், டி.எஸ்.பி., பாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கடலூர் அரசு சேவை இல்ல வளாகத்தில் உள்ள சுனாமி காப்பகத்தில் தங்கி படித்து வரும் சுனாமியில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவர்களுடன் அஞ்சலி செலுத்தினர். காப்பக சிறுவர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் தனது சொந்த செலவில் சால்வை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                "சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. சுனாமியில் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்தவர்களுக்கு ராஜிவ்காந்தி மறுவாழ்வு புனரமைப்பு திட்டத்தில் 1,589 வீடுகளும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் 5,090 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

                மேலும், கடற்கரைக்கு 1,000 மீட்டருக்குள் இயற்கை இடர்பாடுகளை தாங்க முடியாத நிலையில் உள்ள 351 வீடுகளை உலக வங்கி நிதியுதவியுடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. ஐதராபத்தில் உள்ள சுனாமி ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தால் அதனை உடனடியாக மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்க ஒயர்லஸ் கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு வசதியாக நெய்வேலியில் பன்பலை வானொலி நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

சூனாமி நினைவு நாள்: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அஞ்சலி

கடலூர்:

            கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தவர்களுக்கு நேற்று கடலோர கிராமங்களில் பலர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உருவான சுனாமி பேரலை தமிழக கடலோர மாவட்டங்களைத் தாக்கியது.

                  அதில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், ராசப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு உள்ளிட்ட 50 கிராமங்களை தாக்கியது. இத்தாக்குதலில் 214 சிறுவர்கள் உட்பட 617 பேர் இறந்தனர். 40 பேரை காணவில்லை.உலகையே உலுக்கிய இச்சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சுனாமியில் இறந்தவர்களின் படங்கள் மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

                  மீனவர் பேரவை சார்பில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுனாமி நினைவு தூணில் மாநில துணைத் தலைவர் மாரியப்பன், நிர்வாகி கஜேந்திரன், சுப்புராயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்காரத்தோப்பில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் நடராஜன், முருகன், தேவராஜ், வெண்புறா குமார், மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம்: எம்.ஜி.ஆர். திட்டு, முடசல் ஓடை, டி.எஸ்.பேட்டை, கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் ஊர்வலமாக சென்று கடல் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

                      நிகழ்ச்சியில் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் பரமதயாளன், கவுன்சிலர்கள் கற்பனை செல்வம், பாண்டியன், கலா உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை: அன்னங்கோயிலில் பேரூராட்சி தணை தலைவர் செழியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

                நிகழ்ச்சியில் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் அரவிந்தன், ஜேப்பியார் பேரவை மாவட்ட தலைவர் கனகசபை, புதுப்பேட்டை கிராம நிர்வாகி மணிவண்ணன், ராஜேந்திரன், அரசு, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதன் காரணமாக மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Read more »

Annamalai University to evaluate submergence-tolerance of paddy

CUDDALORE: 

          The International Rice Research Institute (IRRI), Manila, the Philippines, has assigned the task of evaluating submergence-tolerant paddy varieties in Tamil Nadu to the Department of Agronomy, Faculty of Agriculture, Annamalai University.

             Rm.Kathiresan, head and professor, Department of Agronomy, told The Hindu that the existing paddy varieties would withstand partial submergence only for a limited period and would perish soon if submerged fully. In the recent years, in the delta districts, the food basket of Tamil Nadu, submergence of standing paddy crops for over a week had become a common phenomenon. If the problem was not tackled in a scientific and consistent manner, it might endanger food security and seriously threaten the livelihood of lakhs of farmers and farm labourers.

          Mr. Kathiresan said that the IRRI, through the project called “Stress-tolerant rice for Africa and South Asia (STRASA)” funded by the Bill and Melinda Gates Foundation, the U.S., had isolated the submergence tolerant gene and introduced it in paddy varieties such as IR-74, Swarna, Samba Mashuri and CR-1009, all with the suffix ‘sub-1.'

              Various agricultural research institutions were evaluating these varieties elsewhere in India and in Tamil Nadu the task had been assigned to Annamalai University. Mr. Kathiresan further said that his department had already been implementing the World Bank-Indian Council of Agricultural Research-funded National Agricultural Innovation Project for livelihood enhancement of 2,400 farming households in the disadvantaged districts of Tamil Nadu.

                  On the strength of the latter project, the IRRI had given the responsibility of evaluating the new varieties to the department. The evaluation process for these new cultivars had already started. Mr. Kathiresan observed that the Department of Biotechnology under the Union Ministry of Science and Technology had involved the Agronomy Department as a partner in a network mode in collaboration with the IRRI to speed up the process of evolving many more flood and saline-tolerant paddy varieties. He hoped that the new varieties would come as a boon to the delta farmers to mitigate the crop losses on account of floods.

Read more »

Special gram sabha meetings on December 29

CUDDALORE: 

          Collector P. Seetharaman had ordered the panchayats to convene special gram sabha meetings on December 29 to discuss the proposal to convert multi-member wards into single-member wards.

           In a statement released here, he said that the meeting should be widely publicised through noticeboards in the panchayats and distribution of hand bills. During the meeting, details such as how many wards would be made one-member wards, and the number of hamlets, households and the electorate to be brought under its purview, and other related issues, would be discussed the Collector added.

Read more »

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

3 persons get fellowship from National Virtual Academy

CUDDALORE: 

        Three persons from Cuddalore district have bagged the fellowship conferred by M.S. Swaminathan Research Foundation-run Jamshedji Tata National Virtual Academy, for their services to local residents.

           It is a national honour conferred not on academia or research scholars but ordinary persons, including school drop-outs, who are committed to social causes on their own and without the backing of any other organisation. The fellowship was given to S. Balamurugan (23) of Mudasalodai, S. Renganayagi (52) of Kattumannarkoil and K. Paramanandam (41) of Chidambaram at the seventh convocation of the Academy held in Mumbai in November.

          Project Officer of the Chidambaram branch of the Research Foundation R. Elangovan told The Hindu that the fellowship did not carry any monetary benefit but only social recognition. They had been selected on the strength of their dedicated services for the public good. In fact, they turned out to be torchbearers for local residents, striving for revolutionary changes, mostly technology driven, in capacity building. Mr. Balamurugan and Mr. Paramanandam were associated with the Village Knowledge Centres set up by the Foundation.

        Mr. Balamurugan was instrumental in setting up an electronic display system provided by the Indian National Centre for Ocean Information Service (INCOIS) and popularising global positioning system among fishermen in Mudasalodai. The INCOIS system gives out weather forecast, besides occurrence of fish shoals in the sea. Mr. Balamurugan had taught the fishermen on how to read the system and when to venture into the sea.

            He had also mobilised public opinion for getting better basic amenities, resulting in the laying of tar-topped road and construction of a child care centre. Mr. Paramanandam helped Maduvangarai village in getting an overhead tank through a multi-national service organisation. Through his efforts, 50 elderly people had got old age pension and 25 families educational support for their girl children.

          Ms. Renganayagi spearheaded the drive to clean the clogged irrigation canal, against several odds, to benefit 1,800 acres of cultivable land at Themmur in Kattumannarkoil block. She motivated 260 farmers to go for crop insurance. Now, the district administration had sanctioned Rs. 2.5 lakh to spruce up the canal. Collector P. Seetharaman recently felicitated Mr. Balamurugan and Ms. Renganayagi at his camp office here.

Read more »

Forest Department officials rescue crocodile

CUDDALORE: 

        Forest Department officials rescued an eight-foot-long crocodile from a pond in Jayamkondam village near Chidambaram on Saturday. Those who went to the pond in the morning noticed the reptile and raised an alarm. On information, the Forest Department officials went there and rescued the crocodile, weighing over 250 kg. They later released it into a water source at Vakkiramari, about 15 km from Chidambaram.

Read more »

Residents protest NLC action

CUDDALORE: 

         People living near Block 21 of the Neyveli township protested the Neyveli Lignite Corporation's move to cut unauthorised power connections in the area on Saturday.

         About 300 residents, including 200 women, gathered around NLC officials and prevented them from disconnecting the unauthorised power connections to households. As the protest intensified, the NLC officials suspended the operation. As many as 3,500 tenements, including huts and brick structures, had come up at the place.

        Residents alleged that though they possessed ration cards and electors' photo identity cards, the NLC management was yet to recognise them as authorised dwellers of the area. NLC sources said that to find a solution to the long-pending issue, the management had made an announcement that the households that pay the prescribed fees within the stipulated period would be given power connections.

          While a section of residents complied with the NLC direction, others did not. This prompted the NLC management to take action against those households tapping power lines, the sources said.

Read more »

சனி, டிசம்பர் 25, 2010

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 10-க்குள் கிடைக்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி

             ஜனவரி 10-ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            2011 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு (அதாவது இந்த காலகட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தன.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

            மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஜூலையிலும் நடைபெற்றன. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  பொது மக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு அறியலாம்.  

             தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும்  www.elections.tn.gov.in​ தகவலை அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையை அளித்து ஒப்புதலைப் பெறுவர்.  ஜனவரி 10-ம் தேதிக்குள் யாருக்கேனும் வாக்காளர் புகைப்பட அடையாள கிடைக்காவிட்டால் வாக்குச் சாவடி நிலை அலுவலரையோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியரையோ அல்லது மண்டல அலுவலரையோ தொடர்பு கொண்டு அவரது அடையாள அட்டையின் நிலைமையை அறிந்து கொள்ளலாம் என்று பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior