உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

3 இடங்களில் 100 டிகிரி வெயில்

    தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 3 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
வெயில் அளவு:
வேலூர் 102
திருச்சி 102
சேலம் 101
மதுரை 99
திருநெல்வேலி 99
சென்னை 96
கடலூர் 96
புதுச்சேரி 96
கோவை 95
கன்னியாகுமரி 93

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பராமரிப்பில்லா திருப்பாப்புலியூர் ரயில் நிலையம்


கடலூர்:

                கடலூர் அருகே திருப்பாப்புலியூர் ரயில்நிலையம் பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதோடு பயணிகளை வஞ்சிக்கும் நிலையில் உள்ளது. ரயில் நிலையத்துக்கு பயணிகள் வரும் சாலையில் ஆட்டோக்கள் வழிமறித்து நிற்பதாலும் மக்கள் அவதியடைகிறார்கள்.விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டம் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கிய போதிலும், இந்த மார்க்கத்தில் ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் இன்னமும் இயக்கப்படவில்லை. இயக்கப்படும் ரயில்களும் ஏதோ வேண்டா வெறுப்புடன், மக்களுக்கு பயனற்ற நேரங்களில் இயக்கப்படுவதாகவே தெரிகிறது. நகரின் மையப் பகுதியில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அமைந்து இருக்கும் நிலையிலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நிற்காது என்று, மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான முடிவை ரயில்வே நிர்வாகம் எடுத்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் பராமரிப்பு இன்றி பயணிகளை வஞ்சிக்கும் நிலையில் உள்ளது. இன்னமும் ரயில்கள் கால அட்டவணைகூட எழுதப்படவில்லை. டிக்கெட் வாங்கிக் கொண்டு அடுத்த பிளாட்பாரம் செல்ல மக்கள் பயன்படுத்தும் இரும்பு மேம்பாலம் இன்னமும் கட்டி முடிக்கவில்லை. முன்பதிவு செய்யும் அலுவலகத்துக்கு எதிரில் இளநீர் வியாபாரிகள் வெட்டிப் போட்ட மடல்கள், ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. அண்மையில் பெய்த மழையில் இவைகள் நனைந்து, துர்நாற்றம் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்வதாகவே இல்லை. கடலூரில் யாரேனும் தங்கள் வேன்களை, கார்களை நிறுத்த இடம் இல்லை என்றால் ரயில் நிலைய வளாகத்தில் கொண்டுபோய் தாராளமாக நிறுத்தி கொள்ளும் நிலை உள்ளது. இதனை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாதது பரிதாபமானது.ரயில் நிலைய வாயிலிலும் வளாகத்துக்குள்ளும் நிறுத்தப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். ரயிóல் நிலைய வாயிலை அடைத்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியாமல், பெரிதும் அவதிப்படுகிறார்கள்.  ரயில் பயணிகள் இந்த ஆட்டோக்களைக் கடந்து செல்வது எளிதாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. இரவு நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முன், போனால் போகட்டும் என்று, ரயில்வே நிர்வாகம், பொதுமக்களுக்கு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த வளாகத்தை அனுமதித்தது. தொடர்ந்து அந்தப் பாதை, பொதுவழியாகப் பயன்படுத்தப்  படுவதால் ரயில் நிலையத்துக்குள் வருவோர் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது. டிக்கெட் முன்பதிவுக்கும், ஏ.டி.எம். ல் பணம் எடுப்பதற்காகவும் வருவோர், பெரிதும் அவதிப் படுகிறார்கள். துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை திருப்பாபுலியூர் ரயில் நிலையத்துக்கு ரயில்வே பாதுகாப்பு போலீசார்  கொடுப்பதில்லை என்று ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுவை குறைவு மாம்பழ விற்பனை "படு மந்தம்'



கடலூர்:
 
               கடலூரில் மாம்பழ வரத்து தொடங்கியது. எனினும் மாம்பழங்கள் உரிய சுவை இல்லாததால், மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.முக்கனிகளில் முதல் இடத்தில் இருக்கும் மாம்பழங்கள், கோடை காலத்தில் மக்களின் நாவிற்குச் சுவையூட்ட வந்து குவிந்துவிடும். மார்ச் 15-ம் தேதிக்கு மேல் மாம்பழங்கள் சந்தைக்கு வந்து விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடந்த 15 நாள்களாகத்தான் கடைகளில் மாம்பழங்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் மிகக்குறைந்த அளவிலேயே பழக்கடைகளில் மாம்பழங்களைக் காண முடிகிறது. தோப்புகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வரும் மாம்பழங்களை ஏப்ரல், மே மாதங்களில் சாலை யோரங்களிலும், நகரின் முக்கிய சந்திப்புகளிலும் வியாபாரிகள் குவித்து வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால், இந்த ஆண்டு அத்தகைய நிலை இல்லை.  ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பங்கணப்பள்ளி மாம்பழம் கடலூரில் கிலோ ரூ. 40க்குக் கிடைக்கிறது. செந்தூரன், ஒட்டு, ஆகிய ரகங்களும் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப் படுகிறது. அல்ஃபோன்ஸô கிலோ ரூ. 80க்கும், காதர் கிலோ ரூ. 60க்கும், பீதர் கிலோ ரூ. 50க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் காய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மாம்பழங்கள் அதிகமாகக் கிடைக்கும் சேலம் மாவட்டத்தில் இருந்து இன்னமும் மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.  திருச்சி, மதுரை, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்துதான் மாம்பழங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.  தற்போது சந்தைக்கு வந்து இருக்கும் மாம்பழங்கள்கூட உரிய சுவை இல்லை என்று தெரிவிக்கிறார்கள். இதனால் விலை இயல்பாக இருந்த போதிலும், மாம்பழங்களை அதிகளவில் விரும்பி மக்கள் வாங்க வில்லை என்று பழ வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். 
 
இது குறித்து கடலூர் பழவிற்பனையாளர் ஏ.ஜி.ராஜேந்திரன் கூறுகையில், 
 
                   இந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும் அதிக அளவில் வரவில்லை. சேலத்தில் இருந்து இன்னமும் மாம்பழங்கள் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வரவில்லை. இந்த ஆண்டு சந்தைக்கு வந்துள்ள மாம்பழங்களில் சுவை திருப்திகரமாக இல்லை. இதனால் மக்கள் மாம்பழங்களை விரும்பி வாங்க வில்லை. திருச்சி, மதுரை, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து மாம்பழங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் போதிய மாம்பழங்கள் வரவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் மாம்பழ சீசன் முடிந்து விடும் நிலையில் உள்ளது என்றார்.

Read more »

விழுப்புரம், திருவாரூர் மருத்துவக் கல்லூரிகள்: அனுமதி கிடைக்குமா?


          
           விழுப்புரம், திருவாரூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் சூழ்நிலை உருவாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.  அரசு பொது மருத்துவமனையில் 9 வயது பெண் குழந்தைக்கு காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது 
 
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை கூறியது:
 
                ""விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டு கட்ட ஆய்வுகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் செய்து முடித்து விட்டனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை, இரண்டாம் கட்ட ஆய்வு செய்யுமாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திங்கள்கிழமை (மே 3) உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்னும் சில தினங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய திருவாரூர் வர உள்ளனர்.கூடுதலாக 170 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட இப்போதுள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கும்; அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 170 இடங்கள் உருவாகும். மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 1,653-ஆக அதிகரிக்கும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

Drive against vehicles with registration numbers of other States

 

Scrutiny: Vehicle check on at Alpet entry point in Cuddalore on Tuesday.


CUDDALORE: 

            The Cuddalore police have launched a district-wide drive against vehicles bearing registration numbers of other States and the Union Territory of Puducherry.

            Explaining the reason behind the move, Superintendent of Police Ashwin Kotnis told The Hindu that it had been found that vehicles with false registration numbers were being used for crimes such as chain-snatching, smuggling, prohibition offences, and so on. These getaway vehicles were difficult to trace and, therefore, it had been decided to keep a tab on them at the entry and exit points of the district. Mr. Kotnis further said that since it had become customary for those residing in Cuddalore district to register their vehicles in Puducherry, taking advantage of the differential tax structures, Tamil Nadu stands to lose heavily.

            In the past two days, over 200 such vehicles were detained for verification. The SP said that the owners were initially cautioned against plying such vehicles on Tamil Nadu roads and, if they continued to defy the provisions of the Motor Vehicles Act, penalty would be levied on them. Transport Department sources said that because of the lower tariffs prevailing in Puducherry the prospective vehicle owners were attracted to the Union Territory. On an average, 100 two-wheelers and 30 four-wheelers were being registered daily in the territorial department, whereas in Cuddalore it was hardly 20 two-wheelers and not even a single car a day.

               Sections 3 and 4 of the Tamil Nadu Motor Vehicles Taxation Act stipulate that any vehicle using the roads in the State ought to pay the prevailing lifetime tax. It was implied that for using the infrastructure of a particular State the vehicle owners ought to bear the cost. They could not pay the tax in one territory and make use of the facility of others. In Tamil Nadu, 8 per cent of the cost of the vehicle ought to be paid as lifetime tax. For instance, for a two-wheeler priced at Rs.50,000 a road tax of Rs.4,000 should be paid and for a car priced at Rs.25 lakh the levy would be Rs.20,000.

             However, in Puducherry there is a much lower graded tax structure: for two-wheelers it ranges from Rs.700 to Rs.1,000, and for four-wheelers it ranges from Rs.4,500, Rs.5,500 to Rs.7,500 (maximum), depending upon the engine capacity. The registration was done even with temporary addresses. Owing to enormity of tasks involved in physically verifying all those vehicles such an exercise could not be carried out on a sustained manner, the sources said.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Pension For Noon Meal Centre Workers


CUDDALORE: 

          The State government has announced a pension scheme for workers of noon meal centres.

            The workers who retired before September 15, 2008, would be eligible for pension. A statement from Collector P. Seetharaman said that pension would be disbursed with retrospective effect from January 2010. Therefore, the retired workers could apply to the respective panchayat unions or municipalities, along with a copy of their retirement order, to stake claim for pension.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு


Latest indian and world political news information


                 பண்ருட்டி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வரும் 7ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

               மக்களின் விருப்பத்திற்கு மாறாக, வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் மூலம் குறுக்கு வழியில் பண்ருட்டி சேர்மன் பதவியை தி.மு.க., பறித்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பண்ருட்டியில் பெரும்பாலான பகுதியில், சாலையிலேயே கழிவு நீர் தேங்கி, கொசுத் தொல்லை, தொற்று நோயால் மக்கள் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி சேர்மனின் திறமையின்மையையும், மக்கள் விரோத போக்கையும், லஞ்சம் தலைவிரித்தாடுவதையும், நகராட்சி கவுன்சிலர்கள் தட்டிக் கேட்டால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

                 நகராட்சி சீர்கேட்டிற்கு காரணமான பண்ருட்டி தி.மு.க., சேர்மன், நகராட்சி நிர்வாகம், தி.மு.க., அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரும், 7ம் தேதி காலை 10 மணிக்கு, பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஜி.ஆர்., மன்றத் தலைவர் பி.எச்.பாண்டியன் தலைமை வகிப்பார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிப்பார். இதில் அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், கட்சியினரும், கவுன்சிலர்களும், பொதுமக்களும் பங்கேற்பர். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

Read more »

கூடுதல் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு! முறைப்படுத்த நடவடிக்கை தேவை


கடலூர்: 

                     கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கும் கூடுதலாக 2,000 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 500 ஆட்டோக்களுக்கு மேல் அனுமதியின்றி காஸ் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் கூடும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

                    கடலூர், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் வட்டார போக் குவரத்து அலுவலகங்களில் ஆட்டோ, அபி ஆட்டோ (டீசல் ஆட்டோ), ஷேர் ஆட்டோக்கள் உட்பட 4,178 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும் 50 ஷேர் ஆட்டோக்கள், 300 அபய் ஆட்டோக்கள் உட்பட 1,900 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பதிவு செய்யப்பட்டவைகளை விட கூடுதலாக 6,000 ஆட்டோக்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகிறது. கடலூர் நகரில் மட்டும் 3,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடலூரில் பதிவு செய்யப்பட்ட 40 ஆட்டோ ஸ்டாண்டுகள் மற்றும் பதிவு செய்யப்படாமல் 30க்கும் மேற்பட்ட ஸ்டாண்டுகள் உள்ளன. மேலும் தெரு முனைகள், சொந்தமாக இயங்கும் ஆட்டோக்கள் என தனித், தனியாக ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

                      கடலூரில் பொது மக்களின் தேவைக்கும் கூடுதலாகவே தற்போது ஆட்டோக்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நிறைந்த கடலூர் லாரன்ஸ் ரோட்டில் இரண்டு பக்கமும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. பொதுவாக ஆட்டோக்கள் எந்த நகரத்தில் பதிவு செய்யப்படுகிறதோ அங்கிருந்து 30 கி.மீ., வரை சவாரிக்கு பயன்படுத்தலாம். ஆனால் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பல இடங்களில் பதிவு பெற்ற ஆட்டோக்கள் அனுமதி இன்றி கடலூரில் ஓடுகிறது. அதனை போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

                     அதே போல் கடலூரில் 500க்கும் மேற்பட்ட காஸ் ஆட்டோக்கள் அனுமதியின்றி இயங்குகின்றன. அதில் பெரும்பாலான ஆட்டோக்களில் வீட்டிற்கு பயன்படுத்தும் காஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் விலை கூடுதலாக உள்ளதால் காஸ் ஆட்டோவில் செலவும் குறைவு, வருமானமும் அதிகம் கிடைக்கிறது. காஸ் பயன்படுத்தும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. அனுமதி பெறாமல் இயங்கும் காஸ் ஆட்டோக்களை கண்காணித்து அதன் மீது போக்குவரத்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

அடரியில் ஆரம்ப சுகாதார நிலையம் மங்களூர் துணை சேர்மன் மனு


சிறுபாக்கம்: 

            மங்களூர் ஒன்றியம் அடரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மங்களூர் ஒன்றிய துணை சேர்மன் சின்னசாமி, அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் நேரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                    சேலம் - கடலூர் நெடுஞ்சாலையில் அடரி ஊராட்சி அமைந்துள்ளது. இதனைச்சுற்றி பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், களத்தூர், காஞ்சிராங்குளம், விநாயகநந்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அதிகளவு ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டால் 50 கிலோ மீட்டர் தூரமுள்ள விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதனால் நேர விரயமும், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே மங்களூர் ஒன்றியம் அடரியில் கிராம மக்களின் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் பெண்கள் பள்ளிக்கு இடம் ஆய்வு

 பண்ருட்டி: 

                 பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்காக அரசுக்கு சொந்தமான இடத்தை தாசில்தார் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு செய்ய கலெக்டர் சீத்தாராமன் கடந்த 1ம் தேதி பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாபு பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள நகராட்சி மைதானம் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த இடம் 1. 25 ஏக்கர் பரப்பளவில் இருந்ததால் மேலும் இடம் தேவை என்பதால் பக்கத்தில் உள்ள தனியார் இடத்தை வாங்க முடிவு செய்தனர். நகரமைப்பு சர்வேயர் அழகேசன், வி.ஏ.ஓ., சையத் இப்ராகீம், தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோடை மழையால் மரவள்ளி கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 சிறுபாக்கம்:  

                   சிறுபாக்கம், வேப்பூர் பகுதி விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளிலுள்ள நீர்ப்பாசன விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை கொண்டு மரவள்ளி, கரும்பு பயிர்களை கடந்த ஜனவரி மாதம் முதல் விளைவித்தனர். கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் விளைவித்த பயிர்களை காப்பாற்ற முடியாமலும், நீர் தட்டுப்பாட்டினாலும் பயிர்கள் வாடின. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையால் மரவள்ளி, கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மேலிருப்பில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மிஷின் வீணாகும் அவலம்


பண்ருட்டி: 

               பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிஷன் நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் 11 குடிநீர் மோட்டார்கள், 150 தெருவிளக்குகள் உள்ளது. ஊரகவளர்ச்சித்துறை சார்பில் கடந்த 2005-06ம் ஆண்டு ஆர்.எஸ்.வி.ஒய்., திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் செலவில் எரி சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்ய கட்டடம் கட்டப்பட்டு ஐந்து தெரு விளக்குகள், 3 குடிநீர் மோட்டார்கள் இயக்குவதற்காக 40 கே.வி.திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் மெஷின்கள் பொருத்தப்பட்டன. மின்சாரம் தயாரிக்க மிஷின்கள் வைக்கப்பட்ட பின் மின்சாரம் தயாரிக்கவும், தயார் செய்யும் கிராமத்தில் உள்ள தெருவிளக்கு, மின்மோட்டார்களுக்கு இணைப்பு வழங்க நிர்ணயக்கப்பட்ட தொகை ஒதுக்கப்படவில்லை. இதனால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஊராட்சி தலைவர் சூடாமணி ராதாகிருஷ்ணன் முயற்சியின் பேரில் பள்ளி அருகில் உள்ள மின் மோட்டாருக்கு 89 ஆயிரம் மதிப்பில் கேபிள் பதிக்கப்பட்டது.

                      வடக்குத் தெருவில் உள்ள குடிநீர் மோட்டாருக்கு கேபிள் பதிக்க 3.35 லட்சமும், தொட்டி கட்டுவதற்கு 1.55 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. கடந்த 4 மாதத்திற்கு முன் சோதனை அடிப்படையில் விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஒன்றிய அதிகாரிகள் வெள்ளோட்டம் பார்த்தனர். அதன்பின் டெண்டர் விட்டு 3 மாத காலம் ஆகியும் இதுவரை கேபிள் பதிக்கப்படவில்லை. விறகுகளை எரித்து அதன் மூலம் உருவாகும் நெருப்பின் மூலம் மின்சாரம் தயார் செய்வதற்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 50 காசு செலவாகும். மின் வாரியம் நிர்ணயம் செய்துள்ள 3 ரூபாய் 40 பைசாவை விட குறைந்தது. விறகு மூலம் மின்சாரம் தயாரிக்க ஒரு எலக்ட்ரீஷியன் உட்பட ஐந்து பணியாளர்கள் தேவை. ஆனால் கேபிள், தொட்டி கட்டும் பணிகள் முடிந்த பின் மின்சாரம் தயாரிக்க ஊழியர்கள் இல்லாமல் செயல்படாத நிலை உள்ளது. தற்போது மின்தட்டுபாடு உள்ள நிலையில் விரைந்து இத் திட்டம் செயல்படுத்தவும், குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க மற்ற ஊராட்சியிலும் மின்சாரம் தயாரிக்க இதற்கான தனி ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பதிவாளர் கட்டடம்

 கடலூர்: 

               கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் என்ற துறையின் முடிவின்படி தழிழகத்தில் உள்ள பல்வேறு பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் கலெக்டர் அலுவலத்தின் ஒரு பகுதியில் தனியாக இயங்கி வருகிறது. திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் கட்டடம் புதிதாக கட்டப்பட்ட இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்காக அரசு 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டுவற்காக பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சார் பாதிவாளர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள பில்லர் கம்பிகள் இணைக்கும் பணிக்காக கட்டை உடைக்கப் பட்டுள்ளது.  இக்கட்டடத்தில் எண் 1 சார் பதிவாளர் அலுவலகம், எண் 2 அலுவலகம் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம், மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டித் தெருவில் இயங்கி வரும் டி.ஐ.ஜி., அலுவலகம் என மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவாளர் துணை அலுவலகங்கள் இயங்கும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நிர்வாகிகள் தேர்வு

 விருத்தாசலம்: 

                 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தேர்தல் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்தது. தேர்தல் ஆணையர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவராக கந்தகிரிவாசன், செயலாளராக அழகு செல்வம், பொருளாளராக ராஜேந்திரன், நிர்வாகிகளாக மணவாளன், தன்ராஜ், சக்கரவர்த்தி, பிச்சப்பிள்ளை, தேவநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக உதயசூரியன், ராஜ்குமார், கனகராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும்: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பேட்டி


திட்டக்குடி: 

                கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். 

திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட பின் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

                  கடலூர் மாவட்டத்தில் வெளி மாநில வாகனங்கள், பதிவெண் இல்லாத வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிரிமினல் குற்றங்கள் அதிகளவு குறைக்கப்படும். சிறைகளுக்குள் மொபைல் போன் மூலம் தகவல் தொடர்புகள் பெருகியுள்ளது. இதனால் பழைய குற்றவாளிகளின் நட்பும் கிடைக்கிறது. கடலூர் சிறையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. கடலூர் மாவட்டத்திலுள்ள 46 போலீஸ் ஸ்டேஷன்களில் 7 உயர்தரமாகவும், 14 நடுத்தரமாகவும், மீதமுள்ள 25 போலீஸ் ஸ்டேஷன்களில் லைட்டாகவும் தரம் உயர்த்தப்பட உள்ளது. பணியிட மாறுதல் விரும்புவோர் மனுக்கள் பரிசீலித்து அடுத்த கட்டமாக தீர்வு காணப்படும். விருத்தாசலம், மங்களம்பேட்டை பகுதிகளில் அதிகாரிகள் இல்லை. திட்டக்குடி பகுதியில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். குற்ற நடவடிக்கைகளை குறைக்க போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும் என்றார். டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மே 11-ல் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

 சிதம்பரம்:

                 சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை கடலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வானாமாதேவி பிரிவு அலுவலகத்தில் வருகிற மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.எனவே சிதம்பரம் கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என செயற்பொறியாளர் இரா.செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:
 
                 விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசினர். கடலூர் நாடாளுமன்ற அமைப்பாளர் செந்தில்முருகன் வரவேற்றார், கடலூர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட பொதுச் செயலர் காமராஜ், சங்கர், இனாயத், சீனுவாசன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலம்:

            விருத்தாசலத்தில் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் இசாக் எழுதிய "துணையிழந்தவனின் துயரம்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. வழக்கறிஞர் மெய்கண்டநாதன் நூலினை வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார்.  விழாவில் எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கவிஞர் பழமலை தலைமை தாங்கினார். எழுத்தாளர் சபாநாயகம், வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் முனைவர் புகழேந்தி, இளங்கோவன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். கவிஞர் இசாக் ஏற்புரை ஆற்றினார். கவிஞர் பட்டி.சு.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரத்தில் புறவழி இணைப்பு சாலை பணி துரிதம்

 சிதம்பரம்: 

                சிதம்பரம் புறவழிச்சாலை பணி திட்டக்காலத்தை கடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் முடியாத நிலையில் தற்போது சிதம்பரம் நகரத்தில் இருந்து இணைப்பு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 61 கோடியில் துவக்கப்பட்ட 17 கி. மீட்டர் நீள புறவழிச்சாலை பணி, நாகை மாவட்டத்திற்குட்பட்ட எறுக்கூரில் இருந்து செங்கமேடு வரை 49 கோடியில் எட்டு கிலோ மீட்டர் புறவழிச்சலை பணியும் கடந்த 2004ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு துவங்கியது. ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டிய பணி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. சாலை உயர்த்த மண் கிடைக்காதது, நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல காரணங்களால் காலதாமதம் ஆனாலும், காண்ட்ராக்ட் எடுத்துள்ள ஓரியண்டல் நிறுவனத்திற்கும் சாலை மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ள லாசா கன்சல்டன்ட் நிறுவனத்திற்கும் ஈகோ பிரச்னை காரணமாக பணிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக பணி முற்றிலுமாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நகரையொட்டி செல்லும் புறவழிச்சாலையை நகரத்தோடு இணைக்கும் இணைப்பு சாலை பணி இரவு, பகலாக நடக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாம்பு கடித்தது தெரியாமல் விளையாடிய சிறுவன் சாவு

 கடலூர்:

                   பாம்பு கடித்தது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.  கடலூர் அருகே அகரம் எழுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மகன் சுதாகர் (8). இவர் தனது நண்பர்களுடன் வீட்டுத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இலைச் சருகுகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு சுதாகரைக் கடித்தது. ஏதோ குச்சி குத்திவிட்டதாக நினைத்த சுதாகர், தொடர்ந்து விளையாடினார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.  சுதாகரின் காலில் காயம் இருந்ததைப் பார்த்த உறவினர்கள், பாம்பு கடித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். சருகுகள் கிடந்த இடத்தை தட்டிப் பார்த்தபோது, அதில் இருந்து நல்லபாம்பு ஓடியது. உடனடியாக சுதாகரை கடலூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுதாகர் இறந்தார். 

 இச்சம்பவம் குறித்து கடலூர் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் கூறுகையில், 

                    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால் தங்களை மறந்து மகிழ்ச்சியோடு, விளையாடும் சிறுவர்கள் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து, சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கு வருகிறார்கள்.   எனவே பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டையும் தோட்டத்தையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு விஷ ஜந்துக்கள் பற்றியும் அவற்றால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துக் கூறவேண்டும். விஷ ஜந்துக்கள் தீண்டியது தெரிந்து, உடனே சிகிச்சைக்கு வந்தால், உயிரைக் காப்பாற்ற முடியும். விழிப்புணர்வு இல்லா விட்டால்,  கவனக் குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக விலை மதிப்பற்ற நமது மழலைச் செல்வங்களை பறிகொடுத்துத் துயரப்பட வேண்டியது இருக்கும் என்றார் அவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சாக்கடையில் கார் டிரைவர் சடலம்

 கடலூர்:

                கடலூரில் டாஸ்மாக் கடை அருகே, சாக்கடையில் கார் டிரைவர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவர் தவறிவிழுந்து இறந்தாரா  அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸôர் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸôருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸôர் விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலில் காயங்கள் இருந்தன.  சடலத்தின் அருகே காருக்கு அடிக்கும் புதிய பெயின்ட் டப்பாக்கள் இருந்தன. அவற்றை போலீஸôர் கைப்பற்றினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் சிதம்பரத்தை அடுத்த பழைஞ்சநல்லூரைச் சேர்ந்த கார் டிரைவர் ஸ்டாலின் (35) என்று தெரியவந்தது.  ஸ்டாலின் புதுவை சென்று, காருக்கு அடிக்கும் பெயின்ட் வாங்கிக்கொண்டு சிதம்பரத்துக்குத் திரும்பும் வழியில் கடலூரில் இறங்கி இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. அவர் ஏன் கடலூரில் இறங்கினார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.  குடிபோதையில் இருந்த அவர்,  சாக்கடை அருகே சிறுநீர் கழிக்கச் சென்றபோது சாக்கடையில் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டாரா என்று தெரியவில்லை.    ஸ்டாலின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து போலீஸôர் விசாரித்து வருகிறார்கள்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மருத்துவ முகாம்

 நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை டாக்டர்கள் ஆனந்தி, பாரதி, பிரபாகரன், அருணாச்சலம், சமீனா யாஸ்மின், மேகா, சிதம் பரம் காது மூக்கு தொண்டை டாக்டர் சண் முகம், புதுச்சேரி நல்லõம் கிளினிக் டாக்டர் சதீஷ், நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுரேஷ்குமார், மாலா, சசிகலா, திவாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 68 பேருக்கு பரிசோதனை செய்து 32 பேரை மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்தனர். சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், கிராம செவிலியர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நினைவாற்றல் பயிற்சி துவக்கம்


கடலூர்: 

                  வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வரும் 10ம் தேதி கடலூரில் துவங்குகிறது. ரவிசங்கர்ஜியின் வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி கடலூர் லட்சுமிசோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியில் வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. பயிற்சி 11ம் தேதி முதல் 15ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அளிக்கப்படும். இப்பயிற்சியில் பங்குபெறும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரித்து, கல்வியிலும், செய்யும் வேலையிலும், முழுமையாக கவனம் செலுத்த முடியும். மேலும் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளும் பண்பினை வளர்க்கும். குழந்தைகளின் கோபம், பிடிவாதம், பயம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை நீக்கி ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கும். அவர்களின் ஏமாற்ற உணர்வுகளை நீக்கி மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். இப்பயிற்சி 8 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கு மட்டும் அளிக்கப்படும் என வாழும் கலை மைய பொறுப்பாளர் வினோபா தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் அனல் காற்று


கடலூர்: 

               தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி இம் மாதம் 28ம் தேதி இரவு முடிகிறது. தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடை காலமாகும். இம் மாதங்களில் மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்ச வெப்பத்தில் சுட்டெரிக்கும். சாலையில் அனல் காற்று தகிக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் கூட வெப்பத்தின் காரணமாக சூடாகி விடும். பொதுமக்கள் நடமாட்டம் சாலையில் குறைந்தே காணப்படும். இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது. இம் மாதம் 28ம் தேதி இரவு முடிவடைகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

முட்டம் பால இணைப்பு சாலைக்கு நில ஆர்ஜிதம்: டி.ஆர்.ஓ., சர்வே


சிதம்பரம்: 

                   முட்டம் பாலம் இணைப்பு சாலை அகலப்படுத்தும் பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய சர்வே பணி டி.ஆர். ஓ., நடராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல் மேடு இடையே நபார்டு உதவியுடன் 48.85 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மண் பரிசோதனை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பாலம் கட்ட பூமி பூஜை மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டது. அதையடுத்து காட்டுமன்னார்கோவிலில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நடந்த விழாவில் முட்டம் பாலத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் பணி 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டதையடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக பில்லர் அமைப்பதற்காக பைல் போடும் பணி நடக்கிறது. இந்நிலையில் பாலத்தையொட்டி முட்டம் கிராமத்தில் இணைப்பு சாலை அகலப்படுத்த கையகப்படுத்தப்பட்ட இடத்தை டி.ஆர்.ஒ., நடராஜன் முன்னிலையில் நேற்று சர்வே பணி நடந்தது. ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் வீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சாலை சீர்கேட்டால் பஸ் நிறுத்தம்: நடைபயணம் செல்லும் கிராம மக்கள்


சிதம்பரம்: 

                    சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரை கிராமங்களுக்கு செல்லும் அத்திப்பட்டு - ஆலம்பாடி சாலை சீர்கேட்டால் பஸ் நிறுத்தப்பட்டு கிராம மக்கள் நடை பயணமாக செல்லும் அவல நிலை உள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரை, அத்திப்பட்டு, ஆலம்பாடி, நளம் புத்தூர், மாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் ஆண்டு தோறும் வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கோவில், பள்ளிகளில் அகதிகளாக தங்குவதோடு, விவசாய பயிர்களும் கடுமையாக பாதிக்கப்படுவது வாடிக்கை. குமராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட நளன்புத்தூர், ஆலம்பாடி, ஒற்றர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை, அத்திப்பட்டு வழியாக அரசு டவுன் பஸ்கள் சென்றன.

                      இந்நிலையில் அத்திப்பட்டிலிருந்து இருந்து ஆலம்பாடி செல்லும் சுமார் 3 கி.மீ., சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலை சீர்கேட்டால் அந்த வழியாக பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்தே அத்திப் பட்டு கிராமம் வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடுமையான சிரமத்திற்கிடையே மக்கள் கரடு, முரடான சாலையில் நடந்து வருகின்றனர். கிராம மக்களின் கோரிக்கை ஏற்று சாலையை சீரமைக்க கிராவல் கொட்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணி துவக்கப்படாத நிலையே உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எஸ்.பி., அலுவலகத்தில் விஷ குளவிகள் அழிப்பு

 கடலூர்: 

                     கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள லாரியிலிருந்து குளவி பறந்து கொட்டியதால் திடீர் பரப்பப்பு ஏற்பட்டது. கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகம் அருகே திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு தொடர்பாக நிறுத்தப்பட்ட லாரியிலிருந்து இன் ஜினை மாற்றியது தொடர் பான வழக்கில், லாரியின் உண்மை தன்மையை கண்டறிய தடய அறிவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பல மாதங்களாக லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் லாரியின் உள்ளே கூடு கட்டியிருந்த குளவிகள் நேற்று திடீரென பறந்து ஆய்வு செய்தவர்களையும், அந்த வழியே சென்றவர்களையும் கொட்டத் துவங்கியது. தவகலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று பூச்சிக் கொல்லி மருத்தை தெளிந்து அழித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அனாதையாக கிடந்த பெண் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

 கடலூர்: 

                 குள்ளஞ்சாவடியில் கண் டெடுக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடியை சேர்ந்த இஸ்மாயில் வீட்டுத் தோட்டத்தில் கடந்த 1ம் தேதி பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுபற்றிய விவரத்தை 'சைல்டு லைன்'அமைப் பிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில 'சைல்டு லைன்' அமைப் பினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்துவிட்டு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இந்திய குழந்தைகள் நலச் சங்க மாவட்ட செயலாளர் அருளப்பன், பொருளாளர் சுஜாதா சீனிவாசன், குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் குழந்தையை விழுப்புரத்தில் உள்ள கலைச்செல்வி கருணாலயா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது 'சைல்டு லைன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உடனிருந்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior