உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 23, 2010

சிதம்பரம் ​ அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் அவசர சிகிச்சை பிரிவு


மூடப்பட்டு இருக்கும் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு.
 
சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.​ இதனால் விபத்தில் அடிபட்டு வருபவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.​ உடனடி சிகிச்சை இல்லாததால் கடலூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலர் இறந்துவிடும் நிலை உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனை 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.​ மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.​ 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.​ ​ 
 
                        இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.​ தற்போது மருத்துவமனையில் 12 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.​ அவர்களில் பாதி பேர் மாற்றுப் பணிக்கு சென்று விடுதால் குறிப்பிட்ட 4 டாக்டர்களே தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.மயக்க மருந்து டாக்டர்,​​ எலும்பு முறிவு டாக்டர் ஆகியோர் இல்லாததால் 20.9.2009-ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.​ ஆண் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.​ தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் மாதம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் நியமனம்  செய்யப்படவுள்ளனர் என முதன்மை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

Read more »

கடலூர் டிஆர்ஓ எனக் கூறி ஏமாற்ற முயன்ற இளைஞர் கைது

கும்பகோணம்:

                            கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி தொலைபேசியில் பேசி ஏமாற்ற முயன்ற இளைஞரை  போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
                  
                     கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் கச்சாக்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துக்குமரன் (35). கேட்டரிங் படிப்பு முடித்துள்ள இவர், லண்டனில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் லண்டனிலிருந்து திரும்பிய இவருக்கு திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடந்தை கோட்டாட்சியர் கோ. செங்குட்டுவன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி நபர் தன்னை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் என்று கூறி, தனது உறவினர் முத்துக்குமரனுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினாராம்.  இதேபோல, திருவிடைமருதூர் வட்டாட்சியரிடமும், கடலூர் மாவட்ட டி.ஆர்.ஓ. பேசுவதாகக் கூறி, தனது உறவினர் முத்துக்குமரனுக்கு மணல் எடுக்க உரிமம் வழங்க அனுமதியளிக்குமாறு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் தெரிவித்தாராம்.  இந்நிலையிலó, கடந்த 19-ம் தேதி இரவு கும்பகோணம் ஆர்.டி.ஓ. செங்குட்டுவனிடம்  தொலைபேசியில் பேசிய அந்த நபர் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தினாராம். இதையடுத்து, திங்கள்கிழமை தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு முத்துக்குமரனிடம் கூறுமாறு, ஆர்.டி.ஓ. செங்குட்டுவன் அந்த நபரிடம் தெரிவித்தாராம். இந்நிலையில், ஆர்.டி.ஓ. செங்குட்டுவன் திங்கள்கிழமை காலை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனை தொடர்பு கொண்டு இதுகுறித்து  கேட்டபோது, தான் அப்படி யாருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்று அவர் கூறினார். இதையடுத்து, ஆர்.டி.ஓ. செங்குட்டுவன், குடந்தை காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் புகார் தெரிவித்தார்.  இதற்கிடையே, டி.எஸ்.பி. மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸôர் திங்கள்கிழமை குடந்தை ஆ.டி.ஓ. அலுவலகத்தில் காத்திருந்தனர். 
 
                       அப்போது அங்கு வந்த முத்துக்குமரனிடம் ஆர்.டி.ஓ.வும், டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி தொலைபேசியில் பேசியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீஸôர் அவரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை விடுதலையான கைதிகள் பட்டியல் தயாரிப்பு: எஸ்.பி.


கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களில் துப்புதுலக்க, சிறைச் சாலைகளில் இருந்து அண்மையில் விடுதலை ஆகியிருக்கும் கைதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மத்திய சிறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலையான கைதிகளின் கைவரிசையாக, இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸிடம் திங்கள்கிழமை கேட்டதற்கு, கடலூர், திருச்சி, புதுவை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப் பட்ட கைதிகளின் பட்டியல் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் பகுதியில் போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் முடுக்கி விடப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார் எஸ்.பி.

Read more »

சூப்பர்...108: மாவட்டத்தில் 23,717 பேர் பயனடைந்தனர்: ஆம்புலன்சில் பிறந்தது 123 குழந்தைகள்

கடலூர்: 

                 மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கி, இதுவரை 23,717 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்சில் மட்டும் 123 குழந்தைகள் சுகப்பிரசவத்தினால் பிறந்துள் ளன. கிராமங்களில் உள் ளவர்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

              அவசர மருத்துவ உதவிகளுக்காக தமிழகத்தில் 2008ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப் பட்டது. இச்சேவை கடலூர் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வேப்பூர், புதுச்சத்திரம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட 10 இடங்களில் துவங்கப் பட்டது. இத்திட்டம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுடையதாக இருந்ததால் கடந்தாண்டு மார்ச் மாதம் நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடியிலும், டிசம்பரில் காடாம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலியிலும் துவக்கப்பட்டு, தற்போது மாவட்டத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் அழைப்பு வந்த 10 நிமிடங்களில் சம்பவ இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 15 கி.மீ., தூரத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. சேவை துவங்கிய ஆறுமாதத்திற்கு குறைவான அழைப்புகள் இருந் தாலும் தற்போது சராசரியாக மாதத்திற்கு 2,500 முதல் 3,000 அழைப்புகள் வருகின்றன.

                     அதிகபட்சமாக கடந்த ஜனவரியில் வந்த 3,000 அழைப்புகளில் 2,641 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சென்ற பிப்ரவரியில் 2143 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இச் சேவை துவங்கி, இதுவரை 23,717 அழைப்புகளுக்கு ஆம்புலன்ஸ் வேன்கள் நேரில் சென்று நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீவிபத்துக்களில் பாதித்த சிலர் மட்டுமே இறந்துள்ளனர். இதில் பிரசவத்திற்காக 6,236 பேரும், சாலை விபத் துக்களில் 4005 பேரும், இருதய பாதிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட நோயினால் பாதித்த 9,250 பேரும், தகராறு, அடிதடியில் காயமடைந்த 858 பேரும், தீவிபத்தில் பாதித்த 360 பேரும், விஷம் குடித்த 862 பேரும், பாம்பு கடித்ததில் 512 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வேனில் மட்டும் 123 குழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந் துள்ளன. அதில் வேப்பூரில் ஒரு பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதில் நகர் புறங்களில் இருந்து வரும் அழைப்புகளில் 10 முதல் 15 சதவீதத்தினர் அவசரத்திற்காக வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிராமங்களில் வசிப்பவர்கள் இதனால் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சுவலி, பாம்பு கடி, விஷம் குடித்தவர்கள், தீவிபத்தில் பாதித் தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிராம மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

அவசரத்திற்கு மட்டும் 108ஐ அழையுங்கள்! 

                       முற்றிலும் பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்டது இத்திட்டம். ஆனால் சிலர் அவசர தேவைகளுக்காக மட்டும் அழைக்காமல், வயிற்று வலி, உடல் வலி உள்ளிட்ட சாதாரண தேவைகளுக்கும் அழைக்கின்றனர். இவர்கள் ஆட்டோ அல்லது இதர வாகனங்களில் கூட மருத்துவமனைக்குச் செல்லலாம். இது போன்ற அழைப்புகளால் விபத்து மற்றும் பாம்பு காடி, விஷம் குடித்து உயிருக்கு ஆபாத்தான நிலையில் உள்ளவர்களின் அழைப்புகளுக்கு செல்ல தாமதமாகிறது. இதனை உணர்ந்து பொது மக்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் 108ஐ அழைத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மேலும் சிலரை காப்பாற்றலாம்.

Read more »

உலக தண்ணீர் தின ஊர்வலம்

கடலூர்:

                    உலக தண்ணீர் தினத்தையொட்டி பிளாரன்ஸ் ஹோம் பவுன்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கடலூர் உழவர் சந்தையிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன் துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புதுப்பாளையம் ஏ.ஜெ.ஆர்., திருமண மண்டபத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் மழைநீரை சேமிப்போம், நிலத்தடி நீரைபெருக்குவோம், குறைந்த அளவு நீரில் விளையும் உணவு தானிய பயிர்களுக்கு முக் கியத்துவம் கொடுப்போம், தண்ணீர் மாசு படுதலை தடுக்க வலியுறுத்தி சென்றனர். பின்னர் நடந்த கருத்தரங்கிற்கு நகராட்சி கமிஷனர் குமார் தலைமை தாங்கினார். நிறுவன செயற்குழு உறுப்பினர் ஜான்டேவிட் வரவேற்றார். செயலாளர் அலெக்ஸாண்டர் அறிமுக உரையாற்றினார். பிளஸ் இயக்குனர் அந்தோணிசாமி, கிரீடு இயக்குனர் நடனசபாபதி, குமார், சாமிநாதன், பஞ்சாப் நேஷனல் வங்கி முத்துக்குமார், நிறுவன தலைவர் உஷாராணி, பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று துவங்குகிறது

கடலூர்:

                 இன்று துவங்கும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகளில் கடலூர் மாவட்டத்தில் 96 மையங்களில் 41 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். எல்.சி., பாடப் பிரிவில் 18 ஆயிரத்து 727 மாணவிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 592 பேரும், மெட்ரிக் பாடப் பிரிவில் 2,138 மாணவிகள் உட்பட 4,865 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 96 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்த்திட சி.இ.ஓ., அமுதவல்லி, மெட்ரிக் பள்ளிகள் ஆய் வாளர் அருண்மொழித் தேவி ஆகியோர் தலைமையில் 40 பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது.

Read more »

ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க முடிவு: கலெக்டர்

கடலூர்:

                         உடல் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உடல் ஊனமுற்றோர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமது கல்வித்தகுதியை 2008 டிசம்பர் 31க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும், இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. பள்ளி இறுதி வகுப்பு மற்றும் அதற்கு கீழாக கல்வித்தகுதியுடைய பயனாளிகளுக்கு மாதம் 300 ரூபாயும், மேல்நிலை தகுதியுடையவருக்கு 375ம், பட்டதாரிகளுக்கு 450ம், உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஏற்கனவே பொது உதவித்தொகைத்திட்டத் தின் கீழ் பயன்பெற்றவர், பெறுபவர்களும் இப்புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உயர்த்தப்பட்ட விகிதத்தில் உதவித் தொகை பெறலாம். வேலைவாய்ப்பு அடையாள அட்டையை தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள முக்கிய சேவகர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட த்ண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Read more »

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விலங்கு செல் வளர்ப்பு பயிலரங்கம்

சிதம்பரம்: 

                சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயிர்வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய அளவிலான 'விலங்கு செல் வளர்ப்பு முறைகள்' குறித்த பயிலரங்கம் நடந்தது.

                 பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் பயிலரங்கை துவக்கி வைத்து, மருத்துவத்தில் விலங்கு செல் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவிப் பேராசிரியர் ராஜேந்திரன் பயிலரங்கின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அறிக் கையை படித்தார். அறிவியல் புல முதல்வர் டாக்டர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மும்பை பாபா அணுமின் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் பாண்டே பயிலரங்க மாணவர்களுக்கு விலங்கின செல்களில் மைட்டோகான்ட்ரியாவின் செயல்பாடுகளை அறியும் முறைகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.

                       சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக டாக்டர் பால் சாலமன் மற்றும் பாரதிதாசன் பல்கலை டாக்டர் அக்பர்ஷா சிறப்பு பயிற்சி வகுப்பு எடுத்தனர். பயிலரங்கத்தின் நிறைவு விழாவில் துறைத் தலைவர் புகழேந்தி பயிலரங்கத்தின் வெற்றி குறித்து பேசினார்.ஆராய்ச்சி இயக்குனர் வேணுகோபால், மேனன் ஆகியோர் பயிலரங்கில் கற்றுக்கொண்ட விலங்கு செல் வளர்ப்பு முறைகளை தங்கள் ஆராய்ச்சியில் பயன்படுத் திக் கொள் ளுமாறு பயிலரங்கில் பங்கேற்றவர்களை கேட்டுக் கொண்டார்.உதவி பேராசிரியை கனிமொழி நன்றி கூறினார்.

Read more »

துவரையில் அதிக லாபம் பெற வேளாண் அதிகாரி ஆலோசனை


பண்ருட்டி:

                 பண்ருட்டி பகுதியில் துவரை பயிரிட்டு எக்டருக்கு லட்சம் ரூபாய் லாபம் பெற விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து  வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                  துவரை பயிரை இறவையில் தனி பயிராக பயிரிட்டால் நான்கு மாதங்களில் எக்டருக்கு ஒரு லட்சம் லாபம் பெறலாம். துவரை பயிர் உளுந்து, பாசிபயிறு, கொள்ளு பயிர்களை விட எக்டருக்கு அதிக உற்பத்தி திறன் கொண்டவை. துவரை வறட்சியை தாங்கி வளரும். எல்லா பருவத்திற்கு ஏற்றவாறு பலவித ரகங்கள் உள்ளன. சாகுபடி செலவு, ஆட்கள் தேவை குறைவு. தனிப்பயிர், ஊடுபயிர், கலப்பு பயிர் மற்றும் வரப்பு பயிராக பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் பயிரிடலாம். அறுவடை செய்தல், விதையினை அடித்து பிரித்தெடுத்தல் எளிது. கால்நடைகளுக்கு தீவனம் தரும். மண்ணில் அளவற்றசரகுகளை உதிர்த்து உயிரற்ற மண்ணை உயிர்பிக்கும். உற்பத்தியை அதிகரிக்க சரியான ரகம் தேர்வு செய்து பருவத்தில் பயிரிட வேண்டும். பயிர் எண்ணிக்கையை சதுர மீட்டருக்கு 8 செடிகள் வீதம் எக்டருக்கு 80 ஆயிரம் செடிகள் பராமரிக்க வேண்டும். ரைசோபியம்,பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உர நேர்த்தியும், டிரைக்கோடர்மா விரிடி பான்ற உயிர் பூசன விதை நேர்த்தி செய்தல் அவசியம். களை கட்டுபாடு, 2 சதவீத டி.ஏ.பி.இலைவழி உரமாக தெளித்தல், சரியான நீர் நிர்வாகம், காலத்தே அறுவடை செய்தல், குறுகிய கால ரகங்கள் வம்பன்-1, வம்பன்-3, ஏ.பி.கே.-1, பிரபாத் ஆகியவை 70 நாட்களில் பூத்து 100 நாட்களில் எக்டருக்கு சராசரியாக 1000 கிலோவும், அதிகபட்சமாக 3,000 கிலோ மகசூல் உற்பத்தி திறன்கொண்டவை. விதை முதல் அறுவடை வரை தொழில்நுட்பங்களை வழுவாமல் கடைபிடித்து தீவிர சாகுபடி செய்தால் விவசாயிகள் லாபம் அதிகம் பெறலாம். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more »

உலக தண்ணீர் தினம் ஓவிய கண்காட்சி


கடலூர்:

                    உலக தண்ணீர் தினத்தையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூரில் ஓவிய கண்காட்சி நடந்தது.உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சி.எஸ்.டி., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஓவிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் சுப்ரமணியபுரம் ஸ்ரீ ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தண் ணீரின் அவசியம் குறித்து வரைந்த 100 ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். தொண்டு நிறுவன செயலாளர் ஆறுமுகம், குமார், உமாதேவி, வக்கீல் தேசிகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சிறுபாக்கத்தில் உலக தண்ணீர் தின விழா


சிறுபாக்கம்: 

                  வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் மோகன் தலைமை தாங்கி, 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் நிர் வாக அலுவலர் அருண்குமார், முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர் சாமிநாதன், கந்தசாமி, கல்வி ஆலோசகர் வசந்தமல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

முதியவர்களுக்கு உதவித் தொகை

நெய்வேலி:

                     நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்சி நடந்தது. நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிட நிதி வசூலித்தனர். அதனை ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ராமச் சந்திரன் வரவேற்றார். ஜவகர் கல்விக் கழக பொரு ளாளர் மதிவாணன் ஹெல்பேஜ் இந்தியாவின் உதவி இயக்குநர் சிவக்குமாரிடம் 6 லட்சத்து எட்டாயிரத்து 54 ரூபாயிற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜார்ஜ் ஜேக்கப், உறுப்பினர் ராமச்சந்திரன், ஆடிட்டர் சந்திரசேகர ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு அதிக அளவில் நிதி திரட்டிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.

Read more »

குடிநீர் குழாயில் மின்மோட்டார் இணைப்பு: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

திட்டக்குடி:

                    குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் இணைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                        திட்டக்குடி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வாடகை, உரிமக்கட்டணம் ஆகியவற்றை மார்ச் 29க்குள் செலுத்தி, அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குப்பைகளை தெருவிலும், வடிகாலிலும் கொட்டமல் சேகரித்து வைத்து பேரூராட்சி குப்பை சேகரிப்பு வண்டிகளில் கொட்ட வேண்டும். மேலும் பேரூராட்சி குடிநீர் பைப் லைன்களில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். இதனால் குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைப்பதில் தடையும், கூடுதல் நேரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரேற்ற மின்விரயம் ஏற்படுகிறது. அவ்வாறு மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவது தெரிந்தால் உடனடியாக மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

Read more »

வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா

பண்ருட்டி:

                  அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ரெக்சி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் புதுச்சேரி மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயன்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரமிளா சிறப்புரையாற்றினார். வளர் இளம் பெண் கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கு தயார்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. இதில் பெண் கள் முன்னேற்ற ஆசிரியைகள் அமலோற்பவம், எஸ்தர்ராணி மற்றும் மல்லிகா, புனிதா, ரேவதி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக், புனித அன்னாள் பொறியியல் கல்லூரி, முத்தையர் பள்ளி, புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read more »

மரக்கன்று நடும் விழா


நெல்லிக்குப்பம்: 

                 நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரில் எழுச்சி இளையோர் சேவை மைய துவக்கம் மற்றும் உலக வன நாள் மரம் நடும் விழா நடந்தது. கவுன்சிலர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். நேரு யுவக்கேந்திரா தேசிய சேவை தொண்டர் ஜெயமூர்த்தி, சேவை மைய செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். தலைவர் சத்யசீலன் வரவேற்றார். பெயர் பலகையை சிவா திறந்து வைத்தார். ஒருங்கிணைப்பாளர் மணி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். வீட்டுக்கு ஒரு மரக்கன்றை கொடுத்து முறையாக பராமரிக்க கேட்டுக் கொண்டனர். வேல்முருகன் நன்றி கூறினார்.

Read more »

அரிமா நிர்வாகிகள் இருவருக்கு சிறந்த செயலாளர் விருது

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரிமா சங்க நிர்வாகிகள் இருவருக்கு சென்னையில் நடந்த விழாவில் சிறந்த செயலாளர் விருது வழங்கப்பட்டது. பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. அதில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விருத்தாசலம் அரிமா சங்க சுரேஷ்சந்த் சிறந்த தலைவராகவும், கடலூர் காஸ் மோபாலிடன் சங்க துளசிதாசிற்கு சிறந்த செயலாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்னாட்டு அரிமா சங்க முன்னாள் இயக்குனர் ராமகிருஷ்ணன் வழங்கினார். விழாவில் முன்னாள் இயக்குனர் ராமசாமி, ஆளுனர் ரத்தினசபாபதி, முன்னாள் மாவட்ட ஆளுனர் ராஜலட் சுமி செல்வகாந்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

மாவட்டத்தில் பதிவு செய்த 34 இறால் பண்ணைகளுக்கு உரிமம்


கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த 34 இறால் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் நேற்று உரிமம் வழங்கினார். கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி உவர்நீர் இறால் பண்ணைகள் நடத்துபவர்கள் கண்டிப்பாக கடலோர உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத இறால் பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என அரசு அறிவித்திருந்தது. அதற்கேற்ப சிதம்பரம் வட்டத்தில் உவர் நீர் இறால் பண்ணை வைத்துள்ள 34 குறு  இறால் பண்ணை (2 எக்டேர் நீர்ப்பரப்பிற்கு குறைவாக உள்ளது) விவசாயிகள் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் செய்ததில் பல்வேறு துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதனடிப்படையில் கலெக்டரின் பரிந்துரையுடன் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உரிமம் பெறப்பட்டது. நேற்று கடலூர் குறைதீர் மன்ற கூடத்தில், இறால் பண்ணை விவசாயிகளுக்கு கலெக்டர் சீத்தாராமன் உரிமம் வழங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் (நீர்வாழ் உயிரின வளர்ப்பு) இளம்பரிதி உடனிருந்தார்.

Read more »

கல்லூரியில் பரிசளிப்பு விழா

திட்டக்குடி: 

             தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், இயக்குனர் மேஜர்குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக இயக்குனர் ராஜன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். விழாவில் துணை முதல்வர் பொன்செல்வராஜ், இளங்கோவன், மணிகண்டன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் அருள் நன்றி கூறினார்.

Read more »

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு: கடலூர் கல்லூரியில் கருத்தரங்கம்


கடலூர்: 

                நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பெரியார் அரசு கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உடல் உறுப்புதானம், ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. பெரியார் அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நேசக்கரங்கள் நிறுவனர் நேச முரளி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் தமிழ் செல்வன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., இள புகழேந்தி உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து பேசினார். அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் திவ்யா கண் குறைபாடுகள், கண், மற்றும் உடல் தானம் பற்றி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரகுமார், கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி, நேசக்கரங்கள் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாகாவீர்மல் மேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட் டம் தோறும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கென தனி அலுவலகம் அமைக்க வேண்டும். உடல் உறுப்புதானம் செய்யும் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

மாற்று திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு பாராட்டு


திட்டக்குடி:

                தமிழக அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றிய மாற்று திறன் பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

இது குறித்து தமிழக உடல் ஊனமுற்றோர் சங்க கூட்டமைப்பின் மத்திய, மாநில அரசுப்பணி மாற்று திறனாளிகள் நலச் சங்க மாநில தலைவர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கை: 

                தமிழக அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொகுப் பூதியத்தில் ஐந்தாண்டாக பணியாற்றிய மாற்று திறனுடைய பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியும், மேலும் இத்துறை பயிற்சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கி உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Read more »

கான்சாகிப் வாய்க்கால் பகுதியில் வீசப்படும் எலும்புகளால் சீர்கேடு


கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் ஓரப்பகுதியில் சாக்கு மூட்டையில் வீசப்படும் எலும்பு கூடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் - கிள்ளை சாலையில் உடையான்மேடு, கொடிப்பள்ளம் வழியாக மேலச்சாவடி வரை செல்லும் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் ஓரப்பகுதியில் சில சமூக விரோதிகள் பசு மாடு கன்று ஈன்றதும், போடும் உறுப்புக்கொடி மற்றும் இறந்த மாடுகளின் தோலை எடுத்துக் கொண்டு, எலும்புடன், மாமிசங்களை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரத்தில் போட்டு விடுகின்றனர். இதனால் நாய்களின் தொல்லை ஒரு புறம் இருந்தாலும், துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நாய்கள் சாக்கு மூட்டையில் உள்ள எலும்பு கூடுகளை இழுத்துவந்து சாலையில் போட்டு செல்கிறது. சாக்கு மூட்டையில் கால்நடைகளின் எலும்புக் கூடுதானே எனஅலட்சியம் காட்டமால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

குண்டுமேடு -மடுவங்கரை ரயில்வே கிராசிங் கேட் இல்லாததால் விபத்து அபாயம்


கிள்ளை: 

                   சிதம்பரம் அருகே குண்டுமேடு - மடுவங்கரை ரயில்வே சாலையில் கேட் அமைத்து கீப்பர் அமைக்காவிட்டால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்து ஜனவரி 5ம் தேதி சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட உள் ளது. சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் இருவழி ரயில்வே கிராசிங், தற்போது மூன்று வழி கிராசிங்காக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் குண்டுமேடு-மடுவங்கரை சந்திப்பில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் குறித்து இப்பகுதியை பார்வையிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து புஞ்சைமகத்து வாழ்க்கை, குண்டுமேடு, சின்னமடுவங்கரை வழியாக மடுவங்கரை சாலையை விரிவுபடுத்தும் பணி முடிந்ததும் முதல் முறையாக பஸ் இயக்கப்பட உள்ளது. சாலை விரிவாக்கப்பணிகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து இருந்தபோது இப்பகுதி சாலையை சைக்கிள் மற்றும் நடந்து கடந்து சென்ற பலர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். மேலும் கால்நடைகளும் அதிக அளவில் விபத்தில் இறந்துள்ளன. தற்போது அதிவிரைவு ரயில் இயக்கப்படும் சூழ்நிலையில் இந்த ரயில்வே கிராசிங்கில் முறையான பாதுகாப்பு குறித்தோ, கேட் அமைப்பது குறித்தோ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் கேட் அமைக்காவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே ரயில்வே துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதனை தொடர்ந்து உற்சவர் ராஜ அலங்காரத் தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பழனிவேல், குமரவேல், தீனதயாளன் செய்திருந்தனர்.

Read more »

கோஷ்டி மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு: 39 பேர் கைது: 5 பேருக்கு வலை

கடலூர்:

                  கடலூர் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடுகளுக்கு தீ வைத்த 39 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் நாராயணசாமிக்கும் நாயக்கநத்தம் காலனியைச் சேர்ந்த முருகன், விஜயகாந்த், பாலகிருஷ்ணன் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நாயக்கநத்தம் காலனிக்குள் புகுந்து தாக்கி வீடுகள் மற்றும் வைக்கோல் போருக்கு தீ வைத்தனர். இதில் 8 வீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்தை டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் பார்வையிட்டு வீடுகளுக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். இதுதொடர்பாக நாயக்கநத்தம் காலனியைசேர்ந்த ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வழிசோதனைபாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன் (57), மதனகோபால் (23), சந்தோஷ்குமார் (35), ஆனந்தன் (35) உட்பட 39 பேரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-2ல் ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், 39 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Read more »

என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நெய்வேலி:

                 புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். நெய்வேலி 'க்யூ' பாலம் அருகே நடந்த போராட்டத்தை சி.ஐ.டி.யூ., குப்புசாமி தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க உதயகுமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் அ.தி.மு.க., அபு, உதயகுமார், சி.ஐ. டி.யூ., வேல்முருகன், சங்கிலிபாண்டியன், முத்துவேல், எச்.எம்.எஸ்., சுகுமார், எம்.எல்.எப்., டி.பி. சி., உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கோரிக்கைகø வலியுறுத்தி பேசினர்.

Read more »

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் காயம்


கடலூர்: 

                     கோஷ்டி மோதலில் எரிக்கப்பட்ட வீடுகளின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் அடுத்த நாயக்கநத்தம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் வழிசோதனைப் பாளையத்தை சேர்ந் தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு வழிசோதனைப் பாளையத்தை சேர்ந்தவர்கள் நாயக்க நத்தம் காலனியில் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 8 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு ஜெயபால் மகன் ரகுபதி(11), தண்டபாணி மகன் மகேந் திரன்(11) இவரும் எரிந்த தங்களது வீடுகளில் எஞ்சிய பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்தனர். அதில் மின்சாரம் தாக்கிய இருவரும் தூக்கியெறிப்பட்டு படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் இருவரையும் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more »

பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

விருத்தாசலம்:

                    கவுரவ விரிவுரையாளர் கள் பணி நிரந்தரம் செய்யகோரி தொடர்ந்து 15 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யகோரி கடந்த 15 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 17 ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்க மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, பொருளாளர் சம்பத் உள்ளிட்ட 13 பேர் கடந்த ஆறு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read more »

போலி நிர்வாகிகளை கண்டித்து ஆசிரியர் கூட்டணி ஊர்வலம்

கடலூர்:

                   தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூரில் ஊர்வலம் நடந்தது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு போட்டியாக அதே பெயரில் பதிவு செய்யப்பட்ட சங்கத்தை கண்டித்தும், அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் சுப்புராயலு நகரில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். ஊர்வலத்திற்கு மாநில தலைவர் காசி தலைமை தாங்கினார். பொருளாளர் ராசு முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் சிறப்புரையாற் றினார். மகளிரணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, பாத்திமா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior