உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் மது வகைகள் தட்டுப்பாடு


போதிய சரக்கு இல்லாததால், வெறிச்சோடி காணப்படும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள, இரு டாஸ்மாக் மதுக் கடைகள்.
 
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் பீர் உள்ளிட்ட மதுவகைகளுக்கு, பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  

              கடலூர் மாவட்டத்தில் 226 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.5 கோடி அளவுக்கு, மது விற்பனை ஆகின்றன. 3 மாதங்களாக டாஸ்மாக் மதுக் கடைகளில் பீர் உள்ளிட்ட மதுவகைகள் பெருமளவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மதுப் பிரியர்கள் கூறுகிறார்கள்.  

               டாஸ்மாக் மதுக்கடைகளில் மேற்பார்வையாளர்கள், வாரம் இரு முறை கடைகளுக்குத் தேவையான மதுபாட்டில்கள் எவ்வளவு என்று, மாவட்ட அலுவலகத்துக்கு கொள்முதல் குறிப்பு அனுப்புவார்களாம். மறுநாளே அவர்கள் கேட்டபடி மது பாட்டில்கள் வந்து இறங்கி விடுமாம்.  தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதை தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு போதிய சரக்குகள் கேட்டபடி வழங்கப்படுவது இல்லையாம். 

                 கடலூர் தாலுகாவில் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது, இந்த வாரத்தில் சரக்கு விநியோகம் சற்று பரவாயில்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனாலும் விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் ஒரு வாரமாக மது வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக மதுப் பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் குறிப்பாக பீர் வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக் கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளில் கிங்பிஷர், மார்கோபோலோ, புல்லட், பிளாக் அண்ட் ஒயிட், 5000 ஆகிய பீர் வகைகள் தாராளமாகக் கிடைத்து வந்ததாம். ஆனால் 3 மாதங்களாக கிங்பிஷர் பிராண்ட் பீர் மட்டுமே கிடைக்கிறதாம்.  

                 மாவட்டம் முழுவதும் பார்த்தால் மொத்த தேவையில், 50 சதவீதம் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு பீர் உள்ளிட்ட மதுவகைகள் வழங்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். மதுத் தட்டுப்பாடு, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தாலுகாக்களைச் சேர்ந்த மதுப்பிரியர்களை, பெருமளவில் பாதிக்கவில்லையாம். தமிழகப் பகுதியில் மது கிடைக்காவிட்டாலும், எளிதில் புதுவை மாநிலம் சென்று குடித்து விட்டு வந்து விடுகிறார்களாம். அங்கு நிறைய உயர் ரக மதுவகைகள் கிடைப்பதுடன், விலையும் தமிழகத்தைவிடக் குறைவாக இருக்கிறதாகக் கூறுகிறார்கள்.  

               பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்குச் சென்று மது அருந்த முடிகிறதாம். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது என்று மதுப்பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவாக பலர் கள்ளச்சாராயத்துக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

இது குறித்து டாஸ்மாக் பொது மேலாளர் சுந்தரேசன் கூறியது :

            டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை எப்போதும் போல் உள்ளது. கடைகளுக்குத் தேவையான அளவுக்கு மதுவகைகள் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையக் கட்டுப்பாடுகள் காரணமாக, குறைந்த நாள்கள் பிரச்னை இருந்தது. எனினும் தற்போது நாளொன்றுக்கு சராசரி ரூ. 1.5 கோடி வரை, மது விற்பனை ஆகிறது. பீர் தட்டுப்பாடும் இல்லை. கோடை காலமாக இருப்பதால் பீர் தேவை அதிகரித்து இருக்கிறது என்றார்.  

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சிலர் கருத்துக் கூறுகையில், 

                   தேர்தல் அறிவிப்புக்குப் பின், தமிழகத்துக்குத் தேவையான மதுவகைகள், மது தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து முழுமையாகக் கிடைக்கவில்லை என்று உயர் மட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள். பீர் வகைகள் வழங்குவதை பல நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் மது விற்பனை நிறுவனங்களுக்கும் இடையே, ஏதோ பிரச்னை எழுந்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.  



 

Read more »

கடலூரில் கத்தரிக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி


நாணமேடு விவசாயி ஆனந்தனின் தோட்டத்தில் கத்தரிக்காய் பறிக்கும் பெண்கள்.
 
கடலூர்:

                 கடலூரில் கத்தரிக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

           கடலூர் காய்கறி அங்காடிகளில் உள்ளூர் கத்தரிக்காய் கிலோ ரூ.8 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை போக்குவரத்துச் செலவு உள்பட கிலோவுக்கு ரூ.3 அல்லது ரூ.4 வரைதான். கடலூர் பகுதியில் நாணமேடு உச்சிமேடு, சுப உப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களிலும் பண்ருட்டி பகுதிகளிலும் 500 ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு உள்ளது. நல்ல விளைச்சல் தரும் செம்பட்டி ரகம் பயிரிடப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்தில் நாற்றுவிட்ட கத்தரிச் செடிகளில், 15 நாள்களாக கத்தரிக்காய் அறுவடை நடைபெற்று வருகிறது. முற்றல் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான கத்தரிக்காய்களை தோட்டத்தின் அருகே கொட்டி வைத்துள்ளனர்.

             கடந்த ஆண்டு கடலூர் பகுதி விவசாயிகளுக்கு கத்தரி மகசூல் நல்ல லாபம் கிடைத்தது. கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கிடைத்தது. அதை நம்பி இந்த ஆண்டும் கத்தரிக்காய் பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு கிலோவுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை தான் விலை கிடைக்கிறது என்கிறார்கள் கடலூர் விவசாயிகள். மேலும் இந்த ஆண்டு கத்தரிச் செடிகளில் பூச்சித் தாக்குதலும் அதிகரித்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.÷இதனால் கத்தரி விவசாயிகளுக்கு செலவு செய்த பணம்கூட கிடைக்காது என்ற அவல நிலை உருவாகி இருக்கிறது.

இது குறித்து நாணமேடு விவசாயி ஆனந்தன் கூறுகையில், 

             கடந்த ஆண்டு 3 ஏக்கரில் கத்தரி சாகுபடி செய்து இருந்தேன். கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டம் காரணமாக, விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காததால், ஒரு ஏக்கரில் மட்டுமே கத்தரி பயிரிட்டேன். ஆனால், கத்தரிச் செடிகளில் குருத்துப்புழு உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. நியாயமான விலையும் கிடைக்கவில்லை. வண்டிகளில் ஏற்றி கடலூர், புதுவை அங்காடிகளுக்குக் கொண்டு சென்று, கமிஷன் வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். கிலோவுக்கு ரூ. 3 அல்லது ரூ. 4 தான் கிடைக்கிறது.

             கடந்த 15 நாள்களில் ரூ.500க்கு தான் கத்தரிக்காய் விற்பனை செய்து இருக்கிறேன். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து இருக்கிறேன். செலவு செய்த பணம் கூட கிடைக்காது என்றார்.

காரணம் என்ன?

கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரி பக்கிரான் கூறுகையில், 

              பண்ருட்டி நாணமேடு பகுதிகளில் இருந்து கிலோ ரூ. 3 க்கு கத்தரிக்காய் கொள்முதல் செய்கிறோம். கடந்த ஆண்டு கத்தரிக்காய் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. அதை நம்பி இந்த ஆண்டு கூடுதல் நிலங்களில், விவசாயிகள் கத்தரி பயிரிட்டனர். உற்பத்தி அதிகமானதால் விலை வீழ்ச்சி அடைந்து விட்டது என்றார்.



Read more »

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 அறிமுகம்

          மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 எனும் புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

              சிறு, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் விரும்பும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் பலவகை பயன்களை உள்ளடக்கிய அடுத்த தலைமுறைக்கான பப்ளிக் பீட்டா இது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த ஆண்டில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 அறிமுகப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கிளவுட் சேவைகளை இணைத்துக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட்ஆபிஸ், ஷேர் பாயிண்ட் ஆன்லைன், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன், லிங்க் ஆன்லைன் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தற்போது வணிகர்களின் பயன்பாட்டுக்காக விரிவுபடுத்தி கொண்டுவந்துள்ளது. 

               ஆபிஸ் 365 பப்ளிக் பீட்டாவினை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களும் உலகின் பல்வேறு பகுதியில் உள்ளவர்களும் இணையதளத்தின் வாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25-க்கும் குறைந்த அளவுக்குப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பீட்டா தொகுப்பினை பயன்படுத்துவதற்கு உலக அளவில் 70 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.  தொடக்கத்திலேயே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஆபிஸ் 365 சாஃப்ட்வேர் சிறிய வணிக நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமான தொழில்நுட்பம் என்பதை நிரூபித்துள்ளது. 

               சிறிய வணிகங்களுக்குத் தேவையான அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்தினை சீரிய முறையிலான தொடர்புக்கு வழிவகுக்கும் முறையில் மிகுந்த பாதுகாப்புடனும், தகவல் தொழில்நுட்ப நிர்வாகத்திற்கு உதவும் வகையிலும் தயாரித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 என்ற பீட்டா வாய்ப்பினை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தி அதன் பயனை பெறலாம் என்று நிறுவனத்தின் வணிகப் பிரிவு இயக்குநர் சஞ்சய் மன்சந்தா தெரிவித்தார். 

இணையதள முகவரி: 






 

Read more »

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்பில் சேர மே முதல் வாரத்தில் விண்ணப்பம் வினியோகம்

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை துறை முதன்மையர் ராஜராஜன் கூறியது:

                 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் பி.எஸ்சி தோட்டக்கலை, வேளாண்மை, மனையியல், பி.டெக் வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை என 12 துறைகளும், முதுகலை எம்.எஸ்சி பிரிவில் வேளாண்மை உள்ளிட்ட 27 துறைகள், பி.எச்டி பிரிவில் 27 துறைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 10 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்களை பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ராஜராஜன் கூறினார்.


இணையத்தளம்: 
 
http://www.tnau.ac.in/




 

Read more »

அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல். பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 18ம் தேதி முதல் வழங்கப்படும்

          அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல்., பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறியது: 

               சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகளில், 2011 12ம் கல்வியாண்டிற்கான பி.எல்., பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும்.

           விண்ணப்பங்களை சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் பெறலாம். விண்ணப்பிக்க, ஜூன் 10ம் தேதி கடைசி நாள். ஐந்தாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மூன்றாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான வயது வரம்பு, குறைந்தபட்ச மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

              ஜூன் இறுதி வாரத்தில், "கவுன்சிலிங்' மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


 இணையத்தளம்: 

http://www.tndalu.ac.in/



 

Read more »

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்கள் நடத் திட்டம் : நடிகர் விக்ரம்

             தமிழ்ப் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின்  ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23வது நிர்வாகக்குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது. 

அதில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம் கூறியது:

           ஐக்கிய நாடுகள் சபையின்  ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். இதற்காக  பச்சைப்புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

            சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டு இருக்கிறது. இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதையடுத்து  கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

           நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான்  பிரென்ச்' தாடி வைத்தால் அவர்களும்  பிரென்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது. எனவே  பச்சைப்புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

Read more »

Rest spells refurbishing of mechanised boats and trawlers



Period of rest: Fishing trawlers are being pulled ashore for repair works at Akkaraigori in Cuddalore.


CUDDALORE: 

             The fishing holiday, stretching for 45 days from April 15 to May 29, will see many mechanised boats and trawlers resting on the shores, instead of anchoring at the jetties.

          For, it is the breathing time the operators get to attend to repair works to make their vessels seaworthy again. Usually, these long sea-faring vessels that have weathered the storm surges, blinding rains, and, pounding and corroding waves might badly need refurbishing. But the extended sea voyage, that might even last 15 to 20 days at one go, would not be as difficult for these fishing vessels as getting on to a short journey to the shore. It is not only a highly technical operation but also a challenging one to pull the vessels over the sands.

            As most of the mechanised boats and trawlers have been made of wooden planks, weighing several tonnes, it would be a gigantic task to manually move them over to the wooden platform, without damaging the susceptible underbelly and the vital rotors. Moreover, the vessels should be properly secured from tilting on its sides or hitting any obstacles. In this endeavour, as has been witnessed at Akkaraigori in Cuddalore, at least 25 to 30 skilled workers are involved.

         It is being executed meticulously, step by step, and any faulty move would cause irreparable damage to the trawlers, as the fresh one would cost a fortune, ranging from Rs. 35 lakh to Rs. 50 lakh apiece. Before the towing operation begins, the trawler is being secured with thick nylon robes from the front and the rear. Then two massive logs are mounted on both sides and two more at the bottom, and all the four are bound by sturdy robes.

         The ends of these robes are again fastened to the metallic cable wound in a pulley which is being operated by a handle. It requires the exertion of at least four muscled men to rotate the handle. While doing so the leviathan wooden vessel would heave itself from the moorings and with creeking noise would hesitantly start its journey to the dry land. Well before it touches the land the alert workforce gradually lifts the logs with wooden supports, again the pulley fashion, to take it to 10-ft high platform.

       Though the process could be explained in a trice, in reality it takes four to five hours for the hull to poke its nose to the shore. After being placed on the elevated platform a whole lot of people, including carpenters, mechanics and painters get on the job. The chipped planks are being replaced, the leaky motors are plugged and fresh coat of paint given. According to Subramanian (70), who has been well versed in such undertakings, getting the weatherworn vessels to ship-shape would take a fortnight of undivided attention.

Read more »

Poll code bars NLC from publicising Navratna status

CUDDALORE: 

                 Even though Neyveli Lignite Corporation has attained Navratna status, the Model Code of Conduct in force has prevented it from either publicising it or organising any celebrations. The NLC cannot openly declare its coveted status till the results of the Assembly elections are out.

         On April 11 President Pratibha Patil handed over the certificate, conferring Navratna title on NLC, to Chairman-cum-Managing Director A.R. Ansari in the presence of Union Minister for Heavy Industries and Public Enterprises Praful Patel in New Delhi. Even the NLC employees discuss in hushed tones about its elevated status. It has now shaken off the Mini Ratna status, which it had for about a decade. However, the NLC on its website www.nlcindia.com and in its tender notices, has mentioned itself as a Navratna company.

Empowered

             Regardless of its status the NLC would have to vie with any other power sector companies, both private and public, to get the future projects. However, with Navratna status to its credit the NLC is now fully empowered to take a decision on expansion, acquisitions and mergers. Of course, the NLC will yet require the nod of the Centre but not the approval, in the formal sense. The Board of Directors is now empowered to decide on the new projects to be launched by the NLC.

Improved performance

       The NLC has been improving upon its performance year after year and the statistics for the year 2010-11 are as follows: it excavated a total of 231.44 lakh tonnes of lignite, generated 17,879.54 million units of power and exported 14,969.85 million units of power during the period. With two units of Thermal Power Station-II Expansion slated to go on stream within six months and Barsingsar project in Rajasthan expected to show profits, the stock of NLC is bound to go up several notches.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior