உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

கீழகல்பூண்டியில் பிற்பட்டோர் நலவிடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் மாணவர்கள் வலியுறுத்தல்

டிச 01 , திட்டக்குடி: 
    
 கட்டி முடிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநத்தம் அடுத்த கீழகல்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் சுமார் ரூ.25 லட்சத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி கட்ட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு விடுதி கட்டி முடிக்கப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கடலூரில் நடந்த அரசு விழாவில் அமைச்சர்கள் அன்பழகன், பெரியசாமி ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர். ஆனால் கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்படாமல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் துறையிடம் பொதுப்பணித் துறையினர் கட்டிடத்தை ஒப்படைத்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, மின் இணைப்பு வழங்கப்படாமலும், குடிநீர் வசதி செய்யப்படாமல் இருப்பதையும் கண்டனர். கட்டிடத்தில் உள்ள அனைத்து ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், மின் விளக்குகள் உடைக்கப்பட்டும், சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பு இல் லாத நிலையை கண்ட அதிகாரிகள், பணி முழு வதும் முடித்தால் மட்டும் கட்டிடத்தை பெற்று கொள்வோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினர்.
 கடந்த ஓராண்டாக கட்டிடத்தில் எந்த பணியும் நடைபெறாததால், கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. விடுதி கட்டிடத்தில் அடிப்படை வசதிகளை செய்து
முடித்து விரைந்து கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

ஓட்டுனர்கள் சாலை விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தல்


டிச 01 , சிதம்பரம்: 


சிதம்பரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:  

 பெரும்பாலான சாலை விபத்துகள் ஓட்டுனர்களின் கவனக்குறைவினால் நடக்கிறது. சமீபத்தில் பெரியபட்டில் நடந்த பள்ளி வேன் விபத்தில் அந்த வாகனம் எப்சிக்கு வரும் போது அனைத்து விதிகளின் படி வாகனம் சரியாக இருந்தது. விபத்து நடந்த அன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறையான ஆவணங்கள், எச்சரிக்கை வாசகங்கள் இல்லாத வாகனங்கள் எப்சி செய்யப்படுவதில்லை. பள்ளி வாகனங்களை ஓட்டுபவர்கள் 5 வருடத்திற்கு குறையாத முன் அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும். பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும் போதும், வாகனங்களில் அனுப்பும் போதும் பெற்றோர்கள் முழுகவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை வாகனங்களில் ஏற்றாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். சாலை விதிகளை அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடித்தால் விபத்தில்லாத வாகனங்களை இயக்க முடியும் என்றார்.

Read more »

திட்டக்குடி, பண்ருட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்


டிச 01 , திட்டக்குடி: 


         திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. பள்ளி முதல்வர் கலைசெல்வி தலைமை தாங்கினார்.  உடற் கல்வி ஆசிரியர் தங்கதுரை வரவேற்றார்.  துணை முதல்வர் வரதராஜன், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை பள்ளி தாளாளர் சிவகிருபா முகாமை தொடங்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் கள் பிர்வா, ருக்தா ஆகி யோர் தலைமையில் மருத்துவர்கள் குழுவினர்  கண்களை பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆசிரியர்கள் மகேஸ், புவனேஸ்வரி, சிலம்பரசி, சத்யா, சங்கீதா, சாந்தி, இளவரசி உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடு களை உதவிகளை பள்ளி சாரண சாரணிய மாணவர்கள் செய்தனர்.கள மேலாளர்  செந்தில்குமார் நன்றி கூறினார்.
பண்ருட்டி: பண்ருட்டி ஆரிய வைசிய சமூகம், வாசவி கிளப், கடலூர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை பண்ருட்டி சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.
முகாமை ஆரிய வைசிய சமூக நிர்வாகி அரிகரன் தொடங்கி வைத்தார். கலிபோர்னியா மருத்துவர் பார்பரா, உத்தரபிரதேச மருத்துவர் பல்லவி, புதுவை மருத்துவர்கள் ஷேமல், பத்திரிநாத் ஆகியோர் கொண்ட குழு 300க்கும் மேற்பட்டோருக்கு கண் சம்பந்தந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். 75 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஆரிய வைசிய சமூக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




Read more »

மின்நிலையத்துக்கு எதிர்ப்பு கடலூரில் ஒப்பாரி போராட்டம்


டிச 01 , கடலூர்:

       தனியார் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடந்தது.


பண்ருட்டி அருகே மருங்கூரில் தனியார் டேனக்ஸ் அனல் மின் நிலையம் அமைப்பதை கண்டித்து  தமிழ்நாடு அன்னை தெரசா பொது நல சேவை இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடத்தினர். தெரசா பொது நல சேவை இயக்கத்தின் மாநில அமைப்பாளர் ஆசை.தாமஸ் தலைமை தாங்கினார். ம.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு சிவக்குமார், புரட்சி பாரதம் மாவட்டத் தலைவர் தெய்வீகதாஸ், அ.தி.மு.க ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் தோப்புக்கொல்லை பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ மக்கள் கட்சி மதியழகன் வரவேற்றார். மாநிலத் தலைமை நிலைய செயலாளர் ரவீந்திரன் தொகுப்புரையாற்றினார்.மாணவர் பேரவை தலைவர் அகஸ்டியன் துவக்கவுரையாற்றினார். கடலூர் நகர மன்றத் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் பேசினார்.  கடலூர் வழக்கறிஞர் சங்கம் பிரேம்குமார் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.  தெரசா பொது நல இயக்கத்தின் மாநிலப்பொருளாளர் சண்முகம், மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் கிருபாகரன், மாநில நிர்வாகக்குழுத் தலைவர் பச்சையப்பன், மாநில ஆலோசகர் ராஜேஷ் உட்பட பலர் பேசினர். கிராம பெண்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் எதிரே  வயிற்றுலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

Read more »

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணதொகை: எஸ்.பி வழங்கினார்

டிச,  01 கடலூர்,: 
குற்ற வழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிவாரண நிதியை எஸ்.பி வழங்கினார்
.
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மன்றங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கொலை, கொள்ளை தாக்குதல் போன்ற சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்த வித நிவாரணமும் கிடையாது. இதை கருணையோடு பரிசீலித்த அரசு குற்றவழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு எஸ்.பி அஷ்வின்கோட் னீஸ் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை வழங்கினார்.

Read more »

தில்லி செல்​லும் கட​லூர் விவ​சா​யி​கள்

கட ​லூர்,​ நவ.30: 

      நவீன வேளாண் கரு​வி​க​ளைக் காண்​ப​தற்​கும் விவ​சா​யத்​தில் புதிய தொழில்​நுட்​பங்​க​ளைத் தெரிந்து கொள்​ள​வும் கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் 37 பேர்,​ தில்​லிக்கு திங்​கள்​கி​ழமை அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர். ​

மத்​திய அர​சின் வேளாண் தொழில்​நுட்ப நிர்​வாக முகமை ​(ஆத்மா)​ சார்​பில் அனைத்து மாநி​லங்​க​ளில் இருந்​தும் விவ​சா​யி​கள் தில்​லிக்கு அழைத்​துச் செல்​லப்​ப​டு​கி​றார்​கள்.    அகில இந்​திய விவ​சா​யி​கள் சங்க கூட்​ட​மைப்​பின் சார்​பில் தில்​லி​யில் டிசம்​பர் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தேசிய விவ​சா​யி​கள் மாநாடு,​ வேளாண் கருத்​த​ரங்​கம் மற்​றும் வேளாண் கரு​வி​கள் கண்​காட்​சி​யும் தில்​லி​யில் நடை​பெ​று​கி​றது. ​


இந்​தக் கருத்​த​ரங்​கில் கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கலந்து கொண்டு நவீன வேளாண் தொழில்​நுட்​பங்​க​ளைத் தெரிந்து கொள்ள இருக்​கி​றார்​கள்.    வேளாண் கரு​வி​கள் கண்​காட்​சி​யைப் பார்​வை​யிட்டு அவற்​றைப் பயன்​ப​டுத்​தும் முறை​க​ளை​யும் நமது விவ​சா​யி​கள் தெரிந்து கொள்​வர்.

சேத் ​தி​யாத்​தோப்பு அணைக்​கட்டு விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் கோ.விஜ​ய​கு​மார்,​ வெங்​க​டாம்​பேட்டை உழ​வர் மன்​றத் தலை​வர் ஆறு​மு​கம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பேரூ​ராட்​சித் தலை​வர் கணே​ச​மூர்த்தி,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தி.மு.க. ஒன்​றி​யச் செய​லா​ளர் முத்​து​சாமி,​ புவ​ன​கிரி ஒன்​றி​யச் செய​லா​ளர் வி.என்.ஜெய​ரா​மன் உள்​ளிட்ட விவ​சா​யச் சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள்,​ உழ​வர் மன்​றங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் தில்லி சென்​றுள்ள குழு​வில் இடம்​பெற்று உள்​ள​னர். ​

வி​வ​சா​யி​க​ளுக்கு உத​வி​யாக வேளாண் அலு​வ​லர்​க​ளும் சென்​றுள்​ள​னர்.    இவர்​கள் 5-ம் தேதி தில்​லி​யில் இருந்து கட​லூர் திரும்​பு​வர்.        தில்லி செல்​லும் குழுவை கட​லூ​ரில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கொடி அசைத்து வழி​ய​னுப்பி வைத்​தார்.

மா ​வட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ வேளாண் இணை இயக்​கு​நர் க.பாபு,​ ஆட்​சி​ய​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் ​(விவ​சா​யம்)​ த.மணி,​ வேளாண் அலு​வ​லர் எஸ்.பூவ​ரா​கன் ஆகி​யோர் உடன் இருந்​த​னர்.

Read more »

பாலி​தீன் பைகள் இயற்​கைக்கு எதி​ரா​னவை அல்ல

நெய்வேலி, ​நவ. 30:​ 


      பாலி​தீன் பைகள் இயற்​கைக்கு எதி​ரா​னவை அல்ல என்​றும்,​ இதன் முழு விவ​ரம் பொது​மக்​களை சென்​ற​டை​யா​த​தால்,​ பாலி​தீன் பைக​ளுக்கு எதி​ரான தேவை​யற்ற பீதி உரு​வாக்​கப்​ப​டு​கி​றது என்​கி​றார் நெய்​வே​லிப் பகுதி பாலி​தீன் பை முக​வர் மற்​றும் விற்​ப​னை​யா​ளர்.

நெய்வேலி நக​ரி​யத்​தில் பாலி​தீன் பைக​ளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தைத் தொடர்ந்து என்​எல்சி நகர நிர்​வாக அலு​வ​லர்​கள் வியா​ழக்​கி​ழமை நெய்​வே​லி​யில் உள்ள கடை​க​ளில் சோதனை நடத்தி பல்​வேறு வகை​யான பாலி​தீன் பைகளை பறி​மு​தல் செய்​துள்​ளது.

இந்த நட​வ​டிக்​கைக் குறித்து நெய்​வே​லிப் பகுதி பாலி​தீன் பை விற்​ப​னை​யா​ளர் மற்​றும் முக​வ​ராக உள்ள ஆர்.பன்​னீர்​செல்​வம் கூறு​கை​யில்,​ “மத்​திய அரசு எளி​தில் மக்​காத 20 மைக்​ரா​னுக்​குக் குறை​வாக உள்ள பாலி​தீன் பைகளை பயன்​ப​டுத்​தக் கூடாது என அறி​வித்​துள்​ளது. ​

மத்​திய அர​சின் வழி​காட்​டு​தல்​ப​டி​தான் பாலி​தீன் பைகள் தயா​ரிக்​கப்​பட்டு,​அவை நுகர்​வோ​ரின் பயன்​பாட்​டுக்கு வழங்​கப்​ப​டு​கின்​றன. இத​னால் சுற்​றுச்​சூ​ழல் மாசு எவ்​வி​தத்​தி​லும் பாதிப்​ப​டை​வ​தில்லை. ​

காகி​தப் பைகள்​தான் பயன்​ப​டுத்​த​வேண்​டு​மெ​னில்,​ இருக்​கின்ற மரங்​களை வெட்டி,​ அதன்​பின்​னர்​தான் பை தயா​ரிக்க முடி​யும்.    நெய்​வே​லி​யில் என்​எல்சி நகர நிர்​வா​கம் 20 மைக்​ரா​னுக்​கும் குறை​வாக உள்ள பாலி​தீன் பைகளை பயன்​ப​டுத்​தக்​கூ​டாது என்​பதை வர​வேற்​கி​றோம்.
அதே வேளை​யில் இந்த அறி​விப்பு,​ பொத்​தாம் பொது​வாக பாலி​தீன் பைகளை பயன்​ப​டுத்​தக்​கூ​டாது என்ற மாயை உரு​வாக்​கி​யி​ருக்​கி​றது.

ந​கர நிர்​வா​கம் பாலி​தீன் பயன்​பா​டுக் குறித்து பொது​மக்​க​ளுக்கு ஒரு விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்தி,​ அதன் பயன்​பாடு முடிந்​த​தும் அவற்றை எவ்​வாறு அப்​பு​றப்​ப​டுத்த வேண்​டும் என்​பதை தெளி​வாக்​கி​னால் அனை​வ​ரும் பய​ன​டை​ய​லாம்.÷மே​லும் இன்று பிளாஸ்​டிக் பைகள் தவிர்க்க முடி​யா​த​தா​கி​விட்ட நிலை​யில்,​ திடீ​ரென அறவே பயன்​ப​டுத்​தக்​கூ​டாது என்​பது பொது​மக்​கள் அனை​வ​ருக்​கும் ​ ​ பாதிப்பை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.

எ​னவே 20 மைக்​ரான் குறை​வாக உள்ள பாலி​தீன் பைகள் எவை எவை என பொது​மக்​க​ளுக்கு என்​எல்சி நகர நிர்​வா​கம் விளக்​கும்​பட்​சத்​தில் இதற்கு நிரந்​த​ரத் தீர்​வுக் கிடைக்​கும் என்​றார் ஆர்.பன்​னீர்​செல்​வம்.​

Read more »

இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை ஆத​ரவு

சிதம்​ப​ரம், நவ. 30:​ 


     நடை​பெற உள்ள திருச்​செந்​தூர்,​ வந்​த​வாசி இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு நிபந்​த​னை​யற்ற ஆத​ரவு அளிப்​பது என அகில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.

   அ​கில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை மாநி​லப் பொதுக்​கு​ழுக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. அதில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​      

மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள மீன​வர்​க​ளுக்​கான கருப்பு தடை சட்​ட​மான கட​லோர மேலாண்மை சட்​டத்தை வாபஸ் பெற வேண்​டும்.        என்​எல்சி நிறு​வ​னம் வட மாநி​லத்​த​வர்​க​ளுக்கு வேலை வழங்​கு​வதை தவிர்த்து கட​லூர் மாவட்ட படித்த இளை​ஞர்​க​ளுக்கு வேலை வழங்க வேண்​டும் ​ எதிர்​வ​ரும் காலங்​க​ளில் கட​லூர் மாவட்​டத்​தில் வெள்ள அபா​யத்தை தவிக்க அரசு நிரந்​திர தடுப்பு நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.

    கூட்​டத்​துக்கு மாநி​லத் தலை​வர் லட்​சு​மி​காந்​தன்​பிள்ளை தலைமை வகித்​தார்.   செய​லா​ளர் நன்​னி​லம் அழ​கு​நம்பி வர​வேற்​றார். அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் வீர​வன்​னி​ய​ராஜா பங்​கேற்று சிறப்​பு​ரை​யாற்​றி​னார். கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வீர​வன்​னி​ய​வேங்​கன்,​ நிர்​வா​கக் குழு உறுப்​பி​னர் அப்​துல் லத்​தீப்,​ மாவட்​டத் தலை​வர் தியா​க​வல்லி தன​சே​க​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர். பொரு​ளா​ளர் முக​ம​து​அ​னீபா நன்றி கூறி​னார்.

Read more »

ரயில்வே சுவர் வைக்க எதிர்ப்பு

கட ​லூர்,​ நவ.30: 


      மக்​கள் செல்ல பாதை இல்​லா​மல் ரயில் பாதை​யோ​ரம் மதில் சுவர் வைப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து,​ நெல்​லிக்​குப்​பம் பொது​மக்​கள் திங்​கள்​கி​ழமை கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு அளித்​த​னர். ​

நெல்​லிக்​குப்​பம் பீட்​டர் தெரு பகு​தி​யில் சுமார் 150 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன.     இப் பகு​தி​யை​யொட்டி ரயில்​பாதை ஓர​மாக மதில்​சு​வர் வைக்க ரயில்வே இலாகா முடிவு செய்து இருக்​கி​றது. 

       இப்​ப​குதி மக்​கள் சென்று வர நடை​பாதை அள​வுக்கு இடம் விட்டு மதில் சுவர் அமைக்​கு​மாறு அப்​ப​குதி மக்​கள் கோரி வரு​கி​றார்​கள். 

    பா​தை​யின்றி ரயில்வே துறை மதில் சுவர் கட்​டு​வ​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து அப்​ப​குதி மக்​கள்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​ன​ரு​டன் இணைந்து திங்​கள்​கி​ழமை கட​லூ​ரில் மாவட்ட ஆட்​சி​யரை சந்​தித்து மனு அளித்​த​னர்.

வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன்,​ தமிழ் தேசிய கட்சி மாநில துணைச் செய​லா​ளர் திரு​மார்​பன்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் வழக்​க​றி​ஞ​ரணி மாவட்​டச் செய​லா​ளர் காத்​த​வ​ரா​யன்,​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் அறி​வுக்​க​ரசு,​ தொண்​ட​ர​ணிச் செய​லா​ளர் ஸ்ரீதர்,​ ஓவி​யர் அணி துணைச் செய​லா​ளர் ஜெய​ரா​மன் உள்​ளிட்​டோர் சென்று இருந்​த​னர்.

Read more »

கிரா​மச் சாலை​களை சீர​மைக்க கோரிக்கை

​ சிதம்​ப​ரம்,​ நவ. 30:​ 
 
 
சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் சமீ​பத்​தில் பெய்த கன​ம​ழை​யால் பாதிக்​கப்​பட்ட அனைத்து கிரா​மச் சாலை​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டும் என மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.
 
மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.    தலை​வர் வழக்​க​றி​ஞர் ம.வே.வேல்​ராம​லிங்​கம் தலைமை வகித்​தார். சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் மழை​யால் சேத​ம​டைந்​துள்ள வாய்க்​கால்,​ கரை​கள் மற்​றும் மத​கு​களை சீர​மைக்க பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​களை கேட்​டுக்​கொள்​வது,​ சிதம்​ப​ரத்தி​லி​ருந்து மஞ்​சக்​கொல்லை வழி​யாக வட​லூர் வரை இயங்​கிக் கொண்​டி​ருந்த பஸ் ​(தடம் எண்:​ 29) நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அந்த பஸ்ûஸ அதே தடத்​தில் மீண்​டும் இயக்​கக் கோரு​வது.

Read more »

சிதம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நாற்காலி வீச்சு​ திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.30: 


      சிதம்​ப​ரத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நக​ராட்சி நிர்​வாக சீர்​கேட்​டைக் கண்​டித்து திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் நாற்காலி வீசி​யெ​றிந்து வெளி​ந​டப்பு செய்​த​த​தால் கூட்​டம் கோரம் இல்​லா​மல் ஒத்தி வைக்​கப்​பட்​டது.÷சி​தம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டம் அதன் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் ​(மார்க்​சிஸ்ட் கம்யூ. கட்சி)​ தலை​மை​யில் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது. கூட்​டம் தொடங்​கி​ய​வு​டன் பாமக உறுப்​பி​னர் சாந்தி பிரி​ய​தர்​ஷினி தனது வார்​டில் எந்த பணி​க​ளுமே நடக்​க​வில்லை எனக் கூறி வெளி​ந​டப்பு செய்​தார்.

அ​டுத்து காங்​கி​ரஸ் உறுப்​பி​னர் முக​ம​து​ஜி​யா​வு​தீன் நக​ராட்​சி​யில் சுத்​த​மான குடி​நீர் வழங்​க​வில்லை.   சாக்​க​டை​யும்,​ சக​தி​யு​மாக குடி​நீர் வரு​கி​றது. மத்​தி​ய​அ​மைச்​சர் ஜி.கே.வாசன் வழங்​கிய நிதி காங்​கி​ரஸ் கட்​சியை அவ​மா​னப்​ப​டுத்​தும் வகை​யில் புறக்​க​ணிக்​கப்​பட்​டுள்​ளது.÷சீர்​கே​டான நிர்​வா​கத்தை நடத்தி வரும் தலை​வ​ரின் கீழ் நக​ர​மன்ற உறுப்​பி​ன​ராக பணி​யாற்​று​வது கேவ​ல​மாக இருக்​கி​றது என்று கூறி விட்டு வெளி​ந​டப்பு செய்​தார்.

தி​முக உறுப்​பி​னர் த.ஜேம்ஸ் விஜ​ய​ரா​க​வன் பேசு​கை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி தலை​மை​யில் நடை​பெ​றும் சிதம்​ப​ரம் நக​ராட்​சி​யில் திமுக,​ காங்,​ பாமக,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி உறுப்​பி​னர்​கள் வார்​டு​கள் புறக்​க​ணிக்​கப்​ப​டு​கி​றது. 

கு​டி​நீர்ப் பிரச்​சனை குறித்து பல​முறை வலி​யு​றுத்​தி​யும் எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை. கட​லூர்,​ நெல்​லிக்​குப்​பம்,​ விருத்​தா​ச​லம் நக​ராட்சி,​ கீரப்​பா​ளை​யம் பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தைக் கண்​டித்து மண்​சோறு சாப்​பிட்​டும்,​ நாத்து நடும் போராட்​டம் நடத்​தும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சிதம்​ப​ரத்​தில் உள்ள மோச​மான சாலை​க​ளைக் கண்​டித்து ஏன் மண்​சோறு சாப்​பி​டும் போராட்​டம் நடத்​த​வில்லை. 

மக்​கள் பிரச்​னையை தீர்க்க முடி​யாத மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த தலை​வர் தனது பத​வியை ராஜி​நாமா செய்ய வேண்​டும் எனக் கூறி​னார்.

அப் ​போது மார்​கிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர் சந்​தி​ர​சே​க​ரன் பதில் பேச முயன்ற போது அவ​ரது மைக்கை பறித்து கண்​டன கோஷ​மிட்டு,​ திமுக,​ காங்​கி​ரஸ்,​ விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் மற்​றும் சுயேட்சை உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு செய்து நக​ர​மன்​றக் கூடம் முன்பு ஆர்ப்​பாட்​டம் செய்​த​னர்.

அ​தி​முக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர்​கள் 6 பேர் மட்​டும் கூடத்​தில் இருந்​த​தால் கூட்​டம் கோரம் இல்​லா​த​தால் ஒத்​தி​வைக்​கப்​ப​டு​வ​தாக தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் அறி​வித்து எழுந்து அவ​ரது அறைக்​குச் சென்​றார்.​வெளி​ந​டப்​பில் பங்​கேற்​காத அதி​முக..​

கூட் ​டத்​தில் நக​ராட்சி சீர்​கேட்​டைக் கண்​டித்து பிரச்னை எழுப்ப தயா​ராக வந்த நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் நடை​பெ​ற​வுள்ள இடைத்​தேர்த​லில் அதி​மு​க​விற்கு மார்க்​சிஸ்ட் கம்யூ. கட்சி ஆத​ரவு அளிப்​ப​தால் அதி​முக நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு செய்​யா​மல் கூடத்​தில் அமை​தி​யாக அமர்ந்​தி​ருந்​த​னர்.

தி​முக தலை​மை​யி​லான கட​லூர் நக​ர​மன்ற நிர்​வா​கத்​தைக் கண்​டித்து மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​வ​தால் சிதம்​ப​ரம் நக​ர​மன்ற சீர்​கேட்​டைக் கண்​டித்து திமு​க​வி​னர் நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் ரக​ளை​யில் ஈடு​பட்டு வெளி​ந​டப்பு செய்​த​னர்.

Read more »

வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் கோரிக்கை நியா​ய​மா​னது முன்​னாள் வனத்​துறை அமைச்​சர்

சிதம் ​ப​ரம்,​ நவ.30: 
 
            வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் குறை மிக​வும் நியா​ய​மா​னது. டிஎன்​பி​எஸ்​சி​யின் விதி​மு​றை​கள் திருóத்​தப்​பட வேண்​டும் என எம்​ஜி​ஆர் அமைச்​ச​ர​வை​யில் இருந்த முன்​னாள் வனத்​துறை அமைச்​சர் வி.வி.சுவா​மி​நா​தன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.இது குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ நான் வனத்​துறை அமைச்​ச​ரா​க​வும்,​ இந்து அற​நி​லை​யத்​துறை அமைச்​ச​ராக இருந்​த​போது பெரு​மாள் கோயில்​க​ளில் அபி​ஷே​கத்​திற்கு போதிய அகில் ​(சாம்​பி​ராணி)​ கிடைக்​க​வில்லை.÷நான் வனத்​துறை அதி​கா​ரி​களை கூப்​பிட்டு அகில் மரம் அதி​கம் வளர்க்க நாம் ஏன் முயற்​சிக்​கக் கூடாது என கேட்ட போது,​ "அது​போன்ற ஒரு​ம​ரமே இல்லை' என அந்த அதி​காரி கூறி​விட்​டார்.÷சங்க காலத்​தில் மாத்​தி​ர​மல்​லா​மல் பாவேந்​தர் பார​தி​தா​சன் கூட அகி​லும் தேக்​கும் அழியா குன்​றும் என பாடி​யி​ருக்​கி​றார் என்று நான் கேட்​ட​தற்கு அதி​கா​ரி​கள் கவி​க​ளின் கற்​பனை என சொன்​னார்​கள். சாம்​பி​ராணி மரம் என்று ஒன்​றும் கிடை​யாது. அது வெளி​நாட்​டில்​தான் வள​ரும் என பதில் அளித்​தார்​கள்.÷நான் மேல்​ம​ரு​வத்​தூர் ஆதி​ப​ரா​சக்தி சுவா​மி​யு​டன் சேலம் சென்​ற​போது அந்​ந​க​ரில் ஒரு​வர் வீட்டு முன்பு சாம்​பி​ராணி மரம் இருப்​பதை கண்​டேன். வனத்​துறை அதி​கா​ரி​க​ளுக்கு முக்​கி​ய​மாக உப​யோ​கப்​ப​டுத்​தப்​ப​டும் மரங்​கள் பற்றி தெரி​ய​வில்லை.÷ஏ​னென்​றால் அவர்​கள் தாவ​ர​வி​யல் படிக்​க​வில்லை. அன்​று​மு​தல் நான் யூனி​யன் பப்​ளிக் சர்​வீஸ் கமி​ஷன் தேர்​வில் வன இலாகா அதி​கா​ரி​கள் பதவி தேர்​வுக்கு தாவ​ர​வி​யல் பட்​டம் கட்​டா​ய​மாக்​கப்​பட வேண்​டும் என வலி​யு​றுத்தி வந்​தேன். தா​வ​ர​யி​யல் படிக்​கும் வனத்​துறை கல்​லூரி மாண​வர்​களை வனத்​துறை அதி​கா​ரி​கள் பத​விக்கு தகுதி பெற்​ற​வர்​க​ளா​கி​றார்​கள். ​ எனவே வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் கோரிக்கை நியா​ய​மா​னது என அதி​கா​ரி​யும் அம் மாண​வர்​க​ளுக்கு நியா​யம் வழங்க வேண்​டும் என வி.வி.சுவா​மி​நா​தன் தெரி​வித்​துள்​ளார்.பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கத்​தின் மீது கவுன்​சி​லர்​கள் புகார்​​ பண்​ருட்டி,​நவ.30: பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கம் மற்​றும் ஊழி​யர்​க​ளின் செயல்​பா​டு​கள் குறித்து கவுன்​சி​லர்​கள் நகர மன்​றக் கூட்​டத்​தில் புகார் தெரி​வித்​த​னர்.÷பண்​ருட்டி நக​ராட்​சி​யின் சாதா​ர​ணக் கூட்​டம் நக​ராட்சி வளா​கத்​தில் அதன் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் தலை​மை​யில்,​ துணைத் தலை​வர் கே.கோதண்​ட​பாணி முன்​னி​லை​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.
கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தம்:​​கிருஷ்​ண​மூர்த்தி​(திமுக)​:​​ நக​ராட்​சி​யின் முக்​கிய ஆவ​ணங்​கள் தனி நபர்​கள் வசத்​தில் உள்​ளன. ஊழி​யர்​கள் ஆவ​ணங்​களை வீட்​டிற்கு கொண்டு செல்​வதை தடை செய்ய வேண்​டும். சில கால​மாக நிர்​வா​கத்​தில் இடைத் தர​கர்​கள் ஆதிக்​கம் அதி​க​ரித்​துள்​ளது. ​ ஆளும் கட்​சி​யில் உள்​ள​தால் அதி​கம் பேச முடி​ய​வில்லை. இதற்கு ஆணை​யர் உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்​பழனி​(திமுக)​:​​ நக​ரப் பகு​தி​யில் சாலை​கள் மிக மோச​மாக உள்​ளன. அதி​கா​ரி​கள் நக​ரப் பகு​தியை சுற்றி பார்த்து நட​வ​டிக்கை எடுப்​பது கிடை​யாது. குப்​பை​களை அப்​பு​றப்​ப​டுத்​து​வது கிடை​யாது,​ புதிய ஆணை​யர்,​ பைபாஸ் சாலை கொண்டு வர ஏற்​பாடு செய்ய வேண்​டும்.​சரஸ்​வதி​(அதி​முக)​:​​ பல​முறை கோரிக்கை வைத்​தும் 33-வது வார்​டுக்கு எது​வும் செய்​ய​வில்லை,​ கேட்​டால் பணம் இல்லை என கூறு​கி​றீர்​கள். எனது பகு​திக்கு சாலை,​ தண்​ணீர் வசதி செய்து கொடுக்க வேண்​டும்.​எம்.பச்​சை​யப்​பன்​(தலை​வர்)​:​​ தங்​கள் பகு​திக்கு செய்த பணி​கள் குறித்த பட்​டி​யலை தரு​கி​றேன் பாருங்​கள்.​துரை ​ராமு​(திமுக)​:​​ சோமேஸ்​வ​ரர் கோயில் தெரு​வில் சாலை போட தீர்​மா​னம் நிறை​வேற்றி ஒரு ஆண்டு ஆகி​யும் சாலை போட​வில்லை,​ பிறப்பு,​ இறப்பு சான்​றுக்கு 4,5 நாள்​கள் இழுத்​த​டிக்​கின்​ற​னர். ஒரு நாளில் கொடுக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்,​ புகார் பெட்​டி​யில் போடும் மனுக்​கள் தொலைந்து விட்​ட​தாக ஊழி​யர்​கள் கூறு​கின்​ற​னர். ÷பொது நிதி​யில் சிமென்ட் சாலை போடக் கூடாது என இதற்கு முன் இருந்த அதி​கா​ரி​கள் கூறி வந்​த​னர். போட​லாமா,​ கூடாதா என கூற வேண்​டும்.​சக்​தி​வேல் ​(பொறி​யா​ளர்)​:​​ போட​லாம்.​பர ​ம​சி​வம்​(திமுக)​:​​ சுடு​காடு சிமென்ட் சாலை போட்​ட​தில் ஊழல் நடக்​கி​றது. மண் புழு உரக் குடோ​னால் துர்​நாற்​றம் வீசு​வ​து​டன்,​ நிலத்​தடி நீர் மாச​டைந்து சுகா​தார சீர்​கேடு ஏற்​பட்​டுள்​ளது.​சக் ​தி​வேல்​(பொறி​யா​ளர்)​:​​ இடத்தை பார்​வை​யிட்டு ஆவன செய்​கி​றேன்.​தட்​சி​ணா​மூர்த்தி​(திமுக)​:​​ ஒருங்​கி​ணைந்த குடி​யி​ருப்பு மற்​றும் குடி​சைப் பகுதி மேம்​பாட்டு திட்​டத்​தில் விண்​ணப்​பத்​து​டன் பணம் வசூ​லிக்​கப்​பட்​டும் இது வரை எந்த நட​வ​டிக்​கை​யும் இல்லை.
 
 
இ​தற்கு பின்​னால் செயல்​ப​டுத்​திய நெல்​லிக்​குப்​பம் நக​ராட்சி செயல்​ப​டுத்​தி​யுள்​ளது. கட​லூ​ரில் பிறப்பு,​ இறப்பு சான்​றுக்கு ரூ.2 வசூல் செய்​கி​றது. பண்​ருட்​டி​யில் ரூ.55 வசூல் செய்​யப்​ப​டு​கி​றது ஏன் இந்த வேறு​பா​டு​கள்?​​ சண்​ மு​கம்​(அதி​முக)​:​​ நான்கு முனை சந்​திப்​பில் உள்ள சிக்ன​லில் தனி​யார் விளம்​ப​ரப் பல​கை​யில் 30 லைட்​டு​கள் எரி​கி​றது. இதற்கு  யார் அனு​மதி அளித்​தது. தனிப்​பட்ட நபர் விளம்​ப​ரத்​துக்​காக நக​ராட்சி வரிப்​ப​ணம் வீண​டிக்​கப்​ப​டு​கி​றது. இதற்கு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என கூறி​னார்.

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் மழை

​ கட​லூர்,​ நவ.30: 

கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த இரு நாள்​க​ளாக நல்ல மழை பெய்து வரு​கி​றது. 24 மணி நேரத்​தில் பரங்​கிப்​பேட்​டை​யில் அதி​க​பட்​ச​மாக 33 மில்லி மீட்​டர் மழை பெய்​துள்​ளது. ​திங்​கள்​ கி​ழமை காலை 8-30 மணி​யு​டன் முடி​வ​டைந்த 24 மணி நேரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கிய ஊர்​க​ளில் பெய்​துள்ள மழை​யின் அளவு மில்லி மீட்​ட​ரில் வரு​மாறு:​ ​

Read more »

பண்​ருட்டி பகு​தி​யில் முந்​திர,​ பலா​வுக்கு உர​மி​டும் பணி தீவி​ரம்

பண் ​ருட்டி,​ நவ.30: 
 
   பரு​வ​மழை பெய்​த​தைத் தொடர்ந்து முந்​திரி மற்​றும் பலா மரங்​க​ளுக்கு உர​மி​டும் பணி​யில் பண்​ருட்டி பகுதி விவ​சா​யி​கள் ஈடு​பட்​டுள்​ள​னர். பண்​ருட்டி வட்​டத்​தில் முக்​கிய விவ​சாய விளைப்​பொ​ருள்​க​ளில் முந்​திரி முக்​கிய இடம் பெற்​றுள்​ளது. கட​லூர் மாவட்​டத்​தில் கட​லூர்,​ பண்​ருட்டி,​ விருத்​தா​ச​லம் உள்​ளிட்ட பகு​தி​யில் சுமார் 28500 ஹெக்​டர் நிலப் பரப்​ப​ள​வில் முந்​திரி விளை​கி​றது.÷ஆண்டு ஒன்​றுக்கு சுமார் 22160 மெட்​ரிக் டன் முந்​திரி கொட்டை உற்​பத்தி செய்​யப்​ப​டு​கி​றது. குறிப்​பாக பண்​ருட்​டி​யில் 17000 ஹெக்​டர் நிலப்​ப​ரப்​பில் சுமார் 12200 மெட்​ரிக் டன் முந்​தி​ரிக் கொட்டை உற்​பத்தி செய்​யப்​ப​டு​கி​றது.÷இ​த​னால் பண்​ருட்டி பகு​தி​யில் நூற்​றுக்​க​ணக்​கான முந்​திரி ஏற்​று​மதி நிறு​வ​னங்​க​ளும்,​ தொளும்​பில் இருந்து முந்​திரி எண்​ணெய் எடுக்​கும் தொழில் நிறு​வ​னங்​க​ளும் இயங்கி வரு​கின்​றன. ​÷இங்​குள்ள வியா​பா​ரி​கள் உள்​ளூர் முந்​திரி கொட்​டை​கள் மட்​டும் இன்றி வெளி மாநி​லம் மற்​றும் வெளி நாடு​க​ளில் இருந்து முந்​திரி கொட்​டை​களை கொள்​மு​தல் செய்து,​ பயிர்​களை பிரித்​தெ​டுத்து பதப்​ப​டுத்தி பின்​னர் ஏற்​று​மதி செய்து வரு​கின்​ற​னர். ​ ÷இ​த​னால் இப் பகு​தி​யில் உள்ள கிராம மக்​க​ளுக்கு ஆண்டு முழு​வ​தும் வேலை வாய்ப்பு கிடைக்​கின்​றது. ​
மே​லும் முந்​தி​ரிக் காடு​க​ளுக்கு இடையே பலா பயி​ரி​டப்​ப​டு​கி​றது. பலாப் பழத்​துக்கு ​ பண்​ருட்டி பெயர் பெற்று இருப்​ப​தால் சீசன் காலத்​தில் பண்​ருட்​டி​யில் இருந்து லாரி​கள் மூலம் மும்பை,​ ஆந்​தி​ரம்,​ கர்​நா​ட​கம் உள்​ளிட்ட பல வெளி மாநி​லங்​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​யப்​ப​டு​கி​றது.÷இ​த​னால் கெடில நதிக்கு தென் பகு​தி​யில் உள்ள கிராம மக்​க​ளுக்கு முந்​திரி மற்​றும் பலா விவ​சா​யம் முக்​கிய வாழ்​வா​தா​ர​மாக விளங்கி வரு​கி​றது. கடந்த சில வாரங்​க​ளாக பெய்து வந்த பரு​வ​ம​ழை​யால் முந்​திரி மற்​றும் பலா விவ​சா​யி​க​ளுக்கு மகிழ்ச்​சியை அளித்​துள்​ளது.÷இ​த​னால் தற்​போது முந்​திரி மற்​றும் பலா மரங்​க​ளுக்கு உர​மி​டும் பணி​யில் விவ​சா​யி​கள் தீவி​ரம் காட்டி வரு​கின்​ற​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior