உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

TNCSC workers observe fast


 

Workers of the Tamil Nadu Civil Suppliers Corporation observing fast in Cuddalore on Wednesday. 

CUDDALORE: 

              Workers of the Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) observed a fast here on Wednesday in support of their 14-point charter of demands. They demanded regularisation of service, fixation of salary in accordance with the service period and attendant benefits and leave facility. The wage agreement should be revised once in two years.

           They said that rules provided for regularisation after serving for 240 days, but for the past 37 years there were engaged in loading and unloading of essential commodities in the godowns of the TNCSC, stitching bags and delivering commodities to nutrition meal centres in a responsible manner. They also wanted the working hours to be limited to seven hours a day and, for excess work, they demanded double wages. If any worker happens to die in harness, his family should be given a compensation of Rs. 2 lakh and a job to his heir, based on qualifications. After attaining 50 years, if the workers could not carry on with the task, they should be given alternative jobs of light nature.

Read more »

Police distribute handbills

CUDDALORE: 

          The spurt in crimes in the recent past has made the Cuddalore police distribute handbills to citizens, explaining certain steps on safeguarding their property and valuables.

         To avert house break-in, residents should make it a point to keep jewellery and money in bank lockers. They should secure the doors with inbuilt locks and put crossbars behind the doors for extra support. Grill gates should be fixed both at the front and rear entrances. If anybody knocks at the door or rings the bell at night, the residents should ensure the identity of the person before opening the door.Before going to bed, people should ensure that all doors and windows are locked.

               They should not sleep by the side of open windows, especially putting on jewellery. All valuables should be kept away from windows. Whenever an entire family has to go out of town for days, they should inform the nearby police station. If any theft attempt is noted, the family members should not touch the alimrah and other objects but report the matter immediately to the police.

           If they come across the movement of any suspicious person or vehicles in their area, they should bring it to the notice of the police.To prevent theft of two-wheelers, chain-locks should be used in addition to regular locks. Whenever women wearing jewellery go out on walk, they should ensure that they are not stalked or any stranger follows them on two-wheeler.

Read more »

Wadhwa panel holds closed-door meeting with officials

CUDDALORE: 

                  The Central Vigilance Committee on Public Distribution System headed by Justice D.P. Wadhwa held a closed-door meeting with district officials here on Wednesday.

            The committee, formed on the Supreme Court's direction, comprises Meenakshi Chauhan, Susheela R.Bhat and Aashish Arya, Members, J.K. Bhutani, Section Officer, and J.C. Uprety, Private Secretary to the Chairman. Official sources told The Hindu that the committee focused mainly on the system analysis. Since it did not hold any public hearing, neither its visit was publicised nor any public representation received, as was the case in Chennai and Puducherry. Initially, the district officials briefed the committee about operational aspects and submitted all the records pertaining to the PDS, including the number of fair price shops, ration cards in circulation, quantum of essential commodities being supplied and stock position. Details gathered

             The committee also gathered details about the quantum of goods diverted from the PDS and their seizure. From the lists of the fair price shops run by the Tamil Nadu Civil Supplies Corporation, the Food Cell, the cooperative societies and the Self-Help Groups, the members selected the fair prices shops for random inspection. Later, the committee members, divided into three teams, covered various parts of the district to make surprise checks in fair price shops and to interact with the card-holders. Activists disappointed Sources quoting Justice Wadhwa said that since he had to submit his report straight to the Supreme Court, he could not share the findings with the press now. However, the committee's unpublicised visit left social activists and consumer forums disappointed because they could not make representations.

               T. Ravindran, district secretary of the All India Agricultural Workers Union, said that when he approached one of the Members for handing over a representation he was asked to e-mail it to the Chairman. Mr. Ravindran sought formation of a supervision committee, consisting of representatives of all political parties and voluntary organisations, to oversee the functioning of the fair price shops.General secretary of the Consumer Federation of Tamil Nadu M. Nizamudeen said it was a cause for concern that the committee chose to be closeted with the officials without meeting the public representatives.The federation was of the opinion that since the fair price shops were being run by various agencies malpractices could not be effectively checked, and therefore, for their efficient running called for bringing the entire system under a single umbrella or department.

Read more »

அனைவருக்கும் கல்வி திட்ட நிதி செலவிடுவதில் முறைகேடு : அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புகார்

               அனைவருக்கும் கல்வி திட்ட வகுப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை முறையாக செலவிடாமல் அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

                  மாவட்டத்தில் ஆயிரத்து 164 தொடக்கப் பள்ளிகளும், 259 நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. இப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் நடந்து வருகின்றன.இதற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ஆசிரியருக்கு வகுப்பு ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பின் போது விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு தனியாக ஒரு நாள் சிறப்பு பயிற்சி மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வளமையங்களில் நடத்தப்பட்டது.ஆசிரியருக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 நாள் என அரசு வழங்கி வரும் தற்செயல் விடுப்பில், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற் காத ஆசிரியர்களுக்கு வகுப்பு ஒன்றுக்கு ஒரு நாள் வீதம் கழிக்கின்றனர். இதனால் ஆசிரியர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.விடுப்பிலிருந்த ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பின்னர், கழிக்கப்பட்ட தற்செயல் விடுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

                 தவிர 3 முதல் 4 வகுப்புகள் வராத ஆசிரியர்களுக்கும், ஒரு நாள் மட்டுமே வராத ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் வராத நாட்களுக்கும் சேர்த்து வருகை பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் இந்நிலை நீடிக்கிறது. அனைத்து பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றதாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்கிய நிலையில், ஆசிரியர்களுக்கு ஒரு நாள் வகுப்புக்கு மட்டும் 50 ரூபாய் வழங்கப் பட்டது. ஏழை மாணவர்களுக்கு கல்வி போதித்திட அரசு வழங்கி வரும் நிதியை, அதிகாரிகள் இதுபோன்று பல்வேறு வகையில் சுரண்டி வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த முறைகேடு குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட மாநில அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

Read more »

பொது வினியோகம் குறித்து மத்திய குழு ஆய்வு ரகசியமாக நடத்தி முடித்தது மாவட்ட நிர்வாகம்

கடலூர்: 

              கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் குறித்த ஆய்வு மேற் கொண்ட மத்திய புலனாய்வு குழுவினர் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்காமல் சென்றதால் குழுவின் நோக்கம் முழுமை செயல்படாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

                  இந்தியாவில் பொது வினியோக திட டத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி, முழுமையாக மக்களை சென்றடையவில்லை. ஆகையால் இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'பியுசிஎல்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறையில் உள்ள பொது வினியோக திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வாத்வா தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டது. இக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொது வினியோக திட்ட செயல் முறை குறித்த ஆய்வு செய்வதோடு, அப்பகுதி மக்களை சந் தித்து கருத்து கேட்டு வருகின்றனர்.

              இவர் கள் கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாவட்டங்கள் இக்குழு வருகை குறித்து முன் கூட்டியே மாவட்ட நிர்வாகத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் ஆய்விற்கு வந்த குழுவினரை, பொதுமக்கள் சந்தித்து பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினர். ஆனால், கடலூர் மாவட்டத்தில் இக்குழு வரும் தகவல் ரகசியம் காக்கப்பட்டது. நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் துவங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்க சென்றபோது, நிருபர்களை உள்ளே விடாமல் போட்டோ கிராபர்களை மட்டும் படம் எடுக்க அனுமதித்தனர். அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்த குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சிதம்பரம் மற்றும் பண்ருட்டி பகுதிகளுக்கு சென்றனர். இத்தகவலும் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை. பொது வினியோக திட்டம் முழுமையாக பொதுமக்களை சென்றடைகிறதா என ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரை, மக்கள் சந்திக்க ஏற்பாடு செய்யாமல், குழு வருகையை மூடி மறைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Read more »

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு கடலூரில் 22ம் தேதி முகவர்கள் தேர்வு

கடலூர்:

            அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூரில் நடக்கிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில் முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூர் பீச்ரோட்டில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 புகைப்படம், கல்விச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று ஆகியவற்றுடன் அணுகவும். மேலும் 5,000 மக்கள் தொகைக்கு குறைவான பகுதியில் உள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சியும், 5,000க்கும் அதிமுள்ள மக்கள் தொகை பகுதியில் உள்ளவர்கள் 12ம் வகுப்பும் தேர்ச்சியும், அடிப் படை கணிதத்திறனும் பெற்றிருக்க வேண்டும். மற்ற காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனுமதிக்கப் படமாட்டாது. இத்தகவலை கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் மணி தெரிவித்துள்ளார்.

Read more »

விவசாயிகளுக்கு மானியத்தில் உர மூட்டைகள்

திட்டக்குடி:

               மங்களூர் வட்டார செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டன. மங்களூர் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் மானியத்தில் எக்டேருக்கு டி.ஏ.பி., மற்றும் பொட்டாஷ் உரம் தலா ஒன்று வழங்கப்படுகிறது. ஆவினங்குடி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் 30 விவசாயிகளுக்கு உர மூட்டைகளை வழங்கினார். இதேபோல தொழுதூரில் 30, இடைச்செருவாய் 30, ம.புடையூர் 60 என 150 விவசாயிகளுக்கு உர மூட்டைகள் வழங்கப்பட்டன. துணை வேளாண் அலுவலர் டென்சிங், வேளாண் உதவி அலுவலர் குணசேகரன், உதவி அலுவலர்கள் பிரகாஷ், சின்னதுரை, ரமேஷ் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்


ராமநத்தம்: 

                 தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப் பீட்டு திட்டத்தின் கீழ் வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை சுகாதார நிலையத் தின் கிராமங்களில் உள்ள இருதயம், சிறுநீரகம், தைராய்டு, எலும்பு முறிவு, கைனகாலிஜிஸ்ட் உள் ளிட்டவைகள் குறித்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருச்சி மாருதி மருத்துவமனை டாக்டர் சாந்தினிபுண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். திருச்சி வாசன் கண் மருத்துவமனை சம்பூர் ணம், கதிரவன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, டாக்டர் ள் பிரேம்நாத், திருமாவளவன் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் திருச்சி மாருதி மருத்துவமனை டாக்டர்கள் அருண்மகேந்திரன், விஜயகுமார், ராஜேஷ், மங்களூர் வட் டார மருத்துவர்கள் உதயகுமார், ஜெய்சியா, கனிமொழி, கவிதா, கலைச் செல்வி, ராஜேஷ்வரி உள் ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு இருதயம், எலும்பு, தைராய்டு, கைனகாலஜி, கண், காது, மூக்கு உள்ளிட்டவைகள் குறித்த சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட நோயாளிகளில் காது, மூக்கு, தொண்டை நோயாளிகள் 14 பேர், தைராய்டு, எலும்பு தலா ஒருவர், கைனகாலஜி 14 பேரை திருச்சி மாருதி மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், இருதய கோளாறு உடைய இருவர் சென்னை மலர் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டனர்.

Read more »

உதவித் தொகைகளை உயர்த்த வேண்டும்: தொழிலாளர் முன்னணி தீர்மானம்

பண்ருட்டி:

              விவசாய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் 2 லட்சம் இறப்பு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணியின் மாநில செயற்குழுக்கூட்டம் பண்ருட்டியில் நடந்தது. வட்டார தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் மாதேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இதில் காங்., மாநில மாணவரணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் வழங்குவதை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு 50 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகை, பேறுகால உதவி தொகைகளை இருமடங்காக உயர்த்த வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் ஆர்முள்ளவர்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்க வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

சேத்தியாத்தோப்பை தாலுகாவாக பிரிக்க வேண்டும்: தே.மு.தி.க.,

சேத்தியாத்தோப்பு:

               சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவா பிரிக்க வேண்டும் என தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்தில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தே.மு. தி.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளார் லூர்துசாமி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சபா சசிகுமார், மாலை செயற்குழு உறுப்பினர் ராமையன், மாவட்ட அமைப்பாளர் லட்சுமிகாந்தன், இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் சீனு உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் கீரப்பாளையம் ஒன்றியம் சார்பில் 10 பேர் சென்று தேர்தல் பணியாற்றுவது, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் அமைத்து தே.மு.தி.க., கொடியேற்று விழா நடத்துவது, சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் வரும் 21ம் தேதி ஆயுர்வேதிக் மருத்துவ முகாம்

கடலூர்: 

                    டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் கடலூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் டாபர் ஆயுர்வேதிக் அண்டு நேச்சுராபதி நிறுவனத்தில் நடைபெறும் இந்த முகாமில் நாள்பட்ட தோல் வியாதிகள், மூட்டு வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட வலி பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் நோய்களுக்கேற்ற உணவுமுறைகள் கடைபிடிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் சிறப்பு ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் மகளிருக்கு முடி உதிர்தல், கூந்தல் வளர்ச்சியின்மை உள்ளிட்ட அழகு பிரச்னைகளுக்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே ஆலோசனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 93676 22252 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளி

புவனகிரி: 

                  புவனகிரியில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிறுவகை பயிர் கள் குறித்து வயல்வெளிப் பள்ளி வகுப்பு நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கனகசபை தலைமை தாங்கினார். பயிற்சியில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் ஞானசேகரன் முன்னிலையில் சுற்று சூழல் ஆய்வு, உளுந்து பயிரில் நன்மைகள் மற்றும் தீமைகள் செய்யும் பூச்சிகள் குறித் தும், அத்தகைய பூச்சிகளை இனம் கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் உளுந்து பயிறுக்கு மருந்துகள் தெளிப் பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் நடனசபாபதி, வீரலிங் கம், பாக்கியராஜ் செய்திருந்தனர்.

Read more »

நெய்வேலி இந்திரா நகரில் புறக்காவல் நிலையம் திறப்பு

நெய்வேலி:

           நெய்வேலி இந்திரா நகரில் சீரமைத்த புதிய புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., திறந்து வைத்தார். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வந்த தொடர் திருட்டை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டது. அதனை டி.ஐ.ஜி., மாசானமுத்து திறந்த வைத்தார். சில மாதங்களில் மின் கசிவால் ஏற் பட்ட தீ விபத்தில் புறக்காவல் நிலையம் சேதமடைந்தது. இதனை வடக்குத்து ரோட்டரி கிளப் சீரமைத்தது.இதன் திறப்பு விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார். வடக்குத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஜெகன், தாமோதரன், சடையப்பன் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., மணி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ் பெக்டர்கள் ரேவதி, நடராஜன் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் அரசு கல்லூரியில்விளையாட்டு போட்டி பரிசளிப்பு


விருத்தாசலம்: 

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ஜெயந்தி, அப்துல்ரகீம் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் மகாதேவன் மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்து பேசினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ரத்தினசபாபதி பரிசு வழங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read more »

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்கடன் வழங்கும் விழா

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் அடுத்த ஆலடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. கிளை மேலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துகண்ணன் முன் னிலை வகித்தார். பீர்முகமது வரவேற்றார். முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கரன் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.சங்க நிர்வாகிகள் பிரேம்ராஜ், சவுந்தர்ராஜன், மண்டல திட்ட மேலாளர் குப்புசாமி, அமலா அறக்கட்டளை நிறுவனர் ஜேசுதாஸ்ராஜா, ஊராட்சி தலைவர் மணி, ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

முதியவரின் கண்கள் தானம்

சிதம்பரம்: 

              சிதம்பரம் அருகே இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த பொன்னாங்கன்னிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(65). இவர் இறந்ததையொட்டி அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். காஸ்மோபாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்ககிஷார் ஜெயின் தலைமையில் செயலாளர் விஜயக்குமார், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள், டாக்டர் ஜோசப் உதவியுடன் குஞ்சிதபாதம் கண்களை தானமாக பெற்று ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Read more »

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு

கடலூர்:

             நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக் கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார்

.இதுகுறித்து அறந்தாங்கி ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் அறந்தாங்கி ஊராட்சியில் அறந்தாங்கி, சென்னிநத்தம் வழியாக சித்தமல்லி வரை உள்ள நெடுசாலைத்துறை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளாதால் சாலை குறுகலாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

Read more »

டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட கூட்டம்

நெய்வேலி: 
 
                   நெய்வேலியில் டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாநில பொருளாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தவநாதன் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். விற்பனை தொகையை அருகாமையில் உள்ள வங்கியில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊக்கத்தொகை 1.5 சதவீதம் வழங்க வேண்டும். சரக்கு இறக்கும் கூலியை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும். இரவு விற்பனையின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகளுக்கு கிரில் கேட் அமைத்து கவுண்டரில் விற்பனை செய்ய ஆணையிட வேண்டும். விற்பனை ரசீது வழங்க கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவிந்தசாமி நன்றி கூறினார்.

Read more »

பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம்

பரங்கிப்பேட்டை: 
 
              பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வசாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம் நிலை உள்ளது. வாகனங்கள் ஓட்ட 18 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும், முறையாக பயிற்சி பெற்று லைசன்ஸ் எடுத்த பிறகே மொபட் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்ட முடியும். ஆனால் பரங்கிப்பேட்டை பகுதியில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட்களை ஓட்டி வருகின்றனர். மேலும் லைசன்ஸ் இல்லாதவர்களே அதிகமானவர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இதனால் பரங்கிப்பேட்டை பகுதிகளில் அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து வருகிறது.லைசன்ஸ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டும் போதே அடிக்கடி விபத்துகள் நடந்துவரும் நிலையில் பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள், லைசன்ஸ் இல்லாதவர்கள் மொபட் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டி வருகின்றனர். லைசன்ஸ் இல்லாதவர்கள் விபத்து ஏற்படுத்தினாலோ, விபத்து ஏற்பட்டாலோ எந்தவித இழப்பீடும் பெறமுடியாது. எனவே சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பரங்கிப்பேட்டை பகுதியின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.

Read more »

கீழச்சாவடி- நடராஜபுரம் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

கிள்ளை:

               குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ள கீழச்சாவடி-நடராஜபுரம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அடுத்த கீழச் சாவடியில் இருந்து உத்தமசோழமங்கலம், ராதா விளாகம், கோவில்பள்ளம், நக்கரவந்தன்குடி வழியாகவும், நடராஜபுரம் குமாரமங்கலம் என இரு வழியாக சிதம்பரம் செல்லும் சாலை உள்ளது. சிதம்பரத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டதால் சுற்றுப்பகுதியில் உள் ளவர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் கீழச்சாவடியிலிருந்து நடராஜபுரம் வரை சாலை குண்டும், குழியுமாக மாறியதால், சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வரை இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது ராதாவிளாகத்துடன் திருப்பி விடப்படுகிறது. இதனால் கிள்ளை பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்த சாலையை விரைந்து சீரமைத்து, அரசு பஸ்சை மீண்டும் முடசல்ஓடை வரை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வருவாய்த்துறையினர் மக்களின் நண்பர்களாக இருக்க வேண்டும் : கலெக்டர்சீத்தாராமன் 'அட்வைஸ்'

கடலூர்: 

             வருவாய்த்துறையினர் மக்களின் நண்பர்களாக இருந்தால்தான் இந்த துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

                 தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கடலூர் மண்டல மாநாடு டவுன்ஹாலில் நடந்தது. மாநில தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜீ, பிரசார செயலாளர் மாரிமுத்து, மாநில செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். திருமலைவாசன் வரவேற்றார். 

மாநாட்டை துவக்கி வைத்த கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது: 

                            வருவாய்த்துறையில் அடிப்படை ஊழியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மக்களின் நண்பர்களாக இருந் தால்தான் இந்த துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும்.நீங்கள் மக்களிடத்தில் அன்பும், ஆதரவும், அனுசரனையும் செலுத்தாவிட்டால் வருவாய் துறையினுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழும். எனவே நீங்கள் மக்களின் நண்பர்களாக இருங்கள். பிறருடைய துன்பத்தை உங்கள் துன்பமாக நினைத்து செயல்பட்டால் உங்களுடைய துன்பம் நிச்சயம் நீங்கும்.

                   நமக்கெல்லாம் அரசு ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை பணித்திருக்கிறது. அரசு ஊழியத்தில், அரசு பணியில், அரசு சேவையில் நமக்கு ஒரு அதிகார வரம்பு இருக்கிறது. நம்மால் மக்களுக்கு சேவை செய்ய முடியும். பயன்பாடு உள்ளவர்களாக செயல்பட முடியும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கையை விளக்கி பேசினார். டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல்.ஏ., ரவிக்குமார், கடலூர் நகரமன்ற துணை சேர்மன் தாமரைச் செல்வன், மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் கோவிந்தராசன் நன்றி கூறினார்.

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்: 
                    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று கடலூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே பெறப்படும் ஊதியத்தில் குறைவின்றி அடிப்படை ஊதியம் நிர்ணயித்து மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடலூர் நுகர்பொருள் வாணிப் கழக அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை வீரராகவன் துவக்கி வைத்துப் பேசினார். மாநில துணை செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தார். நாகராஜி வரவேற்றார். அர்ச்சுணன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் மணிவேல், கடலூர் தலைவர் மாசிலாமணி, தர்மன், மாணிக்கம் பங்கேற்றனர். குழந்தைவேல் நன்றி கூறினார்.

Read more »

சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

கடலூர்:

                மளிகை கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். கடலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர்கள் பிரகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் கடலூர், பாதிரிக்குப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

Read more »

ஆற்றில் தவறி விழுந்தவர் பலி

கடலூர்: 
 
          கடலூர் பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை எடுக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். கடலூர், மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை சேகரித்த போது தவறி தண்ணீரில் விழுந்து மூச்சி திணறி இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரரர் சிவகுருநாதன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

உதவித்தொகை கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம்:

           கல்வி உதவித்தொகை கிடைக்காதால் சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் 160 பேருக்கு இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து கல் லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் காமராஜ், கல்லூரி முதல்வர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினர்.

Read more »

டாஸ்மாக்கடைகள் மூடல்

சிதம்பரம்:

                    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள 26 கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. ஆனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 14 கடைகளும் திறந்திருந்தன.

Read more »

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெய்வேலி:

                  பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மந்தாரக்குப்பம் அடுத்துள்ள சிவாஜி நகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (29). இவர் வளையமாதேவி கிராஸ் ரோடு அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று ரமேஷை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தனது மனைவியை கொலை செய்தது, சீர்காழி, மயிலாடுதுறையில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது, டாஸ்மாக் கடையில் திருடியது, சிறையில் கிடைத்த நட்பை வைத்து நண்பனின் மைனர் மகளை கட்டாய திருமணம் செய்து கொண்ட விபரம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர். ரமேஷ் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் பேரில், ரமேஷை மந்தாரக்குப்பம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Read more »

கலெக்டர் அலுவலகம் முன் மறியல் டாஸ்மாக் பணியாளர்கள் 135 பேர் கைது

கடலூர்: 

                  காலமுறை ஊதியம் வழங்க கோரி கடைகளை மூடி கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

                     பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடைகளை திறக்காமல், கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் சரவணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இணை செயலாளர் குணசேகரன், அமைப்பு செயலாளர் பாஸ்கரன், பிரசார செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல், துணை தலைவர் வெற்றிவேல், ஏகாம்பரம், துணை செயலாளர் குமரவேல், ராமதாஸ், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 135 பேரையும் கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

Read more »

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' 4 பேர் வெளியேற்றம்

கடலூர்:

          மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த 4 மாணவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ கெமிஸ்ட்ரி தேர்வுகள் நடந்தது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும், பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும் 'பிட்' அடித்த போது பிடிபட்டனர்.இவர்கள் நான்கு பேரும் உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர்: 

            கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முதல் வீட்டிற்குச் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

                     பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 8ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன்படி கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9 பேரும் கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏழாம் நாளான நேற்று சங்க கடலூர் கிளை தலைவர் நடேசன் தலைமையில் வீட் டிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். 

விருத்தாசலம்: 

                 கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் சங்க மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, சம்பத் உள்ளிட்ட 13 பேர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior